Friday, April 1, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 01 , 2011.


முக்கியச் செய்தி :

31-literacy-rate200.jpg

இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்

புதுதில்லி, மார்ச்.31:  கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18 கோடிக்கும் மேல் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும்.
புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. எனினும் 90 ஆண்டுகளில் முதன்முறையாக வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் இந்தியாவில் உள்ளனர்.

2001-2011 வரையிலான காலகட்டத்தில் 18 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது.  2011-ல் வளர்ச்சி விகிதம் 17.64 சதவீதம்.  2001-ல் இது 21.15 சதவீதமாக இருந்தது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசம்தான் மிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். அங்கு 19 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். லட்சத்தீவில் மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ளது. அங்கு 64,429 பேர்தான் உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மக்கள்தொகையைச் சேர்த்தால் அமெரிக்க மக்கள்தொகையைவிட அதிகமாகும்.

அதிக மக்கள் நெருக்கம் தில்லியின் வடகிழக்கில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 37,346 பேர் அங்கு உள்ளனர். குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சலப் பிரதேசத்தின் திபங்க் பள்ளத்தாக்கில் உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளதை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. கணக்கெடுப்பின்படி சமீபத்திய குழந்தைகள் விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்களாக உள்ளது. இது சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகக் குறைவான விகிதமாகும்.

மொத்த மக்கள்தொகையில் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 74 சதவீதம் பேர் படித்தவர்கள் . 26 சதவீதம் பேர் படிக்காதவர்கள்.

2001-ல் படித்தவர்கள் 64.83 சதவீதமாக இருந்த படித்தவர்களின் விகிதம், 2011-ல் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது படித்தவர்களின் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

உலகிலேயே சீனாதான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் அங்கு உள்ளனர்.

அமெரிக்கா. இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையும் சீனாவின் மக்கள்தொகையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

உலகச் செய்தி மலர் :

* சுனாமி எதிரொலி: எலக்ட்ரானிக் பொருள் விலை உயர்வு

பாரீஸ்:ஜப்பானில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமி காரணமாக எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள், வீடியோ கேமராக்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர விற்பனையாளர் பிலிப்பி டாவின் தெரிவித்துள்ளார். 

வீடியே கேம்ஸ் சாதனங்கள் ,வீடியோ கேமராக்கள் மற்றும் ஸ்டில்கேமராக்கள் டிவி தயாரிப்பு என ஜப்பான் நிறுவனங்கள் தயாரித்து உலகம் முழுவதும்விற்பனை செய்து வருகின்றன. மேலும்மேற்கண்டவைகளுக்கு தேவையான செமிகண்டக்டர் பாகங்கள் உற்பத்திசெய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள் வரும் மே மாதத்தில் மீண்டும் செயல்பட துவங்கும். முழு உற்பத்தியை அடைய ஆண்டு இறுதியாகி விடும் என்பதால் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து அதன் விலை உயரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

* பிரிட்டனுக்கு தப்பினார் லிபிய அமைச்சர்

பிராகா, மார்ச் 31: லிபிய வெளியுறவுத் துறை அமைச்சவரும், அதிபர் கடாபியின் நம்பிக்கைக்குரியவருமான மூசா கூஸô பிரிட்டனுக்குத் தப்பியோடிவிட்டார்.

கடாபியின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவரான இவர் வெளியேறியது கடாபியின் வீழ்ச்சி வெகுதூரத்தில் இல்லை என்பதையே காட்டுவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.

மற்றோர் அமைச்சரான அலி எரிஷி ஏற்கெனவே லிபியாவில் இருந்து தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராகாவில் கடும் சண்டை: இதனிடையே, பிராகா நகரில் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வியாழக்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.


* மொஹாலி போட்டியின்போது நெஞ்சுவலியால் உயிரிழந்த பாகிஸ்தான் நடிகர்

இஸ்லாமாபாத், மார்ச்.31: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிக்காக சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

லியாகத் சோல்ஜர் என பரவலாக அழைக்கப்படும் 55 வயதான லியாகத் அலி அரை இறுதிப் போட்டிக்காக உள்ளூர் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டெய்லி டைம்ஸ் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கிறது.

லியாகத் அலி நடிகராக மட்டும் அல்லாமல், தொழில் அதிபராகவும் இருந்தார். ஜெனரேட்டர்கள் தொடர்பான ஒரு வணிகத்தைச் செய்துவந்தார்.

லியாகத் அலியின் மறைவுக்கு பல்வேறு தொலைக்காட்சி பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் சிறந்த நகைச்சுவை மேடை நாடக நடிகர்களில் லியாகத் அலியும் ஒருவர். அவரது இழப்பு பாகிஸ்தானின் நகைச்சுவைத் துறைக்கு பெரும் இழப்பு என பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

* 4 கடற்படை மாலுமிகள் மாயம்: இந்தியாவின் உதவி கோருகிறது இலங்கை

கொழும்பு,மார்ச் 31: இலங்கை கடற்படையைச் சேர்ந்த 4 மாலுமிகள் திடீரென காணாமல் போனதாகவும்,அவர்களை கண்டுபிடித்துத் தரும்படியும் இந்தியாவின் உதவியை அந்நாடு கோரியுள்ளது.

கடற்படை மாலுமிகள் 4 பேர் காணாமல் போனது குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக்கும் இலங்கைக் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

இது பற்றிக் கூறிய இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுலசூரியா, முல்லைத்தீவுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 4 மாலுமிகள் புதன்கிழமையிலிருந்து திடீரென காணவில்லையென்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், அவர்கள் பயணம் செய்த படகுகள் எவ்வித சேதமுமின்றி முல்லைத்தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக முல்லைத்தீவுப் பகுதியானது விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

* லிபியாவில் சி.ஐ.ஏ.வுக்கு முக்கியப் பங்கு!

வாஷிங்டன், மார்ச் 31: லிபியா நாட்டில் அதிபர் மம்மர் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றுவது என்ற முடிவை அமெரிக்காவில் யார் எடுத்தார்களோ, அந்தப் பணியில் முன்னணியில் இருப்பது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.தான் என்கிறது "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு.

கடாஃபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜனநாயகவாதிகளுக்கு உதவும் நடுநிலையாளர்களைப் போல சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் அவர்களை அணுகினார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு எல்லாவித ஆதரவும் தருவதாக உறுதி அளித்தார்கள். பணம், ஆயுதம் போன்றவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்ததுடன் சில சிறிய உதவிகளையும் உடனுக்குடன் அளித்தார்கள். இதனால் ஜனநாயக ஆதரவாளர்கள் பலரும் அவர்கள் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் என்ற சந்தேகமே ஏற்படாமல் நாட்டு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்கள்.

சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் தங்களுடைய அமைப்பு மூலம் திரட்டிய தகவல்களுடன் அரசு எதிர்ப்பாளர்கள் கூறிய தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து லிபிய அரசின் நடவடிக்கைகளைத் துல்லியமாகக் கணித்தார்கள்.

அத்துடன் லிபிய ராணுவத்தின் படைபலம், படைகள் இருக்கும் இடம், படைகளின் நடமாட்டம், அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, லிபிய ராணுவத்திடம் உள்ள ஏவுகணைகள், மிகப்பெரிய ஆயுதங்கள், ஆயுதக் கிடங்கு, ரகசியத் தகவல் மையங்கள், கேந்திர ராணுவ மையங்கள், தகவல் தொடர்பு கட்டமைப்பு, லிபிய ராணுவத்துக்கு உதவிகள் வரக்கூடிய வழிகள் ஆகிய அனைத்தையும் அறிந்து அமெரிக்க ராணுவத்துக்குத் தகவல் தந்தனர்.

கடாஃபியின் கவச வாகனப் படைகளும் டேங்குகளும் எங்கு, எத்தனை எண்ணிக்கையில் இருக்கின்றன, அடுத்து எங்கே செல்கின்றன என்று தகவல் திரட்டி அமெரிக்கா தலைமையிலான நேடோ படைப்பிரிவுக்குத் தெரிவித்தனர். அவர்கள் டாங்குகளைத் தங்களுக்குச் சாதகமான இடத்தில் குண்டுவீசி கொத்துகொத்தாக அழித்தனர்.

அத்துடன் லிபிய தரைப்படையின் பீரங்கி படைப்பிரிவு, ஏவுகணைகளை ஏவ உதவும் தளங்கள் ஆகியவற்றையும் "நேடோ' தாக்கி அழிக்க சி.ஐ.ஏ. தகவல்கள் உதவின.

லிபியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிய ஜனநாயக ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களையும் உதவிகளையும் அளிக்க ரகசிய ஆணையொன்றில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.

அதில் குறிப்பிடப்பட்ட வகையில் பணமும் பிற உதவிகளும் தரப்பட்டன, ஆனால் ஆயுதங்களைத் தரத்தான் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தயங்குகிறது.

அத்துடன் அமெரிக்காவின் உளவு செயற்கைக் கோள்களும், ஆள் இல்லாமலேயே பறந்து இலக்கைத் தாக்கக்கூடிய டுரோன் ரக விமானங்களும் லிபியாவை அங்குலம் அங்குலமாக படம் பிடித்துக் காட்டிக்கொண்டே இருக்கின்றன.

எனவே அமெரிக்காவின் ""கழுகுக் கண்களிலிருந்து'' லிபியா தப்பவே முடியாது என்று தோன்றுகிறது. லிபியாவை "நேடோ' தாக்கினாலும் அதன் கண்ணாகவும் கரங்களாகவும் செயல்படுவது சி.ஐ.ஏ.தான் என்று தெரிகிறது.

* தப்பினார் தலிபான் ஆதரவு அமைப்பு தலைவர்; மனித குண்டு தாக்குதலில் 12 பேர் சாவு

இஸ்லாமாபாத், மார்ச் 31: பாகிஸ்தானில் தலிபான் ஆதரவு இயக்கமான ஜமாய்த்தி உலேமா இ இஸ்லாம் அமைப்பின் தலைவர் மௌலானா ஃபெஸலூர் ரகுமானை குறி வைத்து வியாழக்கிழமை மீண்டும் மனித குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். எனினும் ஃபெஸலூர் ரகுமான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அவரை குறி வைத்து புதன்கிழமையும் ஒரு தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைபர் பக்தூன்வா மாகாணத்தில் சர்சத்தா நகரில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ள அவர் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு தனியார் பள்ளி அருகே அவரது வாகனமும் அதைப் பின் தொடர்ந்து காவல் வாகனங்களும் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வெடி பொருள்களைக் கட்டிக் கொண்டு ஒரு நபர் அந்த வாகனங்கள் மீது பாய்ந்தார்.

இதில் அவரது கார் கண்ணாடி சேதம் அடைந்தபோதும் அவர் உயிர் தப்பினார். அவரது காரை பின் தொடர்ந்த மற்றொரு காருக்கு சேதம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸôர் 4 பேர், ஒரு பெண் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு தாக்குதல்களுக்குமே எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பொதுவாக இப்பகுதியில் தலிபான் பயங்கரவாத இயக்கம்தான் இது போன்ற தாக்குதல்களை நிகழ்த்தும். ஃபெஸலூர் ரகுமான் தலிபான் ஆதரவு பயங்கரவாத இயக்க தலைவராகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரை கொல்ல தொடர்ந்து இரண்டாவது நாளாக யார் முயல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடையே பேசியி ஃபெஸலூர் ரகுமான், "எனக்கு யாரிடம் இருந்தும் மிரட்டல் வரவில்லை. என்னை கொல்ல முயன்றவர்கள் யாராக இருக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்றார்.

* 2 அமெரிக்கவாழ் இந்தியப் பெண்களுக்கு ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பதவி

வாஷிங்டன், மார்ச் 30: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்காவாழ் இந்தியப் பெண்கள் இருவருக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய கலை கவுன்சில் உறுப்பினராக சிகாகோவைச் சேர்ந்த தீபா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன குடியரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் குழுவின் உறுப்பினராக நிஷா தேசாய் பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது பதவியை ஏற்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் அதிபர் ஒபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

சிகாகோவில் உள்ள ஜான் டி & கேத்தரீன் டி மேக் ஆர்தர் அறக்கட்டளையில் ஊடகங்களுக்கான திட்ட அதிகாரியாக உள்ள தீபா குப்தா இப்போது புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறக்கட்டளையின் நிதியத்தை கலை, கலாசாரத்தை வளர்க்கும் பணிக்கு இவர் பயன்படுத்துகிறார். கெல்லாக் நிர்வாகவியல் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியில் ஆசிய பிரிவுக்கான துணை நிர்வாகியாக நிஷா தேசாய் உள்ளார்.

