Saturday, April 23, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 23 , 2011.



முக்கியச் செய்தி :

Bengali-Books.jpg

இன்று உலக புத்தக தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை ஏப்.22: உலக புத்தக தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல படைப்பாளிகளின் பிறந்த தினம், நினைவு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 இதற்கு வாழ்த்து தெரிவித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி:"கணினி, விஞ்ஞானம் உள்பட எவ்வளவுதான் நவீன வளர்ச்சிகள் ஏற்பட்ட போதிலும்கூட உலக மக்களின் கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றுக்கான தேடலில் புத்தகத்தின் பங்களிப்பைக் குறைத்து மதித்து விட முடியாது. புத்தகங்கள் அறிவுச் செல்வங்கள். உலக புத்தக தினம் படைப்பாளர்களை ஊக்குவிப்பதுடன், படிப்பாளர்களைப் பெருகவும் செய்ய வேண்டும். அரசு பட்டி தொட்டியெங்கும் நூலகங்களைத் தொடங்க வேண்டும்.

 மக்கள் நல்வாழ்வுக்கான மாற்றங்களைக் கொண்டு வர உலக புத்தக தினம் ஓர் உந்து சக்தியாக இருக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 கி.வீரமணி: புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்க பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு நாளாக இன்று புத்தக தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

 இந்த நேரத்தில் அச்சு இயந்திரக் கூடத்தைக் கண்ட ஜான் கூட்டன்பர்க் என்ற ஜெர்மானிய அறிஞரை நினைவு கூர்ந்து போற்றிப் பாராட்டிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
உலக புத்தக தினத்தையொட்டி பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தையும் நடத்தப்பட உள்ளது. இதில் பெரியாரின் புத்தகங்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளது.

உலகச் செய்தி மலர் :

* இந்து கோயில் விவகாரம்: தாய்லாந்து-கம்போடியா படைகள் மோதல்

tctemple.jpg

பாங்காக், ஏப்.22- எல்லையோரத்தில் அமைந்துள்ள இந்து கோயில் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சர்ச்சையில், தாய்லாந்து - கம்போடியா படையினர் இடையே இன்று துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்றது.

இந்த மோதலில் மொத்தம் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கம்போடிய வீரர்கள்.

பிரே விஹார் என்னும் இடத்தில் உள்ள 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோயில் தங்களுக்குச் சொந்தம் என்று இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், டா கிராபே என்னுமிடத்தில் உள்ள மற்றொரு இந்து கோயில் தொடர்பாக இன்று மோதல் ஏற்பட்டதாக, கம்போடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சும் சொச்சீத் தெரிவித்தார். இன்றைய மோதலில் தங்கள் தரப்பில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சுரின் மாகாணத்தில் சர்ச்சைக்குரிய கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து, சுமார் 5 ஆயிரம் பொதுமக்களை வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தாய்லாந்து அரசு முடிவு 

* எகிப்தில் தேர்தல் நடத்த இந்தியா உதவும்:: எஸ்.ஒய். குரேஷி

எகிப்து, ஏப்.22: எகிப்தில் தேர்தல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். எகிப்தில் ஐந்து நாள் பயணமாக குழுவினருடன் வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.

மக்கள் புரட்சி மூலம் நீண்ட காலமாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளைப் பார்வையிட ஐந்து பேரடங்கிய குழுவினருடன் எகிப்து சென்றுள்ள குரேஷி அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினார். இந்தியாவில் பின்பற்றப்படும் மின்னணு வாக்குப் பதிவு முறையை அவர்களிடம் விளக்கி, அதை செயல்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தார்.

 தேவைப்பட்டால் எகிப்துக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அளித்து உதவ தயாராக இருந்தாலும், தேர்தலுக்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் அதை செயல்படுத்த முடியாது என்றார்.

எகிப்து நீதித்துறை மற்றும் தொலைத் தொடர்புத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரையும், இரண்டு கவுன்சிலர்களையும் சந்தித்துப் பேசினார் குரேஷி.

கடந்த மாதம் எகிப்தின் ராணுவ ஆட்சியாளர்கள் இடைக்கால அரசை ஏற்படுத்தியதோடு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தனர்.

* ஜப்பான்: கடலில் அணுக்கதிர்வீச்சு 20 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு

டோக்கியோ, ஏப்.22: ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் அணுக் கதிர் வீச்சு பசிபிக் கடலில் கலந்து வருகிறது. இது ஆபத்தான அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்த அணுமின் நிலையத்திலிருந்து 5,000 டெராபிகியூரெல் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆண்டு கடலில் கலக்க அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகமாகும். கதிர்வீச்சுக் கழிவின் அளவு 520 டன் அளவுக்கு இருக்கும் என தெரியவந்துள்ளது.

 அணு மின் நிலையத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக வெளியாகும் கதிர்வீச்சு அளவு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு கதிர்வீச்சு கடலில் பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 ஆனால் கடலில் இப்போது பரவியதாகத் தெரிவிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கடலில் அணுக் கதிர்வீச்சு பரவி வருகிறது.

 மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதைத் தொடர்ந்த சுனாமி பேரலையின் தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்ட்டது. இதனால் இந்த ஆலையைச் சுற்றியிருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். இதனால் ஆலையைச் சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

 இருப்பினும் இந்த ஆலையில் அணு உலையைக் குளிர்விக்கும் பணியில் 6 ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து அணு உலை 2-ன் ரியாக்டர் டர்பைனிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

 இந்தக்கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் வெளியேற்றுவதற்குப் பதில் கடலில் கலக்க விடுவதால் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேயிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு 4.3 டன் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

* மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: இந்தியத் தூதர் வலியுறுத்தல்

பாஸ்டன், ஏப்.22: மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இத்தகைய கொடுமையான செயலில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் கூறினார். இரு நாடுகளிடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்போது இந்த விஷயம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் கென்னடி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

 இரு நாடுகளிடையிலான பேச்சுவார்த்தை தொடங்கும்போது, அண்டை நாட்டிலிருந்து உருவாகும் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

 மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தபோதிலும் பாகிஸ்தானிடம் இந்தியா நட்புக் கரம் நீட்டி வருகிறது. மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பை அமெரிக்காவில் கைதாகியுள்ள டேவிட் ஹெட்லீயின் வாக்குமூலம் உண்மை என உணர்த்தியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்கியது. முதல் கட்டமாக பாகிஸ்தான் பிரதமரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களிக்க இந்தியா அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை உபயோகமானதாக இருக்க வேண்டும். 
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலையை பாகிஸ்தான் மதித்து அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானிலிருந்து உருவாகும் பயங்கரவாத செயல்கள் உலகிற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சில நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்படுவதில் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. கிழக்கு ஆசியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகள் வரை ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்னை பாகிஸ்தானால் ஏற்பட்டுள்ளது.

 ஆப்கனில் ஸ்திரமான அரசு ஏற்படவும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாத வகையிலும் பாகிஸ்தான் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் ஆப்கனுக்கு மட்டுமல்லாது தெற்கு ஆசிய நாடுகளில் அமைதி நிலவும். ஆப்கனிஸ்தானை இந்தியா ஒருபோதும் போட்டி நாடாகக் கருதவில்லை. ஆப்கனில் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமே இந்தியா ஈடுபட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை. ஆப்கனில் இந்தியாவுக்கு ஏதேனும் ஈடுபாடு உள்ளதோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் செயல்படுகிறது. ஆப்கனில் மேற்கொள்ளும் கூட்டு மேம்பாட்டு நடவடிக்கை குறித்து அமெரிக்காவிடம் விவாதித்தபிறகே அதை செயல்படுத்த உள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயம், மகளிர் மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.

* மாற்றத்துக்குத் தயாராகுங்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா அழைப்பு

parakopamaa.jpg

வாஷிங்டன், ஏப்.22: மாறிவரும் உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்று அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

 கட்சிக்கு நிதி திரட்டும் கூட்டம் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்றது. அதில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு முன்னேற்றம் காண்பதில் இந்தியாவும், சீனாவும் முன்னிலையில் உள்ளன. இவ்விரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதேசமயம் மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகப் பார்த்தோமானால் இவை அனைத்தும் புலனாகும். 

இந்தியாவிலும், சீனாவிலும் ஏற்பட்ட மாற்றங்களும் வளர்ச்சியும் நமக்கு தெளிவாக புலப்படுகிறது. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழலும் நமக்குப் பாடங்களாகும். இப்போது உலகம் வெகுவாக சுருங்கி விட்டது. இதற்கு தொழில்நுட்பம்தான் மிக முக்கியக் காரணமாகும். இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட, உருவான பல தொழில்நுட்பங்களை பிற நாடுகள் சிறப்பாகப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இந்த சூழலில் நாமும் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டியுள்ளது. நமது செயல்பாடுகளை நமது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் பின்பற்றும். எனவே அத்தகைய மாற்றத்தை நாம்தான் முதலில் பின்பற்றுவதற்குப் பழக வேண்டும். அதற்குரிய மனோநிலைக்கு அமெரிக்கர்கள் தயாராக வேண்டும். 2008-ம் ஆண்டு அமெரிக்கா எதிர்கொண்ட பொருளாதார தேக்க நிலை காரணமாக வரிச் சலுகை அளிக்க வேண்டிய சூழல் உருவானது. கடந்த 10 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்து வருவதைப் போல தோன்றினாலும், ஆனால் அது நீர்க்குமிழியின் உச்சத்தை எட்டியதாகத்தான் தோன்றியது.

பணக்காரர்களும், வசதி படைத்தவர்களும் உயர்நிலையில் எவ்வித சிரமமும் இன்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு விலைவாசி உயர்வோ, பொருளாதார தேக்க நிலையோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நடுத்தர மற்றும் கீழ்நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

 அரசிடமிருந்து வரிச் சலுகை எதிர்பார்க்கும் சூழலில் மக்கள் உள்ளது மிகவும் துரதிருஷ்டமானதாகும். இரண்டு போர் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவே பொருளாதார தேக்க நிலைக்கு முந்தைய சூழலை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது பொருளாதார சூழல் சிறப்பாக செயல்படுவது போலத் தோன்றினாலும் அது நீண்ட கால அடிப்படையில் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்காது. அமெரிக்காவின் எதிர்கால வளர்ச்சியில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பங்கு உள்ளது என்றார் ஒபாமா.
 ஒபாமா பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்திலிருந்த சிலர் இடையூறு செய்தனர். விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் பிராட்லி மேனிங்கிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து அவர்கள் பாடல்களைப் பாடினர்.
 ஒபாமாவின் பேச்சுக்கு இப்போது அடிக்கடி இடையூறு அல்லது மாற்றுக் கருத்து தெரிவிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு வர்ஜீனியா கல்லூரி ஒன்றில் பேசுகையில், இந்தியா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என ஒபாமா கூறியது கடும் 

விமர்சனத்துக்குள்ளாகியது. இதேபோல வெளிப்பணி ஒப்படைப்பில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்கள் அத்தகைய பணிகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு அளிக்கக் கூடாது என்றும் அவ்வாறு அளித்தால்அந்நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்றும் ஒபாமா கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

* டயானாவுக்கு இளவரசர் வில்லியம் அஞ்சலி

elavarasar1.jpg

லண்டன்,ஏப்.22: அடுத்த வாரம் (29-ம் தேதி) திருமணம் செய்துகொள்ளவிருக்கும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் (28) தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் கேட் மிடில்டன் (29) உடன் வர நார்தாம்டன்ஷைரில் உள்ள ஸ்பென்சர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனித்தீவில் இருக்கும் தனது தாயார் இளவரசி டயானாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது மண வாழ்க்கை சிறப்பாக இருக்க தாயின் ஆசியையும் அவர் மானசீகமாகக் கோரினார்.

