Tuesday, April 12, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 12 , 2011.

முக்கியச் செய்திகள் :

large_223080.jpg

* தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன்: காந்தியவாதி ஹசாரே சபதம்

"திரும்பத் திரும்ப ஊழல் செய்திடும் அரசு பணியாளர்களுக்கு மரண தண்டனை அளித்திட வேண்டும்; லோக்பால் மசோதா மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை இல்லையென தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லாத நபர் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெறக் கூடாது. அவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் லோக்பாலோடு மட்டும் நான் நிறைவடைந்துவிட மாட்டேன். தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்திடும் போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளேன்' என்று, அன்னா ஹசாரே கூறினார்.

ஜன லோக்பால் மசோதா நிறைவேற்ற அரசு முன்வந்து, ஹசாரே பெற்ற வெற்றி மகத்தானது. அதை ஒட்டி, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அன்னா ஹசாரே பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:ஊழலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தேச துரோகிகள் ஆவார்கள். அரசாங்க பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்பவர்களை சிறையில் தள்ள வேண்டும். திரும்பவும் ஊழல் செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவர்கள் திருந்தவில்லை எனில், அந்த ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஊழலை ஒழிக்க வழி பிறக்கும்.காந்திய தொண்டராக இருக்கும் நான் மரண தண்டனையை ஆதரித்து பேசுவது பிழையாக கூட தோன்றலாம். ஆனால், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் ஊழல் செய்து சொத்து சேர்ப்பவர்களுக்கு, அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும் என நம்புகிறேன். அந்த தண்டனையை பார்த்த பிறகு தான், எல்லோருக்கும் தப்பு செய்வதற்கு தயக்கம் வரும்.

இப்போது அரசாங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் முழுவதையும் வீடியோ எடுத்திட வேண்டும். அந்த கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள்,வாதங்கள்,எதிர்வாதங்கள், தீர்வுகள் என எல்லாவற்றையுமே வீடியோ எடுத்திட வேண்டும். அப்போது தான் ஒளிவுமறைவு இருக்காது. எல்லாமே வெளிப்படையாக அமையும். ஒளிவுமறைவுகள் தான் ஊழலுக்கு முதல் காரணம்.மத்திய அமைச்சர் கபில்சிபல் ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது லோக்பால் மசோதாவை கிண்டல் அடித்துள்ளார். இந்த மசோதாவை கொண்டு வந்தவுடன் ஏழை எளிய மக்களுக்கு பள்ளிகளில் அட்மிஷன் கிடைத்துவிடுமா என்றும் ஏழைகளுக்கு மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி நல்லமுறையில் சிகிச்சை பெற்றுவிடுவார்களா என்றும் கேலி பேசியுள்ளார்.

அந்த மசோதாவை கேலியும் கிண்டலும் கலந்த தொனியில் பேசுவது மிகவும் துரதிஷ்டவசமானது. அவருக்கு லோக்பால் மசோதா மீது நம்பிக்கை இல்லை என்றால், மசோதா தயாரிப்புக் குழுவிலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது. அதைத் தான், அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்திட வேண்டியது அவசியம். இந்த தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்களும் லோக்பால் மசோதாவைப் போலவே பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையாகும். இதை இனிமேலும் தாமதப்படுத்துவது தவறு. எனவே லோக்பால் மசோதாவை நிறைவேற்றிய கையோடு, தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென போராட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்

* மதில் மேல் பூனை: முடிவெடுக்க முடியாமல் வாக்காளர்கள் குழப்பம்

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 24 மணி நேரமே இருக்கும் நிலையில், எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பது என முடிவெடுக்க முடியாமல் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் முடிவைக் கணிக்க முடியாமல், கட்சித் தொண்டர்கள் கவலையில் இருக்கின்றனர்.

அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியோடு முடிவுக்கு வந்துவிட்டது. இரு பெரும் திராவிட கட்சிகளும், தங்கள் கொள்கை முழக்கத்தை, முடித்துவிட்டனர். பெரிய கட்சிகளுக்கு இணையாக, பா.ஜ., ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகளும் இழுத்துப் பிடித்தன.பத்திரிகை விளம்பரங்களை அதிகளவில் கொடுத்து, கழகங்களையே வியப்பில் ஆழ்த்தியது ஐ.ஜே.கே., லோக்சபா தேர்தலை விட அதிகளவில் அகில இந்திய தலைவர்களை அழைத்து வந்து, பிரசாரத்தின் தரத்தையே உயர்த்திக் காட்டியது பா.ஜ.,எல்லாவற்றையும் பார்த்த அப்பாவி வாக்காளர்கள், அமைதியே உருவமாக இருக்கின்றனர். எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பது என்பது தான் அவர்களின் அமைதிக்கான காரணம்.

* அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்?

11011041121157583.jpg

சென்னை: ""வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால், அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் நடந்த பின் கூட, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரித்துள்ளார். இதையடுத்து, சில தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் பிரசாரம், மாலை 5 மணியுடன் முடிந்து விட்டது. இதன்பின், "டிவி'க்களில் கூட பிரசாரம் செய்யக் கூடாது. செய்தி தவிர, பிரசாரமாக ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய வகையில் வழக்கு பதிவு செய்யப்படும். எஸ்.எம்.எஸ்., மூலமும் பிரசாரம் செய்யக் கூடாது.

தேர்தலில் சில தொகுதிகளில் பணப் பட்டுவாடா செய்வது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அந்த தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்படும். பணப் பட்டுவாடா மற்றும் அதிகளவில் முறைகேடுகள் நடந்தது பற்றி, ஓட்டுப் பதிவுக்கு பிறகு கூட தகவல் கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும்.

