Monday, November 29, 2010

இன்றைய செய்திகள். - நவம்பர் - 29 - 2010.உலகச் செய்தி மலர் :

* தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி-ஏவுகணைகளை நிறுத்தும் வட கொரியா

இயோன்பியாங்: வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா.

தென் கொரிய தீவு மீது வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன.

இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் தனது நிலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளது வட கொரியா.

இந்த நிலையில் பிரச்சினையைத் தணித்து அமைதியை நிலை நாட்ட முயற்சிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது.

இதுதொடர்பாகதென் கொரிய அதிபர் லீ மியூங் பாக்கை சீனக் குழு சந்தித்துப் பேசியது.

கொரிய பிரச்சினையில் இதுவரை சீனா நேரடியாக தலையிட்டதில்லை. அதேசமயம், வட கொரியாவின் அத்துமீறல்களை அது கண்டித்ததும் இல்லை. ரஷ்யாவைப் போல வட கொரியாவின் பக்கமே சீனாவும் நிற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை சீனா எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதையநெருக்கடியான நிலையில், வட கொரியாவுக்கு சீனா அறிவுரை கூறி அடக்கி வைக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளதால் போர் மூளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.


* நக்ஸல் பிரச்னைக்கு அமைதியான தீர்வு: இந்தியாவுக்கு பிரசண்டா கோரிக்கை

காத்மாண்டு, நவ.28: நக்ஸல் பிரச்னைக்கு அமைதியான முறையில் இந்திய அரசு தீர்வு காணவேண்டும் என்று நேபாள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசண்டா கூறினார்.
இதுகுறித்து காத்மாண்டுவில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் அவர் பேசியதாவது:

சமீபத்தில் இந்தியாவில் உள்ள நக்ஸலைட்டுகள் மீது தேடுதல் வேட்டையை இந்திய அரசு துவக்கியுள்ளது. பசுமை வேட்டை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் இதை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்திய அரசு முன்வரவேண்டும். இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட் இயக்கங்களை அழைத்துப் பேசவேண்டும்.

அதை விடுத்து அவர்களை தேடுதல் வேட்டை என்ற பெயரில் அழிக்கக்கூடாது.
நக்ஸலைட் தலைவர் ஆசாத்தைக் கொன்றதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நக்ஸலைட் இயக்கத்துக்கு முக்கிய எதிரியே இந்தியாதான் என்றார் அவர்.

* தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை எஸ்.எம். கிருஷ்ணா

கொழும்பு நவ. 28: இலங்கையில் 4 நாள் சுற்றுப் பயணம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழர் தேசிய கட்சித் தலைவர்களை சந்திக்காமலேயே தில்லி திரும்பினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுக் கட்சி என்று கருதப்படும் தமிழர் தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களை கொழும்பில் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மதியமும் சந்திப்பு நடைபெறவில்லை. அமைச்சர் கிருஷ்ணா அம்மன்தோட்டாவில் இருந்து நேராக கொழும்பு விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி திரும்பி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டதாக தமிழர் தேசிய கூட்டணி கட்சி எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரா தெரிவித்தார்.


* ரகசியங்களை வெளியிட்ட விக்கி லீக்ஸ் இணையதளம்

நியூயார்க் : விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.தேசியச் செய்தி மலர் :

* பார்லிமென்ட் இயங்க அரசு நடவடிக்கை இழுபறி : அத்வானியுடன் பிரணாப் பேசியும் பலனில்லை

புதுடில்லி : பார்லிமென்ட் முட்டுக்கட்டை நிலைமையை அகற்றி, அதை சீராக இயங்கச் செய்ய அரசு தரப்பில் நேற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்தலைவர் அத்வானி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருந்தும் எந்த பலனும் இல்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால், இழுபறி நிலைமை தொடர்கிறது.


* இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா

புது தில்லி, நவ. 28: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. எனினும் இது தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யமுடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

  இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  இலங்கையின் வடக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் அங்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.

  விவசாயம், வீட்டுவசதி, தகவல் தொடர்பு, மறுகுடியமர்வு உள்ளிட்டவற்றில் இந்தியா சார்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. இலங்கை அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறதோ, அதைப் பொறுத்தே பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியும். தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.

