Tuesday, July 20, 2010

குற்றம் கண்டு தனைத் திருத்துதல்

தன் குற்றம் குறை கடமை தன்னுள் கண்டு
தான் கண்டு தனைத்திருத்தும் தகைமை வந்தால்
என் குற்றம் பிறர் மீது சுமத்தக் கூடும்
ஏதெனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறந்தவரால்
மிக வருத்தம் துன்பம் அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு
நாம் கண்ட தெளிவுஇது வாழ்த்தி வாழ்வோம்.

உயரமாக நில்லுங்கள்

1. உடல் அளவில்.... உயர்ந்து நில்லுங்கள்
2. மன அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்
3. ஆன்மீக அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்.

Monday, July 19, 2010

சிறந்தவைகள்

நதிகளில் சிறந்தது கங்கை , மலைகளில் சிறந்தது இமயம் , மலர்களில் சிறந்தது தாமரை , மணிகளில் சிறந்தது மாணிக்கம் , தெய்வங்களில் சிறந்தவர் முருகர் , யாத்திரைகளில் சிறந்தது கயிலை யாத்திரை.