சில தொகுதிகளில், பணம் கொடுப்பதாக அதிகளவில் புகாரும், சில தொகுதிகளில் குறைந்தளவு புகாரும் வந்துள்ளன. இதுவரை, மொத்தம் 33 கோடியே 11 லட்சம் ரொக்கமும், 12 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், கணக்கு காட்டியதன் அடிப்படையில், 5.18 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக வந்த புகாரின் பேரில், இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்.

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, இதுவரை, 61 ஆயிரத்து 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில், சுவர்களை சேதப்படுத்தியதாக, 55 ஆயிரத்து 254 வழக்குகளும், வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக, 2,850 வழக்குகளும், வழிபாட்டுத்தலங்களை தவறாக பயன்படுத்தியதாக, 24 வழக்குகளும், சட்டவிரோத கூட்டங்கள் நடத்தியதாக, 154 வழக்குகளும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 975 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பணப் பட்டுவாடாவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பறக்கும் படையினர் அங்கு செல்வதற்குள், அவர்கள் பணத்தை கொடுத்து முடித்து ஓடி விடுகின்றனர்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

கொளத்தூரில் தடை?எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பிரசாரத்தின் சுருதியைக் குறைத்த தேர்தல் கமிஷன், பண வினியோகத்தை தடுக்க வங்கிக் கணக்குகளை கண்காணித்தல், வாகனச் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கில் பணம், பொருள், நகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பண வினியோகம் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் கமிஷன், வி.ஐ.பி., தொகுதிகளான திருவாரூர், ஸ்ரீரங்கம், ரிஷிவந்தியம், கொளத்தூர் மற்றும் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.மதுரையில் அழகிரி அதிகார எல்லையில் வரும் தொகுதிகள் மீது, கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளில் பண வினியோகம் நடந்தால், உடனே தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

உலகச் செய்தி மலர் :

* ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை 

jappannn.jpg

ஜப்பானில் இன்று மீண்டும் புகுஷிமா பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.1 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 3 அடி அளவில் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த வாரமும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எதுவும் ஏற்படவில்லை.

கடந்த மார்ச் 11-ம் தேதி 9 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவற்றை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஜப்பானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதால் மத்திய செண்டாயில் பெரிய எலக்ட்ரானிக்ஸ் கடையில் இருந்த ஏராளமான பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் ஓடிவந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் புகுஷிமா-டாய்ச்சி அணு உலைக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.

* லிபியாவில் போர் நிறுத்தம்: ஆப்பிரிக்கத் தலைவர்களின் முயற்சிக்கு கடாஃபி ஒப்புதல்

aprikka.jpg

திரிபோலி, ஏப்.11: லிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆப்பிரிக்கத் தலைவர்கள் வகுத்தளித்த யோசனையை அதிபர் மம்மர் கடாஃபி ஏற்றுக் கொண்டுள்ளார்.

 ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை தலைநகர் திரிபோலி சென்று அங்கு கடாபியை சந்தித்து பேச்சு நடத்தினர். இப்போது எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ள பெங்காஸிக்குச் சென்று அங்கு பேச்சு நடத்த உள்ளனர்.

 பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, காலக் கெடுவுக்குள் பதவி மாற்றம் உள்ளிட்டவை ஆப்பிரிக்க தலைவர்களின் பேச்சு வார்த்தையில் இடம்பெற்றுள்ளன.

 ஆப்பிரிக்க தலைவர்களின் பேச்சு வார்த்தை மூலம் உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்து, அங்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள வழியேற்படும்.
 முன்னதாக சர்வதேச படைகள் கடந்த மாதம் லிபியா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த உடன்பாட்டை கடாஃபி ஏற்கவில்லை. அத்துடன் பதவி விலகவும் அவர் மறுத்துவிட்டார்.

 இதனிடையே கடாஃபியின் ஆதரவுப் படைகள் போராளிகளின் வலுவான கோட்டையாகத் திகழும் அஜதாபியா பகுதியில் தாக்குதல் நடத்தின. அரசு எதிர்ப்புப் படைகள் பின்வாங்கியதாக "அல்ஜஸீரா' தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது

* பாகிஸ்தானுக்குத் திரும்பும் முடிவைக் கைவிடவில்லை: முஷாரப்

இஸ்லாமாபாத், ஏப்.11: பாகிஸ்தானுக்குத் திரும்ப வரப் போவதாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துவிட்டதால் நாடு திரும்பும் திட்டத்தை முஷாரப் கைவிட்டு விட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ளார் முஷாரப்.

 தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ராணுவத்திடம் ஒருபோதும் கோரிக்கை வைக்கவில்லை என்றும், நாடு திரும்பும் திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 தனக்கு கூடுதல் பாதுகாப்பு ஏதும் தேவையில்லை என்றும், பாதுகாப்பு அளிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, ராணுவம் அல்ல என்றும் முஷாரப் குறிப்பிட்டார்.
 தனது உயிருக்கு அல்-காய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு தான் ஒருபோதும் கோரிக்கை வைக்கவில்லை என்று இங்குள்ள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேசியச் செய்தி மலர் :

thumb_223050.jpg

* அடுத்தது என்ன?தீவிர நடவடிக்கை தொடரும் என்கிறார் ஹசாரே

புதுடில்லி : " ஊழலுக்கு எதிராக இன்னும் தீவிரமாக போராட வேண்டியுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிட்டு வருகிறோம்' என, காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தினார்.

லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கும் பணியில், "சிவில் சொசைட்டி' என, அழைக்கப்படும் பொதுமக்கள் பிரதிநிதிகளை சேர்க்க வலியுறுத்தி, சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே கடந்த வாரம் உண்ணாவிரதம் இருந்தார்.இவரது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகியதை அடுத்து, வரைவு மசோதா கமிட்டில், பொதுமக்கள் தரப்புக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய அரசு முன்வந்தது. இதையடுத்து, தனது 98 மணி நேர உண்ணாவிரதத்தை, அன்னா ஹசாரே முடித்துக் கொண்டார்.இந்நிலையில், லோக்பால் மசோதா தொடர்பான தனது கருத்துக்களை, செய்தியாளர்களிடம் நேற்று அவர் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:தற்போது நமக்கு கிடைத்துள்ளது, மிகச் சிறிய வெற்றி தான். இது ஆரம்ப கட்டம். ஊழலை ஒழிப்பதற்காக, இன்னும் தீவிரமாக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிட்டு வருகிறோம். ஊழல் பேயை நாட்டிலிருந்து அடியோடு விரட்ட, மேலும் தீவிரமான சட்டங்கள் தேவைப்படுகின்றன.உண்ணாவிரதத்தை மகாராஷ்டிராவின் ஏதாவது ஒரு இடத்தில் தான் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள் தான், டில்லியில் போராட்டம் நடத்தும்படி வற்புறுத்தினர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு மக்களிடையே மகத்தான ஆதரவு எழுந்தது. இந்த மசோதா, வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். சிறப்பு கூட்டத் தொடரை கூட்டினால், அரசுக்கு வீண் செலவு ஏற்படும்.

வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி இடம் பெறாதது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், சட்ட நிபுணர் சாந்தி பூஷனும், அவரது மகன் பிரஷாந்த் பூஷனும் இடம் பெற்றுள்ளது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது. ஒரே குடும்பத்தில் இருவர் என்பது சலுகை என்று கூறியுள்ளனர்.

எங்களை பொறுத்தவரை, தற்போதைய குழுவில் சட்ட நிபுணர்கள் இடம் பெறுவது முக்கியம் என, கருதுகிறோம். தனிப்பட்ட நபர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட, நிபுணர்கள் இந்த குழுவில் இடம் பெற்றால் மட்டுமே, ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான சட்ட விதிமுறைகளை உருவாக்க முடியும்.

இந்த குழுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் நியமிக்கப்பட்டதற்கு, பாபா ராம்தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான் காந்தியவாதி, என்னைப் பற்றி என்ன குற்றச்சாட்டுகள் வேண்டுமானாலும் கூறலாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் குழுவில் இடம் பெறுவதில் எந்த தவறும் இல்லை என்றே கருதுகிறேன்.

தற்போது நமக்கு அனுபவம் தான் முக்கியம். சட்டத்துறையில் வல்லவர்களான நிபுணர்களின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. வரைவு மசோதா தயாரிக்கும் அமைச்சரவை குழுவில் இருந்த சரத் பவார் ராஜினாமா செய்தது குறித்து கேட்கப்படுகிறது. இது ஜனநாயக நாடு. ஒருவர் பதவி விலக வேண்டும் என, மக்கள் கருதினால், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, சம்பந்தபட்டவர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அமைச்சரவை குழுவில் இருந்து, சரத் பவார் ஏற்கனவே விலகி விட்டார்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

இதற்கிடையே, கிரண்பேடி கூறுகையில், "லோக்பால் வரைவு மசோதா குழுவில், நானும் இடம் பெற வேண்டும் என, ஒருபோதும் விரும்பியது இல்லை. அரசின் நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான், இந்த குழுவில் இடம் பெற வேண்டும். அப்போது தான், ஊழலுக்கு எதிராக உருவாக்கப்படும் சட்டம், தீவிரமானதாக இருக்கும்'என்றார்

* சிலியில் பிடிபட்டவர் காந்தஹார் விமானக் கடத்தல்காரரா?

புதுதில்லி, ஏப். 11: சிலி நாட்டு போலீஸôரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஒருவர் காந்தஹார் விமானக் கடத்ததில் தேடப்பட்டு வந்தவராக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸýக்கு சொந்தமான ஐசி-814 என்கிற விமானம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது.
 
ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தஹாரில் தரையிறக்கப்பட்ட இந்த விமானத்தில் 160-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். 8 நாள் பேச்சுக்குப் பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
 இது தொடர்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மெüலானா மசூத்தின் அப்துல் ராஃப் உள்ளிட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில், அப்துல் ராஃப் என்பவரை சிலி தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சிலி நாட்டு அதிகாரிகள் சிபிஐக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அவரது புகைப்படம் மற்றும் கைரேகைகளும் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவர்தான் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபரா என்பதை சிபிஐ அதிகாரிகளால் உறுதி செய்ய முடியவில்லை.

 இதையடுத்து, பிடிபட்ட நபரை அடையாளம் காணவும் அவரிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் குழு சிலிக்குச் செல்ல இருக்கிறது.

* அசாமில் 70% வாக்குப்பதிவு

குவாஹாட்டி, ஏப். 11: அசாம் சட்டப் பேரவைக்கு திங்கள்கிழமை நடந்த இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சில இடங்களில் வன்முறை, வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு போன்ற சம்பவங்கள் நடந்தன. இவை தவிர்த்து வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது. அசம்பாவிதங்களில் 22 பேர் காயமடைந்தனர். அசாம் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 4-ம் தேதி நடந்தது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 64 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடந்தது. சுமார் 96,77,117 வாக்காளர்களைக் கொண்ட மத்திய மற்றும் கீழ் அசாமிலுள்ள 14 மாவட்டங்களில் இந்த 64 தொகுதிகளும் அமைந்துள்ளன.

