Thursday, April 28, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 28 , 2011.



முக்கியச் செய்தி :

*2ஜி: பிரதமர் அலுவலகம் மீது பிஏசி குற்றச்சாட்டு

புதுதில்லி, ஏப்.27- 2ஜி விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் மெத்தனமாக செயல்பட்டதாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தனது வரைவு அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏல விற்பனைக்கு முன்னதாக, மூத்த அமைச்சர்களை ஆலோசிக்கும்படி அப்போதைய அமைச்சர் ஆ. ராசாவுக்கு கடிதம் அனுப்புவதில் பிரதமர் அலுவலகம் தாமதம் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பொதுக்கணக்கு குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவர் இன்று கூறியுள்ளார்.

ராசாவுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாக சுட்டிகாட்டியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தங்கள் விசாரணையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2ஜி முறைகேடு தொடர்பாக சிஏஜி கூறியுள்ள தகவல்கள் சரிதான் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆ. ராசா உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மிகக் குறைந்த விலைக்கு 2ஜி அலைக்கற்றையை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதாகவும் பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


உலகச் செய்தி மலர் :

img1110427025_1_1.jpg

* இலங்கை போர் தொடர்பாக முழுமையான பன்னாட்டு விசாரணை தேவை: ஐ.நா.மனித உரிமை ஆணையர்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து நேரில் கண்ட சாட்சியங்களும், ஆதாரங்களும், நம்பத்தக்க தகவல்களும் முழுமையான பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகிறது என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களின் கீழ் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூற ஐ.நா.பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை, மனதைப் பாதிக்கும் புதிய தகவல்களுடன் உள்ளது என்றும், பன்னாட்டு மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அந்த அறிக்கை தீவிரமான நடவடிக்கைக்கு நம்மை தள்ளுகிறது என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா.மனித உரிமை மன்றம் இயங்கும் ஜெனிவா அலுவலகத்தில் இருந்து இது தொடர்பாக நவநீதம் பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில், “ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையில், போரில் சிக்கிய மக்கள் அளித்த சாட்சியங்களும், நம்பத்தக்க தகவல்களும் முழுமையான, சுதந்திரமான, வெளிப்படையான ஒரு விசாரணையை வலியுறுத்துகின்றன. இலங்கையில் நடந்த போர் தொடர்பான குற்றச்சாற்றுகளை மறுக்கும் அந்நாட்டு அரசின் போக்கில் முழுமையான மாற்றம் ஏற்பட்டால் தவிர, முழுமையான ஒரு பன்னாட்டு விசாரணையை மிகவும் அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.

img1110427025_1_2.jpg

ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதைப் போல், அவசர நிலையை இரத்து செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்துவது, காணாமல் போனவர்களைப் பற்றிய புகார்கள் விசாரிப்பது, அரசால் சிறைப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை சிறிலங்க அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

“பயங்கர விளைவுகளை ஏற்படுத்திய, மக்களிடையே பிளவை உண்டாக்கிய போருக்குப் பின்னரும் அவர்களிடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமெனில் நீதியை நிலைநாட்டுவது அவசியம்” என்றும் தனது அறிக்கையில் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

சிலி நாட்டில் நிலநடுக்கம்  

சிலி நாட்டில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் குலுங்கின. 

அமெரிக்கா அருகே உள்ள சிலி நாட்டில் வால்பராய்சோ நகர் அருகில் இன்று இந்த நிலநடுகம் ஏற்பட்டது. 

பூமிக்கு கீழே 7 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் பற்றி உடனடியாக தகவல் கிடைக்கவில்லை.

* ஆப்கானிஸ்தான்: அல் காய்தா முக்கிய தலைவர் பலி  

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த அல் காய்தா இயக்க முக்கிய தலைவர் ஒருவர் குண்டு வீச்சு தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாகாணத்தில், நேட்டோ படை விமானம் மூலம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. 

இதில் அல் காய்தா இயக்கத்தை சேர்ந்த சாலே நயேப் இதல்-மக்லாபி என்பவர் பலியானதாகவும், ஆப்கானிஸ்தானில் இயங்கும் அல் காய்தா அமைப்பின் இரண்டாவது நிலை தலைவராக பொறுப்பு வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

*அரசின் கட்டுப்பாட்டில் ஐஎஸ்ஐ: பாக். பிரதமர்

இஸ்லாமாபாத், ஏப்.27- பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ, அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் கிலானி கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், கிலானி இவ்வாறு கூறியுள்ளார்.

"பாக். உளவுத்துறை குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஐஎஸ்ஐ அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஐஸ்ஐ நடவடிக்கைகளின் பின்னால் பாக். அரசு உள்ளது. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது." என்று கிலானி தெரிவித்துள்ளார்.

