Monday, March 21, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 21 - 2011.முக்கியச் செய்தி :ஃபுகுஷிமா அணுமின் நிலையம் மூடப்படும்: ஜப்பான் அறிவிப்பு

டோக்யோ, மார்ச் 20- கதிர்வீச்சை வெளிப்படுத்தி வரும் ஃபுகுஷிமா அணுமின் நிலையம் மூடப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

இத்தகவலை ஜப்பான் அமைச்சரவை தலைமைச் செயலர் யுகியோ எடானோ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அணு உலைகளின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் பணி முடிவடைந்ததும், ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஃபுகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் தொடங்கப்பட மாட்டாது என்றும், அங்குள்ள பல முக்கியப் பகுதிகள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது என்றும் யுகியோ எடானோ தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள் முடங்கிய நிலையில், அதன் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு வராத வகையில் அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

உலகச் செய்தி மலர் :

* லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை

பீஜிங், மார்ச் 20- லிபியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"லிபியாவில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது வருத்தமளிப்பதாக உள்ளது. லிபியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம்." என்று சீனா கூறியுள்ளது.

எனினும், லிபியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே, ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

* அமெரிக்க அதிகாரியை விடுவித்த நபர்களை தண்டிப்போம்: பாக். தலிபான்

இஸ்லாமாபாத், மார்ச் 20- அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸை விடுதலை செய்வதற்கு காரணமானவர்களை தண்டிப்போம் என்று பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் அஷானுல்லா அஷன் கூறியிருப்பதாவது:

"அமெரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் சிஐஏ ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். இரு அப்பாவி பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற ரேமண்டை விடுவித்ததன் மூலம், பாகிஸ்தான் அமெரிக்காவின் காலனியாக மாறி வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது." என்று அஷானுல்லா அஷன் தெரிவித்துள்ளார்.

"மேலும், ரேமண்ட் விடுதலை செய்யப்பட யார் யார் முயற்சி எடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரது விடுதலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவரையும் நாங்கள் குறிவைப்போம்." என்றும் அவர் கூறியுள்ளார்.

* லிபியா மீது ஏவுகணைத் தாக்குதல்: 48 பேர் சாவுகெய்ரோ/வாஷிங்டன், மார்ச் 20: லிபியாவின் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் ராணுவத் தாக்குதல் சனிக்கிழமையன்று தொடங்கியது.
 இதில், பிரான்ஸின் ஜெட் போர்விமானங்கள் முதலில் குண்டு மழை பொழிந்தன. அதே வேளையில் அமெரிக்கா, பிரிட்டனின் போர்க் கப்பல்கள், மற்றும் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட டாமஹாக் வகை ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.

 இந்தத் தாக்குதலின்போது 48 பேர் கொல்லப்பட்டனர் என லிபிய தொலைக்காட்சி அறிவித்தது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என அது தெரிவித்தது. ஆனால் வேறு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

 இந்தத் தாக்குதலின்போது, பல லிபிய விமானப் படை தளவாடங்கள் தகர்க்கப்பட்டன எனத் தெரிகிறது.
 லிபியாவில், அதிபர் கடாஃபியின் 41 ஆண்டு ஆட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக கிளர்ச்சி நடந்து வருகிறது. கிளர்ச்சி ஆயுதப் போராட்டமாக மாறியது. இதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாஃபி.

 போர்விமானங்கள் மூலம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, ஐ.நா.வில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, லிபிய நாட்டு மக்களைக் காக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதன் அடிப்படையில், லிபியாவுக்கு எதிராக சனிக்கிழமையன்று அமெரிக்கா தலைமையில் தாக்குதல் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு "ஆபரேஷன் ஒடிசி டான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 2003-ம் ஆண்டு இராக் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அரபு பிரதேசத்தில் மேற்கத்திய நாடுகள் நடத்தும் மிகப் பெரிய ராணுவத் தாக்குதல் இது. கனடா, இத்தாலியும் தாக்குதலில் பங்கேற்கின்றன.

 இதில், தலைநகர் திரிபோலி, மிசுராட்டா பகுதிகளில் அமைந்துள்ள 20 லிபிய விமானப் படையின் பாதுகாப்பு தளவாடங்கள் தகர்க்கப்பட்டன. இந்த தகவலை அமெரிக்க கப்பற்படை துணை தளபதி வில்லியம் கோர்ட்னி வாஷிங்டனில் தெரிவித்தார்.

 கடாஃபியின் தலைமையிடம் எனக் கருதப்படும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது.

 லிபிய விமானப்படை பாதுகாப்புத் தளவாடங்கள் வெகுவாக சேதமுற்றன என ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்ததாக அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதற்கு கடாஃபியின் தரைப்படை எந்தவித பதிலடி தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அந்த அதிகாரி கூறினார்.

 தாக்குதல் வெற்றிகரம்- பிரிட்டன்: அமெரிக்க நேசப் படைகளின் தாக்குதல் வெற்றிகரமாக இருந்தது என பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர்
 லியம் ஃபாக்ஸ் தெரிவித்தார்.

 பிரிட்டிஷ் டொர்னேடோ போர்விமானங்கள் இங்கிலாந்தின் நார்ஃபோக் தளத்திலிருந்து திரிபோலி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கிப் பறந்து சென்று குண்டுகளைப் பொழிந்து தாக்குதல் நடத்தின.
 விரைவில், டைஃபூன் ரக போர்விமானங்களும் ஈடுபடுத்தப்படும் என தெரிவித்தார். இவை தெற்கு இத்தாலியிலுள்ள ராணுவ மையத்திலிருந்து இயக்கப்படும்.

தேவையெனில், மேலும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் கூறினார். தனது குடிமக்களையே தாக்கி வரும் கடாஃபியை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
 நீண்ட போர் - கடாஃபி சபதம்: லிபியாவின் கிழக்குப் பகுதியில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை அடக்கியே தீருவேன் என கடாஃபி சூளுரைத்தார்.
லிபியாவை ஆக்கிரமிக்க எண்ணும் மேற்கத்திய நாடுகளின் எண்ணம் நிறைவேறாது. ஆயுதக் கிடங்கை மக்களுக்காகத் திறந்துவிடுவேன். இது நீண்ட போராக இருக்கும். லிபிய சுதந்திரத்தையும், ஒற்றுமையையும், மானத்தையும் பாதுகாக்கும் தருணம் இது என்றார் அவர்.
 ரஷியா கருத்து: லிபியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை "கண்மூடித்தனமான தாக்குதல்' என ரஷியா வர்ணித்தது.

 லிபிய பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா. கொண்டு வந்த தீர்மானம் அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவித்தது.

* லிபியாவின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்: சீனா

பெய்ஜிங், மார்ச் 20: லிபியாவின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். ஐ.நா.வின் சாசனத்திலுள்ள கோட்பாடுகள், சர்வதேச விதிமுறைகள் காக்கப்பட வேண்டும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

 லிபிய அதிபர் கடாஃபிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இது ஆயுதப் போராட்டமாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தை ஒடுக்க, லிபிய ராணுவத்தைப் பயன்படுத்தி வருகிறார் கடாஃபி.

 இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, லிபிய நாட்டு மக்களைக் காக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. லிபியாவுக்கு எதிராக சனிக்கிழமையன்று அமெரிக்கா தலைமையில் விமானத் தாக்குதல் தொடங்கியது. பிரெஞ்சு ஜெட் போர்விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அதே வேளையில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்களிலிருந்து ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

 இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ கூறியது:

 ""லிபியாவின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பன்னாட்டுப் படைகள் லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்து வருகின்றன. சர்வதேச உறவுகளில் வலிமையைப் பிரயோகிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

 லிபியாவுக்கு எதிரான இந்த ராணுவத் தாக்குதலைக் கண்டு சீனா மிகவும் வேதனை அடைகிறது. இது போன்ற நடவடிக்கைகளை சீனா எப்போதுமே ஆதரித்ததில்லை.
 அந்நாட்டின் வான்வெளி மேல் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஐ.நா.வின் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளும் கோட்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். லிபியாவின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை, நாட்டின் எல்லை ஒருமைப்பாடு இவை மதிக்கப்பட வேண்டும்.

 விரைவில் அந்தப் பிரதேசத்தில் ஸ்திரத் தன்மை திரும்ப வேண்டும். ராணுவ நடவடிக்கையினால் பொதுமக்களிடையை உயிரிழப்பு இருக்கக் கூடாது,'' என அவர் கூறினார்.

லிபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் வியாழனன்று ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிறைவேற்றப்பட்டபோது இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

* ஜப்பான்: அணு உலைகளை குளிர்விக்க தீவிர முயற்சி

டோக்கியோ, மார்ச் 20: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து வெடித்த அணு உலைகளைக் குளிர்விக்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.

 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமிக்கு இதுவரை 20 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். சுனாமியால் ஃபுகுஷிமா நகரிலுள்ள அணு மின் உற்பத்தி நிலையம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நிலையத்திலிருந்த 4 அணு உலைகளும் வெடித்துவிட்டன. இதனால் அங்கு கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டது. அணு மின் நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் அங்குள்ள குளிர்விப்பான்கள் செயலிழந்துவிட்டன. தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கிருக்கும் ஜெனரேட்டர்களையும் இயக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அணு உலைகள் வெடித்தன. இந்த நிலையில் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளை குளிர்விக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமையும் அணு உலைகளை குளிர்விக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை டோக்கியோ மின் உற்பத்தி நிறுவன (டெப்கோ) பொறியாளர்கள் செய்து வருகின்றன.
 ஆனாலும் குளிர்விப்பான்களை இயக்க பொறியாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட தண்ணீரை அணு உலை 3, 4-ன் மீது ஊற்றியும் பலன் இல்லை.
 இந்த நிலையில் அணு உலை 1, 2 உள்ள கட்டடங்களின் மின் இணைப்பு கேபிள்களை இணைக்க பொறியாளர்கள் மேற்கொண்ட முயற்சி சிறிது சிறிதாக பலனளித்து வருவதாக ஜப்பான் நாட்டின் துணை தலைமை அமைச்சரவை செயலர் டெட்சுரோ புக்குயாமா தெரிவித்தார்.

 அணு உலை மூடப்படும்: அணு உலை அமைந்துள்ள பகுதியில் கதிரியகத்தைக் கட்டுப்படுத்தியவுடன் அந்த அணு உலைஉற்பத்தி நிலையம் மூடப்படும் என்று தலைமை அமைச்சரவை செயலர் யுகியோ எடானோ தெரிவித்தார்.

 20 ஆயிரம் பேர் சாவு: சுனாமி, நிலநடுக்கத்தால் இதுவரை 20 ஆயிரம் பேர் ஜப்பானில் பலியாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு ஜப்பான் பகுதியிலுள்ள மியாகி பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி நவோட்டா டேக்யுச்சி தெரிவித்தார். மியாகி நகரில் மட்டும் 4,882 பேர் இறந்துவிட்டனர் என்றார் அவர்.

 2 பேர் உயிருடன் மீட்பு: சுனாமி தாக்கி 9 நாள்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

* திபெத் பிரதமர் தேர்தல்: ஆயிரக்கணக்கானோர் வாக்களிப்பு

தர்மசாலா/சிம்லா, மார்ச் 20: நாடு கடந்து வாழும் திபெத்தியர்களின் பிரதமர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது; இதில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

 திபெத் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இதுபோன்று சுமார் 83 ஆயிரம் திபெத்தியர்கள் உலகம் முழுவதும் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

 நாடு கடந்து வாழும் திபெத்தியர்களின் பிரதமர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திபெத் தலைமை தேர்தல் ஆணையர் ஜேம்ப்பெல் சோசாங் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தியா, நேபாளம், பூடான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் 83,399 திபெத்தியர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.

 இவர்கள் வாக்களித்து நாடு கடந்து வாழும் திபெத்தியர்களுக்கான பிரதமர், 43 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர் என்றார் அவர்.

முன்னதாக அனைத்து அரசியல் பொறுப்புகளில் இருந்தும் விலக விரும்புவதாகவும், நாடு கடந்துவாழும்
திபெத்தியர்கள் இனி திபெத் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கடந்த வாரம் அறிவித்தார்.

 இதனையடுத்து இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. லாப்சாங் சாங்காய், டென்ஸின் நம்கியால், தாஸி வாங்தி ஆகியோர் பிரதமர் பதவியைப் பெறுவதற்கான களத்தில் உள்ளனர். முதல் இருவரும் வெளிநாடுகளில் பல்கலைக்கழக அளவில் கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றனர். தாஸி வாங்தி, தலாய்லாமாவின் பிரதிநிதியாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ், தில்லி, நியூயார்க் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறார்.

 தேர்தலுக்காக இமாசலப் பிரதேசத்தில் 10, தில்லியில் 4 என வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் 86 தேர்தல் அலுவலகங்களும் செயல்பட்டன.
 இந்த வாக்குச் சாவடிகள், அலுவலகங்களுக்கு திபெத்தியர்கள் சென்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அனைத்து வாக்குப் பெட்டிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவுக்கு கொண்டு வரப்படவுள்ளன. ஏப்ரல் 3-வது வாரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு ஏப்ரல் 27-ல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

 தேர்தல் ஏற்பாடுகளை திபெத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* எகிப்தில் கருத்து வாக்கெடுப்பு: 50 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் வாக்களிப்பு

எகிப்தில் நேற்று நடந்த கருத்து வாக்கெடுப்பில், கடந்த அரை நூற்றாண்டில் முதல்முறையாக ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.

இதையடுத்து அவரது ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய 17 நாள் போராட்டத்துக்கு பிறகு முபாரக், பதவியில் இருந்து வெளியேறினார்.

தற்போது ஆட்சி அதிகாரம் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.அரசியல் சட்டத்தில் மாற்றம் வேண்டும். புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

எனவே, அதிபர் தேர்தலை விரைவில் நடத்த இராணுவ அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அதிபர் தேர்தல் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து எகிப்தில் உள்ள கெய்ரோ, ஷமாலேக், ஜிஷா, ஷாகாஷிப் உள்ளிட்ட பல நகரங்களில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஏராளமான மக்கள் வாக்குச் சாவடிகள் முன்பு நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர்.

வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டதும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர்.30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களித்ததன் மூலம் தாங்கள் ஜனநாயகத்தை ருசித்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

* 'ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாதகமாகவே அமையும்'  

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, இலங்கைக்கு பாதகமானதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை தளமாகக்கொண்ட தூதரக அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர், பெரும்பாலும் தனது அறிக்கையை இறுதிப்படுத்தி விட்டது.

இந்நிலையில் இலங்கையின் நான்காம் ஈழப்போர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை அந்த அறிக்கை வலியுறுத்துவதாக குறித்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த அறிக்கை, வெளிப்படையாக அமையவேண்டும்.எனவே அதனை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், பான் கீ மூனை வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த மாத இறுதிக்குள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிபுணர் குழுவின் அறிக்கை, பான் கி மூனாலேயே ஊடகங்களுக்கு வெளியிடப்படலாம் என்றும் அதிகாரி கூறினார்.

ஏற்கனவே இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் தலைமையிலான குழு, பான் கீ மூனை சந்தித்து, இந்த அறிக்கையை வெளிப்படுத்தவேண்டாம் எனக்கேட்டுக்கொண்ட போதும் அதனை மீறி அந்த அறிக்கை வெளிப்படுத்தப்பபட இருப்பதாக என அந்த தூதரக அதிகாரி தெரிவிததுள்ளார்.

* லிபியாவில் 2 இந்தியர்கள் உள்பட 11 பேரிடம் விசாரணை

ரோம்,மார்ச் 20: லிபிய நாட்டின் துறைமுகத்துக்கு வந்த இத்தாலி கப்பலில் இருந்த 2 இந்தியர்கள் உள்பட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு
 வருகிறது.

 லிபியா நாட்டிலுள்ள திரிபோலி துறைமுகத்துக்கு இத்தாலி கப்பல் சனிக்கிழமை வந்தது.

 சரக்குகளை இறக்கி விட்டு திரும்ப கப்பல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது ஆயுதம் தாங்கிய சிலர் குறுக்கிட்டு கப்பலில் இருந்த 11 பேரை கைது செய்தனர்.

 கைது செய்த ஆயுதம் தாங்கிய கும்பலில் ஒருவர் தன்னை துறைமுக மாஸ்டர் என்று அறிமுகம் செய்துகொண்டார். அவர்களிடம் அந்த கும்பல் விசாரணை நடத்தி வருகிறது. இதில் 2 இந்தியர்கள், 8 இத்தாலியர்கள், உக்ரைனைச் சேர்ந்த ஒருவர் அடக்கம்.

