Sunday, April 3, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 03 , 2011.


முக்கியச் செய்தி :

இந்தியா சாம்பியன்
                                                                        

மும்பை, ஏப். 2: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

சொந்த மண்ணில் முதல்முறை...
இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சச்சின் கனவு நனவானது
6-வது உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் கோப்பைக் கனவு நனவாகியுள்ளது.

சச்சின் கனவு நனவானது
6-வது உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் கோப்பைக் கனவு நனவாகியுள்ளது.

சாதனை கேப்டன் தோனி
ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும் அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி கோப்பையை வென்றதும் மைதானத்தில் சச்சினை தோளில் தூக்கி வைத்து வலம் வந்தார் யூசுப் பதான். இந்திய வீரர்கள் யுவராஜ், ஹர்பஜன் சிங் ஆகியோரின் கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

நாடு முழுவதும் கொண்டாட்டம்
இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களை பறக்கவிட்டும், கலர் பொடிகளை தூவியும் வெற்றியைக் கொண்டாடினர். கார்களில் தேசியக் கொடியை ஏந்தியும் வலம் வந்தனர்.

பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாடல்களை பாடியும், சாலைகளில் நடனமாடியும் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

விழாக்கோலம் பூண்டது சென்னை
உலகக் கோப்பை வெற்றியால் சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டது.

சென்னையின் பல்வேறு சாலைகளும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சாலைகளில் வந்த வாகனங்களை எல்லாம் மறித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். இளைஞர்கள் வாகனங்களில் படையெடுத்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் போன்று காட்சியளித்தது.

எல்லா வீடுகளிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். மெரீனா சாலையில் வாகனங்களில் வந்து குவிந்த இளைஞர்களால் அந்தப் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸôர் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.

உலகச் செய்தி மலர் :

* வெளிநாட்டு விஷயங்களிலேயே ஒபாமாவுக்கு அதிக கவனம்: அமெரிக்க மக்கள் கருத்து


வாஷிங்டன், ஏப். 2: உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதை விட, வெளிநாட்டு விவகாரங்களிலேயே அதிபர் ஒபாமா அதிக கவனம் செலுத்துகிறார் என்று அமெரிக்க மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் ஆட்சி முறை குறித்து அமெரிக்காவில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது. மார்ச் 25 முதல் 27-ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

முக்கியமாக இப்போது லிபியா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகம் தலையிடுவதைச் சுட்டிக்காட்டி அமெரிக்க மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் நிர்வாகம் குறித்து கருத்துத் தெரிவித்தவர்களில் 46 சதவீதம் பேர் அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று கருத்துக் கூறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உள்நாட்டு சுகாதார கொள்கையில் அவர் அதிக கவனம் செலுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

முதலில் வெளிநாட்டு விவகாரம், லிபியா பிரச்னை, அடுத்ததாக உள்நாட்டு சுகாதாரம், பொருளாதாரம், பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒபாமா முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு முன் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒபாமா நடவடிக்கை எடுப்பதாக 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இப்போது இது 39 சதவீதமாகக் குறைந்து விட்டது.

முன்னதாக சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வேன் என்பதே அவரது முக்கியமான வாக்குறுதியாக இருந்தது. ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையை போக்குவதில் ஒபாமா அதிக கவனம் செலுத்தவில்லை என பெரும்பாலானோர் கருத்துக் கூறியுள்ளனர்.

* ஜப்பான் அணுக் கசிவால் மோசமான விளைவுகள் ஏற்படும்

japan.jpg

டோக்கியோ, ஏப். 2: ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிளவால் அதிக கதிர்வீச்சு கொண்ட தண்ணீர், கடலில் கலந்து வருவதால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே சுனாமியால் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதியை ஐப்பான் பிரதமர் நவோட்டோ கான், முதல்முறையாக நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட அணு கதிர்வீச்சு பிரச்னைகள் கூட்டு முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இக்கட்டான சூழலில் சிறப்பாக செயல்பட்ட மீட்புப் பணியாளர்கள், அணுசக்தி மைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற பேரிடர்களில் இருந்து மீண்டுவர நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கான திறமை நம்மிடம் இருக்கிறது என்றார்

முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நவோட்டோ கான் ரிகுசென்டாகடாவுக்கு வந்தார். நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார்.

அணு கசிவால் அபாயம்: இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின்உற்பத்தி நிலையத்தில் 2-வது அணு உலைக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட சுவரில் 12 அங்குலம் அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதால் அணு கதிர் வீச்சு அதிகமுள்ள தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. 
இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இயக்குநர் யுகியா அமானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கென்ய தலைநகர் நைரோபியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அவர் இதைத் தெரிவித்தார்.

ஆனால் கடலில் கலந்து வரும் தண்ணீரில் மிகக்குறைந்த அளவே அணு கதிர்வீச்சு இருப்பதாக அணுமின்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பிளவை சரிசெய்து கசிவைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐப்பான் அணுமின் உற்பத்தி மையம் தெரிவித்துள்ளது.

அணு மின்நிலைய தண்ணீர் கசிந்துள்ள பகுதியில் எடுக்கப்பட்ட கடல் நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் மிகக்குறைவான அளவு கதிரியக்கம் இருப்பது தெரியவந்தது என்று டோக்கியோ மின்சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் அணுசக்தி, தொழில் பாதுகாப்பு மையமும், இதனை உறுதி செய்துள்ளது.

