Wednesday, April 6, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 06 , 2011.


முக்கியச் செய்தி :

க‌ள்ள ஓ‌ட்டு‌ப் போ‌ட்டா‌ல் ஓரா‌ண்டு ‌சிறை: ‌பிர‌‌வீ‌ண்குமா‌ர் எ‌ச்‌ச‌ரி‌‌க்கை   

'க‌ள்ள ஓ‌ட்டு‌ப் போ‌ட்டா‌ல் ஓரா‌ண்டு ‌சிறை'' எ‌ன்று த‌மிழக தலைமை தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி ‌‌பிர‌‌வீ‌ண்குமா‌ர் எ‌ச்‌ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மூ‌த்த‌க்குடிம‌க்க‌ள் வா‌க்க‌ளி‌க்க வா‌‌க்கு‌ச்சாவடிக‌ளி‌ல் த‌னி வ‌ரிசை ஒது‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

மா‌ற்று‌திறனா‌ளிக‌ள் கா‌த்‌திரு‌க்காம‌ல் உடனே வா‌க்க‌ளி‌‌க்க ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் பா‌ர்வைய‌ற்றவ‌ருட‌ன் ஒருவரை அழை‌த்து கொ‌ண்டு வ‌ந்து வா‌க்க‌ளி‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பத‌ற்றமான வா‌க்கு‌ச்சாவடிகளை தே‌ர்‌த‌ல் ஆணைய‌ம் நே‌ரிடையாக க‌ண்கா‌ணி‌க்கு‌ம் ‌எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌பிர‌‌வீ‌ண்குமா‌‌ர், 66,231 தபா‌ல் ஓ‌ட்டுக‌ள் ப‌திவா‌கியு‌‌ள்ளது எ‌ன்றா‌ர்.

வாகன சோதனை‌யி‌ல் கட‌ந்த 3ஆ‌ம் தே‌தி வரை 29 கோடி ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட பண‌த்து‌க்கு உ‌ரிய ஆவண‌ங்கள‌் தந்தா‌ல் பண‌ம் ஒ‌ப்பட‌ை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

வாகன சோதனை‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக ‌திரு‌ச்‌சி‌யி‌ல் 5 கோடி ‌சி‌‌க்‌கியது எ‌ன்று‌ம் ‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ங்க‌ள் பெய‌ரில‌் க‌ள்ள ஓ‌ட்டு‌ப் போட‌ப்ப‌ட்டு இரு‌ந்தா‌ல் வா‌க்காள‌ர்க‌ள் வா‌க்க‌ளி‌க்க ஏ‌ற்பாடு எ‌ன்று‌ கூ‌றிய ‌பிர‌வீ‌ண்குமா‌ர், வா‌க்கு இழ‌ந்த வா‌க்காள‌ர்க‌ள் 49 ‌பி ‌பி‌ரி‌வி‌ன்படி உ‌ரிய வா‌க்கு‌ச்‌சீ‌ட்டு வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் தகு‌ந்த ஆவண‌ங்களுட‌ன் வா‌க்காள‌ர்க‌ள் வா‌க்க‌ளி‌க்கலா‌‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

உலகச் செய்தி மலர் :

* தேர்தல் நடத்த இந்தியாவின் உதவியைக் கோருகிறது எகிப்து  

எகிப்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது எப்படி என்பது குறித்து அந்நாட்டு தூதர், இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

எகிப்தில் அதிபர் முபாரக் ஆட்சியை அகற்றக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 

17 நாட்கள் ‌நடந்த மக்களின் தொடர் போராட்டத்திற்கு பின் அதிபர் முபாரக் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் பார்லிமென்ட் தேர்தல் வரும் செப்டம்பர் மாதமும், அதிபர் தேர்தல் அக்டோபர் மாதமும் நடக்கவுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவிற்கான எகிப்து நாட்டு தூதர் காலித்-ஈல்-பாக்லே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஓய். குரோஷியை டெல்லியில் உள்ள த‌லைமை தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 

அப்போது எகிப்தில் தேர்தல் நடத்தும் முறை குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். தேர்தலில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்தும், தொழில்நுட்ப முறைகள் குறித்தும் தகுந்த விபரங்களை கேட்டறிந்தார்.

* பிரிட்டனின் புதிய குடியேற்ற விதிகள் நாளை முதல் அமல்; இந்தியர்களுக்கு பாதிப்பு  

பிரிட்டன் நாளை முதல் அமல்படுத்த உள்ள புதிய குடியேற்ற விதிகள் காரணமாக ஏராளமான இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அல்லாதோர் பிரிட்டனில் குடியேறுவதை குறைப்பதற்காக பிரதமர் டேவிட் கேம்ரூன் தலைமையிலான அரசு இந்த புதிய விதிகளை கொண்டு வந்தது. 

இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலாவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான எண்ணிக்கையும் மட்டுப்படடுத்தப்படும்.

மேலும் ஏற்கனவே பிரிட்டனிலேயே குடியேறியவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் இந்திய பணியாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

* ராபர்ட் ஓ பிளேக், எரிக் சொல்ஹைம் இலங்கை வருகை

அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கான அயலுறவுத் துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் மற்றும் நார்வே அமைச்சரும், முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹைம் ஆகியோர் விரைவில் இலங்கை வர உள்ளனர்.

அடுத்த சில தினங்களில், அல்லது வாரங்களில் தனித்தனியாக இடம்பெறவுள்ள இந்தப் பயணங்களில் ஒருமித்த நோக்கம் இருப்பதாக நம்பபடுகின்றது. 

இவர்கள் இருவரையும் உலகத் தமிழர் பேரவையினர் கடந்த சில வாரங்களுக்குள் சந்தித்துப் பேசிய பின்னர் இவர்கள் இலங்கை வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்ஹைமை உலகத் தமிழர் பேரவையினர் சந்தித்தபோது, புலம்பெயர்ந்த மக்களிற்கும், இலங்கை அரசுக்கும் இடையே பேச்சு நடத்த முடியும் எனக் கூறியிருந்தார்.

