Tuesday, March 8, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 08 - 2011.


முக்கியச் செய்தி :

பி.ஜே. தாமஸ் நியமன விவகாரம்: முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்- பிரதமர் மன்மோகன் சிங்

புது தில்லி, மார்ச் 7: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டதற்கு தான் முழுப் பொறுப்பு ஏற்பதாக பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

 பி.ஜே. தாமஸின் நியமனத்தை "தவறாக எடுக்கப்பட்ட முடிவு' என்று கூறிய அவர், இதற்கு தான் முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் தெரிவித்தார்.

 வெளிநடப்பு:÷பிரதமரின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். தவறுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, எவ்வாறு இந்தத் தவறு நிகழ்ந்தது என்பதை பிரதமர் விளக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 முன்னதாக கேரளத்தில் பாமாயில் இறக்குமதி ஊழல் புகாரில் சிக்கிய பி.ஜே. தாமûஸ மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது

பிரதமர் தலைமையிலான 3 பேர் அடங்கிய உயர் நிலைக் குழுதான் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமûஸ நியமிக்க ஒப்புதல் வழங்கியது. இக்குழுவில் இடம் பெற்றிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். ஆனால் தாமஸ் நியமனம் சட்ட விரோதம் என்று கூறியதுடன், அவரை நியமித்ததற்காக மத்திய அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. அப்போது ஜம்முவில் இருந்த மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாகவும், இந்த விவகாரத்துக்கு தாமே முழுப் பொறுப்பை ஏற்பதாகவும் அறிவித்தார்.

 ÷இந்நிலையில் திங்கள்கிழமை மக்களவையில் பிரதமர் இது குறித்துக் கூறியது: பி.ஜே. தாமஸ் நியமன பிரச்னை தொடர்பாக ஜம்முவில் கூறியதையே இப்போதும் கூறுகிறேன். இந்த விஷயத்தில் தவறாக முடிவு எடுக்கப்பட்டு விட்டது. இதற்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

 ÷பிரதமரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். பாஜக உறுப்பினர்கள் "அவமானம், அவமானம்' என ஒட்டு மொத்தமாகக் குரல் எழுப்பினர்.

 பிரதமரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

சுஷ்மா கருத்து: பிரதமர் பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் பேசிய விதம் தனக்கு ஆச்சர்யமளிப்பதாகத் தெரிவித்தார்.

 ஜம்முவில் என்ன கூறினேனோ அதையே இங்கும் தெரிவிக்கிறேன் என்று பேசிய மன்மோகன் சிங், அங்கு பேசிய அதே வார்த்தைகளில் இங்கும் பேசுவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவர் அவ்வாறு பேசவில்லை என்றார் சுஷ்மா.

உலகச் செய்தி மலர் :

சாலமன் தீவில் நில நடுக்கம்

ஹனியரா, மார்ச் 7: சாலமன் தீவில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் அளவைத் துறை தெரிவித்துள்ளது.

 நில நடுக்கம் கடுமையாக இருந்தபோதிலும், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை என சாலமோன் தீவின் பேரிடர் மேலாண்மை துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 இந்திய நேரப்படி இது 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் சாலமன் தீவின் தலைநகரான ஹனியராவில் இருந்து 133 கி.மீ.தொலைவு வடகிழக்கில் ஏற்பட்டுள்ளது. கடலின் அடியில் சுமார் 30 கி.மீ. ஆழத்தில் இது நிகழ்ந்துள்ளது

* பாகிஸ்தானில் தொடரும் தாக்குதல்கள் இந்தியாவுக்கு இடம்பெயரும் ஹிந்துக்கள்

இஸ்லாமாபாத், மார்ச் 7: பாகிஸ்தானில் நிலவிவரும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக சிந்து மாகாண பேரவையின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஹிந்து உறுப்பினரான ராம்சிங் சாத்தோ உள்பட ஏராளமான ஹிந்துக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்
.
 தொடர்ந்து வந்த மிரட்டல்களாலேயே சாத்தோ இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அதை அம் மாகாணத்தின் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது.

 இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லத்திப் மொஹல் கூறியது:

 சிந்து மாகாண பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியின் ஹிந்து உறுப்பினரான சாத்தோ கடந்த மாதம் தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். இதேபோல் இங்குள்ள சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

 சிந்து மாகாணத்தின் முன்னாள் முதல்வர் அராப் குலாம் ரஹிமின் உறவினரான சாத்தோ, முஷாரப் ஆட்சியின் போதே அங்கிருந்து இடம்பெயர்வதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதனால் கடந்த 2000-ல் அவரது இரண்டு மகன்களும், குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து குஜராத்தின் பூஞ்ச் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டனர். சாத்தோ மட்டுமின்றி ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களும் தங்களது சுயவிருப்பத்தின் பேரிலேயே இங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். சாத்தோவின் மகன் திலிப் சிங் 2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்துவிட்டார். அவரின் மற்றொரு மகன் குமன் சிங் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார் மாவட்ட கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

 கடந்த 2005-ல் அப்போதைய முதல்வர் ரஹிமிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, குமன் லட்சக்கணக்கான பணத்தை ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

 இதையடுத்து அவர் 2007-ல் தனது பதவியை ராஜிநாமா செய்யாமலேயே பூஞ்ச் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்தார் என்றார் மொஹல்.

 மிரட்டல் காரணமாகவே சாத்தோ இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதை மறுத்த முகல், அது அடிப்படை ஆதாரமற்றது. அவர் தனக்கு மிரட்டல் வந்ததாக ஒருபோதும் புகார் செய்ததில்லை என்று கூறினார்

கடந்த மாதம் இங்கு ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையால் சாத்தோ இடம்பெயர்ந்தார். அடக்குமுறை காரணமாக ஏராளமான ஹிந்து சமூக மக்களும் வெளியேறிவிட்டனர் என அங்குள்ள பல்வேறு அமைப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* பாகிஸ்தானில் பரபரப்பான விளம்பரம் "மதச்சார்பற்ற இந்தியாவே விளக்கம் தா?'

இஸ்லாமாபாத்,மார்ச் 7: தில்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்து 70 பேரைப் பலி வாங்கியவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரும் விளம்பரம் பாகிஸ்தானில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளிலும் திங்கள்கிழமை பிரசுரம் ஆனது.

 ""சம்ஜெüதா ரயிலில் நடந்த நாசவேலையால் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கைக் குழு'' என்ற பெயரில் இந்த கால்பக்க விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. "தி நியூஸ்' என்ற பத்திரிகை இந்த விளம்பரத்தைத் தன்னுடைய முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறது.

 மும்பையில் நடந்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்புதான் என்று சர்வதேச அரங்குகளில் முழங்கி, பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தருகிறது பாகிஸ்தான் என்று பேசும் இந்தியாவே, சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 42 பாகிஸ்தானியர்கள் இறப்புக்குக் காரணமான சங்கப் பரிவாரங்கள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன, குற்றவாளிகளைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று கேட்டிருக்கிறது அந்த அமைப்பு
.
 சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் யாரென்று தெரியாத நிலையில்கூட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்ததை இந்தியாவில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கூட கண்டித்து வருகின்றன.
 மாலேகாம் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கிடைத்த துப்பை அடுத்து ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து விசாரித்தபோதுதான் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று சி.பி.ஐ. போலீஸôருக்குத் தெரியவந்தது. அதை அடுத்தே சுவாமி அசீமானந்தாவிடம் விசாரணை தீவிரம் அடைந்தது. இப்போது அவருக்கு உதவியவர்கள், அவருடன் தொடர்புள்ளவர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

 ஆனால் நம்முடைய காவல்துறைப் புலன் விசாரணையும் நீதிமன்ற விசாரணையும் மிகுந்த காலதாமதத்துடன் நடப்பதால் வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளிகள் மூப்படைவதோ இறந்துவிடுவதோ நடந்துவிடுகிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள், குற்றவாளிகள் ஹிந்துக்கள் என்பதால் இந்தியப் புலனாய்வுத்துறை அவர்களைத் தப்புவிக்கும் நோக்கில் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகக் கருதுகின்றனர்

 பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்த இந்தியா முயலும்போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வருகிறது. இந்த முறை இந்த குண்டுவெடிப்பு விவகாரம் பெரிதாக மாறும் என்று தோன்றுகிறது.