அணுக்கலன் பாதுகாப்பு சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை அடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* மின்னணு நிர்வாக திட்டம்: உலக வங்கி ரூ. 675 கோடி கடன்

வாஷிங்டன், ஏப்.2: இந்தியாவில் செயல்படுத்தப்படும் தேசிய மின்னணு நிர்வாக திட்டத்துக்கு (என்இஜிபி) உலக வங்கி 15 கோடி டாலர் (ரூ. 675 கோடி) கடன் வழங்க முன்வந்துள்ளது.

இந்தியா முழுவதும் மக்களுக்கு சேவையை விரைவாக அளிப்பதற்காக தேசிய மின்னணு நிர்வாக திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான கடனுதவியை உலக வங்கி அளிக்கிறது.

2006-ம் ஆண்டு மே மாதம் என்இஜிபி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசுத் துறைகளிடையே தகவல்களை எளிதாகவும், விரைவாகவும் பகிர்ந்து கொள்வதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு துறைகள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த ஒருங்கிணைப்பு மூலம் பொதுமக்கள் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியாக சென்று தகவல்களைப் பெறுவதைக் காட்டிலும், ஓரிடத்திலிருந்தே தேவையான தகவல்களைப் பெறுவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். இதற்கென பொதுவான இணையதளம் ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து தகவல்களைப் பெறச் செய்வதே முக்கிய நோக்கமாகும். அல்லது ஒற்றைச் சாளர முறையில் பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) மூலம் கிராமப் பகுதிகள், மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

என்இஜிபி திட்டத்தில் 27 முக்கிய திட்டங்களை உலக வங்கி கண்டறிந்து அதற்கு கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது.

இந்தத் திட்டம் ஏழைகளுக்கு உதவும் வகையில் அமையும். குறிப்பாக சமூக நலத் திட்டங்கள், ஓய்வூதியம், சான்றிதழ் பெறுவது, நிலுவை, வர வேண்டிய தொகை, பொது விநியோகம் தொடர்பான தகவல்கள், அத்தியாவசிய பொருள்கள் பற்றிய தகவல்கள், கிராமப்புற சுகாதாரம், இழப்பீடு, நிவாரணப் பொருள்களைப் பெறுவது, குறைகேட்பு சேவை உள்ளிட்ட பலவற்றையும் இந்த மின்னணு சேவை மூலம் பெறலாம் என்றும் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

* ராணுவ நடவடிக்கை மூலமே கடாஃபியை வெளியேற்ற முடியும்: அமெரிக்கா

வாஷிங்டன், ஏப். 2: ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம்தான் லிபிய அதிபர் மம்மர் கடாஃபியை ஆட்சியிலிருந்து வெளியேற்ற முடியுமென்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே இது குறித்து மேலும் கூறியது: கடாஃபி அதிபர் பதவியில் தொடரக் கூடாது என்றுதான் அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அவர் அழைப்பு விடுக்கும் போர் நிறுத்தத்திலும், சமாதானப் பேச்சிலும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.

கடாஃபி லிபிய அதிபராகத் தொடரக்கூடாது, தங்களை யார் ஆள வேண்டுமென்பதை லிபிய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமென்பதே அதிபர் ஒபாமாவின் நிலைப்பாடு. லிபியாவில் ஜனநாயகம் ஏற்பட வேண்டும். நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கே நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். கடாஃபியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், அவரிடம் உள்ள சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் கடாஃபியின் ராணுவம் பீரங்கிகள் மூலமும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அமைதிப் பேச்சுக்கு முன்வந்து அதை தொடர்ந்து நிராகரித்து வருவதாக இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்க முடியாத பல கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றினால்தான் போர் நிறுத்தம் என்று கிளார்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாங்கள்தான் ஆட்சியாளர்கள், அவர்கள் கிளர்ச்சியாளர்கள், எனவே நாங்கள் கூறியபடி நடத்து கொண்டால்தான் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

* அனைத்து முக்கிய பிரச்னைகளையும் மன்மோகனுடன் விவாதித்தேன்: கிலானி

இஸ்லாமாபாத், ஏப். 2: காஷ்மீர் பிரச்னை உள்பட இருநாடுகளிடையில் உள்ள அனைத்து முக்கியப் பிரச்னைகள் குறித்தும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதித்தேன் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தைக் காண மன்மோகன் விடுத்த அழைப்பின் பேரில் கிலானி இந்தியாவுக்கு வந்தார். அப்போது, மன்மோகன் சிங்குடன் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். இது தொடர்பாக இஸ்லாமாபாதில் சனிக்கிழமை டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியது: மன்மோகன் சிங்கை சந்தித்தபோது இருநாடுகளிடையே உள்ள அனைத்து முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதித்தேன். காஷ்மீர் விஷயம் குறித்தும் பேசப்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருநாடுகளிடையிலான உறவில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்படாது.

கிரிக்கெட் ஆட்டத்தை காண எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்த வாய்ப்பு கிடைத்ததையும் நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். இருநாடுகளிடையே உள்ள அனைத்துப் பிரச்னைகளுமே பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடியவைதான். பாகிஸ்தானில் இப்போது ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்பு முஷாரப் போன்ற ராணுவ ஆட்சியாளர்களின் காலகட்டத்தில் இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுகளை விட இப்போது நடத்தப்படும் பேச்சு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் நிலையிலான பேச்சு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இரு நாட்டுக்கு இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை. நமது பிரச்னைகள் என்ன என்பது நமக்கு மட்டும்தான் தெரியும் என்றார் கிலானி.