அதேவேளை, போரின் இறுதிக் காலத்தில் சொல்ஹைம் சரியான முறையில் நடந்து கொள்ளத் தவறி இருக்கின்றார் எனவும், சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. 

அதுமட்டுமல்லாது , இறுதியில் அமெரிக்கா தனது கப்பலை அனுப்பி மக்களையும் புலிகளின் முக்கிய தலைவர்களை மீட்கும் எனச் சொல்லப்பட்டபோது அதுவும் நடைபெறவில்லை.

எனவே தமிழ் மக்கள் இவ்விரு நாடுகளின் செயல்பாடுகளில் பல சந்தேகங்களைக் கொண்டுள்ள நிலையில், இவர்கள் இருவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

* இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம்-ராஜபக்சே பேச்சு

கொழும்பு: இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.

அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.

அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.

தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.

முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.

* இந்திய கிரிக்கெட் அணியை ஒபாமா நேரில் அழைத்துக் கெளரவிப்பாரா?

05-obama-600.jpg

டெல்லி: கிரிக்கெட்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அமெரிக்காவிலிருந்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து வந்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனால் இந்திய கிரிக்கெட் அணியை அதிபர் ஒபாமா நேரில் அழைத்து பாராட்டி விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை நேற்று ரோமர் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியை, குறிப்பாக நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணி ஆகியோரைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

சச்சின் குறித்து ரோமர் கூறுகையில், கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது. அதேபோல எந்தவிதமான பிசிரும் இல்லாமல், மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் முடிவெடுக்கும் கேப்டன் டோணியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது.

கிரிக்கெட் ராஜாக்களின் இந்த சாதனையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா கேட் பகுதியில் நடந்த கொண்டாட்டத்தில்நானே கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நான் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். பிரகாசமான தொடக்கத்தை என்னால் காண முடிகிறது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை மிகச் சிறப்பாக நடத்த இந்திய பாதுகாப்புப் படையினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அதையும் நான் பாராட்டுகிறேன் என்றார் ரோமர்.

இந்தியாவுடன் முன்பை விட அதிக அளவிலான நெருக்கத்தை தற்போது அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. ஒபாமாவின் நிர்வாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் நிறையப் பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்தியா மற்றும் இந்தியர்களுடன் மேலும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் டோணி தலைமையிலான இந்திய அணியினரை வாஷிங்டனுக்கு நேரில் அழைத்து ஒபாமா விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* காங்கோ விமான விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளார்: ஐநா

ஐநா.சபை. ஏப்.5: காங்கோ விமான விபத்தில் அதில் பயணம் செய்த 33  பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்ததாக ஐநா சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கின்சாசாவில் நேற்று நடந்த விபத்தில் உயிர் பிழைத்த அந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. எனினும் உயிர் பிழைத்த அந்த நபர் குறித்து விரிவான தகவல் எதுவும் தம்மிடம் இல்லை என அமைதிக்கான ஐநா தலைவர் ஆலன்  லீ ராய் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த லீ ராய், பலத்த காற்று காரணமாக விபத்து நேரிட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அந்த சிறிய பயணிகள் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் ஐநா சபை அலுவலர்கள் என நியுயார்க்கில் ஐநா சபை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

தேசியச் செய்தி மலர் :

anna.jpg

* லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் அண்ணா ஹஸாரே

புது தில்லி, ஏப்.5: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி சமூக சேவகர் அண்ணா ஹஸôரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

72-வயதாகும் அண்ணா ஹஸôரே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி செவ்வாய்க்கிழமை தில்லியில் காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் சென்று அங்கு அஞ்சலி செலுத்திய ஹஸôரே, அங்கிருந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று அங்கு அமர்ந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறினார். நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு இதைவிட வேறு எந்த வழிமுறையும் கிடையாது. எனவேதான் இதைத் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டார். சுவாமி அக்னிவேஷ், கிரண் பேடி, சந்தீப் பாண்டே ஆகியோரும் உண்ணாவிரதப் பந்தலில் ஹஸôரேவுக்கு ஆதரவாகப் பேசினர்.

லோக்பால் மசோதா தயாரிப்பில் மூத்த அமைச்சர்கள் குழுவில் சிவில் சொசைட்டி உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை பிரதமர் நிராகரித்து விட்டது தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக ஹஸôரே கூறினார். தங்களது அமைப்பில் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அக்னிவேஷ் ஆகியோரை முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிகமாக நிலத்தை வைத்துள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் இந்தக் குழுவுக்கு தலைமை ஏற்று, ஊழல் ஒழிப்பு மசோதாவைத் தயாரிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று ஹஸôரே கேள்வியெழுப்பினார்.

இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. லோக்பால் மசோதாவில் என்னென்ன விதிகள் இடம்பெற வேண்டும் என்று ஹஸôரே குழுவினர் அளித்த பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரைகளை அமைச்சரவை துணைக் குழுவுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்வதாக பிரதமர் கூறியதையும் குழுவினர் முதலில் ஏற்றுக் கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சொந்தவீடு ,நிலம்,வாகனம் இல்லாத முதல்வர்

கோல்கட்டா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு வங்கியில் கையிருப்பு, சொந்த வீடு, நிலம், கார் என எதுவும் இல்லை. மனைவியின் பெயரில் ரூ. 15 லட்சத்தி்ல் வீடு இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்கத்திற்கு 6 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வர் புத்ததேவ் (67) ஜாதவ்பூரில் போட்டியிடுகிறார். 

