Friday, April 8, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 08 , 2011.


முக்கியச் செய்தி :


லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் அண்ணா ஹஸாரே

புது தில்லி, ஏப்.5: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி சமூக சேவகர் அண்ணா ஹஸôரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

72-வயதாகும் அண்ணா ஹஸôரே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி செவ்வாய்க்கிழமை தில்லியில் காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் சென்று அங்கு அஞ்சலி செலுத்திய ஹஸôரே, அங்கிருந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று அங்கு அமர்ந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறினார். நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு இதைவிட வேறு எந்த வழிமுறையும் கிடையாது. எனவேதான் இதைத் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டார். சுவாமி அக்னிவேஷ், கிரண் பேடி, சந்தீப் பாண்டே ஆகியோரும் உண்ணாவிரதப் பந்தலில் ஹஸôரேவுக்கு ஆதரவாகப் பேசினர்.

லோக்பால் மசோதா தயாரிப்பில் மூத்த அமைச்சர்கள் குழுவில் சிவில் சொசைட்டி உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை பிரதமர் நிராகரித்து விட்டது தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக ஹஸôரே கூறினார். தங்களது அமைப்பில் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அக்னிவேஷ் ஆகியோரை முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிகமாக நிலத்தை வைத்துள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் இந்தக் குழுவுக்கு தலைமை ஏற்று, ஊழல் ஒழிப்பு மசோதாவைத் தயாரிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று ஹஸôரே கேள்வியெழுப்பினார்.

இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. லோக்பால் மசோதாவில் என்னென்ன விதிகள் இடம்பெற வேண்டும் என்று ஹஸôரே குழுவினர் அளித்த பரிந்துரைத்துள்ளனர். 

இந்த பரிந்துரைகளை அமைச்சரவை துணைக் குழுவுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்வதாக பிரதமர் கூறியதையும் குழுவினர் முதலில் ஏற்றுக் கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையிலான துணைக் குழு, ஹஸôரேயை சந்தித்துப் பேசியதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக தாங்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளையும் அரசு ஏற்க வேண்டும் என குழுவினர் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில்...: அண்ணா ஹஸôரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் லோக்பால் மசோதாவைக் கொண்டுவரும்படி அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். குஜராத் மாநிலம் ஆமதாபாதிலும் கிராமமக்கள் கறுப்புத் துணி அணிந்து அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஹஸôரே ஏற்கவில்லை. ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மும்பையில் உள்ள ஆஸôத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

பிகாரில்...: ஹஸôரே-யின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பிகார் மாநில துணை முதல்வர் எஸ்.கே. மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் தனது முழு ஆதரவும் ஹஸôரேக்கு உண்டு என்றார்.

நாட்டில் நிலவும் ஊழலைத் தடுப்பதற்கு லோக்பால் மசோதா மிகவும் அவசியம் என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் குறிப்பிட்டார். ஹஸôரே-யின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தனது முழு ஆதரவை சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்தி மலர் :


* ஜப்பான் கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை  

ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்த ஆழப்பேரலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபுகுஷிமாவிற்கு வடக்கில், கரையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை உலுக்கியுள்ளது.

மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதையடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையும் தாக்கியதன் விளைவாக ஃபுகுஷிமா அணு மின் நிலையம் செயலிழந்து, அதிலிருந்து இன்று வரை அணுக் கதிர் வீச்சு பரவி வருகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் வினையாக ஏற்படும் ஆழிப்பேரலை 3 அடி உயரத்திற்கு எழும்பி கரையைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இலங்கையில் அவசர காலச்சட்டம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு  

இலங்கையில் அவசர காலச்சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் பதிவாகின.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன.

* அணுஉலை மீது நைட்ரஜன் வாயு செலுத்த ஜப்பான் முடிவு

டோக்கியோ, ஏப்.7: ஜப்பானில் கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ள அணு உலை ஒன்றின்மீது நைட்ரஜன் வாயுவை செலுத்தும் பணி இப்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜப்பானின் புகுஷிமா நகரில் கடந்த மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் 30 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமியால் புகுஷிமா நகரில் இருந்த டோக்கியோ மின் உற்பத்திக் கழகத்துக்குச் சொந்தமான அணுமின் உற்பத்திக் கழகத்திலிருந்த அணுஉலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தன.

 இதனால் அணுஉலைகளிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். அணுஉலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது.

 இப்போது அணு உலைகளின் மீது நைட்ஜரன் வாயுவை செலுத்தி கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 6 நாள்களுக்கு அணு உலை மீது நைட்ரஜன் வாயு அதிகளவில் செலுத்தப்படும். இதேபோல மற்ற அணுஉலைகள் மீது நைட்ரஜன் வாயுவைச் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் கதிரியக்கத்தின் வீரியம் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜப்பான் வருகிறார் ஹிலாரி கிளிண்டன்: சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வருகை தரவுள்ளார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ள நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஜப்பானுக்கு வருகிறார் ஹிலாரி.