* போர் பதற்றத்தை விடுத்து வறுமை ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: கிலானி

இஸ்லாமாபாத், ஏப். 1: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் உள்ள போர் பதற்றத்தை விடுத்து வறுமை ஒழிப்பு மற்றும் இதர பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் சபையில் அவர் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அவரது உரையின்போது உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தைக் காண இந்தியா வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது குறித்து குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: "இந்தியா மற்றும பாகிஸ்தானில் பொதுவாக உள்ள பிரச்னை வறுமை. வறுமையை ஒழிக்கவும் பிற முக்கிய பிரச்னைகளை தீர்க்கவும் இரு நாடுகளும் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இரு தரப்பிலுமே ஒப்புக் கொள்ளப்பட்டது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப்பட வேண்டுமானால் முதலில் போர் பதற்றம் முடிவுக்குவர வேண்டும். இந்தியாவுக்கும் பாதிஸ்தானுக்கும் இடையே முக்கிய பிரச்னையாக இருப்பது காஷ்மீர் பிரச்னை. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் இரு தரப்பும் பேசி தீர்க்க முடியும். நம்முடைய பிரச்னைகளை நம்மாலேயே தீர்க்க முடிவில்லை என்றால் 3-வது சக்தி வந்து தீர்த்து வைக்க முடியாது' என்றார்.

கிரிக்கெட்: மொகாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி பற்றி குறிப்பிட்ட கிலானி, "இந்தப் போட்டியைப் பொறுத்தவரை யாருக்கும் தோல்வி இல்லை. இது கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி.

இரு நாட்டு மக்களின் வெற்றி. பாகிஸ்தான் வீரர்களை நாம் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்' என்றார் கிலானி.

* தாய்லாந்தில் வெள்ளம்: சாவு எண்ணிக்கை 25 ஆக உயர்வு

பாங்காக், ஏப். 1: தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அங்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கு காரணமாக பல இடங்களில் பனை மர உயரத்திற்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

காவோ ஃபனோம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 5 பேர் வெள்ள நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் பலரை காணவில்லை. மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

9 ஆயிரத்துக்ககும் அதிகமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விமானப் படையும் கப்பல் படையும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமர் சுதேப் தாவ்க்சுபன், "இது மோசமான வெள்ளச் சேதம். 8 மாகாணங்களில் உள்ள 87 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 181 பேர் வெள்ளத்தால் காயம் அடைந்துள்ளனர்.

ஏராளமான வீடுகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் இந்த வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளன. 2 ஆயிரத்துக்கும் அதிகமான சாலைகளும் 222 பாலங்களும் இந்த வெள்ளத்தால் சேதம் அடைந்திருக்கின்றன' என்றார்.

இந்த வெள்ளப் பெருக்கால் சுற்றுலா துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பன்னாசாட் ருவாங்க்ஜன் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் தாய்லாந்து வந்த 13 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 30 சதவீதம் பேர் தங்களது பயணத்திட்டத்தை ரத்து செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

* துருக்கியில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை

அங்காரா, ஏப். 1: துருக்கியில் பாதுகாப்புப் படையினருக்கும் குர்திஷ் இன போராளிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 7 போராளிகள் உயிரிழந்தனர்.

துருக்கியில் மத்திய தரைக்கடல் பகுதியான ஹதே பகுதியில் சிரியாவில் இருந்து சில பிரிவினைவாத குரிதிஷ் போராளிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அப்பகுதிக்குச் சென்று போராளிகளை சுற்றி வளைத்தனர் பாதுகாப்புப் படையினர்.
அவர்களை சரண் அடையுமாறு வலியுறுத்தினர். எனினும் அவர்கள் இதைக் கருத்தில் கொள்ளாமல், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இதில் 7 போராளிகள் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகள் வைத்திருந்த கைத்துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், பிளாஸ்டிக் வெடி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குர்திஸ்தான் தொழிலாளர் இயக்கம் என்ற இந்த அமைப்பைச் சேர்ந்த போராளிகள் இதே பகுதியில் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்திஷ் இன மக்களுக்கு விடுதலை கோரி கடந்த 1984-ம் ஆண்டு முதல் துருக்கியில் இந்த இயக்கம் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

கடந்த 26 ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

* ராஜபட்ச சகோதரர்களிடையே மோதல்?

கொழும்பு, ஏப்.2- இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அவரது சகோதரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபட்சவும் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்சவும் தற்போது ஒன்றாக இணைந்து செயல்படுவதாகவும், அவர்களால் மற்றொரு சகோதரரான பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பசில் ராஜபட்ச ஒதுக்கப்படுவதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் அதிகாரியான ஆரியரத்ன என்பவரை திடீரென அதிபர் ராஜபட்ச மாற்றினார். ஆரியரத்ன இடத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட ஜயசுந்தர என்னும் அதிகாரி பசில் ராஜபட்ச கூறுவது எதையும் கேட்பதில்லை என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து ராஜபட்ச சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* * அமெரிக்க வெளியுறவுச் செயலருடன் உலகத் தமிழர் பேரவை சந்திப்பு

கொழும்பு, ஏப்.2- அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலர் ராபர்ட் பிளேக்குடன் உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவையைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பின்போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இலங்கையை சம்மதிக்க வைக்க முயற்சிகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மார்ச் 28-ம் தேதி, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல், அதன் அமெரிக்கப் பிரிவு தலைவர் ஜெயராஜ், பிரிட்டன் தமிழர் பேரவை தலைவர் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறை உதவிச் செயலர் ராபர்ட் பிளேக்கை சந்தித்துப் பேசியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக, ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சர்வதேச விசாரணை தொடர்பாக அமெரிக்க உதவிச் செயலரை தமிழர் அமைப்பினர் சந்தித்துப் பேசியுள்ளது இலங்கை அரசு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தேசியச் செய்தி மலர் :

* ஆ.ராசா உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

V1_3585.jpeg

புதுதில்லி, ஏப்.2: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், ""முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 9 பேர் மீது மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

30,984 கோடி ரூபாய்: இந்த நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 30,984 கோடி ரூபாய் மட்டுமே என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிறப்பு நீதிமன்றம்: தில்லியில் இதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் சனிக்கிழமை இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
80,000 பக்கங்கள்: 80,000 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் குலாம் இ வாஹன்வதி, அதிகாரத் தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மாத இறுதியில் கூடுதல் குற்றப்பத்திரிகை: இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. அமைப்பு இந்த மாத இறுதிக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதாகவும் மே 31-ம் தேதிக்குள் இந்த வழக்கில் விசாரணையை முடித்துவிடுவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தது.

