Sunday, May 1, 2011

இன்றைய செய்திகள் - மே, 01 , 2011

முக்கியச் செய்தி :

'தைரியமா இருக்கனும்..': சிபிஐக்கு மன்மோகன் அறிவுரை!

டெல்லி: சிபிஐ யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


சிபிஐக்கு டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்து பேசிய அவர்,

இந்தியாவின் புலனாய்வு துறைகளில் சிபிஐ முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கிய வழக்குகளை கையாள்வது சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு பரிசோதனை போன்றது. சிபிஐயின் நடவடிக்கைகள் அப்பாவிகளுக்கு துன்புறுத்தல் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் ஊழல் புரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ தயங்கக் கூடாது. சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம்.

தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நடுநிலை தவறக் கூடாது என்றார்.

உலகச் செய்தி மலர் :

* உலகம் முழுவதும் 200 கோடி பேர் ரசித்த ராயல் திருமணம்

large_233396.jpg

லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும்(28) அவரது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனுக்கும்(29) நேற்று, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில், கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 1,900 வி.ஐ.பி., விருந்தினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வழியாக, 200 கோடி பேர் பார்த்து மகிழ்ந்தனர்.

வேல்ஸ் இளவரசர் சார்லஸ், மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனை நேற்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தைக் கண்டு களிக்கவும், மணமக்களை நேரில் பார்த்து வாழ்த்தவும், நேற்று முன்தினம் முதல், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச் வரையிலான வழியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். நேற்று காலை பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, ராணி எலிசபெத்துடன் மணமகன் வில்லியமும், தனது தந்தையுடன் மணமகள் மிடில்டனும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு காரில் வந்தனர். அவர்களுக்கு முன்பாக, இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, வில்லியமின் சகோதரர் ஹேரி ஆகியோர் வந்து காத்திருந்தனர். மணமக்கள் வந்த பின், பேராயர் ரோவன் வில்லியம்ஸ் இருவருக்கும் மண உறுதிமொழி செய்வித்தார். அந்த உறுதிமொழியில் வரக் கூடிய,"கணவருக்குக் கட்டுப்பட்டு' என்ற வார்த்தையை கதே மிடில்டன் சொல்லவில்லை. அதற்கு பதிலாக,"கணவரிடம் அன்பு செலுத்துவேன்' என்று மட்டுமே சொன்னார். தொடர்ந்து, வில்லியம், மிடில்டனின் மோதிர விரலில், தங்க மோதிரத்தை அணிவித்தார். அடுத்து, பைபிளில் இருந்து சில வாசகங்கள் படிக்கப்பட்டன. "பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால், இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று அறிவிக்கிறேன். ஆமென்' என்று பேராயர் தெரிவித்தார்.

மணமக்களை வாழ்த்தும் விதத்தில் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, மணமகன் வில்லியம், கேம்பிரிட்ஜ் அரசர் என்றும், மணமகள் கதே மிடில்டன் கேம்பிரிட்ஜ் அரசி என்றும் ராணி எலிசபெத்தால் பட்டம் சூட்டப்பட்டனர். திருமணத் துக்கான ஆவணத்தில், இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர், மணமக்கள் சர்ச்சில் இருந்து வெளியே வந்து, அரச குடும்பத்துக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க சாரட் வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதே வண்டியில் தான், 1981ல் சார்லஸ் - டயானா தம்பதிகள் ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியெங்கும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், உற்சாகமாகக் குரல் எழுப்பியும், கையசைத்தும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில இடங்களில், மணமக்கள் படம் நடுவில் பொறித்திருந்த தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. நேற்று இரவு பக்கிங்காம் அரண்மனையில், 650 வி.ஐ.பி.,க்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு, ராணி எலிசபெத் சிறப்பு விருந்தளித்தார். திருமண நிகழ்ச்சியை காலையில் இருந்தே, பி.பி.சி., உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு வெளியே, நூற்றுக்கணக்கான பத்திரிகைகளின் நிருபர்கள் தங்கள் புகைப்படக் கலைஞர்களுடன் செய்தி சேகரித்தபடி இருந்தனர்.

* எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லிக்கு உலகளாவிய தடை 
விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிக்கொல்லியான எண்டோசல்ஃபான் இரசாயணத்தை உற்த்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் உலகளாவிய அளவில் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாட்டில், எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற சுற்றுச்சூழல் தொடர்பான மாநாட்டுக் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஸ்டாக்ஹோம் மாநாட்டின் முடிவை இந்தியக் குழுவும் ஏற்றுக்கொண்டது என்றாலும், அதனை இந்திய அரசு ஏற்புத் தெரிவித்து நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய பொதுவான தடை அறிவிக்கப்பட்டாலும், 22 பயிர்களைத் தாக்கும் 44 வகையான பூச்சிகளைக் கொல்ல எண்டோசல்ஃபானை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அவசியம் ஏற்பட்டால் அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

* ஜப்பான் அணு சக்தி ஆலோசகர் ராஜினாமா

ஜப்பானின் அணுசக்தி ஆலோசகர் டோஸ்ஹிஸோ திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் புகுஷிமா, டச்சி அணு உலைகள் வெடித்ததில் கதிர்வீச்சு தாக்குதல் நடந்தது.

இந்நிலையில் கதிர்வீச்சு தொடர்பாக தடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்த ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக,டோஸ்ஹிஸோ கோசாகா என்ற விஞ்ஞானியை தனது அணுசக்தி ஆலேசாகராக பிரதமர் நேட்டோ கான் நியமித்தார்.

இந்நிலையில் தற்போது பிரதமருடன் ‌ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டோஸ்ஹிஸோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து டோஸ்ஹிஸோ கேசாகா கூறுகையில், அணு உலை விபத்து குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டதிட்டங்கள், முன்‌னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக எனது ஆலோசனையை ஜப்பான் பிரதமர் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.

* ஜப்பான் அணு சக்தி ஆலோசகர் ராஜினாமா

ஜப்பானின் அணுசக்தி ஆலோசகர் டோஸ்ஹிஸோ திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் புகுஷிமா, டச்சி அணு உலைகள் வெடித்ததில் கதிர்வீச்சு தாக்குதல் நடந்தது.

இந்நிலையில் கதிர்வீச்சு தொடர்பாக தடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்த ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக,டோஸ்ஹிஸோ கோசாகா என்ற விஞ்ஞானியை தனது அணுசக்தி ஆலேசாகராக பிரதமர் நேட்டோ கான் நியமித்தார்.