14 ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் நகரில் விபத்தில் இறந்த தன்னுடைய தாய் டயானா மீது தான் வைத்திருக்கும் பாசத்தை அவர் இதன் மூலம் உணர்த்தினார். சமாதி இருந்த இடத்துக்கு வில்லியமும் கேட் மிடில்டனும் தனிப்படகு மூலம் சென்றனர்.
சிறுவர்களாக இருந்தபோது தானும் தம்பி ஹாரியும் மரக்கன்றுகளை நட்ட இடத்துக்குச் சென்று அவை இப்போது எவ்வளவு பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன என்று பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் வில்லியம்.

 டயானாவின் மரணம் விபத்தா? திட்டமிட்ட கொலையா? என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை. அதே சமயம் டயானாவுக்கு பிற ஆடவர்களுடன் நட்பு இருந்ததாக அவருடைய கணவர் சந்தேகப்பட்டதால் அவர்களுடைய மண வாழ்க்கை கசந்தது. இந்த நிலையில் இறந்த டயானாவைத் தங்கள் குடும்பத்தவராகக்கூட அங்கீகரிக்க வேல்ஸ் அரச குடும்பம் தயக்கம் காட்டியது. எனவே டயானா தன்னுடைய தகப்பனார் குடும்பத்துக்குச் சொந்தமான தீவுப் பண்ணையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

 அடுத்த வாரம் நடைபெறும் திருமணத்தில் லண்டன் நகரில் உள்ள வேல்ஸ் அரச குடும்பம் டயானாவுக்கு உரிய முக்கியத்துவம் தருமா என்ற கேள்வி பலரின் நெஞ்சங்களிலும் எழுந்துள்ள நேரத்தில், தன்னைப் பொறுத்தவரை தாயாரை மறப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதை இச் செயலால் உணர்த்தியிருக்கிறார் வில்லியம்.
 தனக்கு தாயன்பு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் அவரை இறந்த சோகம் தன்னுடைய ஆழ் மனதில் இன்னமும் ஆறவில்லை என்பதையே வில்லியம் இதன் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

 திருமண நிச்சயதார்த்தத்தின்போது தன்னுடைய தாயார் அணிந்திருந்த அதே நீலக்கல் பதித்த நிச்சயதார்த்த மோதிரத்தையே கேட் மிடில்டனுக்கு அணிவித்தார் வில்லியம். "எங்களுடைய திருமண வைபவத்தைக் காணும் பாக்கியமோ, அந்த மகிழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்போ என்னுடைய தாய்க்கு இல்லை. அதே சமயம் அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவருடைய நினைவுகள் எங்களைவிட்டு நீங்கவே நீங்காது. எனவே என்னுடைய தாய் என்னுடனேயே இருக்கிறாள், இந்த மகிழ்ச்சியில் பங்கேற்கிறாள், புது மருமகளை ஆசையோடு வரவேற்று அன்பு பொங்க வாழ்த்துகிறாள் என்ற உணர்வைப் பெறுவதற்காகவே அவர் அணிந்த இந்த மோதிரத்தை உணக்கு அணிவிக்கிறேன்' என்று வில்லியம் அப்போது உணர்ச்சி பொங்கக் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

* செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர்

இஸ்லாமாபாத், ஏப். 22: டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் அதிக செல்வாக்கு உள்ள 100 பேர் பட்டியலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

 அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கெல் உள்ளிட்டோர் அடங்கிய பட்டியலில், ஐஎஸ்ஐ தலைவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ முன்னாள் இயக்குநர் மைக்கேல் ஹைடன், அகமது சுஜா பாஷா குறித்து டைம் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தானின் சிறந்த நாட்டுப் பற்றாளரான அவர், அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர். பாகிஸ்தானின் அமெரிக்காவுக்கு எதிராக பழமைவாதிகள் போர்கொடி தூக்கியபோதெல்லாம், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தவர் அகமது சுஜா பாஷா என்று குறிப்பிட்டுள்ளார்.
 இப்போது 59 வயதாகும் அகமது சுஜா ஐஎஸ்ஐ தலைவராக 2008-ல் பொறுப்பேற்றார். அடுத்த சில வாரங்களில் மும்பையில் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பட்டியலில் 5 இந்தியர்கள்: டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அமெரிக்காவில் வாழும் தமிழரும்,நரம்பியல் மருத்துவத்தில் நிபுணரான வி.எஸ். ராமச்சந்திரன், விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி, சமூக சேவகர் அருணா ராய் ஆகிய இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் வெய்ல் கோனிம் முதலிடத்திலும், விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஜூலியன் அசாஞ்சே 9-வது இடத்திலும் உள்ளனர்.
 தேசியச் செய்தி மலர் :

