Thursday, May 19, 2011

இன்றைய செய்திகள் - மே , 19 , 2011.

முக்கியச் செய்தி :

அழிக்கப்படும் ஒüஷதகிரி?

kadu.jpg

கடலூர், மே 18: கடலூரில் இருந்து 12 கி.மீ. தென் மேற்காக அமைந்து இருப்பது ஒüஷதகிரி என்னும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் மலைப் பகுதி. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மலைப்பகுதி ஒüஷதகிரிதான்.

 ÷மா, பலா, முந்திரி, தேக்கு மரங்களால் சூழப்பட்டு பார்க்கும் போது, பச்சை பசேலென்று அழகு கொஞ்சும் பச்சை மலையாகக் காட்சி அளிப்பது ஒüஷதகிரி. இந்த அழகுமிகு ஒüஷதகிரியில்தான் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகியவை அமைந்து உள்ளன.

 ÷மேற்குப் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்து இருக்கும் பகுதி கேப்பர் மலை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் மத்திய சிறைச்சாலை மட்டுமே அமைந்து இருந்த கேப்பர் மலைப் பகுதி, இன்று 40 கிராமங்களைக் கொண்டதாக மாறி, வாழைத் தோட்டங்கள், மலர்த் தோட்டங்கள், கரும்பு வயல்கள் என மாறி, வேளாண்மையின் செழிப்பைக் காண முடிகிறது.

 ÷ஒüஷதகிரியைக் கிழித்துக் கொண்டு கெடிலம் ஆறு ஓடுகிறது. கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய கொண்டங்கி ஏரி உள்ளது. இந்த மலைப் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் நல்ல சுவை நிறைந்தது. எனவே கடலூர் நகருக்குத் தேவையான குடிநீர், ஒüஷதகிரியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.

 ÷ஆனால் இந்த அழகு கொஞ்சும் மலைப் பகுதி, அரசுத் துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, இயற்கை எழிலும் சுற்றுச்சூழலும் வெகுவாகச் சிதைக்கப்பட்டு வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.

 ÷கடலூர் மத்திய சிறை அருகே பெண்கள் சிறை 10 ஏக்கரில் அண்மையில் உருவாக்கப்பட்டது. சிறைக் காவலர்களுக்காக ஏற்கெனவே ஓடுகள் வேயப்பட்ட 50 வீடுகள் இருந்தன. அவைகள் சிதைந்து கிடக்கும் நிலையில் புதிய இடங்களைத் தேர்வு செய்து, ஏராளமான மரங்களை வெட்டி வீழ்த்தி, அடுக்குமாடி வீடுகள் பல அண்மையில் கட்டப்பட்டன.

 ÷மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துடன் துணை மின் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அரசுத் துறைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, இந்த மலைப் பகுதியில், தற்போது சுமார் 40 நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

 ÷இதற்காக எவ்விதத் தடையுமின்றி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் ஆயிரம் ஆயிரமானவை. இதற்கு வனத்துறை அனுமதி கோரப்பட்டதா என்று தெரியவில்லை.

 ÷இந்த மலைப் பகுதியில் இருந்து, பெருமளவில் சரளைக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் மட்டுமன்றி, புதுவை மாநிலத்துக்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு போகப்படுகின்றன.

 ÷இந்நிலையில் இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அரசு மருத்துவக் கல்லுரிக்கான இடமும் இங்குதான் தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. இதற்காக மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

 ÷மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அங்கு கொண்டு செல்லவும் திட்டம் இருக்கிறதாம். அரசுத் துறைகளின் படையெடுப்பாலும், அவர்களின் தயவால் நுழைந்து இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களால் பேராசையாலும் அங்கு விரைவில் ஒரு டவுன்ஷிப் உருவாகும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.

 ÷இதற்காக இன்னும் எத்தனை ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஒüஷதகரி மலைப் பகுதி முழுவதும் விரைவில் மரங்கள் அற்ற மொட்டை மலையாகி விடும் என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்த மலைப் பகுதி முழுவதும், ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வருவதால், கேட்பாரின்றி மரங்களை வெட்டிக் குவிப்பதும், அலுவலகங்களையும், குடியிருப்புகளையம் தாராளமாகக் கொண்டுவந்து குவித்து வருவதும், நிச்சயம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.

 ÷அங்கு மேற்கொண்டு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்காத வகையில், குறைந்தபட்சம், அரசு மருத்துவக் கல்லூரியையாவது, கடலூரை அடுத்த நத்தப்பட்டு அருகேயுள்ள, அரசுக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலத்துக்கு மாற்றலாம் என்கிறார் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்.

 ÷அங்கு மருத்துவக் கல்லூரி அமைந்தால் ஒüஷதகிரியில் கட்டுமானங்கள் பெருமளவில் அதிகரிக்கும். கடலூர் பகுதியில் இருந்து நோயாளிகள் சென்று வருவதும் மிகவும் சிரமமாக இருக்கும். நத்தப்பட்டு பகுதியில் மருத்தவக் கல்லூரி அமைந்தால், கடலூர் புறவழிச் சாலை, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அகியவற்றின் அருகாமையில் இருப்பதால், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் வசதியாக இருக்கும். அத்துடன் அழகிய ஒüஷதகிரி மலை, ஒரு டவுன்ஷிப்பாக மாற்றப்பட்டு, மொட்டை மலையாவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.

உலகச் செய்தி மலர் :


* பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு 'புல்லட் புரூப்' கார்

18-bullet-proof-car300.jpg

டெல்லி: அல்-கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினை காரணமாக, பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டுள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகளை தாலிபன் தீவிரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளை நடத்திய அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் தனியாக சென்று கொண்டிருந்த சவுதி தூதரை வழிமறித்து சுட்டுக்கொன்றனர். இதனால், அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகி்ஸ்தானில் எழுந்துள்ள நிலைமை குறித்து சமீபத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. அதில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடி்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாவலர்களின் துணையின்றி தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அவர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை எதுவும் விடு்க்காத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தூதகரத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சிரியாவில் அரசுக்கு எதிராக முழு அடைப்புக்கு அழைப்பு
பெய்ரூட், மே 18: சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான போராட்டக் குழுவினர் புதன்கிழமை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர்.

 கிழக்காசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக அரசுகளுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். ஜனநாயக முறையிலான அரசு வேண்டும், தனி மனித சுதந்திரம் வேண்டும் என இவர்கள் கோரி வருகின்றனர். எகிப்து, யேமன் தொடங்கி இப்போது சிரியாவிலும் இது பரவி வருகிறது.

 சிரியாவின் அதிபர் பஷார் அல்-அஸôத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கடுமையான வழிகள் மூலம் அரசு அடக்கி வருகிறது. இதுவரை 800 பேர் இதில உயிரிழந்துள்ளனர் என்றும், 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித நேய ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

 அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சிரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கத் திட்டமிட்டுள்ளன.

 சிரிய அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் புதன்கிழமை முழு அடைப்பு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

 அனைத்துக் கல்விக்கூடங்களும் அன்று இயங்கக் கூடாது என அவர்கள் கூறினர். அது போல, நாடு முழுவதும் வர்த்தகம் முடங்கும் விதமாக அனைத்துக் கடைகளும், நிறுவனங்களும் புதன்கிழமை அடைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

 இதற்காக அவர்கள் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்தனர். ஆயினும், இந்த முழு அடைப்புக்குப் போதிய ஆதரவு இருக்கவில்லை. வாகனங்கள் வழக்கம் போல ஓடின. கடைகள் திறந்திருந்தன.