 அப்போது ஜப்பான் பிரதமர் நேட்டோ கான், வெளியுறவுத்துறை அமைச்சர் தாகேகி மட்சுமோட்டோவை, ஹிலாரி சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

*பாகிஸ்தான் பயங்கரவாதி பற்றி துப்பு தருவோருக்கு ரூ. 22 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், ஏப்.7: பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாதி முகமது இலியாஸ் காஷ்மீரி குறித்து தகவல் தருவோருக்கு ரூ. 22.50 கோடி (50 லட்சம் டாலர்) பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

 மும்பை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் இலியாஸ். அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதால் இவர் இப்போது "நியூ பின் லேடன்' என்று அழைக்கப்படுகிறார். இவரை உயிருடன் பிடிக்க தகவல் கொடுத்தாலோ அல்லது கொன்று சடலமாகக் கொடுத்தாலோ பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 ஹர்கத்-உல்-ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹியூஜி) எனப்படும் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இலியாஸ் உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதலை இவரது தலைமையிலான பயங்கரவாத குழு நிகழ்த்தியுள்ளது. 2006-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலை இலியாஸ் தலைமையிலான ஹியூஜி அமைப்பு மேற்கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அமெரிக்க தூதரக அதிகாரி டேவிட் ஃபாயும் ஒருவர். இந்தத் தாக்குதலில் 48 பேர் காயமடைந்தனர்.

 ஆப்கானிஸ்தானில் செயல்படும் அல்-காய்தா அமைப்புக்கு இலியாஸ் தலைமையேற்றுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவராக இரந்த முஸ்தபா அபு அல்-யாசித், கடந்த ஆண்டு மே மாதம் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த பிரிவுக்கு இலியாஸ் தலைமையேற்றதாகத் தெரிகிறது. அல்-காய்தா மற்றும் லஷ்கர் அல் ஜில் ஆகிய அமைப்புகளின் கமாண்டர்களுடன் இவர் கூட்டு சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

முகமது இலியாஸ் காஷ்மீரி, இலியாஸ் அல்-காஷ்மீரி, இலியாஸ், நயீப் அமிர் என்று பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். இந்தப் பெயர் கொண்டவர்களைப் பற்றி அமெரிக்க கமாண்டருக்குத் தகவல் தருமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர் உள்ளிட்ட விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* சிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஆசிரியர்களுக்கு வரவேற்பு

சிங்கப்பூர், ஏப்.7: இந்திய ஆசிரியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு அதிக வரவேற்பு உள்ளது.
 இதுகுறித்து சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் "ஸ்டிரெய்ட் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:

 கடந்த 4 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இந்திய ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு பணிபுரிவதற்காக வந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டில் மேலும் 10 ஆசிரியர்கள் பணிபுரிவதற்காக சிங்கப்பூர் வரவுள்ளனர். சிங்கப்பூர் மாணவர்களுக்கு இந்திய மொழிகளைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல் மற்ற பாடங்களையும் இந்திய ஆசிரியர்கள் சொல்லித் தருவதால் அவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து சிங்கப்பூரிலுள்ள பள்ளி முதல்வர்கள் அகாதெமி தலைவர் பெலிண்டா சார்லஸ் கூறியதாவது: சிங்கப்பூரின் கலாசாரத்துடன் இந்திய கலாசாரம் ஒத்துள்ளது. எனவே இந்திய ஆசிரியர்களை பணிபுரிய இங்கு அழைத்து வருகிறோம் என்றார் அவர்.

 2006-ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்துக்கு இந்திய ஆசிரியர்களை அனுப்பும் அதிகாரப்பூர்வ நிறுவனமாக கொல்கத்தாவைச் சேர்ந்த "அகாதெமி ஃபார் புரொபஷனல் எக்ஸலன்ஸ்' நிறுவனம் உள்ளது. 2007-ல் 8 ஆசிரியர்களையும், 2009-ல் 30 ஆசிரியர்களையும், 2010-ல் 25 ஆசிரியர்களையும் இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளது. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் 31 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 620 மட்டுமே. இது மொத்த ஆசிரியர்களில் 2 சதவீதம் மட்டுமே ஆகும். பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைக் கற்றுத் தருவதற்கு சிங்கப்பூரில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

 எனவேதான் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக ஊதியத்தைக் கொடுத்து சிங்கப்பூர் வரவழைக்கிறது என ஸ்டிரெய்ட் டைம்ஸ் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
*பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகளாக இருந்த இந்தியர் விடுதலை



அமிருதசரஸ்/லாகூர், ஏப்.7: கடந்த 27 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி உத்தரவின்பேரில் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். இந்திய எல்லையில் அவரை அவரது சகோதரரும், சகோதரிகளும் வரவேற்றனர்.

 பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக 27 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைச் சேர்ந்த கோபால் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.

 இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தைக் காண வந்திருந்தார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி. அப்போது இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் விதத்திலும், மனித நேய அடிப்படையிலும் கோபால்தாûஸ விடுவிக்க கிலானி உத்தரவிட்டிருந்தார்.

 இதைத் தொடர்ந்து கோபால் தாஸ் லாகூரின் கோட்லக்பத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். எல்லைக்கு வரும் வரை கோபால்தாஸின் கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. எல்லையை வந்தடைந்ததும் அவரது கையிலிருந்த விலங்கை அவிழ்த்து அதிகாரிகளிடம் கோபால்தாஸ் ஒப்படைக்கப்பட்டார்.

 இந்திய எல்லைக்கு வந்ததும் கோபால்தாஸ் தரையில் உட்கார்ந்தை தாய்நாட்டு மண்ணை முத்தமிட்டார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்தது. அவரை வரவேற்க அவரது சகோதரர் ஆனந்த் வீரர், சகோதரிகள், மருமகன் நவ்ஜோத் ஆகியோர் வந்திருந்தனர். கோபால்தாûஸக் கண்டதும் அவர்கள் கட்டியணைத்து வரவேற்றனர். 

