Friday, April 15, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 15 , 2011.


முக்கியச் செய்தி :

110110414165238884.jpg

ஊழலுக்கு எதிரான இயக்கத்தை சீர்குலைக்க அரசியல் சக்திகள் சதி: அ‌ண்ணா ஹசாரே

ஊழலு‌க்கு எ‌திரான இய‌க்க‌த்தை ‌சீ‌ர்குலை‌க்க அர‌சிய‌ல் ச‌‌க்‌திக‌ள் ச‌தி செ‌ய்வதாக அ‌‌ண்ணா ஹசாரே புகா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மராட்டிய மாநிலம் ராலேகான் கிராமத்தில் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய, லோக்பால் சட்டத்தை அமல்படுத்தக்கோரி, சாதாரண மக்களிடம் இருந்தும் மிகப்பெரிய அளவில் எழுச்சிகரமான ஆதரவு எழுந்ததை கண்டு சில அரசியல் சக்திகளும், கிரிமினல் சக்திகளும் அச்சம் அடைந்துள்ளன எ‌ன்றா‌ர்.

எனவே, ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இயக்கத்தின் புகழை கெடுக்கவும் முயற்சி செய்து வருகின்றன என்று‌ம் அ‌ண்ணா ஹசாரே கூ‌றினா‌ர்.

உலகச் செய்தி மலர் :

* வீட்டுக் காவலில் ஐவரி கோஸ்ட் அதிபர்  

ஐவரி கோஸ்ட் நாட்டின் அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜிபாக்போ தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஜிபாக்போ தோல்வி அடைந்தார். எனினும், அவர் பதவி விலக மறுத்துவிட்டார்.

இதனிடையே ஜிபாக்போவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குவாட்ராவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா சபையும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஜிபாக்போ தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள குவாட்ராவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

* எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல்

14-greg-chappell200.jpg

மெல்போர்ன்: இந்தியாவைப் போல எங்களால் திறமைகளை வீணடிக்க முடியாது. அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் ஆஸ்திரேலியாவில் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளரும், தற்போதைய ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவருமான கிரேக் சேப்பல்.

இந்திய அணியை நாசப்படுத்தியவர் கிரேக் சேப்பல் என்ற பெயர் உண்டு. இவரது பயிற்சிக்காலத்தில் இந்தியா பெரும் அவலங்களைச் சந்தித்தது. இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளிக்க முடியாமல் திரும்பிப் போனவர் சேப்பல்.

இந்த நிலையில், தற்போது இவர் தேவையில்லாமல் இந்தியாவை வம்புக்கிழுத்துள்ளார். மெல்போர்னில் அவர் கூறுகையில், இந்தியாவில் திறமைகளை வீணடிக்க நிறைய சுதந்திரம் உள்ளது. அவர்களிடம் நிறைய வீரர்கள் உள்ளனர். அதில் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமலும் வீணடிப்பார்கள்.

ஆனால் எங்களால் அப்படி செய்ய முடியாது. அப்படி செய்ய எங்களுக்கு அனுமதியும் கிடையாது. திறமையாளர்களை உரிய முறையில் நாங்கள் பயன்படுத்தியாக வேண்டும். திறமைகளை எங்களால் வீணடிக்க முடியாது.

எனவே இருக்கிற வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நாங்கள் முயல்வோம். ரிக்கி பான்டிங், மைக்கேல் ஹஸ்ஸி, சிமோன் காடிச் ஆகியோருக்கு ஒரு கட்டம் வந்து விட்டது. இனியும் அவர்களால் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது.

புதிய தலைமுறையிடம் அணியை ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது. இது அவர்களுக்கும் புரியும். அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றார் சேப்பல்.

* பிரதமர் இன்று கஜகஸ்தான் பயணம்

சான்யா (சீனா), ஏப். 14: சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்.

சீனா, கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்வதற்காக கடந்த 11-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். சீனாவின் சான்யா நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

இந்த மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. 

இதையடுத்து,சான்யாவிலிருந்து வெள்ளிக்கிழமை அவர் கஜகஸ்தான் புறப்படுகிறார். கஜகஸ்தானில் இரு நாள்கள் இருக்கும் அவர், அந்நாட்டு அதிபர் நூர்சுல்தான் நஸர்பேவை சந்தித்துப் பேசுகிறார்.

இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாக இருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே அணுசக்தி ஒத்துழைப்பு இருக்கிறது. 2009-ம் ஆண்டில் இந்திய அணுமின் கழகமும் கஜகஸ்தான் அணுசக்தி நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு கஜகஸ்தான் நிறுவனம் யுரேனியம் சப்ளை செய்து வருகிறது.
இப்போது இரு நாடுகளும் அரசு நிலையில் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கின்றன. இதன்படி கஜகஸ்தானில் யுரேனியத்தைத் தோண்டி எடுப்பதில் தொழில்நுட்ப அளவில் இந்தியா உதவும். சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை அமைப்பது தொடர்பான அம்சங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த இரு ஆண்டுகளாக இருநாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலிருந்து அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவில் விலக்குப் பெற்ற பிறகு, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, ஆர்ஜென்டினா, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

* பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க ஒபாமா முடிவு

obama.jpg

வாஷிங்டன், ஏப்.14: பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலுள்ள பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். அத்துடன் செலவினத்தைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த டிசம்பரில் பணக்காரர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நடுத்தர மக்களுக்கு கூடுதல் வரி விதிப்பதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ. 45 லட்சம் கோடி) வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டது தெரியவந்தது. அமெரிக்காவில் உள்ள லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் பயனடைந்து வருகின்றனர். இதை மேலும் அனுமதிக்க முடியாது. எனவே வரிச்சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இத்தகைய சலுகையை மீண்டும் புதுப்பிப்பது இல்லை என முடிவு செய்துள்ளதாக அதிபர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய வரிச் சலுகை அளிப்பதால் எதிர்கால முதலீடுகள் தடைபடுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு வரிச் சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் பட்ஜெட் பற்றாக்குறையை 4 டிரில்லியன் டாலராகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர் வரிச் சலுகையைக் குறைப்பதென முடிவு செய்து அது தொடர்பான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. செலவினத்தை முறைப்படுத்துவதோடு நடுத்தர மக்களின் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் நலனையும் காக்க வேண்டியள்ளது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

செலவினத்தைக் குறைப்பதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி அடுத்த 12 ஆண்டுகளில் 75,000 கோடி டாலர் அளவுக்கு சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செலவினத்தைக் குறைக்க முடிவெடுத்த போதிலும் மருத்துவ ஆராய்ச்சி, தூய்மையான சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பம், கட்டுமானம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகள் 89 பேர் விடுதலை

இஸ்லாமாபாத், ஏப்.14: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகள் 89 பேரை அந்நாடு வியாழக்கிழமை விடுதலை செய்தது.