 இத்தாலியைச் சேர்ந்த அன்சா செய்தி நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

* அந்தமான், பிலிப்பின்ஸ், தைவானில் நிலநடுக்கம்

மணிலா, மார்ச் 20: தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸ், கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தைவானில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

 பிலிப்பின்ஸில் வடக்கு கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுமானியில் 6.4 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

 இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. சுனாமி அபாய எச்சரிக்கையும் இல்லை. எனினும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கடலுக்கு அடியில் சுமார் 50. கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தலைநகரை உலுக்கியது: தைவானில் தலைநகர் தைபேயில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் வந்து நின்றனர்.

 ரிக்டர் அளவுமானியில் 5.5 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் உயிரிழப்பு, பொருள்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
 அந்தமானில்... வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் சனிக்கிழமை இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

 மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 என்ற அலகில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்படவில்லை.

* சோமாலியக் கொள்ளையர் பீதி: இந்தியக் கடற்பகுதியில் ரோந்து அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச 20: சோமாலியக் கடற் கொள்ளையர் பீதி காரணமாக இந்தியக் கடற்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கடலோரக் காவல்படை டிஐஜி எஸ்.டி. பனோட் தெரிவித்தார்.

 கடலோரக் காவல்படைக் கப்பலான "சங்கல்ப்' கப்பலில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

 சோமாலியக் கடற் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் இந்திய கடலோரப் பகுதியில் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு 61 சோமாலிய கடற் கொள்ளையர்களைக் கைது செய்தோம். சில மாதங்களுக்கு முன்பு 40 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

 இந்திய கடற் பகுதியில் அவர்களை வரவிடாத வண்ணம் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளோம். கடல் கொள்ளையர்களைத் தடுக்க மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் அவர். சங்கல்ப் கப்பல் இப்போது மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

* அமெரிக்க அதிகாரியை விடுவித்த நபர்களை தண்டிப்போம்: பாக். தலிபான்

இஸ்லாமாபாத், மார்ச் 20- அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸை விடுதலை செய்வதற்கு காரணமானவர்களை தண்டிப்போம் என்று பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் அஷானுல்லா அஷன் கூறியிருப்பதாவது:

"அமெரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் சிஐஏ ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். இரு அப்பாவி பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற ரேமண்டை விடுவித்ததன் மூலம், பாகிஸ்தான் அமெரிக்காவின் காலனியாக மாறி வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது." என்று அஷானுல்லா அஷன் தெரிவித்துள்ளார்.
"மேலும், ரேமண்ட் விடுதலை செய்யப்பட யார் யார் முயற்சி எடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரதுவிடுதலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவரையும் நாங்கள் குறிவைப்போம்." என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசியச் செய்தி மலர் :* ஹோலி பண்டிகை: நாடு முழுவதும் வண்ணமயமான கொண்டாட்டம்

புது தில்லி, மார்ச் 20: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

 தெருக்களில் உற்சாகமாகக் கூடிய இளைஞர்கள், இளைஞிகள், சிறார்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசியும், வண்ண நீரைத் தெளித்தும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
 தங்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று இனிப்பு வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
 ஹோலி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பொதுமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

 பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது இல்லத்தில் குடும்பத்தினர், நண்பர்கள், தொண்டர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார். கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், அனந்த குமார் ஆகியோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 வசந்த காலத்தின் தொடக்கத்தை உணர்த்தும் வகையிலும் ஹோலி கொண்டாடப்படுகிறது. இக்காலகட்டத்தில் காலநிலை மாறும், அப்போது பொதுமக்களுக்கு ஜலதோஷம் உள்பட சில நோய்கள் பரவும். அதனைத் தடுக்க இயற்கை வண்ணங்கள் நிறைந்த மஞ்சள், குங்குமம், வேப்பிலை உள்ளிட்டவற்றை ஒருவர் மீது ஒருவர் பூசுவது மரபு.

 ஆனால் இப்போது இப்போது ரசாயனங்களால் தயாரிக்கப்படும் செயற்கை வண்ணப்பொடிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

* கொச்சி, மார்ச் 20: தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் ரகசிய கூட்டத்தில் பங்கேற்றதாக அந்த அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவரை கேரள போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

 கேரள மாநிலம் நெடும்பச்சேரி விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் இப்ராஹிம் நிஸôர் (26) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டின் ஷார்ஜா நகரிலிருந்து அவர் வந்தபோது குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்து போலீஸôரிடம் ஒப்படைத்தனர்.

 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அலுவா அருகிலுள்ள பனயிகுளம் பகுதியில் சிமி இயக்கத்தின் ரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற வழக்கில் இப்ராஹிமை போலீஸôர் தேடி வந்தனர்.

இப்போதுதான் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்த போலீஸôர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தேசிய புலனாய்வு போலீஸôர் (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

* அசாம் பேரவைத் தேர்தல்: 20 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

குவாஹாட்டி, மார்ச் 20: அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்புமனு செய்திருந்த 20 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

 அசாம் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி 62 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி 64 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்தது. இந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 529 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

 இதில் 20 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.சி. சாஹு தெரிவித்தார்.

* காஷ்மீரில் 550 கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

ஸ்ரீநகர், மார்ச் 20: காஷ்மீரில் சுமார் 550 கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்று காஷ்மீர் பண்டிட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 இது குறித்து காஷ்மீர் பண்டிட் கூட்டமைப்பின் தலைவர் வினோத் பண்டிட் கூறியுள்ளது:

காஷ்மீரில் சுமார் 550 கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகளில் 80 சதவீதத்தை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகும், அரசு உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றனர். எனவே கோவில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ள இவர்கள் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
 எனவே இதுகுறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதனை நிறைவேற்ற மாநில அரசு தவறும்பட்சத்தில் எங்கள் அமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் உள்பட பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

 காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த பண்டிட்களை மீண்டும் காஷ்மீருக்கு அழைத்துவர மாநில அரசு உருவாக்கியுள்ள மறுவாழ்வு திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மாநில அரசை நம்பிச் சென்ற பண்டிட்கள் பரிதாப நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர். ஒரே அறையில் நான்கு குடும்பங்கள் வசிக்கும் நிலைதான் உள்ளது. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட மாநில அரசு நிறைவேற்றித் தரவில்லை என்றார் அவர்

மாநிலச் செய்தி மலர் :

* வழக்கறிஞர் தொழில் செய்ய பார் கவுன்சில் தேர்வு அவசியமா?

சென்னை, மார்ச் 20: வழக்கறிஞராகத் தொழில் செய்வதற்கு நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அகில இந்திய பார் தேர்வு அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாநில பார் கவுன்சில்களில் பதிவு செய்த உடன் வழக்கறிஞர் தொழில் செய்யும் நிலை இருந்தது.

 இதில் இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ.) புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, வழக்கறிஞர் தொழில் புரிய பார் கவுன்சில் பதிவுக்குப் பின்னர், பி.சி.ஐ. நடத்தும் அகில இந்திய பார் தேர்வில் (ஆல் இந்தியா பார் எக்ஸôம்) தேர்ச்சி பெற வேண்டும் என்று பி.சி.ஐ. 2010 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டது.
 அதன்படி, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 30 நாள்களுக்குள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்கான சான்றிதழ் அளிக்கப்படும் என்று பி.சி.ஐ. கூறியுள்ளது.

* மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்சிவகங்கை, மார்ச் 20: கம்பன் அருளிய ராம காதை, மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் நூலாக உள்ளது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார். காரைக்குடி கம்பன் திருநாள் 4-ம் நாள் விழா, நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் திருஅருட்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி கம்பன் திருஅருட்கோயிலை அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டது. லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் மலர் வணக்கம் செலுத்தி, கம்பன் அருட்கவி ஐந்து பாடினர்.

 பின்னர் நடைபெற்ற பாத்திறமலி பாட்டரசன் நிகழ்ச்சிக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். கண. சுந்தர் வரவேற்றார். நயம்மலி நாடக அணி என்ற தலைப்பில் அ.அ. ஞானசுந்தரத்தரசுவும், கலைமலி கற்பனை என்ற தலைப்பில் சொ.சேதுபதியும், இனிமைமலி ஈற்றடிகள் என்ற தலைப்பில் இரா. மணிமேகலையும், சுவைமலி சொல்லாட்சி என்ற தலைப்பில் மா. சிதம்பரமும் பேசினர்.

 நிகழ்ச்சியில் பொன்னபல அடிகளாரின் தலைமை உரை:

காரைக்குடி கம்பன் கழகம், கம்பனை சிகரத்தில் ஏற்றிவைத்த புகழுக்கு உரியது. கம்பனின் ராம காதையை சிந்திக்காதவர்கள், எதிர்மறையாக பேசியவர்களையெல்லாம் தன்பால் ஈர்ந்த பெருமை காரைக்குடி கம்பன் கழகம் உள்ளிட்ட கம்பன் கழகங்களுக்கு உண்டு.