9 பேர் மீது குற்றப்பத்திரிகை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, அத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யூனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் ஆகியவை அந்த 3 நிறுவனங்கள்.

ஏமாற்றுதல், கையெழுத்து மோசடி, கிரிமினல் சதித்திட்டம், ஊழல் ஆகிய குற்றங்களைச் செய்திருப்பதாக ஆ. ராசா, அவருடைய தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா, பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருக்கிறது.

கலைஞர் டி.வி. கண்காணிக்கப்படுகிறது: கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ், கிரீன் அவுஸ் பிரைவேட் லிமிடெட், குசேகாவோன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களால் கண்காணிக்கப்படுவதாக நீதிபதியிடம் சி.பி.ஐ. தெரிவித்தது.

சாதிக் பாட்சா மர்ம மரணம்: கிரீன் அவுஸ் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ஆ. ராசாவின் நண்பருமான சாதிக் பாட்சாவிடம் சி.பி.ஐ. போலீஸôர் சென்னையில் விசாரணை நடத்தினர். அவர் கடந்த மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் கிரீன் அவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த மர்மமமான பணப்பரிமாற்றத்துக்கும் பாட்சா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருத்து தெரிவித்தது.

சி.ஏ.ஜி. கணிப்பு: ஏல முறையில் அல்லாமல் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருந்தார். இதனால்தான் இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* வெளிநாட்டு கரன்சியுடன் கோவா அமைச்சர் மும்பையில் கைது

மும்பை/ கோவா, ஏப்.2: விதிகளுக்குப் புறம்பாக அதிக அளவில் வெளிநாட்டு கரன்சி வைத்திருந்ததாக கோவா யூனியன் பிரதேச கல்வி அமைச்சர் அடான்ஸியோ மான்சரேட், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் அனுமதிக்கப்ட்ட அளவுக்கும் அதிகமாக வெளிநாட்டு கரன்சிகளும், இந்திய ரூபாய் நோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமைச்சர் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அமைச்சர் மான்சரேட்டின் மூத்த சகோதர் 2009-ம் ஆண்டு கோவாவில் ஜெர்மன் சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் பாடகர் ரஹத் படே அலி கான், இதேபோல ரூ. 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியுடன் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வேண்டாம்: நாகாலாந்து கடிதம்

கொஹிமா, ஏப்.2: நாகாலாந்து மாநிலத்தின் பெரும் பான்மையான மக்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மே 8 ஞாயிற்றுக்கிழமை ஆங்லெண்டன் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வைத்திருப்பதை மாற்றவும் என்று மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது.

ஆங்லெண்டன் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ்காரர் நுங்ஷிஜுங்பா லோங்குமெர் இறந்துவிட்டார். எனவே அங்கு இடைத்தேர்தல் அவசியமானது. அந்த தேர்தலை மே 8-ம் தேதி நடத்த மத்திய தேர்தல் ஆணையம் தீர்மானித்து அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேவாலயத்துக்குச் செல்வது வழக்கம் என்பதால் அன்றைக்குத் தேர்தல் வைத்தால் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் என்று அனைவருக்குமே இடையூறாக இருக்கும் என்பதால் வாக்குப் பதிவு நாளை ஒரு நாள் முன்னதாகவோ அடுத்த நாளிலோ வைத்துக் கொள்ளலாம் என்று நாகாலாந்து தலைமைச் செயலர் லால்தாரா கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கும் முன்னதாக அவர் முதலமைச்சர், உள்துறை அமைச்சர், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு அதன் பிறகே கடிதம் எழுதினார்.

கடந்த வியாழக்கிழமை இதே கோரிக்கையை மாநில காங்கிரஸ் கட்சி தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியிருந்தது.


மாநிலச் செய்தி மலர் :

* வெறிச்சோடியது சென்னையின் முக்கியச் சாலைகள்

clean.jpg

சென்னை, ஏப்.2: உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளிலும், வீடுகளிலும் முடங்கியதால் சென்னையின் முக்கிய வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.

சென்னையில் உள்ள பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டன. போட்டியைக் காண்பதற்காக அனைவரும் அவசரமாக வீடு திரும்பியதால் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ஆனால் 2 மணிக்கு மேல் முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவிக்கும் மயிலாப்பூர், வேப்பேரி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.

ஷாப்பிங் மால்கள், பார்களிலும் எல்சிடி திரைகளில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பட்டது.

மும்பையில்...

முக்கிய நகரங்களில் உள்ள பெரிய திரையரங்குகள், ரெஸ்டராண்டுகள், ஷாப்பிங் மால்கள், பப்புகள் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டன. இங்கு ஏராளமானோர் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். இதற்காக அவர்கள் முன்பதிவும் செய்திருந்தனர்.