அசம்பாவிதங்கள்: தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்தது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 22 பேர் காயமடைந்தனர்.

ஜலேஸ்வர் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிலரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு தேர்தல் அதிகாரி கேட்டிருக்கிறார். இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸôர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச் சாவடியில் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. கோல்பாரா மேற்குத் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சிறிதுநேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையில் ஈடுபடுவதாகக் கூறி காமரூப் (ஊரக) மாவட்டத்தின் ரங்கியா தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸôர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இந்த 4 வாக்குச் சாவடிகளும் வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டது. மஸ்பாட், ஜாகிரோடு, சிபாஜார், சமகுரி ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் இடையேயான மோதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களத்தில் இருப்பவர்கள்: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பிரஃபுல்ல குமார் மஹந்தா, வருவாய்த்துறை அமைச்சர் பூமிதர் பர்மன், சுகாதார அமைச்சர் ஹிமந்தா விஸ்வசர்மா உள்ளிட்டோர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: தேசிய அளவில் 2 குழுக்கள் நியமிக்க மத்திய அரசு முடிவு

புதுதில்லி, ஏப்.11: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தேசிய அளவில் 2 குழுக்களை அமைக்க மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 கடந்த காலங்களில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறாக இனி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என விதிமுறையில் மாற்றம்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதனை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபில் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான கபில்சிபில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா ராஜிநாமா செய்த பின் தொலைத்தொடர்புத்துறையின் பொறுப்பை ஏற்றார்.

 தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தான் பதவி ஏற்று 100 நாட்கள் செயல்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தேசிய அளவில் அமைக்கப்படவுள்ள ஒரு குழு முன்னாள் நீதிபதி சிவராஜ் தலைமையிலும் மற்றொன்று சாம் பிட்ரோடா தலைமையிலும் அமைக்கப்படும். முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு தேசிய அளவில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக புதிய சட்டம் உருவாக்கும் பணியில் ஈடுபடும். ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அலைக்கற்றைகளை சரியான முறையில் உபயோகிக்கின்றனவா என அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வை எந்த நிறுவனம் செய்வது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிராய் உள்ளிட்ட அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இது போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

 கடந்த வாரம் ஊழலுக்கு எதிராக தில்லியில் காந்தியவாதி அண்ணா ஹஸôரே உண்ணாவிரதம் நடத்தி ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா ஒன்றை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து மத்திய அரசு 10 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து லோக் பால் மசோதாவின் வரையறை குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பாக ஊழலில் தொடர்பு இல்லாத 5 மத்திய அமைச்சர்கள், போராட்டக்குழுவின் சார்பில் அண்ணா ஹஸôரே உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நான் தில்லியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது ஏழைகளின் பிரச்னைகளுக்கு லோக்பால் மசோதா உதவாது என தெரிவித்திருந்தேன். இந்த கருத்துக்கு அண்ணா ஹஸôரே கடும் கண்டனம் தெரிவித்து இக்குழுவின் மீது நம்பிக்கை இல்லாதபட்சத்தில் ஏன் நான் உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

லோக்பால் மசோதாவை வலிமையான மசோதாவாக உருவாக்கி ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இது தொடர்பாக இம்மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள இக்குழுவின் முதல் கூட்டத்தில் ஒரு வலிமையான மசோதாவை உருவாக்குவது குறித்து அண்ணா ஹஸôரே உறுப்பினராக உள்ள குழுவுடன் கலந்து ஆலோசனை செய்யவிருக்கிறேன் என்றார்.

 இந்த பேட்டியின்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் சச்சின் பைலட், இந்த அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

* சீனா, கஜகஸ்தான் நாடுகளில் பிரதமர் சுற்றுப்பயணம்

புதுதில்லி, ஏப்.11: சீனாவில் நடைபெறவுள்ள ஐந்து நாடுகள் மாநாட்டில் பங்கு கொள்ள பிரதமர் மன்மோகன்சிங், செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

 இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு சீனாவிலுள்ள கடற்கரை நகரமான சான்யாவில் செவ்வாய்க்கிழமை துவங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கு கொள்ள செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரதமர் மன்மோகன்சிங் புறப்பட்டுச் செல்கிறார்.

 சர்வதேச பொருளாதாரம், நிதி நிலை, வளர்ச்சி, உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு உள்பட சில முக்கியப் பிரச்னைகள் குறித்து அந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஹுஜின்டாவ்,
 ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ், பிரேசில் அதிபர் டில்மா ரெüசெப், மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜாகப் ஜுமா ஆகியோரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசுகிறார்.

 இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக பிரதமர் ஏப்ரல் 15-ம் கஜகஸ்தான் நாட்டுக்கு செல்கிறார். அப்போது அணுசக்தி ஒத்துழைப்பு உள்பட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும், கஜகஸ்தானும் கையெழுத்திடுகின்றன.

 பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் குறித்து வெளிவிவகாரத்துறை செயலாளர் (பொருளாதாரத் தொடர்பு) மன்வீர்சிங் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியது: ஐந்து நாடுகள் கூட்டமைப்பு உறுப்பினர் நாடுகளுடன் சர்வதேச நிதி நிலை, பொருளாதார நிலை, பண வீக்கம் மதிப்பு உள்பட சர்வதேச பிரச்னைகள் குறித்து இந்தியா விவாதிக்கும்.

 ஐந்து உறுப்பினர் நாடுகளும் பணத்துக்கு மாற்றாக யென் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தியா பிரச்னை கிளப்பாது. இதைக் கிளப்ப சீனா விரும்புகிறது. டாலருக்குப் பதிலாக யென்னை பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்தலாம் என்பது சீனாவின் வாதமாகும். இதுபற்றி இன்னும் எந்த ஒரு முடிவுக்கும் இந்த உறுப்பு நாடுகள் வரவில்லை என்றார்.