 ஆன்மிகத்தையும் அறிவையும் இணைத்துச் சிந்திக்கிற மேடை கம்பன் கழகத்து மேடை.

 எவருக்கும் கிடைக்காத அரிய நெல்லிக்கனியை அமுது என சொல்லாமல் ஒüவைக்கு கொடுத்தான் அதியமான். அவளும் அதை உண்டாள். இது சாகா மருந்து என உண்ட பின்பு சொன்னான். அப்போது ஒüவை, இதை தகடூரை ஆளும் நீ உண்டிருக்கலாமே என்றாள். அதற்கு அதியமான் சொன்னான், அன்னையே நான் தகடூரை மட்டும் ஆள்பவன், நீயோ தமிழ் உள்ளங்களை ஆள்பவள். நீ வாழ்ந்தால் தமிழ் வாழும் என்பதால் அந்த நெல்லிக் கனியை தந்தேன் என்றான்.

 அப்படி தமிழைப் போற்றிய உலகில் நமக்கு கிடைத்த கனியமுது கம்பனின் ராம காதை. கடவுள் சராசரி மனிதனாய், இன்ப துன்பங்களை நுகர்ந்து, நடையில் நின்றுயர் நாயகனாக வாழ்ந்து காட்டியதுதான் கம்பராமாயணம்.

இந்த நாளின் சிந்தனைகளை இன்றைக்குத் தேவையான சிந்தனைகளை, மானுடத்தை தட்டி எழுப்புவதற்கு சரியான வழிகாட்டி ராம காதை. உண்மையான தலைமைப் பண்புக்கு இலக்கணம் திருநீலகண்டம்தான். பார்க்கடலைக் கடைந்தபோது நஞ்சு கிடைத்தபோது யாரும் உண்ணத் தயாராக இல்லை. உலகம் காக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தானே உண்டு உலகைக் காத்தார் திருநீலகண்டம். உலகைக் காக்க யாராவது ஒருவர் தியாகம் செய்யலாம், அதுதான் தலைமைப் பண்பு.

 உலகை உருட்டிப் பார்த்த மாவீரன் அலெக்சாண்டர் வாழ்ந்த காலத்தில், டயோஜினிஸ் என்ற அறிஞர் அந்த மக்களால் புகழப்பட்டான். அலெக்சாண்டருக்கு உள்ளூர புழுக்கம். டயோஜினிûஸ நேரில் சந்தித்தபோது, மக்கள் என்னைவிட உன்னை அதிகம் புகழ்கிறார்களே ஏன் என்று கேட்டான். அதற்கு டயோஜினிஸ் பதிலளித்தான். நீ மண்ணை வென்றவன், நானோ என்னை வென்றவன். தன்னை வென்றவன்தான் தரணியை ஆள்வான் என்றான். அதனால்தான் நடையில் நின்றுயர் நாயகனாக காட்சி தருகிறான் ராமன்.

ராமன் நாளை அரசனாக அறிவிக்கப்படுகிறான் என்பதை மக்கள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கானகம் செல்லத் தயாராக இருக்கிறான் ராமன்.

சொன்னது யார் என்பதில் அவனுக்கு சர்ச்சை இல்லை, கேள்வியில்லை, தேர்தல் இல்லை, வாக்கெடுப்பு இல்லை. அரச பதவியா, கானகம் நோக்கிச் செல்வதா இரண்டும் ஒன்றுதான் அவனுக்கு. இரண்டையும் ஒன்றாக எண்ணிப் பார்க்கிற நிலைப்பாடு அவனுக்கு இருந்தது. அரச பதவி கிடைத்தபோது பரதன் அதை எட்டி உதைத்த போது ஆயிரம் ராமன் உனக்கு ஈடில்லை என்று கூறப்படுகிறது. துறவு நிலையின் பெருமை இது.

 இந்த நிலைப்பாட்டை இந்த சமூகத்தில் பார்க்க முடிகிறதா? குடும்ப உறவே அந்நியமாகப் போய்விட்டது. உறவுகள் அந்நியப்பட்டிருக்கிற நாட்டில், எல்லா உறவுகளும் ஒன்றுக்கு ஒன்று தியாகம் செய்வதைத்தான் ராம காதையில் பார்க்க முடிகிறது. தனி மனித உறவுகளுக்கும், ஒரு நாட்டின் தலைமைக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது.

சமய நல்லிணக்கத்தை இப்போது காண முடியவில்லை. கம்பனின் ராம காதை உலகளந்த பார்வையைப் பார்க்கிறது. குகனொடும் ஐவரானோம் என்று கம்பராமாயணம் சொல்கிறது. சுக்ரீவன் விலங்கு, குகன் காட்டு மனிதன், வீடணன் அரக்கன். இப்படி உயிர்க் குலத்தின் பட்டியலில் உள்ள அத்தனையையும் உடன் பிறப்பாக, உறவாக ஏற்றுக்கொள்கிற மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியதுதான் கம்பனின் ராம காதை என்றார் பொன்னம்பல அடிகளார்.

 விழாவில், வேலூர் கம்பன் கழகத் தலைவர் எஸ்.என்.குப்புசாமி முதலியார், பேராசிரியர் நா.தர்மராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நா.மெய்யப்பன் நன்றி கூறினார்.

* தருமபுரி உள்பட 3 தொகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு: லம்பாடி சமூகத்தினர்

தருமபுரி, மார்ச் 20: தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வசிக்கும் லம்பாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

 பென்னாகரம் வட்டத்திலும், தருமபுரி வட்டத்திலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லம்பாடி இன குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு, பழங்குடியினருக்கான எஸ்.டி. சான்று வழங்காமல், பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கான சான்றிதழ்களே வழங்கப்படுகிறதாம்.
 இது தொடர்பாக, வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் பலனில்லையாம். இதனால், பென்னாகரத்தில் கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.

 அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு சமாதானப்படுத்தி தேர்தலில் பங்கேற்கச் செய்தார். மேலும், பழங்குடியினர் சான்று வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்தார்

ஆனால், இடைத்தேர்தலுக்கு பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என லம்பாடி சமூகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 பென்னாகரம் தொகுதியில் 15 சதவீதமும், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 8 சதவீதமும் லம்பாடி சமூக வாக்குகள் உள்ளன. இவர்கள் யாரும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்பது என முடிவெடுத்துள்ளதாக தருமபுரி மாவட்ட லம்பாடி மக்கள் நலச் சங்கத் தலைவர் கே. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* வாகனச் சோதனை: ரூ.50 லட்சம் எரிசாராயம் பிடிபட்டது

காஞ்சிபுரம், மார்ச் 20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அனாதை கல்வி இயக்கம் என்ற போர்வையில் தனிப் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.

 தேர்தலையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போலீஸôர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு புறவழிச்சாலை பகுதியில் வாகனச் சோதனை செய்யப்பட்டபோது மதுராந்தகம் நோக்கி வந்த வெள்ளை நிற மாருதி காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸôர் சோதனையிட்டனர். இச் சோதனையில் அந்த காரில் இருந்து 35 லிட்டர் கொள்ளவு கொண்ட கேன்களில் இருந்து எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அக் காரில் வந்த படாளம் லோகநாதன் மகன் பூபாலனை(35) போலீஸôர் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை அருகேயுள்ள பூவல்லிகுப்பம் கிராமத்தில் சங்கர் என்பவர் வீட்டில் இருந்து இந்த எரிசாராயத்தை கடத்தி வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸôர் அந்த இடத்தை சோதனையிட்டனர். அங்கு 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 610 கேன்களில் இருந்து 22 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தைக் கைப்பற்றினர். இந்த எரிசாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் சங்கரை போலீஸôர் கைது செய்தனர்

இந்தச் சாராயம் கைப்பற்றப்பட்ட இடம் அனாதை கல்வி இயக்கப் பள்ளியாக இருந்தது. கடந்த ஒன்றரை மாதமாக அனாதை கல்வி இயக்கம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக இங்கு சாராயம் பதுக்கி வைக்கப்பட்ட இடமாக பயன்பட்டு வந்ததுள்ளது.

 இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இதர மாவட்டங்களுக்கு சாராயம் விநியோகிக்கப்பட்டதும் போலீஸôர் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சாராயக் கடத்தலில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை பிடிக்கப் போலீஸôர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 இந்தச் சாரய வேட்டையில் ஈடுபட்ட போலீஸôருக்கு காஞ்சிபுரம் டிஐஜி எம்.ராமசுப்பிரமணி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்த் சின்ஹா, திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.வனிதா உள்ளிட்டோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.