* கோத்தபய வெளிநாட்டுக்கு ரகசியப் பயணம்

கொழும்பு, ஏப்.27- இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச வெளிநாடு ஒன்றுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அவர் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவுமில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டுக்கு கோத்தபய சென்றுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், அவர் அங்கு செல்லவில்லை என்றும், அமெரிக்கா சென்றுள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கோத்தபய, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ளதாகவும், அங்கு தனது மகனின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* திபெத் புதிய பிரதமர் தேர்வு

தர்மசாலா, ஏப்.27:திபெத் நாட்டின் புதிய பிரதமராக லோப்சங் சங்காய் தேர்ந்தெடுக்கப்பட்டார். திபெத் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திபெத் நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா,பூட்டான்,நேபாளம்,ஜப்பான்,ரஷியா,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திபெத்தியர்கள் வாக்களித்தனர்.

இதில் 43 வயதான லோப்சங் சங்காய் 8,646 வாக்குகள் கூடுதலாக பெற்று புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெதாங் டென்சின் 18,405 வாக்குகள் மட்டுமே பெற்றார். மொத்தம் உள்ள 49,189 வாக்குகளில் 55 சதவீத வாக்குகளே இந்தத் தேர்தலில் பதிவானது. இதை திபெத் தேர்தல் கமிஷனர் புதன் கிழமை அறிவித்தார்.

* மும்பை தாக்குதல்: அமெரிக்க குற்றப்பத்திரிகையில் மேலும் 4 பாகிஸ்தானியர்

சிகாகோ, ஏப்.26: மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் 2-வது குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தாக்கல் செய்தார்.
 அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் 4 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேஜர் இக்பால், சாஜித் மிர், மஜர் இக்பால், அபு குஹாபா ஆகிய 4 பேரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இதில் சாஜித் மிர், மஜர் இக்பால், அபு குஹாபா ஆகிய 4 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆனால் மேஜர் இக்பாலை பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. ஆனால் அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் மும்பை தாக்குதலை நிகழ்த்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக இந்தியா குற்றம்சுமத்தியது.

 இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் பிப்ரவரி 2010-ல் ஒப்படைத்தது. இந்தியா அளித்த ஆவணத்தில் மேஜர் இக்பால், மேஜர் சமிர் அலி என்ற இரு ராணுவ அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தியிருந்தது.
 இந்நிலையில் சிகாகோ நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் மேஜர் இக்பால் பெயர் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. அவருக்கு எதிராகப் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

* மும்பை தாக்குதல்: அமெரிக்க குற்றப்பத்திரிகையில் மேலும் 4 பாகிஸ்தானியர்

சிகாகோ, ஏப்.26: மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் 2-வது குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தாக்கல் செய்தார்.

 அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் 4 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேஜர் இக்பால், சாஜித் மிர், மஜர் இக்பால், அபு குஹாபா ஆகிய 4 பேரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இதில் சாஜித் மிர், மஜர் இக்பால், அபு குஹாபா ஆகிய 4 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆனால் மேஜர் இக்பாலை பற்றி எவ்விதத் தகவலும் இல்லை. ஆனால் அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் மும்பை தாக்குதலை நிகழ்த்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக இந்தியா குற்றம்சுமத்தியது.

 இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் பிப்ரவரி 2010-ல் ஒப்படைத்தது. இந்தியா அளித்த ஆவணத்தில் மேஜர் இக்பால், மேஜர் சமிர் அலி என்ற இரு ராணுவ அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தியிருந்தது.

 இந்நிலையில் சிகாகோ நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் மேஜர் இக்பால் பெயர் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. அவருக்கு எதிராகப் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

saibaba.jpg

*அரசு மரியாதையுடன் மகா சமாதியில் ஸ்ரீ சாய் பாபா

புட்டபர்த்தி,ஏப்.27: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்து குல்வந்த் அரங்கிலே ஸ்ரீ சத்ய சாய் பாபா மகா சமாதியில் இறக்கப்பட்டார்.

வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் ஓம் சாய் ராம் என்று குரல் எழுப்ப, பக்தர்கள் மீது அருள் வெள்ளம் பாய்ச்சிய ஆன்மிக குருவின் பரு உடல் அவருடைய பக்தர்கள் எந்த நாளிலும் வந்து தரிசிக்கும் வகையில் ஹிந்து மத அனுஷ்டானங்களுடன் சமாதியில் வைக்கப்பட்டது.
அரசு மரியாதை: ஆந்திர மாநிலப் போலீஸ் படையின் கர்னூல் பட்டாலியன் 21 முறை பீரங்கிகளால் சுட்டும், மாநில சிறப்புப் போலீஸ் படையினர் துப்பாக்கிகளால் வானில் 3 முறை சுட்டும் அரசு மரியாதை அளித்தனர்.