* அமெரிக்காவில் சீக்கியர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், மார்ச் 7: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

 ÷÷இது குறித்த விவரம்: கலிபோர்னியா மாகாணத் தலைநகர் சேக்ரமெண்டோவில் வசித்து வந்த இந்தியர் சுரீந்தர் சிங் (68). லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த குர்மிஜ் அத்வால் (78) என்பவருடன் வெள்ளிக்கிழமை மாலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், இருவரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சுரீந்தர் சிங் உயிரிழந்தார். குர்மிஜ் அத்வால் படுகாயத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான இருவருமே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2001-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

 இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? எதற்காக இவர்கள் சுடப்பட்டனர் என்பது இதுவரை தெரியவரவில்லை. எனினும் இந்தியர்கள் அல்லது சீக்கியர்கள் மீது உள்ள வெறுப்பில் எவரேனும் இத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸôர் சந்தேகிக்கின்றனர்

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. ÷இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராக்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இக்கொலை சம்பவம் தொடர்பாக உபயோகமான தகவல்களை அளிப்பவர்களுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களுக்குச் செல்லும் போது சீக்கியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும், தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலான குர்தா, பைஜாமா உள்ளிட்ட உடைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 கலிபோர்னியாவில் சீக்கியர்களைக் குறிவைத்து தாக்கப்படும் இரண்டாவது சம்பவம் இது. முன்னதாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, ஹர்பஜன் சிங் என்ற டாக்ஸி டிரைவர் இதே சேக்ரமெண்டோ நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்

* பஹ்ரைனில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

மனாமா, மார்ச் 7: பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

 பஹ்ரைனில் அரசுக்கு எதிராக கடந்த பல நாள்களாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மனாமாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு திங்கள்கிழமை கூடிய ஷியா பிரிவு முஸ்லிம்கள் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
.
 அப்போது டுனீசியா, எகிப்தில் ஆட்சி மாற்றம் நிகழ உதவியது போல, பஹ்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட அமெரிக்கா ஆதரவளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர். பஹ்ரைனில் ஈரான் தனது செல்வாக்கை விரிவுபடுத்திவிடக்கூடாது என்பதிலேயே அமெரிக்க கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

 பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது

பஹ்ரைனில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் அங்கு சிறுபான்மையினரான சன்னி பிரிவினரே பல ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இதுவும் மன்னர், பிரதமருக்கு எதிரான போராட்டத்துக்கு முக்கியக் காரணம்.போராட்டத்தை நிறுத்த மன்னர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை

*  ராஜபட்ச அரசுக்கு ஆதரவளிக்க ரூ. 5 கோடி லஞ்சம்? சிங்கள நடிகை தகவல்

கொழும்பு, மார்ச் 7- அதிபர் ராஜபட்ச தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தனக்கு அக்கட்சியின் சார்பில் ரூ. 5 கோடி வழங்கப்பட்டது என்று பிரபல சிங்கள நடிகையும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.,யுமான உபேஷா சுவர்ணமாலி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்பப் பிரச்னையில் கணவரால் தாக்கப்பட்ட உபேஷா தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் போது அவர் மேற்கண்ட தகவலையும் கூறினார். இதையடுத்து, அவரிடம் வாக்குமூலம் வாங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே, வாக்குமூலம் பெறுவது நிறுத்தப்பட்ட சற்று நேரத்தில் உபேஷாவை தொடர்புகொண்ட அதிபர் ராஜபட்ச, இலங்கை அரசை சர்ச்சையில் சிக்க வைக்கும் வகையிலான கருத்துகள் எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* லிபியாவில் இருந்து பிரிட்டன் தூதரகக் குழு வெளியேறியது

லண்டன், மார்ச் 7- பிரிட்டன் தூதரகக் குழு இன்று லிபியாவில் இருந்து வெளியேறியது.