தேசியச் செய்தி மலர் :

* ஏப்ரல் 15-ல் பிஏசி முன்பு அட்டர்னி ஜெனரல் ஆஜர்

புது தில்லி, ஏப். 7: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ஆஜராகும்படி அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, மத்திய சட்டத்துறை செயலர் டி.ஆர். மீனா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 ஏப்ரல் 15-ம் தேதி இருவரும் பிஏசி முன்பு ஆஜராவார்கள் என்றும், அதற்கு அடுத்த நாளில் மத்திய அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் உள்ளிட்டோர்ஆஜராவார்கள் என்றும் தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

* காலமானார் க.சுப்பிரமணியன்

பெங்களூர், ஏப். 7: பெங்களூர் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவரான க.சுப்பிரமணியன் (88) ஏப்ரல் 6-ம் தேதி இரவு காலமானார்.

 பெங்களூர் தமிழ்ச் சங்கத்தை 1950-ல் நிறுவிய 7 பேரில் ஒருவராக விளங்கிய புலவர் க.சுப்பிரமணியன், மாரடைப்பு காரணமாக புனித ஜான்ஸ் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு காலமானார்.

 அவரது உடல் வீரசைவ முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. மனைவி சிங்காரம், மகள்கள் எழில், மணிவிளக்கு, அன்பு மற்றும் மகன் பாரி உள்ளனர்.

* முல்லைப் பெரியாறு விவகாரம்: உயர்நிலைக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

புது தில்லி, ஏப். 7: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து ஆய்வு செய்து வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாமல் இருக்க கேரள அரசு அம் மாநில சட்டப் பேரவையில் அணைப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது.

 இதை எதிர்த்து தமிழக அரசும், ஆமோதித்து கேரள அரசும் உச்ச நீதிமன்றதில் பரஸ்பரம் முறையிட்டதையடுத்து, அணை விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நியமித்தது.

 இந்த குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பருடன் நிறைவுப் பெற்றதையடுத்து சென்ற பிப்ரவரி வரை நீடிக்கப்பட்டது. ஆனால், அணை தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுப் பணிகள் முடிவடையாததால், மீண்டும் ஏப்ரல் 30 வரை குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

 இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை விசாரணை நடத்தியது.

 தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பாப்டே, கிருஷ்ணமூர்த்தி, உமாபதி ஆகியோர், அணை விவகாரம் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள போது, புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொள்வதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு உரிமையை தமிழகத்துக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

 இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கும், அதன் பதில் மனு குறித்து இரண்டு வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக கருத்து கூறும்படி தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

 இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறிது ஆய்வு செய்து வரும் முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் குழுவின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், உயர்நிலைக் குழுவின் வேண்டுகோளை ஏற்று, அதன் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தொலைத் தொடர்பு உரிமம் வழங்கும் முறை: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது ஜேபிசி

புது தில்லி, ஏப்.7: தொலைத் தொடர்புத்துறை உரிமம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு ஆலோசனைகள் வழங்குமாறு பொதுமக்களிடம் நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு கோரியுள்ளது.

 நாட்டையே உலுக்கிய 2-ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தி வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கொள்கைளை வகுப்பதற்கு பொதுமக்கள், நிபுணர்கள், இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆலோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் அளிக்கலாம் என்று ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ கூறினார்.

 தொலைத் தொடர்புத் துறை தொடர்பாக நேரில் ஆஜராகி கருத்து கூற விரும்புவோர் அதுகுறித்து முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் குழுவின் முடிவே இறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

 கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் பரிந்துரைகள் அனைத்தம் ஜேபிசி வரையறைக்குள் இருப்பின் அது ஏற்கப்படும். கருத்துகள் அனைத்தும் இயக்குநர், மக்களவை செயலகம், அறை எண்: 004, கீழ்த்தளம், நாடாளுமன்ற கட்டட இணைப்பகம், புது தில்லி 110 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணையதள முகவரி: 

த்ல்ஸ்ரீற்ப்ள்-ப்ள்ள்ஃள்ஹய்ள்ஹக்.ய்ண்ஸ்ரீ.ண்ய்
 தொலைநகல் எண்: 011-2309 3919.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் 30 பேரடங்கிய நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு தனது அறிக்கையை அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய உள்ளது. 1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கையை ஆராய்ந்து அதில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்கும். குழுவின் முதல் கூட்டம் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்றது. அடுத்த கூட்டம் மே 18-ம் தேதி நடைபெற உள்ளது.

* முல்லைப் பெரியாறு விவகாரம்: உயர்நிலைக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

புது தில்லி, ஏப். 7: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து ஆய்வு செய்து வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாமல் இருக்க கேரள அரசு அம் மாநில சட்டப் பேரவையில் அணைப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது.

 இதை எதிர்த்து தமிழக அரசும், ஆமோதித்து கேரள அரசும் உச்ச நீதிமன்றதில் பரஸ்பரம் முறையிட்டதையடுத்து, அணை விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நியமித்தது.

 இந்த குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பருடன் நிறைவுப் பெற்றதையடுத்து சென்ற பிப்ரவரி வரை நீடிக்கப்பட்டது. ஆனால், அணை தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுப் பணிகள் முடிவடையாததால், மீண்டும் ஏப்ரல் 30 வரை குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

* ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையை சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை

திருவனந்தபுரம், ஏப்.7: ஓய்வு பெற்ற தலித் அதிகாரியின் அறையை பசு சாணத் தண்ணீர் தெளித்து அரசு ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தரப்பட்டுள்ளது.

 கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.

 புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

 நான் ஓய்வு பெற்ற பின்னர் நான் பயன்படுத்திய அறை, மேஜைகள், நாற்காலிகள், அலுவலகர் கார் ஆகியவற்றின் மீது பசுவின் சாணத் தண்ணீர் சில ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல் வந்துள்ளது. நான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதுபோன்ற செயலில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இது மனித உரிமைகளையும், குடிமக்கள் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.

 இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி என். தினகர், சம்பந்தப்பட்ட வரித்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 

மேலும் புகார் தொடர்பாக மே 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட நபர் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.

 அரசில் உயர்பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று அவர் கூறியுள்ளார்.

* கோவா அமைச்சரின் மகன்களுக்கு அரசு ஊதியம்

பனாஜி,ஏப் 7: கோவா உள்துறை அமைச்சரின் இரு மகன்களுக்கு, மாநில அரசில் பதவியுடன் சம்பளமும் வழங்கப்படுவதாக சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோவா மாநில உள்துறை அமைச்சராக இருப்பவர் ரவி நாயக். சட்டப்பேரவையில் எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், தனது மூத்த மகன் ராய் நாயக் தன்னுடைய தனி உதவியாளராகவும், இளைய மகன் ரிதேஷ் நாயக் தனிச் செயலராகவும் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். இதற்காக இவர்களுக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் சம்பளம் வழங்கப்படுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இவர்களுடைய பணி நியமனம் தற்காலிகமானது என்றும்,இதற்கு பொது நிர்வாகத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலச் செய்தி மலர் :

* முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 30தான் ஆகிறது.

அவரது பெயர் தீபக். 30 வயதாகும் தீபக், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜிம்மில் நேற்று திடீரென மரணமடைந்தார். இவர் பொறியாளராக பணியாற்றி வந்தார். டிடிகே சாலையில் உள்ல ஜிம்முக்கு அவர் உடற்பயிற்சி செய்ய வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினாராம். 

இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அவரை ஜிம் பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தீபக் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் ஏதும் வராததால் வழக்குப் போடவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் கருதினால் நாங்கள் விசாரணை நடத்துவோம். அது இயற்கையான மரணமாக இருந்தால் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ராசாவின் நண்பரான சாதிக்பாட்சா மர்மமான முறையி்ல மரணமடைந்தார். இந்த நிலையில் ராசாவின்உறவினர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* அண்ணா ஹசாரேக்கு நரேஷ் குப்தா ஆதரவு  

ஊழலை முற்றிலும் ஒழிக்கும் சட்டத்தை நிறைவேற்றக்கோரி பட்டினிப் போராட்டம் நடத்திவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேக்கு தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அண்ணா ஹசாரேயின் போராட்டத்தை ஆதரித்து சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்ட நரேஷ் குப்தா, இந்தப் போராட்டம் இந்திய சமூகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்ணியமான தேர்தல் கூட்டமைப்பில் நரேஷ் குப்தா இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* மேலூ‌ர் அருகே ‌வீடு ‌வீடாக செ‌ன்று பண‌த்தை ப‌றிமுத‌ல் செ‌ய்த தே‌ர்த‌ல் ஆணைய‌ம்  

மதுரை மாவ‌ட்ட‌ம் மேலூ‌ர் ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌க்கு‌ட்ப‌ட்ட ‌கிராம‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ‌‌வீடுக‌ளி‌ல் செ‌‌ன்று தே‌ர்த‌ல் அ‌திகா‌ரிக‌ள் பண‌த்தை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

மேலூ‌ர் ச‌ட்டம‌ன்ற தொ‌கு‌தி‌க்கு உ‌ள்ப‌ட்ட மை‌ட்டா‌ன்டிப‌ட்டி‌ எ‌ன்ற ‌கிராம‌த்த‌ி‌ல் பண‌ம் ‌‌வி‌நியோக‌ம் செ‌ய்ய‌ப்படுவதாக வ‌ந்த தகவலை அ‌டு‌த்து தே‌ர்த‌ல் அ‌திகா‌ரிக‌ள் காவ‌ல்துறை‌யினருட‌ன் அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்று ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

அ‌ப்போது, ‌தி.மு.க.‌வின‌ர் உதய சூ‌ரிய‌ன் ‌சி‌‌ன்ன‌த்த‌ி‌ற்கு வா‌க்க‌ளி‌க்கு‌ம்படி கூ‌றி பண‌ம் த‌ந்ததாக ‌‌கிராம‌ம‌க்க‌ள் கூ‌றின‌ர்.

‌ஒரு வா‌க்கு‌க்கு 600 ரூபா‌ய் கொடு‌த்ததாக மை‌ட்டா‌ன்ப‌ட்டி ‌கிராம‌ம‌க்க‌ள் கூ‌றின‌ர். ‌சில‌ர் பண‌‌ம் கொடு‌க்க மறு‌த்ததா‌ல் ‌வீடு ‌வீடாக செ‌ன்று தே‌ர்த‌ல் அ‌திகா‌ரிக‌ள் ப‌றிமுத‌ல் ச‌ெ‌ய்தன‌ர்.

காவ‌ல்துறை‌யின‌ர் ‌மிர‌ட்டலை தொட‌ர்‌ந்து ‌கிராம‌ம‌க்க‌ள் ‌தி.மு.க.‌வின‌ர் கொடு‌த்த பண‌த்தை ‌திரு‌ம்ப கொடு‌த்தன‌ர்.