இந்நிலையில் தற்போது பிரதமருடன் ‌ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டோஸ்ஹிஸோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து டோஸ்ஹிஸோ கேசாகா கூறுகையில், அணு உலை விபத்து குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டதிட்டங்கள், முன்‌னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக எனது ஆலோசனையை ஜப்பான் பிரதமர் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.

* துனிசியா: 800 கைதிகள் தப்பி ஓட்டம்

துனிசியா நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 800 கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

துனிசியாவின் காசெரைன் நகரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள 2 செல்களில் திடீரென்று தீப்பிடித்தது.இதை தொடர்ந்து அங்கு இருந்த 522 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபோல கப்சா என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை பயன்படுத்திக்கொண்டு இந்த சிறையில் இருந்த 300 க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஐ.நா. அறிக்கை: இலங்கைக்கு சீனா ஆதரவு

பெய்ஜிங், ஏப். 30: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றமே என்ற ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் மே மத்தியில் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், திடீரென சீனா அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.

 இலங்கை அதிபர் ராஜபட்சயை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இப் பிரச்னையை இலங்கையிடமே விட்டுவிடுங்கள், பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு அரசே குழு ஒன்றை அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ சனிக்கிழமை தெரிவித்தார்.

 இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை, உலக நாடுகள் வெளியில் இருந்து செய்தால் போதும் என்றும் ஹாங் அதில் குறிப்பிட்டுள்ளார்.

* என்டவர் விண்கலத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் நிறுத்தம

கேப் கெனவரல், ஏப். 30: என்டவர் விண்கலத்தின் மின் விநியோகப் பகுதியில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட இருந்த அந்த விண்கலம் கடைசி நேரத்தில் ஏவப்படவில்லை. அடுத்தாக திங்கள்கிழமை இது விண்ணில் செலுத்தப்படும் என நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் கேப் கெனவரலில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு என்டவர் விண்கலம் சனிக்கிழமை ஏவப்படுவதாக இருந்தது.

 இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் ஃபுளோரிடா வந்திருந்தனர்.

 விண்கலம் ஏவப்படும் முன் இறுதி கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அந்த விண்கலத்தின் மின் விநியோகப் பகுதியில் பழுது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் விண்கலம் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

 இந்த விண்கலம் அடுத்து திங்கள்கிழமை விண்ணில் ஏவப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்க்க அமெரிக்க அதிபர் ஒருவர் வந்தது இதுவே முதல் முறை. இந்நிலையில் விண்கலம் கடைசி நேரத்தில் விண்ணில் செலுத்தப்படாமல் தாமதமானது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

* போர் விமான ஒப்பந்த ரத்தால் இந்திய, அமெரிக்க உறவு பாதிக்காது: வெளியுறவு இணையமைச்சர் ராபர்ட் பிளேக் திட்டவட்டம்


வாஷிங்டன், ஏப்.30: இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கான போர் விமான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.

 அமெரிக்காவின் இரண்டு விமான நிறுவனங்களான போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவற்றுக்கு போர் விமானங்களுக்கான ஆர்டர் வழங்கப்படவில்லை. ரூ. 45 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இவ்விரு நிறுவனங்களுக்கு வழங்கப்படாதது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோத்தி ரோமரும் இதனால்தான் தனது தூதர் பதவியை ராஜிநாமா செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை பொறுப்பை வகிக்கும் இணையமைச்சர் ராபர்ட் பிளேக் இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி ஜூலை மாதம் நடைபெறும் என்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமை வகிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளிடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேசப்படும்.

 இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளிடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் ஹிலாரி கிளிண்டனும், பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸýம் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, கேரள மாநில தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் கூட்டம் நடைபெறவில்லை.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சி 130ஜே மற்றும் சி17 ரக விமானங்களையும் லாக்ஹீட் விமான நிறுவனத்திடமிருந்து பி 8 கண்காணிப்பு விமானங்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டன.

தேசியச் செய்தி மலர் :

* காமன்வெல்த் விளையாட்டு: புதிய வழக்குப் பதிவு

புது தில்லி, ஏப். 30: காமன்வெல்த் ஊழல் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை புதிய வழக்குப் பதிவு செய்தனர்.

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முன்னேற்பாடுகளுக்காக தில்லி பாரபுல்லா நல்லா பகுதியில் ரூ.620 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இது தொடர்பாக தில்லி பொதுப் பணித் துறை அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 2-ஜி அலைக்கற்றை விவகாரம்: மீரா குமாரிடம் ஜோஷி அறிக்கைபுதுதில்லி,ஏப்.30: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விசாரித்த நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பி.ஏ.சி.) அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு சனிக்கிழமை அனுப்பிவைத்தார்.

 பொதுக்கணக்குக் குழுத் தலைவர் பதவி ஏப்ரல் 30 சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில் அவர், அறிக்கையை உரிய கடிதத்துடன் மக்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

 இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் சார்பில் வரைவு அறிக்கையை மக்களவைச் செயலக உதவியுடன் ஜோஷி தயாரித்திருந்தார். அதில் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் ஊழலைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

 ஆனால் காங்கிரஸ், திமுக மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் சேர்ந்து அறிக்கையை நிராகரிப்பதாகவும் பொதுக்கணக்குக் குழுத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சைபுதீன் சோûஸத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் அறிவித்தனர். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் யாரும் நல்லவர்கள் என்று நான் சான்றிதழ் அளிக்கவே இல்லை.

 பொதுமக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்படும் பணம் எப்படிச் செலவிடப்படுகிறது, யார் அதனால் ஆதாயம் அடைந்துள்ளனர் என்று ஆராய வேண்டியது பொதுக்கணக்குக் குழுவின் கடமை. அதை நிறைவேற்ற விடாமல் தடுப்பது அரசியல் சட்டப்படி தவறான காரியம்.

 முன்னாள் அமைச்சர் ஆ. ராசா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை விசாரணைக்கு அழைப்பதென்றால் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதற்கு கால தாமதம் நிரம்ப ஆகும். நான்தான் விசாரிக்க வேண்டும் என்று இல்லை. இனி அடுத்து தலைவராக வருகிறவர்கூட அவரை விசாரிக்கலாம். என்னுடைய பதவிக்காலம் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைவதுதான் அவரை விசாரிக்காமல் விட்டதற்குக் காரணம்.

* பெல்லாரி பகுதியைச் சேர்ந்த 19 சுரங்க நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை

பெங்களூர், ஏப். 30: இரும்புத் தாதுவை வெட்டி எடுக்க 19 சுரங்க நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 இது தொடர்பாக சமாஜ் பரிவர்த்தன சமுதாயா என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆந்திர, கர்நாடக எல்லையில் நடைபெறும் சுரங்கத் தொழிலை ஆராய 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தது.

