Tuesday, November 30, 2010

இன்றைய செய்திகள்.- நவம்பர் - 30 - 2010.







உலகச் செய்தி மலர் :

* இந்தியாவை புறக்கணித்த துருக்கி : விக்கிலீக்ஸ் அம்பலம்

வாஷிங்டன், நவ.29- துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கன் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று இவ்வாறு இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணைச் செயலர் வில்லியம் பர்ன்ஸை, துருக்கியின் அரசியல் விவகாரத்துறை இணைச் செயலர் ராஃப் என்ஜின் சோய்சல் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தூண்டுதலால் துருக்கி இவ்வாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கன் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

ஆப்கனில் அமைதி ஏற்பட இந்தியா நீண்ட காலமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், அந்த நாட்டின் புனரமைப்புக்காக இந்தியா பெருமளவில் நிதியுதவி மற்றும் கட்டமைப்பு உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் குறித்து அமெரிக்கா சர்ச்சைக்குரிய விமர்சனம்: விக்கிலீக்ஸ்

வாஷிங்டன், நவ.29- ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை அடங்காத நாய் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்வு உடையவர் என்றும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜத் ஹிட்லரைப் போன்றவர் என்றும், லிபியாவின் மூத்த தலைவர் கடாபி நம்பிக்கைக்குரிய பெண் செவிலியர் இல்லாமல் பயணம் செய்யாதவர் என்றும் அமெரிக்கத் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது
.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* எல்லை தாவா : இந்தியா சீனா பேச்சு

பீஜிங்:எல்லை பிரச்னை குறித்து இந்திய - சீன பிரதிநிதிகள், பீஜிங்கில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியையொட்டிய அக்சாய் சின் மற்றும் அருணாசல பிரதேசத்தில் திபெத்தையொட்டிய பகுதிகளில் உள்ள எல்லையை இருநாடுகளும் உரிமை கோருகின்றன. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 4,000 கி.மீ., தூரத்துக்கு எல்லை பகுதிகள் உள்ளன.இருநாட்டு எல்லை பகுதியை வரையறை செய்வது குறித்து, இதுவரை 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் நேற்று, சீன தலைநகர் பீஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், சீன பாதுகாப்பு ஆலோசகர் தாய் பிங்குவா ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள், இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.


தேசியச் செய்தி மலர் :

* புத்த மடாலயம் புதையும் அபாயம்

இடநகர் மற்றும் அருணாசலபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற 330 ஆண்டு பழமைவாய்ந்த தலாய்லாமாவின் புத்த மடாலயம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது. அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் உள்ள இம்மடாலயம் 1680 இல் நிறுவப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள, ஆசியாவிலேயே 2வது பெரிய புத்த மடாலயம் தற்போது நிலச்சரிவில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் மின் கம்பங்கள் மண்ணில் புதைந்தன. இதைதொடர்ந்து நிபுணர்கள் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அருணாச்சல பிரதேச முதல்வர் டோஜி, நிவாரணப் பணிகளை செய்யும் படியும், நிலச்சரிவு அபாயங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உதவி கோரவும் முடிவு செய்துள்ளார் அவர்.

* ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மத்திய தொலைத் தொடர்பு சட்ட ஆலோசகர் சஸ்பெண்ட்

புது தில்லி, நவ. 29: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த சட்ட ஆலோசகர் சந்தோக் சிங் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தொலைத் தொடர்புத் துறை சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க அவர் ஆலோசனைகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.



*கிலானி, அருந்ததி ராய் மீது தேசவிரோத வழக்கு

புது தில்லி, நவ. 29: ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டோர் மீது ஞாயிற்றுக்கிழமை தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  கடந்த அக்டோபர் 21-ல் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியாவுக்கு எதிராக இவர்கள் கருத்து தெரிவித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

  இது தொடர்பாக தில்லி பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி நவிதா குமாரி பாஹா, கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்ட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யுமாறு கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.  இந்த வழக்கு தொடர்பாக தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, ஷேக் செüகத் ஹுசேன், ஜம்மு காஷ்மீர் பேராசிரியர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதில் ஷேக் செüகத் ஹூசேன், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

  இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இவர்கள் அனைவர் மீதும் தில்லி போலீஸôர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.    ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

* 7 நாள்களில் பதிலளிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

புது தில்லி, நவ. 29: மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து 7 நாள்களில் பதிலளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ராணுவ உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், 6 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி பெற்ற நிலையில் 31 மாடிகள் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

  விதிகளை மீறி கட்டப்பட்ட மாடிகளை ஏன் இடிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 12-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதற்குப் பதிலளிக்க 4 வாரங்கள் தேவை என்று ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்கம் கோரிக்கை விடுத்தது.

  15 நாள்கள் அவகாசம் முடிந்த நிலையில் அடுத்த 7 நாள்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* தமிழகத்தில் கனமழை: 1.4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.

சென்னை, நவ. 29: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் 1.5 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

  வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களால் மழைக்கு இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர்.

  தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்த மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
 
தஞ்சை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூரில் 5 ஆயிரத்து 903 ஹெக்டேரும், கடலூரில் 16 ஆயிரத்து 411 ஹெக்டேரும், நாகப்பட்டினத்தில் 37 ஆயிரத்து 890 ஹெக்டேரும், மதுரையில் 709 ஹெக்டேரும், விழுப்புரத்தில் 702 ஹெக்டேர் அளவுக்கும் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

* பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறை ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை தேவை'


சென்னை, நவ. 29: பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செயல்களின்போது புகார் வரும் வரை காத்திருக்காமல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) வேண்டுகோள் விடுத்துள்ளது
.
 பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பொது விசாரணைக் கருத்தரங்கு நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

 இந்தக் கருத்தரங்கில் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* ஐபேட் மோகம் - கணினி விற்பனை பாதிப்பு : கார்ட்னெர்

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏதும் பர்சனல் கணினியில் இல்லாதலால் இதன் விற்பனையைப் பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபேட் இன் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் பார்வை அதன்மீது திரும்பியிருப்பதாலும் கணினியின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கார்ட்னரின், நேற்றைய ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்காலத்தில் ஐபாட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமானாலும், பர்சனல் கணினி என்பது வாழ்க்கையில் இணைந்து விட்ட ஒன்றாக ஆகிவிட்டதாலும் அதற்கென்று உள்ள தனிப்பட்ட பயன்களாலும், பர்சனல் கம்ப்யூட்டருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்வு

மும்பை, நவ.29- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து 19,405 புள்ளிகளில் முடிவடைந்தது.
ஆர்ஐஎல், மாருதி சுஸுகி, விப்ரோ, பெல், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

ஹெச்டிஎப்ஸி வங்கி, ஏசிசி, டிஎல்எப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 5,830 புள்ளிகளில் முடிவடைந்தது.






விளையாட்டுச் செய்தி மலர் :

* டிராவில் முடிந்தது ஆஷஸ் முதல் டெஸ்ட்.

பிரிஸ்பேன், நவ.29: ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் அலாஸ்டர் குக் 235* ரன்களும், டிராட் 135* ரன்களும் குவித்தனர்.

முன்னதாக, 4-ம் நாள் ஆட்ட நேரமுடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டிராஸ் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சுருக்கமான ஸ்கோர்:
இங்கிலாந்து: முதல் இன்னிங்ஸ் 260
2-வது இன்னிங்ஸ் 517/1 டிக்ளேர் (ஸ்டிராஸ் 110,
குக் 235*, டிராட் 135*; நார்த் 1வி-47)
ஆஸ்திரேலியா: முதல் இன்னிங்ஸ் 481
2-வது இன்னிங்ஸ் 107/1 (வாட்சன் 41*, பாண்டிங் 54*; பிராட் 1வி-18)

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.


ஆன்மீகச் செய்தி மலர் ;

* அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில்.

மூலவர் - நட்டாற்றீஸ்வரர்
தாயார் - நல்லநாயகி [அன்னபூரணி]
தீர்த்தம் - காவிரி தீர்த்தம்
பழமை - 500 - 1000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் - காங்கயம்பாளையம்
மாவட்டம் - ஈரோடு
மாநிலம் - தமிழ்நாடு.

தல சிறப்பு :

இங்கு சிவன் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் பிருத்வி (மண்) தலமாகும் . கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் அத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். நடக்கும் முருகன்: இங்குள்ள முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்றதன் அடிப்படையில் இக்கோலத்தில் காட்சி தருவதாக சொல்கின்றனர். இவர் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம்.

தல பெருமை :-

பிருத்வி தலம்:காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் அமைந்த கோயில் இது. இதைச் சுற்றியுள்ள கொக்கராயன் பேட்டையில் முக்கூடநாத சுவாமி கோயில், சாத்தம்பூரில் வல்லாளேஸ்வரர், காளமங்கலத்தில் மத்திய புரீஸ்வரர், மொளசியில் முக்கண்ணீஸ் வரர் என நான்கு சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்நான்கு சிவத்தலங்களுக்கும் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளதால் இவை பஞ்சபூத தலங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு மணலில் வடிக்கப்பட்ட லிங்கம் இருப்பதால், இதை பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதற்காக பரிசல் உண்டு.