* 2-வது கட்டம்: மேற்கு வங்கத்தில் 50 தொகுதிகளில் இன்று தேர்தல்

கொல்கத்தா, ஏப்.22: மேற்குவங்க மாநிலத்தில் 2-வது கட்டமாக 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 அசம்பாவிதங்களைத் தடுக்க துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
 மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 18-ம் தேதி 54 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டமாக 3 மாவட்டங்களில் அடங்கிய 50 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 22 தொகுதிகளிலும், பிர்பும் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும், நாடியா மாவட்டத்தில் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

 மொத்தம் 293 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 93.33 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்கள் வாக்களிக்க வசதியாக 11,531 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப்படை உள்பட 4,800 போலீஸôர் பணியில் 

* சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு: மாநில அரசுகள் உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்

புது தில்லி, ஏப். 22: வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் இதனை தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் நரேந்திர நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வியாழக்கிழமை பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியது: ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் சந்தர்ப்பத்திற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தனியார் சுற்றுலா விடுதிகள் நடத்துவோர், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருடன் அவ்வப்போது கலந்துபேசி சுற்றுலாப் பயணிகள் எந்தவொரு மாநிலத்திற்கும் அச்சமின்றி சென்று மகிழ்ச்சியுடன் ஊர் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 எல்லா மாநிலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கெüரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். சுற்றுலா தலங்களில் சுகாதாரத்தை பேணுவது பெரிய சவாலாக உள்ளது. இப்பிரச்னையில் அதிக கவனம் செலுத்தும்படி உள்ளாட்சி அமைப்புகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

சுற்றுலாத் துறையில் பயிற்சி பெற்றவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என மத்திய சுற்றுலாத் துறை உணர்ந்துள்ளது. சுற்றுலா பற்றிய கல்வித் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தர மத்திய அரசின் நிதியை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, வடக்கு மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், அமைச்சர்கள் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார். பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா துறை அமைச்சர்கள், சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் 

* ஆந்திரத்தில் கனமழை: பயிர்கள் சேதம்

ஹைதராபாத், ஏப். 22: ஆந்திர மாநிலத்தில் கோடை காலத்தில் பெய்துவரும் கனமழையால் பல மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

 கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மிளகாய் பயிர்களும் நெல் பயிர்களும் நீரில் மூழ்கி பலத்த சேதம் அடைந்துள்ளன.

கம்மம் மாவட்டத்தில் 7.6. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் 6 செ.மீ. மழை பதிவானது. காக்கிநாடா, நெல்லூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

 நல்கொண்டா, கரீம் நகர், வாராங்கல், அனந்தபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிளகாய், மரவள்ளி, மா ஆகிய பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் சேதம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த அதிகாரி ஒருவர், "மழையால் ஏற்பட்ட சேதங்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். சேதத்தின் சரியான மதிப்பு மழை ஓய்ந்த பிறகே மதிப்பிடப்படும். அதன் பின்னர்தான் தெளிவான தகவல்கள் தெரியவரும்' 
என்றார்.

 இந்நிலையில் வங்கக் கடல் பகுதியில் வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக கடலோர ஆந்திரம், ராயலசீமா ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கல்மாடி மீது அமலாக்கத் துறை பிடி இறுகுகிறது: சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

kalmadi.jpg

புதுதில்லி, ஏப்.22: சொத்துகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி அமைப்புக் குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்து முடிந்த காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெரும் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டதையடுத்து அப்போட்டியின் அமைப்பாளராக இருந்த சுரேஷ் கல்மாடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ போலீஸôர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக ஏற்கெனவே சில அதிகாரிகள் சிபிஐ போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ் கல்மாடியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

 இந்நிலையில் சுரேஷ் கல்மாடியின் சொத்துக்கள் பற்றிய விவரங்களைக் கேட்டு அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. கல்மாடிக்கு அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில் அவரது அனைத்து வங்கி கணக்கு விவரங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் துவங்குமுன் அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், கடந்த சில ஆண்டுகளில் அவரது அன்னியச்செலாவணி கணக்கு விவரங்கள், அவர் செய்துள்ள முதலீடுகள் ஆகிய விவரங்களை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி அந்த நோட்டீஸில் அமலாக்கத்துறை உத்தரவிட்டிருப்பதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

* விநாயக் சென்னுக்கு தென் கொரியா விருது

vinayaksen.jpg

புதுதில்லி, ஏப்.22:சமூக ஆர்வலர் விநாயக் சென்னுக்கு மனித உரிமைக்கான உயரிய விருதை தென்கொரியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

 சத்தீஸ்கர் அரசினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விநாயக் சென் உச்ச நீதிமன்ற உத்தரவினால் திங்கள்கிழமை ஜாமீனில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2011-ம் ஆண்டின் மனித உரிமைக்கான குவாங்ஜூ விருதை விநாயக் சென்னுக்கு வழங்குவதாக தலைநகர் சியோலில் தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது ஆசிய அளவில் அமைதி,ஜனநாயகம் மற்றும் நீதி போன்ற விஷயங்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

 ஒவ்வொரு வருடமும் மே-18 ம் தேதி இந்த விருது வழங்கப்படும்.விருதின் மதிப்பு 50,000 அமெரிக்க டாலர்களாகும். இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் விநாயக் சென். 
இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் மணிப்பூரைச் சேர்ந்த ஐரோம்ஷர்மிளா என்ற மனித உரிமை ஆர்வலராவார். விநாயக் சென் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் என்று விருதுக் குழு தெரிவித்துள்ளது.

* நாடு முழுவதும் புனித வெள்ளி கடைப்பிடிப்பு

புதுதில்லி, ஏப்.22: கிறிஸ்தவர்களின் பண்டிகையான புனித வெள்ளி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களிலும், புனித ஸ்தலங்களிலும் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தன.