தேசியக் கொடி: தெய்வ பக்தியுடன் தேச பக்தியையும் ஊட்டிய அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை மீது தேசியக் கொடியும் சிறிது நேரம் போர்த்தப்பட்டது.
ஆளுநர்கள், முதல்வர்கள்: ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், முதலமைச்சர் என். கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, ஆளுநர் சிவராஜ் பாட்டீல், முன்னாள் முதல்வர் அசோக் சவாண், பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, எம். வெங்கைய நாயுடு, பண்டாரு தத்தாத்ரேய, ஆந்திர முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் புதன்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

5 லட்சம் பேர் அஞ்சலி: ஞாயிறு காலை சித்தி அடைந்த சாய் பாபாவை புதன்கிழமை காலை வரை சுமார் 5 லட்சம் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் நேரில் வந்து தரிசித்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் எல்லா துறைகளையும் சேர்ந்த பிரமுகர்களும் கலைஞர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

""ஓம் சாய் ராம்'' கோஷங்களுக்கு இடையே அவருடைய பரு உடலை சமாதிக்குள் இறக்கினர். பிறகு பட்டுத்துணியால் ஆன திரைச்சீலைகளைத் தொங்கவிட்டுவிட்டு சுமார் 15 நிமிஷம் இதர சடங்குகளை நடத்தினர்.

இவையெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் காலை 11.35 மணி முதல் அவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்த பக்தர்களை அனுமதித்தனர். வரும் 29-ம் தேதி வரை அஞ்சலி செலுத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

பக்தர்களும் தொண்டர்களும் பார்ப்பதற்கு வசதியாக நகரின் பல பகுதிகளில் பெரிய திரைகளில் உள்ளே நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினர்.

* இந்தியா3வது கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் 78.3% வாக்குப் பதிவு

vote.jpg

வரிசையில் காத்திருந்த பெண் வாக்காளர்கள்.
கொல்கத்தா, ஏப். 27: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடந்த 3-வது கட்டத் தேர்தலில் 78.3 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார்.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பதிவு விவரங்கள் வந்த பிறகு ஒட்டுமொத்த வாக்குப் பதிவு சதவீதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 50 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

பெண்களும், முதியவர்களும் ஆர்வமாக வாக்களிக்க வந்ததைப் பார்க்க முடிந்தது. தெற்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டிகள் இருவர் வெயில் காரணமாக இறந்துவிட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.

வாக்குப் பதிவு சதவீதம்: அதிகபட்சமாக தெற்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் 80 சதவீதமும், தெற்கு கொல்கத்தாவில் 63.5 சதவீதமும், வடக்கு கொல்கத்தாவில் 61.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 3-வது கட்டத் தேர்தலில் 78.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார்.

* ஹசன் அலி வழக்கு விசாரணை: மே 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மும்பை, ஏப்.27: போலி பாஸ்போர்ட் வழக்கில் ஹசன் அலியை பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணையை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம்.

வெளிநாடு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள புணே தொழிலதிபர் ஹசன் அலி மீது பாட்னாவில் போலி பாஸ்போர்ட் பெற்றதாகவும் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பாட்னா தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சமீபத்தில வாரண்ட் பிறப்பித்தார்.
இந்த வாரண்டை பாட்னா போலீஸார், ஹசன் அலி மீதான வழக்கை விசாரிக்கும் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில சமர்ப்பித்து அவரை அழைத்துச் செல்ல அனுமதி கோரினர். இதற்கு ஹசன் அலி தரப்பு வழக்கறிஞர் பகாடியா எதிர்ப்பு தெரிவித்தார்.

பாட்னா நீதிமன்ற வாரண்டை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக்கூடாது. ஹசன் அலி அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆர்தர் ரோடு சிறையில்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து ஹசன் அலியை பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்க அனுமதி கோரி ஆர்தர் ரோடு சிறை நிர்வாகம் சார்பில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி ஸ்வப்னா ஜோஷி, மனு மீதான விசாரணையை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


* 2ஜி அலைக்கற்றை விவகாரம்: 2 நிறுவன சொத்துகளை முடக்க முடிவு

புதுதில்லி, ஏப். 27: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலா ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதன்கிழமை தெரிவித்தது. எனினும் அந்த நிறுவனங்கள் எவை என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் அமலாக்கத்துறையின் விசாரணை நிலை அறிக்கையை அந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி முன்னிலையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதன் பிறகு விசாரணை நிலை அறிக்கையின் முக்கியப் பகுதிகளை வேணுகோபால் வாசித்தார். இரு நிறுவனங்களின் தலா ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக கூறினார். 

  சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட்டு 2 மாதங்களில் முடிக்கப்படும். பினாமிகளின் பெயர்களில் இருக்கும் சொத்துகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா) ஆகியவற்றின்படி சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று வேணுகோபால் மேலும் தெரிவித்தார். 2ஜி விவகாரத்தில் வர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

பல்வேறு நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டார். அதில் சாஹித் உஸ்மான் பல்வாவின் டி.பி.ரியால்டி நிறுவனம் ரூ.1,400 கோடி அளவுக்குப் பரிவர்த்தனை செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, சிபிஐயும் அதனுடைய விசாரணைநிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

* லோக்பால் மசோதா குழு உறுப்பினர்களை மாற்ற மத்திய அரசுக்கு அதிகாரம்

புது தில்லி, ஏப்.27: லோக்பால் மசோதா குழுவில் உள்ள உறுப்பினர்களை மாற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல்வாதிகள்,அதிகாரத்தின் உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல்களை விசாரிக்க லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று தில்லியில் சமூக சேவகரும்,காந்தியவாதியுமான அண்ணாஹஸாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து அண்ணாஹஸாரே உள்பட கொண்ட 10 பேர் கொண்ட லோக்பால் மசோதா குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டதில் இருந்து குழு உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து ஊழல் புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லோக்பால் மசோதா குழுவில் இருந்து அண்ணா ஹஸாரோயை நீக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதி மன்றத்தில் என்.ஜி.ஓ. அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,சஞ்சீவ் கன்னா முன்பு புதன்கிழமை வந்தது.

அப்போது என்.ஜி.ஓ. சார்பில் மூத்த வக்கீல் சர்மா ஆஜராகி வாதாடினார். அண்ணாஹஸாரே ஹிந்து சுவராஜ் அறக்கட்டளையை நடத்தியபோது நிதி மோசடி செய்து ஊழல் செய்து இருக்கிறார்.
லோக்பால் மசோதாவுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அண்ணாஹஸாரே போன்ற ஊழல்வாதிகள் லோக்பால் மசோதா வரைவு குழுவில் இடம் பெறக்கூடாது என்று வக்கீல் சர்மா தெரிவித்தார்.

மத்திய அரசின் வக்கீல் சந்தோக் வாதாடும்போது,லோக்பால் மசோதா வரைவு குழுவில் உறுப்பினர்களை சேர்ப்பதோ அல்லது நீக்குவதோ மத்திய அரசின் தனிப்பட்ட உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது என்று கூறினார்.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, லோக்பால் மசோதா குழு அதிகாரபூர்வமான அமைப்பு அல்ல. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். குழு உறுப்பினராக இருப்பது ஒரு பதவி அல்ல. எனவே இப்போது குழுவில் உறுப்பினர்களை சேர்ப்பதோ, நீக்குவதோ உகந்தது இல்லை என்று தெரிவித்தனர்.

* சாய் அறக்கட்டளை செயல்பாட்டை கண்காணிக்க ஆந்திர அரசு முடிவு?

புட்டபர்த்தி, ஏப். 27: குறுக்கீடுகள் ஏதுமின்றி, சிறிது காலம் வரை சாய் அறக்கட்டளை செயல்பாடுகளை கண்காணிப்பது என ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், முதல்வர் என். கிரண்குமார் ரெட்டி ஆகியோர், சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் சிலரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளனர். 

அறக்கட்டளை நிர்வாக செயல்பாடுகளில் எந்தவித பிரச்னையும் எழாதவரை, அதன் நடவடிக்கைகளில் மாநில அரசு தலையிடாது. நடைமுறைக்கு மாறாக ஏதேனும் நடைபெற்றால், அதில் தலையிடுவதைத்தவிர அரசுக்கு வேறு வழியில்லை என அப்போது எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்ட அறக்கட்டளையின் தலைமை பொறுப்பை ஏற்பதில், அதன் உறுப்பினரான முன்னாள் நீதிபதி பி.என். பகவதி, ஆடிட்டர் இந்துலால் ஷா ஆகியோர் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
பாபாவின் தம்பி ஜானகிராமனின் மகன் ரத்னாகர், அறக்கட்டளை தலைமை பொறுப்புக்கான பரிசீலனையில் முதலிடத்தில் உள்ளார். டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த வேணு சீனிவாசனும் இந்த வரிசையில் இருக்கிறார்.

தற்போதைக்கு செயலாளர் கே. சக்ரவர்த்தி அறக்கட்டளையை வழி நடத்துவார் என்றும், பாபாவின் 11-வது நாள் காரியங்களுக்குப் பிறகு கூடும் அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிகிறது. இதற்கிடையே, அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ராயலசீமா மண்டல காவல்துறை ஐஜி சந்தோஷ் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

பாபாவின் குடும்பத்தாரிடமிருந்தோ, அறக்கட்டளை நிர்வாகிகளிடமிருந்தோ முறைப்படி எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை என்ற போதிலும், பொதுவான காரணங்களுக்காக பாதுகாப்பு அவசியமாகிறது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

மாநிலச் செய்தி மலர் :

* கனிமொழி மீது குற்றப்பத்திரிகை: சட்டப்படி நடவடிக்கை: திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு

சென்னை, ஏப். 27: 2ஜி அலைக்கற்றை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது கூட்டுசதியாளர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வரும் மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை வழக்கு விவகாரம் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

*புதுச்சேரியில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

bandh.jpg

புதுச்சேரி, ஏப்.27: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பதவி விலகக் கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்த பந்த் எந்தவித அசம்பாவிதமும் இன்றி புதன்கிழமை அமைதியான முறையில் நடந்தது.