அம்பாளுக்கு சங்காபிஷேகம்:காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக் கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று அகத்தியருக்கு தலைப் பாகை மற்றும் வஸ்திரம் அணிவிப்பர். சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். அகத்தியர் சிவபூஜை செய்த போது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார். இதன் அடிப்படையில் சித்திரை முதல் நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்க படும். அன்று பக்தர்களுக்கு இதையே பிரசாதமாகத் தருவர்.

அம்பாள் நல்லநாயகி, சிவன் சன்னதிக்கு வலப்புறம் இருக்கிறாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். அன்னபூரணி என்றும் பெயருண்டு. ஆடிப்பூரத்தன்று மதிய பூஜையில் இவளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் ஆத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். இம்மரத்தின் கீழ் காவிரி கண்ட விநாயகர் இருக்கிறார்.

நடக்கும் முருகன்: இங்குள்ள முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்றதன் அடிப்படையில் இக்கோலத்தில் காட்சி தருவதாக சொல்கின்றனர். இவர் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம்.

பரிசலில் நடராஜர்:மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று ஒரு பரிசலில் நடராஜர் எழுந்தருளி, காவிரி நதியிலேயே கோயிலைச் சுற்றி வருவார். அவருக்கு முன்பாக மற்றொரு பரிசலில் மேள

வாத்தியங்கள் செல்லும். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இந்த வைபவம் இங்கு மிக விசேஷமாக நடக்கும். விஜயதசமியன்று கொலுவில் வைத்த அம்பாள் சிலையை, பரிசலில் எழுந்தருளச் செய்வர்.

அதிசயத்தின் அடிப்படையில்: கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் அத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம்


ஆன்மீகச் சிந்தனை மலர் :

நல்லதை மட்டும் பாருங்கள் - சிவானந்தர்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும்
தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.


வினாடி வினா :-

வினா: இந்திய அரசியலமைப்பை அமைக்கப் பரிந்துரை செய்த கமிட்டி எது?

விடை : கேபினட் கமிஷன் - 1946
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 389.



இதையும் படிங்க

சீரற்ற இதயத்துடிப்பு : புதிய கருவி அறிமுகம்.

சென்னை,நவ.29: சீரற்ற இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் நவீன கருவி அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பல்லோ குழுமத்தின் செயல் தலைவர் ஆர்.பாசில், இதய சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் ஐ.சத்யமூர்த்தி, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேசன், புதிய கருவி குறித்து டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியர் யூஜின் டொனார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

இதயத்திலுள்ள மின் உந்துவிசைகள் சரியாக செயல்படாததால், இதயம் மிக வேகமாக அல்லது மிக மெதுவாக முறையற்ற வகையில் துடிக்கிறது. இந்தியாவில் சுமார் 80 லட்சம் பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறான இதயத் துடிப்பைக் கொண்டுள்ள நோயாளிகளுக்கு அதற்கு எதிரான மருத்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களில் 50 சதவீதத்தினருக்கு மருந்துகள் பயனளிப்பதில்லை. அல்லது தாங்க முடியாத பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இந்த குழப்பங்களை நீக்குவதற்காக புதிய பரிசோதனை கருவி அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கருவியின் மூலம் இதயத்தின் வரைபடத்தையும், அதன் மின் செயல்பாட்டையும் 3டி முறையில் டாக்டர்கள் கண்காணிக்க முடியும். இதனால் இதயத்தின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ரேடியோ ஃபிரிக்குவன்சி ஆற்றலை செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்னையை பெரும்பாலும் குணப்படுத்திவிடலாம் என்று தெரிவித்தனர்.




நன்றி - தின மலர் , தின மணி, சமாசார்.

Monday, November 29, 2010

இன்றைய செய்திகள். - நவம்பர் - 29 - 2010.







உலகச் செய்தி மலர் :

* தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி-ஏவுகணைகளை நிறுத்தும் வட கொரியா

இயோன்பியாங்: வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா.

தென் கொரிய தீவு மீது வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன.

இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் தனது நிலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளது வட கொரியா.

இந்த நிலையில் பிரச்சினையைத் தணித்து அமைதியை நிலை நாட்ட முயற்சிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது.

இதுதொடர்பாகதென் கொரிய அதிபர் லீ மியூங் பாக்கை சீனக் குழு சந்தித்துப் பேசியது.

கொரிய பிரச்சினையில் இதுவரை சீனா நேரடியாக தலையிட்டதில்லை. அதேசமயம், வட கொரியாவின் அத்துமீறல்களை அது கண்டித்ததும் இல்லை. ரஷ்யாவைப் போல வட கொரியாவின் பக்கமே சீனாவும் நிற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை சீனா எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதையநெருக்கடியான நிலையில், வட கொரியாவுக்கு சீனா அறிவுரை கூறி அடக்கி வைக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளதால் போர் மூளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.


* நக்ஸல் பிரச்னைக்கு அமைதியான தீர்வு: இந்தியாவுக்கு பிரசண்டா கோரிக்கை

காத்மாண்டு, நவ.28: நக்ஸல் பிரச்னைக்கு அமைதியான முறையில் இந்திய அரசு தீர்வு காணவேண்டும் என்று நேபாள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசண்டா கூறினார்.
இதுகுறித்து காத்மாண்டுவில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் அவர் பேசியதாவது:

சமீபத்தில் இந்தியாவில் உள்ள நக்ஸலைட்டுகள் மீது தேடுதல் வேட்டையை இந்திய அரசு துவக்கியுள்ளது. பசுமை வேட்டை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் இதை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்திய அரசு முன்வரவேண்டும். இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட் இயக்கங்களை அழைத்துப் பேசவேண்டும்.

அதை விடுத்து அவர்களை தேடுதல் வேட்டை என்ற பெயரில் அழிக்கக்கூடாது.
நக்ஸலைட் தலைவர் ஆசாத்தைக் கொன்றதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நக்ஸலைட் இயக்கத்துக்கு முக்கிய எதிரியே இந்தியாதான் என்றார் அவர்.

* தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை எஸ்.எம். கிருஷ்ணா

கொழும்பு நவ. 28: இலங்கையில் 4 நாள் சுற்றுப் பயணம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழர் தேசிய கட்சித் தலைவர்களை சந்திக்காமலேயே தில்லி திரும்பினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுக் கட்சி என்று கருதப்படும் தமிழர் தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களை கொழும்பில் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மதியமும் சந்திப்பு நடைபெறவில்லை. அமைச்சர் கிருஷ்ணா அம்மன்தோட்டாவில் இருந்து நேராக கொழும்பு விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி திரும்பி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டதாக தமிழர் தேசிய கூட்டணி கட்சி எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரா தெரிவித்தார்.


* ரகசியங்களை வெளியிட்ட விக்கி லீக்ஸ் இணையதளம்

நியூயார்க் : விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.



தேசியச் செய்தி மலர் :

* பார்லிமென்ட் இயங்க அரசு நடவடிக்கை இழுபறி : அத்வானியுடன் பிரணாப் பேசியும் பலனில்லை

புதுடில்லி : பார்லிமென்ட் முட்டுக்கட்டை நிலைமையை அகற்றி, அதை சீராக இயங்கச் செய்ய அரசு தரப்பில் நேற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்தலைவர் அத்வானி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருந்தும் எந்த பலனும் இல்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால், இழுபறி நிலைமை தொடர்கிறது.


* இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா

புது தில்லி, நவ. 28: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. எனினும் இது தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யமுடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

  இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  இலங்கையின் வடக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் அங்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.

  விவசாயம், வீட்டுவசதி, தகவல் தொடர்பு, மறுகுடியமர்வு உள்ளிட்டவற்றில் இந்தியா சார்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. இலங்கை அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறதோ, அதைப் பொறுத்தே பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியும். தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.

  அதிபர் ராஜபட்சவுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டில் பிரதமர் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு அவர் எப்போது செல்வார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

* கறுப்புப் பணம் எவ்வளவு? கணக்கிட அரசு உத்தரவு

புது தில்லி, நவ. 28: இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிடுமாறு தேசிய பொது நிதியியல் திட்ட அமைப்பு, இந்திய புள்ளியியல் அமைப்பு, தேசிய பொருளாதார ஆய்வுக் குழு, தேசிய நிதி மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுக்கு நிதியமைச்சர் பிரணாப் கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்று இந்திய பொருளாதாரம் குறித்து தங்களது அறிக்கையை வெளியிட்டது. அதில் 1948 முதல் 2008-ம் ஆண்டுவரை சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கறுப்புப் பண மதிப்பை கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* செஞ்சியில் ராஜாதேசிங்கு விழா: டிசம்பர் 1-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், நவ. 28: செஞ்சியில் நவம்பர் 29, 30-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ராஜாதேசிங்கு விழா, நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தெரிவித்தார். இரண்டு நாள்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.



* சென்னையில் கண்ணைக் கவரும் செம்மைப் பூங்கா.

கண்ணைக் கவரும் பசுமையான தாவரங்களாலும், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கே தன்வசம் ஈர்த்து வருகிறது சென்னையில் புதிதாக அமையப்பெற்ற செம்மொழி பூங்கா.
 சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றான கதீட்ரல் சாலையில் அமைந்துள்ளது இந்த செம்மொழி பூங்கா.