இதற்காக அலிப்பூர் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் சத்தியபிரமாண பத்திரத்தில் , தனது சொந்த வீடு, விவசாய நிலம், வாகனம் எதுவும் இல்லை. கையிருப்பு தொலை ரூ. 5000 மட்டும் உள்ளது என்றும் ,தன் மீது எந்தவித குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது மனைவி மீரா பட்டாச்சார்யா பெயரில் கோல்கட்டா நியூடவுண் நகரில் ரூ. 15 லட்சத்தில் வீடு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த 2009-10 ஆண்டில் மனைவியின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 920 ஆக இருந்தது. இந்தாண்டு ரூ. 6 லட்சத்து 70 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.


* சாதிக் பாட்சா தற்கொலை: சிபிஐ வழக்குப் பதிவு  

சாதிக் பாட்சா தற்கொலை தொடர்பான விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக, சிபிஐ இன்று அது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீ்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ. இராசாவின் நண்பர் சாதிக் பாஷா தற்கொலை செய்துகொண்டு இறந்த வழக்கை, மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு 3 நாட்களில் பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப சிபிஐ இன்று, சாதிக் பாட்சா தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்தது.

* காமன்வெல்த் ஊழல் வழக்கு-20 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்த வழக்கு தொடர்பாக இன்று 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

காமன்வெல்த் ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன. அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது சிபிஐ. டெல்லி வளர்ச்சி குழும அலுவலகம், மத்திய பொதுப் பணித்துறை அலுவலகம், ஜுபிலி ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவன அலுவலகம் மற்றும் இவற்றின் அதிகாரிகள், வீடுகள் உள்பட 20 இடங்களில் சோதனை நடந்தது.

காமன்வெல்த் போட்டிக்கு கட்டுமான பணிகளை செய்ததிலும், விளையாட்டு சாதனங்கள் மற்றும் பொருட்கள் வாடகைக்கு வலீங்கியதிலும்தான் பெருமளவு ஊழல் நடந்து இருந்தது. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்களை குறி வைத்தே இன்றைய சோதனை நடந்தது.

இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது. சோதனையின் இறுதியில் சிலர் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

* பொதுக்கணக்குக் குழு முன் அனில் அம்பானி ஆஜரானார்!!

05-anil-ambani3-200.jpg

டெல்லி: தொழிலதிபர் ரத்தன் டாடா, அவரது மீடியா ஒருங்கிணைப்பாளரும் அரசியல் தரகருமான நீரா ராடியாவைத் தொடர்ந்து, பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியும் பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். 

2ஜி ஊழல் குறித்து பார்லிமென்ட் பொது கணக்குக் குழு விசாரித்து வருகிறது.

முரளி ம‌னோகர் ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவின் முன் நேற்று அரசியல் தரகர் நீரா ராடியா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் ஆஜராகி, கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.
   
இதைத் தொடர்ந்து, இன்று பிஏசி விசாரணைக்கு ஆஜரானார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவருக்கும் சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு, முன்னாள் அமைச்சர் ஆ ராசாவுடனான தொடர்புகள் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டது. பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி அவரிடம் விசாரணை நடத்தினார்.

எடிஸாலட் டிபி நிறுவனத்தின் சிஇஓ அதுல் ஜாம், எஸ் டெல் சிஇஓ ஷமிக் தாஸ், யுனிடெக் நிறுவனத்தின் சிக்வி பிரேக் உள்ளிட்ட தொழிலதிபர்களும் இன்று பொதுக்கணக்குக் குழு முன் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

* தயாநிதி மாறனுடன் பிரச்சினை இருந்தது உண்மைதான்!-டாடா ஒப்புதல்

டெல்லி: தயாநிதி மாறன்  தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தனக்கும் தனது நிறுவனத்துக்கும் பிரச்சினை இருந்தது உண்மைதான் என்று பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிடம் (பிஏசி) தெரிவித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

ஆனால் அவரது மீடியா ஒருங்கிணைப்பாளராக இருந்த நீரா ராடியாவோ, முன்னாள் மத்திய அமைச்சர்  ஆ.ராசா விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

மழுப்பினார் ராடியா:

விசாரணையின் போது, பெரும்பாலும் எனக்குத் தெரியாது, எனக்கு மறந்து விட்டது என்று ராடியா மழுப்பலாக பதிலளித்ததாக பிஏசி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். நீரா ராடியாவுடன் அவரது வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு மூத்த அதிகாரிகளும் விசாரணைக்கு வந்திருந்தனர்.

அரசியல் தலைவர்கள், தொழில் துறை பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் குறித்த கேள்விக்கு, அவற்றில் சில பதிவுகள் உண்மையானவைதான், மேலும் சில போலியானவை என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைப் புகழ்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதம் குறித்தும் நீரா ராடியாவிடம் பொதுக் கணக்குக் குழு விசாரணையின் போது கேட்டபோது, அதுபற்றி தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக நீரா ராடியா பேசியுள்ளது, ஆ.ராசாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவது குறித்துப் பேசியது ஆகியவற்றைப் பற்றி ராடியாவிடம் பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி விளக்கம் கேட்டார். இதற்கு தெளிவாக பதில் சொல்ல அவர் மறுத்துள்ளார்.

சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக நாடாளுமன்றத்துக்கு சுமார் 11 மணியளவில் வந்தார் நீரா ராடியா. எனினும் ராடியாவிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் சுமார் 1 மணி நேரம் வரை விவாதித்தனர். அதன் பின்னரே ராடியா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

தயாநிதி மாறனுடன் பிரச்சினை

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்குப் பின் தொழிலதிபர் ரத்தன் டாடா, பிஏசி முன் ஆஜரானார்.

ஏற்கெனவே சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் செல்போன் சேவையில் முன்னிலையில் இருக்கும் நிலையில் டாடா நிறுவனம், ஜிஎஸ்எம் முறையிலும் செல்போன் சேவையைத் தொடங்க வேண்டியதன் காரணம் என்ன?

பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு (டாடா) சாதகமாக செய்திகளை வெளியிட்டது போன்றவை தொடர்பாக டாடாவிடம் கேட்கப்பட்டது. இதற்கான அவரது பதில்களை பிஏசி வெளியிடவில்லை.

அதே நேரம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தனக்கு பிரச்சினை இருந்ததாக டாடா கூறியுள்ளார். தயாநிதி மாறன் விலகிய, ராசா வந்த பிறகு நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் ராசாவை அமைச்சராக நியமித்ததில் தன்னுடைய பங்கு என்னவென்று கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டாராம்.

மழுப்புகிறார் நீரா - ஜோஷி

இதுகுறித்து பின்னர் பேசிய நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பல உண்மைகளை மறைக்கவே நீரா ராடியா முயல்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

"உண்மைகளைக் கூற வேண்டுமென்ற எண்ணத்தில் இல்லாமல், மழுப்ப வேண்டுமென்ற நோக்கத்திலேயே ராடியாவின் பதில்கள் இருந்தன. "இந்த உரையாடல்களைக் கேட்டதில்லை, எனக்கு சரியாக நினைவில்லை, எனக்குத் தெரியவில்லை' என்றுதான் அவரது பெரும்பாலான பதில்கள் இருந்தன.

எனினும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன்தான் பேசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். எனினும் விசாரணையின் போது நிகழ்ந்த அனைத்தையும் இப்போது கூற முடியாது என்றார் ஜோஷி.

மீண்டும் வருவார் டாடா

ரத்தன் டாடாவிடம் விசாரணை நடத்தியபோது, தெளிவாகவும், நேரடியான பதில்களையும் அளித்தார். பதிவு செய்யப்பட்ட டேப்பில் இருப்பது தனது குரல்தான் என்பதையும் ஒப்புக் கொண்டார். எனினும் சில விஷயங்களை அவர் தெளிவாகக் கூற முடியவில்லை. இன்னும் ஓரிருநாளில் குழுவை மீண்டும் அணுகுவதாகவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்," என்று ஜோஷி மேலும் தெரிவித்தார்.

* சாய்பாபாவுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்: புட்டபர்த்தியில் தடை உத்தரவு

05sathyasai.jpg

அனந்தப்பூர், ஏப்.5: நுரையீரல் மற்றும் நெஞ்சுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்ய சாய்பாபாவுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

சாய்பாபாவுக்கு நேற்று இருந்த அதே நிலைமையே நீடிக்கிறது என உயர்கல்வி மருத்துவத்துக்கான சத்யசாய் நிறுவனத்தின் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது சுயநினைவு குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி வருகிறது. உயிர்நாடி அமைப்புகள் சீரான நிலையில் உள்ளன. இருப்பினும் செயற்கை சுவாசக் கருவி மூலம் அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சாய்பாபாவை தரிசிக்க தங்களை அனுமதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளை பாபா ஆதரவாளர்கள் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புட்டபர்த்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள நிலைமையை கருத்தில்கொண்டு கூடுதல் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* இலங்கை கேப்டன் பதவியில் இருந்து சங்கக்கரா விலகல்

05sangakkara.jpg

கொழும்பு, ஏப்.5:  உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்கக்கரா இன்று பதவிவிலகினார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடைக்கால கேப்டனாக நீடிப்பார்.

பதவி விலகும் முடிவை சங்கக்கரா இன்று அறிவித்தார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அணியில் வீரராக தொடர்ந்து நீடிப்பார்.
சங்கக்கரா பதவி விலகியதைத் தொடர்ந்து திலகரத்ன தில்ஷன் அல்லது மாத்யூஸ் அடுத்த கேப்டனாகப் பதவியேற்பர் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் திலன் சமரவீராவை டெஸ்ட் அணியின் கேப்டனாக்க உள்ள வாய்ப்பு குறித்து இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

* மேற்கு வங்க முதல்வர் வேட்பு மனு தாக்கல்

கொல்கத்தா, ஏப்.5: மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி தான் போட்டியிடும் ஜாதவ்பூர் தொகுதியில் வேட்புமனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்திற்குள்பட்ட இந்த தொகுதியில் இம்மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அலிப்பூரில் உள்ள 24 பர்கானா மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் புத்ததேவ் பட்டாசார்ஜி மனு தாக்கல் செய்தார். ஜாதவ்பூர் தொகுதியிலிருந்து 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள பட்டாசார்ஜி, இம்முறை வெற்றி பெற்றால் தொடர்ந்து 6-வது முறையாக ஒரே தொகுதியிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ என்ற பெருமையைப் பெறுவார். இம்முறை புத்ததேவ் பட்டாசார்ஜியை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைமைச் செயலர் மணீஷ் குப்தா போட்டியிடுகிறார்.

முதல்வருடன் அவரது தேர்தல் ஏஜென்டும் கொல்கத்தாவின் முன்னாள் மேயருமான விகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா, 24 பர்கானா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சுஜன் சக்ரவர்த்தி ஆகியோர் வந்திருந்தனர்.

75 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இவற்றுக்கான தேர்தல் அறிவிக்கை ஏப்ரல் 2-ம் தேதி வெளியானது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 9-ம் தேதியாகும். வேட்புமனுக்கள் ஏப்ரல் 11-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 13 ஆகும்.

மாநிலச் செய்தி மலர் :

* திருச்சி பஸ்ஸில் ரூ. 5.11 கோடி சிக்கியது

money.jpg

திருச்சி, ஏப். 5: திருச்சியில் "ஆம்னி' பஸ்ஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5.11 கோடியை தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

தொலைபேசியில் ரகசியத் தகவல்: திருச்சி பொன்னகரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான "ஆம்னி' பஸ்ஸில் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்க் கோட்டாட்சியரும், திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ். சங்கீதாவுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தொலைபேசி மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோட்டாட்சியர் சங்கீதா தனது கார் ஓட்டுநர் துரைராஜ், வீட்டுக் காவலாளி ராமர் ஆகியோருடன் பொன்னகருக்குச் சென்று, குறிப்பிட்ட எண் கொண்ட தனியார் பஸ் சாலையோரத்தில் நிற்பதை உறுதி செய்தார்.