 சட்ட விரோதமாக சரங்கத்தொழில் நடக்கிறதா, அதனால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆராய்ந்த அக்குழு, கடந்த 15-ம் தேதி இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.

 இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெல்லாரியில் செயல்பட்டு வரும் 19 சுரங்க நிறுவனங்கள் இரும்புத்தாதுவை வெட்டி எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

* காஷ்மீரில் கள்ள ரூபாய் நோட்டுகள்: 15 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர், ஏப்.30:காஷ்மீர் மாநிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 15 பயங்கரவாதிகளை போலீஸôர் கைது செய்தனர்.

 ÷காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள அனந்த நாக் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு பல புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது லஸ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகள் தலைவர் பிர்தௌஸ் அகமது பீர் என்ற ஜனா பீர் என்பவனை போலீஸôர் கைது செய்தனர். இவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான கள்ள ரூபாய் நோட்டுக்களும், துப்பாக்கி,வெடிகுண்டுகள்,வயர்
லெஸ் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி ஜனாபீர் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துக்கு நிதி திரட்டிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட 9 பயங்கரவாதிகளை போலீஸôர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒரு கம்ப்யூட்டரும், ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.போலீஸôர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

* 11 சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற சிபிஐ-யின் புதிய தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கத்தைப் பெற்ற சிபிஐ அதிகாரிகள்.
புது தில்லி, ஏப்.30: சிறப்பாகப் பணிபுரிந்த 11 சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2009, 2010 மற்றும் குடியரசுத் தினமான ஜனவரி 26, 2010-ல் இந்த 11 அதிகாரிகளும் குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் இப்போது இவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் 11 சிபிஐ அதிகாரிகளுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கத்தை பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கெüரவித்தார்.

 போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ இணை இயக்குநர் கல்ஹோத்ரா, ஆருஷி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ இணை இயக்குநர் அருண் குமார், ஊழல் வழக்கில் பூடா சிங்கின் மகனை கைது செய்த சிபிஐ அதிகாரி ரிஷி ராஜ் சிங் ஆகியோர் குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.


மாநிலச் செய்தி மலர் :

* மே தினம் - தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஏப். 30: உழைப்பாளிகளின் பெருமை உலகெங்கும் போற்றப்படும் மே முதல் தினத்தை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 முதல்வர் கருணாநிதி: உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, அதற்கேற்ற ஊதியம் போன்றவற்றைச் சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்தது இந்த நாள்தான்.

 தொழிலாளர்களுக்கு தடையின்றி 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் உள்பட ஏராளமான நலத் திட்டங்களை வழங்கி நாளும் உழைத்திடும் ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் வளம் பெற வேண்டும் என இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: இந்த மே தின நாளில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு தினக்கூலி பணியாளர்கள் ஒப்பந்தக் கூலி பணியாளர்கள் உள்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகள் உருவாக பாடுபட வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்து தொழிலாளர்கள் வாழ்வில் நலமும் வளமும் கொழிக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: உலகம் 126-வது மே தினவிழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. முதலாளித்துவம் தன்னைக் காத்துக்கொள்ள உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நடைபெறும் மே தின விழா, தொழிலாளி வர்க்கத்துக்கு எழுச்சியூட்டக்கூடியதாக இருக்கட்டும்.

 இந்தப் பின்னணியில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு தமிழக தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளைச் செவிமடுக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம், தொழில்களைப் பாதுகாக்க புதிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்போம். அன்னிய மூலதனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க இந்த மே தினத்தில் உறுதியேற்போம்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: உழைக்கும் மக்களின் உரிமை முழக்கம் எழுப்பும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மே நன்னாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துகள். கடந்த ஆண்டில் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்காக இந்தியத் தொழிலாளரி வர்க்கம் பல போராட்டங்களை நடத்தியது. கடந்த 5 ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரால் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் கோடியும் ஊழலால் இழந்த பல்லாயிரம் கோடியும் இந்திய மக்களை ஏழ்மைக்குள் தள்ளியிருப்பதையும் எதிர்த்துப் போராட இந்த மே தினத்தில் உறுதி ஏற்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு பாமக நிறுவனர் ச.ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கட்சியின் தலைவர் வை.பாலசுந்தரம். உள்ளிட்ட பலரும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

* கல்பாக்கத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு.
காஞ்சிபுரம், ஏப். 30: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 ÷இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இயக்குநர் பல்தேவ்ராஜ். இவர் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த அணுமின்நிலையத்தில் புதிய இயக்குநராக சுபாஸ் சந்திரசேதல் பொறுப்பேற்கிறார். இவர்கள் இருவரும் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 ÷கல்பாக்கத்தில் பாவினி அதிவேக ஈனுலை ரூ.5,627 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிந்து 2012-ல் இந்த ஈனுலை மின் உற்பத்தியை தொடங்கும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ரூ.4.45-க்கு எங்களால் வழங்க முடியும்.

 இவையல்லாமல் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் இங்கு அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 ÷ஜப்பான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்தை தொடர்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு அதுபோல் ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

 ÷கல்பாக்கம் அணுமின்நிலையம் கடல் மட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளது. அதிவேக ஈனுலை(பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கடல் நீர் உள்ளே சென்று இப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை

÷இங்கு மின்சாரத் தடை ஏற்பட்டால் மொபைல் ஜெனரேட்டர்கள் உள்ளன. மின்தடை ஏற்படும் பகுதியில் மொபைல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் கொடுக்க முடியும். இங்குள்ள சென்னை அணுமின் நிலையத்துக்கும் இந்த மொபைல் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 ÷இப்பேட்டியின்போது பாவினி அணுமின்திட்ட இயக்குநர் பிரபாத்குமார், சென்னை அணுமின்நிலைய இயக்குநர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

* மே 9-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்


சென்னை, ஏப். 30: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.

 மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 "மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. கம்ப்யூட்டரில் பதிவான மதிப்பெண்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 8-ல் தான் முடிவடையும். எனவே வரும் திங்கள்கிழமை (மே 9-ம் தேதி) முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலர் டி. சபிதா கடந்த வாரம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித்துறையே தன்னிச்சையாக அறிவித்தது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

 "தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலமாகத் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

 அமைச்சரின் எதிர்ப்பால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென அறிவித்துள்ளார்.