 ராணுவ வீரர்கள், போலீஸôர் கொல்லப்பட்டனர்: இதனிடையே, எல்லைப் பகுதியில் சிரியாவைவிட்டு வெளியேற முயன்றவர்களுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள், போலீஸôர் 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

 தப்பித்து ஓட முயன்றவர்களை ராணுவத்தினர் வளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* குவைத்: புகைப்பிடிக்க ரூ.832 கோடி செலவு

துபை,மே 18:குவைத் நாட்டில் புகைபிடிக்க மக்கள் ஆண்டுக்கு ரூ.832 கோடி செலவு செய்கின்றனர்.

 ÷புகையிலை இல்லாத உலக தினம் வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

 ÷இதையொட்டி குவைத்தில் நடந்த ஒரு விழாவில் அந்த நாட்டு அரசு துணைச் செயலாளர் யூசுப் அலி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, குவைத் நாட்டு மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலம் கெடுகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ÷குவைத் நாட்டில் புகைப்பிடிக்க மக்கள் ஆண்டுக்கு ரூ.832 கோடி செலவு செய்கின்றனர். குவைத்காரர் ஒருவர் ஆண்டுக்கு 2330 சிகரெட் புகைக்கிறார். புகையிலை இல்லாத உலக தினத்தை அனுசரிப்பதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

*  மும்பை தாக்குதல் வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் பூர்வாங்க நடவடிக்கை

சிகாகோ, மே 18: மும்பை தாக்குதல் சதியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராணா, ஹெட்லி ஆகியோர் மீதான வழக்கின் ஆரம்ப கட்ட பணிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை தொடங்கியது.

 சிகாகோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கின் நேரடி விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது.

 கனடாவைச் சேர்ந்த தஹவூர் ராணா மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சதிக்குத் துணை போனதாகக் கைது செய்யப்பட்டார்.

 மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு ஆள் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதல் நடப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பிருந்தே திட்டம் தீட்டப்பட்டது. இதைத் திட்டமிட்டவர் டேவிட் கோல்மன் ஹெட்லி என்று அறியப்படும் தாவூத் கிலானி. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடும் பொருட்டு பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார்.

 மும்பை தாக்குதலைத் திட்டமிட அவர் அங்கு சென்று தங்கியிருந்தார். தஹவூர் ராணாவும் ஹெட்லியும் நண்பர்கள். பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். இதில் ராணா பின்னர் கனடாவில் குடியேறினார்.

 மும்பை தாக்குதலுக்கு அவர் பொருள் உதவி செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் நடத்தி வந்த வெளிநாடு செல்லும் பயணிகள் உதவி மையத்தின் மூலம் ஹெட்லி மறைவாக செயல்பட உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 ராணா மீதான வழக்கு: அமெரிக்க நீதிமன்றங்களில் ஜூரி என்கிற நடுவர் முறை பின்பற்றப்படுகிறது.

 பன்னிரண்டு பேர் அடங்கிய இந்த நடுவர் குழு வழக்கு விசாரணை முழுவதையும் நீதிமன்றத்தில் அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்து கவனிப்பார்கள். வழக்கறிஞர்களின் வாதங்களின்போது அவர்கள் குறுக்கிட முடியாது. ஆனால் அந்த வாதங்களின்போது நடுவர்களுக்கு சட்ட விளக்கங்கள் அளித்து, நீதிபதி வழிகாட்டுவார்.

 விசாரணையின்போது குற்றவாளி, அரசு தரப்பு ஆகிய இரு தரப்பினரின் வாதம், எதிர்வாதம் முழுவதையும் கேட்டபின், அது முடிந்தவுடன், தனியே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, தங்களுக்குள் விவாதிப்பார்கள். அவர்களின் முடிவின்படி நீதிபதி தீர்ப்பளிப்பார்.

 இந்த நடுவர் குழுவுக்கு பொதுமக்களிலிருந்து 12 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் பதிவு செய்த வாக்காளர்கள் அல்லது ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் ஆகியோரது பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படலாம். பல பேரை நடுவர் குழுவில் இடம்பெறுவதற்காகத் தேர்ந்தெடுத்து, நீதிபதி, வழக்கின் இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முறையாக விசாரணை செய்து இறுதியில் 12 பேர் ஜூரி என்கிற நீதி நடுவர் குழுவில் நியமிக்கப்படுவர். இந்தக் குழுவில் உள்ளவர்கள் இரு தரப்பினருக்கும் ஏற்புடையவர்களாக இருப்பார்கள். வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் இவர்கள் நீதிமன்றம் வர வேண்டும்.

 ராணா வழக்கில் நீதி நடுவர் குழு: தஹவூர் ராணா வழக்கில் நடுவர் குழுவில் இடம்பெற இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சிகாகோ நீதிமன்றத்தில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் மதம் பற்றி அவர்கள் கொண்டுள்ள கருத்து, பயங்கரவாதத்தைக் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

 இதில் தீவிர நிலைப்பாடுகள் கொண்டிருந்ததால் பலர் நடுவர் குழுவில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

 அடுத்த சில நாட்களில் 12 பேர் முடிவு செய்யப்பட்டுவிடுவார்கள். வழக்கு மே 23 தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* "அகிம்சை, மனித உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு'

வாஷிங்டன், மே 18: அமெரிக்காவின் முக்கிய கொள்கைகளான அகிம்சை, மனித உரிமைகள், அரசியல்-பொருளாதார சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி அதிபர் ஒபாமா தனது வெளியுறவுத் துறை கொள்கை வெளியீட்டின்போது பேசுவார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, நல்ல மாற்றங்கள் குறித்துப் பேசுவார் என வெள்ளை மாளிகை பத்திரிகைத் தொடர்பு அதிகாரி ஜே கார்னி கூறினார்.

 அவர் செவ்வாய்கிழமை கூறியது: கிழக்கு ஆசிய நாடுகளில் நல்ல அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவதை அமெரிக்கா எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பது பற்றி ஒபாமா பேசுவார். அகிம்சை, மனித உரிமைகளுக்கு ஆதரவு, அரசியல்துறை மற்றும் பொருளாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் ஆகியவைதான் அமெரிக்காவின் முக்கிய கொள்கைகள். இவற்றை வலியுறுத்தி அதிபர் ஒபாமா வியாழக்கிழமை உரையாற்றுவார் என கார்னி தெரிவித்தார்.

 அமெரிக்காவின் அரசியல் கொள்கைகள், மத்திய கிழக்குப் பகுதியில் அந்நாட்டின் நிலைப்பாட்டை அவர் வெளியிடுவார். இந்தப் பகுதிவாழ் மக்களின் ஜனநாயக விருப்பங்களை ஆதரித்து அவர் பேசுவார். கடந்த 5 மாதங்களாக அப்பகுதியில் உள்ள நாடுகளின் குடிமக்கள், தங்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும் எனக் கோரி வருகின்றனர். பொருளாதார ரீதியில் தங்களுக்குத் தனித்துவம் தேவை என்று அவர்கள் கூறி வருகின்றனர். தனி மனித சுதந்திரத்துக்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.