* அசாம் தேர்தலில் பிரதமர் வாக்களிக்கவில்லை

pmmon.jpg

குவாஹாட்டி, ஏப்.11: அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மன்மோகன்சிங்கும், அவரது மனைவி குருசரண் கெüரும் வாக்களிக்கவில்லை.

 அசாம் சட்டப்பேரவைக்கான இறுதிகட்டத் தேர்தலில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

 திஸ்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதமர், அவரது மனைவி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பிரதமரும், அவரது மனைவி குருசரண் கவுரும் வாக்களிக்கவில்லை என்பதை திஸ்பூர் பேரவைத் தொகுதி தேர்தல் அதிகாரி ஜே.பாலாஜி உறுதி செய்தார்.

 திஸ்பூர் நகரிலுள்ள முன்னாள் அமைச்சர் ஹேமபிரபா சைக்யாவுக்குச் சொந்தமான வீட்டில் பிரதமர் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். அசாம் அரசுத் தலைமைச் செயலகம் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவரும் மன்மோகன்சிங், அசாம் மாநிலத்திலிருந்துதான் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனால் அவரது பெயர் இங்கு வாக்காளர் பட்டியலில் இடம்  பெற்றுள்ளது.

 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதே வாக்குச்சாவடியில் மன்மோகன் சிங் வாக்களித்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மன்மோகன்சிங் வாக்களிக்கவில்லை. அஞ்சல் மூலம் வாக்களிக்கும் உரிமை தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டுமே உள்ளது. பிரதமருக்கு அந்த உரிமையில்லை.

 சீனா, கஜகஸ்தான் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய பிரதமர் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். இதையடுத்து தில்லியில் திங்கள்கிழமை பணிகளில் பிரதமர் ஈடுபட்டிருந்ததால் அசாம் சென்று வாக்களிக்க முடியவில்லை என்று தெரியவருகிறது.

* தில்லி குடிநீரில் கிருமிகள்: புதிய சர்ச்சை

புது தில்லி, 11: தில்லி குடிநீரில் கிருமிகள் இருப்பதாக எழுந்த பிரச்னையில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

 தில்லி நகரில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள இந்தக் கிருமி தாக்கியவர் எந்த மருந்து உட்கொண்டாலும் அது பலன் தருவதில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் இதை மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறைச் செயலர் வி.எம்.கடோச் மறுத்துள்ளார். இவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரும் ஆவார்.

 ""இந்தியாவைத் தவறாகவும், தேவையில்லாமலும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செய்தியின் பின்னணியில் அறிவியல் நோக்கம் இல்லை,'' என்றார் அவர்.

 இது குறித்து மக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை என தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் கூறியுள்ளார். அநாவசியமாக பீதியைக் கிளப்பக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

 அதே வேளையில், "லான்செட்' அறிவியல் பத்திரிகையில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் முக்கிய ஆசிரியர் மார்க் டோல்மன், அரசு உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 மருந்துகளுக்கு அடங்காத ஒரு வகைக் கிருமி தில்லி குடிநீரில் இருப்பதை வெளியிடக் கூடாது என இந்திய விஞ்ஞானிகள் மிரட்டப்படுவதாக டோல்மன் கூறினார். எங்களுடைய ஆராய்ச்சி விஞ்ஞானபூர்வமானது.

 நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். இதே போன்ற ஆராய்ச்சியை வேறு பல நாடுகளிலும் செய்துள்ளோம்.

 ஆனால், இந்திய அரசு தங்களுடைய விஞ்ஞானிகளையே மிரட்டி, உண்மையை மறைத்து வருகிறது என்றார் டோல்மன்.

மாநிலச் செய்தி மலர் :

* பணம்: தேர்தலை ரத்தும் செய்யும் அதிகாரமும் உள்ளது  

prveenkumar.jpg

வாக்காளருக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால் தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், வாக்குப் பதிவு முடிந்த பின்னரும் மறு தேர்தல் நடத்த முடியும் என்றும் தெரிவத்துள்ள பிரவீன்குமார், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை ரூ.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதுவரை 61,000 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரவீன்குமார், தமிழகத் தேர்தலில் 66,799 மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும், 2,88,000 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

வாக்களிக்க பணம் கொடுத்தாலும், வாக்களிக்க பணம் வாங்கினாலும் ஓராண்டு சிறை உறுதி என்று தெரிவித்த பிரவீன்குமார், மே 13ஆம் தேதி 91 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

* இந்தியக் குடிமைப் பணி போல் இந்திய அறிவியல் பணிகள் உருவாக்கப்பட வேண்டும்: அப்துல் கலாம் யோசனை

apj1.jpg

சென்னை, ஏப். 11: அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்களை ஆராய்ச்சிகளில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்தியக் குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்) இருப்பதுபோல், இந்திய அறிவியல் பணிகள் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.

 சென்னை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவ மாணவிகளுடன் உரையாடிய அப்துல் கலாம், பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:

 நாட்டின் வளர்ச்சிக்கும், அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்களை ஆராய்ச்சிகளில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், இந்தியக் குடிமைப் பணிகளைப் போல் இந்திய அறிவியல் பணிகள் என்ற தனி பணிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் ஆலோசனை அளித்துள்ளேன்.

 இந்தப் பணியின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.ஒ.), விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.), அணு ஆராய்ச்சி துறை மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தலாம்.

 ஒவ்வொரு இளைஞனும் கல்வியில் சிறந்து விளங்கும்போதுதான், நாட்டுக்கு சிறந்த டாக்டர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

 அடுத்த 10 ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் உருவெடுப்பார்கள்.