 10 வகுப்புத் தேர்வு முடிவு: பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது. பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

* மின் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வு: 70 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

திருத்தணி, ஏப். 30: மின்சாரத் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் திருத்தணி பகுதியில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 ÷திருத்தணி பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம், அத்திமஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, மத்தூர், புச்சிரெட்டிப்பள்ளி, வீரமங்களம், சுற்றுப்புற கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

 ÷இத் தொழிலை நம்பி 70 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதி விசைத்தறிகளில் காட்டன் ரக வேட்டிகள், புட்டா, கோர்வை, கட்டம், பிளைன் ரக காட்டன் சேலைகள் மற்றும் லுங்கிகள், தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி-சேலை திட்டத்துக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 ÷உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

 ÷கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையும், மின்வெட்டு காரணமாகவும் விசைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டியால், நூல் விலை உயர்வை காட்டி உற்பத்தியான ஜவுளிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்க முடியவில்லை.

 ÷தினசரி 12 மணி நேர சுழற்சி முறையில் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. ஒரு விசைத்தறியில் 12 முதல் 15 மீட்டர் வரை நெசவு செய்யப்படுகிறது. ஒரு தறி இயக்கினால் ரூ. 75 முதல் ரூ. 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அறிவிக்கப்பட்ட மின் தடை 3 மணி நேரம், அறிவிக்கப்படாத மின் தடை 6 மணி நேரம்.

÷இதனால் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 கஞ்சி தொட்டி திறக்கும் நிலை: தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடால் 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. மின் வெட்டால் 70 ஆயிரம் விசைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருமானம் இழப்பு ஏற்ப்பட்டு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை ஏற்படும் என நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 ÷இதுகுறித்து நெசவாளர் ஒருவர் கூறும்போது: நூல் ஏற்றுமதி செய்யப்படுவதால் நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், லுங்கிகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மின்வெட்டு காரணமாக தறி ஒன்றுக்கு 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. விசைத்தறி உபத் தொழிலான பாவு ஓட்டுவதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. டப்பா மிஷினில் நூல் சுற்றுவோர் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏற்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு ரூ. 40 கூட வருமானம் வருவதில்லை.

 ÷நூல் விலையை குறைக்க வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். மத்திய, மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

முதுகுவலிக்கு வீட்டு வைத்தியம்!

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பாலானோர் சந்திக்க கூடியதாகவே உள்ளது.

வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இளவயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்புவதில்லை.

நமது உடலின் பெரும்பாலான எடையை முதுகுதான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடையவர்களுக்கு இப்பிரச்சனையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.

சரியான நிலையில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகுவலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடுபடவுமான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கே:

நீங்கள் அதிக உடல் பருமன் உடையவராக இருந்தால், முதலில் உங்களது அதிகப்படியான எடையை குறையுங்கள்.அப்படி செய்தால்தான் உங்களது முதுகிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகுவலி குறையும்.

வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத்தடம் கொடுக்க வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப்பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலையில் உட்காராமல் இருப்பதும் முதுகுவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
அருணாச்சல பிரதேச முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்: தேடும் பணி தொடர்கிறதுஇடாநகர்: அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. பின்னர் ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கியதாகவும், முதல்வர் டோர்ஜி காண்டு உட்பட அவருடன் பயணித்த அனைவரும், பத்திரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று மாலை திடீரென இத்தகவல் மறுக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு. இவர் நேற்று காலை 9.56 மணியளவில், தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன், பாதுகாப்பு அதிகாரி, உறவுப் பெண் ஒருவர் மற்றும் இரு கேப்டன்கள் என, மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். சரியாக, 11.30 மணிக்கு அவர் பயணித்த ஹெலிகாப்டர் இடாநகரில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், செலாபாஸ் என்ற இடத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, அதன் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. கலவரம் அடைந்த அதிகாரிகள், ஹெலிகாப்டர் ஏதேனும் விபத்துக்குள்ளாகியிருக்குமோ என, பீதியடைந்தனர். தொடர்ந்து ராணுவம் மற்றும் விமானப் படைப் பிரிவுகள் உஷார் படுத்தப்பட்டன. அசாம் மாநிலம் திஸ்பூரிலிருந்து இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இந்நிலையில், முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூடான் நாட்டு எல்லையில் டபோரிஜோ என்ற இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், முதல்வர் உட்பட ஐந்து பேரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சல பிரதேச துணை போலீஸ் டி.ஜி.பி., ராபின் ஹிபு, ""காணாமல் போன ஹெலிகாப்டர் பற்றியும் அதில் பயணித்த முதல்வர் உட்பட ஐந்துபேர் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது,'' என்றார். இதனால் முதல்வர் நிலை என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்திய ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றிய டோர்ஜி காண்டு, 2007 ஏப்ரல் 9ம் தேதி, அருணாசல பிரதேச மாநிலத்தின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகச் செய்தி மலர் :

* நாணயக் கொள்கை: பிரணாப் – சுப்பா ராவ் சந்திப்பு 

விலைவாசியைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தைக் குறைக்க வரும் மே 3ஆம் தேதி நாணயக் கொள்கையை வெளியிடவுள்ள நிலையில், இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சுப்பா ராவ், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.

டெல்லியில் நிதியமைச்சரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ராவ், “நாட்டின் பொருளாதார நிலையை பரிசீலனை செய்யும்போது நிதியமைச்சரையும், இதர அதிகாரிகளையும் சந்திப்பது வழமைதான்” என்று கூறினார்.

மே 3ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நாணயக் கொள்கையில் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதமும் (ரீபோ), கடன் பெறுதலுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரீபோ) 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மார்ச் 2010 முதல் இதுவரை 8 முறை குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதத்தை மைய வங்கி உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* பவுனுக்கு ஒரே நாளில் ரூ. 320 உயர்வு

gold.jpg

சென்னை, ஏப். 30: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுன் ஒன்றுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 16,864-க்கு விற்பனையானது.

 ஒரு கிராம் ரூ. 2,108.

 வெள்ளிக்கிழமை விலை:

 ஒரு பவுன்: ரூ. 16,544.

 ஒரு கிராம்: ரூ. 2,068.

* தங்கம் விலை: ஒரே மாதத்தில் ரூ. 1,080 உயர்வு
சென்னை, ஏப். 29: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,080 உயர்ந்துள்ளது.

 சென்னையில் கடந்த மார்ச் 30-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 464 என்ற விலையில் விற்பனை ஆனது. அடுத்த 30 நாள்களில் ரூ. 1,080 விலை அதிகரித்து, ஏப்ரல் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு பவுன் ரூ. 16, 544 என்ற விலையில் விற்பனையானது. ஒரு கிராம் ரூ.2,068.

 வியாழக்கிழமை விலை:

 ஒரு பவுன்: ரூ.16,552.

 ஒரு கிராம்: ரூ.2,069.