ஏராளமான ரசிகர்கள் தங்கள் முகத்தில் பல்வேறு வண்ணங்களை தீட்டியிருந்தனர். ஏராளமான பார்களில் மது விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. வடக்கு மும்பையில் உள்ள

அனுமன் கோயிலில் பாஜக தலைவர் ஜெயப்பிரகாஷ் தாகூர், இந்திய அணி வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

போட்டியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள், மைதானத்தில் வீடு திரும்புவதற்காக சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டன.

கொல்கத்தாவில்... கொல்கத்தாவில் காலையில் இருந்து கிரிக்கெட் ஜுரம் ரசிகர்களை தொற்றிக்கொண்டது. பட்டாசுகள், மூவர்ணக் பலூன்கள், இந்திய அணியின் டி-ஷர்ட்கள் ஆகியவற்றின் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

இங்குள்ள முக்கிய நகரங்களில் பிரமாண்டமான திரைகளில் ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது. இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

* டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஏப். 2: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், தொழிலாளர் துறையில் உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-2 தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது.

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்கிற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் இந்த இணைய தளத்தின் மூலம், தங்களுடைய மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.


* குரூப்-2 தேர்வு: மனிதநேய இலவச ஐஏஎஸ் அகாதெமி மாணவர் 297 மதிப்பெண்

சென்னை, ஏப். 2: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வில், மனிதநேய இலவச ஐஏஎஸ் அகாதெமி மாணவர் 297 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குரூப்-2 தேர்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. எழுத்துத் தெர்வு, நேர்முகத் தேர்வு என மொத்தம் 340 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் மனிதநேய இலவச ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற கரூரைச் சேர்ந்த ஜி. கண்ணன் என்ற மாணவர் 297 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்த மையத்தில் குரூப்-2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 மாணவர்களுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற பலர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

* சென்னையில் பல் மருத்துவக் கண்காட்சி

சென்னை, ஏப். 2: பல் மருத்துவக் கண்காட்சி, இலவச பரிசோதனை முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்கியது.

இந்தக் கண்காட்சியைப் பார்வையிட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சென்னை பிரிவின் சார்பில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த 15 பல் மருத்துவக் கல்லூரிகள், சென்னை அருகில் உள்ள 2 பல் மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.

அரங்குகள்...: இதில் 50-க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ளன. பற்களில் ஏற்படும் நோய்கள், பல் ஈறுகளில் தாக்கம், புகையிலை உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் நோய்கள், வாய் புற்றுநோய், பற்களின் நிறங்கள் உள்ளிட்டைவை குறித்து விளக்கும் படங்கள், குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஒலி, ஒளி அரங்கம்...: பல் மருத்துவத்தில் உருவாகியுள்ள நவீன சிகிச்சை முறைகள், அறுவைச் சிகிச்சை முறைகள், எந்த வகை பாதிப்புக்கு என்ன சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என்பவை குறித்து பொதுமக்களுக்கு விளக்க, இரண்டு ஒலி, ஒளி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட சுமார் 250 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் பல் மருத்துவத்துக்கான உபகரணங்கள் உள்ளன.

 தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

சங்கத்தின் தலைவர் டாக்டர் தயா ரவீந்திரன், கெüரவச் செயலாளர் டாக்டர் வி.ரங்கராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

* மூலிகைக் கண்காட்சி சென்னையில் தொடக்கம் அனுமதி இலவசம்

சென்னை,ஏப்.1: அரிய மூலிகைகளின் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.1) தொடங்கியது.

இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை பார்வையிட, பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளை ஒருங்கிணைக்கும் வண்ணம், அந்தந்தத் துறைக்கென ஒவ்வொரு தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளின் கூட்டான "ஆயுஷ்' தின விழா ஏப்ரல் 2-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, இந்த அரிய வகை மூலிகைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் சுமார் 90 வகையான மூலிகை வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைப் பார்வையிடும் பொதுமக்களுக்கு அந்தந்த மூலிகைகளின் பெயர், அவற்றின் குடும்பம், மூலிகைகளின் சிறப்பு, செடிகளின் எந்த பாகம் மருந்தாக பயன்படுகிறது என்பவை குறித்து விளக்கப்படும்.

* ஐஓபி-யில் அரசு பங்கு 65.87 சதவீதமாக உயர்வு

சென்னை, ஏப்.2: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐஓபி) மத்திய அரசுக்கு உள்ள பங்குத் தொகை 61.23 சதவீதத்திலிருந்து 65.87 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கியில் மத்திய அரசு ரூ. 1,054 கோடி முதலீடு செய்ததையடுத்து அரசின் பங்கு விகிதம் உயர்ந்துள்ளது.

சமீபத்தில் வங்கி ஒவ்வொன்றும் ரூ. 10 மதிப்புள்ள 7,33,49,343 சமவிகித பங்குகளை வெளியிட்டு மத்திய அரசுக்கு அளித்தது. இதன் மூலம் வங்கியில் அரசுக்கு உள்ள பங்குத் தொகை 61 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 22-ம் தேதி நடைபெற்ற வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மதுரை ஆட்சியருக்கு வருவாய்த் துறையினர் ஆதரவு: புகார் அளித்த ஆர்டிஓ இடமாற்றம்

மதுரை, ஏப். 2: மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் மீது புகார் கொடுத்துள்ள வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்தும், தேர்தல் ஆணைய விதிமுறைகளை நடுநிலையுடன் அமல்படுத்திவரும் ஆட்சியருக்கு வருவாய்த் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்கவும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் "ஞானகுணாளன் தெரிவித்தார்.

மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் சுகுமாறன். இவர், மதுரை கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராகவும் பொறுப்பில் இருந்தார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பி. மூர்த்தி ஆகியோர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யுமாறு ஆட்சியர் வற்புறுத்துகிறார் என்று தேர்தல் ஆணையத்துக்கு அவர் புகார் அனுப்பியிருந்தார்.

இதற்கு வருவாய்த்துறையினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஞானகுணாளன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

மேலூர் வட்டாட்சியரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான காளிமுத்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளார். இதற்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படாதது வேதனையளிக்கிறது.

ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்: மதுரை மாவட்டத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்குரியது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அவர் நடுநிலையுடன் செயல்படுத்தி வருகிறார்.

அவருக்கு வருவாய்த் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆட்சியர் சகாயம் மீது புகார் அளித்துள்ள கோட்டாட்சியர் சுகுமாறனின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கோட்டாட்சியர் பணியிட மாற்றம்: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சகாயம் வற்புறுத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த கோட்டாட்சியர் சுகுமாறன் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் தன்னைத் துன்புறுத்தியதாகவும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் வற்புறுத்தினார் என்றும் மருத்துவமனையில் இருந்தே ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், சுகுமாறன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், மதுரை கோட்டாட்சியராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன்தாஸ் நியமிக்கப்பட்டார்.

* தொகுதி - ஓர் அறிமுகம்!: கும்மிடிப்பூண்டி (பொது)

தொகுதி பெயர் : கும்மிடிப்பூண்டி
தொகுதி எண் : 1
அறிமுகம் :
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கும்மிடிப்பூண்டியும் ஒன்று. எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் முதல் தொகுதி என்ற பெருமை உண்டு.
எல்லை :

தமிழக-ஆந்திர எல்லையோரப் பகுதியாகத் திகழும் கும்மிடிப்பூண்டி தொகுதியானது தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளான, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளையும், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் 43 ஊராட்சிகளையும், பூண்டி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் உள்ள 27 ஊராட்சிகளையும் புதிதாகத் சேர்த்து 131 ஊராட்சிகளை உள்ளடக்கிய தொகுதியாக மாறியுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள்: 2
கும்மிடிப்பூண்டி } 15 வார்டுகள்
ஊத்துக்கோட்டை } 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 131

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் (61): அன்னநாயக்கன் குப்பம், ஆரம்பாக்கம், ஆத்துப்பாக்கம், அயநெல்லூர், பூதூர், செதில்பாக்கம், ஏடூர், எகுமதுரை, ஈகுவார்பாளையம், எளாவூர், ஏனாதி மேல்பாக்கம், எருக்குவாய், கெட்ணமல்லி, குருவராஜ கண்டிகை, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, காரணி, கீழ்முதலம்பேடு, கொள்ளானூர், குருவாட்டுச்சேரி, மாநெல்லூர், மாதர்பாக்கம், மங்களம், மங்காவரம், மெதிப்பாளையம், மேலக்கழனி, மேல்முதம்பேடு, முக்கரம்பாக்கம், நரசிங்கபுரம், நத்தம், நெல்வாய், நேமளூர், ஓபசமுத்திரம், பாதிரிவேடு, பாலவாக்கம், பல்லவாடா, பன்பாக்கம், பாத்தபாளையம், பெத்திகுப்பம், பெரிய ஓபுளாபுரம், பெரியபுலியூர், பெருவாயல், போந்தவாக்கம், பூவலை, பூவலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, புதுப்பாளையம், புதுவாயல், ரெட்டம்பேடு, சாணாபுத்தூர், சித்திராஜ கண்டிகை, சிறுபழல்பேட்டை, சிறுவாடா, சூரப்பூண்டி, சுண்ணாம்புகுளம், தண்டலசேரி, தேர்வழி, தேர்வாய், தோக்கமூர், வழுதிலம்பேடு, கரடிபுத்தூர்.

எல்லாபுரம் ஒன்றியம் (43): 43 பனப்பாக்கம், 82 பனப்பாக்கம், அக்கரம்பாக்கம், ஆலப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், அமிர்தாநல்லூர், அத்திகாவனூர், அத்திவாக்கம், ஆத்துப்பாக்கம், ஏனாம்பாக்கம், கல்பட்டு, கன்னிகைபேர், கிளாம்பாக்கம், குமரப்பேட்டை(ரால்லபாடி), லட்சிவாக்கம், மதுரவாசல், மாலந்தூர்,மாம்பள்ளம்,

 மஞ்சங்காரணி, நெய்வேலி, பாகல்மேடு, பாலவாக்கம், பனையஞ்சேரி, பேரண்டூர், பெரியபாளையம், பெருமுடிவாக்கம், பூச்சி அத்திப்பேடு, பூரிவாக்கம், புன்னப்பாக்கம், செங்கரை, செஞ்சிஅகரம், சென்னாங்கரணி, சூளைமேனி, தாமரைகுப்பம், தண்டலம், தாராட்சி, திருகண்டலம், திருநிலை, தொளவேடு, தும்பாக்கம், வடமதுரை, வண்ணான்குப்பம், காக்கவாக்கம்.

பூண்டி ஒன்றியம் (27): பென்னாலூர்பேட்டை, ராமலிங்காபுரம், வேலம்மா கண்டிகை, மேலகரமனூர், நந்திமங்கலம், போந்தவாக்கம், அனந்தேரி, பெருதிவாக்கம், மாம்பாக்கம், பெருஞ்சேரி, கச்சூர், கூனிபாளையம், திம்மபூபாளபுரம், வெள்ளாத்தூர் கோட்டை, நெல்வாய், அம்மம்பாக்கம், சோமதேவன்பட்டு, வேலகாபுரம், மாமண்டூர், தேவாந்தவாக்கம், மயிலாப்பூர், நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், ஓதப்பை, மெய்யூர், கம்மவார்பாளையம், ஆலப்பாக்கம்.