* மதுரை ஆட்சியருக்கு எதிராக வழக்கு: ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க மனு

சென்னை, ஏப். 7: மதுரை ஆட்சியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மதுரையைச் சேர்ந்த சத்தியவாணி என்பவர் "மதுரை மாவட்ட ஆட்சியர் யு. சகாயம் பொதுக் கூட்டங்களில் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்' என்று பேசியதாகவும், அதனால், அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 இந் நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ரத்தினம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

 அதில் அவர் கூறியிருப்பது:

 மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது. அங்குள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோர் சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களின் பணியைக் கெடுக்கும் நோக்கில் சிலர் வேண்டுமென்றே அவர்கள் மீது அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

 இப்போது இந்த நீதிமன்றத்தில் ஆட்சியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் அந்த வகைதான். அந்த மனுவை பொது நலன் மனு என்று கூறுவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. மனுதாரர் தனது செயல் மூலம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார். அதற்காக, அவருக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

* யாருக்கு வாக்கு? ரகசியத்தை வெளியிட்டால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை, ஏப். 7: யாருக்கு வாக்களித்தோம் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ரகசியத்தை வெளியிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப் பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்களிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை, தேர்தல் ஆணையம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

 இந் நிலையில், வாக்களிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. வாக்களித்த பிறகு எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். வாக்களிப்பதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட ஒரு வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கப் போகிறேன் என ஒரு வாக்காளர் அறிவித்தால் அவர் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்.
 மேலும், ரகசியத்தை வெளியிட்ட அவர் மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 128-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 அலுவலர் மீதும் நடவடிக்கை: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், அலுவலர்களும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பதை அறியும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு அறியும் முயற்சியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டால் அதுவும் குற்றமாகும். வாக்காளர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறார்; யாருக்கு வாக்களிக்கிறார் என்கிற செயல்பாடுகளை புகைப்படம் எடுக்கக் கூடாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 வாக்குச் சாவடி அதிகாரிகளோ, அலுவலர்களோ, வேட்பாளரின் முகவர்களோ வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள சிறிய அறைக்குள் வரக்கூடாது. ஒரு வாக்காளர் மாற்றுத் திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு உதவி செய்ய ஒருவர் உடன் வரலாம். அந்த நபர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
 பணத்துக்கு விலை போகக் கூடாது: நாம் விரும்பிய நபருக்கு இல்லாமல், ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்க பணமோ, பரிசோ பெறுவதும், கொடுக்கப்பதும் குற்றமாகும். மதுபானம், விருந்து, பரிசுகள் அளிப்பதும், மதம், ஜாதி, சமுதாயம் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட நபருக்கு சாதமாக வாக்களிக்கக் கோருவதும் குற்றம்.

 வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை மொத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட அளவுக்கோ அழைத்துச் செல்வதும், திரும்ப அவர்களது வீடுகளுக்கு கொண்டு போய் விடுவதும் குற்றம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

* தவறாமல் வாக்களிக்க வேண்டும்: கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்


சென்னை, ஏப். 7: தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக, தவறாமல் வாக்களிக்க வேண்டிய கடமை குறித்து கல்லூரி மாணவர்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக உயர் கல்வித் துறை அறிவுறுத்தலின் பேரில் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

 சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கு இதுபோல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், உயர் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும். இதுகுறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 3 நகரங்களில் 100 டிகிரி

சென்னை, ஏப். 7: திருச்சி, வேலூர், திருநெல்வேலி நகரங்களில் வியாழக்கிழமை வெயில் அதிகபட்ச அளவாக நூறு டிகிரியைத் தொட்டது.

 ஏப்ரல் வெயில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் உயர்ந்து வருகிறது. சென்னையில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. வெப்ப நிலை குறைவதற்கான அறிகுறி ஏதும் இல்லை என வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

ஒற்றைத் தலைவலியா ? அசால்டா இருக்காதீங்க

தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல தெரிக்கும் தலைவலியை நம்மில் அநேகம் பேர் உணர்ந்திருக்க முடியும். தலைவலியில் பல விதங்கள் உண்டு. சாதாரண தலைவலி சில நிமிட நேரமே நீடிக்கும். ஆனால் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி பிரச்சினைக்குரிய ஒரு நோயாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒற்றை தலைவலிக்கு காரணங்கள் பல உள்ளன. மூளையில் கொப்பளம், நாடாப்புழு மூளையைத்தாக்குதல், சைனஸ், பற்களில் பாதிப்பு போன்றவை இந்தவகை தலைவலி வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் முறையற்ற வாழ்க்கை முறையே இந்த மைக்ரோன் ஒற்றைத்தலைவலி வர காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

யாருக்கு பாதிப்பு அதிகம்

மைக்ரேன் தலைவலி குறிப்பிட்ட தரப்பினரை அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள்தான் இந்த பிரச்சினைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோய்க்கான மருந்து

ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் உள்ளன. மனதை ஒருமுகப்படுத்துதல், தியானம், யோகாசனம், ஆகிய பயிற்சிகள் மைக்ரேன் தலைவலியை கட்டுக்குள் வைக்கும். 

இவற்றைக் காட்டிலும், முறையான ஓய்வு, நேரத்திற்கு கட்டுப்பாடான உணவு, 
உடற்பயிற்சி போன்றவை ஒற்றைத்தலைவலியை அண்டவிடாமல் செய்துவிடும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும்.