* தண்டவாளத்தில் விரிசல்: 5 ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன

மதுராந்தகம்,மார்ச் 20: மதுராந்தகம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த 5 ரயில்கள் பல்வேறு இடங்களில் வழியில் நிறுத்தப்பட்டன.
அரையாப்பாக்கம் என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருந்தது. இதனை காலை 6 மணிக்கு அவ்வழியாகச் சென்ற ஒரு சிறுவர் பார்த்து கிராம மக்களிடம் கூறினார்.

தண்டவாளத்தில் இருந்த விரிசலை கண்ட கிராமமக்கள் ஒன்றுக்கூடி அவ்வழியாக சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த விழுப்புரம் பாசஞ்சர் ரயிலை சிகப்பு துணியைக் காட்டி நிறுத்தினர்.

இதனால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர்,உடனடியாக ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட காலை நேரத்தில் இயங்கக்கூடிய 5 ரயில்கள் மேல்மருவத்தூர், மதுராந்தகம், கருங்குழி ஆகிய இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பின்னர்,ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரி செய்தனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில் போக்குவரத்து சேவை 2 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

* ரூ.2 லட்சம் மதிப்பு ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்: 2 பேர் கைது

மதுரை,மார்ச் 20: மதுரையில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.முருகையா, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சிவாஜி அருள்செல்வம், இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் தல்லாகுளம் பகுதியில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது அந்த வழியாகச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, தலா 50 கிலோ எடை கொண்ட 340 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செக்கானூரணியைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ் மகன் கண்ணதாசன் (32),கிளீனர் ராமலிங்கம் மகன் ஜெயக்குமார் (42) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.2.04 லட்சம் என்றும்,லாரியின் மதிப்பு ரூ.5 லட்சம் எனவும் போலீஸôர் தெரிவித்தனர். இதுகுறித்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

* ஆகாஷ் ஏவுகனை திட்டத்தில் ஊழல் : மூன்று பேர்கைது

சென்னை: ஆகாஷ் ஏவுகனை திட்ட வளர்ச்சியை தாமதப்படுத்தியதாக மூன்று பேர்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்திய ராணுவத்தில் ஆகாஷ் ஏவுகனை திட்டம் ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது.அதை இயக்குவதற்கு தேவையான மோடம் போன்ற கருவிகளை வாங்குவதில் பண இழப்பீடு செய்ததாக சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச்(சமீர்) என்றழைக்கப்படும் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் கேஆர் கினி ஆகியோர் உட்பட மூன்று பேர் சி.பி.ஐ.துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் திட்டங்களில் முறைகேடு செய்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீர் என்றழைக்கப்படும் நிறுவனம் முழுக்க மத்திய அரசின் தகவல்தொழில்நுட்ப துறை யின் உதவியின் கீழ் நடத்தப்பட்டு வரும் நிறுவனமாகும். இதனுடன் சென்னை மற்றும் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் சாம்ஷின் பிரிசிசன் நிறுவனம் ஆகாஷ் ஏவுகனைக்கு தேவையான மோடம் தயாரிப்புக்கான ஒப்பந்தம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் இயக்குனர் ரத்தினவேல் சமீர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் கருணாகரனின் நண்பவராவார். இவர்கள் மூவரும் இணைந்து மோசடி வழக்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும்வரும் 1-ம் தேதிவரை நீதிமன்ற காவிலில்வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது

* ஆற்றில் சுவாமி சிலைகள் போலீசார் விசாரணை

வால்பாறை:வால்பாறை அருகே, ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து சுங்கம் அருகேயுள்ள ஆற்றில், அம்மன், கிருஷ்ணர், விநாயகர், முனீஸ்வரர் என சிலைகள் மற்றும் கலசம் இருப்பதை, இப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வம் கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வால்பாறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் படி, போலீசார், ஆற்றில் கிடந்த சிலைகளை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.போலீசார் கூறுகையில், "பழைய கோவில்களை புதுப்பித்து கட்டும் போது, சிலைகளை ஆற்றில் விடுவது ஐதீகம். இதுபோல், இங்குள்ள ஏதாவது ஒரு கோவிலை புதுப்பிக்கும் போது, பழைய சிலைகளை ஆற்றில் விட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.

* ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்தல் கமிஷன் நிபந்தனை

திண்டுக்கல்:ஓட்டுச்சாவடி அதிகாரிகள் நியமனம் குறித்து, தேர்தல் கமிஷன் <நிபந்தனை விதித்துள்ளது.குறிப்பிட்ட அதிகாரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன் நடந்த தேர்தலில் தண்டனை எதுவும் பெற்றிருக்க கூடாது.அவர் பணி புரியும் தொகுதி மற்றும் அவரது சொந்த தொகுதியில் அவருக்கு பணி ஒதுக்க கூடாது. "ரேண்டம்' முறையில் பணி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

நலம் தரும் நார்ச்சத்து உணவு!  

உங்கள அத்தியாவசிய உணவு பட்டியலில் நார்ச்சத்துடன் கூடிய உணவு மிகவும் அவசியமானது.ஜீரணம் சீராக நடைபெறவும், உங்களது உடலில் கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், இருதய நோய் வரும் ஆபத்தை குறைப்பதிலும், இரண்டு வித சர்க்கரை நோய் உருவாவதை தடுப்பதிலும்,அவ்வளவு ஏன்... சில வகை புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதிலும் கூட நார்ச்சத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து எவ்வளவு தேவை?


உங்கள அத்தியாவசிய உணவு பட்டியலில் நார்ச்சத்துடன் கூடிய உணவு மிகவும் அவசியமானது.ஜீரணம் சீராக நடைபெறவும், உங்களது உடலில் கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், இருதய நோய் வரும் ஆபத்தை குறைப்பதிலும், இரண்டு வித சர்க்கரை நோய் உருவாவதை தடுப்பதிலும்,அவ்வளவு ஏன்... சில வகை புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதிலும் கூட நார்ச்சத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து எவ்வளவு தேவை?

இத்தகைய நார்சத்து உங்களது உடலுக்கு எந்த அளவு தேவையாக உள்ளது என்று பார்த்தால், 50 வயது வரையிலான ஆணுக்கு நாளொன்றுக்கு 38 கிராமும், பெண்ணுக்கு 25 கிராமும் தேவையாக உள்ளதாக கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.அதே சமயம் 50 வயதுக்கு மேல் நார்சத்தின் தேவை சற்று குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானோர் மேற்கூறிய பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய நார்ச்சத்து கொண்ட உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதில்லை. உண்மையில் சராசரியாக நம்மவர்கள் நாளொன்றுக்கு 14 கிராம் நார்ச்சத்தை மட்டுமே எடுத்துக்கொள்வதாக மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.

ஒவ்வொருவரும் தினமும் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்தின் அளவு, அவர்கள் எந்த அளவு கலோரி உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. 1000 கலோரிகளை கொண்ட உணவை ஒருவர் எடுத்துக்கொண்டால் அவருக்கு 14 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது.எனவே உதாரணத்திற்கு நீங்கள் 2,500 கலோரி உணவுகளை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நாளொன்றுக்கு 35 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.


வர்த்தகச் செய்தி மலர் :


மூலப்பொருள்களின் விலை உயர்வால் நுகர்வோர் சாதனங்கள் விலை அதிகரிப்பு:ரெப்ரிஜிரேட்டர்கள், 'ஏசி' சாதனங்கள் விலை மேலும் உயரும்
மார்ச் 21,2011,04:09