வாக்காளர்கள் :
ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
1,05,145 1,06,492 9 2,11,646
வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 244
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
சக்தி வேல், தனி துணை ஆட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம், செல்போன்-7598700303

வர்த்தகச் செய்தி மலர் :

* அன்னிய முதலீட்டால் ஏற்றம் பெற்ற பங்குச் சந்தை  

மும்பை, ஏப்.2: மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் 605 புள்ளிகள் உயர்ந்தன. அன்னிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டால் பங்குச் சந்தையில் புள்ளிகள் கணிசமாக உயர்ந்தன. இதனால் வார இறுதியில் குறியீட்டெண் 19,420 புள்ளிகளாக இருந்தது.

ரியல் எஸ்டேட், நுகர்வோர் தயாரிப்பு, ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளின் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

குறிப்பாக மார்ச் 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையான காலத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 8,548 கோடி அளவுக்கு முதலீடு செய்ததும் பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

மேலும் உணவுப் பணவீக்கம் ஒற்றை இலக்க அளவான 9.5 சதவீதமாக குறைந்ததும் பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 171 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,826 புள்ளிகளாக உயர்ந்தது.
முக்கியமான 30 நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்றன. நிறுவனப் பங்குகள் 1.54 சதவீதம் முதல் 7.15 சதவீதம் வரை உயர்ந்தன.

அதிகபட்சமாக டிஎல்எப் பங்குகள் 9.13 சதவீதம் உயர்ந்தது. மாருதி சுஸýகி 7.83 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 7.52 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 6.72 சதவீதமும், ஹெச்டிஎப்சி 6.56 சதவீதமும், ஓஎன்ஜிசி 6.24 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 5.71 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 5.48 சதவீதமும், ஜிண்டால் ஸ்டீல் 5.24 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 5.16 சதவீதமும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் ஒரு வார வர்த்தகம் ரூ. 16,259.86 கோடி. தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் ரூ. 69,176.32 கோடி.

* இந்தியாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு

துபை, ஏப்.2: இந்தியாவின் தங்க நுகர்வு அடுத்த 10 ஆண்டுகளில் 1,200 டன்னாக உயரும் என்று உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) மதிப்பிட்டுள்ளது.

இந்திய மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்று கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை கடந்த 10 ஆண்டுகளில் 400 சதவீத அளவுக்கு உயர்ந்த போதிலும் இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2010-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் விற்பனையான தங்கத்தில் 32 சதவீதம் இந்தியர்களால் வாங்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 சதவீத அளவுக்கு இந்தியாவில் தங்கம் வாங்குவோர் விகிதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* வரலாறு படைத்தது இந்தியா

மும்பை, ஏப்.2: 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா.

இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். கம்பீர் 97 ரன்கள் எடுத்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜாகீர் கான் முதல் 5 ஓவர்களில் 3-ல் இலங்கை வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை. இலங்கைத் தரப்பில் சங்ககரா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெயவர்த்தனா-குலசேகரா ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அதிரடியாக விளையாடிய குலசேகரா 30 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஜாகீர் கானின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி 84 பந்துகளில் சதமடித்தார் ஜெயவர்த்தனா. பெரேரா தன் பங்குக்கு 9 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களை விளாச இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 54 ரன்கள் குவித்தது. ஜெயவர்த்தனா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.

மும்பை, ஏப்.2: 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா.

இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். கம்பீர் 97 ரன்கள் எடுத்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜாகீர் கான் முதல் 5 ஓவர்களில் 3-ல் இலங்கை வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.

 இலங்கைத் தரப்பில் சங்ககரா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெயவர்த்தனா-குலசேகரா ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அதிரடியாக விளையாடிய குலசேகரா 30 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஜாகீர் கானின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி 84 பந்துகளில் சதமடித்தார் ஜெயவர்த்தனா. பெரேரா தன் பங்குக்கு 9 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களை விளாச இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 54 ரன்கள் குவித்தது. ஜெயவர்த்தனா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.

ஸ்கோர் போர்டு
இலங்கை
தரங்கா (சி) சேவாக் (பி) ஜாகீர்கான் 2 (20)
தில்ஷான் (பி) ஹர்பஜன் (பி) 33 (49)
சங்ககரா (சி) தோனி (பி) யுவராஜ் 48 (67)
ஜெயவர்த்தனா நாட் அவுட் 103 (88)
சமரவீரா எல்பிடபிள்யூ (பி) யுவராஜ் 21 (34)
கபுகேதரா (சி) ரெய்னா (பி) ஜாகீர்கான் 1 (5)
குலசேகரா ரன் அவுட் (தோனி) 32 (30)
பெரேரா நாட் அவுட் 22 (9)
உதிரிகள் 12
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு)  274. 