 உலக மேன்மைக்காக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சிலுவைகளைச் சுமந்தபடி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் மலையாட்டூரில் மலை மேலுள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த இடத்தில்தான் இயேசு பிரானின் சீடர் புனிதர் தாமஸ், இயேசுவின் கருத்துக்களை பரப்பியதாக நம்பப்படுகிறது.

 நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் புனித வெள்ளி சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் "மக்கள் இயேசுவின் போதனைகளை பின்பற்றி மனிதநேயம் செழிக்க உதவ வேண்டும்' என்று தனது புனித வெள்ளி பற்றிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
veeramanigr.jpg
மாநிலச் செய்தி மலர் :

* அனுமதியின்றி இயங்கிய 32 சாய ஆலைகள் இடிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

ஈரோடு, ஏப். 22: ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய 32 சாய ஆலைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

 ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சாயக்கழிவால் விவசாயம் மற்றும் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆலைகளில் சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சாய, சலவை ஆலைகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந் நிலையில், ஈரோடு அருகேயுள்ள பி.பெ. அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, அசோகபுரம் பகுதிகளில் அனுமதியின்றி சாய ஆலைகள் இயங்குவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார்கள் வந்தன.சாய ஆலைகளில் தொடர்ந்து சோதனை நடத்தி, அனுமதி பெறாத ஆலைகளுக்கு சீல் வைத்தாலும், சில நாள்களிலேயே அவை மீண்டும் இயங்குவதை அறிந்த ஆட்சியர் சி.காமராஜ், உரிய அனுமதி பெறாமல் இயங்கிய 32 சாய ஆலை கட்டடங்களை இடிக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியர் சுகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மலையாண்டி மற்றும் மின் வாரிய அதிகாரிகள், பி.பெ. அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், நாராயணவலசு பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 32 சாய ஆலைகளில் இருந்த இயந்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு, கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அனுமதி பெறாத சாய ஆலைகள் சீல் வைக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை கட்டடங்களை இடித்துத் தள்ளியதால் சாய ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உரிய அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* மாணவர்களுக்கு ஆசிரியர்களால் ஏற்படும் அவலங்களைத் தடுக்க 3 மாதங்களுக்குள் புதிய நெறிமுறைகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.22: பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களால் ஏற்படும் அவலங்களைத் தடுக்க 3 மாதங்களுக்குள் உரிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருவண்ணாமலையைச் சேர்ந்த வி.ஜி. தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதன் விவரம்: "ஆரணி தாலுக்கா, வில்லை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களால் பல அவலங்களைச் சந்திக்கின்றனர்.

 ஆசிரியர்களின் கழிவறைகளைச் சுத்தம் செய்தல், அவர்கள் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவுதல், வாகனங்களைத் துடைத்தல், அவர்களுக்கு எடுபிடி வேலை செய்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது குறித்து கேட்கும் பெற்றோரை ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

 இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

 கிராமங்களில் உள்ள பள்ளிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு கிராமத்திலும் அரசு குழு அமைத்துள்ளது. எனினும், அந்தக் குழு பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்வதில்லை.

எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்களால் நடைபெறும் அவலங்களைத் தடுக்க ஒரு திட்டம் உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்: இந்த மனு தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி பதில் மனு அளித்துள்ளார். அதில் மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இது முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. அதனால், சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி, உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பிக்க வேண்டும். இதை 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

* ஜான் டேவிட்டை பிடிக்க தனிப் படையினர் கரூரில் முகாம்

கரூர், ஏப். 22: மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை பிடிக்க தனிப்படை போலீஸôர் 2-ம் நாளாக வெள்ளிக்கிழமை கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

 சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த ஜான் டேவிட், 6.12.1996 அன்று நாவரசுவை ராகிங் காரணமாகக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

 நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் அமர்வு நீதிமன்றம் 11.3.1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

 உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும், கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தும் புதன்கிழமை (ஏப். 20) உத்தரவிட்டனர்.
 கொலை நடந்து சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தக் கொலை வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், ஜான் டேவிட்டை பிடிக்க கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

இதில் கடலூர் நகர காவல் ஆய்வாளர் எஸ். கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் கரூர் மாவட்டத்தில் இருநாள்கள் விசாரணை நடத்தினர். ஜான் டேவிட் வீடு அமைந்துள்ள வெங்கமேட்டில் விசாரணையில் ஈடுபட்டனர். ஜான் டேவிட்டின் பெற்றோர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே வீட்டை காலி செய்து விட்டு, வெளியூர் சென்று விட்டதும், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டதாகவும் தகவல் கிடைத்தது.

 டேவிட் மாரிமுத்துவின் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டவர்கள் விவரம் குறித்தும், ஜான் டேவிட்டின் வீட்டில் வாடகைக்கு இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலும் தனிப்படை போலீஸôர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதில் ஜான் டேவிட் குடும்பத்தினருக்கு கடந்த சில நாள்களில் வந்திருந்த சில கடிதங்கள் தனிப்படையினர் வசம் கிடைத்துள்ளன. இதன்மூலமாக ஜான் டேவிட் மற்றும் தலைமறைவாகிவிட்ட அவரது குடும்பத்தினரை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தனிப்படை ஆய்வாளர் எஸ். கார்த்திக்கேயன் தெரிவித்தார்

* சங்ககிரி வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி வெடித்தது: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் காயம்

சங்ககிரி, ஏப். 22: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் படுகாயம் அடைந்தார்.
 சங்ககிரி தொகுதியின் வாக்குகள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்பட உள்ளன. இங்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து வந்த 27-சி பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 வெள்ளிக்கிழமை காலை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுகுமார் சாதுஹா (25), சிறப்புக் காவல் படை வீரர் உசிலம்பட்டி கீழ்புதூரைச் சேர்ந்த கண்டியாத் (26) என்பவரிடம் இருந்த 303 ரக ரைபிளை வாங்கி, அதை எப்படி இயக்குவது என்று விசாரித்து அறிந்து கொண்டிருந்தாராம்.