இந்திய எல்லையைத்தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்ததாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 89 பேர் அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

எல்லைப்பகுதியை அறியாமல் கடலில் மீன்பிடிக்கச்சென்றபோது பலர் பாகிஸ்தான் ரோந்துப்படையிடம் பிடிபட்டனர்.

இதுபோல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த அந்நாட்டவரை இந்திய ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இவ்வாறு இருநாட்டுச் சிறைகளிலும் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த மாதம் தில்லியில் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்அடிப்படையில் பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள், கைதிகள் 89 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து வாகா எல்லைப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்த 89 பேரும் 2009-ம் ஆண்டு செப்டம்பருக்கும் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவர்.

பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள மேலும் 33 இந்தியக் கைதிகளை விடுதலை செய்யவும் அந்நாடு ஒப்புக்கொண்டிருப்பதாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்போர் நல அமைப்புத் தலைவரும் சட்ட ஆலோசகருமான நசீர் அஸ்லம் ஜாஹிட் தெரிவித்தார்.

இவர்கள் 33 பேரும் மலிர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததும் அவர்களும் விடுதலை செய்யப்படுவர், இரு நாட்டுச் சிறைகளிலும் அடைக்கப்ட்டுள்ள அப்பாவிகள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாகிஸ்தான் நாட்டுச் சிறைக் கைதிகள் ஏப்ரல் 11-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலைசெய்ய 2008-ஆண்டு ஜூலை 1-ம் தேதி இரு நாட்டு அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் இக்கைதிகள் விடுதலை தாமதமானது.

* அணுசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளில் உறுதி

சான்யா (சீனா), ஏப். 14: அணுசக்தி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும் என பிரிக்ஸ் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சீனாவின் சான்யா நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்குப் பிறகு 5 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

வருங்காலத்தின் எரிசக்தித் தேவைகளை நிறைவேற்ற அணுசக்தி அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் அணு உலைகளின் வடிவம், கட்டுமானம், செயல்பாடு தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மாநாட்டின்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, பேரழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றில் 5 நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியமாகியிருக்கிறது' என்றார்.

* ஜப்பான்: இன்னல்கள் இடையிலும் பள்ளிகள் திறப்பு

இஷிநோமாகி (ஜப்பான்), ஏப்.14: கடந்த மாதம் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கமும் சுனாமியும் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் பயங்கர நாசத்தை விளைவித்த போதிலும், ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிக்கூடங்களை மீண்டும் இயங்கச் செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சரியான பள்ளிக்கூடக் கட்டடங்கள் எதுவும் இல்லையென்றாலும், ஏப்ரலில் தொடங்கும் ஜப்பானின் வசந்த காலப் பருவத்தில் எப்போதும் போல புதிய பள்ளியாண்டு ஆரம்பிக்க வேண்டும் எனும் திட்டத்தோடு பள்ளிக்கூடங்களைத் திறக்கத் தீர்மானித்துள்ளார்கள்.

டோக்கியோவிலிருந்து 220 கி.மீ. தொலைவிலுள்ள இஷிநோமாகி நகரில் நிலநடுக்கத்திலும், அதைத் தொடர்ந்த சுனாமியிலும் குலைந்து போன கட்டடங்களே இப்போது மிஞ்சியுள்ளன. இவற்றில் சுமாரான நிலையில் இருப்பவற்றை இயற்கைச் சீற்றத்தில் உயிர் பிழைத்தோருக்குப் புகலிடங்களாகப் பயன்படுத்தி வருகிறது உள்ளூராட்சி.

இங்குள்ள, ஒகாவா ஆரம்பப் பள்ளியில் 104 பேர் படித்து வந்தனர். இதில் 74 பேர் இனி திரும்பி வரவே இயலாதபடி இயற்கை அவர்களை அழைத்துக் கொண்டுவிட்டது. 12 ஆசிரியர்களில் ஒருவரே இப்போது உயிரோடு உள்ளார்.
ஆயினும் இஷிநோமாகியின் கல்வி அதிகாரிகள் இங்கு புதிய பள்ளியாண்டு பாடங்களைத் தொடங்குவது குறித்து மும்முரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.

இது பற்றி ஒரு அதிகாரி கூறியது: ஏப்ரல் 21-ம் தேதி பள்ளிக்கூடங்களைத் திறப்பதாக முடிவு செய்துள்ளோம். இப்போதே 10 நாட்கள் தாமதமாகிவிட்டது. இந்தக் குழந்தைகள் கான்ஜி எனும் ஜப்பானிய எழுத்துக்களை நூற்றுக்கணக்கில் கற்க வேண்டியுள்ளது. மேலும், ஒவ்வொரு வகுப்பும் அதற்குரிய பாடத்திட்டங்களைக் காலம் தவறாமல் கற்பிக்க வேண்டியிருக்கிறது.

பள்ளிப் பேருந்துகளில் ஒவ்வொரு புகலிடமாகச் சென்று குழந்தைகளை அழைத்து வர ஏற்பாடு செய்யவுள்ளோம். 

ஒவ்வொரு வகுப்பிலும் வழக்கத்தைவிட அதிக குழந்தைககள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பாடங்களைத் தவறவிடக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மனரீதியான உதவி: இயற்கைப் பேரிடரில் தங்களுக்குத் தெரிந்தவர்கள் பலரையும் இழந்த அதிர்ச்சியிலிருந்து பலர் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், பள்ளிக்கூடங்கள் திறக்க இருக்கின்றன. சிறார்களுக்கு மன அழுத்தம் இருக்கக்கூடும் என்பதால் மனரீதியான ஆலோசனை வழங்க நாடு முழுவதிலிருந்தும் மனோதத்துவ நிபுணர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற கல்வி ஆலோசகர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல உள்ளனர்.