* விளையாட்டுச் செய்தி மலர் :

* சேவாக்கின் அதிரடி ஆட்டத்தால் வென்றது டெல்லி

ஆட்டத்தின் 2வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியைச் சந்தித்த டெல்லி அணியை தனது அபார அதிரடி ஆட்டத்தால் வீரேந்திர சேவாக் மீட்க, சிறந்த பந்து வீச்சால் கொச்சி டஸ்கர்ஸ் அணியை தோற்கடித்து 3வது வெற்றியை பெற்றது டெல்லி டேர் டெவில்ஸ் அணி.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நேரு கிரிக்கெட் மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

பூவா தலையா வென்று முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 6.2 ஓவர்களில் 35 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு மிக மெதுவாக ஆடிய சேவாக்கும், இளம் வீரர் நகாரும் அணியின் எண்ணிக்கையை அடுத்த 8.2 ஓவர்களில் 91 ரன்களுக்கு கொண்டு வந்தனர். நகார் 22 ரன்களுக்கும், அடுத்த ஆடிய பிர்ட் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஒரு முனையில் அபாரமாக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட சேவாக், மிகச் சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 8 பெண்டரிகளுடனும், 5 சிக்சர்களுடனும் 80 ரன்களைக் குவித்தார்.

டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சிரிசாந்த் மிக அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இர்ஃபான் பத்தான் மிக அபாரமாக வீசி மெக்கல்லம், பட்டேல் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் மார்க்கலின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஓரளவிற்கு நின்றாடி 22 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். ஹாட்ஜ் 27 ரன்களும், மகிளா ஜெயவர்த்தனே 18 ரன்களும் எடுத்தனர்.

அஜித் அகார்கர் மிகச் சிறப்பாக பந்து வீசி ஜெயவர்த்தனே, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 18.5 ஓவர்களில் 119 ரன்களுக்கு கொச்சி அணி ஆட்டமிழந்தது.

* இந்திய பாட்மிண்டன் வீரர்கள் தோல்வி  

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்துவெளியேறினர். இதன் மூலம் இந்திய வீரர்களின் சவால் முடிந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் செüரப் வர்மா, சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மலேசியாவின் லீ சாங் வெய்யை எதிர்கொண்டார். லீ சாங்கின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார் வர்மா. ஆடுகளம் முழுவதையும் பயன்படுத்திய லீ சாங் 21- 7 என்ற கணக்கில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் லீ சாங் அபாரமாக ஆடினார். இந்த செட்டை அவர் 21- 8 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 21- 7, 21- 8 என்ற நேர் செட் கணக்கில் லீ சாங் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சௌரப் வர்மா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மற்றொரு ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் குருசாய் தத், ஹாங்காங்கின் ஹு யூனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாகவும், வேகமாகவும் ஆடிய ஹு யூன் 21- 10, 21- 16 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் கொரியாவின் சூங் வான் பார்க் 21- 17, 21- 17 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் தவ்பிக்கை தோற்கடித்தார்.

மகளிர் பிரிவில் ஜப்பானின் சயாகோ சாட்டோ 18- 21, 21- 15, 21- 15 என்ற செட் கணக்கில் கொரியாவின் யோன் ஜுவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார். இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் சாய்னா, ஜுவாலா குட்டா, அஸ்வினி பொன்னப்பா மற்றும் காஷ்யப் உள்ளிட்டோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில்

மூலவர்    :    வெங்கடாசலபதி
உற்சவர்    :    மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்
அம்மன்/தாயார்    :    -
தல விருட்சம்    :    -
தீர்த்தம்    :    சுவாமி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை     :    வைகானஸம்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்னாத்ரி, வேங்கடாத்ரி
ஊர்    :    மேல்திருப்பதி
மாவட்டம்    :    சித்தூர்
மாநிலம்    :    ஆந்தர பிரதேஷம்

பாடியவர்கள்:


குலசேகராழ்வார் மங்களாசாஸனம்:

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே
.

-குலசேகராழ்வார்

 தல சிறப்பு:

இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்' கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.

ராஜ கோபுரம்: இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி மஹா துவாரம்' என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.

மூன்று பிரகாரம்: கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை "சம்பங்கி பிரதட்சிணம்' என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.

கிருஷ்ண தேவராய மண்டபம்: கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ரங்க மண்டபம்:சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.

திருமலை ராய மண்டபம்: ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.

ஜனா மண்டபம்: திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.

துவஜஸ்தம்ப மண்டபம்: வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங் களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.

நடிமி படி காவிலி: இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி' என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.

 திருமாமணி மண்டபம்: பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் 2 மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு, "திருமாமணி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டது. "முக மண்டபம்' என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சன்னதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.

பங்காரு வகிலி: திருமாமணி மண்டபத்தைக் கடந்து "பங்காரு வகிலி' எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.

கருவறை: வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை "ராமர் மேடை' என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர்.இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு "குலசேகர படி' என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது,

""செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே!
நெடியானே! வேங்கடவா!
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும் 
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே!''


என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.

பிரகார தெய்வங்கள்: வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.

யோக நரசிம்மர் சன்னதி: முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந் துள்ளது. இவரை கிரிஜாநரசிம்ம சுவாமி என்று அழைப்பர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப் பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற் களாக இருக்கின்றன.

 தலபெருமை:

யார் பொறுமைசாலி: ஒரு முறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது, பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும், என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்.... இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.

முனிவரின் சோதனை : பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்தக்கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார்.பக்தனை வரவேற்கான பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு,சிலோகம் சென்றார்.சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டு மென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் உட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாரத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.

பத்மாவதி பிறப்பு : பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள்.லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயணவனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால், அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர்.

வேடனாக வந்த சீனிவாசன் : பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார். கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து, இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.

அதிகாலையில் எழும் சீனிவாசன்: திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். "விஸ்வரூப தரிசனம்' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற் ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்). ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி(ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.  ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.   அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை' என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா' என மாறிவிட்டது.

கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

முதல் மணி: அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

சகஸ்ரநாம அர்ச்சனை: கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய் வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம்' என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு' என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.
  ஊஞ்சல் சேவை: மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம்' என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

திருப்பதி லட்டு: திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம்' என்ற பெயரில் அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6000 கிலோ கடலை மாவு, 12,000 கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், கற்கண்டு 500 கிலோ, உலர்ந்த முந்திரி 600 கிலோ மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்த படுகின்றன.
ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும். இந்த தரிசனத்தைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120. இரண்டு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசனத்தைக் காண மிக அதிகமான கூட்டம் இருக்கும்.