பிரிட்டன் வெளியுறவுத்துறைச் செயலர் வில்லியம் ஹேக் இன்று லண்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்த பிரிட்டன் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால் தூதரக குழு அந்த நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, தூதரகக் குழுவினர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக வில்லியம் ஹேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், லிபியாவுக்கு பிரிட்டன் சார்பில் விரைவில் மற்றொரு குழுவை அனுப்பி வைப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பின் ஜவாத் நகரத்தை மீட்டது கடாஃபி படை

கெய்ரோ, மார்ச் 7: லிபியாவில் அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், கிழக்கில் உள்ள துறைமுக நகரமான பின் ஜவாதை கடாஃபி படை மீட்டுள்ளது.

 லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கடாஃபி பதவி விலக வலியுறுத்தி கடந்த பல நாள்களாக அவரது எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
.
 தலைநகர் திரிபோலியில் அவ்வப்போது கடும் துப்பாக்கிச் சண்டையும் நடந்துவருகிறது
.
 நாட்டின் கிழக்கில் உள்ள பின் ஜவாத், ராஸ் லானஃப் நகரங்களை போராட்டக்காரர்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

 ஆனால், கடாஃபியின் படைகள் ஆப்பிரிக்க கூலிப்படையினர் உதவியுடனும், ரஷிய ஆயுதங்கள், போர் விமானங்களைப் பயன்படுத்தியும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தின.
 இதில் போராட்டக்காரர்கள் 6 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பின் ஜவாத் நகரம் மீண்டும் கடாஃபி படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. பின் ஜவாத் நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ராஸ் லனாஃப் நகர் நோக்கி கடாஃபியின் படைகள் முன்னேறுவதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தியில் தெரிவித்தது.
 கடாஃபி ஆதரவாளர்கள் தாக்கக் கூடும் என அஞ்சி நூற்றுக்கணக்கானோர் ராஸ் லனாஃப் நகரை விட்டு வெளியேறிவிட்டனர்.

கடாஃபியின் சொந்த ஊரான சிர்டே நகரிலும் போராட்டக்காரர்களை கடாஃபியின் படைகள் ஒடுக்கிவிட்டன.
 ஸôவியா நகரில்...: இந்நிலையில், ஸôவியா நகரில் இருந்து கடாஃபியின் படைகளை விரட்டியடித்ததாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். மிஸ்ராடா நகரும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
 திரிபோலியில்...: தலைநகர் திரிபோலியில் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை அதிகாலையும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அல் ஜஸீரா நிருபர் தெரிவித்தார். ஆனால், சிறிது நேரத்தில் அரசுக்கு ஆதரவாக திரிபோலியில் பேரணி நடைபெற்றது என்றும் அவர் கூறினார்.
 போராட்டக்காரர்கள் கோரிக்கை: பொதுமக்களை கடாஃபியின் படைகள் தாக்குவதால், ஐ.நா. சபை தலையிட்டு கடாஃபி படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அமெரிக்கா தலையிடுமா? லிபியா பிரச்னையில் தலையிடுவது என முடிவு செய்தால், தரை, வான், கடல் வழிகளில் போராட்டக்காரர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பது குறித்த திட்டத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்து வருவதாக அந் நாட்டுப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

இப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்றும் அதிபர் ஒபாமாவுக்கு நெருக்குதல் அதிகரித்துவருவதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

* லிபியாவிலிருந்து எகிப்து வழியாக இந்தியர்களை மீட்பது தீவிரம்

கெய்ரோ,மார்ச் 6: உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ள லிபியா நாட்டிலிருந்து எகிப்து வழியாக இந்தியர்களை மீட்க கெய்ரோவில் உள்ள இந்தியத் தூதரகம் எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துவருகிறது.

 எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்க மக்கள் எடுத்த முயற்சி அமைதியான ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிவிட்டது. ஆனால் அதற்குப் பக்கத்தில் உள்ள லிபியாவில் நிலைமை மோசமாக இருக்கிறது.