5 பைகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு 5 பைகளிலும் மொத்தம் ரூ. 5,11,27,000 இருப்பது தெரிய வந்தது.

காரின் உரிமையாளர் உமாமகேசுவரியின் கணவர் உதயக்குமரன்தான் தனியார் பஸ்ஸின் உரிமையாளர்களில் ஒருவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 81,000 பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பணத்தைவிட இப்போது ஒரே இடத்தில் ரூ. 5.11 கோடி சிக்கி இருப்பதால், தேர்தல் பிரிவு அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் கே.என். நேரு மறுப்பு: இந்தச் சோதனை தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்னுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டது என சில ஊடகங்களில் தவறாக, திட்டமிட்டு செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி கைப்பற்றப்பட்ட தொகைக்கும், எனது உறவினர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்றார் அவர்.

* முரசு சின்னம் அச்சிட்ட துணிகளை விற்பனை செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை, ஏப்.5: முரசு சின்னம் அச்சிட்ட துணிகளை விற்பனை செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த எஸ். முரளிமோகன் வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது:

நான் பின்னலாடை துணிகளை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறேன். எனது துணிகளுக்கு பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் முரசு இலட்சினையைப் பெற்றுள்ளேன். சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், எனது தொழில் பாதிக்கப்படும். அந்தச் சின்னத்தைத் திரும்பப் பெறக் கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதில் கூறியிருப்பது:

இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அந்த அரசியல் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தக முத்திரையாக பயன்படுத்தப்படும் ஓர் இலட்சினையை அரசியல் கட்சிக்கு ஒதுக்க சட்டத்தில் தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதன்படி பார்த்தால் முரசு சின்னத்தை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியதால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்போது தேர்தல் நேரமாக இருப்பதால் முரசு சின்னம் அச்சிட்ட துணிகளை தேர்தல் முடியும் வரை மனுதாரர் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

* தொகுதி - ஓர் அறிமுகம்!: உத்தரமேரூர் (பொது)

தொகுதி பெயர் : உத்தரமேரூர்
தொகுதி எண் : 36
அறிமுகம் :
1952-ம் ஆண்டு உத்தரமேரூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் எல்லைகள் மட்டும் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளன. உத்தரமேரூர் தாலுக்காவின் கிராமங்கள், காஞ்சிபுரம் தாலுக்காவின் சில கிராமங்களும் இத் தொகுதியில் வருகின்றன. மன்னர்கள் காலத்தில் குடவோலை முறை மூலம் தேர்தல் நடத்தும் முறை இப்பகுதியில்தான் உருவானது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
வாலாஜாபாத் பேரூராட்சி - 15 வார்டுகள்
உத்தரமேரூர் ஒன்றிய கிராமங்கள் (71): ஆதவப்பாக்கம், அகரம்தூலி, அழிசூர், அம்மையப்பநல்லூர், ஆனம்பாக்கம், அன்னாத்தூர், அரசாணிமங்கலம், அரும்புலியூர், அத்தியூர்மேல்தூலி, சின்னாலம்பாடி, எடமிச்சி, இடையம்புதூர், இளநகர், அனுமன்தண்டலம், கடல்மங்கலம், கலியாம்பூண்டி, கலியப்பேட்டை, கம்மாளம்பூண்டி, காராணை, காரியமங்கலம், கருவேப்பம்பூண்டி, காட்டான்குளம், கட்டியாம்பந்தல், காவாம்பயிர், காவனூர்புதுச்சேரி, காவாந்தண்டலம், கிளக்காடி, குன்னவாக்கம், மலையாங்குளம், மானாம்பதி, மான்பதிகண்டிகை, மருதம், மருத்துவாம்பாடி, மேல்பாக்கம், மேனலூர், நாஞ்சிபுரம், நெய்யாடிவாக்கம், ஒட்டந்தாங்கல், ஓரகாட்பேட்டை, ஓழையூர், ஒழுகரை, பாலேஸ்வரம், பழவேரி, பென்னலூர், பெருநகர், பெருங்கோழி, பணையூர், பொற்பந்தல், புலிபாக்கம், புலிவாய், புலியூர், புல்லம்பாக்கம், ராவத்தநல்லூர், ரெட்டமங்கலம், சாலவாக்கம், சாத்தனஞ்சேரி, சிலாம்பாக்கம், சிறுமயிலூர், சிறுதாமூர், சிறுபினாயூர், சித்தனக்காவூர், தளவராம்பூண்டி, தண்டரை, திணையாம்பூண்டி, திருப்புலிவனம், திருமுக்கூடல், திருவாணைக்கோயில், தோட்டநாவல், வழுதாவூர், வயலக்காவூர், விசூர்.

வாலாஜாபாத் ஒன்றிய கிராமங்கள் (27):
அகரம், ஆலப்பாக்கம், அழிமிச்சேரி, அய்யம்பேட்டை, தேவரியம்பாக்கம், ஏகானாம்பேட்டை, கீழ்ஒட்டிவாக்கம், கொட்டவாக்கம், குன்னவாக்கம், மருதம், முத்தியால்பேட்டை, நாதநல்லூர், நெய்யாடுபாக்கம், ஓலையூர், பூசைவாக்கம், புலியம்பாக்கம், புத்தகரம், சின்னிவாக்கம், தென்னேரி, திம்மராஜம்பேட்டை, திருவங்காரணை, தொல்லாழி, உள்ளாவூர், ஊத்துக்காடு, வயலூர், வேடல், வெம்பாக்கம்.