 எதிர்காலத்தில் இவையெல்லாம் அந்தப் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக நிலையற்றத் தன்மையை உருவாக்கும் நிலையுள்ளது. அந்த மக்களின் நியாயமான, ஜனநாயக எதிர்பார்ப்புகளுக்கு அந்தப் பகுதியின் அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.

 அரபு வசந்தம் என்று அழைக்கப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் மாற்றங்களை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் வரவேற்று, ஆதரிப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது என அவர் கூறினார்.

* அல்-காய்தா இடைக்காலத் தலைவர் சயீஃப் அல்-ஏடெல்
வாஷிங்டன், மே 18: அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் இடைக்காலத் தலைவராக சயீஃப் அல்-ஏடெல் பொறுப்பேற்றுள்ளார்.

 இந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2-ம் தேதி அமெரிக்க கமாண்டோக்களால் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் உள்ள சொகுசு விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த பயங்கரவாத அமைப்புக்கு யார் தலைமை ஏற்பது என்ற நிலை உருவானது.

 இந்நிலையில் எகிப்து ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி அல்-காய்தா அமைப்பில் உள்ள பயங்கரவாதி சயீஃப் அல்-ஏடெல் தலைமை ஏற்கிறார். முறைப்படியான தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சயீஃப் தலைமையில் இந்த இயக்கம் செயல்படும்.

 எகிப்தில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் குழு உறுப்பினராக சயீஃப் செயல்பட்டு வருகிறார். 1981-ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்த ஜிஹாத் குழுதான் காரணம். அத்துடன் ஆப்கானிஸ்தானில் ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டதும் இந்த பயங்கரவாத குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அல்-காய்தா அமைப்பின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சயீஃப் அல் - ஏடெல், இந்த அமைப்பில் நீண்ட காலமாக இருப்பதோடு, பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக செயல்பட்டுள்ளார் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 லிபியாவில் உள்நாட்டுக் கலவரத்தில் ஈடுபடும் இஸ்லாமிய குழுக்களுக்கு தலைமை ஏற்றுள்ளார். இந்தக் குழு அல்-காய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆனால் ச மீப காலமாக அல்-காய்தா அமைப்புடனான உறவை இந்தக் குழு துண்டித்துக் கொண்டுள்ளதாக சிஎன்என் செய்தியாளர் நோமன் பெனோட்மன் தெரிவித்துள்ளார். அல்-காய்தா அமைப்பின் செயல்பாடுகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உன்னிப்பாகக் கவனித்து வருபவர் நோமன் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜிஹாதி குழுக்கள் மத்தியில் சயீஃப் அல் ஏடெல் மிகவும் பிரபலமானவர். இவரது மற்றொருபெயர் முகமது இப்ராஹிம் மக்காவி என்பதாகும். உலகம் முழுவதும் உள்ள ஜிஹாதி குழுக்கள், பின் லேடனுக்குப் பிறகு தகவல் பரிமாற்றத்தில் பெரும் இடைவெளி நிலவுவதால் சயீஃபை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளன.

 இருப்பினும் பின் லேடனுக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் தலைவராக அய்மான் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்பார் என தெரிகிறது. இவரும் எகிப்து நாட்டவரே.

 இடைக்கால தலைவராக சயீஃப் தலைமையேற்று இந்த அமைப்பை வழிநடத்துவார் என நோமன் தெரிவித்துள்ளார். 2001-ம் ஆண்டு ஆப்கனில் தலிபான் அமைப்பின் செயல்பாடு குறைந்துபோனதால் சயீஃப் அங்கிருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றார்.

 ஈரானிலிருந்து சவூதி அரேபிய அரச குடும்பத்தினருக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டார் சயீஃப். ரியாத்திலிருந்து 2003-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்றும் நோமன் குறிப்பிட்டுள்ளார்.

 
* மும்பை தாக்குதலுக்கு உடந்தை பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டும்: அமெரிக்கா
வாஷிங்டன், மே 17: மும்பைத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அந்நாடு பதில் கூற வேண்டும் என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் ஏறத்தாழ 170 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் அமெரிக்க பிரஜைகள். இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானிலிருந்து கடல் வழி வந்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான்.

இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. உதவி புரிந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் வாழும் வர்த்தகர் தஹவூர் ராணா என்பவர் அமெரிக்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு இவர் ஆள் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்த வழக்கு சிகாகோ நகரில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. வழக்கிற்கான ஜூரி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் பின்னணியில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு உண்டு என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியது: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-க்கும் பங்குண்டு என கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் அரசு முறையாக பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஆனால் தாக்குதல் குறித்த வழக்கு பற்றி இப்போது விவரமாக எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கின் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆனால் மும்பைத் தாக்குதலைப் பொருத்தவரையில், அந்த பயங்கரவாத சம்பவம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அனைத்து நாடுகளும், அனைத்து தரப்பினரும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.

ராணா வழக்கு: மும்பை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக டேவிட் கோல்மன் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் குழந்தைப் பருவம் முதலே நண்பர்கள். இதில் ராணா ஒரு மருத்துவர். பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் இவர் கனடாவில் குடியேறினார்.

மும்பை தாக்குதலுக்கு அவர் பொருள் உதவி செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும், உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும் தூண்டியதால் பயங்கரவாத தாக்குதலுக்குத் துணை போனதாக இவர் கூறியுள்ளார். ஆனால் ராணாவை நயவஞ்சகமாக இந்த சதியில் உள்படுத்தியது ஹெட்லிதான் என ராணாவின் வக்கீல் கூறி வருகிறார்.

ஹெட்லி என்று இப்போது அறியப்படுபவரின் உண்மையான பெயர், தாவூத் சையத் கிலானி. தனது அடையாளம் வெளிப்படாமல் இருக்க பெயரை மாற்றிக் கொண்டார். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடும் பொருட்டு பல வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார்.

மும்பை தாக்குதலைத் திட்டமிட அவர் அங்கு சென்று தங்கியிருந்தார். தாக்குதல் நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் அவர் அங்கு தங்கியிருந்தார். தாக்குதலுக்குப் பின் அவருடைய வெளிநாட்டுப் பயணத்தின்போது விமான நிலையத்தில் அவர் கொடுத்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களினால் சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, பாகிஸ்தான் உளவு நிறுவனம் தனக்கு 25 ஆயிரம் டாலர்கள் தந்து இந்த பயங்கரச் செயலைச் செய்யுமாறு சொன்னதாக ஒப்புக்கொண்டார் ஹெட்லி.

* வங்க தேசத்தில் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

டாக்கா,மே 18: வங்க தேசத்தில் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம். ஹூசைன் பதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். வங்க தேச நாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஹைருல் ஹக் செவ்வாய்க்கிழமை பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து எம்.எம். ஹூசைன் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 ÷புதிய நீதிபதி பதவி ஏற்கும் விழா டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் புதன்கிழமை காலை நடந்தது. ÷விழாவில் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஹூசைன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ஜில்லூர் ரகுமான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் வங்க தேசத்தின் 20-வது தலைமை நீதிபதி ஆவார்.