 உடலை துளைத்த தோட்டா: அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் துப்பாக்கி வெடித்தது. அதிலிருந்து பாய்ந்த 7.6 எம்.எம். தோட்டா, சாதுஹாவின் வலது தோள்பட்டைக்கும் மார்புக்கும் இடைப்பட்ட பகுதியை துளைத்துக் கொண்டு மறுபுறம் வெளியேறியது. இதனால், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சாதுஹாவை அங்கிருந்த போலீஸôர், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடைபெற்ற வாக்கு எண்ணும் மையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, சேலம் எஸ்.பி. அறிவுச்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்ட பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை, சிறப்புக் காவல் படை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பணியில் அஜாக்கிரதையாக இருந்த கண்டியாத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட உள்ளார் என்றனர்.

வி.ஐ.பி. தொகுதி என்பதால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு: சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோர் போட்டியிட்டுள்ளதால் இச் சம்பவம் சேலத்தில் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்தகச் செய்தி மலர் :

பங்குச்சந்தை

 பி.எஸ்.இ 19602.23+131.25
 என்.எஸ்.இ5884.7+33.05

* எம்.எம்.டி.சி. நிறுவனம் 1,200 டன் வெள்ளி இறக்குமதி செய்ய திட்டம்
ஏப்ரல் 23,2011,00:16

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த எம்.எம்.டி.சி. நிறுவனம் , நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1200 டன் வெள்ளியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளி இறக்குமதியை விட, 50 சதவீதம் அதிகமாகும்.கடந்த ஒரு சில மாதங்களாக, உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு சில தினங்களில், இவற்றின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன.உலகளவில், தங்கம் மற்றும் வெள்ளி பயன்பாட்டில், இந்தியா, முன்னணியில் உள்ளது. தற்போது நம்நாடு ஆண்டுக்கு, 4,000 டன் வெள்ளியையும், 960 டன் தங்கத்தையும் இறக்குமதி செய்து கொள்கிறது. தற்போது உள்நாட்டில், தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு எம்.எம்.டி.சி. நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 275 டன் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ள முடிவு செய்துள்ளது. சென்ற நிதி ஆண்டில், இந்நிறுவனத்தின் தங்க இறக்குமதி 245 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்தி மலர் :

22spt5.jpg

* ஜெய்ப்பூர் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்: ஷேன் வார்ன்

மொஹாலி, ஏப்.22: ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
 மொஹாலியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 48 ரன்களில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது ராஜஸ்தான். அதன்பிறகு வார்ன் கூறியது:
அடுத்த 10 நாட்களில் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள மூன்று ஆட்டங்களும் எங்களுக்கு முக்கியமானது. அதில் வெற்றி பெற்றாக வேண்டும். சொந்த மண்ணில் நாங்கள் பலமான அணிதான். ஆனாலும் வரும் ஆட்டங்களில் எங்களை எதிர்கொள்ள உள்ள கொச்சி, மும்பை, புணே அணிகளும் பலமான அணிகளே. ஐபில் போட்டியில் எந்த ஆட்டமுமே எளிதான ஆட்டம் கிடையாது. எந்த அணியும் எந்த அணியையும் வெல்லக்கூடியதுதான். அதைத்தான் நாம் இப்போது பார்த்து வருகிறோம்.
இங்கு நடைபெறும் எந்தவொரு ஆட்டமுமே நெருக்கடியான ஆட்டம்தான். முதல் 6 ஓவர்களில் சிறப்பாக ஆடுவதற்கேற்றவாறு எங்களின் பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். முன்வரிசை பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடியிருப்பார்களானால் 196 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்திருக்க முடியும் என்றார். பஞ்சாப் வீரர் ஷான் மார்ஷை பாராட்டிய வார்னே, அவர் நீண்டகாலமாக சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் அவரை ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்காதது வியப்பளிக்கிறது என்றார்.

* கிரிக்கெட்
சென்னை சொதப்பல் கிங்ஸ்! * மும்பை அணி அபார வெற்றி

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி மீண்டும் ஒரு முறை சொதப்பியது. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஐந்து விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன், மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். சென்னை சார்பில் பத்ரிநாத்தின் ஆட்டம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் ஜகாதி, சவுத்தி நீக்கப்பட்டு ரந்திவ், ஜோகிந்தர் சர்மா வாய்ப்பு பெற்றனர். மும்பை அணியில் அலி முர்டசாவுக்கு பதிலாக மீண்டும் ஹர்பஜன் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற சென்னை அணியின் கேப்டன் "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆல்பி மார்கல் பந்தில் சதிஷ் "டக்' அவுட்டானார். கேப்டன் சச்சின்(5), போலிஞ்சர் வேகத்தில் வெளியேற, மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 
ரோகித் அதிரடி:

பின் அம்பதி ராயுடு, ரோகித் சர்மா இணைந்து அசத்தினர். ரந்திவ் சுழலில் ராயுடு(27) வீழ்ந்தார். அடுத்து வந்த சைமண்ட்ஸ் "கம்பெனி' கொடுக்க, தனது வாணவேடிக்கையை தொடர்ந்தார் ரோகித். ரந்திவ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த இவர், அரைசதம் கடந்தார். ஜோகிந்தர் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சைமண்ட்ஸ் ஒரு சிக்சர், ரோகித் 2 பவுண்டரி அடித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். அஷ்வின் பந்திலும் சிக்சர் விளாசினார் சைமண்ட்ஸ். மறுபக்கம் ரெய்னா ஓவரில் ரோகித் 2 சிக்சர் அடித்தார். போலிஞ்சர் பந்தில் ரோகித்(87) அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. சைமண்ட்ஸ்(31) அவுட்டாகாமல் இருந்தார்.