  அதிபர் ராஜபட்சவுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டில் பிரதமர் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு அவர் எப்போது செல்வார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

* கறுப்புப் பணம் எவ்வளவு? கணக்கிட அரசு உத்தரவு

புது தில்லி, நவ. 28: இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிடுமாறு தேசிய பொது நிதியியல் திட்ட அமைப்பு, இந்திய புள்ளியியல் அமைப்பு, தேசிய பொருளாதார ஆய்வுக் குழு, தேசிய நிதி மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுக்கு நிதியமைச்சர் பிரணாப் கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்று இந்திய பொருளாதாரம் குறித்து தங்களது அறிக்கையை வெளியிட்டது. அதில் 1948 முதல் 2008-ம் ஆண்டுவரை சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கறுப்புப் பண மதிப்பை கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* செஞ்சியில் ராஜாதேசிங்கு விழா: டிசம்பர் 1-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், நவ. 28: செஞ்சியில் நவம்பர் 29, 30-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ராஜாதேசிங்கு விழா, நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தெரிவித்தார். இரண்டு நாள்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.* சென்னையில் கண்ணைக் கவரும் செம்மைப் பூங்கா.

கண்ணைக் கவரும் பசுமையான தாவரங்களாலும், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கே தன்வசம் ஈர்த்து வருகிறது சென்னையில் புதிதாக அமையப்பெற்ற செம்மொழி பூங்கா.
 சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றான கதீட்ரல் சாலையில் அமைந்துள்ளது இந்த செம்மொழி பூங்கா.

 எழில்மிகு முகப்பு

சென்னை நகரின் மற்ற பூங்காக்களை போலவே ஆங்காங்கே மரங்களும், செடிகளும், சில இடங்களில் புல் தரைகளும் இருக்கும் என நினைத்து வருபவர்களை இங்கு அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு முகப்பு தோற்றமே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

மிக அரியவகை செடிகளாக அறியப்படும் பிலோடென்ட்ரான் சிங்கோனியம், ஓப்பியோபோகான் உள்ளிட்ட 35 வகையான திசு வளர்ப்பு செடிகளைக் கொண்டு செங்குத்தான வடிவத்தில் அமைந்துள்ளது பூங்காவின் முகப்பு.

.92 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா முழுவதையும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள், மலர் வகைகள் அலங்கரித்துள்ளன. பூங்காவுக்குள் நுழைந்ததும் அழகிய புதர் செடிகளால் ஆன தோட்டம் கண்களை குளிர்ச்சியடைய செய்கிறது. மா, புளி, சவுக்கு, சப்போட்டா என பல்வேறு வகையான மரங்கள் தென்படுகின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த பொன்சாய் மரங்களும் பூங்கா முழுவதும் ஓங்கி நிற்கின்றன.

 ரோஜா, மல்லிகை, பாரிஜாதம் உள்ளிட்ட நறுமண மலர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள பல்வேறு வாசனை
மலர்களையும், செடிகளையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது

* தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்.

வர்த்தகச் செய்தி மலர் :

* டில்லியில் பீர் விற்பனை அமோகம்

புதுடில்லி: டில்லி மக்களுக்கு பீர் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.இதனால் அம் மாநிலத்தில் பீர் விற்பனை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஒயின் விற்பனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2009-10 ம் ஆண்டில் ரூபாய் 11.78 கோடி அளவிற்கு பீர் விற்பனையாகியுள்ளது. அதேசமயம் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது விற்பனை ரூபாய் 9.56 கோடியாக உள்ளது என கலால் துறையினர் தெரிவித்தனர்.


விளையாட்டுச் செய்தி மலர் :

விராட் கோலி 105; 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

குவாஹாட்டி, நவ.28: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி 105 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங் 42 ரன்களுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு வீரர்களின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததது.

ஸ்கோர் போர்டு
இந்தியா:
முரளி விஜய் (சி) ஹாப்கின்ஸ் (பி) டஃபி 29
கெüதம் கம்பீர் (சி) ஹெü (பி) மெக்கே 38
விராட் கோலி (சி) ஹெü (பி) மெக்கே 105
யுவராஜ் சிங் (சி) ஹாப்கின்ஸ் (பி) டஃபி 42
சுரேஷ் ரெய்னா (சி) ஹெü (பி) மில்ஸ் 13
யூசுப் பதான் (சி) டெய்லர் (பி) மில்ஸ் 29
ரித்திமன் சாஹா (சி) ஹாப்கின்ஸ் (பி) மெக்கே 4
அஸ்வின் (சி) & (பி) மெக்கே 0
ஆசிஷ் நெஹ்ரா (ரன் அவுட்) டெய்லர் 0
ஸ்ரீசாந்த் (சி) ஹெü (பி) மில்ஸ் 4
முனாஃப் படேல்   அவுட் இல்லை 1
உபரி 11
மொத்தம் (49 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 276


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில்.

மூலவர் - மணக்குள விநாயகர்
தீர்த்தம் - மூலவருக்கு மிக அருகில் உள்ளது.
பழமை - 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - மணக்குளத்து விநாயகர்
ஊர் - புதுச்சேரி
மாவட்டம் - புதுச்சேரி
மாநிலம் - புதுச்சேரி

தல சிறப்பு :-

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. கிணற்றின் மீதுதான் மூலவர் : தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார்.

பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

 தல பெருமை :-

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே.

உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.

விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே

 தல வரலாறு :-

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* இங்கு இரண்டே ஜாதி தான் ! - அவ்வையார்.

* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்ளை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது.

* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.

* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.

வினாடி வினா :

* உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் எது ?

* உலகிலேயே மிகப் பெரிய விமானம் எது?

விடை - மிகப்பெரிய விமான நிலையம் - காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் -  ரியாத்

* மிகபெரிய விமானம் - எரோலாப்ட், - ரஷிய விமானம்.இதையும் படிங்க :

கோடீஸ்வரர்களை உருவாக்கும் போது ஊழல் அதிகரிப்பதை தடுக்க முடியாதா ?

"மோசமான நிர்வாகம் கொண்ட அரசு என்றால் ஊழல் அதிகரிக்கும்' என்று சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எம். ஆர். வெங்கடேஷ் கூறுவது மேம்போக்காக பார்த்தால் வெறுப்பு பேச்சு என்று தோன்றும். ஆனால், அவர் படைத்திருக்கும் "சென்ஸ், சென்செக்ஸ் அண்ட் சென்டிமென்ட்ஸ்' என்ற ஆங்கில நூல் பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.

வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்து பெரிய கம்பெனிகளுக்கு ஆலோசனை தரும் வெங்கடேஷ் இயல்பாகவே இந்திய கலாசாரம், நற்பண்புகளில் அக்கறை காட்டுபவர். அதே சமயம் பொருளாதார தாராளமயத்தை ஆதரிக்கிறார். ஆனால், உலக அளவில் இணைக்கப்பட்ட பொருளாதார நடைமுறைகள் எத்தனை இடங்களில் கறுப்புப் பணத்தை ஒளித்து வைக்க வசதியாகிவிட்டது என்பதை அலசுகிறார். அதை மீட்க தேவைப்படும் சட்டதிட்டங்கள் , நடைமுறைகள் பற்றியும் இந்த நூலில் அலசுகிறார்.

பொதுவாக பாதுகாப்பான சேமிப்பு என்ற அணுகுமுறையைக் கலாசாரமாகக் கொண்ட இந்தியா தற்போது இந்தச் சூழலில் மாட்டிக் கொண்டிருப்பதை அவர் தன் நூலில் விளக்கிய விதம் பற்றி கூறியதாவது: நம்நாட்டிற்கு அன்னிய மூலதன முதலீடு வரும் அளவு இன்னமும் அதிகரிக்கவில்லை என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது பணம் வரும் நடைமுறைகள் அபாயமானவை. மொரீஷியஸ் நாட்டின் வழியாக, துபாய் வழியாக வரும் பணம் பற்றி புதிதாக ஆய்வு செய்ய வேண்டும். நமது பணமே வேறு வழியில் வரிகட்டாமல் சென்று இங்கு திரும்பி வருகிறது. அதுவும் "பங்கேற்பு பத்திரம்' என்ற "பார்டிசிபேட்டரி நோட்' பற்றி இன்னமும் வரன்முறை ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வரும் அன்னிய மூலதன அளவு மொத்த அளவில் 45 சதவீதம் நம்நாட்டில் இருக்கும். ஆனால், சிங்கப்பூரில் இதன் அளவு 9 சதவீத அளவு மட்டுமே. எந்த சந்தைப்படுத்தும் நடைமுறையிலும் புழங்குகிற பணம் சந்தேகத்திற்குரிய பணமாக இருக்கிறது. என் நூலில் ஜான் கிறிஸ்டன்ஸ் என்ற பொருளாதார நிபுணர் முன்னுரை எழுதியிருக்கிறார்.

அதில் அவர், "இந்தியாவில் இருந்து 2500 கோடி டாலர் வரை இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணம் ஒவ்வொரு ஆண்டும் வெளியே போகிறது' என்பதை பதிவு செய்கிறார். கணக்கில் காட்டமல் பெரியஅளவு தொகை சந்தையில் நுழையும் போது அது "காசினோ'என்ற சூதாட்ட நடைமுறை போலஆகிவிடும். சத்யம், குளோபல் டிரஸ்ட் வங்கி, அவர்களுக்கு உதவிய பிரைஸ்வாட்டர்ஸ் கூப்பர்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகள் இதற்கு சாட்சி. இப்படியே போனால் "போர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியாகும் கோடீஸ்வரர்கள் பட்டியல் இனி அதிகரிக்கும். அதனால் பாமர மனிதனுக்கு, மத்திய தர மக்களுக்கு பயன்இல்லை. லஞ்சப் பணம் வெளிநாடுகளில் உள்ள சில இடங்களில்சேமிக்கப்படுகிறது. இது லட்சக்கணக்கான கோடிகள் என்பது பரவலாகப் பேசப்படுகிறது.நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

No comments:

Post a Comment