விக்கெட் வீழ்ச்சி: 1-17 (தரங்கா), 2-60 (தில்ஷான்), 3-122 (சங்ககரா), 4-179 (சமரவீரா), 5-182 (கபுகேதரா), 6-248 (குலசேகரா).
பந்துவீச்சு: ஜாகீர்கான் 10-3-60-2, ஸ்ரீசாந்த் 8-0-52-0,
முனாப் 9-0-41-0, ஹர்பஜன் 10-0-50-1, யுவராஜ் 10-0-49-2,
சச்சின் 2-0-12-0, கோலி 1-0-6-0

இந்தியா
சேவாக் எல்பிடபிள்யூ (பி) மலிங்கா 0 (2)
சச்சின் (சி) சங்ககரா (பி) மலிங்கா 18 (14)
கம்பீர் (பி) பெரேரா 97 (122)
விராட் கோலி (சி) & (பி) தில்ஷான் 35 (49)
தோனி நாட் அவுட் 91 (79)
யுவராஜ் நாட் அவுட் 21 (24)
உதிரி 15
மொத்தம் (48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு) 277
விக்கெட் வீழ்ச்சி: 1-0 (சேவாக்), 2-31 (சச்சின்),
3-114 (கோலி), 4-223 (கம்பீர்).
பந்துவீச்சு: மலிங்கா 9-0-42-2, குலசேகரா 8.2-0-64-0
பெரேரா 9-0-55-1, ரனதேவ் 9-0-43-0, தில்ஷான் 5-0-27-1,
முரளீதரன் 8-0-39-0.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு திருவிக்கிரமர் திருக்கோவில் - விழுப்புரம்.

மூலவர் : திருவிக்கிரமர்
  உற்சவர் : ஆயனார், கோவலன்
  அம்மன்/தாயார் :  பூங்கோவல் நாச்சியார்
  தல விருட்சம் :  புன்னைமரம்
  தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
 
  ஊர் : திருக்கோவிலூர்
  மாவட்டம் : விழுப்புரம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
     
  மங்களாசாஸனம் 

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் 
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேல் ஓரிளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை 
துஞ்சாநீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான்மறையாளர் சோமுச் செய்ய
 செஞ்சாலி விளைவயலுள் திகழந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
     
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

பெருமாள் ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.வேணுகோபாலர் க்ஷேத்திர பாலகராக அருளுகிறார்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.
தலபெருமை:
     
 
மூலவர் சிறப்பு : அரசன் ஒருவனின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில் பூமியில் நின்றபடியும் அருள்பாலிக்கிறார்.வழக்கமாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்திருப்பார். இங்குள்ள பகவான் மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம்.தனது வலது கையில் ஒன்று , மூன்றாவது அடி எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது காலை பிரம்மா ஆராதனை செய்கிறார்.மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது.மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார். பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்,'' என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது, அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார். 

முதல் ஆழ்வார்கள் மூவர் : பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். ஒரு முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார். அதற்கு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.

மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார். இங்கு ஷேத்திராபதி வேணுகோபால் ஆவார். மூலவர் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது சிறப்பு. 108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும். 192 அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு

அண்ணன் அருகில் தங்கை :பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை  அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும்  திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து "விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.

 பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது. "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு.

தல வரலாறு:
     
  மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.   
   
திருவிழா:
     
   பங்குனி மாதம் - பிரம்மோற்ஸவம் -15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும்.இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும். இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை வழிபடுவர். மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி - பவித்திர உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனி- பெரியாழ்வார் சாற்று முறை ஆடி- திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி - ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம் ஐப்பசி - முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் கார்த்திகை - கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம் மார்கழி - பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* அற்பமானது என்று எதுவுமில்லை - ஸ்ரீ அரவிந்தர்.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று 
எதுவுமில்லை. உன் கண்களில் அற்பமானது என்று 
எதுவும் இருக்க வேண்டாம்.

* உண்மையுணர்வு என்னும் ஒளியில் நிலைத்து 
நில்லுங்கள். அதில் தான் மகிழ்ச்சியும் அமைதியும் 
இருக்கின்றன. 

வினடி வினா :

வினா - இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார் ?

விடை - வல்லபாய் பட்டேல் ( 1946 )

இதையும் படிங்க :

2.5 செ.மீ., அளவுள்ள 317 சாக்பீசில் 60 செ.மீ., உயரத்தில் உலக கோப்பை

thumb_217767.jpg                                      

பேரூர் : 317 சாக்பீசில் உலக கோப்பை வடிவத்தில், 60 செ.மீ., உயரத்தில் உலக கோப்பையை கல்லூரி மாணவர் வடிவமைத்துள்ளார்.கோவை அருகே உள்ள பேரூர், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (20); பார்க் இன்ஜினியர் கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவர், 2.5 செ.மீ., அளவுக்கு 317 சாக்பீசில் உலக கோப்பை போன்ற படத்தை செதுக்கி, கம்பியின் உதவியோடு, 60 செ.மீ., உயரத்திற்கு உலக கோப்பையை வடிவமைத்துள்ளார்.

கோப்பையின் மேல் பகுதியில் வட்ட வடிவிலான பகுதியை சுற்றி, மையப் பகுதியில், 1975 முதல் 2007ம் ஆண்டு வரை, உலகக் கோப்பையை கைப்பற்றிய அணிகளின் பெயரும், ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "ஐ.சி.சி., உலக கோப்பை இந்தியா 1983 மற்றும் இயற்கையை காப்போம்' என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
இது தவிர, சூரிய ஒளி மூலம், மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதன் மூலம் மோட்டார் இயங்கி, உலக கோப்பை சுழல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி மாணவர் விக்னேஷ் கூறுகையில், "உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், கடந்த நான்கு மாதங்களாக கஷ்டப்பட்டு இதை உருவாக்கியுள்ளேன். எதிர் காலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சூரிய ஒளி மூலம் கோப்பை சுழல்வது போலவும் வடிவமைத்து உள்ளேன்' என்றார்.


வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, சமாச்சார், தின மலர்.

--


No comments:

Post a Comment