புதுடில்லி:மூலப்பொருள்களின் விலை உயர்வால், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன.அலுமினியம், தாமிரம், உருக்கு உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருள்களின் விலை, கடந்த ஆறு மாதங்களில், 60 - 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ரெப்ரிஜிரேட்டர்கள், ஏர்கண்டிஷனர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாப வரம்பு, மிகவும் பாதிப்படைந்துள்ளது.இதை ஈடு செய்யும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், இச்சாதனங்களில் விலையை, சென்ற ஜனவரி மாதத்தில் உயர்த்தின. இந்நிலையில், இவற்றின் விலையை வரும்ஏப்ரல் மாதத்தில், மீண்டும்அதிகரிக்கும் வகையில், இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், எல்.ஜி., நிறுவனத்தின் 'ஸ்பிலிட்' வகை 1.5 டன் திறன் கொண்ட '5 நட்சத்திர' குறியீட்டை பெற்ற ஏர்கண்டிஷனர் சாதனத்தின் விலை, 27 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிறுவனம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதத்தில், அதன் ஏர்கண்டிஷனர் சாதனங்கள் விலையை, 5 - 7 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.இதே போன்று, நடப்பாண்டின் தொடக்கத்தில், ரெப்ரிஜிரேட்டர் சாதனங்களின் விலையும், 500 முதல் 1,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருந்தது.கொரிய நாட்டை சேர்ந்த, சாம்சங் நிறுவனமும், அதன் ரெப்ரிஜிரேட்டர்களின் விலையை 2.5 சதவீத அளவிற்கும், 'ஸ்பிலிட்' வகை ஏர்கண்டிஷனர் சாதனங்களின் விலையை, 10 சதவீத அளவிற்கும் உயர்த்தியுள்ளது. இத்துறையில் ஈடுபட்டு வரும் வேர்ல்பூல், கோத்ரெஜ் அப்ளையன்சஸ் ஆகிய நிறுவனங்களும், இச்சாதனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.இது குறித்து எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி (ஏர்கண்டிஷனர்கள்) அஜய் பஜாஜ் கூறுகையில், 'நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருள்களின் விலை, மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடு செய்ய, நுகர்வோர் சாதனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது' என்றார்.இது குறித்து நுகர்வோர் சாதனங்கள் துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகையில், 'நிறுவனங்கள், நுகர்வோர் சாதனங்களின் விலையை உயர்த்தும் நிலையில், அது மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, வாடிக்கையாளர்கள், இச்சாதனங்கள் வாங்குவதை தவிர்க்க கூடும்' என்றார்.முன்பெல்லாம் 6 - 8 மாதங்களுக்கு ஒரு முறை, நுகர்வோர் சாதனங்கள் விலை உயர்வு குறித்து, நிறுவனங்கள் முடிவெடுத்து வந்தன. ஆனால், தற்போது, ஒவ்வொரு மாதமும் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகின்றன. இது, இத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என, மும்பையை சேர்ந்த மற்றொரு ஆய்வாளர் தெரிவித்தார்.கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின், வைஸ் பிரசிடென்ட் (விற்பனை மற்றும் சந்தை படுத்துதல்) கமல் நந்தி கூறுகையில், 'தொடக்கத்தில், விலை உயர்வு காரணமாக நுகர்வோர்சாதனங்கள் விற்பனையில், மந்த நிலை காணப்பட்டது.தற்போது, கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஏர்கண்டிஷனர்கள் மற்றும் ரெப்ரிஜிரேட்டர் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, இவ்வாண்டு ஏர்கண்டிஷனர் சாதனங்கள் விற்பனை, 20 - 25 சதவீத அளவிற்கும், ரெப்ரிஜிரேட்டர் சாதனங்கள் விற்பனை, 12 - 15 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.நுகர்வோர் சாதனங்கள் மட்டுமின்றி, நுகர்பொருள்கள் விலையும் இவ்வாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பால், சர்க்கரை, கோக்கோ, உலர் பழங்கள் மற்றும் பேக்கேஜிங் சாதனங்களின் விலை அதிகரித்துள்ளதால், ஐஸ்கிரீம் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள அமுல் மற்றும் வாடிலால் ஆகிய நிறுவனங்கள் முறையே, 12 சதவீதம் மற்றும் 8 சதவீதம் உயர்த்தியுள்ளன. மேலும், குளிர்பானங்களின் விலையும், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுவருகின்றன.பாமாயில் விலை உயர்வை சுட்டிக் காட்டி, சோப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், அண்மையில் அதன் லக்ஸ் மற்றும் லிரில் போன்ற சோப்பு வகைகளின் விலையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* சென்னையில் விண்ணை தொடும் வெற்றி: யுவராஜ் சதத்தில் இந்தியா அபாரம்

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. யுவராஜ் சிங்கின் அதிரடி சதம், அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டன.
அஷ்வின் வாய்ப்பு:
இந்திய அணியில் காயம் அடைந்த சேவக், நெஹ்ரா நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா, அஷ்வின் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், கீமர் ரோச்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கிர்க் எட்வர்டஸ், ரவி ராம்பால் இடம் பெற்றனர். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
ராம்பால் அசத்தல்:

இந்திய அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(2), ரவி ராம்பால் வேகத்தில் வீழ்ந்தார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். பென் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் காம்பிர். இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் காம்பிரும்(22)வீழ்ந்தார்.
கோஹ்லி அரைசதம்:
அடுத்து வந்த யுவராஜ் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருக்கு கோஹ்லி அருமையாக "கம்பெனி' கொடுக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. சமி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த யுவராஜ், மிகவிரைவாக அதிரடிக்கு மாறினார். பிஷூ ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி விளாசிய இவர், அரைசதம் கடந்தார். தொடர்ந்து பென் ஓவரிலும் 2 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு யுவராஜுடன் சேர்ந்து 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் விராத் கோஹ்லி(59) போல்டானார்.

முதல் சதம்:
பின் போலார்டு வீசிய பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுத்த, யுவராஜ், உலக கோப்பை அரங்கில் தனது முதல் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 13வது சதம். மறுபக்கம் பிஷூ பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட, தோனி(22) வீணாக அவுட்டானார்.
இதற்கு பின் இந்திய விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சமி வீசிய போட்டியின் 44வது ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் ஒரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ராம்பாலின் சூப்பர் "கேட்ச்சில்' ரெய்னா(4) அவுட்டானார். இதன் மூலம் கிடைத்த அரிய வாய்ப்பை இவர் வீணாக்கினார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் அவரிடேம "கேட்ச்' கொடுத்து யுவராஜ் வெளியேறினார். இவர் 113 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ராம்பாலிடம் "சரண்டர்' ஆன யூசுப் பதான்(11) மீண்டும் சொதப்பினார். ஹர்பஜன்(3) தாக்குப்பிடிக்கவில்லை. ஜாகிர் கானை(5) போல்டாக்கிய ராம்பால், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முனாப்(1) வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராம்பால் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முதலில் "ஸ்பின்':
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய கேப்டன் தோனி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். முதல் ஓவரை வீச தமிழக "ஸ்பின்னர்' அஷ்வினை அழைத்தார். இதில், ஒரு ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். எட்வர்ட்ஸ் 17 ரன்களுக்கு "ரிவியு' முறையில் அஷ்வின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ(22) தாக்குப்பிடிக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவன் ஸ்மித்(81), ஜாகிர் பந்தில் போல்டாக, சிக்கல் ஆரம்பமானது.
விக்கெட் மடமட:

இதற்கு பின் வந்தவர்கள் இந்திய பந்துவீச்சில் திணறினர். "அதிரடி' போலார்டு(1), ஹர்பஜன் வலையில் விழுந்தார். யுவராஜ் பந்தில் டேவன் தாமஸ்(2) நடையை கட்டினார். சமி(2) ரன் அவுட்டானார். "டெயிலெண்டர்கள்' ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 188 ரன்களுக்கு அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
"ஆல்-ரவுண்டராக' அசத்திய யுவராஜ் மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
"ரன் அவுட்' தராத அம்பயர்
நேற்று 4வது ஓவரில் விராத் கோஹ்லியின் துல்லிய "த்ரோவில்' எட்வர்ட்ஸ் ரன் அவுட்டானார். இதையடுத்து கோஹ்லி, முனாப் படேல் "அப்பீல்' செய்தனர். ஆனால், அம்பயர் சைமன் டாபெல் அவுட் தர மறுத்தார். சந்தேகம் தொடர்பாக "டிவி' அம்பயரிடமும் கேட்க தவறினார். "ரீப்ளே' பார்த்த போது, "பெயில்ஸ்' பறந்தது தெளிவாக தெரிந்தது. அனுபவ அம்பயரான டாபெல் தவறு செய்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
நடந்தார் சச்சின்
நேற்று தனது 450வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் ரவி ராம்பால். இவர் வீசிய பந்து, சச்சின் பேட்டின் கீழ் பிடியில் பட்டு உரசிச் சென்றது. பந்தை பிடித்த கீப்பர் டேவன் தாமஸ் "அவுட்' கேட்டார். அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் மறுத்தார். இந்த நேரத்தில் மனச்சாட்சிப்படி செயல்பட்ட சச்சின்(2), அம்பயர் முடிவுக்காக காத்திருக்காமல் பெவிலியன் நோக்கி விரைவாக நடந்தார். இது, அவரது நேர்மையை உணர்த்திய போதும், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.
50 ஓவர் தெரியுமா?
உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து (49.5 ஓவர்கள்), தென் ஆப்ரிக்கா (48.4 ஓவர்கள்), வெஸ்ட் இண்டீஸ் (49.1 ஓவர்கள்) அணிகளுக்கு எதிராக விரைவில் "ஆல்-அவுட்' ஆனது. ஒருவேளை இந்திய அணியினருக்கு 50 ஓவர் போட்டி என்பது மறந்து போச்சா?
கடைசி கட்ட சொதப்பல்