 எழில்மிகு முகப்பு

சென்னை நகரின் மற்ற பூங்காக்களை போலவே ஆங்காங்கே மரங்களும், செடிகளும், சில இடங்களில் புல் தரைகளும் இருக்கும் என நினைத்து வருபவர்களை இங்கு அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு முகப்பு தோற்றமே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

மிக அரியவகை செடிகளாக அறியப்படும் பிலோடென்ட்ரான் சிங்கோனியம், ஓப்பியோபோகான் உள்ளிட்ட 35 வகையான திசு வளர்ப்பு செடிகளைக் கொண்டு செங்குத்தான வடிவத்தில் அமைந்துள்ளது பூங்காவின் முகப்பு.

.92 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா முழுவதையும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள், மலர் வகைகள் அலங்கரித்துள்ளன. பூங்காவுக்குள் நுழைந்ததும் அழகிய புதர் செடிகளால் ஆன தோட்டம் கண்களை குளிர்ச்சியடைய செய்கிறது. மா, புளி, சவுக்கு, சப்போட்டா என பல்வேறு வகையான மரங்கள் தென்படுகின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த பொன்சாய் மரங்களும் பூங்கா முழுவதும் ஓங்கி நிற்கின்றன.

 ரோஜா, மல்லிகை, பாரிஜாதம் உள்ளிட்ட நறுமண மலர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள பல்வேறு வாசனை
மலர்களையும், செடிகளையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது

* தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்.

வர்த்தகச் செய்தி மலர் :

* டில்லியில் பீர் விற்பனை அமோகம்

புதுடில்லி: டில்லி மக்களுக்கு பீர் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.இதனால் அம் மாநிலத்தில் பீர் விற்பனை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஒயின் விற்பனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2009-10 ம் ஆண்டில் ரூபாய் 11.78 கோடி அளவிற்கு பீர் விற்பனையாகியுள்ளது. அதேசமயம் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது விற்பனை ரூபாய் 9.56 கோடியாக உள்ளது என கலால் துறையினர் தெரிவித்தனர்.


விளையாட்டுச் செய்தி மலர் :

விராட் கோலி 105; 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

குவாஹாட்டி, நவ.28: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி 105 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங் 42 ரன்களுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு வீரர்களின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததது.

ஸ்கோர் போர்டு
இந்தியா:
முரளி விஜய் (சி) ஹாப்கின்ஸ் (பி) டஃபி 29
கெüதம் கம்பீர் (சி) ஹெü (பி) மெக்கே 38
விராட் கோலி (சி) ஹெü (பி) மெக்கே 105
யுவராஜ் சிங் (சி) ஹாப்கின்ஸ் (பி) டஃபி 42
சுரேஷ் ரெய்னா (சி) ஹெü (பி) மில்ஸ் 13
யூசுப் பதான் (சி) டெய்லர் (பி) மில்ஸ் 29
ரித்திமன் சாஹா (சி) ஹாப்கின்ஸ் (பி) மெக்கே 4
அஸ்வின் (சி) & (பி) மெக்கே 0
ஆசிஷ் நெஹ்ரா (ரன் அவுட்) டெய்லர் 0
ஸ்ரீசாந்த் (சி) ஹெü (பி) மில்ஸ் 4
முனாஃப் படேல்   அவுட் இல்லை 1
உபரி 11
மொத்தம் (49 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 276


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில்.

மூலவர் - மணக்குள விநாயகர்
தீர்த்தம் - மூலவருக்கு மிக அருகில் உள்ளது.
பழமை - 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - மணக்குளத்து விநாயகர்
ஊர் - புதுச்சேரி
மாவட்டம் - புதுச்சேரி
மாநிலம் - புதுச்சேரி

தல சிறப்பு :-

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. கிணற்றின் மீதுதான் மூலவர் : தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார்.

பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

 தல பெருமை :-

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே.

உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.

விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே

 தல வரலாறு :-

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.




ஆன்மீகச் சிந்தனை மலர் :

* இங்கு இரண்டே ஜாதி தான் ! - அவ்வையார்.

* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்ளை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது.

* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.

* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.

வினாடி வினா :

* உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் எது ?

* உலகிலேயே மிகப் பெரிய விமானம் எது?

விடை - மிகப்பெரிய விமான நிலையம் - காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் -  ரியாத்

* மிகபெரிய விமானம் - எரோலாப்ட், - ரஷிய விமானம்.



இதையும் படிங்க :

கோடீஸ்வரர்களை உருவாக்கும் போது ஊழல் அதிகரிப்பதை தடுக்க முடியாதா ?

"மோசமான நிர்வாகம் கொண்ட அரசு என்றால் ஊழல் அதிகரிக்கும்' என்று சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எம். ஆர். வெங்கடேஷ் கூறுவது மேம்போக்காக பார்த்தால் வெறுப்பு பேச்சு என்று தோன்றும். ஆனால், அவர் படைத்திருக்கும் "சென்ஸ், சென்செக்ஸ் அண்ட் சென்டிமென்ட்ஸ்' என்ற ஆங்கில நூல் பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.

வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்து பெரிய கம்பெனிகளுக்கு ஆலோசனை தரும் வெங்கடேஷ் இயல்பாகவே இந்திய கலாசாரம், நற்பண்புகளில் அக்கறை காட்டுபவர். அதே சமயம் பொருளாதார தாராளமயத்தை ஆதரிக்கிறார். ஆனால், உலக அளவில் இணைக்கப்பட்ட பொருளாதார நடைமுறைகள் எத்தனை இடங்களில் கறுப்புப் பணத்தை ஒளித்து வைக்க வசதியாகிவிட்டது என்பதை அலசுகிறார். அதை மீட்க தேவைப்படும் சட்டதிட்டங்கள் , நடைமுறைகள் பற்றியும் இந்த நூலில் அலசுகிறார்.

பொதுவாக பாதுகாப்பான சேமிப்பு என்ற அணுகுமுறையைக் கலாசாரமாகக் கொண்ட இந்தியா தற்போது இந்தச் சூழலில் மாட்டிக் கொண்டிருப்பதை அவர் தன் நூலில் விளக்கிய விதம் பற்றி கூறியதாவது: நம்நாட்டிற்கு அன்னிய மூலதன முதலீடு வரும் அளவு இன்னமும் அதிகரிக்கவில்லை என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது பணம் வரும் நடைமுறைகள் அபாயமானவை. மொரீஷியஸ் நாட்டின் வழியாக, துபாய் வழியாக வரும் பணம் பற்றி புதிதாக ஆய்வு செய்ய வேண்டும். நமது பணமே வேறு வழியில் வரிகட்டாமல் சென்று இங்கு திரும்பி வருகிறது. அதுவும் "பங்கேற்பு பத்திரம்' என்ற "பார்டிசிபேட்டரி நோட்' பற்றி இன்னமும் வரன்முறை ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வரும் அன்னிய மூலதன அளவு மொத்த அளவில் 45 சதவீதம் நம்நாட்டில் இருக்கும். ஆனால், சிங்கப்பூரில் இதன் அளவு 9 சதவீத அளவு மட்டுமே. எந்த சந்தைப்படுத்தும் நடைமுறையிலும் புழங்குகிற பணம் சந்தேகத்திற்குரிய பணமாக இருக்கிறது. என் நூலில் ஜான் கிறிஸ்டன்ஸ் என்ற பொருளாதார நிபுணர் முன்னுரை எழுதியிருக்கிறார்.

அதில் அவர், "இந்தியாவில் இருந்து 2500 கோடி டாலர் வரை இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணம் ஒவ்வொரு ஆண்டும் வெளியே போகிறது' என்பதை பதிவு செய்கிறார். கணக்கில் காட்டமல் பெரியஅளவு தொகை சந்தையில் நுழையும் போது அது "காசினோ'என்ற சூதாட்ட நடைமுறை போலஆகிவிடும். சத்யம், குளோபல் டிரஸ்ட் வங்கி, அவர்களுக்கு உதவிய பிரைஸ்வாட்டர்ஸ் கூப்பர்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகள் இதற்கு சாட்சி. இப்படியே போனால் "போர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியாகும் கோடீஸ்வரர்கள் பட்டியல் இனி அதிகரிக்கும். அதனால் பாமர மனிதனுக்கு, மத்திய தர மக்களுக்கு பயன்இல்லை. லஞ்சப் பணம் வெளிநாடுகளில் உள்ள சில இடங்களில்சேமிக்கப்படுகிறது. இது லட்சக்கணக்கான கோடிகள் என்பது பரவலாகப் பேசப்படுகிறது.



நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

Sunday, November 28, 2010

இன்றைய செய்திகள். - நவம்பர் - 28 - 2010.







உலகச் செய்தி மலர் :

* 50 நாட்களுக்கு முன் பசிபிக் கடலில் மாயமான 3 வாலிபர்கள் உயிருடன் மீட்பு

ஆக்லாந்து: படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன 3 வாலிபர்கள் 50 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள டோகிலே பகுதியைச் சேர்நதவர்கள் சாமு பேரஸ், பிலோ பிலோ, எட்வர்டு நாசவு. 15 வயதாகும் அம்மூவரும் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடந்த படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமானார்கள். இதையடுத்து மீட்பு குழுவினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

50 நாட்களாக அயராது தேடி வந்த அவர்கள் இறுதியில் பிஜி என்னும் சிறிய தீவில் அந்த 3 வாலிபர்களையும் கண்டுபிடித்தனர். பின்பு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இத்தனை நாட்களாக தீவில் இருந்த தேங்காயை சாப்பிட்டும், மழை நீரைக் குடித்தும் உயிர் வாழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


* ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை நியாயமாக நடந்து கொள்ளும்: எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை

கொழும்பு, நவ.27: ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இந்தியாவின் புதிய தூதரகத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்தார்.

நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமே நிரந்தரத் தீர்வை காண முடியும் என்பதை இலங்கை அரசிடம் உறுதியாக தெரிவித்துவிட்டோம். இதற்கான நடவடிக்கையை அதிபர் ராஜபட்ச விரைந்து மேற்கொள்வார் என்றே நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: சிரியா ஆதரவு

டமாஸ்கஸ், நவ.27: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க சிரியா முழு ஆதரவு தரும் என அந்நாட்டு அதிபர் பஷீர் அல் ஆசாத் உறுதியளித்துள்ளார்.
 இந்திய குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியபோது அவர் இந்த உறுதியை அளித்தார்.

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்த அவர் அனைத்துவகை பயங்கரவாதச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்தார்.  முன்னதாக, அதிபர் மாளிகையில் இந்திய குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
 இந்திய தொழில் நிறுவனங்கள் சிரியாவில் தொழில்தொடங்க உதவும்வகையில் அந்நாட்டிற்கு கடன்திட்டம் ஒன்றை பிரதிபா பாட்டீல் அறிவித்துள்ளார்.

தேசியச் செய்தி மலர்


* நீரா ராடியா ஒப்புதல்: ரூ 60 கோடி வாங்கினேன்.

புதுதில்லி,நவ.27: ""2 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக, ஆ. ராசாவுடன் பேசியிருக்கிறேன், இந்த விவகாரத்தில் என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்ற 60 கோடி ரூபாயை ஆலோசனைத் தொகையாகப் பெற்றிருக்கிறேன்'' என்று நீரா ராடியா வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தும் நீரா ராடியா தில்லியில் பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். அதற்காக அவர்களிடம் ஆலோசனைக் கட்டணம் பெறுகிறார். அவருடைய வாடிக்கையாளரான டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் கிட்டுவதற்காக தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுடன் பேசியிருப்பதையும், தான் கூறிய ஆலோசனைகளுக்காக ரூ.60 கோடியைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டிருகிறார்.

* கைகா அணுமின் நிலைய 4வது பிரிவில் உற்பத்தி தொடக்கம்


கார்வார், நவ. 27: கைகா அணுமின் நிலையத்தின் 4-வது பிரிவில் மின் உற்பத்தி சனிக்கிழமை தொடங்கியது.

வட கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகே கைகா அணுமின் நிலையம் உள்ளது. இந்திய அணுமின் கழகத்தின் கட்டுப்பாட்டில் 2000 முதல் இந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. மூன்று பிரிவுகள் ஏற்கெனவே தலா 220 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன.

இந் நிலையில், நான்காம் பிரிவு கட்டுமானப் பணி ஏற்கெனவே முடிவடைந்திருந்தது. எனினும், அணுமின் நிலையத்துக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி துவங்காமல் இருந்தது.
இதனிடையே சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு நான்காம் பிரிவில் மின்சார உற்பத்தி தொடங்கியது. இதில் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* உள்துறை அமைச்சக தகவலை கசியவிட்ட அதிகாரி சஸ்பெண்ட்

புது தில்லி, நவ.27: உள்துறை அமைச்சகத்தின் ரகசிய தகவலை கசியவிட்ட மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ரவி இந்தர் சிங் சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மத்திய பணியாளர் துறையும் விரைவில் அவருக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் இயக்குநராகப் பணியாற்றியவர் ரவி இந்தர் சிங். இந்தப் பிரிவால்தான் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் அனைத்தும் கையாளப்படும்.

இந்நிலையில் இந்தப் பிரிவில் கையாளப்பட்ட முக்கியமான ரகசிய தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு ரவி இந்தர் சிங் அளித்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரை தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவினர் கடந்த ஒரு மாதகாலமாக தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். தில்லியில் உள்ள அவரது இல்லமும், அலுவலகமும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன. இதில் அவர் ரகசியத் தகவல் அளித்தது உறுதியானது. இதையடுத்து அவரை கடந்த 23-ம் தேதி கைது செய்தனர்.

அவரிடம் இப்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவரலாம் என்று தில்லி போலீஸôர் நம்புகின்றனர்.

மாநிலச் செய்தி மலர்

* சென்னையில் ஜனவரி 3-ல் இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் மன்மோகன் தொடங்கி வைக்கிறார்

சென்னை, நவ. 27: சென்னையில் வரும் ஜனவரி 3-ம் தேதி 98-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார்.
  சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாநாடு ஜனவரி 7-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதையொட்டி "பிரைட் ஆஃப் இந்தியா' என்ற அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியும் நடைபெறும். மாநாடு தொடக்க விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
  இதுகுறித்து, இந்திய அறிவியல் மாநாட்டின் பொதுத் தலைவர் கே.சி. பாண்டே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. சத்யநாராயணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

  98-வது இந்திய அறிவியல் மாநாடு, இந்திய பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி,  சிறப்பான அறிவியல் ஆராய்ச்சி என்ற மையப் பொளுடன் நடைபெற உள்ளது. இதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள், துறை சார் வல்லுநர்கள் உள்பட 7,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

* ஆங்கில வழிக் கல்வி: அனுமதி பெறாத 200 பள்ளிகளை முறைப்படுத்த பள்ளிக் கல்வித் துறை சிறப்பு நடவடிக்கை

சென்னை, நவ.27: தமிழகம் முழுவதும் உரிய அனுமதியில்லாமல் ஆங்கில வழிக் கல்வி அளித்து வந்த 200 பள்ளிகளை முறைப்படுத்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 1,600 சுயநிதி, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியோடு, உரிய அனுமதிபெற்று ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மேற்கொண்ட ஆய்வில், இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உரிய அனுமதியின்றி ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிப்பது தெரியவந்தது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* கண்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் !

இந்தியாவில் வேகமாக பரவிவரும் நோய்களில் ஒன்று, நீரிழிவு நோய். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா இருக்கும். 1995ம் ஆண்டு, 1.8 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2030ல், எட்டு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
* வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, நகர்புறத்தில் 28 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 5 சதவீதமாகவும் உள்ளது. இவர்களில் 18 பேர், நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

* நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, தங்கள் நோய் பற்றி தெரிந்திருப்பதில்லை.

* நீரிழிவு நோயாளிகளில் மிகவும் குறைந்தவர்களே, கண் பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

* கண் மருத்துவர்கள் அனைவரும், நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சையளிக்கும் பயிற்சி பெற்றவர் அல்லர்.
* ஒரு நீரிழிவு நோயாளிக்கு பார்வையிழப்பு ஏற்படும் அபாயம், நீரிழிவு நோய் அற்றவரை விட 25 மடங்கு அதிகம்.

* நீரிழிவு நோயானது, கண் பார்வையிழப்பு, இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு, நரம்புகள் பாதிப்பு மற்றும் உடல் ஊனம் விளைவிக்கும் அபாயமுடையது.

* சமச்சீரான உணவு, தேவையான உடற்பயிற்சி மற்றும் தகுந்த சிகிச்சை மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

வர்த்தகச் செய்தி மலர் :

* ரூ.51 லட்சம் கோடிக்கு "ஆன்-லைன்' வர்த்தகம்: விலை உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம்

சென்னை : மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை இன்று விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன், பட்ஜெட் நேரத்தில் மட்டும் தான் பொருட்களின் விலை உயர்வு இருக்கும். அதுவும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்காது. ஆனால், தற்போதுள்ள நிலையே வேறு மாதிரியாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விலை இருக்கிறது.

விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு, அதிகாரிகளோடு மட்டும் கலந்தாலோசிக்காமல் வேளாண் தொழிலாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்திட வேண்டும். நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும். ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்தாலே, பாதியளவு உணவுப் பொருளின் விலை குறைய வாய்ப்புண்டு, என்றார். சுதந்திரம் அடைந்ததும், இந்திய அரசு முதன்முதலில் எடுத்து கொண்ட முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாகும். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிகரற்ற நிலையை அடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய உணவு அமைச்சர், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்க தயங்குவதற்கான காரணம் என்ன என்பது பொதுமக்களின் கேள்வி.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆசிய விளையாட்டு: கண்கவர் நிறைவு விழா: சீனா மீண்டும் ஆதிக்கம்


குவாங்சு: ஆசிய விளையாட்டு போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன், இனிதே முடிந்தது. கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா' ஒளிவெள்ளம், ஆயிரக்கணக்கான கலைஞர்களின் ஆடல், பாடல் என நிகழ்ச்சிகள் களை கட்டின.

சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில், முதலிடம் பெற்ற சீனா 199 தங்கம் உட்பட மொத்தம் 416 பதக்கங்கங்கள் பெற்று, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 14 தங்கம் உட்பட 64 பதக்கம் வென்ற இந்தியா 6வது இடம் பிடித்தது.