கறுப்புப் பண மோசடியில் சிக்கியுள்ள புணேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் கிடைக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பரிந்துரை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆளுநரின் மகன்கள் இடம்பெற்றிருந்த அறக்கட்டளை, காரைக்காலில் மருத்துவக் கல்லூரி தொடங்க, அமைச்சரவையின் அனுமதி இன்றி புதுச்சேரி அரசு ஆட்சேபணையின்மை சான்றிதழ் வழங்கியது, அரியாங்குப்பத்தில் குருத்வாரா கட்ட அரசு நிலம் ஒதுக்கியது உள்ளிட்ட பிரச்னைகளில் துணைநிலை ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனால் ஆளுநர் பதவி விலக வேண்டும். அல்லது மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி அதிமுக கூட்டணிக் கட்சிகள் புதன்கிழமை பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பந்த் காரணமாக நகரின் பல பகுதிகளில் கடைகளும், வணிக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ, அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கினாலும் அதிக கூட்டம் இல்லை. தனியார் பஸ்கள் ஓடவில்லை. போலீஸ் வாகனங்கள் முன்னே செல்ல அதைப் பின்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு வெளியூர் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
அனைத்துப் பஸ்களும் மாநில எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டன.

* தகவலறியும் உரிமைச் சட்டம்: வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ஆ.ராசா மறுப்பு

சென்னை, ஏப்.27: தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கு விவரங்களைத் தெரிவிக்க மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மறுத்துவிட்டார்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.கோபாலகிருஷ்ணா, திருச்சியில் உள்ள வருமான வரித் துறை துணை கமிஷனர் அலுவலகத்தில் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மனுவில், ஆ.ராசா, அவரது மனைவி எம்.ஏ. பரமேஸ்வரி ஆகியோர் 2001 முதல் 2011 வரை தாக்கல் செய்த வருமானவரி கணக்கு விவரங்களைக் கோரியிருந்தார். இந்தச் சட்டப்படி, மூன்றாவது நபர் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதியில்லாமல் வழங்க முடியாது. எனவே, இந்த மனு விவரங்கள் தில்லி சிறையில் உள்ள ராசாவுக்கு அனுப்பப்பட்டது.ராசாவின் சார்பில் முத்துகுமாரசாமி என்பவர் அளித்த பதிலில், "தனிப்பட்ட விவரங்களை மனுதாரர் கோரியுள்ளதால், அவற்றை வழங்க முடியாது. தகவலறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இந்த விவரங்களை வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இதையே காரணமாகக் கூறி கோபாலகிருஷ்ணாவின் தகவல் கோரும் மனு நிராகரிக்கப்பட்டது. தகவலறியும் சட்ட ஆர்வலர்கள் இதுதொடர்பாக கூறும்போது, "ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் வருமான வரிக் கணக்கு விவரங்கள் தனிப்பட்டவை என்று கூற முடியாது. இந்த விவரங்கள் நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படுபவை என்பதால், இதை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளது' என்று தெரிவித்தனர்.


அறிவியல் ரயில் தமிழகம் வருகை

சென்னை:அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில், ஜோலார்பேட்டை, மதுரை உட்பட தமிழகத்தில் நான்கு நகரங்களுக்கு வருகிறது.பதிமூன்று பெட்டிகளுடன் இயக்கப்படும் இக்கண்காட்சி ரயிலில், இந்தியாவின் அறிவியல் பாரம்பரியம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும், தகவல்கள் இடம்பெற்றுள்ளன.வரும் 29ம் தேதி, தமிழகத்தில் ஜோலார்பேட்டைக்கு வரும் இக்கண்காட்சி ரயில், 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையிலும், அதன் பிறகு, 6 மற்றும் 7ம் தேதிகளில் திருநெல்வேலி நிலையத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.

வர்த்த்கச் செய்தி மலர் ;

* சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிவுடன் நிறைவு 

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில், குறியீட்டெண் சென்செக்ஸ் 96.66 புள்ளிகள் சரிந்து 19,448.69 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில், குறியீட்டெண் நிஃப்டி 34.50 புள்ளிகள் சரிந்து 5,833.90 புள்ளிகளில் முடிவடைந்தது.