 அதிபர் மம்மர் கடாஃபிக்கு இன்னமும் ராணுவம், போலீஸ் படைகளின் ஆதரவு இருக்கிறது. எனவே எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்லவும் தயங்காமல் அவர் நடவடிக்கை எடுக்கிறார். ஆனால் எதிர்ப்பாளர்களும் எகிப்தியர்களைப்போல சாத்வீக வழிமுறைகளைக் கையாளவில்லை. பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என்ற அளவில் எங்கிருந்தோ ஆயுதங்களைப் பெற்று அரசுப் படைகளுடன் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதனை அடுத்தே நிலைமை வெகுவேகமாக மோசமாகிவருகிறது

ஸ்காடியா பிரின்ஸ் கப்பல்: லிபியாவிலிருந்து வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஸ்காடியா பிரின்ஸ் என்ற பெரிய கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

 லிபியாவின் பெங்காசி நகரிலிருந்து 1,188 இந்தியர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு எகிப்தின் மிகப்பெரிய துறைமுகமான அலெக்சாண்டிரியாவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

 பிறகு அங்கிருந்து 5 தனி விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 மார்ச் 3-ம் தேதி ஸ்காடியா பிரின்ஸ் கப்பல் மீண்டும் பெங்காசிக்குச் சென்று 1,146 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அலெக்சாண்டிரியா வந்தது. அவர்களும் தனி விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 எகிப்துக்கும் லிபியாவுக்கும் இடையில் எல்லைப்புறத்தில் உள்ள ஷலோம் என்ற இடத்தில் 467 இந்தியர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. அங்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 லிபியாவில் நடந்த கலவரத்தில் பாஸ்போர்ட், விசா போன்றவற்றைத் தொலைத்தவர்கள், இழந்தவர்களுக்குத் தாற்காலிகமாக அடையாள அட்டையும் பயணம் செய்வதற்குத்தேவையான அத்தாட்சிக் கடிதங்களும் தரப்படுகின்றன. அவர்களுக்கு உணவு, உடை போன்ற இதர உதவிகளும் மருத்துவ சேவையும் அளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

 கடந்த வாரத்தில் மட்டும் இவ்விதம் 3,000 இந்தியர்கள் லிபியாவிலிருந்து மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்

* யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

சனானா, மார்ச் 6: யேமனில் அல்-காய்தா பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுபவர் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் யேமனில், தான் பதவி விலக முடியாது என்று அதிபர் அலி அப்துல்லா, அறிவித்த அடுத்த நாளில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

 அல்-காய்தாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு யேமன் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 தலைநகர் சனானாவில் இருந்து 170 கி.மீ.தொலைவில் மாரிப் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் சென்ற வீரர்கள் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

யேமனில் 1978-ம் ஆண்டு முதல் அலி அப்துல்லா சாலெஹ் அதிபராக உள்ளார்.

 அவரது ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாகக் கூறி பிப்ரவரி 6-ம் தேதி முதல் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அப்போது ஏற்பட்ட மோதல்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. ஏராளமானோர் கைதாகியுள்ளனர்.

* தைவானுக்கு யு.எஸ். ஆயுதம் விற்க கூடாது: சீனா வலியுறுத்தல்  

தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்க கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சீன அயலுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியேச்சி கூறுகையில், தைவானுக்கு அமெரிக்க ஆயுத கம்பெனிகள் ஆயுதங்கள் விற்பதை கைவிட வேண்டும் என்றும், தவறினால் அந்த கம்பெனிகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆயுத விற்பனையை கைவிடுவது தான் அமெரிக்க-சீனா நட்புறவுக்கு நல்லது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் இந்த ஆண்டு மத்தியில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதற்கு பதிலாக சீன துணை அதிபர் ஷி ஜிங்க்பிங்க் அமெரிக்கா செல்வார் என்றும் அவர் மேலும் கூறினார்

* அமெரிக்கா: ஹவாய் தீவில் எரிமலை வெடித்தது

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியது.

அமெரிக்காவில் ஹவாய் தீவில் உள்ளது பிக் தீவு.இங்கு உள்ள கிலாவே எரிமலை சீறி கொண்டிருக்கிறது. இதில் இருந்து எரிமலை குழம்பு 20 மீட்டர் உயரத்துக்கு கிளம்பியது.