மீண்டும் நிலநடுக்கம்: வியாழக்கிழமை காலை 6 மணியளவில் (இந்திய நேரம் 2.30) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அலகில் பதிவானது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மோரியோகோன் ஹோன்ஷு தீவுக்கு 190 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்குக் கீழ் 11 கி.மீ. ஆழத்தில் இது நிகழ்ந்தபோதிலும் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

* சீனாவுடன் மீண்டும் ராணுவ ஒத்துழைப்பு: இந்தியா உறுதி

pm.jpg

சான்யா (சீனா), ஏப்.13: சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதையடுத்து உயர்நிலை இந்திய ராணுவக் குழு இந்த ஆண்டு ஜூன் மாதம் பயணம் செய்யும் என தெரிய வந்துள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு இரு நாடுகளும் கூட்டாக தீர்வு காண்பது என கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் (பிரிக்ஸ்) மாநாட்டில் பங்கேற்க சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன் சுமார் 50 நிமிஷம் பேச்சு நடத்தினார். இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், 2011-ம் ஆண்டை இந்தியா-சீனா பரிவர்த்தனை ஆண்டாக செயல்படுத்த உள்ளதாக ஹூ ஜின்டாவோ மன்மோகனிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

இதில் முக்கியமாக இந்திய ராணுவ அதிகாரிகள் குழு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும். அடுத்த கட்டமாக அரசியல் தலைவர்கள் இருதரப்பிலும் பயணம் மேற்கொள்வர். இரு நாடுகளிடையிலான பொருளாதார மேம்பாட்டுக்கு பரஸ்பரம் அதிகாரிகள் நிலையில் பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக மேனன் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதியில் பன்முக இந்திய ராணுவக் குழு சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள வடக்குப் பிரிவு கமாண்டர் பி.எஸ். ஜெய்ஸ்வாலுக்கு விசா வழங்க சீனா மறுத்தது. இதனால் இரு நாடுகளிடையிலான ராணுவ ஒத்துழைப்பில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இப்போது தலைவர்களிடையிலான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பு மீண்டும் ஏற்பட வழிவகுத்துள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு தனிக் காகிதத்தில் விசா வழங்கும் முடிவையும் சீனா மாற்றிக் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வருமாறு அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அதை ஹூ ஜின்டாவோ ஏற்றுக் கொண்டார்.

வர்த்தகப் பாதுகாப்பு: வளரும் நாடுகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு அனாவசியமாக தடை விதிக்கக் கூடாது என்று பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த பொருள், குறைவான கூலி தரப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருள், ரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வளரும் நாடுகளின் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கக்கூடாது. அதேபோல தங்கள் நாட்டுத் தொழில்களைக் காக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான அரசியல் சூழல், ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி பேரழிவு குறித்தும் வர்த்தக அமைச்சர்கள் விவாதித்தனர்.

பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள்ள இதன் மூன்றாவது மாநாடு ஆசிய நாட்டில் நடைபெறுவதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* பிரணாப் தலைமையில் 16ல் லோக்பால் கூட்டுக்குழு கூடுகிறது

டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்தின் பலனாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் கூட்டுக்குழு முதன்முதலாக வரும் 16-ம் தேதி கூடுகிறது. 

ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அன்னா ஹஸாரே. அவர் ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவில் சில திருத்தங்கள் செய்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு நாட்டு மக்கள் எல்லாம் அமோக ஆதரவளித்தனர். இதையடுத்து மத்திய அரசு அன்னாவின் கோரிக்கையை ஏற்றது.

லோக்பால் கூட்டுக்குழுவில் பொதுமக்களும் இருக்க வேண்டும் என்று அன்னா வலியுறுத்தினார். இதையடுத்து அமைக்கப்பட்ட லோக்பால் கூட்டுக்குழுவில் அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோரும், பொதுமக்கள் சார்பில் அன்னா ஹஸாரே, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தகவல் அறியும் சமூக சேவகர் அர்விந்த் ஆகியோரும் உள்ளனர்.

லோக்பால் மசோதாவில் திருத்தத்தை வரையறை செய்ய 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுக்குழு முதன்முறையாக வரும் 16-ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி தலைமை வகிப்பார்.

* ஆ ராசாவை பல்வா, அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தார் சரத்பவார்! - நீரா ராடியா

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள ஷாகித் பல்வாவின் டிபி ரியலிட்டி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், ஆ ராசாவை பல்வா மற்றும் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் பவார்தான் என்றும் நீரா ராடியா மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கார்ப்பரேட் தரகர் நீராராடியாவுக்கு தொடர்பு இருப்பது வெளியாகி, பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய அத்தனை பேரிடமும் சிபிஐ மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு நடந்து வருகிறது. 

நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பலகட்டமாக விசாரணை நடத்தியுள்ளது. அதில் பல்வேறு தகவல்களை சி.பி.ஐ.யிடம் நீரா ராடியா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மும்பை தொழில் அதிபர் ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் நடத்திய ஸ்வான் டெலிபோன் நிறுவனம் மூலம் இவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கிருப்பது தெரியவந்தது.

ஷாகித் பல்வாவுக்கு டி.பி. ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மத்திய அமைச்சர் சரத் பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக ஏற்கனவே புகார்கள் வந்தன. ஆனால் இதை சரத்பவார் மறுத்து வந்தார். 

ஆனால் சரத்பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மைதான் என நீராராடியா சி.பி.ஐ.விடம் தெரிவித்துள்ளார்.