பெல், ஹீரோ ஹோண்டா, டிஎல்எப், டாடா மோட்டார்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஐடிசி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
 
இஷாந்த் வேகம்: கொச்சி அணிக்கு சோகம்!* டெக்கான் அணி வெற்றி

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வேகத்தில் மிரட்டிய இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. 

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கொச்சியில் நடந்த 32வது லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் ஜெயவர்தனா "பீல்டிங்' தேர்வு செய்தார்.

டெக்கான் அணி துவக்கத்தில் ஆர்.பி.சிங் "வேகத்தில்' அதிர்ந்தது. இவரது பந்துவீச்சில் சோகல்(1), தவான்(4) அவுட்டாகினர். வினய் குமார் பந்தில் சிப்லி(4) காலியாக, 5.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

சங்ககரா அரைசதம்:
பின் கேப்டன் சங்ககரா, கேமரான் ஒயிட் இணைந்து அணியை மீட்டனர். சங்ககரா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரீசாந்த் பந்தில் போல்டானார். ஆனால், அது "நோ-பாலாக' அறிவிக்கப்பட, கண்டம் தப்பினார். முதலில் அடக்கி வாசித்த சங்ககரா போகப் போக அதிரடியாக ரன் சேர்த்தார். பெரேரா, வினய் குமார் ஓவர்களில் வரிசையாக பவுண்டரி அடித்தார். ரவிந்திர ஜடேஜா சுழலில் ஒயிட் ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்தது. ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சங்ககரா இரண்டு பவுண்டரி அடித்தார். ஒயிட் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 15 ரன்கள் எடுக்கப்பட்டன. நான்காவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், வினய் குமார் பந்தில் ஒயிட்(31) அவுட்டானார். அடுத்த பந்தில் அரைசதம் கடந்த சங்ககராவும்(65) வெளியேறினார். டேனியல் கிறிஸ்டியன்(9) ஏமாற்றினார். டெக்கான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்தது.

கொச்சி சார்பில் வினய் குமார் 3, ஆர்.பி.சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இஷாந்த் மிரட்டல்:
சுலப இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. ஸ்டைன் பந்தில் பிரண்டன் மெக்கலம் "டக்' அவுட்டானார். இதற்கு பின் இஷாந்த் சர்மா போட்டுத் தாக்கினார். இவரது வேகத்தில் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. இவரது முதல் ஓவரில் பார்த்திவ்(0), கோமஸ்(0), ஹாட்ஜ்(0) நடையை கட்டினர். அடுத்த ஓவரில் ஜாதவ்(0), கேப்டன் ஜெயவர்தனாவை(4) வெளியேற்றிய இஷாந்த், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து கொச்சி அணி 4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்து தவித்தது.

பின் ரவிந்திர ஜடேஜா, திசரா பெரேரா இணைந்து போராடினர். கோனி பந்தில் பெரேரா(22) காலியானார். மிஸ்ரா சுழலில் ஜடேஜா(23) சிக்கினார். மீண்டும் பந்துவீச வந்த ஸ்டைன் வேகத்தில் வினய் குமார்(18) போல்டானார். கொச்சி அணி 16.3 ஓவரில் 74 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

டெக்கான் சார்பில் இஷாந்த் 5, ஸ்டைன் 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இஷாந்த் வென்றார்.

* சென்னை கிங்ஸ் "சூப்பர்' வெற்றி! * யுவராஜ் அணி மீண்டும் ஏமாற்றம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பத்ரிநாத் அரைசதம் அடித்து கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய யுவராஜ் அணி, மீண்டும் ஒரு முறை தோனி அணியிடம் தோல்வி அடைந்து ஏமாற்றியது.

நான்காவது ஐ.பி.எல்., தொடர், இந்திய மண்ணில் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

"டாப்-ஆர்டர்' சரிவு:
புனே அணி, சென்னை அணியின் வேகப்பந்துவீச்சில் திணறல் துவக்கம் கண்டது. போலிஞ்சர் பந்தில் ஜெசி ரைடர் (19) அவுட்டானார். அதே ஓவரில் மோனிஷ் மிஸ்ராவும் (2) சரணடைந்தார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (0), குலசேகரா வேகத்தில் போல்டானார். இளம் வீரர் மனீஷ் பாண்டே (10), டிம் சவுத்தி பந்தில் வெளியேறினார். புனே அணி, 41 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.

உத்தப்பா அபாரம்:
பின் யுவராஜ் சிங்-ராபின் உத்தப்பா ஜோடி பொறுப்பாக ஆடியது. அபாரமாக ஆடிய உத்தப்பா, அஷ்வின் ஓவரில் இரண்டு "சிக்சர்' விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில், அஷ்வின் சுழலில் உத்தப்பா(31) சிக்கினார். அடுத்து வந்த மிட்சல் மார்ஷ் (11), போலிஞ்சர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
யுவராஜ் அரைசதம்:

தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த யுவராஜ், சவுத்தி வீசிய ஓவரில் இரண்டு இமாலய "சிக்சர்' அடித்து, ஐ.பி.எல்., அரங்கில் தனது 5வது அரைசதத்தை பதிவு செய்தார். புனே அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. யுவராஜ் (62 ரன்கள், 4 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். 