கடந்த 16 நாட்கள் உலக ரசிகர்களை கட்டிப் போட்ட ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இதற்காக "பேர்ல்' நதிக் கரையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கில் நிறைவு விழா மிகச் சிறப்பாக நடந்தது. சீனாவின் தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. கண்கவர் வாணவேடிக்கை மற்றும் "லேசர் ÷ஷா' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பின் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்தியா சார்பில் ரவி திரிபாதி மற்றும் தான்யா குப்தா இணைந்து அசத்தலாக பாடினர். அப்போது பஞ்சாப் "பாங்கரா' உள்ளிட்ட இந்திய நடனங்களை கலைஞர்கள் ஆடினர்.

வீரர்கள் அணிவகுப்பை தொடர்ந்து, ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து வந்தன. வரும் 2014ல் அடுத்த போட்டியை நடத்த உள்ள தென் கொரியாவின் இன்ச்சியான் நகர நிர்வாகிகளிடம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கொடி ஒப்படைக்கப்பட்டது. பின் அதிர வைக்கும் வாணவேடிக்கைக்கு மத்தியில், ஆசிய விளையாட்டு ஜோதி அணைக்கப்பட்டு, போட்டிகள் முறைப்படி நிறைவு பெற்றன.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்.

மூலவர் - ராமர், ஆஞ்சநேயர்
பழமை - 1000 - 2000 வருடங்களுக்கு முன்
ஊர் - ஆலத்தியூர்
மாவட்டம் - மலப்புரம்
மாநிலம் - கேரளா

தல சிறப்பு :-

தையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.
 
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், இங்குள்ள கல்லில் கட்டிய திடலை தாண்டினால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாத்து ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை.

அத்துடன் குழந்தைகள் இரவில் தூங்கும் முன் "ஆலத்தியூர் அனுமானே நிம்மதியாக தூங்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

தல வரலாறு :-

கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலின் முலஸ்தானத்தில் ராமபிரான் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.

சீதையை தேடிப்போகும் தனது உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுத்து, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான், மூலஸ்தானத்தில் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். ராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சீதையை கண்டுபிடித்துவர ராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால ரகசியம் சொல்லும் போது,அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் மாறி நிற்பான். அந்த இடத்தில் லட்சுமணனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதிப்பகுதியாகிய இந்தப்பிரதிஷ்டையின் சந்தர்ப்பத்தால் தான் அனுமானுக்கு அதிக சக்தி கிடைத்திருக்கிறது.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பிறரை அவமதிக்காதீர் ! - இராமானுஜர்.

* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.

விடாடி வினா :

* தேர்தலின் போது இடது ஆட்காட்டி விரலில் தடவப்படும் மை எதனால் ஆனது ?

விடை - சில்வர் நைட்ரேட்டினால் ஆனது.


இதையும் படிங்க :




* அமைதியாக இருப்பது ஏன்? - மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகள் விளக்கம்.

தமிழரின் அரசியல் விடுதலை தமிழீழ தனியரசு அமைவதிலேயே உள்ளது. இதற்கு உலக சமூகம் வழி அமைத்துத் தரவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவீரர் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை:

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திர நாயகர்கள்.

அவலங்களின் மத்தியில் வன்னிமண்...

அடங்காப் பற்றாக வணங்காது தலை நிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத் தமிழினத்தின் வரலாற்றுப் பெருமை கூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலை பேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத் தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத் துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை.

நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்த மண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

இந்த வகையில் ஈழத் தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.

எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"




நன்றி - தின மலர், தின மணி, தட்ஸ்தமிழ்.

Saturday, November 27, 2010

இன்றைய செய்திகள்- நவம்பர் - 27 - 2010..




உலகச் செய்தி மலர் :

* தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது ? இலங்கை அமைச்சர் பதில்

கொழும்பு, நவ. 26: தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் விஷயம் பரிசீலனையில் உள்ளது என
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறினார்.

இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 17 ஆயிரம்
முதல் 20 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் அவர்களது சொந்த
இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள்.
தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விஷயத்தில் கருணாநிதி கூடுதல்
அக்கறை காட்டுகிறார். எனினும், தமிழர்கள் மறு குடியமர்வு விஷயத்தில் இலங்கை தீவிரமாக
உள்ளது என்றார்.

ராஜபட்சவுடன் கிருஷ்ணா சந்திப்பு: கூட்டுக் கூட்டத்துக்கு முன்னதாக, இலங்கை அதிபர் ராஜபட்சவை
எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்துப் பேசினார்.
ஆயுதமேந்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான
நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக வியாழக்கிழமை அளித்த
பேட்டியில் கிருஷ்ணா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


* போருக்கு வித்திடுகிறது தென் கொரியா: வட கொரியா எச்சரிக்கை

யோன்பியோங், நவ. 26: தனது நடவடிக்கைகளின் மூலம் போருக்கு தென் கொரியா வித்திடுகிறது என
வட கொரியா எச்சரித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள யோன்பியோங் தீவுகளின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ராக்கெட்
குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து சிறிது நேரம் பீரங்கிச் சண்டை
நடைபெற்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளுமே பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டன.

வட கொரிய ராணுவத்தினரும், மக்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
பயங்கரமான நெருப்பைப் பொழிய தயார் நிலையில் ராணுவத்தினர் உள்ளனர்.
மோதல்கள் அதிகமானால் அது போருக்கு வழிவகுக்கும். நெருப்புடன் விளையாட விரும்புபவர்கள்
அழிந்து போவார்கள் என அறிக்கையில் வட கொரியா தெரிவித்துள்ளது.

* இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்


கொழும்பு, நவ.26: இலங்கையில் போரினால் பாதித்த வடக்குப் பகுதியில் மூன்று ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ.1880 கோடியை அந்நாட்டுக்கு இந்தியா கடனாக வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். கிருஷ்ணா முன்னிலையில் கொழும்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

தேசியச் செய்தி மலர் :

* பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்.

பாட்னா, நவ. 26: பிகார் மாநிலத்தின் 32-வது முதல்வராக நிதீஷ் குமார் (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அவருக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆளுநர் தேவானந்த் கொன்வர் செய்துவைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுசீல் குமார் மோடி அமைச்சராகப் பதவியேற்றார். அவர் துணை முதல்வராக இருப்பார்.

இவர்களைத் தவிர்த்து ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 18 பேரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ராவின் மகன் நிதீஷ் மிஸ்ரா, அமைச்சரவை ஒருங்கிணைப்புத் துறை முதன்மைச் செயலர் அப்சல் அமானுல்லாவின் மனைவி பர்வீன் அமானுல்லா, அட்வகேட் ஜெனரலாக இருந்த பி.கே.சாஹி ஆகியோர் அமைச்சராகப் பதவியேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் சரத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

* கடலோர வழிகாட்டி புத்தகம் தயாரிக்கிறது கடற்படை

புது தில்லி, நவ. 26: மும்பை தீவிரவாத தாக்குதல்கள் போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் விதமாக கடலோர வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை தயாரித்து மாநில அரசுகளுக்கு வழங்க உள்ளது இந்திய கடற்படை

இந்த வழிகாட்டி புத்தகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்கள், அவற்றின் மக்கள் தொகை, மீனவர் கிராமங்கள், அவற்றின் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், படகு குழாம்கள் போன்றவை பற்றி விரிவான தகவல்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.

 மேலும் இதுவரை நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் மீனவர்களைப் பற்றிய தகவல்களை கடற்படை சேகரித்து உள்ளது. மும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு இந்த வழிகாட்டி புத்தகம் மாநில அரசுகளுக்கு உதவியாக அமையும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.


* வீட்டுக் கடன் ஊழலுக்கும் 2 ஜி முறைகேட்டுக்கும் தொடர்பு!- அம்பலமாகும் உண்மைகள்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுக்கும், வீட்டு வசதிக் கடன் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. அம்பலப்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றவை பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே.

தொலைத்தொடர்பு துறைக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லையே, எப்படி இந்த நிறுவனங்கள் புதிய தொழிலுக்கு வருகிறார்கள் என்று அப்போதே பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த 9 நிறுவனங்களும் தொடங்கப்பட்டு சில நாட்களே ஆகியிருந்தது முக்கியமானது. ஆனால் தொலைத் தொடர்பு லைசென்ஸ் பெற பல நூறு கோடி ரூபாயை இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் காட்டி இருந்தன.

சில நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,600 கோடியைக் காட்டின. மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை இந்த நிறுவனங்கள் எப்படி ஏற்பாடு செய்தன என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

இந் நிலையில் இந்த 9 நிறுவனங்களும் வீட்டு வசதிக் கடன் ஊழலிலும் சிக்கியுள்ளன. மெகா குடியிருப்புத் திட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளன. முறைகேடாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசியிலிருந்து பெறப்பட்ட அந்த பணத்தை ஆதாரமாகக் காட்டித்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு உரிமையை இந்த நிறுவனங்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த சிபிஐ உள்பட நாட்டின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மற்றும் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளன.

அரசு வங்கிகளில் பல ஆயிரம் கோடியை முறைகேடான வழியில் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அதை தாற்காலிகமாக கணக்கில் காட்டி 2 ஜி உரிமம் வாங்கியுள்ளன. இந்த முறைகேட்டின் அளவு ரூ. 45,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறாம்.

*பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

புதுடில்லி : எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.


மாநிலச் செய்தி மலர் :

* தமிழகம், புதுவையில் இன்று கனமழை.

சென்னை, நவ. 26: தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 வங்கக் கடலில் இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கன மழை நீடித்து வருகிறது.

 இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்,  புதுவையில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

 மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
 நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மணமேல்குடி 70; காரைக்கால், தஞ்சாவூர், வல்லம், கொடவாசல், மன்னார்குடி, நன்னிலம் 60; முத்துப்பேட்டை 50, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வலங்கைமான், கொள்ளிடம், சீர்காழி, கடலடி, பம்பன் 40; காட்டுமன்னார்கோயில், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அதிராமப்பட்டணம், மதுக்கூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, மயிலாடுதுறை, கமுதி, ராமநாதபுரம், மணியாச்சி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ஜெயங்கொண்டம், அருப்புக்கோட்டை 30.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* காய்கறி, பழங்கள் சாப்பிடுவோர் 40 சதவீதம் உயர்வு.

கோவை: ""சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் காய்கறி, பழங்கள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 30-40 சதவீதம் அதிகரித்து விட்டது. இதனால் உணவு உற்பத்தியை விட தோட்டக்கலை உற்பத்தி வரும் ஆண்டுகளில் அதிகரித்து விடும்,'' என்று டில்லி தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் எச்.பி.சிங் கூறினார். கோவை வேளாண் பல்கலையில் தாவர பல்லுயிர் பெருக்கம் மற்றும் நில எழிலூட்டுதல் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று மாலை துவங்கியது.  பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி பேசியதாவது: நகரங்களில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட 11 சதவீதம் பேருக்கு இன்று சர்க்கரை நோய் உள்ளதாகவும், கிராமப்புறங்களில் மூன்று சதவீத பேருக்கு மட்டுமே உள்ளதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆகவே நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயற்கை பூங்காக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.  இதற்காகவே பல்கலை சார்பில் ஆண்டுதோறும் பிளவர் ஷோக்களும் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.  இது தொடர்பான மாணவர் பரிமாற்றம் மற்றும் படிப்புக்காக சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார். டில்லி தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் எச்.பி.சிங் பேசியதாவது:  பூக்கள் நிறைந்த சூழலிலும்,இல்லாத சூழலிலும் 15 நாட்கள் வசித்தவர்கள் இடையே நடத்திய ஆய்வில், பூக்கள் நிறைந்த சூழலில் வசித்தவர்களின் திறன் 20 சதவீதம் உயர்ந்துள்ளதும் சர்க்கரை அளவு குறைந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. 


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* ஐபோன், ஐபாட் மூலம் தமிழ் கற்க புதிய சாப்ட்வேர்!

ஆஸ்டின்: ஐபோன்கள் மற்றும் ஐபாட் ஆகியவற்றின் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் கற்றுக் கொடுக்கும் புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஐம்கரா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் இன்று இந்தியர்கள் பரவி விட்டனர். குறிப்பாக தமிழர்கள் இல்லாத பகுதியே இல்லை என்று கூட கூறலாம்.

தமிழர்களும், இந்தியர்களும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் தமிழும், இந்திய மொழிகளும் இன்று உலகமயமாகியுள்ளன.

ஐம்கரா நிறுவனம் இதற்காகவே ஒரு விசேஷ அப்ளிகேஷன் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இது ஐபாட் மற்றும் ஐபோன்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை கற்றுத் தருகிறது.

நமக்கு நமது தாய்மொழியை கற்றுக் கொடுக்கிறது இந்த அப்ளிகேஷன். தமிழை எழுதவும், படிக்கவும் இந்த ஐம்கரா அப்ளிகேஷன் உதவுகிறதாம்.

எழுத்துக்களை சொல்லிக் கொடுக்க அடையாளங்களை (Symbols) இது பயன்படுத்துகிறது.

ஆடியோ-விஷூவல் வடிவில் உள்ள இது, தமிழ் மீதான அறிவை மேம்படுத்த விரும்புவோருக்கும் பேருதவியாக வந்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்களில் இதை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். தற்போது வந்துள்ள 1.0 வெர்சன், மொழிகளின் அடிப்படைகள் குறித்ததாக அமைந்துள்ளது. இருப்பினும் விரைவில் இதை மேலும் மேம்படுத்தி வெளியிடவுள்ளனராம்.

வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் இந்தியர்கள் தங்களது தாய் மொழியை தங்களது பிள்ளைகளுக்கு தெளிவாக, சரியாக சொல்லித் தர இந்த அப்ளிகேஷன் உதவும் என்கிறது ஐம்கரா.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிவு

மும்பை, நவ.26- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிந்து 19,136 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், மஹேந்திரா அன் மஹேந்திரா, பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
டிசிஎஸ், சிப்லா, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஒஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து 5,751 புள்ளிகளில் முடிவடைந்தது.



விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆசிய விளையாட்டு : ஒரே நாளில் 4 தங்கம் 

குவாங்ஜெü, நவ.26: சீனாவின் குவாங்ஜெü நகரில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை இந்தியா ஒரே நாளில் 4 தங்கம் வென்றது.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

சாதனை: குவாங்ஜெü ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் விளையாட்டு சாதனையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. 1982-ம் ஆண்டு தில்லியில் நடந்த போட்டியில் 13 தங்கங்களை வென்றதே ஆசிய விளையாட்டில்   இந்தியாவின் அதிகபட்ச சிறப்பாக இருந்தது. இந்த ஆசிய விளையாட்டில் 14 தங்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இந்தியாவுக்கு 14-வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலத்துடன் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்போது மொத்தம் 64 பதக்கங்களுடன் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் போட்டியில்தான் இந்தியா அதிக அளவு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஒரே நாளில் 4 தங்கம்: வெள்ளிக்கிழமை நடந்தப் போட்டிகளில் மட்டும் இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

* செஸ்: ஆடவர் அணிக்கு வெண்கலம்

குவாங்ஜெü, நவ.26: ஆசிய விளையாட்டில் செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிக்கிழமை வெண்கலம் வென்றது. செஸ்ஸில் இந்தியா வெல்லும் 2-வது பதக்கம் இது. முன்னதாக, மகளிர் தனிநபர் பிரிவில் ஹரிகா துரோணவள்ளி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
  
கிருஷ்ணன் சசிகிரண், சூரிய சேகர் கங்குலி, ஜிஎன் கோபால், பி அதிபன் ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை நடந்த 9-வது (கடைசி) சுற்றில் ஈரான் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வென்று போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் சீன அணி 3.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் பிலிப்பின்ûஸ வீழ்த்தியது. இதையடுத்து, சீனா தங்கமும், பிலிப்பின்ஸ் வெள்ளியும் வென்றன. 3-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்

மூலவர் - வீரபத்திரர் [ ராஜராயுடு ]
உற்சவர் - கல்யாண வீரபத்திரர்
தாயார் - பத்ரகாளி
ஆகமம் - வீரசைவாகமம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - ராஜவீடு
ஊர் - ராயசோட்டி
மாவட்டம் - கடப்பா
மாநிலம் - ஆந்திர பிரதேசம்

தல பெருமை :- 

மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும்.  
   
பயம் நீங்க, மனக்குழப்பம் தீர வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்ளலாம்

சடாரி சேவை: ராஜகோபுரத்துடன், வீரபத்திரருக்கென பிரதானமாக அமைந்த பெரிய கோயில் இது. மூலஸ்தானத்தில் வீரபத்திரர் அருகில் தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறான். வீரபத்திரருக்கு வலப்புறத்தில் மாண்டவ்யர் பூஜித்த சிவலிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர். வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீர கோலமாகவும் காட்சி தருகிறார். பெருமாள் தலங்களைப் போல, இங்கும் வீரபத்திரரின் பாதம் பொறித்த சடாரியால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. வெற்றிலையை பிரதான பிரசாதமாகத் தருகின்றனர்.

அம்பாள் அருகில் நந்தி: ராஜகோபுரத்திற்கு வெளியில் விமானத்துடன் கூடிய தனி மண்டபத்தில் நந்தீஸ்வரர் இருக்கிறார். வீரபத்திரர் சன்னதி எதிரில் சிவன், வீரபத்திரர் இருவருக்குமாக வீர நந்தி, சிவ நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. இந்த இரண்டு நந்திகளும் சன்னதியிலிருந்து விலகியிருப்பது வித்தியாசமான அமைப்பு. பத்ரகாளி சன்னதி அருகிலும் ஒரு நந்தி இருக்கிறது.

சாதத்தை சிதறடிக்கும் நிகழ்ச்சி: சிவராத்திரியை ஒட்டி 11 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. எட்டாம் நாளில் தட்சன் வதம் வைபவம் நடத்தப்படுகிறது. அப்போது வீரபத்திரர் சன்னதி எதிரில் 365 படி சாதம், பூசணிக்காய், அதிரசம், கிழங்கு ஆகியவற்றை மலை போல குவித்து, வீரபத்திரரிடம் உள்ள கத்தியால், அன்னத்தை (சாதம்) கிளறி சன்னதி முழுவதும் சிதறடிக்கின்றனர்.வீரபத்திரர், தட்ச யாகத்தை துவம்சம் செய்ததன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த அன்னமே பிரசாதமாக தரப்படும். இந்நிகழ்ச் சியின்போது மட்டும் வீரபத்திரருக்கு நெற்றிக்கண் வைக்கப்படுகிறது.