 ஒவ்வொரு மரமும் 20 கிலோ கார்பன்-டை-ஆக்ûஸடை உறிஞ்சிக் கொண்டு, 12 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

 எனவே, ஒவ்வொரு மாணவரும் தாங்கள் படிக்கும் கல்லூரிகளிலும், வீடுகளிலும் மரம் நட வேண்டும் என்றார் அப்துல் கலாம்.

* தேர்தல் பணியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.750

விருதுநகர்: தமிழக சட்டசபை தேர்தலில், பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் வெப்கேமரா, லேப்-டாப் கம்ப்யூட்டர் இயக்கும் கல்லூரி மாணவர்களுக்கு, மதிப்பூதியமாக, 750 ரூபாய் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள், லேப்-டாப், வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. இதில், தொழில்நுட்ப வல்லுனர்களாக, கம்ப்யூட்டர் பிரிவைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களை தேர்தல் கமிஷன் யமித்துள்ளது. கடந்த இடைத்தேர்தலில் இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு, 500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. தற்போது, 750 ரூபாய் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

* வாக்குப் பதிவின்போது கிராமத்தினருக்கு முழு பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 11: திருவொற்றியூர் தொகுதியில் உள்ள கே.வி.கே. குப்பம் வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவின் போது தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கே.வி.கே. குப்பத்தைச் சார்ந்த கே. அஞ்சப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதன் விவரம்: 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் எங்கள் கிராமத்தில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து பிரச்னை எழுந்தது. வாக்குப் பதிவின்போது எங்கள் கிராமத்தினர் தாக்கப்பட்டனர். இந்தத் தேர்தலிலும் அது போன்ற பிரச்னை எழ வாய்ப்பு உண்டு. எனவே, வாக்குப் பதிவின் போது எங்கள் கிராம மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் கூறியது: எண்ணூர் பகுதிக்கு புதிய போலீஸ் உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அந்தக் கிராம மக்களுக்கு வாக்குப் பதிவின் போது தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

* ஏப்ரல் 21 முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

சென்னை, ஏப். 11: பத்தாம் வகுப்புத் தேர்வுகள் திங்கள்கிழமையோடு நிறைவடைந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளை ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

 இதில் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத் தேர்வுகள் மார்ச் 22-ம் தேதியும், பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 28-ம் தேதியும் தொடங்கின. கடைசி நாளான திங்கள்கிழமை சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது.

 இதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* பான் மசாலாவை தடை செய்ய வேண்டும்: பிரதமருக்கு கடிதம்

சென்னை,ஏப். 11: பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை தடை செய்யக் கோரி இந்தியாவிலுள்ள 17 மண்டல புற்றுநோய் மைய இயக்குநர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் மார்க்ரெட் ஜான் கூறியது: இந்தியா சரியான முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுதான். புகையிலைப் பொருள்களால் ஓராண்டுக்கு 10 லட்சம் பேர் இறந்து கொண்டிருக்கின்றனர். புகையிலை வேளாண்மை பயிர் என்று இருப்பதை மாற்றி, போதைப் பொருள் என்று வரைமுறைப்படுத்த வேண்டும்.

 புகையிலையை பயிரிடுவதற்கும், வளர்ப்பதற்கும், விநியோகம் செய்வதற்கான உரிமம் வழங்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசாங்கம் இந்த விஷயத்தில் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. ஏனென்றால் எந்த ஒரு வேளாண் பயிரும் இத்தனை மக்களை கொன்று குவிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்

img1101026038_1_1.jpg

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன். 

ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.

உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.

நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம். 

ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது. 

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.

மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.

‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.

மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.

‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம். 

‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம். 

கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.

கை‌ப்‌பு‌ண்‌ணி‌ற்கு க‌ண்ணாடி‌த் தேவையா எ‌ன்பது பழமொ‌ழி. ஆனா‌ல் ந‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களை‌க் கொ‌ண்டே நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌‌ட்டு‌ம் வகை‌யி‌ல் ம‌னித உட‌ல் அமை‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை எ‌‌ண்‌ணி‌ப்பாரு‌ங்க‌ள்.

வர்த்தகச் செய்தி மலர் :

*பங்குச் சந்தை நிலவரம் 'சென்செக்ஸ்' 189 புள்ளிகள் சரிவு
ஏப்ரல் 12,2011,00:35

மும்பை நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, சென்ற பிப்ரவரியில் 3.6 சதவீதமாக குறைந்துள்ளதாக செய்தி வெளியானது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்துகாணப்பட்டது.திங்கள்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 188.91 புள்ளிகள் சரிந்து, 19,262.54 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,426.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,242.59 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 56.30 புள்ளிகள் குறைந்து, 5,785.70 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,830.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,777.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
ராம நவமியை முன்னிட்டு விடுமுறை
ராம நவமியை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் @தசிய பங்குச் சந்தைகள் விடுமுறை அறிவித்துள்ளன.

இவை தவிர, அன்னிய கலாவணி மற்றும் நிதிச் சந்தைகள், உ@லாகம், பருத்தி உள்ளிட்ட Œந்தைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதர விளைபொருள் Œந்தைகள் வழக்கம்போல் öŒயல்படும். 

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
 
கோல்கட்டா அணி அசத்தல் வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.

காலிஸ் அரைசதம்:

கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார். 
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.

காம்பிர் அபாரம்:

அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார். 

அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:

சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:

ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:

அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.

கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

* 15 சிக்சர் 15 பவுண்டரி வாட்சன் உலக சாதனை; ஆஸி. வெற்றி   

டாக்காவில் இன்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் எடுத்த 229 ரன்களை ஷேன் வாட்சன் தனி நபராக நின்று 96 பந்துகளில் 185 ரன்களை விளாசியதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 15 சிக்சர்களை அடித்து உலக சாதனை புரிந்து ஆஸி.க்கு வெற்றிபெற்று தந்தார்.

ஆஸ்ட்ரேலியா 26 ஓவர்களில் 232/1 என்று அபார வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் மேற்கிந்திய அணியின் சேவியர் மார்ஷல் கனடா அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 12 சிக்சர்கள் அடித்து உலகச் சாதனையை வைத்திருந்தார்.

தற்போது ஷேன் வாட்சன் 15 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

முன்னதாக வங்கதேச அணியில் சஹாரியார் நபீஸ் 56 ரன்களை எடுக்க மற்றவர்கள் சொதப்ப 88/5 என்று ஆனது. ஆனால் மஹ்முத்ல்லா, முஷ்பிகுர் சேர்ந்தனர் 

இருவரும் இணைந்து ஸ்கோரை 167 ரன்களுக்கு உயர்த்தினர். முஷ்பிகுர் ரஹிம் 80 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

மஹ்முதுல்லா 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

ஆஸ்ட்ரேலியா களமிறங்கும்போது அந்த அணி சற்றே ஸ்பின்னர்களிடம் திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கதேசப் பந்து வீச்சை ஒன்றுமில்லாத காமெடி ஆக்கிவிட்டுச் சென்றார் ஷேன் வாட்சன்.

3-வது ஓவரில் கேப்டன் ஷாகிபுல் ஹஸன் வாட்சனுக்கு முதல் சிக்சரை வழங்கினார். அதன் பிறகு ஓயவேயில்லை. அடி என்றால் அடி அப்படியொரு அடி. பிறகு அப்துல் ரசாக்கை ஒரு சிக்ஸர், ஷாகிபை மீண்டும் இரண்டு சிக்சர் அடித்து 26 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்சர்களுடன் அரை சதம் எடுத்த வாட்சன்.

அதற்கு மேலும் வாண வேடிக்கை காண்பித்து 69 பந்துகளில் சதம் எட்டினார். மேத்யூ ஹைடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 66 பந்து சதமே ஆஸ்ட்ரேலிய சாதனியாக இன்னும் நீடிக்கிறது.

அடுத்த 27 பந்துகளில் மீண்டும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடிக்க மேலும் 85 ரன்களைக் குவித்தார் வாட்சன்.

ஒரு இன்னிங்ஸில் ஒருவர் அடித்த மொத்த ரன்களில் அதிக அளவில் பவுண்டரிகள், சிக்சர்கள் மூலம் வந்த விதத்திலும் வாட்சன் உலகச் சாதனை புரிந்துள்ளார். இவருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 434 ரன்களை ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராகத் துரத்தும் போது கிப்ஸ் 175 ரன்களில் 126 ரன்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக எடுத்திருந்தார். தற்போது வாட்சன் 150 ரன்களை அவ்வாறு எடுத்து சாதனை புரிந்தார்.

மறு முனையில் பாண்டிங் 37 ரன்கள் எடுத்து வெற்றிக்கான பவுண்டரியை அடித்தார். ஆனால் வாட்சனுக்கு இரண்டு கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று சதமடித்த பிறகு ராகிபுல் கோட்டை விட்டார். 

வங்கதேச ரசிகர்களுக்கு வாட்சனுக்கு கைதட்ட மனம் வரவில்லை. ஆனால் ஜெயசூரியாவுக்குப் பிறகு ஒரு அதிரடி இன்னிங்ஸை பார்த்த அனுபவம் இன்று ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* திருவாரூர் - அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில்

மூலவர் : கோதண்டராமர்
  உற்சவர் : ராமர்
   -தல விருட்சம் :  மகிழம்
  தீர்த்தம் : சரயு தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  -ஊர் : வடுவூர்
  மாவட்டம் : திருவாரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  தெட்சிண அயோத்தி

முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ் தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் "தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது.

தலபெருமை:
     
மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார்.ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.

தல வரலாறு:
      
வனவாசம் முடித்தபிறகு, ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற ராமர், மறுநாள் அவர்களைச் சந்திப்பதாக சொன்னார். தனது உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார்.ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், ""ராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது? அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,'' என்றனர்.ராமர் ஒன்றும் தெரியாதவர் போல, ""அப்படியா! அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள்போலும்!'' என்றார்.சிலையில் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி ராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார்.பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். மேலும் சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் சிலை வடித்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டுவந்தபோது, ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் சிலைகளை மீட்டு வரும் வழியில் வடுவூரில் தங்கினார். அவரைச் சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள்விடுத்தனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், இங்கேயே ராமபிரானை வைத்துச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்தில் கல் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருவிழா:
     
   ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

வியாசர் - நல்ல எண்ணங்களை பெறுவோம்!

* பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும். 

* பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான். 

வினாடி வினா :

வினா - கலியுகம் தொடங்கியது எப்போது ?

விடை - கி.மு.3102.பிப்ரவரி - 18.

இதையும் படிங்க :

இனி என்றும் இன்பமே!

E_1302239358.jpeg

ஏப்.12 ராம நவமி

சகோதரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும், தந்தை - மகன் உறவு எப்படி அமைய வேண்டும், தாய்க்கு எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும், கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடந்து கொள்வது எப்படி, கைமாறு கருதாமல் உதவி செய்யும் மனப்பாங்கை பெறும் முறை போன்ற நல்ல விஷயங்களை எல்லாம் ராமபிரானின் வரலாற்றில் அறிந்து கொள்ளலாம்.