சென்னை கிங்ஸ் சார்பில் போலிஞ்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்

யுவராஜ் அரைசதம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த யுவராஜ், சவுத்தி வீசிய ஓவரில் இரண்டு இமாலய "சிக்சர்' அடித்து, ஐ.பி.எல்., அரங்கில் தனது 5வது அரைசதத்தை பதிவு செய்தார். புனே அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. யுவராஜ் (62 ரன்கள், 4 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். 

சென்னை கிங்ஸ் சார்பில் போலிஞ்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஹசி ஏமாற்றம்:

எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கத்தில் ஏமாற்றம். படுமந்தமாக ஆடிய மைக்கேல் ஹசி (9), முரளி கார்த்திக் சுழலில் அவுட்டானார். பின் பத்ரிநாத், முரளி விஜய் இணைந்து அசத்தினர். 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் (31), ரைடர் பந்தில் வெளியேறினார்.

பத்ரிநாத் அரைசதம்:
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ஒத்துழைக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் பத்ரிநாத். முரளி கார்த்திக், யுவராஜ் சுழலில் தலா ஒரு "சிக்சர்' விளாசிய பத்ரிநாத், ஐ.பி.எல்., அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்த ரெய்னா, ஜெரோம் டெய்லர் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் இரண்டு "சிக்சர்' அடித்தார். தாமஸ் வீசிய கடைசி ஓவரில், ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்த பத்ரிநாத், வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பத்ரிநாத் (63 ரன்கள், 2 சிக்சர், 6 பவுண்டரி), ரெய்னா (34 ரன்கள், 2 சிக்சர், ஒரு பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். 
ஆட்ட நாயகனாக சென்னை அணியின் போலிஞ்சர் தேர்வு செய்யப்பட்டார்.

உத்தப்பா "1000'
ஐ.பி.எல்., அரங்கில், ராபின் உத்தப்பா ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். நேற்று சென்னை அணிக்கு எதிராக 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த இவர், 29வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இதுவரை இவர், 51 போட்டிகளில் பங்கேற்று 4 அரைசதம் உட்பட 1002 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இச்சாதனை படைத்த 15வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில்

         மூலவர் : சிவன்
  அம்மன்/தாயார் :  நவையடிக் காளி
  தல விருட்சம் :  ஆலமரம் -
  பழமை : 500 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : பட்டமங்கை
  ஊர் : பட்டமங்கலம்
  மாவட்டம் : சிவகங்கை
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார். இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமுர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே.

ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும்.

7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும்.

1008 முறை செய்தால் தாம் விரும்பிய பெண்ணை மனைவியாக அடையலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

தலபெருமை:
      
ஆலமரத்தை தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சி கோயிலைப் பொல பொற்றாமரை குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமுர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.

திருமால் பன்றி உருவமாகவும், பிரம்மன் அன்ன வடிவமாகவும் அதற்கு மேலாக மென்மை திருவடியுடன் வீராசனத்துடன் புன்னகை தவழும் சிவந்த திருவாய் மேனியாய், பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞானமுத்திரையும், இடது மேற்கரத்தில் நாகமும், இடது கீழ்கரம் தொடையில் வைத்தும் தட்சிணாமூர்த்தி இங்கு காட்சியளிக்கிறார்.

தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி அனைத்து தலங்களிலுமே தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். யோகத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கடவுள் இவர். ஆலங்குடி, திருவாருர் போன்ற சில தலங்களில் மட்டுமே இவருக்கு தனி சன்னதி உண்டு. ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமுர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே. சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.

தல வரலாறு:
 
இறைவன் பிருங்கி, நந்தி தேவர் முதலான நால்வருக்கு சிவகதையினை கூறிக்கொண்டிருந்தார். அச்சமயம் கார்த்திகை பெண்களான நிதர்த்தனி, அபரகேந்தி, டேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் இறைவன் முன் வீழ்ந்து வணங்கி எங்களுக்கும் அஷ்டமாசித்தியை உபதேசித்தருளும் என்று வேண்டினர்.

இறைவனுக்கு இதில் சற்று சஞ்சலம் தோன்றியது. அருகில் இருந்த உமையவள் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசிக்கும் படி சிவனிடம் சிபாரிசு செய்தார்.