தல வரலாறு :

தன்னை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதால் சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். யாகத்தை அழித்தபின்பும் வீரபத்திரரின் உக்கிரம் தணியவில்லை. இந்நேரத்தில், மாண்டவ்ய மகரிஷி என்பவர், வீரபத்திரரின் தரிசனம் வேண்டி சிவலிங்கம் அமைத்து தவமிருந்தார். வீரபத்திரர் அவருக்கு உக்கிரமாக காட்சி கொடுத்தார்.இதைக்கண்ட மகரிஷி அம்பிகையிடம் அவரைச் சாந்தப்படுத்தும்படி வேண்டினார். அதன்படி அம்பாள் பத்ரகாளியாக இங்கு வந்தாள். வீரபத்திரர் சாந்தமானார். இருவரும் தான் தவமிருந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டினார் மாண்டவ்யர். அத்தலமே தற்போதைய ராயசோட்டி. பிற்காலத்தில் மன்னன் ஒருவன், இங்கு கோயில் எழுப்பினான்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆசையினால் வரும் துன்பம் - ஆதி சங்கரர்.

* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. 



இதையும் படிங்க :

கூகையைக் குளிர்வித்த தோழி !

சங்க இலக்கியங்களுள் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலித்தாய் முதலிய பாத்திரங்கள் தனித்தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதைக் காண்கிறோம். ஆனால், தோழி மட்டுமே தலைவிக்குத் தாயாகவும், செவிலித் தாயாகவும் சிறப்புத் தகுதி பெற்று பரிணமிக்கிறாள்.

தலைவனைக் காணாதபோது தலைவிக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து தலைவி மீண்டுவர, பல வழிமுறைகளைக் கையாண்டு தலைவிக்கு உற்ற துணையாயிருப்பவள் தோழி. அவ்வாறு தலைவனைக் காணாதபோது தலைவியின் உடல் நோய் (பசலை) கண்டு வருத்தப்படுமே என்ற தாய்மையின் உள்ளத்தோடு தலைவனின் வருகைக்காக கூகையின் தடையைத் தகர்க்கிறாள். மேலும், கூகையின் அலறலால் வீட்டில் உள்ள அனைவரும் விழித்து எழுந்து விட்டால், தலைவிக்குக் கேடு சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு செவிலித்தாயின் அக்கறையோடு தலைவியைக் காப்பாற்றுகிறாள்.

இவ்வாறாகத் தோழியின் பண்பும், பங்கும், தலைவிமேல் கொண்ட அன்பும், சமயோஜித புத்தியும், அறிவுத் திறனும், வீரமும் அகப்பாடல்களுள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், பெருந்தேவனார் என்ற புலவர் இயற்றிய, நற்றிணை - குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று தோழியின் பண்பை மிகவும் சிறப்பாக விளங்குகிறது.
தலைவியைக் காண தலைவன் இரவுக்குறியிடத்துவரும்போது, கூகையானது

(கோட்டான்) தனது கடூர குரலை எழுப்பி, வீட்டில் உள்ள அனைவரையும் துயில் களையச் செய்கிறது. இதனால், தலைவனின் வருகை தடைபடுகிறது. தலைவியைக் காண முடியாமல் தலைவன் வந்தவழியே திரும்புகிறான். தலைவனைக் காண இயலாமல், அத்துன்பத்தைத் தாங்கமாட்டாது தலைவி வருத்தமுற்று முகம் வாடுவதைக் கண்ட தோழி, கூகையிடம், "" ஏ! கூகையே! எங்கள் ஊரின் முகப்பிலுள்ள பொய்கையின் அருகில் கடவுள் வீற்றிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து வளைந்த வாயையும், தெளிந்த கண்களையும், கூரிய நகத்தையும் வைத்துக்கொண்டு பறையோசை போன்ற உன் குரல் ஒலியால் பிறரை வருத்துகிறாய். நாங்கள் ஆட்டிறைச்சியோடு நெய்ச்சோற்றினையும், வெள்ளெலியின் சூடான இறைச்சியையும் உனக்கு நிறையக் கொடுப்போம். எம்மிடம் அன்பு நிறைந்த எம் காதலர் வருவதை விரும்பி, இரவில் கூட துயில்கொள்ளாமல் உள்ளம் சுழன்று வருந்துகிறோம். அவ்வேளையில், யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக உன் கடுமையான குரலை எடுத்துக் குழறி எங்களை வருத்துகிறாய். அவ்வாறு எங்களை வருத்தாதே'' என்று கூறுகிறாள்.

கூகையின் ஒலியால் தலைவனைக் காணமுடியாமல் வருத்தமடையும் தலைவியின் வருத்தம் கண்டு பொறுக்காத தோழி, கூகையிடம் இவ்வாறு தாழ்மையுடன் கெஞ்சி, கூகையைக் குளிர்விக்கிறாள். கூகையிடம் தோழி கெஞ்சிக் குளிர்விக்கும் பாடல் வருமாறு:

""எம்மூர் வாயில் ஒண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாங் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே''
(நற்றிணை - பா 83]




நன்றி - தின மலர் , தின மணி.                                                          
                                                                       

Friday, November 26, 2010

இன்றைய செய்திகள்- நவம்பர் - 26 - 2010..









உலகச் செய்தி மலர் :

* “அக்னி-1 “ ஏவுகனை சோதனை வெற்றி

பாலசூர் (ஒரிசா), நவ.25: அணு குண்டுகளை ஏந்திச் சென்று தாக்கக்கூடிய அக்னி-1 ஏவுகணை
வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசூரில் உள்ள வீலர் தீவிலிருந்து
அக்னி-1 ஏவுகணை, வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அக்னி-1 ஏவுகணை தரையிலிருந்து 700 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த சோதனை எவ்வித இடையூறின்றி, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று ஒருங்கிணைந்த
சோதனைப் பிரிவு (ஐடிஆர்) இயக்குநர் எஸ்.பி. தாஸ் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே, இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. திட
எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை வியாழக்கிழமை காலை 10.10 மணி அளவில் ஏவி
சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனையின்போது அனைத்து நிகழ்வுகளும் கன கச்சிதமாக இருந்ததாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாகிறார் தமிழ் வம்சாவளிப் பெண்

வாஷிங்டன், நவ. 25: அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை
வழக்கறிஞர்) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர்.
சியாமளா, அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆப்பிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.
இந்த, தம்பதிகளின் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல்
வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து,


* காந்திய கொள்கைகளை மீறி மியான்மருடன் இந்தியா உறவு: ஆங் சான் சூகி குற்றச்சாட்டு

யாங்கூன்: மியான்மரின் ராணுவ அரசுடன் உறவு வைத்திருப்பதால் காந்தியக் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாக மியான்மர் ஜனநாயகத் தலைவி சூகி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா மியான்மர் ராணுவ அரசுடன் உறவு கொண்டாடுகிறது. குறிப்பாக வர்த்தக உறவில் இரு நாடுகளும் அதிக நெருக்கமாக உள்ளன. இது எனக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியா காந்தி, நேருவின் கொள்கைகளை மீறிவிட்டதாகவே எண்ணுகிறேன். இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மியான்மரில் ஜனநாயகம் மலர இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும். அதற்கு இதுவே நல்ல தருணம். இந்தியாவுடன் இணைந்து செயல்படக் காத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.

சூகி ஹீமாச்சல பிரசே மாநிலத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸில் இரண்டு வருடம் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் விவகாரத்தில் இந்தியா மெளனமாக இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார், அதுவும் இந்திய நாடாளுமன்றத்திலேயே அதுகுறித்து அவர் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

**அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : எஸ்.எம். கிருஷ்ணா

*  இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா

தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது.
இப்போது ஆயிரம் வீடுகளின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகளையும்
பார்வையிட இருக்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்
என்பதே இலங்கைக்கு இந்தியா விடுக்கும் கோரிக்கை

இலங்கையில் வளர்ச்சிப் பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கைக்கு இந்தியா ரூ. 7990
கோடி அளவுக்கு நிதி வழங்க இருக்கிறது. கடன் மற்றும் நிதியுதவி என்ற இரு வழிகளில் இந்த
தொகை வழங்கப்படும் என்று அவருடன் சென்ற இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசியச் செய்தி மலர் :

* மும்பை தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி உஷார் நிலை: டில்லியிலும் பாதுகாப்பு

புதுடில்லி : மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது . தவிர, பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் 2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பைத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. தவிர, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், டில்லியில் ஊடுருவி முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல் கிடைத்தது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. கடற்கரையோர பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பையை ஒட்டிய கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



* பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி, நவ. 25: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி நடத்த நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய பிராணிகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
 இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி. ரவிச்சந்திரன், டத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
 அதன் படி ஜல்லிக்கட்டு நடத்த ரூ. 2 லட்சத்துக்கு குறையாமல் டெபாசிட் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவோர் பிராணிகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற வேண்டும்.
 மேலும் தமிழக அரசு தேர்வு செய்யும் 129 இடங்களில் மட்டுமே போட்டி நடத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 இந்த தீர்ப்புக்கு ஜல்லிக்கட்டு பேரவை வரவேற்புத் தெரிவித்துள்ளது.

* பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தார் எல் ஐ சி தலைவர்.

புது தில்லி, நவ. 25: எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். விஜயன், பிரதமர் அலுவலக அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்தார்.
 பல கோடி ரூபாய் முறைகேடு புகாரில் எல்ஐசி வீட்டு வசதிப் பிரிவுத் தலைவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 பிரதமர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்த காரணத்தைத் தெரிவிக்க விஜயன் மறுத்து விட்டார்.


* ஆ.ராசாவை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? சி.பி.ஐ.யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி



புதுதில்லி,நவ.25: 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அந்தத் துறையின் அமைச்சராகப் பதவி வகித்த ஆ.ராசாவிடம் இதுவரை விசாரணையே நடத்தாதது ஏன் என்று மத்தியப் புலனாய்வு அமைப்பை (சி.பி.ஐ.) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர்.

வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. தனக்கென்று தனி விசாரணை பாணியை வைத்திருக்கிறது என்று
குறிப்பிட்டு விசாரணையில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று விளக்கினார் சிபிஐ சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்.


மாநிலச் செய்தி மலர் :

* 2011 பிப்ரவரி 9-ல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

சென்னை, நவ. 25: தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9-ல் தொடங்கி 28 வரை
நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட
விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பில்
குடும்பத்தில் உள்ள தனிநபர்களின் அனைத்து விவரங்களும் எடுக்கப்பட உள்ளன. ஆனால், அதில்
ஜாதி குறித்த தகவல் கேட்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்
என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் நடத்தப்படும் மக்கள்தொகை
கணக்கெடுப்பின்போதே ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து கேட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


* இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

திருவள்ளூர், நவ 25: இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என திருவள்ளூரில்
நடைபெற்ற நீர்வள ஆதாரங்கள் குறித்த பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
÷திருவள்ளூரில் நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு மற்றும் சமூக செயல்பாடுகளின் இயக்கம் சார்பில்
நீர்வள ஆதாரங்கள் குறித்த பாதுகாப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்
கருத்தரங்கிற்கு நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசு இயற்றியுள்ள குளங்கள், ஏரிகள் பாதுகாப்பு
சட்டத்தை உண்மையான பொருளில் அமல்படுத்த வேண்டும். வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ்
ஏரிகளை தூர்வாரும் பணி மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை
பெருநகர வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும், புனரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை
அகற்றுவதோடு, கழிவுகளை ஏரிகளில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
÷விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நச்சுப்பொருள்கள் பெரும் அபாயமாக மாறியுள்ளன. எனவே

வேதிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்திற்கு மாறாக இயற்கை விவசாயத்தை
அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* கலங்கரை விளக்கங்களின் உச்சியில் ரேடார்: கடலோர காவல்படை திட்டம்

புது தில்லி, நவ.25: கலங்கரை விளக்கங்களின் உச்சியில் ரேடார் கருவிகளை அமைக்க கடலோர காவல்படை திட்டமிட்டுள்ளது. ரூ.76 கோடி செலவில் 90 கலங்கரை விளக்கங்களின் உச்சியில் அமைக்கப்படவுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த எஸ்ஏஏபி நிறுவனம் இதை அமைக்கவுள்ளது. இவ்வாறு ரேடார்களை அமைப்பதன் மூலம் சுமார் 7,516 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதிகளை எளிதில் கண்காணிக்க முடியும்.
 இத்திட்டத்தை கலங்கரை விளக்கங்களின் இயக்குநரகம் தயாரித்துள்ளது

.

* இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ் 5.

டெல்லி: இந்திய செல்போன் சந்தைக்கு புதிய வரவாக வரவுள்ளது நோக்கியாவின் எக்ஸ்5 ஸ்மார்ட் போன்.

இந்த அதி நவீன போனில், 5 எம்.பி கேமரா, எல்இடி பிளாஷ், ஒருங்கிணைந்த ஸ்பீக்கர்கள், மியூசிக் கீஸ், ஒரு வருடத்திற்கான ஓவி மியூசிக்கின் அன்லிமிட்டெட்இசை ஆகியவை இடம் பெறும்.

இந்த ஸ்மார்ட் போனில் 2.36 இன்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே, ஸ்லைட் மாடலில் ஆன கீபேட் ஆகியவையும் இடம் பெறுகிறது.

நோக்கியா இ சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் அதே ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இதிலும் பயன்படுத்தப்படும்.

200 எம்பி இன்டர்னல் மெமமரி மற்றும் 2 ஜிபி மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு ஆகியவையும் இந்த போனின் பிற சிறப்பம்சங்கள்.

இது போக ப்ளூடூத் 2.0, வைபி 802.11, யுஎஸ்பி 2.0 ஆகியவையும் உண்டு.

இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 10,499 மட்டுமே என்பதும் விசேஷமானது.

வர்த்தகச் செய்தி மலர் :


* சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிவு.

மும்பை, நவ.25: மும்பை பங்குச்சந்தையில் இன்று சரிவு காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் முதல் 5 நிமிடங்களில் 122 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 30 புள்ளிகள் வரை உயர்ந்தது.

எனினும் பின்னர் இரு சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 141.69 புள்ளிகள் சரிந்து 19,318.16 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 66 புள்ளிகள் குறைந்து 5799.75 புள்ளிகளாக இருந்தது.



விளையாட்டுச் செய்தி மலர் :

* குவாங்ஜெü, நவ.25: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை நடந்த தட, களப்
போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் ஜோசப் ஆப்ரஹாம் (29), வீராங்கனை அஸ்வினி
சிதானந்தா (23) ஆகியோர் தங்கம் வென்றனர்.
800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டின்டு லூகா வெண்கலப் பதக்கம் வென்றார்.
வியாழக்கிழமை நடந்த ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிச் சுற்றில், ஜோசப் 49.96
வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.


* குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.

குவாங்ஜெü, நவ.25: ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டையில் விகாஷ் கிருஷ்ணன் (18)
இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். மற்றொரு இந்திய வீரர் தினேஷ்குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார்.  இந்த ஆசியப் போட்டியில் இந்தியா பெறும் 10-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.



ஆன்மீகச் செய்தி மலர் :

*அருள்மிகு பரசுராமர் திருக்கோயில்:

மூலவர் - பரசுராமர்
பழமை - 500- 1000 வருடங்களுக்கு முன்.
ஊர் - திருவல்லம்
மாவட்டம் - திருவனந்தபுரம்
மாநிலம் - கேரளா.

தல பெருமை :- வல்லம் என்றால் "தலை' என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் "திருவல்லம்' எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட் டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லது.

பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார்.  பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.


ஆன்மீகச் சிந்தனை மலர் :

பகவத் கீதை.

* * வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.

வினாடி வினா :

* முதல் வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு [ISD] வசதி ஆரம்பிக்கப்பட்ட இடங்கள் எவை ?

விடை : மும்பை மற்றும் லண்டன்.



இதையும் படிங்க:

இன்னும் 10 ஆண்டுகளில் மலேரியாவே இருக்காது:விஞ்ஞானிகள் கணிப்பு.

புளோரிடா: இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் கொடிய வகை மலேரியாவை உலகில் இருந்தே அழித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவத்துள்ளனர். மலேரியா ஒட்டுண்ணி பற்றி சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதி மலேரியாவால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவுக்கு 1. 2 மில்லியன் மக்கள் பலியாவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இறப்புக்கு காரணம் கொசுவால் பரப்பப்படும் உயிரினம் பிளாஸ்மோடியம் பால்சிபரம். இது ஆப்பிரிக்காவை கடுமையாகத் தாக்குகிறது. மலேரியாவால் உயிர் இழப்பவர்களில் 90 சதவிகதம் பேர் ஆப்பிரிக்கர்கள் தான்.

விஞ்ஞானிகள் பிளாஸ்மோடியம் பால்சிபரம் பற்றிய தகவல்களை கடந்த 5 வருடமாக சேகரித்தனர். அதன் அடிப்படையில் தான் இதை எப்பொழுது முழுமையாக அழிக்க முடியும் என்று ஊகித்துள்ளனர்.

இந்த ஒட்டுண்ணி பரவும் வேகத்தை 90 சதவிகிதத்திற்கு மேல் குறைத்துவிட்டால் இதை இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் உலகில் இருந்து அழித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அதிநவீனக் கருவிகளின் மூலம் இதை அமெரிக்காவில் இருந்து அழிப்பது சாத்தியம். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கால்சிபரத்தை அழிப்பது சிறிது கடினம் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆன்ட்ரூ டாடெம் தெரிவித்துள்ளார்.

மலேரியா உள்ள 99 நாடுகளில் 32 நாடுகள் இந்நோயை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றத் தொடங்கிவிட்டன. மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மலேரியா அதிகமாகப் பரவுவது தான் பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக மியான்மர், கம்போடியா மற்றும் வியட்நாமில் தான் இந்தப் பிரச்சனை அதிகம் இருந்தது.