அவர் அந்தப் பதவியுடன் புதிய பதவியை கூடுதலாக வகிப்பார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களிருவர் தவிர மேலும் 7 பேர் வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

* அமெரிக்க துணையமைச்சருடன் உலகத் தமிழ் அமைப்பினர் சந்திப்பு

வாஷிங்டன்,மார்ச் 30: இலங்கையின் இனப்பிரச்னைக்கான தீர்வு குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணையமைச்சர் ராபர்ட் பிளேக்குடன், உலகத் தமிழ் அமைப்பினர் விவாதித்தனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் எஸ்.ஜே.இமானுவேல் உள்ளிட்ட இக்குழுவினரின் சந்திப்புக்கு, தமிழ் அரசியல் செயல்பாட்டிற்கான அமெரிக்க கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. 

இச்சந்திப்பில் பேசிய உறுப்பினர்கள் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக் கூறினர். மேலும் அங்கு வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்களும் பிளேக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கதிரியக்க அளவு 4,385 மடங்கு!

ஒசாகா,மார்ச் 31: ஜப்பானில் புகுஷிமா அணுமின்சார நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு கடல் நீரில் ஏற்பட்டுள்ள கதிரியக்கமானது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4,385 மடங்கு அதிகமாக இருக்கிறது.

""ஐயோடின்-131'' என்று அழைக்கப்படும் இந்த கதிரியக்கம் கடந்த வாரத்திலிருந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 1,250 மடங்காகவும் சனிக்கிழமை 1,850 மடங்காகவும் செவ்வாய்க்கிழமை 3,355 மடங்காகவும் இது உயர்ந்து கொண்டே வருகிறது.

மார்ச் 11-ம் தேதி கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அதன் பிறகு ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் இந்த அணு மின்சார நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டு அணு உலைகள் சூடேறி ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. அணு உலைகளைக் குளிரவைக்க முடியாமல் போனதால் கதிரியக்கம் கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டே வருகிறது.

* பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டு

இஸ்லாமாபாத், மார்ச் 31: மொஹாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதி கிரிக்கெட் போட்டியைக் காரணமாகக் கொண்டு உறவை சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானியையும் பாகிஸ்தான் பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

இந்தச் சந்திப்பால் இரு நாடுகளின் உறவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுவிடப் போவதில்லை, பிரச்னைகள் தீரப்போவதில்லை என்றாலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பேச்சில் ஈடுபடுவதில் இருந்த இறுக்கமும் தயக்கமும் தளர வழி செய்திருப்பதற்காக இந்த விளையாட்டுப் போட்டியை அவை வெகுவாக வரவேற்றுள்ளன.

இந்தப் போட்டியின் முடிவு பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கசப்பானதாக இருந்தாலும் கடைசிவரை இரு அணிகளும் நட்புறவுடன் விளையாடியதும், இரு நாட்டு தலைவர்களும் பாசத்துடன் பழகியதும் பாகிஸ்தான் பத்திரிகைகளால் வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகள் மீது இந்தியாவுக்கு திருப்தி இல்லை என்பதைப் பல முறை எடுத்துக் கூறியிருந்தாலும் மும்பை தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் சந்திக்கவே வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது கிரிக்கெட் போட்டியை அதற்குப் பயன்படுத்திக் கொண்டதை பத்திரிகைகள் பாராட்டின.

தங்களுடைய நாட்டு அணிதான் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் எல்லா நாட்டு ரசிகர்களுக்கும் இருப்பது இயற்கைதான் என்றாலும், போட்டி நடுநிலையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்து அதில் திறமையான அணி வெற்றி பெற்றால் எந்த ரசிகரும் தோல்வியைக்கூட பெரிய அவமானமாகக் கருதமாட்டார். இதே அணுகுமுறைதான் இரு நாட்டு அரசியல் தலைவர்களிடமும் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வசந்த விழாவைப் போலவே நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதே ஒரு சாதனைதான் என்று "டான்' பத்திரிகை தனது தலையங்கத்தில் பாராட்டியுள்ளது.

ரசிகர்கள் சோகம்: அதே சமயம் அரை இறுதியில் இந்தியாவிடம் தோற்றுவிட்டோம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

ஆறு முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்த உடனேயே பாகிஸ்தான் ரசிகர்களும் உற்சாகம் குன்றி பார்க்கத் தொடங்கினார். பெரிய திடல்களிலும் பூங்காக்களிலும் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரைகளுக்கு முன்னால் ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் பேசுவதையும் ஆர்ப்பரிப்பதையும் குறைத்துக்கொண்டு கடைசியில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் மெüனமாகக் கலைந்து சென்றனர்.
கராச்சியில் துப்பாக்கியால் சுட்டனர்: இந்தியா வென்றது என்ற செய்தி கிடைத்ததும் பட்டாசு வெடித்து சிலர் கொண்டாடினர். உடனே எதிர் தரப்பார் அங்கு சென்று இந்திய வெற்றியைக் கொண்டாடுவதா என்று கேட்டு அவர்களை அடித்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டையும் நடந்தது.

கராச்சியில் இந்திய வம்சாவழி முஸ்லிம்கள் அதிகம்பேர் வசிக்கின்றனர். இவர்கள் இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள். இவர்களை பாகிஸ்தானின் பஞ்சாபியர்களும் சிந்திக்களும் இன்றைக்கும் மட்டமாகத்தான் நடத்துகின்றனர். மதத்தால் முஸ்லிம்களாக இருந்தாலும் இன்னமும் தங்கள் தாய் மண்ணை மறக்காதவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் அதே வழியில் இந்திய வெற்றியைத் தங்களுடைய வெற்றியாகக் கருதி துப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனால் ஆத்திரம் அடைந்த இதர பாகிஸ்தானிய ரசிகர்கள் அவர்களை அடித்தனர். இந்த கைகலப்பிலும் சண்டையிலும் ஒருவர் இறந்தார், 50 பேர் காயம் அடைந்தனர்.

கிரிக்கெட்டுக்கு மதம் கிடையாது என்றாலும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கிரிக்கெட்டே மதமாகிவிட்டதால் ""மதக் கலவரங்கள்'' புது வடிவம் எடுக்கின்றன என்றே தோன்றுகிறது.

தேசியச் செய்தி மலர் :

* உலகக் கோப்பை இறுதி: பிரதிபா பாட்டீல், ராஜபட்ச மும்பை வருகின்றனர்

31patil.jpg

புதுதில்லி, மார்ச்.31:  இந்தியா-இலங்கை இடையே ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இலங்கை அதிபர் ராஜபட்சவும் மும்பை வர உள்ளனர்.

மொஹாலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்தப் போட்டியைக் காண பிரதிபா பாட்டீல் மும்பை செல்ல உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்புவில் இருந்து ராஜபட்சவும் இறுதிப் போட்டியைக் காண மும்பை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ராஜபட்ச விரும்புவதாக அவரது செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.
இலங்கை- நியுஸிலாந்து இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியை இலங்கை அதிபர் ராஜபட்சவும், அவரது 3 மகன்களும் பார்த்தனர். தற்போது இறுதிப் போட்டியையும் ராஜபட்ச நேரில் காண உள்ளார்.

* திருமலையில் அன்னமய்யாவின் 508 வது நினைவு தின மகா உற்சவம்

lordoflords.jpg

திருப்பதி, மார்ச் 31: திருமலையில் சங்கீத சக்கரவர்த்தி அன்னமய்யாவின் 508 வது நினைவு தினத்தையொட்டி மகாஉற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரது ஊர்வலம் நடைபெற்றது. திருமலை நாரயாணகிரி பூங்காவுக்கு உற்சவ மூர்த்திகள் வந்தடைந்தனர். பின்னர் கர்நாடக சங்கீத பாடகர்கள் ஷோபா ராஜி மற்றும் சத்தியநாரயணன் ஆகியோர் அன்னமய்யாவின் கீர்த்தனைகளை பாடினர்.

இவ்விழாவில் ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், அஹோபில மடத்தின் 45-வது பீடாதிபதி ஸ்ரீ நாராயண யதேந்திர மகா தேசிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மகா தேசிகர் பேசியது: "அன்னமய்யா, பெருமாளின் மீது கொண்ட அதீத பக்தியால் திருமலையிலேயே தங்கி 32 ஆயிரம் கீர்த்தனைகளை பாடினார். தமிழ்நாட்டில் திருவாரூரில் தியாகராஜர் ஆராதனை உற்சவம் நடைபெறுவது போல இங்கும் அன்னமய்யாவின் ஆராதனை உற்சவம் நடத்தப்பட வேண்டும். அன்னமய்யாவின் நினைவாக மகா மண்டபம் கட்டப்பட வேண்டும். அவரது இறைவன் சேவை பாராட்டத்தக்கது' என்று அவர் பேசினார்.
இதில் திருமலை திருப்பதி கோயில் நிர்வாக முதன்மை செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ் பேசுகையில் அன்னமய்யாவின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் அவர் பாடி வெளிவராத கீர்த்தனைகளை இசை வடிவம் கொடுத்து அதை மக்களுக்கு கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து அன்னமய்யாவின் கீர்த்தனைகள் அடங்கிய 11 குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் அன்னமய்யாவின் குடும்ப வாரிசுகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* பத்ம விருது பெற்ற அறிஞர்களுக்கு பாராட்டு விழா

tamilsangamam.jpg

புது தில்லி, மார்ச் 31: பத்ம விருது பெறும் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கான பாராட்டு விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

தில்லி தமிழ்ச் சங்கம், தினமணி நாளிதழ் ஆகியன சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது.

பத்ம விபூஷண் விருது பெறும் கே. பராசரன் (நீதித்துறை), பத்மஸ்ரீ விருது பெறும் எஸ்.ஆர். ஜானகிராமன் (கர்நாடக சங்கீதம்), சி.என். ராகவேந்திரன் (வணிகம், தொழில்துறை), டாக்டர் எஸ். விட்டல் (மருத்துவம்), டாக்டர் அகமது அலி (மருத்துவம்), டாக்டர் அவ்வை நடராஜன் (இலக்கியம், கல்வித் துறை), உஷா உதூப் (இசை) ஆகியோருக்கு, தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலர் சக்தி பெருமாள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

கௌரவிக்கப்பட்டவர்கள் அனைவரும் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பணிகளை புகழ்ந்துரைத்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜி.பாலச்சந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து பத்ம விருது பெறும் அறிஞர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

ஏற்புரையாற்றியவர்களின் உரை விவரம்:
கே.பராசரன்: தமிழ் மக்கள் அனைவரின் ஆசியால் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. பல துறை மேதைகள் மத்தியில் என்னை கௌரவித்ததை பெருமையாக நினைக்கிறேன்.

எஸ்.ஆர்.ஜானகிராமன்: கர்நாடக சங்கீதத்தில் இவ்வளவு பெரிதாக சாதனை புரிந்ததற்கு எனது குருநாதர்தான் காரணம்.

டாக்டர் எஸ். விட்டல்: நாளமில்லா சுரப்பி துறையில் அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்தி 33 ஆண்டுகள் அதில் பணியாற்றி வருகிறேன். தமிழ் உணர்வால் எங்கு சென்றாலும் பாராட்டு கிடைக்கிறது. எனக்குக் கிடைத்த விருதை எனது தாய் தந்தையருக்கு சமர்பணம் செய்கிறேன்.

டாக்டர் அகமது அலி: நான் குரானுக்கு அடுத்ததாக திருக்குறளை அதிகம் படித்தவன். நான் பணியாற்றிய மருத்துவமனைகளில் திருக்குறளை எழுதி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறேன். தமிழே எதற்கும் முன்னோடி என்பதால், எனக்கு இந்தப் பாராட்டு விழாவை நடத்தியுள்ளீர்கள். எனது பணி சிறக்க இந்த பாராட்டு உறுதுணையாக இருக்கும்.

அவ்வை நடராஜன்: ஆரம்பம் முதற்கொண்டே அனைவரையும் அரவணைத்து செல்கிறது தில்லி தமிழ்ச் சங்கம். தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்தான் என்றாலும் அதற்கு பிற பொருள்களும் உண்டு. இனிமையாக இருப்பது, அனைவருடன் மகிழ்ச்சியாகப் பழகுவது என்கிற அர்த்தங்களும் தமிழுக்கு உண்டு.
தில்லியில் வெயில் கடுமையாக இருந்தபோதிலும் இந்த அரங்கில் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து பாராட்டியது எங்களது மனதை வெகுவாக குளிரவைத்துள்ளது.

உஷா உதூப்: மும்பையில் பிறந்து சென்னையில் பாடகியாக வாழ்க்கையைத் தொடங்கிய நான், 17 இந்திய மொழிகளில் பாடி வருகிறேன். தமிழ் மொழியை சரிவர கற்காதது எனக்கு வருத்தமளிக்கிறது. 
இருப்பினும் பிற வட மாநில பாடகர்களை தமிழ் மொழியில் பாடச் சொல்வதை எனது கடமையாகக் கொண்டுள்ளேன். மற்றவர்களோடு ஒப்பிடும்போது தமிழர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். கலைஞர்களை இதுபோன்று தில்லி தமிழ்ச் சங்கம் பாராட்டுவது பெருமைக்குரிய விஷயம்.

தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொதுச் செயலர் சக்தி பெருமாள் நன்றி கூறினார்.

* உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு ரூ 45 கோடி வரிவிலக்கு

புதுதில்லி, மார்ச்.31: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருமானத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஐசிசியின் தலைவராக உள்ள மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
உலகக் கோப்பை போட்டிகளின் மூலம் ஐசிசிக்கு கிடைக்கும் மொத்த வருவாய் ரூ 1476 கோடி. அதில் போட்டியை நடத்த ரூ 571 கோடி செலவாகும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

* ராசாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 2 வரை நீட்டிப்பு

raja.jpg

புதுதில்லி, மார்ச்.31: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் மூவருக்கு ஏப்ரல் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் அவர்கள் அனைவரும் சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஏப்ரல் 2-ம் தேதிதான் 2ஜி வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. முன்னதாக மார்ச் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. எனினும் சிபிஐ கேட்டுக்கொண்டதால் உச்சநீதிமன்றம் 2 நாட்கள் அவகாசம் அளித்தது.

பல்வேறு இணைப்புகளுடன் 80 ஆயிரம் பக்க விரிவான குற்றப்பத்திரிகையை தயாரித்து வருவதாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

* புதுவை தேர்தலில் 187 வேட்பாளர்கள் போட்டி

புதுச்சேரி, மார்ச்.31: ஏப்ரல் 13ல் நடைபெறும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 187 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்பு மனு வாபஸ் பெற நேற்றுடன் அவகாசம் முடிவடைந்தது. அதன்பின்னர் களத்தில் உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 

மொத்தம் 378 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 100 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 91 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 187 பேர் போட்டியிடுகின்றனர்.

சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், முன்னாள் முதல்வர்கள் ரங்கசாமி, ஆர்.வி.ஜானகிராமன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தகுந்த முக்கிய வேட்பாளர்கள்.

புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. அதில் புதுவையில் மட்டும் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும், கேரளாவில் மாஹே தொகுதியும், ஆந்திராவில் ஏனம் தொகுதியும் உள்ளன.

* தமிழக மக்கள்தொகை 7.2 கோடி: கணக்கெடுப்பில் தகவல்

31population.jpg

புது தில்லி, மார்ச் 31: 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: தமிழ்நாடு-7,21,38,958, புதுச்சேரி-12,44,464, இமாசலப் பிரதேசம்-68,56,509, ஜம்மு, காஷ்மீர்-1,25,48,926, பஞ்சாப்-2,77,04,236, சண்டீகர்-10,54,686, உத்தரகண்ட்-1,01,16,752, ஹரியாணா-2,53,53,081, தில்லி-1,67,53,235, ராஜஸ்தான்-6,86,21,012, உத்தரப் பிரதேசம்-19,95,81,477, பிகார்-10,38,04,637, 

சிக்கிம்-6,07,688, அருணாசலப் பிரதேசம்-13,82,611, நாகாலாந்து-19,80,602, மணிப்பூர்-27,21,756, மிசோரம்-10,91,014, திரிபுரா-36,71,032, மேகாலயம்-29,64,077, அசாம்-3,11,69,272, மேற்கு வங்காளம்-9,13,47,736, ஜார்க்கண்ட்-3,29,66,238,

 ஒரிசா-4,19,47,358, சத்தீஸ்கர்-2,55,40,196, மத்தியப் பிரதேசம்-7,25,97,565, குஜராத்-6,03,83,628, டாமன்-டையூ-2,42,911, தாத்ரா,நாகர் ஹவேலி-3,42,853, மகாராஷ்டிரம்-11,23,72,972, ஆந்திரப் பிரதேசம்-8,46,65,533, கர்நாடகம்-6,11,30,704, கோவா-14,57,723, லட்சத்தீவு-64,429, கேரளம்-3,33,87,677, அந்தமான், நிக்கோபார் தீவுகள்-3,79,944.

* பாலாற்றில் தடுப்பு அணை திட்டம்: ஆந்திரம், தமிழகத்தை அழைத்துப் பேச உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, மார்ச் 31: பாலாற்றின் மீது தடுப்பு அணை கட்டப்படப் போவதாகக் கூறப்படுவது குறித்து ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளையும் தேசிய தண்ணீர் வளக் கமிஷன் தலைவரையும் அழைத்துவைத்துப் பேசி சுமுகமாகத் தீர்த்து வையுங்கள் என்று மத்திய தண்ணீர் வளத் துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்திலிருந்து ஆந்திரம் வழியாக வரும் பாலாற்றின் மீது, குப்பம் என்ற இடத்தில் தடுப்பு அணை கட்ட ஆந்திரப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தச் செய்திகளை ஆந்திரம் மறுத்தாலும் அங்கே தடுப்பு அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஓரிரு வகைகளில் தெளிவாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திரத்தின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தாவாக்களைத் தீர்ப்பதற்கு என்று இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் வழிமுறைகளுக்கும் முரணாக ஆந்திர மாநில அரசு எடுத்துவரும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும், பாலாற்றில் தமிழகத்துக்கு உரிய நீர் தொடர்ந்து கிடைக்க வேண்டும், தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் எந்தத் திட்டத்தையும் ஆந்திரம் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.கே.சர்மா, அனில் ஆர்.தவே அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.

இந்தப் பிரச்னையைப் பேச்சு மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும், நடவடிக்கைகள் தொடர்பாக 8 வாரங்களில் (2 மாதங்கள்) உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தப் பிரச்னை பேச்சின் மூலமே தீர்க்கப்படக்கூடியது என்றே தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

* வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க அரசு முயற்சி: ஏ.கே. அந்தோனி

திருவனந்தபுரம், மார்ச் 31: வெளிநாட்டு வங்கிகளில், கணக்கில் காட்டாமல் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு முயன்று வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக ஏ.கே. அந்தோனி வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசியது: "வெளநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் முதலீடு செய்திருப்பவர்கள் பற்றிய பட்டியலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் அளித்துள்ளது.

எனினும் அந்த நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட முடியாது.

ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை மத்திய அரசு எந்த வகையிலும் காப்பாற்ற முயலவில்லை. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி கண்டுவிட்டது. இந்த ஆட்சியில் ஊழலும் பாலியல் குற்றங்களும் பெருகிவிட்டன.

இப்போது நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்' என்றார்

மாநிலச் செய்திகள் :

* விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை : தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

திருப்பூர், மார்ச் 30: தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 ÷சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 பேரவை தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதியில் 10, தெற்கு தொகுதியில் 12, அவிநாசி (தனி) தொகுதியில் 5, பல்லடம் தொகுதியில் 6, உடுமலையில் 7, மடத்துக்குளத்தில் 11, தாராபுரம் (தனி) தொகுதியில் 7, காங்கயத்தில் 11 என மொத்தம் 69 பேர் தேர்தல் களம் காணும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 ÷வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துத் தொகுதிகளிலும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வேட்பாளர்கள் செலவு கணக்குகள் தொடர்பான விதிமுறைகள் புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.16 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம்.

 ÷வேட்பாளர் செலவினங்களுக்காகவே ஏற்கெனவே வங்கிகளில் துவங்கியுள்ள கணக்குகளிலிருந்தே செலவுகளுக்கான பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். எந்த ஒரு தனிப்பட்ட செலவுகள் கூட தேர்தல் செலவினத்தில் குறிப்பிட வேண்டும். தவறும்பட்சத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் வீடியோக்களின் மூலம் செலவினங்கள் கணக்கிட்டு எழுதப்படும். வாக்குகள் சேகரிப்பிலும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதிலும் தேர்தல் விதிமுறை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

வேட்பாளர்கள் தேர்தல் கணக்குகளை தேர்தல் பார்வையாளரிடம் சமர்பிக்க 4, 7 மற்றும் 11ம் தேதி 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
* வாக்களிக்க முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 31: தேர்தலில் வாக்களிக்கும்போது உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பாக, "தேர்தலில் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பேசியதாவது:

தமிழகத்தில் சுமார் 20 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். எனவே எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேர்தல் ஆணையம் சில உரிமைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

குறிப்பாக, நடக்க இயலாதவர்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதியை செய்து தர வேண்டும்.

பார்வையற்றோரை பொறுத்தவரையில், மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்க இயலாது. அவ்வாறு உதவி செய்பவர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களித்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே பார்வையற்றோரின் வாக்குரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது.

இதனைத் தவிர்க்க, மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்கும் வகையில் பேசும் மென்பொருள் (டாக்கிங் சாஃப்ட்வேர்) வசதியை வாக்குச்சாவடிகளில் கொண்டு வர வேண்டும்.

உயரம் குறையுள்ளவர்களுக்கு வாக்கு இயந்திரம் எட்டும் அளவுக்கு சாய்வு தளப் பலகை வசதியை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல, செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு தகவல் பரிமாறும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டையையே போதுமானதாக கருதி வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் நம்புராஜன், உயர வளர்ச்சி தடை பெற்றோர் சங்கத் தலைவர் ஆர்.கோபிநாத், மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய உதவி இயக்குநர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

* தேர்தல் விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை: முசிறி வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 31: திருச்சி, முசிறி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று அந்தத் தொகுதி தொடர்பான வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

முசிறி தொகுதியின் எம்.எல்.ஏ.வான காங்கிரஸின் ராஜசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் ஆஜராகி கூறியது:
முசிறி தொகுதியில் போட்டியிடும் கண்ணையன் என்பவர் தனது தேர்தல் அறிக்கையில், அவருக்காக வாக்கு சேகரிக்கும் நபர்களுக்கு 3 சென்ட் இடம் தருவதாகவும், அவரது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு லட்சம் பேருக்கு ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார். வேட்பாளரின் இது போன்ற வாக்குறுதிகள் சட்ட விரோதமானது. அதைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் கூறியது:

இலவச தொலைக்காட்சி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது, அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அத்தகைய நிலையில் வேட்பாளர்களின் அறிவிப்புகள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, வழக்கு தொடரப்பட்ட நேரத்தில் தேர்தல் நடைபெறவில்லை. இப்போது தேர்தல் நடைபெறுகிறதே என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பது:
முசிறி தொகுதியில் அந்த சுயேச்சை வேட்பாளர் விதிகளை மீறி செயல்படுவது உண்மையென தெரிந்தால் அதைத் தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. அதனால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

* "டாஸ்மாக்' கடைகளுக்கு சீல் வைக்க திட்டம் : பதுக்கலை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், மதுபானம் வாங்கிக் கொடுப்பதை தடுக்கும் வகையில், "டாஸ்மாக்' கடைகள், எந்நேரமும் மூடப்படலாம் என, தகவல் பரவியுள்ளதால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில், தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், ஏப்ரல் 13ம் தேதிக்கு முன், 10 நாள், "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி தேர்தல் கமிஷன் கடந்த வாரமே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில், கடை மூடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என, அதிகாரிகள் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. தேர்தல் ஓட்டுப் பதிவு அமைதியாக நடக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள், தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் மூடப்படுவது வழக்கம். தற்போது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 10ல் மாநில எல்லைகளை சீல் வைத்து கடும் சோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறும், டாஸ்மாக் கடைகள், இரண்டு நாட்களுக்கு முன், (ஏப்., 11ம் தேதி) மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தகவல்கள் ஊழியர்கள் மத்தியிலும் பரவியது.

இந்நிலையில், கடை மூடப்படும் தேதி அறிவிக்கப்பட்டால், பதுக்கல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகள் மொத்தமாக சரக்குகளை கொள்முதல் செய்வர். சரக்குகளை வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடக்கக் கூடும் என, அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, "டாஸ்மாக்' கடைகளை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அதிகாரிகள் மூட முடிவு செய்துள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன், அதாவது, ஏப்ரல் 5ம் தேதி மாலையில், கடைகள் அனைத்தையும் அதிகாரிகளே அதிரடியாக சீல் வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த உத்தேச தேதிக்கு முன்னதாக கடைகளை மூடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். "டாஸ்மாக்' கடைகள் மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்படும் பார்கள், லைசென்ஸ் பெற்ற மதுபான பார்களையும் மூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அதிகாரிகளின் திட்டத்தின்படி, கடைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, அனைத்து சாவிகளும் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடையின் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு கடைக்கும் ஊழியர்களில் ஒருவர், போலீசாரையும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

spt4.jpg


வர்த்தகச் செய்தி மலர்:

அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மேலும் தாராளம்! - மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகள் அதிகபட்ச அளவு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அதேபோல வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருள்களுக்கு இணையாக, இந்திய நிறுவனங்களின் பங்குகளைத் தரவும் இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருள்கள், எந்திரங்கள், உற்பத்தி தளவாடங்கள், சாதனைங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள், இவற்றுக்கு பணமாக செலுத்தாமல், தங்கள் பங்குகளை அளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது," என கூறப்பட்டுள்ளது.

விவசாயத்துறையில்...

வேளாண்மைத் துறையில் விதை உருவாக்கம், நடவுக் கருவிகள் உள்ளிட்ட சில விஷயங்களில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதாகவும் இந்த அறிவிப்பில் அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த அனுமதி, ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும் என்றும், உள்ளூர் விவசாயம் பாதிக்காத அளவு கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன் அனுமதி தேவையில்லை...

ஒரே துறையில் ஏற்கெனவே கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக தொழில் தொடங்கவும், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற தளர்வையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இனி இருவகை நிறுவனங்கள்தான் இந்தியாவில்...

மேலும் இனி இந்தியாவில் இரு வகை நிறுவனங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், முதல்வகை வெளிநாடுகளுக்குச் சொந்தமான அல்லது அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், இரண்டாவது வகை, இந்தியர்களுக்குச் சொந்தமான அல்லது இந்தியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் என்றும் மத்திய அரசு வரையறைப்படுத்தியுள்ளது.

இந்த தாராள வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை தேசிய அளவில் பெரும் விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்படி ராணுவம், பாதுகாப்பு தவிர்த்த அனைத்துத் துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைய ஏதுவாக விதிகள் முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளன. பத்திரிகை, சில்லறை வியாபாரம், விவசாயம் போன்ற முக்கியத் துறைகள் முற்றாக வெளிநாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஏற்படவிருக்கும் சாதக பாதகங்கள் குறித்து நடுநிலையாளர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். 

சில்லறை மற்றும் விவசாயத்துறை அந்நியமயமாக்கல் மக்களை கடுமையாக பாதிக்கும் என நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசுத் தரப்பில், இந்த முடிவு பெரும் அந்நிய முதலீடுகளை இந்தியாவில் குவிக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள். கடந்த 11 மாதங்களில் மட்டும் 18.3 பில்லியன் டாலர்களாகும். அடுத்த ஆண்டு இது இரு மடங்காக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடைபெறுகிறது. செலாவணி முறிச்சட்டம் 1881-ன் பிரிவு 25-ன் கீழ் அன்றைய தினம் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை அல்லது வணிக பணியமைப்பில் பணியாற்றுவோருக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 135 பி-ன்படி, ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 13 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறையால் அறிவுறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


* தொடர்ந்து ஏறுமுகத்தில் பங்குச் சந்தை

மும்பை, மார்ச் 31: மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தைக் கண்டு வருகிறது. வியாழக்கிழமை 155 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 19,445 புள்ளிகளானது. கடந்த 7 நாள் வர்த்தகத்தில் பங்குச் சந்தையில் மொத்தம் 1,446 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் 46 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,833 புள்ளிகளாக உயர்ந்தது. 
அன்னிய முதலீடு அதிகரித்ததும் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாகும். மார்ச் மாதத்தில் அன்னிய நிறுவன முதலீடு 130 கோடி டாலராகும். ஜனவரியில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் 220 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பணவீக்கம் 9.5 சதவீதமாகக் குறைந்ததும் பங்குச் சந்தை ஏற்றம் பெற முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு பங்குச் சந்தையில் புள்ளிகள் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்குகள் 8 சதவீத அளவுக்கு உயர்ந்தன. இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை ரூ. 66.60 உயர்ந்து ரூ. 3,236.75-க்கு விற்பனையானது. டாடா கன்சல்டன்சி பங்கு விலை ரூ. 31.15 உயர்ந்து ரூ. 1,182.50-க்கும், விப்ரோ பங்கு விலை ரூ. 5.40 உயர்ந்து ரூ. 478.30-க்கும் விற்பனையானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 1.44 சதவீதம் உயர்ந்தது. ஓஎன்ஜிசி பங்கு விலை 2.76 சதவீதம் உயர்ந்தது

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 2.50 சதவீதமும், ஐடிசி பங்கு விலை 2.11 சதவீதமும் உயர்ந்தன. பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை மிக அதிகபட்சமாக 3.19 சதவீதம் சரிந்தது.

பஜாஜ் ஆட்டோ 2.90 சதவீதம், ஹீரோ ஹோண்டா 2.23 சதவீதம், என்டிபிசி 2.14 சதவீதம், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 1.66 சதவீதம், டிஎல்எப் 1.58 சதவீதம், ஹிண்டால்கோ 1.58 சதவீதம், ஜிண்டால் ஸ்டீல் 1.43 சதவீத அளவுக்கு உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,444 பங்குகள் லாபம் ஈட்டின. 1,412 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 3,226.86 கோடியாகும்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* இந்திய வீரர்கள் மும்பை வந்தனர்

சண்டிகர், மார்ச்.31: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பை புறப்பட்டுச் சென்றது.

நேற்று மொஹாலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரை இறுதிப் போட்டியை இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.

சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று பிற்பகல் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

* இறுதி ஆட்டத்துக்கான நடுவர்கள்: ஐசிசி அறிவிப்பு


மும்பை, மார்ச் 31: மும்பையில் சனிக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியாவின் சைமன் டபெல், பாகிஸ்தானின் அலீம் தார் ஆகியோர் கள நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ஜெப் குரோவ் மேட்ச் ரெப்ரியாகவும், இங்கிலாந்தின் இயன் கோல்ட், ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது நடுவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சைமன் டபெல் தொடர்ச்சியாக 5 முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சிறந்த நடுவர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு

spt2.jpg

மும்பை, மார்ச் 31: மும்பையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனால் மும்பை நகரமே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வந்துவிட்டது.
இந்த ஆட்டத்தைக் காண குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், இலங்கை அதிபர் ராஜபட்ச ஆகியோர் வருகின்றனர். மேலும் ஏராளமான முக்கிய தலைவர்களும் வருவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 32 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காணக்கூடிய இந்த மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை போலீஸ், தேசிய பாதுகாப்புப் படை, மகாராஷ்டிர எலைட் போர்ஸ் "ஒன்', அதிரடிப்படை, மாநில ரிசர்வ் போலீஸ் படை என பல்வேறு பாதுகாப்புப் படையினர் மைதானத்தில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வான்கடே மைதானம் அமைந்துள்ள பகுதியில் விமானம் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்கு உள்புறத்திலும், வெளிப்புறத்திலும்
180-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் ராஜ்குமார் வத்கர் தெரிவித்துள்ளார்.

மைதானத்தின் நுழைவுவாயிலில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரும், வெளிப்புறத்தில் மாநில ரிசர்வ் போலீஸôரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

வாகனத்தில் வெடிபொருள்களை நிரப்பி வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், மைதானம் இருக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களுக்குப் பதிலாக அரசு பஸ்களை பயன்படுத்துமாறு ரசிகர்களுக்கு போலீஸôர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போட்டியைக் காண வருபவர்களுக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஆன்மீகச் செய்தி மலர் :

*வரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்!

TN_124112000000.jpg

இந்தியாவின் தர்மம், இலக்கியம், கலை, கல்வி போன்றவற்றிற்கு மூலகாரணமாக இருப்பவை வேதங்கள். இவை பற்பல மகரிஷிகளால் இயற்றப்பட்டவை. தங்கள் ஞானக் கண் திருஷ்டியால் அறிந்து அனுபவித்தவற்றை அவர்கள் வேதமாக்கினர். பழமையும், புனிதமும் கொண்டிருப்பதால் வேதங்களை அபௌருஷம் என்பார்கள். மனிதனால் இயற்றப் பெறாமல் இறைவனால் அருளப் பெற்ற ஞானக் களஞ்சியம் என்பது பொருள். இந்து தர்மங்கள் என்னென்ன என்பதை எடுத்துரைக்கும் மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்மம், வேதங்களையே அடிப்படையாகக் கொண்டது. வேதங்களில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் தார்மிக காரியங்களில் பயன்படுபவை. இந்தியாவில் தோன்றியுள்ள அத்தனை மதங்களும் சம்பிரதாயங்களும் வேதங்களிலிருந்து உண்டானவையே. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் ஒரே கோட்பாட்டை உடையவர்களாகவே உள்ளனர். ஆனால், வேதங்கள் தோன்றிய காலத்தைப் பற்றிக் கூறும்போது தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகுள் எழுகின்றன. இந்தியப் பண்பாட்டுப் பராம்பரியத்தைப் போற்றும் அறிஞர்கள், வேதங்களின் காலத்தை நிர்ணியக்கும் விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பற்றி பேச விரும்புவதில்லை

வேதங்கள் அபௌருஷம் என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வேத காலத்து மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களே தவிர, படைத்தவர்கள் அல்லர் என்பது இவ்வகை அறிஞர்களின் ஒருமித்த கருத்து. வரலாற்றுப் பார்வையில் வேதங்களை ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் வேத காலத்தை நிர்ணயிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, வேதங்களில் பழமையானது ரிக் வேதம். அது தோன்றிய காலம் கி.மு. 1200. மாக்ஸ்முல்லர், ரிக்வேதம் இயற்றப்பட்ட காலம் 3200 ஆண்டுகளுக்கு முன் என்று நிர்ணயிக்கிறார். ஆனால் வேத-ஸம்ஹிதைகளிலும், கிரந்தங்களிலும் ஜோதிடம் பற்றிய பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லோகமான்ய பால கங்காதர திலகர், ஜெர்மானிய அறிஞர் யாகோவி ஆகிய இருவரும் தனித்தனியே வேதத்தின் ஆரம்ப காலம் கி.மு. 4000 என்று நிர்ணயித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் புகழ்மிக்க ஜோதிடராக விளங்கிய பாலகிருஷ்ண தீட்சிதர், சதபத கிரந்தத்தைக் கொண்டு ஜோதிடபூர்வமான ஆராய்ச்சி நடத்தி ரிக்வேத காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதிப்படுத்துகிறார். இது திலகர் குறிப்பிட்ட காலத்துக்கும் சிறிது முற்பட்டது. திலகர் ரிக்வேதத்தைக் கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தி, பல பிரமாணங்களை சேகரித்தார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் கூறுகிறார்: வசந்த காலத்தில் மிருகசீரிஷ நட்சத்திர நாளில் ரிக்வேதம் தோன்றியது. தைத்திரீய ஸம்ஹிதையின் படி, பால்குன (பங்குனி) பவுர்ணமியன்று வருஷப் பிறப்பு கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆகவே, தேவர்களின் தாய் அதிதியின் காலம் இந்தியப் பண்பாட்டின் மிகப் பழமை பொருந்திய காலமாக இருக்க வேண்டும் என்றும் அது கி.மு. 6000-4000 இரண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்க வேண்டும் என்றும் திலகர் கூறுகிறார். ஆனால் மகா சூத்ரங்கள் குறிப்பிட்டுள்ள துருவ நட்சத்திரத்தின் தோற்றத்தை ஆதாரமாகக் கொண்டு வேதகாலத்தை கி.மு. 4000 என்று ஜெர்மன் அறிஞர் யோகோவி அறுதியிடுகிறார்.

திலகர் வேதகாலத்தை நான்கு பிரிவுகளாகக் கொள்கிறார்.

1. அதிதி காலம் (கி.மு. 6000-4000)
2. மிருகசீரிஷ காலம் (கி.மு. 4000-2000)
3. கிருத்திகை காலம் (கி.மு. 2500-1400)
4. கடைசி காலம் (கி.மு. 1400-500).


ஆன்மீகச் சிந்தனை மலர் :

*நீங்கள் ஒரு திறமையாளரா? - சாரதாதேவியர்

* உங்களுக்கு ஒரு திறமையோ, செல்வமோ அல்லது எந்த சிறப்புத்தன்மை இருந்தாலும், அந்த ஆற்றல்வளத்தை பிறர் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயற்கை நமக்கு அதை வழங்கி இருக்கிறது.

* ஒரு மனிதன் அன்றாடம் தன் கடமையாக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மையைத் தரும். இதனால் உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.கடமையைச் செய்வதில் தான் உண்மையான ஆனந்தம் உண்டாகும். 

வினாடி வினா :

வினா - தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எது?

விடை - ஆந்திரப் பிரதேசம்.

இதையும் படிங்க :

முனியாண்டி கோயில் கட்ட இடம் தானம்: நெகிழ வைத்த மதுரை மகபூப்பாஷா

large_216483.jpg

மதுரை: மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர். அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.






வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!

நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.



-- 

No comments:

Post a Comment