 பின்னர் நடந்த வரவேற்பு விழாவில் நீதிபதி எம்.எம். ஹூசைன் பேசும்போது,மனித உரிமைகளை பாதுகாப்பதில் நீதிதுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட தனிச் செயலகம் தேவை என்று தெரிவித்தார்.

தேசியச் செய்தி மாலை :

* கேரள, அசாம் முதல்வர்கள் பதவியேற்பு

acmkcrcsm.jpg

திருவனந்தபுரம்/குவாஹாட்டி, மே 18: கேரளத்தில் உம்மன் சாண்டியும் அசாமில் தருண் கோகோயும் முதல்வர்களாக புதன்கிழமை பதவியேற்றனர்.

 கேரள ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.எஸ். கவாய், உம்மன் சாண்டிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

 21-வது முதல்வராகப் பதவியேற்ற உம்மன் சாண்டியுடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

 கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) 72 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது.

 இப்போது எதிர்க்கட்சியாக அமர உள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது சாரி முன்னணிக்கு (எல்டிஎப்) 68 இடங்கள் கிடைத்துள்ளன.

 நான்கு தொகுதிகளைக் கூடுதலாகப் பிடித்த காரணத்தால் ஆட்சியில் அமர்ந்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி.

 முதல்வர் உம்மன் சாண்டியுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் குஞ்ஞாலி குட்டி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.எம். மாணி (கேரள காங்கிரஸ்-எம்), கே.பி. மோகன் (சோஷலிஸ்ட் ஜனதா தளம்), டி.எம். ஜேகப் (கேரள காங்கிரஸ் - ஜே), கே.பி. கணேஷ் குமார் (கேரள காங்கிரஸ்-பி) மற்றும் ஷிபு பேபி ஜான் (புரட்சிகர சோஷலிஸ்ட்-பி) ஆகியோர் பதவியேற்றனர்.

 அமைச்சரவை மே 23-ம் தேதி விரிவுபடுத்தப்படும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும், ஐயுஎம்எல் கட்சியிலிருந்து 3 பேரும் கேரள காங்கிரஸ்-எம் பிரிவைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்பர்.

 பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முல்லபள்ளி ராமச்சந்திரன், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 பதவியேற்பு விழாவைக் காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான தொண்டர்கள் வந்திருந்தனர்.

 2004-06-ம் ஆண்டில் இடைக்கால அரசில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார்.

 காங்கிரஸýக்கும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி அளிப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

 உம்மன் சாண்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சரியான போட்டியாக காங்கிரûஸ வளர்த்ததில் 67 வயதாகும் உம்மன் சாண்டிக்கு பெரும் பங்குண்டு. நிர்வாகத் திறன் மிக்க இவர், இப்போது காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆட்சி அமைத்திருந்தாலும், திறம்பட நிர்வகிப்பார் என்று நம்பப்படுகிறது.

 காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களான கே. கருணாகரன், ஏ.கே. அந்தோனி போன்றோர் மத்திய அரசுக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் கடைசியில் இப்பதவிக்கு ஏற்றவர் என்ற வகையில் சாண்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 10-வது முறையாக காங்கிரஸ் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான புதுபள்ளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவரது மனைவி ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உண்டு.

 மூன்றாவது முறையாக கோகோய்: அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தருண் கோகோய்(76) முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.

 ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோகோய்க்கு ஆளுநர் ஜே.பி.பட்நாயக் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். வேறு அமைச்சர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்ளவில்லை.

 விழாவில் மத்திய அமைச்சர். பி.கே.ஹண்டிக், மேகாலய முதல்வர் முகுல் சங்மா, அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர், பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 77 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கு கோகோய் திட்டமிட்டிருக்கிறார்.

* 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு: ஷாகித் பல்வா ஜாமீன் மனு மீது 24-ம் தேதி தீர்ப்பு

cbi.jpg

புது தில்லி, மே 18: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 குசேகான் நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிப் பல்வா, ராஜீவ் பி.அகர்வால் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் சனிக்கிழமை (மே 21) பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி புதன்கிழமை தெரிவித்தார்.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக ஷாகித் உஸ்மான் பல்வா,

ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இவர்கள் மூவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை வந்தது.

 குற்றம்சாட்டப்பட்ட மூவரின் சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதாடினார். "2ஜி முறைகேட்டில் இவர்களுக்கு பெரிய அளவில் தொடர்பு இல்லை. இவர்களைத் தொடர்ந்து சிறையில் வைத்து அலைக்கழிக்கக்கூடாது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருவார்கள். எனவே இவர்களுக்கு ஜாமீன் அளிக்கவேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 இதற்கு சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. "நாட்டிலேயே நடைபெற்ற மிகப்பெரிய ஊழலில் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

 விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜாமீன் அளித்தால் முக்கிய சாட்சிகளை கலைக்க இவர்கள் முயற்சிக்கக்கூடும் எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே.சிங் கோரிக்கை விடுத்தார்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷைனி, ஷாகித் பல்வாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் 24-ம் தேதிக்கும் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் சனிக்கிழமைக்கும் ஒத்திவைத்தார்.

 இதற்கிடையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தது. வாதம் தொடர்ந்து நடைபெற்றதால், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் சனிக்கிழமைக்கு (மே 21) நீதிபதி ஷைனி ஒத்திவைத்தார்.

 வழக்கு விசாரணை தொடர்பாக கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டி ஆகியோர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகியிருந்தனர்.

 கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்தனும், தமிழக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும் இருந்தனர்.

* ஆளுநரை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை : மல்லிகார்ஜுன கார்கே

mallikajanan.jpg

குல்பர்கா, மே 18: இப்போதைய சூழ்நிலையில், கர்நாடக ஆளுநரை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்தார்.

 இதுகுறித்து குல்பர்காவில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

 மாநிலத்தில் நிலவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையால் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ளன. கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசித்து வருகிறார். பாஜகவினர் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பாதயாத்திரை மற்றும் போராட்டங்களை நடத்துவது தேவையில்லாதது. அரசியலமைப்புச் சட்டப்படி அரசால் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆளுநரை சில அரசியல் கட்சிகள் கேட்டுக் கொள்வதால் திரும்பப் பெற முடியாது. மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவரும், சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவருமான ஆளுநர் பரத்வாஜ், சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவே கருதுகிறேன் என்றார்.

* ஜூலை முதல் 25 காசு நாணயம் செல்லாது

மும்பை, மே 18: 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாக்காசாகிவிடும். ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கி இந்தத் தகவலை புதன்கிழமை வெளியிட்டது.

 25 காசு நாணயம், 10 காசு நாணயம் ஆகியவை ஜூன் 30-க்குப் பிறகு செல்லாது.

 எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

 அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29-ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.

 இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, இந்த நாணயங்களை எங்குமே மாற்ற இயலாது. சட்ட ரீதியாக செல்லுபடியாகாது

* ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு: சிபிடிடி தலைவர் தகவல்


புது தில்லி, மே 18: நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்தார்.

 தில்லியில் புதன்கிழமை கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:

 கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் இவ்விதம் கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றார்.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் ரூ. 18,500 கோடி கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது.

 ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், எவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்வது கிடையாது.

 பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிக வருமானம் ஈட்டும் அதிகாரிகள்அனைவருமே எங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் வருகின்றனர் என்றார்.

 கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடி.

 மார்ச் வரையான காலத்தில் மொத்தம் வசூலான வருமான வரித் தொகை ரூ. 74 ஆயிரம் கோடி. இத்துடன் ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணமும் சேரும் என்றார்.

 கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15-ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.

 வருமான வரித்துறையில் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தகவல் பரிமாற்றத்துக்கென தனியான கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பிரிவை ஏற்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் தகவல் கோரும் நாடுகள் விவரங்களை இந்தப் பிரிவுக்கு அனுப்பினால் போதுமானது. இது தவிர, கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

 ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை அமலாக்கப் பிரிவுக்குத் தருவதில்லை. எனவே இப்போது வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் இத்தகைய தகவலைப் பெறுவதற்கு வழி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

 கறுப்புப் பணம் சார்ந்த விஷயங்களைப் பெறுவதில் இந்தியா அதிக தீவிரம் காட்டுவதாகவும், இப்போது இதுபோன்ற விவரங்களை அளிப்பது தொடர்பான நடைமுறைகள் மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

 வரி விதிக்கப்படாத14 நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பஹாமஸ், நெர்முடா, ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தகவல்களை அளிக்கின்றன.

 இதுபோன்ற தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிப்பதற்கு விதிமுறையில் இடமுள்ளது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலோ, அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்தாலோ அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றார் அவர்.

 
* சீன நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 7 பேர் சாவு

பெய்ஜிங்,மே 18:சீன நாட்டில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் இறந்தனர்.

 ÷சீனாவில் ஏராளமான தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றாததால் நிலக்கரிச் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கம்.

 ÷இங்குள்ள யானன் மாகாணத்தில் வெய்சின் நகரில் ஒரு தனியார் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. ÷

 ÷இதில் சிக்கி 7 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர். 13 பேர் உயிர் தப்பினர். இதையொட்டி இந்த சுரங்க நிர்வாகியை போலீஸôர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ÷ சீனாவில் கடந்த ஆண்டு நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 2433 பேர் இறந்து விட்டனர்.

* இணைப்பு வசதி இல்லாத புதுச்சேரி ரயில் நிலையம்

புதுச்சேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்கள்.
 புதுச்சேரி, மே 18: போதிய நிறுத்தும் இணைப்பு வசதி இல்லாமல் புதுச்சேரி ரயில் நிலையம் தவித்து வருகிறது. இதனால் புதிய ரயில்கள் இந்த நிலையத்துக்கு வரவும் முடியவில்லை. இங்கிருந்து புதிய ரயில்களை இயக்கவும் முடியவில்லை.

 புதுச்சேரி ரயில் நிலையத்தில் இப்போது 3 பிளாட்பாரங்கள்தான் இருக்கின்றன. இவை போதுமானவை அல்ல. ரயில்கள் இயங்க வேண்டிய இந்த பிளாட்பாரங்களில் ஒன்று அல்லது இரண்டில் ரயில்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுகின்றன.

 ரயில்கள் இயங்க வேண்டிய நேரத்தில் மட்டும்தான் பிளாட்பாரத்துக்கு ரயில்கள் வர வேண்டும். மற்ற நேரங்களில் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிக்காக நிறுத்தும் இணைப்பு வசதி கொண்ட இடம் இருக்க வேண்டும். அது போன்ற வசதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் இல்லை. இதனால் இயங்க வேண்டிய பிளாட்பாரத்தில்தான் இயக்கப்படாத ரயில்கள் நிற்கின்றன.

 மேலும் இப்போதுள்ள பிளாட்பாரங்களின் நீளமும் போதுமானதாக இல்லை. புதுச்சேரி ரயில் நிலையத்தில் இப்போதுள்ள பிளாட்பாரங்களில் 17 பெட்டிகள் கொண்ட ரயில்கள்தான் நிற்க முடியும். இப்போது வரும் ரயில்களில் 21 பெட்டிகளுக்கு மேல் இருக்கின்றன.

 அதனால் அவை பிளாட்பாரத்துக்கு வெளியே இருக்கின்றன. அதனால் இது போன்ற பெட்டிகளில் பயணிகள் ஏறுவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. வில்லியனூர் ரயில் நிலையத்திலும் பிளாட்பாரம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதைத் தவிர விஐபிக்கள் வந்தால் பயன்படுத்த வேண்டிய ஒரு ரயில் பாதையும் இந்த நிலையத்தில் இருக்கிறது. இந்தப் பாதையையும் நீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களையொட்டியுள்ள ரயில் பாதைகள் பள்ளமான இடமாக இருக்கின்றன.

 இதனால் மழைக்காலத்தில் ரயில் பாதைகள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. மழையின் காரணமாக அருகில் உள்ள ரயில்வே குடியிருப்புகளும் பாதிக்கப்படுகிறது. இந்த எல்லா பிரச்னைகளுக்கும் தலையாய பிரச்னையாக இருப்பது போதிய நிறுத்தும் இணைப்பு வசதி இல்லை என்பதுதான்.

 இந்த வசதி இல்லாததால் புதுச்சேரிக்குப் புதிய ரயில்களைப் பெற முடியவில்லை. சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று கிடக்கும் ரயில்களை புதுச்சேரி வரை நீட்டிக்கவும் முடியவில்லை. இத் திட்டத்தை சுமார் ரூ. 6 கோடி மசிப்பீட்டில் நிறைவேற்ற அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. பெரும்பாலான ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யப்படுகின்றன. புதுச்சேரியின் இந்த ரயில்வே திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யப்படுவதால், புதுச்சேரி போக்குவரத்து வசதியில் பல்வேறு பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்றன.

 இது குறித்து புதுச்சேரி அரசின் போக்குவரத்துத்துறை ஓய்வு பெற்ற செயலர் ச. ஹேமச்சந்திரன் கூறுகையில், "எந்த ரயில் நிலையத்துக்கும் ரயில்கள் நிறுத்தும் இட வசதி முக்கியம். இந்த வசதியை உடனடியாகச் செய்து முடிக்கவில்லையென்றால் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் வசதியைப் பெற முடியாமல் போகும். அதைத் தவிர மக்களுக்கு வசதியான நேரங்களில் ரயில் இயக்கம், சென்று சேரும் நேரம் இப்போதே பெறாவிட்டால் அந்த நேரம் வேறு ஏதாவது ரயில் நிலையங்களுக்குக் கிடைத்துவிடும்.

 இப்படி இப்போது இழக்கும் இந்த ரயில் நேரத்தை பின்னால் பெறவே முடியாது. புதுச்சேரி ரயில் நிலையம் அருகேயுள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான கிடங்கு அமைந்துள்ள காலி இடத்தை இந்த இரண்டு நிறுவனத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற முடியும்' என்றார்.

 புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதிய நிறுத்தும் வசதி இருந்தால் புதிய ரயில்கள் பெற முடியும். சென்னை எழும்பூரில் காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் நாள் முழுவதும் நின்று கிடக்கிறது. அந்த ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடியும். இந்த ரயில் புதுச்சேரிக்கு வந்து செல்வதால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் யேனம் பகுதிக்கு ரயில் இணைப்பு கிடைக்கும்.

 மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயில் தில்லியில் இருந்து எர்ணாகுளம் செல்கிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் 60 மணிநேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதிய இட வசதி இருந்தால் இந்த ரயிலை இங்கு கொண்டு வர முடியும். இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதிக்கு ரயில் இணைப்பு கிடைக்கும். மேற்கு வங்க மாநிலம் கரக்பூரிலிருந்து விழுப்புரத்துக்கும், புருலியாவிலிருந்து விழுப்புரத்துக்கும் 2 ரயில்கள் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகின்றனர்.

 புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதிய நிறுத்தும் வசதி இருந்தால் இந்த 2 ரயில்களும் புதுச்சேரிக்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல்வேறு ரயில்களின் பட்டியலைக் குறிப்பிட்டு அந்த ரயில்களைப் புதுச்சேரிக்குக் கொண்டு வர முடியும். ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் ஏதாவது ஒருவகையில் புதுச்சேரிக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று பெயர் வெளியிட விரும்பாத, ரயில்வே திட்டங்களில் அனுபவம் வாய்ந்த ஒரு சமூக சேவகர் கூறுகிறார்.

மாநிலச் செய்தி மலர் :

* தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி

1rajini.jpg

சென்னை, மே 18: சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை (மே 18) அனுமதிக்கப்பட்டார்.

 ""மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் சார்பில் புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 நுரையீரல்-சிறுநீரகங்கள்-இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் அளிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், அதீத சோர்வு காரணமாக அவர் மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

 தனி அறையிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு... எனினும் நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் 7-வது மாடியில் உள்ள தனி அறையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீரகங்கள்-நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன.

 பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் இல.கணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். ரஜினிகாந்த் உற்சாகமாக உள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினிக்கு மூச்சுத்திணறல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுவாசத்தை சீராக்க அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் நிபுணர்கள் குழு புதன்கிழமை முடிவு செய்தது.

 154 படங்களில்... "அபூர்வ ராகங்கள்' மூலம் 1975-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த்துக்கு 60 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்பட இதுவரை சுமார் 154 படங்களில் நடித்துள்ளார்.

* 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை, மே 18: தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்தால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை .

மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும். விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

வாய்ப் புண், அம்மை நோய்

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

தூக்கமின்மையை போக்கும்

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.

அழகே ஆபத்தாகும்

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.வர்த்தகச் செய்தி மலர் :

உள்நாட்டில் நடப்பு 2011- 12ம் நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13 சதவீதம் உயரும்

7718884.jpg

மே 19,2011,01:52
புதுடில்லி:இந்தியாவின் உருக்கு பொருள்கள் பயன்பாடு நடப்பாண்டில், 13.3 சதவீத அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உருக்கு பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா, சீனாவை விஞ்”ம் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அர”, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) நாட்டின் மின் உற்பத்தி, குடிநீர் வசதி, தொழில் துறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.மேலும் அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகளால், உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் பெருகி, பொறியியல் சாதனங்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. இதனால், இத்துறைகளில் உருக்கு பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.கடந்த 2010ம் ஆண்டு நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 6.4 சதவீதம் உயர்ந்து 6.68 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13.3 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இது, சீனாவின் உருக்கு பொருள்கள் பயன்பாட்டை விட அதிகம். நடப்பாண்டில், சீனாவின் உருக்கு தேவை 5 சதவீத அளவிற்கே உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில், உருக்கு பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா, சீனாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உருக்கு உற்பத்தி, வரும் 2012ல், 12.40 கோடி டன்னாக உயரும் என்றும், உருக்கு பொருள் களுக்கான தேவை 16 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் உருக்கு உற்பத்தியை, வரும் 2020ல், 20 கோடி டன்னாக உயர்த்த, மத்திய அர” இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ற செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. 2019-20ம் ஆண்டிற்குள் நாட்டின் ஓராண்டிற்கான உருக்கு உற்பத்தி திறன் 27.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனமொன்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய செயல்பாடு களால், 2016ம் ஆண்டிற்கு முன்பாகவே உருக்கு உற்பத்தியில் இந்தியா, 2வது மிகப்பெரிய நாடு என்ற சிறப்பை பெறும் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இந்தியாவில் முதலீடு: இந்திய உருக்கு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு மேற்கொண்டு, அதி நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருள்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. செயில், ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வதேச உருக்கு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த் தை நடத்தி வருகின்றன.

உலகில் உருக்கு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், இந்தியாவில் ஆண்டிற்கு 1.20 கோடி டன் உருக்கு உற்பத்தி திறன் கொண்ட இரண்டு தொழிற்சாலைகளை அமைக்கிறது. அசெரினாக்ஸ் நிறுவனம், ஜப்பானின் நிஷின் ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உருக்காலை அமைக்க உள்ளது. சீனாவின் சினோ ஸ்டீல் நிறுவனம் கல்யாணி ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கு வங்கத்தில் உருக்கு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது.மெஸ்கோ ஸ்டீல் நிறுவனம், 280 கோடி டாலர் முதலீட்டில் ஒரிசாவில் விரிவாக்க திட்டம் மற்றும் புதிய உருக்கு தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் உருக்கு உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ள டாட்டா ஸ்டீல் நிறுவனம், வரும் 2015ம் ஆண்டிற் குள், கூடுதலாக 3.50 கோடி டன் உருக்கு உற்பத்தியை மேற்கொண்டு, அதன் உருக்கு உற்பத்தி திறனை இரு மடங் காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில் செயில் நிறுவனம், அதன் உருக்கு உற்பத்தியை 1.20 கோடி டன்னில் இருந்து, 2.50 கோடி டன்னாக உயர்த்த உள்ளது. இதுபோல் தைசென்க்ருப் போன்ற பன்னாட்டு உருக்கு நிறுவனங்களும் விரிவாக்க திட்டத்தை கைவிட்டு, கூட்டு நடவடிக்கையில் களமிறங்க திட்டமிட்டுள்ளன.

* சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை

9586255.jpg

மே 19,2011,01:46

ஈரோடு:ஈரோட்டில் சாயப்பட்டறைகளை மூடியதால், 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடக்கப்பட் டுள் ளதாக, ஜவுளி மார்க்கெட் வியாபாரிகள்கவலை தெரிவித்துள்ளனர்.ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட் கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இங்கு ஒடிசா, கேரளா, கர்நாடகா, மகாராஷ் டிரா உள்ளிட்ட பிற மாநில வியாபாரிகள் அதிகளவில், துணிகளை வாங்கி செல்வது வழக்கம். வியா பாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் சந்தை நாள்களில் குவிந்து விடுவர். வாரந்தோறும் கனி மார்க்கெட்டில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி வகைகள் விற்பனையாகின்றன.ஈரோடு மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. மாசு பிரச்னை காரணமாக, ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, ஈரோட்டில் இயங்கி வந்த சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல பட்டறைகள் மூடப்பட்டன; பல சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.துணிகளுக்கு சாயமிடும் பணி முற்றிலும் நின்று போனது. மார்க்கெட் டுக்கு வரும் புதிய ரக துணிகளின் வரத்து அடியோடு நின்று போனது. செவ்வாய்கிழமை யன்று கூடிய ஜவுளி சந்தையில், பழைய இருப்பு துணிகளையே விற்பனை செய்ததால், வெளிமாநில வியா பாரிகள் அதிருப்தி அடைந்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளுக்கு, 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடங்கியது.இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், செயலர் செல்வராஜ் ஆகியோர் கூறிய தாவது: வாரந்÷ தாறும் செவ்வாய்கிழமை கூடும் ஜவுளி சந்தையில், சூரம்பட்டி, மாணிக்கம்பாளையம், திருச் செங் கோடு, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் வருகின்றனர். சாயப்பட்டறைகளை மூடியதால், ஜவுளி சந்தைக்கு புதிய ரகங்கள் வரத்து குறைந்து விட்டது. தற்போது, பழைய இருப்பு துணிகளை தான் விற்பனை செய்து வருகிறோம்.ஆனால், இன்னும் மூன்று வாரத்தில், பழைய இருப் பும் குறைந்து விட்டால், கனி மார்க்கெட்டில் துணியே இருக்காது. செவ்வாய்கிழமை யன்று நடந்த ஜவுளி சந்தை யில் புதிய ரக துணிகள் இல்லாததால், வெளிமாநில வியாபாரிகள் துணிகளை வாங்காமல் மற்ற மாநி லங்க ளுக்கு சென்று விட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விளையாட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில், 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் ஏமாற்றிய கொச்சி அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