ஷாகித் பல்வா நடத்திய டி.பி.ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சரத்பவாரும், அவரது குடும்ப உறுப்பினர்களும்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர் என்றும் நீராராடியா கூறியுள்ளார். மேலும், ஆ.ராசாவை ஷாகித் பல்வா, அனில் அம்பானி ஆகியோருக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் சரத் பவார்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

*சிலியில் பிடிபட்ட காந்தஹார் விமானக் கடத்தல்காரன்-சிபிஐ, ஐபி குழு நேரில் ஆய்வு

டெல்லி: காந்தஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ராஃப் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து சிலி சென்றுள்ள சிபிஐ மற்றும் ஐபி குழுவினர் பிடிபட்டுள்ள நபர், தாங்கள் தேடும் ராஃப்தானா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

1999ம் ஆண்டு நேபாளத்திலிருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். ஆப்கானிஸ்தான் காந்தஹார் விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்தி வைத்து மிரட்டினர். இதையடுத்து அவர்கள் கோரியபடி மூன்று முக்கிய தீவிரவாதிகளை அப்போதைய பாஜக அரசு விடுவித்து விமான பயணிகளை மீட்டது.

இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி அப்துல் ராஃப். இவனது தலைக்கு சிபிஐ விலை வைத்திருந்தது. இந்த நிலையில்தான் சிலியில் வைத்து சிக்கியுள்ளான் ராஃப்.

இதையடுத்து பிடிபட்ட நபர் தாங்கள் தேடும் நபர்தானா என்பதை உறுதி செய்து கொள்ள சிபிஐ மற்றும் ஐபி அதிகாரிகள் குழு சிலி தலைநகர் சாண்டியாகோவுக்கு விரைந்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் ஐபி அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிஐ, ஐபி அதிகாரிகளைக் கொண்ட குழு சிலி சென்றுள்ளது. அவர்கள் பிடிபட்டுள்ள நபர் குறித்து சிலி போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்த பணி திங்கள்கிழமைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் ராஃபை நாடு கடத்திக் கொண்டு வருவது குறித்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

போலி விசா மூலம் சிலிக்குள் நுழைந்ததாக தற்போது ராஃப் கைது செய்யப்பட்டுள்ளான். இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ராஃப் கைது செய்யப்பட்டான். 

ராஃபின் புகைப்படமோ அவனது கைரேகை உள்ளிட்டவையோ இதுவரை சிபிஐயிடம் இல்லை. இதுகுறித்து அமெரிக்காவின் உதவியை முன்பு கோரியிருந்தது சிபிஐ. ஆனால் அமெரிக்கா உதவவில்லை. ஆனால் அமெரிக்காவிடம் ராஃபின் புகைப்படம், கைரேகை உள்ளிட்டவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவால் தலிபான் தீவிரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மூவரில் ஒருவரான ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அஸாரின் மச்சான்தான் இந்த ராஃப் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த மசூத் அஸார், பாகிஸ்தானில் போய் செட்டிலாகி, அங்கு வைத்து ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைத் தொடங்கினான். இந்த அமைப்புதான் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தைத் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் ராஃபும் ஒருவர் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டாகும்.

* காலை இழந்த வீராங்கனைக்கு வேலை வழங்க ரயில்வே உறுதி

புதுதில்லி, ஏப்.14: பரேலி அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே வீசப்பட்டு காலை இழந்த தேசிய வாலிபால் வீராங்கனை அருணிமாவுக்கு வேலை வழங்க ரயில்வேத் துறை உறுதி அளித்துள்ளது.

அவரின் நிவாரணத்துக்காக ரயில்வேயில் உரிய வேலை உள்ளிட்ட அனைத்துவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் என ரயில்வே வாரியத் தலைவர் விவேக் சகாய் தெரிவித்தார்.

அருணிமா ஏப்ரல் 11-ம் தேதி பத்மாவத் எக்ஸ்பிரஸில் சென்றுகொண்டிருந்தபோது பரேலியில் அவரிடம் கொள்ளையடிக்க முயன்ற நபர்களால் ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு ஒரு கால் துண்டானது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேர்வு ஒன்றில் ஆஜராவதற்காக கெளதம புத்தா நகருக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது சேனாடி மற்றும் பரேலி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த துரதிர்ஷ்டமான சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கவலை தெரிவித்தார். மேலும் அவருக்கு முறையான மருத்துவ உதவி மற்றும் நிதி உதவி அளிக்க மமதா உத்தரவிட்டுள்ளதாக விவேக் சகாய் தெரிவித்தார்.

பரேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அருணிமா, ரயில்வே துறையால் தனக்கு இழப்பீடும், வேலையும் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
அருணிமா ரயிலில் இருந்து கீழே வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை ரயில்வே அமைத்துள்ளது.

அருணிமாவின் சிகிச்சை செலவையும், அவருக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கான செலவையும் ரயில்வே ஏற்றுக்கொள்ளும் என சகாய் குறிப்பிட்டார்.

மாநிலச் செய்தி மலர் :

ec.jpg

* 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு: பிரவீண் குமார்

சென்னை, ஏப். 14: தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 16) மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

எந்தெந்த வாக்குச் சாவடிகள் என்பது குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் 5 தொகுதிகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சாமந்திக்குப்பத்தில் உள்ள 55, 56 எண்ணுள்ள வாக்குச் சாவடிகள், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி ஆனந்தமங்கலத்தில் உள்ள 121 எண் வாக்குச் சாவடி, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வளையவட்டம், பருத்திகுடியில் உள்ள 106, 107 எண்ணுள்ள வாக்குச் சாவடிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி 164 எண் வாக்குச் சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரத்தில் உள்ள 146 எண் வாக்குச் சாவடி ஆகியவற்றில் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

எதற்காக மறுவாக்குப் பதிவு: கன்னியாகுமரி, 

திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும், கடலூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை சில மர்மநபர்கள் தாக்கி சேதப்படுத்தியதாலும், 

திருவிடைமருதூரில் தவறான இடத்தில் வாக்குச் சாவடிகளை அமைத்ததால் வாக்காளர்களை வாக்களிப்பதை புறக்கணித்தனர்.

எந்த விரலில் மை: மறுவாக்குப் பதிவுக்கு புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே வாக்களித்த போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. மறுவாக்குப் பதிவில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கையின் நடு விரலில் மை இடப்படும்.

பொதுத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கும் வாய்ப்பை இழந்த 7 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் மறுவாக்குப் பதிவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

* பணம் கொடுப்பதை முடிந்த அளவுக்கு தடுத்து‌ள்ளோ‌ம்: பிரவீண்குமார்  

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முடிந்த அளவுக்கு தடுத்து நிறுத்தினோம் எ‌ன்று தம‌ிழக தலைமை தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி பிரவீண்குமார் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை தலைமை‌ச் செயல‌க‌த்‌தி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 78 சதவீத அளவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் எ‌ன்றா‌ர்.

அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்தோம் எ‌ன்று‌ம் வாக்குப்பதிவு சதவீதம் அளவு கூடியிருப்பதை பார்க்கும்போது எங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது எ‌ன்று‌ம் ‌‌பிர‌‌வீ‌ண்குமா‌ர் கூ‌றினா‌ர்.

அதேபோல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முடிந்த அளவுக்கு தடுத்து நிறுத்தினோம் என்று‌ம் ‌பிர‌‌‌வீ‌ண்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

* அம்பேத்கரு‌க்கு தலைவர்கள் மரியாதை 

114110413175033248.jpg

சென்னை, ஏப்.14: அம்பேத்கரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

** திரு‌விடைமரு‌த்தூ‌‌‌ரி‌ல் ஒரு ப‌ெ‌ண் ம‌ட்டு‌ம் வா‌க்க‌ளி‌ப்பு  

திரு‌விடைமரு‌த்தூ‌ர் தொகு‌தி‌க்கு உ‌ட்ப‌ட்ட வா‌க்கு‌ச்சாவடி‌ ஒ‌ன்‌றி‌ல் ஒரு வா‌க்கு ம‌ட்டு‌ம் ப‌திவா‌கியு‌ள்ளது.

தி‌‌‌ரு‌விடைமரு‌த்தூ‌ர் தொகு‌தி‌க்கு‌‌ட்ப‌ட்ட பரு‌த்‌தி‌க்குடி‌ ‌கிராம‌த்‌தி‌ல் முத‌ல் வா‌ர்டை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் பரு‌த்து‌க்குடி ஊரா‌ட்‌சி ஒ‌ன்‌றிய அலுவலக‌த்‌திலு‌ம், 2, 3வது வா‌ர்டு‌க்கான வா‌க்காள‌ர்க‌ள் வளையவ‌ட்‌ட‌ம் ஊரா‌ட்‌சி‌ ஒ‌ன்‌றிய ஆர‌ம்ப ப‌ள்‌ளி‌யி‌ல் வா‌க்க‌ளி‌ப்பது வழ‌க்க‌ம்.

ஆன‌ா‌ல் நே‌ற்று ந‌ட‌ந்த வா‌க்கு‌ப்ப‌தி‌‌வி‌ன்போது பரு‌த்‌தி‌க்குடி‌‌யி‌ல் அமைய வே‌ண்டிய வா‌க்கு‌ச்சாவடி வளையவ‌ட்ட‌த்த‌ிலு‌‌ம், வளையவ‌ட்ட‌த்‌தி‌ல் அமைய வே‌ண்டிய வா‌க்கு‌‌ச்சாவடி பரு‌த்து‌க்குடி‌யிலு‌ம் மா‌றி அமை‌ந்‌திரு‌ந்தது.

வா‌க்கு‌‌ச்சாவடி‌க்கான தூர‌ம் 6 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் இரு‌ந்ததா‌ல் வா‌க்காள‌ர்க‌‌ள் யாரு‌ம் வா‌க்க‌ளி‌க்க செ‌ல்ல‌‌வி‌ல்லை. வா‌க்காள‌ர்க‌ள் வராததா‌ல் பரு‌த்‌திக்குடி, வளையவ‌ட்ட‌‌ம் வா‌க்கு‌ச்சாவடிக‌ள் வெ‌றி‌ச்சோடி ‌கிட‌ந்தன.

ஆனா‌‌ல் மாலை‌யி‌ல் ரா‌ணி எ‌ன்பவ‌ர் ம‌ட்டு‌ம் தனது வா‌க்கை வளையவ‌ட்‌ட‌ம் ப‌ள்‌ளி‌யி‌ல் அமை‌ந்‌திரு‌ந்த வா‌க்கு‌ச்சாவடி‌யி‌ல் வா‌க்கை ப‌திவு செ‌ய்தா‌ர்.

இதனா‌ல் 1,293 வா‌க்காள‌ர்களை கொ‌ண்ட பரு‌த்து‌க்குடி வா‌க்கு‌ச்சாவடி‌யி‌ல் ஒரு வா‌க்கு ம‌ட்டுமே ப‌திவானது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

* வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை-புளியங்குடி ஆதிவாசிகள் வேதனை

புளியங்குடி: புளியங்குடி பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிச் சென்றனர். 

புளியங்குடி வனச்சரக்கத்திற்கு உட்பட்ட கோட்டமலை பீட் பகுதியில் சுமார் 22 ஆதிவாசி குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 47 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. இவர்கள் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள ஏவிஎம் துவக்கப்பள்ளியில் வாக்களிப்பது வழக்கம். இவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாத நிலையில் நேற்று மலைப்பகுதியிலிருந்து 47 பேரும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க வந்தனர். 

ஆனால், வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால் வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இவர்களுக்கு ஓட்டு உள்ளது என்று இருந்தது. 

பின்னர் இவர்கள் டிஎன் புதுக்குடி, சிந்தாமணி ஆகிய பகுதிகளுக்கு சென்று தங்களின் பெயர் உள்ளதா என பார்த்து வந்தனர். ஆனால் அவர்கள் பெயர் இல்லாததால் மனவேதனையுடன் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

* 1391 பேர் "49 ஓ' போட்டனர்

காஞ்சிபுரம், ஏப். 14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 1391 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை குறிக்கும் வகையில் 49ஓ போட்டுள்ளனர்.

தொகுதி வாரியாக 49ஓ பதிவு செய்தவர்கள் விவரம்:

சோழிங்கநல்லூர்-273, ஆலந்தூர்-197, ஸ்ரீபெரும்புதூர்-29, பல்லாவரம்-175, தாம்பரம்-276, செங்கல்பட்டு-158, திருப்போரூர்-3, செய்யூர்-50, மதுராந்தகம்-87, உத்தரமேரூர்-56, காஞ்சிபுரம்-37 உள்பட 1391 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்தனர்.

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் அதிகாரிகள் 49ஓ போடுவதுக்கு அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் சிலர் புகார் கூறினர்.
இதுபோல் வாக்குச் சாவடிகளில் அங்கொன்றும், இங்கொன்றும் அனுமதிக்காதபோதும் 49ஓ போட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1391-ஐ தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* ஜுன் 1 முதல் தேசிய அளவில் போராட்டம்: ராம்தேவ்

14ramdev.jpg

மைசூர், ஏப்.14: அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறக் கோரி ஜூன் 1-ம் தேதியில் இருந்து தேசிய அளவிலான போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

அதிக மதிப்பிலான நோட்டுகள் கறுப்புப் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அரசியல்வாதிகளும், அவர்களிடம் இருக்கும் சொத்துக்களை தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கு பதிலாக நாட்டின் சொத்துக்களை அரசுகள் விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என ராம்தேவ் மைசூரில் யோகா முகாம் ஒன்றின்போது தெரிவித்தார்.
தனது போராட்டத்தை பாரத் ஸ்வாபிமான் இயக்கத்தின் மூலம் தேசிய அளவில் நடத்த இருப்பதாக ராம்தேவ் கூறினார்.

இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தொடங்கப்பட்ட யோகா யாத்திரை இதுவரை ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்தை சென்றடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் ஊழல் மலிந்துகிடப்பதாகக் குற்றம்சாட்டிய ராம்தேவ், அதற்காக எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோர மாட்டேன் என்றார்.
யோகாவை ஊக்குவிக்க அனைத்து கிராமத்திலும் யோகா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ராம்தேவ் யோசனை தெரிவித்தார்.

* பாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்

14nandhana.jpg

துபை, ஏப்,14: பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபையில் இன்று உயிரிழந்தார்.

சித்ரா மற்றும் அவரது கணவர் விஜயசங்கருக்கு நந்தனா ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

துபையில் எமிரேட்ஸ் ஹில்ஸில் அவர்கள் தங்கி இருந்தபோது நீச்சல் குளத்தினுள் நந்தனா தவறி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குடும்பத்தினருடன் துபை சென்றிருந்தார். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு செல்வதற்காக இன்று காலை சித்ராவும், அவரது குடும்பத்தினரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்கதவு திறந்திருப்பதும், மகள் நந்தனா வீட்டில் இல்லாததும் அவர்களுக்கு தெரியவந்தது.

பின்னர் வெளியே தேடிப்பார்த்தபோது, நீச்சல் குளத்தில் நந்தனா மிதந்தபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் இருந்து நந்தனாவை வெளியே கொண்டு வந்து ஜேபெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் நந்தனா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது சித்ராவும் வீட்டில்தான் இருந்துள்ளார். எனினும் அனைவரும் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது நந்தனா யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே சென்றதாகத் தெரிகிறது.

குழந்தைகளுக்கு பெரிதும் பரிச்சயமில்லாத அந்த இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா தவறி விழுந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

நந்தனாவின் உடல் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நந்தனாவின் மரணம் தொடர்பாக துபை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* உணவுப்பொருள் விலையேற்றங்களுக்கு அமெரிக்காவே காரணம்!

உலகின் உணவுப்பொருட்கள் விலையேற்றத்திற்கு அமெரிக்காவின் கொள்கைகளே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரகளும் மனித நேய வாதிகளும் கூறியுள்ளனர்.

அதாவது உணவுப்பொருளை உற்பத்தி செய்ய வேண்டிய தானிய விதைகளை எரிபொருளான எத்தனாலை உருவாக்குவதற்கு பயன்படுத்த அமெரிக்க அரசு கடுமையான சலுகைகளை வழங்குவதால் உணவுப்பொருள் தட்டுப்பாடும் அதனால் விலையேற்றமும் ஏற்படுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலியம் விலை உலகம் முழுதும் உயர்ந்து வரும் நிலையில் எத்தனால் மூலம் தயாரிக்கப் படும் இயற்கை எரிபொருளே சிறந்தது என்று எத்தனால் தயாரிப்பாளர்கள் கூற இதற்காக அமெரிக்க அரசு அளிக்கும் வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளால் அந்தத் தானியத்தின் உணவுப்பயன்பாடு வெகுவாக குறைந்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.

கேசோலினில் எத்தனாலின் அளவைப்பொறுத்து அதற்கு ஒரு கேலனுக்கு 45 சென்ட்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இது மிக மோசமான பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் எரிவாயுக் கொள்கை என்று விமர்சகர்கள் காரசாரமாக பேசி வருகின்றனர்.

உலகின் உணவுப் பொருள் விலையேற்றத்தில் எத்தனாலுக்காக அமெரிக்க தானியப் பயிர்கள் மாற்றப்படுவது 30% பங்களிப்பு செய்கிறது என்று ஃபோர்ட் ரஞ்ச் மின்னசோட்டா பல்கலை பேராசிரியரும், ஆய்வாளரும் கூறியுள்ளார்.

உணவுத் தானியம் ஒன்றை 40% எத்தனால் பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்றால் உணவுப்பொருள் விலையேற்றத்திற்கு இதுவே காரணம் என்று கூற ஒருவர் பொருளாதார நிபுணராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார் பேராசிரியர் ரஞ்ச்.

தானியப் பயிர்களில் சோயாபீன், பருப்பு வகைத் தானிய விதைகள் ஆகியவற்றை எத்தனால் தயாரிக்க அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதனால் உலகின் ஏழை நாடுகள் உணவு விலை ஏற்றத்தால் அவதியுறுவதாக அவர் யேல் பல்கலைக் கழகத்தில் உரை ஒன்றில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

உணவுப்பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களால்தான் இன்று ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருபுறம் மத்திய கிழக்கு நாடுகளில் இதனால் பதற்றம் ஏற்பட்டு வருகையில் தங்கள் நாடு எரிசக்தி பாதுகாப்பை முழுதும் பெறும் அவசியம் தேவை என்பதற்கும் மத்திய கிழக்கு பதற்றத்தையே தங்களுக்கும் நியாயமாகப் பேசுகின்றனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

உலகம் அழிந்தாலும் அமெரிக்காவின் பணத்தை அழிக்க முடியாது என்ற நிலையில் உச்சத்தில் இருக்கும் ஒரு நாடு தனது எரிபொருள் பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளின் உணவுப்பாதுகாப்பை சீரழித்து வருகிறது!