வர்த்தகச் செய்தி மலர் :

* பங்குச் சந்தை நிலவரம்'சென்செக்ஸ்' 21 புள்ளிகள் குறைவு

ஏப்ரல் 08,2011,04:13

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. லாப நோக்கம் கருதி, அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், இதர சில ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்ததாலும், இந்திய பங்குச் சந்தைகளிலும் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து வருவது போன்றவையும், பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரூபாயின் வெளி மதிப்பு உயர்ந்து வருவதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்புக்குள்ளாகும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், வியாழக்கிழமையன்று, தகவல் தொழில்நுட்பத் துறையின் நிறுவனப் பங்குகள் விலை குறைந்து போனது. மேலும், எண்ணெய், எரிவாயு, 

தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் தேவைப்பாடு குறைவாக இருந்தது. அதேசமயம், வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.02 புள்ளிகள் குறைந்து, 19,591.18 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,665.09 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,537.02 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 6.05 புள்ளிகள் சரிவடைந்து, 5,885.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 5,906.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,866.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

spt1.jpg

*ஐபிஎல் கிரிக்கெட் இன்று கோலாகலத் தொடக்கம்: சென்னை - கொல்கத்தா பலப்பரீட்சை

சென்னை, ஏப். 7: இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது.

 ÷முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் சோனி செட் மேக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

 ÷இப்போது நான்காவது ஆண்டாக ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. முதல் மூன்று போட்டிகளில் இருந்த பல வீரர்கள் இப்போது வேறு அணியால் வாங்கப்பட்டுள்ளனர். புது அதிரடி வீரர்கள் பலரும் பல்வேறு அணிகளில் இணைந்துள்ளனர். எனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 ÷ஏற்கெனவே நடைபெற்ற 3 ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் இடம் பெற்றிருந்தன. இப்போது புணே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளன.

 போட்டி விவரம்: மொத்தம் 73 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒவ்வொரு அணியும் தலா இருமுறை மோத வேண்டும். அடுத்த பிரிவில் உள்ள அணிகளில் ஓர் அணியுடன் மட்டும் இருமுறை மோத வேண்டும். மற்ற 4 அணிகளுடனும் ஒரு முறை விளையாட வேண்டும். இரு முறை மோதும் அணி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (சென்னை அணி ஏ பிரிவில் உள்ள புணே அணியுடன் இருமுறை மோதுகிறது)

புள்ளி பட்டியலில் முதல் 4 இடத்துக்கு வரும் அணிகள் மட்டும் அடுத்த சுற்றுக்கு வரும். இதில் முதலிடத்தில் உள்ள அணி இரண்டாமிடத்தில் உள்ள அணியுடன் மோதும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி 3 வது - 4 வது இடத்தில் உள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். மே 28-ம் தேதி வரை, மொத்தம் 51 நாள்கள் 13 இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்படி ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 ஆட்டங்களில் விளையாடும்.

 ÷சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்துக்கு முன் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமான பின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமடைந்துள்ளது.

 ÷இதுதவிர கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலாகவும் ஐபிஎல் விளங்குகிறது. அணியின் உரிமையாளர்கள் பெரும்பாலானவர்கள் பெரும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்களே ஆவர். இதனால் தான் வீரர்கள் கோடிக்களைக் கொட்டி வாங்கப்பட்டுள்ளனர்.

* ஃபேஸ் புக்கில் மெஸ்ஸி: ஒரே நாளில் 70 லட்சம் ரசிகர்கள்

spt.jpg

பார்சிலோனா, ஏப். 7: ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, சமூக இணைய தளமான ஃபேஸ் புக்கில் இணைந்துள்ளார்.

 ÷அவர் இணைந்த ஒரு சில மணி நேரத்திலேயே உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் அவரது ரசிகராக ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 ÷ஃபேஸ் புக் மூலம் லட்சக்கணக்கானோருடன் இணைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தனது பதிவில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

 23 வயது இளம் வீரரான மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா தேசிய அணி மற்றும் லா லிகா, பார்சிலோனா அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார். பிரபல கால்ந்தாட்ட வீரர் மரடோனா இவரை தனது விளையாட்டு வாரிசு என்றே அறிவித்துள்ளார்.
 உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை மெஸ்ஸி இருமுறை வென்றுள்ளார்.

 மற்றொரு பிரபல சமூக இணைய தளமான டுவிட்டரில் அவர் இன்னும் இணையவில்லை.

ஆன்மீக்ச் செய்தி மலர் :

* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோயிலில் தற்போது சித்திரை திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் நான்கு மாசி வீதிகளில் வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவிழா தொடக்கத்திற்கான கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. உலகத்தை ஆளும் அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் நாளை அன்ன வாகனத்திலும், பூத வாகனத்திலும் பவனி வருகின்றனர். இந்தக் காட்சியைக் காணும் பாக்கியம் நமக்கெல்லாம் வாய்த்திருக்கிறது. "என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று அருளாளர்கள் இதைத் தான் குறிப்பிட்டனர். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. பூதவாகனம் இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலைக் குறிப்பதாகும். அவரவர் செய்த நல்வினை, தீவினைகளால் பிறப்பு ஏற்படுகிறது. பிறந்த ஒவ்வொருவரையும் இன்ப துன்பம், காலம் ஆகிய பூதங்கள் பயமுறுத்துகின்றன. அந்த பூதங்களை அடக்கி நமக்கு முக்தியளிக்க வருகிறார் சுந்தரேஸ்வரப்பெருமான். மீனாட்சி அன்னவாகனத்தில் பவனி வருகிறாள். அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெள்ளையாய் இருக்கவேண்டும். பாலும் நீரும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் அன்னம் பருகும். அதுபோல, நல்லதும் கெட்டதும் கலந்த இவ்வுலகத்தில், நல்லதில் மட்டுமே நம் மனம் செல்ல வேண்டும் என்று அன்னத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சி நமக்கு எடுத்துரைக்கிறாள்.இருவரையும் தரிசிக்க நாளை மாசிவீதிகளில் காத்திருப்போம்.

* கோழிக்கோடு - அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோவில்.

மூலவர் : லோகாம்பிகா அம்மன்
   -
  தீர்த்தம் : பெரிய குளம், சிறிய குளம்
  ஆகமம்/பூஜை : அத்யுத்தமா என்ற முறையில் பூஜை செய்யப்படுகிறது.
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் -
  ஊர் : லோகனார்காவு
  மாவட்டம் : கோழிக்கோடு
  மாநிலம் :  கேரளா

தல சிறப்பு:
     
  இங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு.  
   
கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த ஊர் இது. இங்கு அவரது நினைவாக இசை மண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய நன்கொடை அனுப்ப விரும்புவோர் நிர்மாணக் கமிட்டி அமைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

கோயில் பிரகாரத்தில் சிவன், விஷ்ணு, கணபதி, ஆதித்தயன், நவக்கிரகங்கள், பூதத்தேவர் சன்னதி உள்ளது.

தலபெருமை:
     
  கோயிலின் இடப்புறத்தில் கரனவர் எனப்படும் நகரிகர் தலைவர்களின் பீடம் அமைந்துள்ளது. இவர்களிடம் உத்தரவு பெற்ற பின்பே, பக்தர்கள் வழிபாட்டிற்குச் செல்லவேண்டும் என்ற விதி இங்கு உள்ளது. வடக்கு வாசலில் கூரையற்ற சந்நிதியில் பூதத்தேவர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் கோயிலின் பாதுகாவலராகத் திகழ்கிறார். ஞாபகசக்தியை அதிகரிப்பதற்கும், தொலைந்த பொருட்களை மீட்டுக்கொடுக்கும்படியும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். இரண்டு தெப்பக்குளங்கள் இங்கு உள்ளன. பூரத்திருவிழாவின் போது ஆறாட்டு நடைபெறும் குளம் பெரியகுளம். கோயிலின் மேற்கே அமைந்துள்ள இக்குளத்தை, நகரிகர் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டூரம்மா உருவாக்கினார். மற்றொரு சிறியகுளம் விஷ்ணு கோயில் அருகில் உள்ளது. சிவன் சன்னதி எதிரில் நந்தி விலகி உள்ளது. கோயிலின் வடக்கு பக்கம் அமைந்துள்ள பூரக்களி மண்டபத்தில், திருவிழா காலங்களில் அம்மனுக்கு பிடித்தமான பூரக்களி நடனம் நடைபெறும். அப்போது அம்மனே இந்த நடனத்தை பார்ப்பதாக ஐதீகம்.

தல வரலாறு:
     
  இங்கு பகவதி,சிவன், விஷ்ணுவுக்கென்று மூன்று கோயில்கள் உள்ளன. பகவதியை லோகாம்பிகை, ஆதிபராசக்தி என அழைக்கின்றனர். இவள் சுயம்பு மூர்த்தியாக (தானாகத் தோன்றியவள்) காட்சி தருவது சிறப்பாகும். வடஇந்தியாவில் இருந்து நகரிகர் என்னும் ஆரியர்கள் இடம்பெயர்ந்து கேரளத்திலுள்ள புதுப்பனம் கிராமத்திற்கு வியாபாரத்திற்காக வந்தனர். அவர்களுடன் குலதெய்வமான லோகாம்பிகை உடன் வந்தாள். நகரிகர்களின் கண்ணுக்கு மட்டுமே அவள் தெரிவாள். நகரிகர்களில் ஒருவரை, உள்ளூர்வாசிகள் சிலர் ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்தனர். பழிச் சொல்லைத் தாங்காமல், அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு பின், நகரிகர்கள் ஓலம்பலம்என்னும் கிராமத்திற்கு வந்து அதன்பின் லோகனார்காவு கிராமத்திற்குக் கூட்டமாகச் சென்றனர். கூட்டத்தின் பின்னால் தேவியும் பின்தொடர்ந்தாள். அந்த கிராம மக்கள் கண்ணுக்கு லோகாம்பிகா தெய்வம் தெரிந்தது. அவள் யார் என நகரிகர்களிடம் கேட்டனர். நகரிகர்கள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தபோது, அவர்களது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டாள்.

நகரிகர்களின் தலைவர், அவளைத் தேடி அருகில் இருந்த கொடைக்காட்டு மலை(பயங்குட்டு என்ற பெயரும் உண்டு) மீது ஏறி உச்சியை அடைந்தார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அங்கே அவர்கள் லோகாம்பிகையைக் கண்டு மகிழ்ந்தனர். மலையிலிருந்து வில்லை வளைத்து அம்பு தொடுக்கும்படியும், அம்பு விழும் இடத்தில், தனக்கு கோயில் அமைக்கும்படியும் தேவி உத்தரவிட்டாள். தொடுத்த அம்பு மலைஅடிவாரத்தில் ஒரு மரத்தைத் துளைத்து நின்றது. அவ்விடமே லோகனார்காவு ஆனது. அங்கு கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் உள்ள மரத்திற்கு பங்குனியில் நடக்கும் பூரம் ஆறாட்டு விழாவின் போது மூலிகை திரவியம் பூசுவார்கள். இதை சாந்தாட்டு என்பர். இந்த நிகழ்ச்சியின் போது மட்டுமே மரத்தை பக்தர்கள் தரிசிக்க முடியும். ஆரம்பத்தில் நகரிகர்களே கோயிலில் பூஜை செய்தனர். பிற்காலத்தில் தந்திரி மற்றும் மேல்சாந்திகளை நியமித்தனர். லோகாம்பிகைக்கு அத்யுத்தமா என்னும் சிறப்பான முறையில் பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் காலை, மதியம், இரவு பூஜை நடக்கிறது.

சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு. 

திருவிழா:
     
   மண்டலவிளக்கு விழா கார்த்திகையில் 41நாட்கள். விழாவின் 16ம்நாள், நகரவிளக்கு வழிபாடு, கடைசி 11 நாட்கள், அருகிலுள்ள கொங்கனூர் பகவதி அம்மன் கோயிலில் மண்டலவிளக்கு நடக்கும். கொங்கனூர் பகவதி லோகாம்பிகையின் இளைய தங்கையாகக் கருதப்படுகிறாள். பூரம் திருவிழா பங்குனி ரோகிணியில் தொடங்கி பூர நட்சத்திரத்தன்று ஆறாட்டுடன் நிறைவு பெறும். புரட்டாசியில் நவராத்திரி விழா. இதன் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி அன்று கிரந்த பூஜை என்னும் கல்வி விருத்திக்கான வழிபாடு நடக்கும்.

திறக்கும் நேரம்:
     
  காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ரவீந்திரநாத் தாகூர் - குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் 

* குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள் ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.

* எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், நம் மனப்போக்கினை ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.

வினாடி வினா :

வினா - உலகத்திலேயே முதன் முதலாக தென் துருவத்தை அடைந்த முதல் மனிதன் யார் ?

விடை - அமுண்ட்சன்.

இதையும் படிங்க :

* டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை

large_220611.jpg

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராணுவ வீரர் சங்கரநாராயணன், டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டரை' கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (31); ராணுவ வீரர். இவர், ஐ.டி.ஐ., எலக்ட்ரிக்கல் படித்துள்ளார். டூவீலர், கார் சாவியை பயன்படுத்தாமல், "செக்யூரிட்டி கோடு' மட்டும் பயன்படுத்தும் "வெகிக்கிள் ஸ்டார்ட்டரை' கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பைக் ஸ்டார்ட் செய்வதற்கான ஒயரை, சாவி இடத்திற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, செக்யூரிட் கோடு பாக்சிற்குள் கொண்டு வரப்படுகிறது. "செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட் பாக்சில்' டிஸ்பிளேயுடன் கூடிய ஒன்பது இலக்கம் கொண்ட கீபோர்டு இருக்கும். இதில் ஸ்டார்ட் செய்வதற்கான எண்களை அழுத்திய பின், "கிக்' செய்தால் டூவீலர் "ஸ்டார்ட்' ஆகும். கீபோர்டிலுள்ள ஏதாவது ஒரு எண்ணை அழுத்தினால் போதும், இன்ஜின் ஓட்டம் நின்று விடும்.

"செக்யூரிட்டி கோடு' மறந்து விட்டால், எமர்ஜென்சிக்காக செய்யப்பட்ட மற்றொரு ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்தினால் ஸ்டார்ட்டாகி விடும். மீண்டும் புதிய கோடு நம்பரை தேர்வு செய்து, வழக்கம் போல் ஸ்டார்ட் செய்யலாம். இதே போல், கார்களுக்கும் சாவி போடாமல் இந்த "வெகிக்கிள் ஸ்டார்ட்டரை' பயன்படுத்தலாம். திருடர்கள் இந்த செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட்டர் ஒயரின் இணைப்பை துண்டித்தாலும் இயந்திரத்தோடு ஒயர் இணைத்திருப்பதால் கார், டூவீலர் இன்ஜினை ஸ்டார்ட் செய்யவே முடியாது. அதே போல், டூவீலர்களில் முன் பக்க சக்கரமும் இதனுடன் சேர்த்து பூட்டப்பட்டு விடும். இதனால் திருட்டு சாவி போட்டு கார், டூவீலர்களை திருட வாய்ப்பே இல்லை. "வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' பொருத்த டூவீலருக்கு 1,200 ரூபாய், காருக்கு 5,000 ரூபாய் ஆகிறது. இதுவரை யாரும் வாகனங்களுக்கான "செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட்டரை' கண்டு பிடிக்கவில்லை. இதற்காக கிண்டியிலுள்ள இந்திய அறிவு சார் சொத்துரிமை அலுவலகத்தில், இதற்கான பேட்டன்ட் உரிமையை எனக்கு கடந்த வாரம் வழங்கினர், என்றார்.

* அண்ணா ஹசாரே: தவிர்க்க முடியாத மனிதர் 

V1_3726.jpeg

இதுநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹசாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு கிலி பிடித்து போய் உள்ளது. 

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது, குடிமக்கள் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகுகிறது. 

அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் முடை நாற்றம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளார். 

சரி இப்படி பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அண்ணா ஹசாரே யார்? 

அண்ணா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர்.

தன்னை ஒரு 'ஃபக்கிரி'என்றழைத்துக் கொள்ளும் அண்ணா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.

நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.

பின்னர் ஒரு முறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. 

போராடுவது அவருக்குப் புதிதல்ல.இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962 ல் இந்தோ - சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.

ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் திரும்பினாr

அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார். 

அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.

அதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.

இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.

மகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன. 

ஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995-1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச்சர்களை பதவி இறங்க வைத்தார். 

அத்தோடு நிற்காமல் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார். 

இவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு. 

அவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம்பிடித்துவிட்டார். 

ஊழலால் இந்திய மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹசாரேவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் அவசியமான ஒன்று!



வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

--


No comments:

Post a Comment