உமையின் சிபாரிசை ஏற்று இறைவன் அஷ்டமாசித்தியை உபதேசிக்க துவங்கினார். ஆனால் கிடைத்த வாய்ப்பினை பெண்டிரோ சரிவர உபயோகிக்காமல் உமையவளையும் இறைவனையும் மறந்து, கவனக்குறைவாக செவிமடுத்தனர்.

இதைக்கண்ட இறைவன், ""நீங்கள் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாக கடவது,'' என்று சாபம் அளித்தார். தங்கள் தவறை உணர்ந்த நங்கையர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை நீக்கும்படி வேண்டினர். இறைவன் அவர்களை மன்னித்தருளினார்.

""நீங்கள் கருங்கற்பாறைகளாய் பட்டமங்கை தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் கிடங்கள். அதன்பின் மதுரையில் இருந்து வந்து குருவடிவில் காட்சியளித்து உங்களுக்கு சாபவிமோசனம் அளிக்கிறேன்.'' என்றார்.

அவ்வாறே இறைவன் மதுரையில் இருந்து எழுந்தருளி கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்த தலமே பட்டமங்கை ஆகும். இது நாளைடைவில் மருவி பட்டமங்கலம் என அழைக்கப்பட்டு வருகிறது.

காளி வடிவில் உமை: இறைவன் அஷ்டமாசித்தியை நங்கையர்க்கு உபதேசிக்க யோசித்த போது அவர்களுக்கு பலமாக சிபாரிசு செய்ததற்காக உமையம்மையும் சபிக்கப்பட்டார். அவர் காளி கோலத்தில் நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக அருள்பாலித்து வருகிறார்.

சாபவிமோசனம் வேண்டி நாவல் மரத்தடியில் நவையடிக் காளியாக கடும்தவம் செய்து அம்பிகை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழகுசவுந்தரியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார்.

திருவிழா:
     
   திருவனந்தல், காலசந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜைகள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசி மகம், சிவராத்திரி, பிரதோஷம்.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

ரமணர் - அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்

அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.

இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.

மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.

வினாடி வினா :

வினா - உலகில் முதன் முதலாக தென் துருவத்தை அடைந்த மனிதன் யார் ?

விடை - அமுண்ட்சன்.

இதையும் படிங்க :

உலகம் அனைவருக்கும் பொதுவானது!'”

large_232276.jpg

"உலகம் அனைவருக்கும் பொதுவானது!'” ஆட்டோ ஓட்டுனரான ரோஸ் மேரி: பள்ளியில், பியூனாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற என் அப்பாவிற்கு, விபத்தில் கால் எலும்பு முறிந்துவிட்டது. ஒரு மாதம் முழுக்க தஞ்சைக்கு நான் தான் வாடகை ஆட்டோவில் கூட்டிட்டுப் போனேன். அந்த ஆட்டோக்காரரிடம், எனக்கிருந்த ஆட்டோ ஓட்டும் ஆசையை கூறினேன்; அவரும் சம்மதிக்க, ஒரே மாதத்தில் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன்.அப்பாவின் விபத்தால், அந்த வருடம் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போனது. உடனே ஒரு வேலைக்கு போகணும்ங்கற பொருளாதார நிலையில், ஒரு ஆட்டோவை வாடகைக்கு வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்ப வயது 15 தான் என்பதால், டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டு கிடைத்த வேலையை பார்த்தேன். ஆனால், மனம் ஆட்டோவிலேயே தான் இருந்தது. எனக்கு 18 வயதானதும், டிரைவிங் லைசென்ஸ் வாங்கினேன். வீட்டில், எதிர்ப்பு இருந்தாலும், நிலைமையை விளக்கிக் கூறி சம்மதம் பெற்றேன்.லோன் போட்டு, ஆட்டோ வாங்கி, ஸ்டாண்டில் நிறுத்தி விட்டேன். "பொம்பளப் புள்ளையா இருக்க, ஒழுங்கா ஓட்டத் தெரியுமானு' நிறை பேர் கேட்டுட்டு நகர்ந்திடுவாங்க. குடிபோதையில் சிலர், வம்படியாக வண்டியில் ஏறிக் கொண்டு வம்பு செய்வதும் உண்டு. ஆனால், குடும்ப சூழ்நிலையை நினைத்து பொறுமை காப்பேன்.என் திறமையையும், சுறுசுறுப்பையும் பார்த்து அனைவரும் என்னை வெளிப்படையாக பாராட்ட ஆரம்பித்தனர். பெட்ரோல் போக தினமும், 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கிறது. பெண்களுக்கு ஏற்ற வேலை என்று குறுகிய வட்டத்திற்குள் சிலர் முடங்கி விடுகின்றனர்; அதிலிருந்து வெளியே வர வேண்டும். உலகம் அனைவருக்கும் பொதுவானது.











நன்றி - வெப் துனியா, தின மணி, தின மலர்.

--

                                                               




--

                                                              

No comments:

Post a Comment