14-fdi1200.jpg

* இந்தியாவில் அந்நிய முதலீடு 22.2 சதவீதம் வீழ்ச்சி!

டெல்லி: இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 22.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி இந்த 11 மாதங்களில் அந்நிய முதலீடு 26 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு 33.34 பில்லியன் டாலராக உள்ளது. 

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததுதான் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 11 மாத காலத்தில் உலோகத்துறை, எண்ணெய், எரிவாயு மற்றும் ரசாயனத் துறையில் மட்டுமே 7 சதவீத வெளிநாட்டு மூலதனம் அதிகமாகக் கிடைத்துள்ளது. ஆனால் ஐடி துறையில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சர்வீஸ் செக்டார் எனப்படும் சேவைத் துறையில் மட்டும் 31 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய முதலீடுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலை காணப்படுகிறது, இந்தத் துறையில். 

தொலைத் தொடர்புத் துறையில் கிட்டத்தட்ட 50 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 2009-1010-ல் 2.55 பில்லியன் டாலராக இருந்த அந்நிய முதலீடு, 2010-2011-ல் 1.33 பில்லியனாக குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையிலும் இதே போன்ற வீழ்ச்சி காணப்படுகிறது.

ஆனால் ரிலையன்ஸ்-பிபி மற்றும் வோடபோன் - எஸ்ஸார் கூட்டு வர்த்தகம் காரணமாக 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்த வர்த்தக உடன்பாடு எட்டாமல் போயிருந்தால், மேலும் பெரிய வீழ்ச்சியை இந்திய தொழில்துறை சந்தித்திருக்கும்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌தீவு அ‌ணி‌யி‌ல் சாமுவே‌ல்‌ஸ்: கெய்ல், சர்வான், சந்தர்பால் அ‌திரடி ‌‌நீ‌க்க‌ம்  

பாகிஸ்தா‌ன் அ‌ணி‌க்கு எதிரான ஒரு நா‌ள் ‌கி‌ரி‌க்கெ‌ட் போட்டி‌யி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி‌யி‌ல் சாமுவே‌‌ல்‌ஸ் இட‌ம் ‌பிடி‌த்து‌ள்ளா‌‌ர். ஆனா‌ல் கெய்ல், சர்வான், சந்தர்பால் ஆ‌கியோ‌‌ர் அ‌திரடியாக நீக்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் விளையாடும் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை அணியில் இடம் பெற்ற மூ‌த்த வீரர்களான முன்னாள் தலைவ‌ர் கிறிஸ் கெய்ல், சர்வான், சந்தர்பால் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். வெய்ன் பிராவோ துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் விளையாடும் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணி வீரர்கள் வருமாறு: டாரன் சமி (தலைவ‌ர்), வெய்ன் பிராவோ (துணை தலைவ‌ர்), சாமுவேல்ஸ், லெண்டில் சிம்மனஸ், தேவன் சுமித், தேவன் தாமஸ், தேவேந்திர பிஷ்சு, எட்வர்ட்ஸ், மார்ட்டின், ராம்பால், கேமர் ரோச், ரஸ்சல்.

* கொ‌ச்‌சியை ‌வீ‌ழ்‌த்‌தியது புனே வாரியர்ஸ்  

மு‌ம்பை‌யி‌ல் நடைபெ‌ற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொச்சி துஸ்கெர்ஸ் கேரளா அ‌ணியை 4 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌‌த்‌தியாச‌த்‌தி‌ல் ‌வீ‌ழ்‌த்‌தியது.

பூவா தலையா வெ‌ன்று முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 33 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்களும், பிராட் ஹாட்ஜ் 39 ரன்களும் எடுத்தனர்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய புனே அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிறகு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக மோனிஸ் மிஸ்ரா 21 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்களும், உத்தப்பா 13 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்களும் எடுத்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோவில்

மூலவர் : திருவாலவாயர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் :  மீனாட்சி
  தல விருட்சம் :  அரசமரம்
  தீர்த்தம் : சிவதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  ஆலவாய்
  ஊர் : மதுரை
  மாவட்டம் : மதுரை
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.  
   
வெளியூர்,வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் ஆகியவற்றில் இருந்தெல்லாம் இக்கோயிலுக்கு உடல்நலம் வேண்டி வருகிறார்கள்.  
   
தலபெருமை:
     
அது என்ன தென்திருவாலவாய் : பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்ற‌ே தெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க வங்கிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரைய‌ையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. ‌மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர்.

இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர். மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், 

தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும்.

இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.

திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.

எமன் வழிபட்ட தலம் : மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை. இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென்திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

தல வரலாறு:
      
மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.

கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.

திருவிழா:
     
   கந்த சஷ்டி - ஐப்பசி - 6 நாட்கள் திருவிழா- சுப்ரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள். அன்னாபிசேகம் - ஐப்பசி - பௌர்ணமி நாளில் சிறப்பாக நடைபெறும் ஆடிப்பூரம்,கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெறும். பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். ஆடி வெள்ளி, தைவெள்ளி ஆகிய விசேச தினங்களில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தவிர தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு உள்ளிட்ட அனைத்து விசேச நாட்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக அர்ச்சனைகள் நடைபெறும். மாதத்தின் பிரதோச நாட்களில் வெகுசிறப்பாக அபிசேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் பெருமளவில் கலந்து ‌‌கொண்டு சிறப்பிக்கிறார்கள்

திறக்கும் நேரம்:
     
  காலை 6 .30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

திருக்குரான் - இறைவன் கருணையுள்ளவன்.

* உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (இந்த உண்மையை அறிந்து கொள்ள சான்று வேண்டுமாயின்)

* மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர் வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப்பண்புகளில் ஒன்றாகும்.

* உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார் ?

விடை - மு.கதிரேசன் செட்டியார்.