பார்த்திவ் கேப்டன்:
கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுவிட்டதால், பார்த்திவ் படேல் அணியை வழிநடத்தினார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கொச்சி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. பரமேஸ்வரன், பிரசாந்த், ஜெயவர்தனா நீக்கப்பட்டு, முத்தையா முரளிதரன், வினய் குமார், ஜாதவ் தேர்வு செய்யப்பட்டனர்.

ரெய்னா ஏமாற்றம்:
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஆர்.பி. சிங் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில், மூன்று "பவுண்டரி' விளாசிய முரளி விஜய் (16), அதே ஓவரில் "போல்டானார்'. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, அதிரடியாக ரன் சேர்த்தார். ஸ்ரீசாந்த் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், 2 "சிக்சர்', ஒரு "பவுண்டரி' அடித்த ரெய்னா (19), அதே ஓவரில் ஆர்.பி. சிங்கிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.

"சபாஷ்' சகா:
பிராட் ஹாட்ஜ் சுழலில் ஒரே ஒரு "சிக்சர்' அடித்த பத்ரிநாத் (13), நீண்டநேரம் நிலைக்கவில்லை. பின் இணைந்த மைக்கேல் ஹசி-விரிதிமன் சகா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய இந்த கூட்டணி, நான்காவது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த போது மைக்கேல் ஹசி (32), ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் தோனி (9), ஜடேஜா பந்தில் பார்த்திவ் படேலிடம் "கேட்ச்' கொடுத்து ஏமாற்றினார். ஜடேஜா, முரளிதரன், ஆர்.பி. சிங் பந்தில் தலா ஒரு "சிக்சர்' விளாசிய சகா, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சென்னை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. விரிதிமன் சகா (46), ஆல்பி மார்கல் (13) அவுட்டகாமல் இருந்தனர். கொச்சி அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா 2, ஆர்.பி. சிங், ஸ்ரீசாந்த், பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பார்த்திவ் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு, கேப்டன் பார்த்திவ் படேல் (6) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த ஞானேஸ்வரா ராவ் (19) நீண்டநேரம் நிலைக்கவில்லை. போலிஞ்சர் பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த பிரண்டன் மெக்கலம், நிதானமாக ரன் சேர்த்தார். இவர், 37 பந்தில் 33 ரன்கள் எடுத்த போது, ஜகாதி சுழலில் "போல்டானார்'.

ஹாட்ஜ் அபாரம்:
பின் இணைந்த பிராட் ஹாட்ஜ், ரவிந்திர ஜடேஜா ஜோடி, பெரிய அளவில் சாதிக்கவில்லை. போலிஞ்சர் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் ஒரு "சிக்சர்', ஒரு "பவுண்டரி' அடித்த ஜடேஜா (19), அதே ஓவரில் ரெய்னாவிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராட் ஹாட்ஜ், பிராவோ பந்தில் அடுத்தடுத்து இரண்டு "சிக்சர்' அடிக்க, கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கொச்சி அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பிராட் ஹாட்ஜ் (51), ஜாதவ் (1) அவுட்டகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அஷ்வின், போலிஞ்சர், ஜகாதி, பிராவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* தெய்வக் குழந்தை!

E_1305192666.jpeg

மே 19 - குமரகுருபரர் குருபூஜை!

திருச்செந்தூர் குமரப் பெருமான் அருளால், உலகிற்கு கிடைத்த புண்ணிய புருஷர் குமரகுருபரர்.
திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வசித்த சண்முக சிகாமணி கவிராயர் - சிவகாமி சுந்தரி தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. திருச்செந்தூர் சென்று, சஷ்டி விரதம் அனுஷ்டித்தனர்; அதன் பின், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனை, முருகன் பெயரால், "குமரகுருபரன்' என அழைத்தனர். ஐந்து வயதாகியும் குழந்தை பேசாமல் இருந்தது கண்டு, பெற்றோர் கவலை அடைந்தனர். திருச்செந்தூர் சென்று, குழந்தை பேசும் வரை, அங்கேயே தங்கி, விரதமிருப்பது என உறுதி கொண்டனர்.
அங்கு தங்கியிருந்த காலத்தில், கரையில் மோதிய கடல் அலைகள், "ஓம்' என்ற நாதம் எழுப்புவதைக் கேட்டார் குமரகுருபரர். அவர்கள், நாற்பது நாட்களுக்கு மேலாக அங்கு தங்கி விட்டனர்; குழந்தை பேசுவதாக தெரியவில்லை. 45வது நாள், குழந்தையுடன் கோவிலுக்குள் நுழைந்தனர். கண்ணீர் அருவியாய் கொட்ட, "இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிக்கப் போகிறாய்?' என்று முருகனிடம் முறையிட்டனர்.
அப்போது. குமரகுருபரர் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டார்; பெற்றோர் கூர்ந்து கேட்டனர். தெளிவில்லாமல் ஏதோ சில சொற்கள் வெளிப்பட்டன. அடுத்த சில நொடிகளில், அந்த ஐந்து வயது பாலகன், கரியமேகம் மழை பொழிவது போல கவிமழை பொழிந்தார். "இதுவரை பேசாமல் இருந்த பிள்ளை, முருகப் பெருமானை புகழ்ந்து பாடுகிறாரே...' என, பெற்றவர்களும், மற்ற பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர். தேனினும் இனிய அந்த பாடல்களே, "கந்தர் கலிவெண்பா' ஆயிற்று; அதுவே, குமரகுருபரரின் முதல் நூல். இந்த நூலில், "சரவணபவ' என்ற மந்திரத்தின் மகிமை பற்றி, குமரகுருபரர் பாடியுள்ளார்.
பெற்றோர் மனம் மகிழ்ந்து, முருகனுக்கு நன்றி சொல்லி ஊர் திரும்பினர். ஆனால், பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை குமரகுருபரர். அவர்களது ஆசி பெற்று, தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை, "குமரகுருபர சுவாமிகள்' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அம்பாள் சன்னிதியில் நின்று, மடைதிறந்த வெள்ளம் போல் கவிதைகளை பொழிந்தார். அதுவே, "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' ஆயிற்று. அப்போது, மதுரையை திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர், ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருந்தனர். சிறுவனாய் இருந்த குமரகுருபரர், அருமையாக அம்பாளைப் பற்றி பாடினார். "தொடுக்கும் கடவுட் பழம்பாடல்...' என்ற பாடலை பாடும் போது, மன்னரின் மடியில் வந்து அமர்ந்த ஒரு சிறுமி, அவரது கழுத்தில் கிடந்த முத்து மாலையை எடுத்து, குமரகுருபரருக்கு அணிவித்து மறைந்தாள்; அவள், மீனாட்சி அம்மன் என்பது பின்னர் தெரிய வந்தது. திருமலைநாயக்கர் மகிழ்ச்சி அடைந்து, குமரகுருபரருக்கு பல பரிசுகளை அளித்தார்.
இதன்பிறகு, குமரகுருபரர் தருமபுரம் சென்று ஆதீன குருமூர்த்தி மாசிலாமணி தேசிகரிடம் தம்மை ஆட்கொள்ள வேண்டினார். காசி சென்று, தர்மப்பணி செய்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டார். அப்போது, காசியை ஆட்சி செய்த சுல்தானிடம், காசியில் சைவ மடம் நிறுவ அனுமதி பெறுவதற்காக அங்கு சென்றார் குமரகுருபரர். சுல்தானுக்கு இந்துஸ்தானி மொழி மட்டுமே தெரியும். எனவே, கலைவாணியை புகழும், "சகல கலாவல்லி மாலை' என்ற பாடலை பாடினார் குமரகுருபரர். அதைக்கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி, அவருக்கு பிறமொழி பேசும் ஆற்றலைக் கொடுத்தாள்.
அம்பாளின் அருளால், ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து, சுல்தானின் சபைக்கு சென்றார் குருபரர். இந்துஸ்தானி மொழியில் பேசி, மடம் கட்ட இடம் தரும்படி கேட்டார். சிங்கத்தின் மீது வந்த வீரப் புலவரைப் பார்த்த சுல்தான், அவர் கேட்ட இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தில், "குமாரசுவாமி மடம்' அமைக்கப்பட்டது. இன்றும் காசியில் குமரகுருபரரின் பெயரில் உள்ள இந்த மடம், சமயப்பணியில் ஒரு ஈடுபட்டு வருகிறது.
வைகாசி மாதம் தேய்பிறை திரிதியை திதியில் முக்தியடைந்தார் குமரகுருபரர். அந்த நாளில், அவருக்கு குருபூஜை நடக்கிறது. முருகனையும், மீனாட்சி அம்மனையும் பாடிய குருபரை, அந்நாளில் வணங்கி, அவரது நல்லாசி பெறுவோம்.
***