பாவாஜியுடன் விளையாடிய பாலாஜி: ஹாதிராம் பாவாஜி என்னும் வடநாட்டு பக்தர் சீனிவாசனை தினமும் வணங்குபவர். அவரின் பக்தியை ஏற்ற வெங்கடேசப் பெருமான், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். ""சுவாமி! என்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும்'' என்று பாவாஜி கேட்டுக் கொண்டார். வெங்கடேசனுடன் அதையேற்று விளையாடினார். ஒருநாள் பெருமாள் தான் அணிந்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை விட்டுச் சென்று விட்டார். ஹாதிராம் பாவாஜி காலையில் கோயிலில் சென்று கொடுத்துவிடலாம் என்று எண்ணினார். காலையில் பூஜைக்கு சென்ற அர்ச்சகர்கள் மாலை இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மாலையை வைத்திருந்த பாவாஜியை திருடன் என்று முடிவெடுத்து தண்டித்தனர். பாவாஜி இறைவனே நேரில் வந்து சொக்கட்டான் விளையாடிய உண்மையை சொல்லியும், யாரும் நம்புவதாக இல்லை.பாவாஜியை சிறை வைத்தனர்.அவரிடம் ""நீர் சொல்வது உண்மையானால், இந்த அறையிலுள்ள கரும்புக்கட்டுக்களை தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும்,'' என்று நிபந்தனை விதித்தனர். பாவாஜி பக்தியுடன் பாலாஜியைத் தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் கரும்புக்கட்டுகளை தின்று தீர்த்தார். திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியிலுள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாவாஜியின் அதிஷ்டானம் அமைந்து உள்ளது.

சிலா தோரணம்: திருமலையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் மலைப்பாதையில் சிலாதோரணம் என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப்படிமம் இயற்கையாக அமைந்த ஒன்றாகும். ஆசியாவில் இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை. இரண்டாயிரத்து 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தோரணத்தின் நீளம் 25 அடி. உயரம் 10அடி. இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படிமத்தில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடாழ்வார், ஐராவதம் ஆகிய உருவங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. இவ்விடத்திற்கு ஜீப்கள் சென்று வருகின்றன.

சிகரத்தில் ஸ்ரீவாரி பாதம்: திருமகளைத் தேடி அலைந்த திருமலை முழுவதும் அலைந்த சீனிவாசப் பெருமாள், இறுதியாக ஓரிடத்தில் வந்து நின்றார் . அம்மலையின் சிகரத்தில் திருமால் பாதம் பதித்து நின்ற இடம் நாராயணகிரி என்று அழைக்கப்படுகிறது.இப்பாதங்களை "ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கின்றனர். ஒரு அழகான மண்டபத்தின் நடுவில் பாததரிசனத்தை இப்போதும் காணலாம். பக்தர்கள் பாதங்களை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றனர். மலையுச்சியிலிருந்து கீழுள்ள கோயிலையும் ரசிக்கலாம். ஜீப்பில் சென்றால் சிலாதோரணத்தையும், ஸ்ரீவாரி பாதங்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து விடலாம். இவ்விரண்டு பகுதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

மலைப்பாதையில் திருப்பதி செல்வோமா?: திருப்பதியில் இருந்து பஸ்களில் திருமலைக்குச் சென்றால் போக வர கட்டணம் ரூ.48 ஆகிறது. இதுதவிர, ஏழு மலைகளைக் கடந்து, படிகளில் ஏறியே திருமலையை அடையலாம். இது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைப்பாதையில் அலிபிரி என்னும் அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 11 கி.மீ., தூரம் உள்ளது. திருப்பதியில் இருந்து டவுன் பஸ்சில் அலிபிரிக்கு செல்லலாம். "அலிபிரி' என்றால் "அடிப்படி' என்று பொருள். அலிபிரியில் கம்பீரமாக இரு சிறகுகளை விரித்த நிலையில் பெருமாளை வழிபாடு செய்யும் நிலையில் கூப்பிய கைகளுடன் மிக உயரமான கருடாழ்வார் காட்சி தருகிறார்.மலைப்பாதை வழியாகத்தான் ஆழ்வார்களும், முனிவர்களும், யோகிகளும், மாமன்னர்களும் மலையேறி ஏழுமலையானைத் தரிசிக்க சென்றுள்ளனர். இதை உணர்ந்து மலையேறினாலே, மலைப்பாதையில் செல்வதற்கு சிரமமாகத் தெரியாது. இந்த மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து வழிபாடுசெய்து தங்கள் பயணம் நல்லமுறையில் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். சில பக்தர்கள் முதல் படியிலிருந்து கடைசி வரை எல்லாப்படிகளிலும், மஞ்சளும், குங்குமம் இட்டு "கோவிந்தா' என முழங்கியபடியே செல்வர். சிலர் படிகளில் கற்பூரம் ஏற்றி படி வழிபாடு செய்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 600 படிகள் உள்ளன. 2ஆயிரத்து 500 படிகள் வரை படிகள் ஏறுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் காலிகோபுரம் என்னும் இடத்தை அடைந்தவுடன் நீளமான படிகள் சமதளத்தில் இருப்பதால் நடக்க எளிதாகி விடும் .

ஸ்ரீ பாத மண்டபம்:  மலைப்பாதையில் நாம் முதலில் அடைவது ஸ்ரீபாத மண்டபம். தன் வாழ்நாளை ஸ்ரீமந்நாராயணனுக்கே அர்ப்பணித்த ராமானுஜர் திருப்பதியில் தங்கி இருந்த போது அடிவாரத்தில் ராமாயண சொற்பொழிவு நடத்துவது வழக்கம்.அவரது மாமனான திருமலைநம்பி, அடிவாரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து சென்று, மலையப்பசுவாமிக்கு பூஜை செய்து விட்டு கீழே இறங்கி வருவார்.ஒருமுறை இப்படி ராமாயணம் கேட்டுவிட்டு, உச்சிகால பூஜை நேரத்தை தவற விட்டு விட்டார். பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் ராமாயணம் கேட்டு நேரத்தை கழித்துவிட்டோமே என்று வருந்தினார். திருமலைநம்பிகளின் வருத்தத்தைப் போக்க வேங்கடவன் அடிவாரத்தில் அவர்முன் காட்சி கொடுத்தார். வெங்கடாசலபதி மலையடிவாரத்திலே நம்பிக்கு நின்று தரிசனம் கொடுத்த இடத்தில் இரண்டு திருப்பாதங்களை காணலாம். அதில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதுவே ஸ்ரீபாத மண்டபம். இன்று ராமானுஜர் ராமாயணம் சொன்ன இடம் அழகிய கோயிலாக காட்சி அளிக்கிறது. எளிமையான கோலத்தில் வேங்கடேசன் காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னதி ஒன்றும் இருக்கிறது. இங்கு பக்தர்களுக்கு பெருமாளின் பித்தளை பாதுகைகளை ஐந்து ரூபாய் டிக்கட் கட்டணத்தில் தருகிறார்கள். அவற்றைச் சுமந்துகொண்டு ஆண்டாள் சன்னதியைச் சுற்றி வர வேண்டும். பெருமாளை எளிய முறையில் வழிபாடு செய்ய அருள்செய்ய வேண்டி பாதுகைகளைச் சுமந்து ஆண்டாளைப் பிரார்த்தனை செய்கின்றனர். மலை யாத்திரையை இக்கோயி லிலிருந்து முறையாகத் தொடங்குகிறார்கள்.