இதையும் படிங்க :

114110413175033248.jpg

ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவசியமான நிலைமைகள் - அம்பேத்கர் 

ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிருக்கும் கருத்தாகும். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஜனநாயகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கிரேக்கர்கள் அத்தகைய ஜனநாயகத்தை பற்றிக் குறிப்பிட்டார்கள். ஆனால் சுண்ணாம்பு, பாலடைக் கட்டியிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறதோ அவ்வாறே அதீனிய ஜனநாயகம் மாறுபடுகிறது என்பதை எல்லோரும் அறிவர். அத்தகைய ஜனநாயகம் மக்களில் 50 சதவீதத்தை அடிமைகளாகக் கொண்டதாகும். இவ்வாறு அடிமைகளாக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை. நமது ஜனநாயகம் அதீன ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதில் ஐயமில்லை. 

உங்கள் கவனத்துக்கு நான் பூர்வாங்கமாகக் கொண்டுவர விரும்பும் இரண்டாவது விஷயம் எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதாகும். இங்கிலாந்தின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 1688 ஆம் வருடப் புரட்சிக்கு முன்னர் இருந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் 1688ஆம் வருடப் புரட்சிக்கு பின்னர் வந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று எவரும் கூறமுடியாது. இதேபோல் முதலாவது சீர்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்ட போது 1688க்கும் 1832க்கும் இடையே நிலவிய பிரட்டிஷ் ஜனநாயகமும் 1832ஆம் வருடச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிலவிய ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று யாரும் கூற முடியாது. ஜனநாயகம் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

உங்கள் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் மூன்றாவது விஷயம் ஒன்றுள்ளது. ஜனநாயகம் தனது வடிவத்தில் மாறிக் கொண்டிருப்பது மட்டுமின்றி, நோக்கங்களிலும் மாறிய வண்ணம் இருக்கிறது. பண்டைக்கால பிரிட்டிஷ் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஜனநாயகத்தின் குறிக்கோள் என்னவாக இருந்தது? மன்னனைக் கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும், அவனுக்குள்ள தனி அதிகாரங்கள் என இப்போது அழைக்கப்படும் அதிகாரங்களை மன்னன் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோளாக இருந்தது. சட்டம் இயற்றும் ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் இருந்தபோதிலும் "மன்னன் என்ற முறையில் சட்டங்கள் இயற்ற எனக்குத் தனி அதிகாரம் உண்டு. எனவே நான் இயற்றும் சட்டம் செல்லுபடியாகும்" என்று கூறுமளவிற்கு மன்னன் சென்றான். மன்னனின் இவ்வாறான தன் முனைப்பான அதிகாரம்தான் ஜனநாயகம் தோன்றுவதற்குக் கதவு திறந்துவிட்டது. 

இன்று ஜனநாயகத்தின் குறிக்கோள் என்ன? இன்றைய ஜனநாயகத்தின் குறிக்கோள் யதேச்சதிகார மன்னன் மீது கட்டுப்பாடு செலுத்துவதல்ல. மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே குறிக்கோளாகும். ஜனநாயகத்தின் குறிக்கோளில் இது அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவேதான் நான் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு தலைப்பு தருவதில் நவீன ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு அவசியமான நிலைமைகள் என்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

ஜனநாயகம் என்று கூறும்போது அதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம்? மேலே செல்வதற்கு முன்னர் இது குறித்து நமக்குத் தெள்ளத் தெளிவான புரிஉணர்வு வேண்டும். அரசியல் விஞ்ஞான எழுத்தாளர்கள், தத்துவ முனிவர்கள், சமூகவியலாளர்கள் முதலானோர் ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் தந்திருப்பது உங்களுக்குத் தெரியும். எனது கருத்தை விளக்குவதற்கு இவற்றில் இரண்டு இம்சங்களை மட்டுமே எடுத்துக்கூற விரும்புகிறேன். 

அரசியல் சாசனம் குறித்து வால்டர் பேகேஹாட் எழுதியுள்ள புகழ்பெற்ற நூலை உங்களில் எவராது படித்திருப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது. இது ஜனநாயகம் பற்றி ஒரு தெளிவான கருத்தினை வழங்க எடுத்துக்கொண்ட முதல் முயற்சியாகும். வால்டர் பேகேஹாட் எழுதியுள்ள அந்த நூலை நீங்கள் படித்தால் விவாதத்தின் மூலம் அரசாங்கம் நடத்துவதே ஜனநாயகம் என்று அவர் விளக்கியிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறுதான் ஜனநாயகம் என்பதற்கு அவர் பொருள் கொள்கிறார். ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகத்துக்கு அளிக்கும் விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கத்திய ராஜ்யங்களை வெற்றிகொண்ட பிறகு கெட்டிஸ்பர்கில் நிகழ்த்திய புகழ்பெற்ற சொற்பொழிவில் மக்களால் மக்களைக் கொண்டு நடைபெறும் மக்கள் அரசாங்கம் என்று ஜனநாயகத்துக்கு அவர் விளக்கம் தந்தார். 

ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூலமான முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயக‌த்து‌க்கு நா‌ன் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்கமாகு‌ம். இ‌வ்வாறுதா‌ன் ஜனநாயகத்தை நான் காண்கிறேன். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவோரால், மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதை ஜனநாயகம் சாத்தியமாக்குமானால், இரத்தம் சிந்தும் முறையைப் பின்பற்றாமல் மக்களும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வார்களானால் அதுதான் ஜனநாயகம் என்று கூறுவேன். எது ஜனநாயகம் என்பதை நிர்ணயிப்பதற்கு இதுதான் உண்மையான தேர்வாய்வாகும் உரைகல்லாகும். 

இது கடுமையான சோதனையாக இருக்கவேண்டும். ஒரு பொருளின் தரத்தை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இத்தகைய ஜனநாயகம் எவ்வாற வெற்றி பெற முடியும்? ஜனநாயகம் எனும் இந்தப் பொருள் குறித்து எத்தனையோ பேர் எழுதி இருக்கின்றனர். ஆனால் ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்கு எத்தகைய நிலைமைகள் தேவை என்பது குறித்து இவர்களில் எவரும் உருப்படியான யோசனைகள் எவற்றையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? வரலாற்றைப் படிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டம் எது என்பதைக் கண்டறிந்து நமது சொந்த முடிவுக்கு வரவேண்டும்.


நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.

--

                                                               

No comments:

Post a Comment