தி. செல்லப்பா

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பிறரை மதிக்கப் பழகுங்கள் - வள்ளலார்.
* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.

* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.

* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.

வினாடி வினா :

வினா - இந்திய நாட்டின் அனைத்து முடிவுகளும் யாரின் பெயரால் எடுக்கப்படுகின்றன ?

விடை - ஜனாதிபதியின் பெயரால்.

இதையும் படிங்க :

large_242776.jpg

"ஏழைகளையும் படிக்க வைக்கணும்!' வளர் கல்வி மையம் மூலம் மாணவர்களை படிக்க வைக்கும் சின்னப்பன்: விழுப்புரம் மாவட்டம், திருவதிகைகுன்னம் என் சொந்த ஊர். எட்டு பட்ட படிப்புகள், எம்.எட்., இரண்டு, எம்.பில்., இரண்டு, பி.எச்.டி., முடித்து, பல்கலைகழகத்திலேயே முதல் மாணவனாக வந்துள்ளேன். தற்போது, தஞ்சை தமிழ் பல்கலை கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் பணி. குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தவன். நான் படிப்பதற்காக, என் அம்மா, விவசாய கூலியாக கஷ்டப்பட்டார். வீட்டைத் தவிர பூர்வீக சொத்து இல்லை. "ஒவ்வொரு மனுஷனுக்கும், அவன் உழைப்பு மட்டுமே பூர்வீக சொத்து' என்பார் என் அம்மா. எனக்காகவே வாழ்ந்த அம்மா, நான் பிளஸ் 2 படிக்கும் போது, என்னுள் வைராக்கியத்தை விதைத்து இறந்தார். அதன்பின், திருச்சி சென்று, பல இடங்களில் பணி புரிந்தபடி, தூயவளனார் கல்லூரியில் படித்தேன். நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம். பல நாள், கல்லூரியின் மதிய உணவு மட்டுமே, என் ஒரு நாள் உணவு. அதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். படிப்பு என்ற ஆயுதத்தால் மட்டுமே வாழ்க்கையை வளமாக்க முடியும் என்ற நம்பிக்கை, என்னை பல பட்டங்களை பெற வைத்தது. தற்போது,"வளர்கல்வி மையம்' என்ற அமைப்பின் மூலம், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களின் கிராமப்புற ஏழை மாணவர்களை, பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்தல், நுழைவுத் தேர்வு பயிற்சி,முன் ஆயத்தப் பயிற்சி, வழிகாட்டுதல், கல்வி உதவித் தொகை வழங்கல் ஆகியவற்றை செய்கிறேன். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர். கிராமம், கிராமமாக சென்று, ஏழை மாணவர்களை படிக்க வைத்து,வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். வாய்ப்பில்லாத ஏழைகளையும் படிக்க வைக்க வேண்டும்; அதுதான் என் நோக்கம்.


* சிறுமி கால் மீது ஏறிய கலெக்டர் கார்: கலெக்டரின் அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி

large_242880.jpg

கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், அங்கப் பிரதட்சணம் செய்த சிறுமியின் காலில், கரூர் கலெக்டர் கார் ஏறியது. கரூர், இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் மேகலா (12). லாலாப்பேட்டை அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு, தன் தாத்தாவுடன், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில், அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு படுத்தார். அப்போது, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்ள, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, "ஸ்கார்பியோ' காரில் வந்தார். கோவிலுக்கு முன் பக்தர்கள் நெரிசல் நிறைந்த, குறுகலான பாதையில், கலெக்டர் கார் வந்தது. அந்தப் பாதையில், அங்கப் பிரதட்சணத்துக்கு மேகலா படுத்திருந்ததை கவனிக்காத கார் டிரைவர், அவர் கால் பாதம் மீது காரை ஏற்றி, சிறிது தூரம் சென்று நிறுத்தினார். மேகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் பதறியபடி ஓடி வந்தனர். "ரேடியல்' டயர் என்பதால், சிறுமியின் காலில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. காரை விட்டு இறங்கிய கலெக்டர் உமாமகேஸ்வரி, பாதிக்கப்பட்ட மேகலாவிடம் நலம் விசாரிக்காமல், அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறி விட்டு, "விறுவிறு'வென கோவிலுக்குள் சென்றுவிட்டார். கலெக்டரின் அலட்சிய போக்கால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தை பத்திரிகையாளர்கள் கவனித்துவிட்டதால், சிறுமியை கலெக்டர் காரில் ஏற்றி, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

நன்றி - தட்ஸ்தமிழ், தின மலர், தின மணி. 

No comments:

Post a Comment