காஞ்சிபுரம் ஒன்றிய கிராமங்கள் (16):
அங்கம்பாக்கம், ஆற்பாக்கம், அவளூர், அய்யங்கார்குளம், இளையனார்வேலூர், களக்காட்டூர், காவாத்தண்டலம், கோலிவாக்கம், மாகரல், நாரப்பாக்கம், ஓரிக்கை, புஞ்சைஅரசந்தாங்கல், தம்மனூர், தேனம்பாக்கம், வளத்தோட்டம், விஷார்.
வாக்காளர்கள் :
ஆண்கள் பெண்கள் திருநங்கைகள் மொத்தம்
95,358 96,112, 17 1,91,487
வாக்குச்சாவடிகள் :

மொத்தம் - 222
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
வி.குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர், 9445000168.

வர்த்தகச் செய்தி மலர் :

* பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் கையாள வேண்டும்: சி. ரங்கராஜன்  

ரூபாயின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர சட்ட ரீதியான அனைத்து வழிகளையும் அரசு கையாள வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரங்கராஜன், “ரூபாயின் பணவீக்கத்தை தற்போதுள்ள 8.31 விழுக்காட்டிலிருந்து 4 முதல் 5 விழுக்காட்டிற்குள் கொண்டு வர என்னென்ன சட்ட வழிகள் உண்டோ அனைத்தையும் அரசு கையாள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஒரு பக்கத்தில் பொருளாதார வளர்ச்சி, மறுபக்கத்தில் விலைவாசி ஏற்றம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒப்புமையின்மையை விளக்கிய ரங்கராஜன், பொருளாதார வளர்ச்சிக்கு விலை நிலைத்தன்மை மிகவும் அவசியமான சூழலாகும் என்று கூறியுள்ளார்.

கடந்த 4 வாரங்களாக காய்கறிகளின் விலை உயர்வால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் உயர்ந்துவருவதைக் குறிப்பிட்ட ரங்கராஜன், அடுத்த சில வாரங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் குறையும் என்றும் கூறியுள்ளார்.

* சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் நிறைவு   

மும்பை, ஏப்.5: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 33.83 புள்ளிகள் சரிந்து 19,667.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 1.6 புள்ளி மட்டும் சரிந்து 5910.05 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் பிஎச்இஎல், சிப்லா, ரிலையன்ஸ் கம்யூ, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா பவர், டிஎல்எஃப், விப்ரோ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, ஜிந்தால் ஸ்டீல், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, ஐடிசி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஜெய்ப்ரகாஷ் அசோசியேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்தியர்களை நேசிக்கிறேன்-தவறாகப் பேசவில்லை: அப்ரிதி

கராச்சி: நான் இந்தியர்கள் குறித்து கூறிய கருத்துக்களை மீடியாக்கள் தவறாக வெளிப்படுத்தியுள்ளன. நான் இந்தியர்களை நேசிக்கிறேன், இந்தியாவில் விளையாடிய அனுபவம் அற்புதமானது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி.

உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அளித்த பேட்டியில், இந்தியர்களுக்கு குறுகிய மனசு என்று கூறி விமர்சித்திருந்தார் அப்ரிதி. இந்திய மீடியாக்களையும் கடுமையாக அவர் விமர்சித்திருந்தார்.

 
ஆனால் தான் அப்படி கூறவில்லை என்று இப்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மீடியாக்கள் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். இது வெட்கமாக உள்ளது. இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து விரும்பி வருகிறேன். சில நேரங்களில் அதுகுறித்துக் கூறும்போது ஏதாவது வேறு அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் இப்போது நான் பேசியதையும் தவறாக கூறி வி்ட்டனர்.

இந்தியாவில் விளையாடியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இந்தியர்களை நான் நேசிக்கிறேன். எனது கருத்துக்களை எதிர்மறையாக பார்க்காதீர்கள். இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு எப்போதும் ஆதரவு இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி இரு நாட்டு மக்களிடையே துவேஷத்தை வளர்த்து விட மீடியாக்கள் காரணமாக அமைந்து விடக் கூடாது.

* இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து கிர்ஸ்டன் விலகினார்

05-gary-kristen-1-600.jpg


டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் இன்று முறைப்படி தனது பொறுப்பை விட்டு விலகினார்.

இந்திய வீரர்கள் செய்துள்ள சாதனைக்காக பெருமைப்படுகிறேன். இப்போது நான் கிளம்பும் நேரம் வந்து விட்டது. எனது குடும்பத்தினருக்காக நான் நேரத்தை செலவிட வேண்டியதுள்ளது. எனவே இனியும் என்னால் இங்கு நீண்ட காலம் தங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணிக்கு எத்தனையோ பயிற்சியாளர்கள் வந்து போய் விட்டனர். ஆனால் அத்தனை பேருமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கினார்களே தவிர இந்திய அணியை சாதனைக்குள்ளாக்க முடியவில்லை. ஆனால் கிர்ஸ்டன் சத்தம் போடாமல், இந்திய அணியை சாதிக்க வைத்து விட்டார்.

உலகக் கோப்பைப் போட்டியுடன் கிர்ஸ்டனுனான ஒப்பந்தம் முடிவதால், அவர் தொடர்ந்து நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதால், கிர்ஸ்டன் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

ஆனால் தான் தொடர்ந்து நீடிக்கப் போவதில்லை என்று கிர்ஸ்டன் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், எனது வேலை முடிந்து விட்டது. நான் தொடர வேண்டும் என்று சச்சின்  , யுவராஜ் உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்டனர். ஆனால் என்னால் முடியாது. காரணம், எனது குடும்பத்தினர் நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை நான் நிராகரிக்க முடியாது.