திணறல் ஆட்டம்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த முரளி விஜய்(12) அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா(5), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார்.

 இதற்கு பின் மைக்கேல் ஹசி, தமிழக வீரர் பத்ரிநாத் சேர்ந்து போராடினர். ரோகித் சர்மா ஓவரில் பத்ரிநாத் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார். சதிஷ் ஓவரில் ஹசி 2 பவுண்டரி அடித்தார். 

ரோகித் அதிரடி:
பின் அம்பதி ராயுடு, ரோகித் சர்மா இணைந்து அசத்தினர். ரந்திவ் சுழலில் ராயுடு(27) வீழ்ந்தார். அடுத்து வந்த சைமண்ட்ஸ் "கம்பெனி' கொடுக்க, தனது வாணவேடிக்கையை தொடர்ந்தார் ரோகித். ரந்திவ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த இவர், அரைசதம் கடந்தார். ஜோகிந்தர் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சைமண்ட்ஸ் ஒரு சிக்சர், ரோகித் 2 பவுண்டரி அடித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். அஷ்வின் பந்திலும் சிக்சர் விளாசினார் சைமண்ட்ஸ். மறுபக்கம் ரெய்னா ஓவரில் ரோகித் 2 சிக்சர் அடித்தார். போலிஞ்சர் பந்தில் ரோகித்(87) அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. சைமண்ட்ஸ்(31) அவுட்டாகாமல் இருந்தார்.

திணறல் ஆட்டம்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த முரளி விஜய்(12) அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா(5), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார்.

 இதற்கு பின் மைக்கேல் ஹசி, தமிழக வீரர் பத்ரிநாத் சேர்ந்து போராடினர். ரோகித் சர்மா ஓவரில் பத்ரிநாத் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார். சதிஷ் ஓவரில் ஹசி 2 பவுண்டரி அடித்தார். 
அசத்தல் பீல்டிங்:

இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் போலார்டின் சூப்பர் "கேட்ச்சில்' ஹசி(41) அவுட்டானார். அடுத்து போலார்டு பந்தில் ரோகித் சர்மாவின் அருமையான "கேட்ச்சில்' கேப்டன் தோனி(3) வெளியேற, சிக்கல் ஆரம்பமானது. போலார்டு உள்ளிட்ட மும்பை வீரர்கள் துடிப்பாக பீல்டிங் செய்ய, ரன் வறட்சி ஏற்பட்டது. 
ஹர்பஜன் கலக்கல்:

இதற்கு பின் ஹர்பஜன் சுழலில் சென்னை வீரர்கள் வரிசையாக சிக்கினர். இவர் வீசிய போட்டியின் 18வது ஓவரில் ஆல்பி மார்கல்(3), அஷ்வின்(0), ஜோகிந்தர்(0) அவுட்டாகினர். இதன் மூலம் ஐ.பி.எல்., அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

 கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன. முனாப் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். பத்ரிநாத் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தும் பலன் கிடைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. போராடிய பத்ரிநாத்(71) அவுட்டாகாமல் இருந்தார்.

இவ்வவெற்றியின் மூலம் கடந்த முறை பைனலில் சென்னை அணியிடம் சந்தித்த தோல்விக்கு மும்பை அணி பழிதீர்த்தது.

ஆட்ட நாயகன் விருதை ஹர்பஜன் தட்டிச் சென்றார்.

* கெய்ல் புயல் வேக சதம்! * பெங்களூரு அணி வெற்றி * கோல்கட்டா அணி பரிதாபம்

கோல்கட்டா:  ஐ.பி.எல்., லீக் போட்டியில், கிறிஸ் கெய்ல் புயல் வேகத்தில் சதம் அடிக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பவுலிங்கில் சொதப்பிய கோல்கட்டா அணி, சொந்த ஊரில் தோல்வி அடைந்து ஏமாற்றியது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. 
கெய்ல் வருகை:

பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஜோகன் வான் டெர் வாத் நீக்கப்பட்டு, கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். "டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டேனியல் வெட்டோரி, "பீல்டிங் தேர்வு செய்தார்.

காலிஸ் நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணிக்கு, ஜாகிர் கான் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று "பவுண்டரி அடித்து சூப்பர் துவக்கம் அளித்தார் காலிஸ். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிராட் ஹாடின், 11 பந்தில் 18 ரன்கள் (ஒரு சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். பின், காம்பிருடன் இணைந்த காலிஸ் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது காலிஸ் (40), வெட்டோரி சுழலில் சிக்கினார்.
காம்பிர் அபாரம்:

பின், காம்பிர்-யூசுப் பதான் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அபாரமாக ஆடிய காம்பிர், 38 பந்தில் 48 ரன்கள் (6 பவுண்டரி) எடுத்து அரைசத வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய யூசுப் பதான், 24 பந்தில் 3 "சிக்சர், 3 "பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மார்கன் (6) "ரன்-அவுட் ஆனார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் ஸ்ரீநாத் அரவிந்த் 2, முகமது, வெட்டோரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கிறிஸ் கெய்ல்-தில்ஷன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. கோல்கட்டா பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை அசுர வேகத்தில் உயர்த்தியது. முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த போது, பாலாஜி வேகத்தில் தில்ஷன் (38) போல்டானார்.
கெய்ல் அதிரடி:

போட்டியின் ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் கெய்ல் "சிக்சர், "பவுண்டரி மழை பொழிந்தார். யூசுப் பதான் வீசிய ஆட்டத்தின் 9வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர் விளாசிய கெய்ல், 29 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விராத் கோஹ்லியும், பொறுப்பாக ரன் சேர்த்தார்.

