Tuesday, November 23, 2010

இன்றைய செய்திகள்.

large_131554.jpgஉலகச் செய்தி மலர் :

* ஐ.நா.வில் இடம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.

வாஷிங்டன் : "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு, சட்டத்தில் தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்' என்ற தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், எம்.பி., கஸ் பிலிரகிஸ் என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: உலக அமைதி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக இந்தியா பாடுபடுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான அங்கு, அனைத்து அரசியல் விமர்சனங்களும் சுதந்திரமாக வெளியிடப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன. அதனால், ஐ.நா.,வில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, அதன் சட்டத்தில் 23வது பிரிவில் தேவையான திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என, பிரதிநிதிகள் சபை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


* சூகி அட்டை படம் வந்ததால் பத்திரிகைகளுக்கு அரசு தடைthumb_131555.jpg

யாங்கூன் : மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சாங் சூகி படத்தை அட்டையில் போட்டதால், ஒன்பது பத்திரிகைகளுக்கு, பதிப்பு விதிகளை மீறியதாக, அந்நாட்டு ராணுவ அரசு தடை விதித்துள்ளது. மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் சூகி. சமீபத்தில் விடுதலையானதையொட்டி, அந்நாட்டு பத்திரிகைகள் சில அவரது படத்தை தங்களது முகப்பு அட்டையில் போட்டு வெளியிட்டிருந்தன
.
இந்நிலையில், அந்த பத்திரிகைகள் அனைத்தும், நாட்டின் பதிப்பு விதிமுறைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. விதிமுறை மீறல்கள் குறித்து எவ்வித விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த அளவு முக்கியத்துவம் வருவதை ராணுவ அரசு விரும்பவில்லை என்று மட்டும் தெரிகிறது
.

* இ- மெயில் சேவையைத் தொடங்கியது “பேஸ்புக்”

சான்பிரான்சிஸ்கோ : சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் "பேஸ்புக்' நிறுவனம், புதிதாக இ-மெயில் சேவையை தொடங்கியுள்ளது. "பேஸ்புக்' சமூக வலைத்தளம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வலைத்தளத்தில், தற்போது, 50 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், "பேஸ்புக்' நிறுவனம் புதிதாக "இ-மெயில்' சேவையிலும் நுழைந்துள்ளது. " மெயில் @பேஸ்புக்.காம்' என்ற முகவரியில் இ-மெயில் சேவையை, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகேர்பெர்க் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பேஸ்புக் நிறுவனம் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது. பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற இ-மெயில் தளங்களில் உள்ள பல்வேறு வசதிகளும் இதில் கிடைக்கும். "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சம் ஆகும். இணையதளம் பயன்படுத்திவரும், இளைய தலைமுறையினரிடையே இது மிகுந்த வரவேற்பை பெரும். பேஸ்புக்கின் இ-மெயில் சேவையால், ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் சேவைகளுக்கும் பாதிப்பு வராது என்றார் அவர்.


தேசியச் செய்தி மலர் :

*2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் : 3 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை. உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்.

புதுதில்லி, நவ. 22: 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக 3 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களில் விசாரணை நிறைவடையும், மூன்றாவது மாதம் விசாரணை விவரங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.


23pranap.jpg* பிரணாப் முகர்ஜி சமரச முயற்சி தோல்வி.

புதுதில்லி, நவ. 22: குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு நாள் கூட நிகழ்வுகள் முழுமையாக நடைபெற்றவில்லை. 7-வது நாளாக திங்கள்கிழமையும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடக்கப்பட்டன.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவும் அவையை சுமுகமாக நடத்தவும் அவை முன்னவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி, 2வது முறையாக அனைத்துக் கட்சி கூட்டத்தை திங்கள்கிழமை கூட்டினார். ஆனால் இந்த கூட்டத்தில் சமரசம் ஏற்படவில்லை
.
2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. ஆனால் அதே பிடிவாதத்தோடு, எதிர்க்கட்சிகளின் 
கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அரசு தரப்பில் மறுக்கப்பட்டது
.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை மீது பொதுக் கணக்குக் குழுவுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட விசாரணை அமைப்புகளை இணைத்து பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாக அரசு தரப்பில் புதிய திட்டம் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்தப் புதிய திட்டத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன.

இந்த விஷயத்தில் சமரசம் ஏற்படாத நிலையில், பிரதமருடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவைச் சொல்வதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டம் கலைந்தது.

அரசு தெரிவித்த புதிய திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை. எங்களது கருத்தைத்தான் எல்லா எதிர்க்கட்சிகளும் தெரிவித்தன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

* ரகசிய தகவல்களை கசியவிட்ட உள்துறை அமைச்சக அதிகாரி கைது.

புது தில்லி, நவ.22: உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களைக் கசிய விட்டதாக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி இந்தர் சிங் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
வடக்கு தில்லி பகுதியில் உள்ள அவரது அலுவலகம், வீட்டில் தில்லி சிறப்பு பிரிவு போலீஸôர் சோதனை மேற்கொண்டனர்
.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரவி இந்தர் சிங், 1994-ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
அமைச்சக ரகசியங்களை கசிய விட்டதான குற்றச்சாட்டை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகச் செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்
.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை சில தனியார் நிறுவனங்களுக்கு அளித்தாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிருந்த ஒரு அதிகாரியே ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலச் செய்தி மலர் ;

* தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பதிவு. அதிகாரிகள் விவரம்.

சென்னை, நவ. 22: சட்ட மேலவையின் பட்டதாரிகள், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தங்கள் உள்ளிட்ட பணிகள் டிசம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது
.
பட்டதாரிகள் தொகுதிகள், ஆசிரியர்கள் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோர் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ​(www.ele​ctions.tn.gov.in)​ காணலாம்
.
வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எந்த ஒரு பெயரையும் குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம் 7-ஐ பயன்படுத்தி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் அளிக்கலாம்.
சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலகங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். அங்கேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்

* தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னை, நவ.22: தென் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.
வட கிழக்குப் பருவமழை தென் தமிழகம் மற்றும் கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், இலங்கை- தென் தமிழகம் இடையே வளி (காற்று) மண்டலத்தின் உயர் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள மேகக் கூட்டங்களின் சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

* சாத்தையாறு அணையில் நீர்மட்டம் 5 ஆண்டுக்குப்பின் 31 அடியை தொட்டது.

பாலமேடு : ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு சாத்தையாறு அணையில் நீர்மட்டம் 31 அடியை தொட்டது. பாலமேடு அருகேயுள்ள சாத்தையாறு அணை மூலம் சுக்காம்பட்டி, கீழச் சின்னணம்பட்டி, அய்யூர், ஆதனூர், கோயில்பட்டி, அழகாபுரி, எர்ரம்பட்டி, குறவன்குளம், முடுவார்பட்டி உட்பட 11 கண்மாய்களுக்கும், புது ஆயக்கட்டு பகுதியான கோணப்பட்டி பகுதி நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஒருநாள் பலத்த மழையிலேயே அணை நிரம்பிவிடும். அடுத்தநாள் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

* மாஸ்கோ : ரஷ்யா மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள கனிமச் சுரங்கங்களில் யுரேனியம் உள்ளதா என ஆய்வு செய்வது, அதை எடுப்பது உள்ளிட்ட திட்டங்களில், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட, இந்திய நிறுவனங்களுக்கு, அந்நாட்டின் அணுசக்தி கார்ப்பரேஷன் அழைப்பு விடுத்துள்ளது.
 
ரஷ்ய அரசுக்கு சொந்தமான அணுசக்தி கார்ப்பரேஷன் அமைப்பான, "பொகாடெம்' செய்தித் தொடர்பாளர் செர்கய் நோவிகோவ் கூறியதாவது: ரஷ்யா மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் யுரேனியம் பற்றிய ஆய்வு மற்றும் அக்கனிமத்தை சுரங்கங்களில் இருந்து வெளியே எடுப்பது உள்ளிட்ட திட்டங்களில், இந்திய நிறுவனங்கள், 
ரஷ்யாவுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

ரஷ்யாவில் நடக்கும் இத்திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு, திட்டத்தில், 49 சதவீதம் அனுமதி அளிக்கப்படும். இதுகுறித்து, சமீபத்தில் நடந்த இந்திய - ரஷ்ய அரசுகளுக்கிடையிலான கமிஷன் கூட்டத்தில், "பொகாடெம்' இயக்குனர் செர்கய் கிரியென்கோவ் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளும், அணுசக்தி உற்பத்திக்கான கச்சாப்பொருள் தயாரிப்பில் ஒத்துழைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு நோவிகோவ் தெரிவித்தார்.

வர்த்த்கச் செய்தி மலர்:

* மும்பை பங்குச்சந்தை -சென்செக்ஸ் 372 புள்ளிகள் உயர்வு.

மும்பை, நவ.22- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 372 புள்ளிகள் உயர்ந்து 19,957 புள்ளிகளில் முடிவடைந்தது
.
விப்ரோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எஃப், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்ஸி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது
.
என்டிபிசி, எல் அன் டி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 119 புள்ளிகள் உயர்ந்து 6,010 புள்ளிகளில் முடிவடைந்தது


விளையாட்டுச் செய்தி மலர் :

*கிரிக்கெட் - இந்தியா முதல் இன்னிங்ஸில் 566-8 டிக்ளேர்.