எனது குடும்பத்தினருடன் நான் நேரத்தை செலவிட விரும்புவதால் தொடர்ந்து வீரர்களுடன் இருக்க வாய்ப்பில்லை. அத்துடன் வேலையும் முடிந்து விட்டது. எனவே கிளம்பும் நேரம் வந்து விட்டதாகவே உணர்கிறேன்.

நான் தொடர்நது நீடிக்க வேண்டும் என்று அனைவரும் கோருவது என்னை நெகிழ வைத்துள்ளது. இதை எனக்குக் கிடைத்த கெளரவமாக உணர்கிறேன். தற்போது 3 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டேன். எனக்கு இரு மகன்கள் உள்ளனர். தந்தையுடன் இருக்க அவர்கள் விரும்புகின்றனர். அதை நான் புறக்கணித்து விட முடியாது என்றார் கிர்ஸ்டன்.

இந்த நிலையில் இன்று முறைப்படி தனது பதவியிலிருந்து விலகினார் கிர்ஸ்டன். தனது விலகல் குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு வெளிநாட்டுக்காரனாக இருந்தாலும் கூட என்னை தங்களில் ஒருவராக வரித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியினருக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகும். அவர்கள் காட்டிய அன்பிலும், மரியாதையிலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். 

கடந்த மூன்று ஆண்டு காலம் நான் பணியாற்றியது மிகப் பெரிய அனுபவம். இந்தியர்கள் என்னை ஏற்றுக் கொண்டது அதை விட மிகப் பெரிய அனுபவம். இந்திய மக்கள் கிரி்ககெட்டை மிகவும் நேசிக்கிறார்கள். இந்திய ரசிகர்களிடமிருந்து வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் அபாரமானது, சிறப்பானது. 

இந்தியா நிச்சயம் மிக அழகிய நாடு. இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். அது பெருமை தருகிறது.

எனது ஊருக்கு நான் திரும்புகிறேன். அங்கு எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இப்போதைக்கு வேறு எந்த வேலையையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் ஏதாவது ஒன்றில் நான் கட்டாயம் ஈடுபடுவேன். 

எனது வாழ்க்கையில் இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்ததுதான் மறக்க முடியாத அனுபவமாகும். இதை என்றுமே நான் மறக்க மாட்டேன்.

நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டி மறக்க முடியாதது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்தியா கடுமையாக உழைத்தது. சிறப்பாக ஆடியது. எதுவுமே எங்களுக்கு எளிதாக இருக்கவில்லை. எந்த ஒரு வீரரும் தனக்கென இதில் ஆடவில்லை என்பதுதான் முக்கியமானது. ஒட்டுமொத்த அணியாக அவர்கள் ஆடினார்கள். இதனால்தான் கோப்பை அவர்களது கையில் உள்ளது. இந்திய வீரர்கள் விளையாடிய விதம் என்னை வியப்படைய வைத்துள்ளது, பெருமை தந்துள்ளது.

ஒவ்வொரு வீரரும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் ஆடினர். ஒருவருக்கொருவர் ஆதரவாக, உறுதுணையாக இருந்தனர். 

நான் நிச்சயம் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன். ஐபிஎல்லில் பயிற்சியாளராக செயல்படுவது என்பது அபாரமானது. நல்ல ஒரு வாய்ப்பும் கூட. இருப்பினும் இப்போதைக்கு நான் எந்த வேலையையும் ஒப்புக் கொள்ளவில்லை.

ஸ்ரீசாந்த் நல்ல திறமைசாலிதான். இருப்பினும் ஸ்திரத்தன்மையை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அது அவசியம். அடுத்த கட்டத்துக்கு மாற ஸ்ரீசாந்த் முயல வேண்டும். இல்லாவிட்டால் வீணடிக்கப்பட்ட திறமைசாலியாக அவர் மாறி விட அவரே காரணமாக அமைந்து விடுவார் என்றார் கிர்ஸ்டன்.

இந்திய அணியினருக்கு அவர்களுக்கிடையே இருந்த பூசலை, ஈகோவை நீக்கி, உள்ளுக்குள் மறைந்திருந்த திறமைகளையும் உணர வைத்து பெருமைக்குரியவர் கிர்ஸ்டன். அந்த வகையில் இந்திய அணியினருக்கு கிர்ஸ்டனின் சேவை மிகப் பெரியதே.


*ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோவில் - காஞ்சிபுரம்.

மூலவர் : பவளவண்ணர்

அம்மன்/தாயார் :  பவழவல்லி (பிரவாளவல்லி)
   -
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : பிரவாளவண்ணர் ( திருப்பவளவண்ணம்)
  ஊர் : திருபவளவண்ணம்
  மாவட்டம் : காஞ்சிபுரம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
     
  மங்களாசாஸனம் 

திருமங்கையாழ்வார்

வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் 
கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன் குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான் 
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணி வரையினுச்சியாய் பவள வண்ணா 
எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
     
  பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று  
   
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு நேரே கிழக்கு திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஏகாம்பரேஸ்வரரும், பவளவண்ணரும் எதிரெதிரே பார்த்தவாறு இருக்கின்றனர். பிரகாரத்தில் பிரவாளவல்லி தாயார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது.  
   