 சாகிப் பந்தில் ஒரு "சூப்பர் பவுண்டரி அடித்த கெய்ல், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு அணி 18.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கெய்ல் (102 ரன்கள், 55 பந்து, 7 சிக்சர், 10 பவுண்டரி), கோஹ்லி (30) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பாலாஜி ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது சதம்

கோல்கட்டா அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல், 55 பந்தில் 102 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் இவர், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தவிர இது, ஐ.பி.எல்., அரங்கில் பதிவு செய்யப்பட்ட 15வது சதம். இம்முறை பதிவு செய்யப்பட்ட மூன்றாவது சதம். முன்னதாக வல்தாட்டி, சச்சின் உள்ளிட்டோர் சதம் அடித்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : ஆதிரத்தினேஸ்வரர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் :  சினேகவல்லி
  தல விருட்சம் :  வில்வம்
  தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : திருஆடானை
  ஊர் : திருவாடானை
  மாவட்டம் : ராமநாதபுரம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
     
திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்


டவனவனவனவனவனவனவன வனவன வெந்த
நீறணி மார்பில்தோல் புனை அந்தமில்லவன் 
ஆடானை கந்தமாமலர் தூவிக்கை தொழும்
வலங்கொள்வார் வினை மாயுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 9வது தலம்

தல சிறப்பு:
     
  சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.  
   
பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, "சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்' பாடியுள்ளார்.

தலபெருமை:
     
ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.

அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், ""திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்''என்றார்.

அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.

சூரியனின் கர்வம் போக்கிய தலம்: ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார்.

சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது.

இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். சுக்கிரனுக்குரிய அதிதேவதை: அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.

தல வரலாறு:
      
வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர்.

துர்வாச முனிவர் கோபத்துடன், ""வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,''என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது.

தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.

இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குøறாவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான்.

இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை "அஜகஜக்ஷத்திரம்' ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார்.

இதுவே காலப்போக்கில் "திரு' எனும் அடைமொழியோடு "திருவாடானை' என ஆனது.

சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். 
திருவிழா:
     
   வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.  
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பாரதியார் - கடவுளே அறிவின் வடிவம்

* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான்.
* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள். 

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் செஸ் சாம்பியன் யார் ?

விடை - விஸ்வநாதன் ஆனந்த்.
 
இதையும் படிங்க :

யோசனைகளைக் கேட்க யாருமில்லை!' 

large_229487.jpg

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆர்வமுடன் களமிறங்கியுள்ள சாகுல் ஹமீது: சென்னை சாலைகளில், 13 ஆண்டுகளாக பழச்சாறு வியாபாரம் செய்கிறேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இங்குள்ள அனைத்து சாலைகளும் எனக்கு அத்துப்படி. ஒவ்வொரு சிக்னல்களிலும், மணிக்கணக்கில் ஆய்வு செய்திருக்கிறேன். சென்னை போக்குவரத்தை சீராக்க, ஆயிரக்கணக்கான வரைபடங்கள் தயாரித்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஜெராக்சிற்கே செலவு செய்துள்ளேன். சொந்தப் பணத்தில், பாங்காங், மலேசியா, சிங்கப்பூர் சென்று, அங்குள்ள போக்குவரத்து விதிகளை ஆய்வு செய்துட்டு வந்தேன். நான் ஒரே ஆளாக இத்தனை வருடம் செய்த விஷயங்களைப் பற்றி, விசாரிக்கக் கூட இங்கு ஆள் இல்லை. நான் டிராக்பிக் போலீசாரை குறை சொல்லவில்லை. அவர்களை நெறிப்படுத்திக்க, அவர்களிடம் எந்த ஐடியாவும் இல்லை. என்னிடம் நிறைய ஐடியாக்கள் உள்ளன; ஆனால், கேட்கத் தான் ஆள் இல்லை. தேவையற்ற சிக்னல்கள், 35 சதவீத சாலைகளை, ஒரு வழிப்பாதையாக மாற்றியது, மாநகர பஸ் ஓட்டுனர்களின் ஒழுங்கீனம் ஆகியவை தான், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணங்கள். நான் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, என் யோசனைகளைக் கேட்க போலீஸ் மறுக்கிறது. இதற்காக, ஐகோர்ட் படியேறினேன். என் யோசனைகளைக் கேட்க வேண்டும் என உத்தரவு வந்து, ஒரு வருடமாகிறது. இன்னும் என் யோசனைகளைக் யாரும் கேட்கவில்லை. நான் சவால் விடுகிறேன்... சென்னையில், எந்த இடத்தில் டிராபிக் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றாலும், நான் குறைத்துவிடுவேன். 10 நிமிடத்தில், 50 சதவீத நெரிசலைக் குறைப்பேன். அண்ணா மேம்பாலத்தில், வண்டியே நிற்காத அளவுக்கு செய்து காட்டுகிறேன். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், என் யோசனைகளை அங்கீகரித்தால்... இது சாத்தியம்!




நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.
-- 

No comments:

Post a Comment