தலையேறு குண்டு: பாத மண்டபத்தை அடுத்துள்ள பகுதி தலையேறு குண்டு பாறை. இப்பாறையில் ஆஞ்சநேயரின் திருவுருவத்தைப் பார்க்கலாம். இவரிடம் தலைபதித்து வணங்கினால், திருமலை யாத்திரை சென்று சேரும் வரையில் தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சென்று வரலாம் என்று நம்பிக்கை. இதுபோல் தலையேறு குண்டு ஆஞ்சநேயர் உருவங்கள் மலைப்பாதையில் மூன்று இடங்களில் அமைந்துள்ளன. புதியவீடு கட்ட ஆசைப்படுபவர்கள் சிறு கற்களை அடுக்கி இங்கு வேண்டுகின்றனர்.

தசாவதார, ஆழ்வார் மண்டபங்கள்:மலைப் பாதை யில் வழி நெடுகிலும் தசாவதார மண்டபங்கள் உள்ளன. இவற்றில், திருமாலின் தசாவதாரங்களை சிலா ரூபத்தில் வடித்து வைத்துள்ளனர். மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய ஒன்பது அவதார மண்டபங்களைக் கடந்ததும், கல்கி அவதார மண்டபம் வருமோ என எதிர்பார்த்தால், ஹயக்ரீவர் மண்டபம் வருகிறது. கல்கி அவதாரம் இனிமேல் நிகழப்போகிறது என்பதால் இந்த மாற்று ஏற்பாடு. மேலும், ஹயக்ரீவர் கல்விக்குரிய தெய்வம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பன்னிரண்டு ஆழ்வார்களின் மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த தசாவதார மண்டபங்களையும், ஆழ்வார் மண்டபங்களையும் முழுமையாகக் கடந்து முடிக்கும் போது நாம் திருமலையின் உச்சியில் இருப்போம். ஆழ்வார்களைப் பற்றிய குறிப்பும், அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றிய விபரமும் அந்தந்த மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 குருவ மண்டபம்: தலையேறு குண்டுவைத் தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்டபத்தை "குருவ மண்டபம்' என்கின்றனர். குருவநம்பி என்னும் குயவர் குடிசையிட்டு இங்கு தங்கியிருந்தார். மலையப்பரின் மரச்சிலையை வடித்து அதன் பாதங்களில் தான் செய்த மண்மலர்களால் பெருமாளைப் பூஜித்து வந்தார். தொண்டைமான்சக்கரவர்த்தி மலைஉச்சியில் பெருமாளை தங்கமலர்களால் பூஜித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். "தான்' என்ற அகந்தையுடன் பொன் மலர்களால் வழிபாடு செய்த மன்னனுக்கு பாடம் புகட்ட பெருமாள் விரும்பினார். மன்னன் பூஜித்த மலர்கள் அனைத்தும் மறையச் செய்தார். குருவநம்பியின் மண்மலர்களை தன் பாதத்தில் கிடக்கும்படி செய்தார். பொன் மலர்களைக் காணாமல் மன்னன் தவித்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், குருவநம்பியின் உ<ண்மையான பக்தியையும், மன்னனின் செருக்கினையும் உணரச் செய்தார். அடுத்தநாள் மன்னன் குருவநம்பியின் பாதங்களை வணங்கி, அவருக்கு ஒரு மண்டபத்தை ஏற்படுத்தி கொடுத்தான். இந்த மண்டபமே குருவ மண்டபம் எனப்படுகிறது.

காலி கோபுரம்:  மலைப்பாதையில் மொத்தம் மூன்று கோபுரங்கள் அமைந்துள்ளன. அலிபிரியில் முதல் கோபுரம் அமைந்துள்ளது. 2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து "காலிகோபுரம்' உள்ளது. 17ம் நூற்றாண்டில் மட்லகுமார அனந்தராயன் என்னும் மன்னனே இந்த மலைப் பாதை கோபுரங்களை கட்டியவன். இக்காலி கோபுரத்தை அடைந்து விட்டாலே திருப்பதி மலையில் பாதி ஏறிவிட்டது போலாகி விடும்.  செங்குத்தாக இருக்கும் படிகள் காலி கோபுரத்துடன் முடிவடைகின்றன.இக்கோபுரத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய திருச்சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இரவு நேரத்தில் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் இவ்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோபுரம் உள்ளது. இனி மலைப்பாதையில் சரிவான படிகளே பெரும்பாலும் இருப்பதால் நடப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. முற்காலத்தில் காலிகோபுரத்தில் மலையேறும் பக்தர்களுக்கு தண்ணீர்பந்தல் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது பெரிய கடைத்தெருவாக காட்சி தருகிறது. சகல பதார்த்தங்களும் கிடைக்கின்றன. இங்கு பக்தர்கள் சற்று இளைப்பாறி பயணத்தைத் தொடர் கின்றனர்.

தபோவன நரசிம்மர்: காலிகோபுரத்தை அடுத்து சற்று தொலைவில் நரசிம்மர் கோயிலைத் தரிசனம் செய்யலாம். நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. ரிஷுபமுனிவர் இத்தபோவனத்தில் தவம் செய்த போது நரசிம்மர் காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. யோகநரசிம்மர் சுயம்பு வடிவத்தில் நெடிய மூர்த்தியாக காட்சி தருகிறார். பிற்காலத்தில் இவ்விடத்தில் லட்சுமிநரசிம்மருக்கு கோயிலை எழுப்பியுள்ளனர். இத்தபோவனம் மரங்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தருகிறது. தியான பயிற்சி செய்பவர் கள் இக் கோயிலின் முன்மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து மனஅமைதி பெறுகிறார்கள்.