தலபெருமை:
     
  108 திவ்யதேசங்களில் இங்குள்ள பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கோலம்: மேற்கு நோக்கி வீற்புகோலம் ராஜகோபுரம்: ஐந்து நிலை பார்வதிதேவிக்கு இத்தலத்தில் காட்சி தந்துள்ளார். சுவாமியின் அருகில் சந்தான கோபாலகிருஷ்ணர் இருக்கிறார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர். மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபாரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீலநிறமாகவும் காட்சி தந்தாராம். அவ்வகையில் பார்த்தால் இவர் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக இருக்கிறார். சத்ய க்ஷேத்ரம்: ஒருசமயம் பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு சென்றார். விஷ்ணு அவரைக் கவனித்தும், கவனிக்காதவர் போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கருதிய மகரிஷி, அவரது மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடிவிட்டார். தவறை உணர்ந்த பிருகு, பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று அவரை வழிபட்டு விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள "சத்ய க்ஷேத்ரம்' எனும் இத்தலத்திற்கு சென்று மகாவிஷ்ணுவை வேண்டினால் விமோசனத்திற்கு வழி கிடைக்கும் என்றார் நாரதர். அவரது ஆலோசனைப்படி இங்கு வந்த பிருகு, சக்கரத்தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை எண்ணி தவம் செய்து வணங்கினார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு குறித்த காலத்தில் விமோசனம் அளித்தார். எனவே இந்த முனிவர், கருவறையில் விஷ்ணுவை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். எண்திசை அதிபர்கள்: இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், வீடு, மனையில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வீடு, கட்டடங்கள் கட்டுவதில் தடை தாமதம் உள்ளவர்கள் இந்த சன்னதியின் கீழ் நின்று வணங்கினாலே தங்கள் குறை தீரும் என்று நம்புகிறார்கள். கோயிலுக்கு முன்பகுதியில் சக்கர தீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இத்தீர்த்தத்தின் மத்தியில்தான் சுவாமி சக்ராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கின்றனர்.  
   
தல வரலாறு:
     
  விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார். இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி சாப விமோசனம் பெற, யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மன். கணவன், மனைவி இருவரும் இணைந்து நடத்தினால்தான் யாகம் பரிபூரணம் அடையும் என்பது நியதி. ஆனால், பிரம்மாவோ அவரது மனைவி சரஸ்வதிதேவியை அழைக்காமல் தனியே யாகம் செய்தார். இதனால் மனைவியின் அதிருப்தியையும் அடைந்தார். சரஸ்வதி சில அசுரர்களை அனுப்பி யாகத்தை நிறைவேறவிடாமல் செய்தாள். இதனால் கலவரமடைந்த பிரம்மா, சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணுவும் அவ்வாறே செய்து, அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிறமேனியனாக (சிவந்த உடலுடன்) காட்சி கொடுத்தார்.   இதனால் சுவாமிக்கு "பவளவண்ணர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இவருக்கு "பிரவாளவண்ணர்' என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த ஆதிசேஷன், பவளவண்ணரின் தலைக்கு மேல் குடையாக நின்றார். 

திருவிழா:
     
   வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பங்குனியில் 5 நாட்கள் பவித்ரஉற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

நல்ல எண்ணம் வேண்டும் - புத்தர்.

* உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்
களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.

* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் 
மனிதன் விரைந்து முன்னேறுவான், 
காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.


வினாடி வினா :

வினா - உலகின் மிகப்பெரிய நூலகம் எது ?

விடை - அமெரிக்க காங்கிரஸ் நூலகம் - வாஷிங்டன் D.C.

இதையும் படிங்க :

"சமூக மாற்றம் தேவை!'

large_219162.jpg

மாற்றுத் திறனாளியான வக்கீல் வெங்கடகிருஷ்ணன்: பிறவியிலேயே பார்வை இல்லாமல் பிறந்ததால், என் பெற்றோர் மிகவும் துவண்டு போயினர். 10 வயது வரை, எங்கும் போகாமல், வீட்டிலேயே இருந்தேன். அதன் பின் தான், ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். நான் புரிந்து கொள்ளும் வேகத்தை பார்த்து,சில வாரங்களில் என்னை, இரண்டாம் வகுப்பில் போட்டுவிட்டனர்.படிப்பில் அதிக ஆர்வத்துடன் படித்ததால், பிளஸ் 2 தேர்வில், வணிக மேலாண்மை பாடத்தில், மாநிலத்தில் முதலாவதாக வந்தேன். இளங்கலையில், பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். அதன் பின், எம்.பி.ஏ., முடித்து, சட்டம் படித்து, கடந்த, 11 ஆண்டுகளாக வக்கீலாக இருக்கிறேன்.இதுவரை நான் படித்த அனைத்திலும்,முதலாவதாகவே வந்திருக்கிறேன். படிப்பில், என் பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.என் அம்மா, பாடப் புத்தகத்தைப் பார்த்து வாசிப்பார். அவர் வாசிக்கும் போது, நான் பிரைலி முறையில் எழுதி, பின் படிப்பேன். கல்லூரி காலங்களில், அனைத்து பாடங்களையும் என் அப்பா வாசித்து, தன் குரலை டேப்பில் பதிவு செய்வார். அதை கேட்டு படிப்பேன். அதிலும், பிரமாதமாக படித்து, வெற்றி பெற்றேன்.ஆனால், வேலை என்று வந்த போது, என்னை ஜூனியராக சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. வக்கீல் நாராயணசாமி தான், என்னை ஜூனியராக சேர்த்துக் கொண்டார். அதன் பின், என் நண்பர் பாண்டியன், நான் வாதாடும் வழக்குகளுக்கு தேவையான விவரங்களை, பொறுமையாக வாசித்துக் காட்டுவார். அவற்றை நினைவில் வைத்து வாதாடுவேன்.என் குறையைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லாத அளவுக்கு, வாழ்க்கை பரபரப்பாக போகிறது. பொருளாதாரத்திலும், பெற்றோரை பார்த்துக் கொள்வதிலும், நினைத்த வெற்றியைப் பெற்றுள்ளேன். சமூகத்தில், மாற்றுத் திறனாளிகள் பற்றிய பார்வை, சமீப காலங்களில் மாறி இருந்தாலும், என்னைப் போன்றவர்கள், எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், சாதாரணப் பெண்கள் ஏனோ, திருமணம் செய்ய முன்வரவில்லை. சமூகத்தில், இன்னும் மாற்றம் தேவை.


நன்றி - தின மலர், தின மணி, சமாச்சார்.

--வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர், சமாச்சார்.

--


No comments:

Post a Comment