அயோத்தி மன்னர் தசரதரின் அருந்தவப் புதல்வராய் பிறந்தவர் ராமபிரான். இவரது சித்திமார்களின் பிள்ளைகள் லட்சுமணன், பரதன், சத்ருக்கனன். லட்சுமணன், சத்ருக்கனன் சுமித்திரைக்கும், பரதன் கைகேயியிக்கும் பிறந்தனர். 

ஸ்ரீமந்நாராயணன் ராமனாகவும், அவரது சகாக்களான ஆதிசேஷன், சங்கு, சக்கரம் ஆகியவை அவரது தம்பிகளாகவும், லட்சுமி தாயார் சீதாதேவியாகவும் பூமிக்கு வந்தனர்.
தசரதரின் மனைவி கைகேயி நல்லவளாயினும், தன் பணியாளாக இருந்த மந்தாரையின் சொல் கேட்டு, தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதரிடம் கேட்டாள்.
 
போதாக்குறைக்கு மூத்த மகன் ராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்றும் சொல்லி விட்டாள். ஒரு முதலாளி, தனக்கு தவறான ஆலோசனை சொல்லும் பணியாளர்களை உடன் வைத்திருக்கக் கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணம். அவளது சொல்லுக்கு கட்டுப்பட்டதால், எல்லா ராணிகளும் மாங்கல்யம் இழந்தனர்.

ஆனால், ராமனோ எந்தவித சலனமும் இல்லாமல், தந்தையின் உத்தரவை ஏற்று கிளம்பி விட்டார். இது, எங்கும் நடக்காத அதிசயம். சிறு சொத்துக்கு கூட, கோர்ட் வாசலை மிதிக்கும் சகோதரர்கள், விட்டுக் கொடுக்கும் மனநிலையைப் பெற வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

ராமன் காட்டுக்கு கிளம்பி விட்டாலும், தம்பி பரதன், நாடாள மறுத்து விட்டான். ராமனின் பாத ரட்சையை சிம்மாசனத்தில் வைத்து, ராமனே ஆள்வதாக பாவனை செய்து கொண்டான். அண்ணன் - தம்பி உறவுக்கு இதை விட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது.

ராம சகோதரர்களின் மனைவிமார்களும் அப்படியே... எக்காரணம் கொண்டும் கணவனை தவிக்க விட்டு, அரண்மனை வாழ்வு வாழ மாட்டேன் என சீதை அடம்பிடித்து, அவனுடன் கிளம்பினாள். கணவனை அனுசரித்து மனைவி வாழ வேண்டும் என்பதை இது காட்டுகிறது. 

"உங்கள் அண்ணனும், அண்ணியும் காட்டுக்குப் போனால், உங்களுக்கு அங்கே என்ன வேலை?' என, லட்சுமணனின் மனைவி ஊர்மிளா கேட்கவில்லை. 14 வருட காலமும் அவளும் கணவனை விட்டுப் பிரிந்திருந்தாள். "அவர்கள் தான் ராஜ்யத்திலேயே இல்லையே... நம் இஷ்டத்துக்கு, 14 ஆண்டுகள் அயோத்தியை ஆளலாம்...' என பரதனின் மனைவி மாண்டவியோ, சத்ருக்கனனின் மனைவி சுருதகீர்த்தியோ தன் கணவன்மாருக்கு தூபம் போடவில்லை. ஆக... இப்படி ஒரு அரிய குடும்பத்தை ராம சரிதத்தில் நாம் பார்க்கிறோம்.

ராமன் காட்டுக்குப் போன பின், ஆஞ்சநேயரை சந்தித்தார். முன்பின் தெரியாத ராமனுக்காக அவர் கடலையே தாண்டிச் சென்று, அவர் மனைவி இருக்குமிடத்தை அறிந்து வந்தார். தேவையே இல்லாமல் ராவணனைப் பகைத்துக் கொண்டார்.

 இவ்வளவு செய்தும், "நீ எப்படி இந்த சாகசங்களையெல்லாம் செய்தாய்?' என்று யார் கேட்டாலும், "எல்லாம் இந்த ராமனின் ஆசிர்வாதத்தால், "ராம ராம' என்று சொன்னேன். அந்த திவ்யநாமம் வெற்றியைத் தந்தது...' என்று, தன் வெற்றியை ராமனுக்கே அர்ப்பணித்தார். ராமபிரானோ, "இல்லை... இல்லை...இந்த சிரஞ்சீவி இல்லாவிட்டால், என் மனைவி எங்கிருக்கிறாள் என்றே தெரியாமல் போயிருக்கும். நானும், என் மனைவியும் உயிர் பிழைத்ததே இவரால் தான்...' என்கிறார்.
அதாவது, நம் வாழ்வில் பெறும் வெற்றி நம் முயற்சியால் வந்ததல்ல... அது, இறையருளால் வந்தது, அதை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், பிறருக்கு நன்மை செய்பவன் எவனாயினும், அவனுக்கு கடவுளே அடிமையாகி விடுவார் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

ராமனின் வாழ்க்கை, மனித வாழ்வை திவ்யமாக நடத்த உதவுகிறது. "ஸ்ரீராமஜெயம்' என்று சொல்பவர்களுக்கு, எந்தச் செயலிலும் வெற்றி கிடைக்கிறது; மனோபலம் அதிகரிக்கிறது. ஸ்ரீராமனின் பிறந்தநாளே ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அவரது நல்லாசியைப் பெற்று, இனிய வாழ்வைப் பெறுவோம்.
***
தி.செல்லப்பா 
வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைப் பெறுவோம்!!நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment