Wednesday, March 16, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 16 - 2011.


முக்கியச் செய்தி :ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!

டோக்யோ: ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் அது வெடித்தது.

இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.

முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.

இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.

டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன

உலகச் செய்தி மலர் :

* ஆஸ்ட்ரேலியாவில் கிறிஸ்மஸ்தீவு அகதிகள் ஆர்ப்பாட்டம்!  

கிறிஸ்மஸ் தீவில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அதனை அடக்குவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே அங்கு கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டதாக, ஆஸ்ட்ரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பு முகாமை உடைத்து வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த குழப்பநிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கிறிஸ்மஸ் தீவில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர் என்பதை தாம் புரிந்து கொண்டுள்ளதாக அமைச்சர் பிரவுன் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள நெருக்கடியான நிலையால், வட ஆஸ்ட்ரேலியாவின் டார்வின் நகரில் மேலும் ஒரு முகாமை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* கடாபி பதவி விலக ஒபாமா வலியுறுத்தல்  

மக்களின் ஆதரவை இழந்து விட்டதால் லிபியா அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

கடாபி பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவத்தை ஏவி விட்டுள்ளார்ர் கடாபி.

தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியிருந்த நிலையில், தற்போது கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த பல பகுதிகளை இராணுவம் கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தை கருத்தில்கொண்டு கடாபி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

* அணு உலைகள்: தவிர்க்க முடியாத ஆபத்து?  ஜப்பானை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த டாய்ச்சா அணு மின் நிலைத்தின் உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து, அதிலிருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மனித உடலைப் பாதிக்கும் அபாய அளவை எட்டி வருகிறது என்கிற உறுதியான செய்தி, ஜப்பானை மட்டுமின்றி, உலகத்தை அச்சத்தில் தள்ளியுள்ளது.

ஃபுகுஷிமா மாகாணத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணு மின் நிலையத்தில் 4 அணு உலைகள் இயங்கிவந்தன. பூகம்பம் ஏற்பட்டவுடம் அவைகள் செயலிழந்தன. பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலைத் தாக்குதல் டாய்ச்சா அணு உலைகளை குளிரூட்டும் இயந்திரங்களை பாதிக்க, அவைகளும் செயலிழந்தன. அதன் விளைவாக அணு உலைகளின் வெப்ப நிலை அதிகரித்தது, கடந்த சனிக்கிழமை முதல் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து வருகின்றன. முதலில் ஒன்றாவது அணு உலையும், திங்கட்கிழமை மூன்றாவது அணு உலையும், இன்று காலை 2வது அணு உலையும் வெடித்துள்ளன. கடைசியாகக் கிடைத்த செய்தி 4வது அணு உலையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே. இவை யாவும் உறுதியான செய்திகள் என்பதை மிக அதிக உயரத்தில் இருந்த எடுக்கப்பட்ட புகைப்படங்கள் துல்லியமாக காட்டியுள்ளன.

இந்த நிலையில்தான், அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு (Radiation) ‘மனித உடலை பாதிக்கும்’ அளவிற்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அமைச்சரவைச் செயலரை சொல்ல வைத்துள்ளது. டாய்ச்சா அணு உலைகள் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதெனவும், அணுக் கதிர் வீச்சு அபாய அளவை எட்டும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு பிரதமர் நவோட்டா கேன் கூறியுள்ளார்.

இதனை எப்படி கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்த செய்தியும் இல்லை. அணு உலைகள் இருந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டரை இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதைத் தவிர, வேறு எந்த தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக செய்திகள் இல்லாத நிலையில், அணுக் கதிர் வீச்சின் தாக்கம், டாய்ச்சா அணு உலைகளில் இருந்து 250 கி.மீ. தூரத்திலுள்ள தலைநகர் டோக்கியோவிலும் பரவியுள்ளது இன்று காலை உறுதி செய்யப்பட்டுள்ளது. அணு உலைகள் இருக்கும் பகுதியில் ஒரு மணி நேரத்தில் அணுக் கதிர் வீச்சின் தாக்குதல் 8 மடங்கு அதிகரித்துள்ளதென இன்று நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது

கேள்விக்குறியான பாதுகாப்பு

ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து உலக அளவில் அணு மின் சக்தியை உற்பத்தி செய்யும் உலைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகில் இயங்கிவரும் அணு மின் உலைகளில் மிகப் பாதுகாப்பான அணு உலைகளாக கருதப்படுபவை டாய்ச்சா அணு மின் நிலையத்தில் இயங்கி வந்தவையாகும். ஆனால் இயற்கையின் கடும் சீற்றத்திற்கு முன்னர் பாதுகாப்பான அணு உலைகள் என்று ஏதும் இல்லை என்பதையே ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலையின் தாக்குதலினாலும் நிலைகுலைந்த டாய்ச்சா அணு உலைகள் நமக்கு ஆழமாக போதிக்கின்றன.

* ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்தில் ருத்திரகுமாரன்

கொழும்பு, மார்ச் 15- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்துக்கு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் நேற்று வந்து, ஜப்பான் மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்கைப் பேரழிவில் சிக்கியுள்ள ஜப்பானுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அவர் ஆறுதலை தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் ஜப்பான் செயலக அதிகாரியிடம் வழங்கினார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இலங்கை பாதுகாப்பு மாநாடு: அமெரிக்கா புறக்கணிப்பு?

கொழும்பு, மார்ச் 15- இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்" என்ற தலைப்பில் மே 31-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் கொழும்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 54 நாடுகளுக்கு இலங்கை அழைப்பு அனுப்பியது.

இந்நிலையில், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மறுத்துவரும் நிலையில், கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையின்படி ஜப்பானும் கொழும்பு மாநாட்டில் பங்கேற்காது என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் அதிகரிப்பு

கொழும்பு, மார்ச் 14: இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

 இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 1,08,057 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைகக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 1,39,994 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களை ஒப்பிடும்போது இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 36.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
 சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 17, 524 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை சென்றனர். இது இந்த ஆண்டு, 23,857 ஆக அதிகரித்துள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு சுற்றுலா வருபவர்கள் பிரிட்டன் மக்கள். கடந்த ஆண்டின் முதல் இரண்டுமாதங்களில் இலங்கை வந்த பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18, 928 ஆக இருந்தது. இந்த ஆண்டு இது 19, 132 ஆக அதிகரித்துள்ளது.

 சென்ற ஆண்டு 6.5 லட்சமாக இருந்த வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை இந்த ஆண்டு 7 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரசின் சுற்றுôலத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* இந்திய அணு உலைகள் பத்திரம்? அவசர ஆய்வுக்கு உத்தரவிட்ட பிரதமர்!

டெல்லி: உலகைக் குலுக்கிய பெரும் அணு விபத்தான செர்னோபிலுக்குக் காரணம், பூகம்பமோ சுனாமியோ அல்ல. ஊழியர்களின் கவனக்குறைவுதான். அந்த அணு உலையின் ஆபரேட்டர் செய்த தவறுதான் பல்லாயிரம் மக்களின் உயிரைக் குடித்தது. ஒரு மாகாணத்தையே மலடாக்கியது, ஜெர்மனி  , ஸ்வீடன் போன்ற தூர தேசங்களிலும் பாதிப்பை உண்டாக்கியது.

இன்று உலகின் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் வரும் என்று கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்னொரு பக்கம் இந்திய பணியாளர்களின் 'கடமை உணர்வு' உலகம் அறிந்தது. ஜப்பானின் அணு உலைகளுக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்து அணு உலைகளின் காதலர்களாக மாறிய நாடுகளெல்லாம் கதிகலங்கி நிற்கின்றன. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல அணு உலைகளை சத்தமின்றி மூடும் 'மூடு'க்கு வந்துள்ளன.

அணுசக்தி நிலையங்களை ஏராளமாகத் திறந்துள்ள இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இயற்கையாலோ, மனிதத் தவறுகளாலோ இந்திய அணு உலைகள் வெடிக்காத வகையில் பத்திரமாக உள்ளனவா என்று உறுதிப்படுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனை மக்களவையில் நேற்று அவரே தெரிவித்தார்.

நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளைத் தாங்கும் வகையில் நமது அணுஉலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யுமாறு அணுசக்தித்துறை, அதன் கீழ் இயங்கும் இந்திய அணுமின் நிறுவனம் (என்பிசிஐஎல்) ஆகியவை அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன என்று அவர் கூறினார். மனிதத் தவறுகளால் வெடிக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, என்பிசிஐஎல் திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இந்தியாவிலுள்ள அணு உலைகள் அனைத்தும் இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும், ஆய்வுக்குப் பிறகு தேவைப்படும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 20 அணுமின் உலைகளை என்பிசிஐஎல் இயக்கி வருகிறது. இன்னும் சில அணு உலைகள் திறக்கப்படவும் உள்ளன.

* காமன்வெல்த் ஊழல் விவகாரம்: கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை

டெல்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பாக அதன் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.

காமன்வெல்த் போட்டிகள் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி, கைது செய்துள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தான் சிபிஐ கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து கடந்த ஜனவரியில் கல்மாடியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது இன்று மீண்டும் விசாரித்தது.

* பெண் சிசுகலைப்பு எதிரொலி-2030ல் இந்தியாவில் பெண்களுக்குப் பஞ்சம் வரும்

வாஷிங்டன்: ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனப்பாங்கால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா  வின் பல பகுதிகளில் பெண்களை விட 20 சதவீதம் அதிக இளைஞர்கள் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

முன்பெல்லாம் பெண் குழந்தைகளை விரும்புவோர்தான் அதிகம் இருந்தனர். ஆனால் காலப் போக்கில் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டால் செலவு என்ற மோசமான எண்ணம் மக்களிடையே பரவ, பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்யும் அளவுக்கு மக்கள் சென்றனர்.

ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்துவிடுவதால் ஆண், பெண் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும் எனறு அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், டெல்லி, குஜராத் ஆகிய வட மாநிலங்களில் ஆண், பெண் எண்ணிக்கை சமமாக இல்லை. ஆனால் கேரளாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை சமச்சீராக உள்ளது.

இது சீனா மற்றும் தென் கொரியாவுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

100 பெண்களுக்கு 105 ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நாடுகளில் ஆண், பெண் எண்ணிக்கை சமமாக இருக்கும். தற்போது தான் கருவிலேயே ஆணா, பெண்ணா என்று பார்த்து பெண்ணாக இருந்தால் கலைத்துவிடுகிறார்கள். இதனால் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை பெண் குழந்தைகளைவிட அதிகரித்து வருகிறது.

ஒரு தம்பதிக்கு முதல் அல்லது இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே அடுத்து ஆண் தான் வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றவர்களின் இந்த செயலால் அனைத்து ஆண்களுக்கும் பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டும்.

இந்த பிரச்சனையைத் தீர்க்க இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பெண் குழந்தையை கருவில் அழிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

* ஆந்திரா: ஜெகன் மோகன் ரெட்டி நிறுவனத்துக்கு வருமான வரித்துறை தாக்கீது

ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை இன்று தாக்கீது அனுப்பியுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ஜகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெலுங்கு மொழியில் சாக்ஷி நாளிதழ், சாக்ஷி தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜகதி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வருமான கணக்கில் குளறுபடி உள்ளதால் அதுகுறித்து விளக்கம் தருமாறு அந்நிறுவனத்துக்கு வருமான வரித்துறையின் பரிசீலனை பிரிவு இன்று தாக்கீது அனுப்பியது.

ரூ. 500 கோடி வருமானம் வரலாம் என்ற அடிப்படையி்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 84 கோடி வரியை வருமான வரித்துறைக்கு ஜகதி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் முன்கூட்டியே செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வருமான கணிப்பு தொகைக்கும், ஜகதி பப்ளிகேஷன்ஸ் தாக்கல் செய்த வருமான கணக்குகளுக்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதால் அது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வருமான வரித்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.

* 'மத்திய அரசில் தனிமைப்படுத்தப்பட்ட மன்மோகன் சிங்'

பாகிஸ்தான் விடயத்தில் மத்திய அரசில் பிரதமர் மன்மோகன் சிங் தனிமைப்படுத்தப்பட்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றிய டிமோதி ரோமர், அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் மேற்கூறிய தகவலை தெரிவித்துள்ளார்.

அப்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனனை சந்தித்துப் பேசியுள்ளார் ரோமர்.

அப்போது பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கை விடயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கருத்துடன் தமக்கு மாறுபாடான கருத்து இருப்பதாக நாராயணன் கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ஆனா தமக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும், இது விடயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவரது அரசாங்கத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் நாராயணன் கூறியதாக ரோமர் தாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது

* 2ஜி ஊழல் பணம் ஹவாலா மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது: அமலாக்க இயக்ககம்  

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெற்ற ஊழல் பணத்தை ஹவாலா மூலம் அயல் நாடுகளுக்கு கடத்திச் சென்றுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க இயக்ககம் தெரிவித்துள்ளது.

2 ஜி அலைக்கற்றையை சந்தையில் அதற்குள்ள மதிப்பைக் காட்டிலும் குறைந்த விலையை நிர்ணயித்து ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.75 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொருளாதார குற்றங்களை புலனாய்வு செய்யும் மத்திய அரசின் சட்ட அமலாக்க இயக்ககத்தின் சார்பில் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 2 ஜி அலைக்கற்றை மிகக் குறைந்த மதிப்பீட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக அளிக்கப்பட்ட ஊழல் பணம் ஹவாலா மூலம் அயல் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அமலாக்க இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஹவாலா பரிவர்த்தனை பெரும்பாலும் மொரிசியஸ் வழியாகவே நடந்துள்ளது என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக 31 நிறுவனங்களை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்ககம் கூறியுள்ளது

* திஹார் சிறையில் கைதிகளுக்கு இசைப் பயிற்சிக் கூடம்

புதுதில்லி, மார்ச் 15: திஹார் சிறையில் கைதிகளின் மனநலனையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்துவதற்காக இசைப் பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
 மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 திஹார் சிறையில் கைதிகளின் நலனுக்காக ஏற்கெனவே பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கணினி அறை, விளையாட்டு மைதானம், பெண் கைதிகளுக்கான குழந்தைகள் காப்பகம் உள்ளிட்டவை அங்கு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அங்கு இசைப் பயிற்சிக் கூடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
 ஏற்கெனவே இசைப் பயிற்சிப் பெற்றவர்கள் தங்கள் கவலையை மறப்பதற்கும், திறமையை வெளிப்படுத்துவதற்குமான வடிகாலாகவும், இசையைக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கான பயிற்சிக் கூடமாகவும் இது விளங்குகிறது என்றும் காமத் தெரிவித்தார். இதற்கு கைதிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதுடன் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான சிறை நடைமுறைகளை அமல்படுத்தமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. சிறை நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், கைதிகளின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கவும் இதுபோன்ற நடைமுறைகள் பயன்படும் என்றும் காமத் கூறினார்.

* ஹெட்லியின் பெண் நண்பர்களிடம் விசாரணை

சிகாகோ, மார்ச் 15: மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அமரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியின் பெண் நண்பர்களிடம் அவரது கூட்டாளியான ராணாவின் வழக்கறிஞர் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான ஹெட்லி மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் முக்கிய தொடர்பு உடையவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர் சென்ற ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அப்ரூவராக மாறினார். ராணாவுக்கு எதிராக சாட்சியமும் அளித்தார். ராணாவும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ஹெட்லியிடம் அடுத்த மாதம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அவரது பெண் நண்பர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக ராணாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அவர்களது சாட்சியமும் முக்கியம். இந்த வழக்குக்கு தேவை என்று கருதும் அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில்தான் ஹெட்லியின் பெண் நண்பர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்று அவர்கள் மேலும் கூறினர்.

* ஈஎஸ்பிஎன் இணையதளத்தில் இணைந்தார் கார் பந்தய வீரர் சந்தோக்

புதுதில்லி, மார்ச் 15- பிரபல கார் பந்தய வீரர் கருண் சந்தோக், ஈஎஸ்பிஎன்-எப்1 என்னும் விளையாட்டுக்கான இணையதளத்தில் கட்டுரையாளராக சேர்ந்துள்ளார்.
இத்தகவல், ஈஎஸ்பிஎன்-எப்1 இணையதளம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஈஎஸ்பிஎன் குழுவில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு "ஃபார்முலா ஒன்" கார் பந்தயம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். உலகெங்கும் உள்ள கார் பந்தய ரசிகர்களுக்கு உரிய தளமாக ஈஎஸ்பிஎன்-எப்1 இருக்கும்." என்று சந்தோக் கூறியுள்ளார்.

"ஃபார்முலா ஒன்" கார் பந்தயத்தில் நரேன் கார்த்திகேயனுக்குப் பிறகு கலந்துகொண்ட இரண்டாவது இந்திய வீரர் சந்தோக் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலச் செய்தி மலர் :

* விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.

இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

* தேர்தலில் பண பலமே பிரச்சனை: குரே‌ஷி  

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பண பலமே பிரச்சனை'' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், தமிழகத்தில் ஒரு கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் ஐந்து கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பண பலம்தான் பிரச்சனையாக உள்ளது எ‌ன்றா‌ர்.

ஆனால், மேற்கு வங்கம் ஆயுதங்களை கொண்டு வன்முறை நடக்கும் மாநிலமாக இருக்கிறது எ‌ன்று‌ம் எனவே, அங்குஅமைதியாக தேர்தலை நடத்துவது அவசியமாகும் எ‌ன்று‌‌ம் குரே‌ஷி கூ‌றினா‌ர்.

அதுபோன்ற வன்முறைச் சூழல் தமிழகத்தில் இல்லை எ‌ன்று கூ‌றிய குரே‌ஷி, எனவே, இங்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது எ‌ன்றா‌ர்.

வாக்குச்சாவடி சீட்டுகளை அரசியல் கட்சிகளும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இந்த சீட்டு அளிக்கும் நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்படும் எ‌ன்று‌ம் குரே‌ஷி தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

''பிரசார நேரத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. பிரசார நேரத்தை அதிகரிக்க முடியாது என்பது தேர்தல்ஆணையத்தின் முடிவல்ல'' எ‌ன்று குரே‌ஷி கூ‌றினா‌ர்.

* ஹஜ் புனிதப் பயணம்: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை, மார்ச் 15- ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல     பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.

ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).

இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.  விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்

மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரதமருக்கு முருங்கைக் கீரை-பப்பாளி!

சென்னை, மார்ச் 15: வைட்டமின் ஏ சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பப்பாளி, தண்டுக் கீரை, கேரட், தினை அரிசி ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ""பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பை''ச் சேர்ந்தவர்கள் அளிக்க உள்ளனர்.

 பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் சுல்தான் இஸ்மாயில், டாக்டர் ஜி.சிவராமன், அனந்து, செல்வகணபதி ஆகியோர் உலக நுகர்வோர் உரிமை தினத்தை (மார்ச் 15) முன்னிட்டு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 ""தில்லியில் சர்வதேச வேளாண் கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் தொடங்கி வைத்துப் பேசும்போது, மரபணு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வைட்டமின் ஏ சத்து செறிவூட்டப்பட்ட கோல்டன் அரிசி தேவை என்றார்.

 இந்தியாவுக்கு இத்தகைய அரிசி தேவை இல்லை. இந்திய மருத்துவ ஆய்வியல் நிறுவனத்தின் தினசரி உணவுப் பரிந்துரைப் பட்டியலின்படி, "கோல்டன் அரிசியிலிருந்து' வைட்டமின் ஏ சத்தைப்பெற அதை 9 கிலோ அளவுக்குச் சாப்பிட்டாக வேண்டும்.

 முருங்கைக் கீரை-கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் பீட்டா கரோட்டின் சத்து அதிகம். எனவே உடல் நலத்துக்கு பாதுகாப்பானதா என்று அறியப்படாத "கோல்டன் அரிசி' போன்ற மரபணுப் பயிர்களை அவசர அவசரமாக சந்தைப்படுத்த முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது.

 உலகெங்கும் நடந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்தல், நோய் எதிர்ப்பாற்றலை வளர விடாது செய்தல் போன்ற கேள்விகளை "கோல்டன் அரிசி' எழுப்பியுள்ள சூழலில், நமது அடிப்படை வாழ்வாதாரமான அரிசியில் இது போன்ற உத்திகளுக்கு இடம் அளிப்பது தவறு.
 இதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள எங்களது கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் பிரதமரிடம் மேலே குறிப்பிட்ட வைட்டமின் ஏ சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பப்பாளி உள்ளிட்டவற்றைப் பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளோம்.

 இதுபோன்ற பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை எதிர்க்கும் வகையில் "நான் சோதனை எலி அல்ல' என்று பொருள்படும் "ஐ ஆம் நோ லேப் ரேட்' இயக்கம் தமிழகத்தில் இந்த கூட்டமைப்பு மூலம் விரைவில் தொடங்கப்படும். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் 19-ம் தேதி சிறு தானியங்கள் மற்றும் இயற்கை உணவு விழிப்புணர்வு விழா நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பி.டி. கத்தரியைத் தமிழகத்திலும், பின் இந்தியாவிலும் நிறுத்தி வைக்க இந்தக் கூட்டமைப்பு போராடியது குறிப்பிடத்தக்கது' என்று அவர்கள் தெரிவித்தனர்.

* கூத்துமரபு விழா தொடக்கம்

காஞ்சிபுரம், மார்ச் 15: கூத்து மரபு குறித்து கருத்தரங்கம் மற்றும் தெருக்கூத்து - கட்டைக் கூத்து விழா சங்கீத நாடக அகாதெமி சார்பில் காஞ்சிபுரம் அருகே செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

 புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தில் கட்டைக் கூத்து சங்க கலைக் கூடத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, நாடக ஆசிரியர் முத்துசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

 தொடர்ந்து 6 தினங்கள் நடைபெறும் இவ் விழாவில் முதல் நாளன்று எலிமேடு வடிவேலு குழுவினரின் மதுரை வீரன் கூத்து நடைபெற்றது.

 ஆசிரியர் பி.ராஜகோபால் குழுவினரின் வில்வளைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 கிருஷ்ணன் தூது, இந்திரஜித், வன்னிய நாடகம், திரெüபதி துகில், குறவஞ்சி, அபிமன்யு சுந்தரி திருக்கல்யாணம், ஹிரண்யனும் பிரஹலாதனும், மின்னல் ஒளி சிவபூஜை, அர்ச்சுனன் குறவஞ்சி, காளமேக சூரசம்ஹாரம், கர்ண மோட்சம் ஆகிய தெருக்கூத்துக்கள் தொடர்ந்து 20-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

சிறப்பு விருந்தினராக சங்கீத நாடக அகாதமியின் செயலர் கிரண் பட்நாகர் பங்கேற்றார்.

 பி.ராஜகோபால், புரிசை கண்ணப்ப சம்பந்தன், டி.ரங்கசுவாமி, மு.ராமசாமி, பிரளயன், பிரசன்னா ராமசாமி ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர். கூத்து மரபு விழாக்களை வி.ஆர்.தேவிகா ஒருங்கிணைத்து வருகிறார்.

 தெருக் கூத்து கலைகளை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் இவ் விழா நடத்தப்பட்டு வருவதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


* நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீடு ஏற்பு

மதுரை, மார்ச் 15: மதுரையில் தமிழ் நாளிதழ் அலுவலகம் மீதான தாக்குதலில் 3 ஊழியர்கள்
 இறந்தது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ. தாமதமாக மேல்முறையீடு செய்ததை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை அனுமதித்து, மார்ச் 22-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

 இதுகுறித்த வழக்கு விவரம்: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு தொடர்பாக இப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும், முதல்வர் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோருக்கு தலா 2 சதவிகிதமும், மு.க.அழகிரிக்கு மதுரையில் மட்டும் 6 சதவிகிதம் பேர் ஆதரவும் உள்ளதாக 2007-ம் ஆண்டு மே மாதம் அந்த நாளிதழில் செய்தி வெளியானது.

 இதையடுத்து செய்தி வெளியிட்ட அந்த நாளிதழ் அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கினர். அன்றைய தாக்குதலில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மற்றும் போலீஸôர் இந்தச் சம்பவத்தின்போது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

 திமுக ஆதரவாளர்கள் என்று கருதப்படும் சிலர் மற்றும் டி.எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்ட 17 பேர் மீது சி.பி.ஐ. போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாட்சியங்கள் பிறழ் சாட்சிகளானதால் வழக்கில் குற்றம் சரிவர நிரூபணம் செய்யப்படவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களை மதுரை நீதிமன்றம் விடுவித்தது.
 இதையடுத்து 118 நாள்கள் தாமதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகக் கருதி விசாரிக்கப்பட்டது.

மேல்முறையீட்டுக்கான அனுமதியை மத்தியப் புலனாய்வு அலுவலகத்திலிருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் தாமதத்தை மன்னிக்குமாறும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களே பிறழ் சாட்சிகளாகிவிட்டனர். ஆனால், அவர்கள் புகாரில் தெரிவித்துள்ள விஷயங்களை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

 சம்பவம் நடந்தபோது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான படத்தொகுப்புகளை மத்திய தடயவியல் மையம் ஆய்வு செய்து, அவை அனைத்தும் உண்மை என சான்றளித்துள்ளது. ஆனால் அவர்களிடம் உள்ள இதற்கான கருவிகளின் நம்பகத்தன்மை குறித்து கீழமை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது ஆச்சரியமானது.
 சம்பவம் குறித்து பதிவான படத்தொகுப்பு மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் போதுமான அளவில் உள்ளன. எனவே, இந்த வழக்கின் தாமதித்த மேல்முறையீட்டை ஏற்று விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ.யின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

 மனுவை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஜி.எம்.அக்பர்அலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

 118 நாள்கள் தாமதித்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேல்முறையீட்டுக்கான அனுமதி பெறுவதில் சி.பி.ஐ. மத்திய அலுவலகத்திலிருந்து உரிய அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக சி.பி.ஐ. பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதை ஏற்கிறோம்.

 இந்த வழக்கை மார்ச் 22-ம் தேதி விசாரணைக்கான பட்டியலில் சேர்க்க நீதித்துறை பதிவாளருக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

* தொகுதி - ஓர் அறிமுகம்!

*  தொகுதி பெயர் : வேளச்சேரி

 *  வரிசை எண் : 26

  *  அறிமுகம் :

 தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 தொகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. மயிலாப்பூர் பேரவைத் தொகுதியில் இருந்த 151, 152-வது வார்டுகளும், தாம்பரம் பேரவைத் தொகுதியில் இருந்த 153, 154, 155 ஆகிய வார்டுகளையும் பிரித்து வேளச்சேரி தொகுதி உருவாக்கப்பட்டது. அடையாறு கிழக்கு, மேற்கு, திருவான்மியூர் கிழக்கு, மேற்கு, வேளச்சேரி ஆகிய பகுதிகள் இதன் எல்லையாகும்.
*  தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

சென்னை மாநகராட்சி வார்டு 151, வார்டு 152, வார்டு 153, வார்டு 154, வார்டு 155.

 * வாக்காளர்கள்
 ஆண்:  1,08,725
பெண்: 1,08,275
திருநங்கைகள்: 26
மொத்தம்: 2,17,026
 *  வாக்குச்சாவடிகள் மொத்தம் : 250
 *  தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
 மாவட்ட வருவாய் அலுவலர் (சுனாமி நிவாரணம், மறுவாழ்வு) கேப்ரியல் - 9444 446885.


டிஜிட்டல்மயமாகிறது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 80 ஆயிரம் ஆவணங்கள்

ஜெருசலேம்: உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐஸ்டினின் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன. நோபல் பரிசு பெற்றவரும், 20 -ம் நுற்றாண்டில் இணையற்ற விஞ்ஞானியாக திகழ்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) . இவரது பிறந்த நாள் மார்ச் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகம் இவரது ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பராமரிக்க முடிவு செய்துளள்து. தற்போது இவரது கண்டுபிடிப்பின் போது பயன்படுத்திய 80 ஆயிரம் ஆவணங்களை அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள ஒரு கல்வி மையம் பராமரித்து வருகிறது. மேலும் இயற்பியல் துறை இவரது கண்டுபிடிப்பு குறித்த ஆவணங்கள் கடந்த ம்82-ம் ஆண்டு ஹீப்ரூ பல்கலை.யின் தேசிய நூலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆவணங்களை ஐன்ஸ்டீன் இறப்பதற்கு முன்பு ஹீப்ரூ பல்கலை.க்கு உயிலாக எழுதி வைத்தார் என பல்கலை.யின் தலைவர் மென்ஹாஹிம்-பென்சென் தெரிவித்தார்.இப்பல்கலை.யின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இவரது கண்டுபிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட 80 ஆயிரம் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பராமரிக்க லண்டனைச் சேர்ந்த ஒருவர் ரூ. 5 லட்சம் டாலர்கள் நிதியாக தரமுன்வந்துள்ளார். இஸ்ரேலில் வருடந்தோறும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளை (மார்ச் 14-ம் தேதி) தேசிய அறிவியல் தினமாக கெண்டாடுகிறது. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 80 ஆவணங்கள் நவீன முறையில் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.

வர்த்தகச் செய்தி மலர் :

* ஒரு கோடி கார்: மாருதி சாதனை

புது தில்லி, மார்ச் 15: கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாருதி சுஸýகி நிறுவனம் ஒரு கோடி கார்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த ஆலையிலிருந்து வெளியான 'வேகன் ஆர் விஎக்எஸ்ஐ' கார் மூலம் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டது. இதன் மூலம் சர்வதேச அளவில் கோடிக் கணக்கில் கார்களைத் தயார் செய்துள்ள வெகு சில நிறுவனங்கள் பட்டியலில் மாருதி நிறுவனமும் சேர்ந்துள்ளது.

 சஞ்சய் காந்தியின் முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக ஜப்பானின் சுஸுகி நிறுவன கூட்டுடன் இந்த ஆலை தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஜப்பானின் சுஸýகி மோட்டார் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கியது. இந்த விழாவை வெகு விமரிசையாகமிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். ஆனால் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் அதைத் தொடர்ந்த சுனாமி பேரலை தாக்கம் ஆகியவை காரணமாக ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையான முறையில் இந்த விழா கொண்டாடப்பட்டதாக நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷின்úஸô நகானிஷி தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ், டொயோடா, வோக்ஸ்வாகன், ஹோண்டா, ரெனால்ட் ஆகிய நிறுவனங்களுடன் மாருதி சுஸýகி நிறுவனமும் ஒரு கோடி கார்களைத் தயாரித்த நிறுவனப் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸýகி மோட்டார் கார்ப்பரேஷனும் ஒரு கோடி கார்களைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 மாருதி சுஸýகி நிறுவனம் உற்பத்தியை அதிகரித்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 50 லட்சம் கார்கள் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் 1994-ம் ஆண்டு 10 லட்சம் கார்களைத் தயாரித்தது. 1997-ல் இது 20 லட்சம் இலக்கை எட்டியது. 2005-ல் இந்த எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்தது. இந்திய கார் சந்தையில் மாருதி நிறுவனம் 45 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு குர்காவ்ன், மானேசரில் உள்ள ஆலைகளில் ஆண்டுக்கு 12 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

* சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று கடும் சரிவைச் சந்தித்தது. முடிவில் 271.84 புள்ளிகள் சரிந்து 18,167.64 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 81.85 புள்ளிகள் சரிந்து 5,449.65 புள்ளிகளாக நிறைவடைந்தது.

பி.எஸ்.இ. ஆட்டோ, உலோகம், மின்சக்தித் துறை, ரியால்டி, ஐ.டி. துறைக் குறியீடுகள் சரிவி கண்டன.

பி.எஸ்.இ. கச்சா மற்றும் எரிவாயுத் துறைக் குறியீடு 0.32% அதிகரித்து 9,969.03ஆக நிறைவுற்றது. மற்றக் குறியீடுகள் அனைத்தும் சரிந்துள்ளன.

தேசியப்பங்குச் சந்தையின் கீழ் வரும் எம்.ஐ.டி.200 குறியீடு மட்டும் இன்று 1.02% அதிகரித்தது.

* ஜப்பான் பூகம்பம்: இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்பு  

அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்களின் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலையாலும் ஏற்பட்ட பாதிப்பினால் அந்நாட்டின் துறைமுகங்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாது, இறைச்சி, மீன், இறால் ஆகியன அப்படியே நின்றுவிட்டது.

ஆயினும் இந்த நிலை தற்காலிகமானதே என்றும், அந்நாட்டில் மீண்டும் சீரமைப்பு தொடங்கும் போது உலோகங்களில் இருந்து நிலக்கரி, மரம், இரப்பர், உணவு, இறைச்சி ஆகியவற்றின் ஏற்றுமதி பெருமளவிற்கு பெருகும் என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

பூகம்பத்தினால் ஜப்பானின் எஃகு உற்பத்தி 18 மில்லியன் டன்கள் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் 25 மில்லியன் டன் இரும்புத் தாதும், 10 மில்லியன் டன் உலைக் கரி ஏற்றுமதியும் தடைபட்டுள்ளதென ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

 சென்னை போட்டியில் ரெய்னா?

சென்னை: வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக சென்னையில் நடக்கும் உலக கோப்பை போட்டியில், யூசுப் பதானுக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா களமிறங்குவார் என்று தெரிகிறது.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் பல்வேறு போட்டிகளுக்கு இடையில் இடம் பெற்றவர் இளம் ரெய்னா (24). இதுவரை 111 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 3 சதம், 16 அரைசதம் அடித்துள்ளார். ஆனால் கடைசியாக பங்கேற்ற, 10 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட, 233 ரன்கள் தான் எடுத்துள்ளார்.

தவிர, "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தொடர்ந்து திணறி வருகிறார். இந்த நேரத்தில் விராத் கோஹ்லி, யூசுப் பதானின் வளர்ச்சி அணியில் இவரது இடத்தை கேள்விக் குறியாக்கியது. இருப்பினும், சென்னையில் நடந்த பயிற்சி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இருப்பினும், யூசுப் பதானுக்கு வாய்ப்பு சென்றது. இவரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்த நிலையில், இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 63 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சென்னையில் வரும் 20 ம் தேதி நடக்கும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில், யூசுப் பதானுக்குப் பதில் ரெய்னா இடம் பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது
.
அதேபோல, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சொதப்பிய ஆஷிஸ் நெஹ்ராவின் இடமும் பறிபோகிறது. இவருக்குப் பதில் அஷ்வின் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
சென்னை தான் அஷ்வினின் சொந்த ஊர் என்பதால், இவரது <உலக கோப்பை அறிமுகம், அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


* கிரிக்கெட் வீரருக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்

புதுதில்லி, மார்ச் 15- போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் ஜோசப் மார்டினுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பியது தொடர்பான குற்றத்தில், மார்டினுக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரிடம் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று போலீஸ் தப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 4-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி உயர்நீதிமன்றம் மார்டினுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, மார்டின் சார்பில் முன்ஜாமீன் கேட்டு இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு மார்டின் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், விசாரணையை போலீஸார் தான் விரைவாக நடத்த முன்வரவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனுவும் ஏப்ரல் 4-ம் தேதி விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1999-ம் ஆண்டு இந்திய அணியில் ஜேக்கப் ஜோசப் மார்டின் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* காலிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * அயர்லாந்து "அவுட்

கோல்கட்டா: அயர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 புள்ளிகளுடன் "பி பிரிவில் இருந்து முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள அயர்லாந்து அணியின் காலிறுதி கனவு முடிவுக்கு வந்தது.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு, "பீல்டிங் தேர்வு செய்தார்.

டிவிலியர்ஸ் இல்லை:

தென் ஆப்ரிக்க அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக டிவிலியர்ஸ் நீக்கப்பட்டு, கோலின் இங்ராம் தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்து வீரர் ஆன்ட்ரூ போத்தாவுக்கு பதிலாக, காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் ஜான்ஸ்டன் களமிறங்கினார்.

காலிஸ் ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, கேப்டன் ஸ்மித் ஜோடி துவக்கம் அளித்தது. தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஆம்லா 17 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ஸ்மித் (7), மூனேவின் துல்லிய துரோவில் "ரன்-அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய வான் விக், 41 பந்தில் 42 ரன்கள் எடுத்திருந்த போது, ஜார்ஜ் டாக்ரெல் பந்தில் போல்டானார். இந்தியாவுக்கு எதிராக அரைசதம் கடந்து எழுச்சி கண்ட "ஆல்-ரவுண்டர் காலிஸ் (19), இம்முறை சோபிக்கவில்லை. அடுத்து வந்த டு பிளசிஸ் (11) ஏமாற்றினார்.
டுமினி அபாரம்:

பின் இணைந்த டுமினி, கோலின் இங்ராம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அயர்லாந்து பந்துவீச்சை அருமையாக கையாண்ட இந்த ஜோடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த போது, ஜான்ஸ்டன் பந்தில் போல்டான இங்ராம் (46) அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டார். தொடர்ந்து அபாரமாக ஆடிய டுமினி, 103 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 99 ரன்கள் எடுத்து, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. போத்தா (21) அவுட்டாகாமல் இருந்தார்.
மார்கல் மிரட்டல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, மார்கல் வேகத்தில் திணறல் துவக்கம் கண்டது. இவரது பந்தில், கேப்டன் போர்டர்பீல்டு (6), ஸ்டிர்லிங் (10) உள்ளிட்ட துவக்க ஜோடி சொற்ப ரன்களில் வெளியேறியது. அடுத்து வந்த நெய்ல் ஓபிரையன் (10), ஜாய்ஸ் (12) ஏமாற்றம் அளித்தனர். இதனால் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து திணறியது.

பீட்டர்சன் துல்லியம்:
பின் களமிறங்கிய வில்சன், கெவின் ஓபிரையன் ஜோடி சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த போது கெவின் ஓபிரையன் (19), ராபின் பீட்டர்சன் சுழலில் சிக்கினார். அதே ஓவரில் எல்.பி.டபிள்யு., முறையில் வில்சன் (31) வெளியேறினார். அடுத்து வந்த ஜான்ஸ்டன் (12), மூனே (14), டாக்ரெல் (16) பெரிய அளவில் சாதிக்கவில்லை. அயர்லாந்து அணி 33.2 ஓவரில் 141 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக தென் ஆப்ரிக்காவின் டுமினி தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர் போர்டு

தென் ஆப்ரிக்கா

ஆம்லா(கே)டாக்ரெல்(ப)ரான்கின் 18(17)
ஸ்மித்-ரன்அவுட்-(மூனே)    7(78)
வான்விக்(ப)டாக்ரெல் 42(41)
காலிஸ்-ரன்அவுட்-(போர்டர்பீல்டு/நெய்ல்)    19(31)
டுமினி(கே)கெவின்(ப)மூனே 99(103)
டு பிளசிஸ்(கே)ஜான்ஸ்டன்(ப)ஸ்டிர்லிங்  11(19)    
இங்ராம்(ப)ஜான்ஸ்டன் 46(43)
போத்தா-அவுட் இல்லை-    21(28)
பீட்டர்சன்-அவுட் இல்லை-    0(0)
உதிரிகள்    9  

மொத்தம் (50 ஓவரில், 7 விக்.,)    272
விக்கெட் வீழ்ச்சி: 1-24(ஆம்லா), 2-52(ஸ்மித்), 3-84(வான்விக்), 4-95(காலிஸ்), 5-117(டு பிளசிஸ்), 6-204(இங்ராம்), 7-269(டுமினி).
பந்துவீச்சு: ரான்கின் 10-0-59-1, ஜான்ஸ்டன் 10-0-76-1, மூனே 8-0-36-1, டாக்ரெல் 10-0-37-1, ஸ்டிர்லிங் 10-0-45-1, கசாக் 2-0-14-0.

அயர்லாந்து
போர்டர்பீல்டு(கே)ஸ்மித்(ப)மார்கல்    6(8)
ஸ்டிர்லிங்(கே)காலிஸ்(ப)மார்கல்    10(11)
ஜாய்ஸ்--எல்.பி.டபிள்<யு.,(ப)(போத்தா)    12(24)
நெய்ல்(கே)வான்விக்(ப)காலிஸ்    10(16)
வில்சன்-எல்.பி.டபிள்யு.,(ப)பீட்டர்சன்    31(48)
கெவின்(கே)ஆம்லா(ப)பீட்டர்சன்    19(24)
கசாக்(கே)ஸ்மித்(ப)பீட்டர்சன்    7(11)
மூனே(கே)வான்விக்(ப)காலிஸ்    14(28)
ஜான்ஸ்டன்(கே)வான்விக்(ப)டுமினி    12(16)
டாக்ரெல்(கே)வான்விக்(ப)மார்கல்    16(12)
ரான்கின்-அவுட்இல்லை-    0(2)
உதிரிகள்    4

மொத்தம் (33.2 ஓவரில், "ஆல்-அவுட்)    141
விக்கெட் வீழ்ச்சி: 1-8(போர்டர்பீல்டு), 2-19(ஸ்டிர்லிங்), 3-35(நெய்ல்), 4-51(ஜாய்ஸ்), 5-92(கெவின்), 6-92(வில்சன்), 7-107(கசாக்), 8-123(ஜான்ஸ்டன்), 9-137(மூனே), 10-141(டாக்ரெல்).
பந்துவீச்சு: ஸ்டைன் 4-1-13-0, மார்கல் 5.2-0-33-3, காலிஸ் 6-1-20-2, போத்தா 8-0-32-1, பீட்டர்சன் 8-0-32-3, டுமினி 2-0-11-1.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : அசலேஸ்வரர், அரநெறியப்பர்
  உற்சவர் : அரநெறியப்பர்
  அம்மன்/தாயார் : வண்டார்குழலி
  தல விருட்சம் :  பாதிரி
  தீர்த்தம் :  சங்கு தீர்த்தம், கமலாலயம்
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  ஆருர் அரநெறி
  ஊர் :  ஆருர் அரநெறி
  மாவட்டம் :  திருவாரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 88வது தலம்.

தல சிறப்பு:
 
  இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.
 
கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.

மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார்.

அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.

தலபெருமை:
கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.

அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

தல வரலாறு:
நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.

இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார்.

கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார்.

அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், ""கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே.

அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,""இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.

இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,""அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று'என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார்.

கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான்.

இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
விஞ்ஞானம் அடிப்படையில்: அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

பிரார்த்தனை
 
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

திருவிழா:
 
  மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* நல்ல எண்ணங்களை பெறுவோம் - வியாசர்.

* பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

* * கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது. பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.

வினாடி வினா :

வினா - இந்தியாவில் வழங்கப்படும் மொழிகள் மொத்தம் எத்தனை?

விடை - 1652.

இதையும் படிங்க :"ஜப்பானியர்களின் தன்னம்பிக்கை அசாத்தியமானது'

கோவை : "பூகம்பமும், சுனாமியும் ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய போதும், ஜப்பானியர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றனர்' என, ஜப்பான் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை, ராம்நகர் பகுதியைச் சேர்ந்த அசோக், தனியார் நிறுவனத்தின் ஜப்பான் பிரிவில் பணிபுரிகிறார். மத்திய ஜப்பானில் கரியா பகுதியில், அசோக் மற்றும் கோவையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் ஒரே அபார்ட்மென்டில் தங்கியுள்ளனர். அசோக், தனது குடும்பத்தினரை, "வெப்கேமரா' மூலம் நேற்று தொடர்பு கொண்டார். அசோக், அவரது நண்பர் களுடன் வெப் கேமரா உதவியுடன், தினமலருக்காக பேசினோம்.

அவர்கள் கூறியதாவது:நாங்கள் மத்திய ஜப்பானில் கரியா என்றபகுதியில் வசிக்கிறோம். ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகள் தான், பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் இந்தியர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. பாதிப்புக்கு உள்ளான பகுதியிலும் தொலைதொடர்பு வசதிகள் இருக்கின்றன.இந்திய ஊடகங்களைப் பார்க்கும் போது, ஜப்பான் முழுமையாக நிலைகுலைந்து விட்டது போன்ற செய்திகள் வருகின்றன. நிலைமை அப்படி இல்லை. ஜப்பானின் ஒரு பகுதி தான் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 60, 70 கி.மீ., தூரம் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற இயற்கைப் பேரிடரை இந்தியா சந்தித்திருந்தால், 10 லட்சம் மக்கள் வரை உயிரிழந்திருப்பர்.

ஜப்பானியர்கள் அவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால், இங்கு வாழும் வெளிநாட்டவர்கள்தான் சிறிது பயத்தில் உள்ளோம்ஆனால், அவர்கள் (ஜப்பானியர்கள்) மிகுந்த தன்னம்பிக்கையுடன், இயல்பாக நடந்து கொள்கின்றனர்.மீட்புப்பணிகள் துரித வேகத்தில் நடக்கின்றன. மீட்பு பணிகள் விஷயத்தில் வேறு யாருடனும் அவர்களை ஒப்பிட முடியாது. அணுஉலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படும் அபாயம் இருப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதனால், மிகப் பெரும் அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிய அளவிலான பாதிப்பு ஏற்படலாம்; அதையும் ஜப்பானியர்கள் திறமையாக சமாளித்து விடுவர். மற்றபடி, ஜப்பானின் இதர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை தான் காணப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி - தட்ஸ்தமிழ், வெப்துனியா, தின மணி, தின மலர்.


No comments:

Post a Comment