நாகபுரி, நவ.22: நாகபுரியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்ûஸ தொடங்கிய நியூஸிலாந்து 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
திராவிட் 191 ரன்களும், கேப்டன் மகேந்திர சிங் தோனி 98 ரன்களும் குவித்து இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு வழிவகுத்தனர். இதனால், முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்தை விட 373 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்: நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 193, 2-வது இன்னிங்ஸ் 24-1வி (மெக்கல்லம் 15*, ஹாப்கின்ஸ் 1*; ஹர்பஜன் 1வி-9)
இந்தியா முதல் இன்னிங்ஸ் 566-8வி டிக்ளேர் (திராவிட் 191, தோனி 98, சச்சின் 61; வெட்டோரி 3வி-178, மார்ட்டின் 2வி-82).

*அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்.

மூலவர் - ஐயப்பன்
பழமை - 1000-2000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் - ஆரியங்காவு
மாநிலம் - கேரளா.

தல பெருமை ;- மூலஸ்தானத்தில் ஐயப்பனின் வலது பக்கம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 சாஸ்தா' என்னும் சொல்லை கிராமத்து மக்கள் "சாத்தன்', சாத்தான், சாஸ்தான்' என்றெல்லாம் பயன்படுத்துவர். "சாத்து' என்றால் "கூட்டம்'. காட்டிற்குள் இருக்கும் இவரை பக்தர்கள் கூட்டமாக வந்து வழிபடுவதால், இப்பெயர் பெற்றார். ஒரு சாரார் இவரை "அய்யனார்' என்பர். "ஐயன்' என்னும் சொல் "தலைவன்' என்றும், "தலைசிறந்தவன்' என்றும் பொருள். "ஆரியன்' என்ற சொல்லுக்கு "உயர்ந்தவன்' என்றே பொருள். "காவு' என்றால் "சோலை'. "உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை' என்று இதற்கு பொருள்.

 ஆன்மீகச் சிந்தனை மலர் :

* முடியாதது என்பது இல்லவே இல்லை - சித்தானந்தர்.


* வெளிப்பொருட்கள் மீதான மோகமே மனிதர்களை தீய நிலைக்கு தள்ளுகிறது. இவற்றிலிருந்து விடுபட உள்மனம் சுத்தமாகவும், நல்ல முடிவை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மனிதர்களின் மனமும், அறிவும் ஒரு செயலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இதை தவிர்த்து வெளிப்பொருட்களால் எந்த செயலையும் செய்து விட முடியாது. இந்த சக்திகளை ஒன்றாக திரட்டி, உறுதியுடன் செயல்பட தொடங்கினால் வெளிப்பொருட்களின் பாதிப்புகளை வென்று விடலாம். 

வினாடி வினா :-

* இந்தியா மற்றும் இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வமான புக் எது ?

இந்தியா - ஒயிட் பேப்பர்.
இங்கிலாந்து - ப்ளு புக்.


இதையும் படிங்க:

கள்ளக்குறிச்சி : பழங்கால நாணயங்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் தொகையில் தனது கடன் தொகை போக மீதத்தை, உடல் ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவ உள்ளதாக ஆசிரியர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் முகமது அன்சர்பாஷா. ஆசிரியர். இவர், கடந்த 25 ஆண்டுகளாக பழங்கால நாணங்களை சேகரித்து வருகிறார். ஆசிரியராக 11 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், ஐந்து ஆண்டுகள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்துள்ளார். இவருக்கு ரமீஜாபானு என்ற மனைவி, பி.இ., முதலாமாண்டு படிக்கும் சையத்சபருல்லா என்ற மகன், பிளஸ் 1 படிக்கும் ரஷீதா என்ற மகள் உள்ளனர்.இவரிடம் 1833, 1835, 1858ம் ஆண்டு பழங்கால நாணயங்கள் உள்ளன. மேலும், 1918, 1919, 1920, 1941 ஆண்டுகளில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 1/12 அணா காசுகள் உள்ளிட்ட 70 பழங்கால நாணயங்கள் உள்ளன.

குறிப்பாக, 1947ம் ஆண்டு ஒரு ரூபாய் வெள்ளி நாணயமும் உள்ளது. இதே போன்ற 1939ம் ஆண்டு நாணயத்தை, கோவை காயின் சொசைட்டி கடந்த மே 1ம் தேதி ஏலம் விட்டதில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. மேலும், முன்னாள் ஈராக் அதிபர் சதாம்உசேன் படம் போட்ட (கைதுக்கு பின்னர் சதாம் படம் போட்ட அனைத்து கரன்சிகளும் அழிக்கப்பட்டன) தினார் 4 தாள்கள் இவரிடம் உள்ளன. அதேபோல பழைய இந்திய ஐந்து ரூபாய் நோட்டில் மான் படத்துடன் அச்சிடப்பட்ட தாள் ஒன்றும் உள்ளது.
நன்றி - தின மணி , தின மலர் .


No comments:

Post a Comment