வரவேற்கும் வேங்கடாத்ரி: முழங்கால் முறிச்சானிலிருந்து சற்று தூரம் நடந்தால் வேங்கடாத்ரி மலை வருகிறது. இங்கு பரமனுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், பாவை பாடிய கோதையும் காட்சி தருகின்றனர். இத்துடன் மலைப்பாதை நிறைவுபெற்று, சாலை வழியே வரும் பாதையைச் சந்திக்கிறோம்.
திருமலையை எட்டிவிட்டோம். சுப்ரபாத ஒலி தெருவெங்கும் முழங்குகிறது. படியேறி களைப்பை மறந்து திருமலை வேங்கடத்தானின் ஆனந்த நிலையத்தை காணும் ஆர்வம் எழுவதை நம்மால் உணரமுடிகிறது.

முழங்கால் முறிச்சான்: இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, "மோக்காலு மிட்டா' என்னும் இடம் வருகிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு "முழங்கால் முறிச்சான்' என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை "மோகாலு மிட்டா' என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* உனக்குள்ளேயே விலகி நில் - அன்னை

உங்களில் மிகப் பெரும்பாலோர் உங்களுடைய ஜீவனின் மேற்பரப்பிலேயே வாழ்கிறீர்கள். அதனால் புறச் செல்வாக்குகள் உங்களைத் தீண்டுவதற்கு இடமளிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு வெளியே வாழ்வதுபோல் அவ்வளவு வெளிப்புறத்தில் வாழ்கிறீர்கள். அவ்வாறு புறத்தில் வாழும் விரும்பத்தகாத இன்னொரு ஜீவனைச் சந்திக்கும்போது கலவரமடைகிறீர்கள்.

நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே விலகி நிற்க வேண்டும். உன்னுள்ளேயே ஆழ்ந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விலகி நின்றாயானால், நீ பத்திரமாயிருப்பாய். வெளி உலகில் இயங்கிக் கொணடிருக்கும் மேலெழுந்தவாரியான சக்திகள் உன்னைப் பயன்படுத்த இடம் கொடாதே. அவசரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதிருக்கும் போது கூட சிறிது நேரம் விலகி நின்றால் எவ்வளவு குறைந்த நேரத்திலும் அதிக வெற்றிகரமாகவும் உங்களுடைய வேலையைச் செய்ய முடியும் என்பதைக்கண்டு ஆச்சரியப்படுவாய்.

யாராவது உன் மீது கோபப்பட்டால் அவனுடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நில். எந்த ஆதரவோ பதிலோ கிடைக்காததால் அவனுடைய கோபம் மறைந்து போகும், எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும்படியான சோதனைகளையெல்லாம் எதிர்த்து நில். விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்யாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் செயலில் குதிக்காதே.

சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும். அதுவே தெய்வ ஒளி, தெய்வ அன்பு, தெய்வ வாழ்வு - அதுவே பரம சாந்திர, பூரண மகிழ்ச்சி, புவி மீது அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துதல், அதன் சிகரம் இறைவனின் முழு வெளிப்பாடு.

இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.

வினாடி வினா :

வினா - முதன் முதலாக விமானம் பறந்த நாள் எது ?

விடை - 1903 டிசம்பர் 17.

இதையும் படிங்க:

குழந்தைகளையும் பாதிக்கும் மன அழுத்தம்

பட்டாம்பூச்சியை போல சிறகடித்து பறக்கும் பருவம் மழலைப்பருவம். எது பற்றியும் கவலையில்லாமல் சுற்றித்திரிந்தாலும், அந்த பிஞ்சு மனங்களையும் காயமடையச் செய்யும் சில காரணங்கள் உள்ளன. தங்களின் சோகத்தை வெளியில் சொல்ல முடியாத பெரும்பாலான குழந்தை கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன.


குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. அவை:

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மனமுண்டு. அதுபோலத்தான் குழந்தைகளின் குணமும். குழந்தைகளின் மனதில் பாதிப்பு ஏற்பட்டால் சிலகுழந்தைகள் அழுது ஆர்பாட்டம் செய்வார்கள். ஒரு சிலர் கோபமாகவும், ஆத்திரமாகவும் இயலாமையை வெளிப்படுத்துவார்கள். சிலர் எப்போதும் சோகமாகவும், கவலையோடும் காணப்படுவார்கள். இதற்கெல்லாம் மருத்துவர்கள் கூறும் காரணங்களை தெரிந்து கொள்வோம்.

உறவில் விரிசல்

பெற்றோர்களிடையே ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் குழந்தைகளை பாதிக்கின்றன. குடும்பத்தில் ஏற்படும் குழப்பமான சூழ்நிலைகளும் மன அழுத்தத்திற்கு காரணமாகின்றன. மிக நெருக்கமானவர்களின் பிரிவு. செல்லப்பிராணிகளின் இறப்பும் மனதை பாதிக்கின்றன.

தோல்விகள் பாதிக்கும்

சின்னசின்ன தோல்விகளைக் கூட தாங்க முடியாமல் சில குழந்தைகள் தங்களுக்குள்ளேயே நத்தையாக சுருங்கிவிடுகின்றனர். அடிக்கடி ஏற்படும் உடல் நோய்களும் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

எதிர்பாராத துன்புறுத்தல்

பள்ளிகளிலோ, வெளியிடங்களிலே பிற குழந்தைகளினால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. உறவினர்களோ, மற்றவர்களோ குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதும் பிரச்சினைக்கு காரணமாகிறது. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய் விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

ஆதரவாய் இருங்கள்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனம்விட்டு உரையாடவேண்டும். அவர்களை சொல்வதே கேட்டாலே பாரம் இறங்கிய உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.

குழந்தைகள் கூறுவதை முழுவதுமாக கேட்டப்பிறகே பெற்றோர்கள் பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் இடைமறித்து குழந்தைகளை குற்றம் சொல்லக்கூடாது. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

செயல்பாடுகளை கவனியுங்கள்

சோர்வாய் இருக்கும் குழந்தைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இதனால் பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணமே அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

பிரச்சினைகளை புரிய வையுங்கள்

குழந்தைகளிடம் உள்ள பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுங்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தெளிவாக புரிய வைப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுவிக்க முடியும்.

குடும்பத்தோடு சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வதன் மூலம் உற்சாகத்தை ஏற்படுத்தலாம். இடமாறுதலுக்காக உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.

புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவைகளால் மன அழுத்தம் குறையும்.

மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்

எதை செய்தால் மனம் மகிழ்ச்சியடைகிறதோ அத்தகைய செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள். தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள். வேகமாக நடப்பது, ஓடுவது, போன்ற சாதாரண உடற்பயிற்சிகளை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.

இந்த முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை காலதாமதம் செய்யாமல் நாடுங்கள்.

சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள். ஒற்றுமையும், அபரிமிதமான பாசமும்தான் எத்தகைய நோய்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 
நன்றி - வெப் துனியா, தின மணி, தட்ஸ்தமிழ்.--

No comments:

Post a Comment