இம்முறை உலக கோப்பை தொடரில், இந்திய பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் சொதப்பலாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக "பேட்டிங் பவர்பிளே' ஓவரில், விக்கெட்டுகளை "மடமட' என பறிகொடுக்கின்றனர். வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து (33 ரன்களுக்கு 5 விக்கெட்), தென் ஆப்ரிக்கா (29 ரன்களுக்கு 9 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (50 ரன்களுக்கு 7 விக்கெட்) அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் எதிரணி பவுலர்களுக்கு விக்கெட்டுகளை வாரி வழங்கினர்.
சங்ககரா முதலிடம்
பத்தாவது உலக கோப்பை தொடரில், லீக் சுற்று முடிந்த நிலையில் இலங்கை கேப்டன் சங்ககரா, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5' பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சங்ககரா (இலங்கை) 6 363 1/2
டிராட் (இங்கிலாந்து) 6 336 0/4
ஸ்டிராஸ் (இங்கிலாந்து) 6 329 1/1
சேவக் (இந்தியா) 5 327 1/1
சச்சின் (இந்தியா) 6 326 2/0

"சுழல் மன்னன்' அப்ரிதி
லீக் சுற்று முடிந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். சுழலில் அசத்திய இவர், 6 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5' பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
அப்ரிதி (பாக்.,) 6 17
ஜாகிர் (இந்தியா) 6 15
ராபின் பீட்டர்சன் (தெ.ஆ.,) 6 14
சவுத்தி (நியூசி.,) 6 14
ரோச் (வெ.இ.,) 5 13
இந்தியா "370'
லீக் சுற்று முடிந்த நிலையில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.
இவ்வரிசையில் "டாப்-5' அணிகள்:
அணி ஸ்கோர் எதிரணி
இந்தியா 370/4 வங்கதேசம்
நியூசி., 358/6 கனடா
தெ.ஆ., 351/5 நெதர்லாந்து
இந்தியா 338 இங்கிலாந்து

இங்கிலாந்து 338/8 இந்தியா
ஸ்கோர் போர்டு
இந்தியா
காம்பிர்(கே)ரசல்(ப)ராம்பால் 22(26)
சச்சின்(கே)தாமஸ்(ப)ராம்பால் 2(4)
கோஹ்லி(ப)ராம்பால் 59(76)
யுவராஜ்(கே)+(ப)போலார்டு 113(123)
தோனி(ஸ்டம்டு)தாமஸ்(ப)பிஷூ 22(30)
ரெய்னா(கே)ராம்பால்(ப)சமி 4(8)
யூசுப்(ப)ராம்பால் 11(10)
ஹர்பஜன்(கே)போலார்டு(ப)ரசல் 3(6)
அஷ்வின்-அவுட் இல்லை- 10(7)
ஜாகிர்(ப)ராம்பால் 5(3)
முனாப்(ப)ரசல் 1(2)
உதிரிகள் 16
மொத்தம் (49.1 ஓவரில், "ஆல்-அவுட்') 268
விக்கெட் வீழ்ச்சி: 1--8(சச்சின்), 2-51(காம்பிர்), 3--173(கோஹ்லி), 4-218(தோனி), 5-232(ரெய்னா), 6-240(யுவராஜ்), 7-251(யூசுப் பதான்), 8-259(ஹர்பஜன்), 9-267(ஜாகிர்), 10-268(முனாப் படேல்).

பந்துவீச்சு: ராம்பால் 10-0-51-5, பென் 4-0-32-0, ரசல் 9.1-1-46-2, சமி 6-0-35-1, பிஷூ 10-0-48-1, போலார்டு 10-0-49-1.
வெஸ்ட்இண்டீஸ்
ஸ்மித்(ப)ஜாகிர் 81(97)
எட்வர்ட்ஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)அஷ்வின் 17(17)
பிராவோ(கே)ஹர்பஜன்(ப)ரெய்னா 22(29)
சர்வான்(கே)அஷ்வின்(ப)ஜாகிர் 39(68)
போலார்டு(கே)யூசுப்(ப)ஹர்பஜன் 1(3)
தாமஸ்(ஸ்டம்டு)தோனி(ப)யுவராஜ் 2(8)
சமி-ரன்அவுட்-(ரெய்னா/படேல்) 2(4)
ரசல்(கே)யூசுப்(ப)யுவராஜ் 0(5)
பென்(கே)முனாப்(ப)ஜாகிர் 3(12)
பிஷூ-அவுட் இல்லை- 6(11)
ராம்பால்(ப)அஷ்வின் 1(4)
உதிரிகள் 14
மொத்தம் (43 ஓவரில் ஆல் அவுட்) 188
விக்கெட் வீழ்ச்சி: 1-34(எட்வர்ட்ஸ்), 2-91(பிராவோ), 3-154(ஸ்மித்), 4-157(போலார்டு), 5-160(தாமஸ்), 6-162(சமி), 7-165(ரசல்), 8-179(பென்), 9-182(சர்வான்), 10-188(ராம்பால்).
பந்துவீச்சு: அஷ்வின் 10-0-41-2, ஜாகிர் கான் 6-0-26-3, ஹர்பஜன் 9-1-35-1, யூசுப் பதான் 7-0-28-0, ரெய்னா 2-0-12-1, யுவராஜ் 4-0-18-2, முனா

* மேட்ச் ஃபிக்சிங்

முடிந்தது ஆதிக்கம்!

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம் அதே உத்வேகத்துடன் தென்னாப்பிரிக்காவைச் சந்தித்தது. ஆனால், இந்த முறை தென்னாப்பிரிக்கா எந்தத் தவறையும் செய்யவில்லை. வங்கதேச அணி கடைசியில் காலிறுதிப் போட்டி கனவு இப்படியாக முடிந்து போனது. எந்தெந்த அணிகள் எல்லாம் காலிறுதியில் மோதும் என்று முதலில் கணிக்கப்பட்டதோ அதே அணிகள்தான் இப்போதும் மோதப் போகின்றன. பி பிரிவில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாக ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இனி வரிசை மாற்றங்கள் வேண்டுமானால் நடக்கலாமே ஒழிய எந்த அணியும் வெளியேறும் வாய்ப்பில்லை. கடந்த 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியைச் சாய்த்த பெருமையை பாகிஸ்தான் அணி தட்டிச் சென்றுவிட்டது. அதுவும் வெறும் 176 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டி வெற்றிப் பயணத்தை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால், உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், எந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என்பதில் மேலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கம்போலவே இந்தப் போட்டியிலும் கேப்டன் பான்டிங் மோசமாக ஆடினார். இன்றைய போட்டியில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் சென்னையில் ஆடுகின்றன. பி பிரிவில் காலிறுதிப் பட்டியலில் இருந்து வங்கதேசம் வெளியேறிவிட்டதால், இந்தப் போட்டி வெறும் சம்பிரதாயமாகவே ஆடப்படும். எனினும் வெற்றிபெறும் அணி இரண்டாம் இடத்தைப் பெறும் என்பதால், அதற்கான முனைப்பில் இரு அணிகளும் ஆடக்கூடும். மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்றால், 4-வது இடத்துக்குச் செல்லும். இந்தியாவைப் பொறுத்தவரை, அஸ்வினுக்கும் சுரேஷ் ரைனாவுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றே தெரிகிறது. போதுமான அளவுக்கு பியூஸ் சாவ்லாவுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டும் அவர் சரியாக ஆடாததால், இந்த முறை அவர் வெளியே வைக்கப்படக்கூடும்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோவில்

மூலவர் : வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
அம்மன்/தாயார் : பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
  தல விருட்சம் : புன்னை மரம்
  தீர்த்தம் :  ஜடாயு தீர்த்தம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  பூதப்புரி
  ஊர் : திருப்புள்ளம்பூதங்குடி
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் 
குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் 
நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட 
பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே.

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
 
  பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிகிறார்.
 
இத்தல பெருமாளை ராமன், ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

தலபெருமை:
ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் "திருப்புள்ள பூதங்குடி' ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, "அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே' என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் "வல்வில் ராமன்' என அழைக்கப்படுகிறார்

தல வரலாறு:

சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ""ராமா, ராமா'' என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிகிறார்.

திருவிழா:
 
  வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:
 
  காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
 
 ஆன்மீகச் சிந்தனை மலர் :

ஆன்ம விசாரணை - ரமணர் 

தியானிப்பதற்கு தனக்கு அன்னியமான ஓர் புறப்பொருள் அவசியமாயிருக்கிறது. ஆன்ம விசாரணையிலோ தானும் தான் அல்லாததுமான (அறிவும் அறிபடுபொருளுமான) ஒருமை நிலையைத் தவிர வேறு புறப்பொருள் கிடையாது. தியானத்திற்கும் ஆன்ம விசாரணைக்கும் வித்தியாசம் இதுவே.

ஆன்ம விசாரம் ஒன்றைத் தவிர மற்ற எவ்வித சாதனத்திலும் சாதனத்தை நடத்தும் பொருட்டு மனம் என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும். மனமின்றி அந்த சாதனையை நடத்துவதெப்படி? ஒருவர் சாதனத்தில் ஈடுபடும் போது அகந்தை பற்பல சூட்சுமமான உருவம் கொள்ளும். ஆனால் அது மட்டும் அழிவதில்லை. ஆத்ம விசாரத்தைத் தவிர மற்ற சாதனங்களால் அகந்தையை அழிக்க முயல்வது, திருடனே திருடனாகிய தன்னைப் பிடிக்கப் போலீஸ்காரன் ஆவது போலத்தான்! ஆன்ம விசாரத்தினால் மட்டுமே அகந்தையோ மனமோ உண்மையில் இல்லை, என்னும் சத்தியத்தை வெளிப்படுத்திக் கைவல்யமான ஆன்மாவின் சுத்த நிர்விசேஷ ஸ்திதியை உணரச் செய்ய முடியும்.

வினாடி வினா :

வினா - திராவிட மொழிகள் எனப்படுவன யாவை ?

விடை - தமிழ்,தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்.

இதையும் படிங்க :

உரத்த சிந்தனை : தேவை தெளிந்த தீர்ப்பு : ஆர்.ராஜேஸ்வரி சிவா - சமூக ஆர்வலர்

தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தங்களும், அரசியல் கட்சிகளின் கோமாளி கூத்துக்களும் துவங்கிவிட்டன. பேரங்களுக்கும், அதையொட்டிய நாடகங்களுக்கும் குறையொன்றுமில்லை.
பேரம் படிவதற்கு முன், தன்மான சிங்கங்களாக கர்ஜித்தல்; பேரம் படிந்து உடன்பாடு ஆனவுடன், பூனையாக பதுங்குதல்; திடீர் திடீரென முளைக்கும் ஜாதிக் கட்சிகள்; அந்தக் கட்சிகளுடனும் பேரம் நடத்தி, தொகுதி வழங்குதல் என, சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறுகின்றன. ஒரு சில கட்சிகள் எந்தக் கூட்டணியில் உள்ளனர் என்பதில், அக்கட்சியின் பேச்சாளர்களுக்கே, சந்தேகம் வந்து விடுகிறது.கூட்டணி கட்சியினரையே பழக்க தோஷத்தில், மேடையில் சாட ஆரம்பித்துவிடுகின்றனர். பாவம்... அவர்கள் தான் என்ன செய்வர்... தேர்தல் தோறும் கூட்டணி மாறிக் கொண்டே இருந்தாலும், "நாக்கு' ஒரே நாக்கு தானே! தேர்தல் முடிவதற்குள், இன்னும் பல சுவாரஸ்யமான நாடகங்கள் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.விரல்விட்டு எண்ணக் கூடிய அரசியல் தலைவர்கள், கோடிக்கணக்கான மக்களை முட்டாள்களாக நினைத்து, அவர்களுடைய, "வியாபாரத்தை' சிறப்பாக நடத்துகின்றனர்.

மக்களாகிய நாம், இந்த கபட நாடகங்களையும், பேரங்களையும் மவுன சாட்சிகளாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

"வியாபாரமா?' என புருவத்தை உயர்த்துபவர்கள், கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கவும்...தி.மு.க.,வில், 15 ஆயிரம் பேர், அ.தி.மு.க.,வில், 12 ஆயிரம் பேர், தே.மு.தி.க., வில், 7,500 பேர் என, மூன்று கட்சிகளில் மட்டும், 34 ஆயிரத்து 500 பேர், டிக்கட் கேட்டு மனு செய்துள்ளனர். இது தவிர, காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில், "சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி. ஒவ்வொருவரும் சீட்டுக்கும், 5,000, 10,000 ரூபாய் என, கட்சி தலைமைக்கு பணம் கட்டி உள்ளனர்; ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் இதன் மூலமே பல கோடிகள் வசூல் ஆகி இருக்கும்!இத்தனை பேர் டிக்கட் கேட்டாலும், பங்கிட்டு கொள்ளப் போவது, 234 தொகுதிகளைத் தான். நேர்காணலை சந்தித்து விட்ட கரை வேட்டிகள், "நமக்கு வேண்டிய கட்சிக்காரரு; 2 சி வரைக்கும் செலவு பண்ண தயாரா இருக்காரு. சரியான ரூட் இருந்தா சொல்லுங்க...' என, "சீட்' பிடிக்க தோதான ஆள் பிடிக்கும் வேலையில், தீவிரமாக இறங்குகின்றனர்.

ஆக, "2 சி' என்றால் என்ன என்று அறியாத அப்பாவி, நேர்மையாளர்களும் உள்ளனர். 2 சி என்றால் இரண்டு கோடி. அனைத்து கட்சிகளும் நேர்காணலில் தவறாமல் கேட்கும் கேள்வி, தேர்தல் பணிக்கு செலவு செய்ய தயாராகவுள்ள தொகையின் மதிப்பு என்ன?

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு கட்சி, ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனில், அவர் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவராக இருக்க வேண்டும்; பல போராட்டங்களை சந்தித்தவராக இருக்க வேண்டும்; மக்களிடையே மதிப்பும், மரியாதையும் உள்ளவராக இருக்க வேண்டும்; வம்பு, வழக்குகள் இல்லாதவராக இருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட தொகுதி மக்களுக்கு, நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும்.ஆனால், இன்றோ, "டப்பு' மட்டும் இருந்தால் போதும். நேற்று வரை கட்சி உறுப்பினராக கூட இல்லாத ஒருவரை, தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை, பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி, அவரும் வெற்றி வாகை சூடி விடுகிறார். 2 சி, 3 சி என, பணத்தை வாரியிறைத்து, சட்டசபை உறுப்பினராக என்ன காரணம்? மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற அக்கறையிலா?

"டிவி' ஊடகங்களுக்கு அடிமைப்பட்டு மக்கள், நாட்டில் என்ன கொள்ளை போனாலும் கவலைப்படாமல், நம் வீட்டில் கொள்ளைப் போகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்பட்டுவிட்டனர்.இந்த மனப்பாங்கிலிருந்து மக்கள் வெளி வர வேண்டும். சட்டசபை தேர்தல் என்பது தேர்திருவிழாப் போல, ஒரு நாள் கொண்டாடும் வேடிக்கை விழா அல்ல.நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர், தொகுதி பிரச்னைகளை தீர்த்து வைக்க பாடுபடுபவராக, சட்டசபையிலும், எடுத்துரைக்க தயங்காதவராக, மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக, மக்கள் தொண்டில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால், உங்கள் வீட்டு பெண்ணிற்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க அலசி ஆராய்வது போல், சிரத்தையுடன் சிந்தித்து, வேட்பாளரை தேர்வு செய்து, ஓட்டளிக்க வேண்டும்.மக்களை மடையர்களாக நினைத்து நாடகமாடும் தலைவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட மக்களிடம் இருக்கும் ஒரே மார்க்கம், ஓட்டுச் சீட்டு தான். விலை மதிப்பில்லாத ஓட்டுகளை, விளையாட்டு போல் வீணடிக்காமல், மவுன சாட்சிகளின் சக்தியை, அரசியல் வியாபாரிகளுக்கு உணர்த்துதல் நம் கடமை.நாட்டின் எதிர்காலம் மட்டுமல்லாமல், நம் சந்ததிகளின் எதிர் காலமும், நம் ஓட்டுச்சீட்டில் தான் உள்ளது என்பதை உணர்ந்து, சிந்தித்து, சீர்தூக்கி பார்த்து, தவறாமல் எல்லாரும் ஓட்டளிக்க வேண்டும்.

- ஆர்.ராஜேஸ்வரி சிவா - சமூக ஆர்வலர்,
சிந்தனையாளர்வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, சமாச்சார், தின மலர்.No comments:

Post a Comment