இதனால் வீடுகளுக்கு ஆபத்து இல்லை என்ற போதிலும் அந்த பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை எரிமலை அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த எரிமலை சீறி கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இப்போதைய சீற்றம் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிக பயங்கரமாக இருக்கும் என்று மண்ணியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளன

* விடுதலைப் படையை உருவாக்க ஆனந்த சங்கரி முயற்சி: கருணா

கொழும்பு, மார்ச் 7- தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி புதியதாக விடுதலைப் படை ஒன்றை உருவாக்க முயற்சி செய்கிறார் என்று இலங்கை அமைச்சர் கருணா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலையடிவேம்பு என்னுமிடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருணா கூறியிருப்பதாவது:

"கடந்த 8 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளையும், தமிழரசுக் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் ஆனந்த சங்கரி. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமாக உலா வரும் அவர், தற்போது வீரவசனம் பேசி வருகிறார். அவரது செயல்பாடுகளை பார்த்தால், இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கான படையை உருவாக்க முயற்சி செய்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

நான் 30 ஆண்டுகளாக புலிகள் இயக்கத்தில் ஆயுதம் ஏந்தி போராடியவன். தலைமைக்கும் இயக்கத்துக்கும் விசுவாசமாக பல்வேறு போர்க்களத்தில் தலைமை தாங்கி படை நடத்தினேன். ஆனால், பிரபாகரனை விட்டு விலகியபோது என்னை துரோகி என்றார்கள். ஆனால், எனது முடிவால் கிழக்குப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் புலிகள் காப்பாற்றப்பட்டனர்."
இவ்வாறு கருணா கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :


* மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை கிடையாது: அதிரடி தீர்ப்பு

காந்திநகர், மார்ச் 7- மதம் மாறியவர்களுக்கு அரசின் இடஒதுக்கீடு சலுகை கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிமேஷ் ஜாவெரி என்பவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். இதையடுத்து, அவருக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையை அரசு நிறுத்தியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாய மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், மனுதாரர் மதம் மாறிவிட்டதால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடஒதுக்கீடு சலுகையை இனி வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

* ஹஸன் அலி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

புணே, மார்ச் 7- கறுப்புப் பண விவகாரத்தில் சிக்கியுள்ள குதிரை பண்ணை உரிமையாளர் ஹஸன் அலியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, ஹஸன் அலியிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அவரை மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

புணேயில் கோரிகான் பகுதியில் உள்ள ஹஸன் அலியின் ஆடம்பர பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதற்காக இன்று காலை மும்பையில் இருந்து இரு குழுவினர் புணே வந்திருந்தனர்.

வெளிநாட்டினர் உதவியுடன் பெருமளவிலான கறுப்புப் பணத்தை, சில சுவிஸ் வங்கிகளில் ஹஸன் அலி முதலீடு செய்திருப்பதாக புகார் கூறப்படுகிறது.

எனினும், அவர் மீது புணே போலீஸார் இதுவரை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. ஆனாலும், கறுப்புப் பணம் தொடர்பாக ஹஸன் அலி இல்லத்தில் கடந்த 2007 ஜனவரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன்பின்னர், தற்போதுதான் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது

* அமைச்சரவையில் மாற்றம்: ஆந்திர முதல்வர்

ஹைதராபாத், மார்ச் 7- ஆந்திர சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
அமைச்சரவையில் 4 பேர் புதியதாக இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், தற்போதுள்ள பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும் ஹைதராபாத் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க விரைவில் தில்லி செல்லவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது

* கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு  

மும்பை மருத்துவமனையை சேர்ந்த செவிலியர் அருணா ஷான்பாகை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துவந்த அருணா ஷான்பாகை,கடந்த 1973 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இரவு அங்கு வார்டுபாயாக பணிபுரிந்த பார்த்தா வால்மீகி என்பவர் கழுத்தில் சங்கிலியால் இறுக்கி கடுமையாகத் தாக்கினார்.

பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அருணா, கடந்த 37 ஆண்டுகளாக அருணா கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்த வார்டுபாய்க்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்து வரும் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு அருணாவின் நண்பரும், வழக்கறிஞருமான பிங்கி விரானி என்பவர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு எட்வர்டு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றமும் அருணாவை கருணைக் கொலைசெய்ய அனுமதி மறுத்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவரை சிறப்புடன் பராமரித்துவரும் கிங் எட்வர்டு மருத்துவமனைக்கும், அதன் ஊழியர்களுக்கும் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக கூறிய எட்வர்டு மருத்துவமனையின்
செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஓக், "அருணாவை தொடர்ந்து சிறப்புடன் கவனித்து வருவோம். இந்தத் தீர்ப்பு நல்ல விஷயம். கருணைக் கொலை

* நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு

வரும் கல்வி ஆண்டில் இருந்து எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட அமர்வு,வரும் கல்வி ஆண்டில் இருந்து எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இன்று உத்தரவிட்டது.

மேலும் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்

* 2ஜி வழக்கில் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்  

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் வருகிற 31 ஆம் தேதிக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை ஏறக்குறைய 70 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாக அண்மையில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் வருகிற 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன்னர், நீரா ராடியா உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கிய மேலும் பல முக்கிய புள்ளிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவதற்கு சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

* வீட்டுக்காவலில் முலாயம் சிங்?

லக்னெü, மார்ச் 7: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவை, மாயாவதி வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

 உத்தரப் பிரதேசத்தில் ஆளும் மாயாவதி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சி முடிவு செய்திருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக அக்கட்சித் தலைவர் முலாயம் சிங், அவரது மகனும் சமாஜவாதி கட்சியின் உத்தரப் பிரதேச மாநில தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோரை மாநில அரசு வீட்டில் சிறை வைத்துவிட்டதாக சமாஜவாதி குற்றம்சாட்டியுள்ளது.
 லக்னெüவில் உள்ள முலாயமின் வீட்டைச் சுற்றி போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை இரவே குவிக்கப்பட்டு, அவரை வெளியில் செல்லவிடாமல் முடக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து முலாயம் சிங் கூறியுள்ளது: நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள என்னையும், அகிலேஷ் யாதவையும் செயல்பட விடாமல் மாநில அரசு முடக்கியுள்ளது. இது உரிமை மீறல் பிரச்னை. இது தொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு நான் "பேக்ஸ்' அனுப்பியுள்ளேன். இன்று நாடாளுமன்றத்துக்கு செல்லவிடாமல் என்னைத் தடுத்துள்ளனர். அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தவும் மாயாவதி உத்தரவிட்டுள்ளார் என்று முலாயம் குற்றம்சாட்டினார்.
 ஆனால் இந்த குற்றச்சாட்டை மாநில அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். எவரது நடவடிக்கைகளையும் மாநில அரசு முடக்கவில்லை. இன்று காலையிலேயே விமானத்தில் முலாயம் தில்லி செல்வதாக இருந்தது. ஆனால் அவர்தான் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார். அவர் விமான நிலையம் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.
பிற்பகலில் முலாயம் சிங் தில்லிக்கு புறப்பட்டார்.
 முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஆளும் மாயாவதி தலைமையிலான அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டி, திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் ஆர்ப்பாட்டம் நடத்த சமாஜவாதி கட்சி அழைப்பு விடுத்தது. இதனை முறியடிக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மாயாவதி உத்தரவிட்டார்.
 சமாஜவாதி கட்சியினர் 150 பேர் கைது: இதனிடையே மாயாவதி அரசைக் கண்டித்து கான்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமாஜவாதி கட்சித் தொண்டர்கள் 150 பேரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

 மாநிலத்தில் பல இடங்களில் மாயாவதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி முலாயம் கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர். மாயாவதியின் உருவ பொம்மைகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீஸôர் அந்த இடங்களுக்குச் சென்று அவர்களை விரட்டியடித்தனர். பல இடங்களில் சமாஜவாதி கட்சியினர் கைது செய்யப்பட்டு மாலை வரை காவலில் வைக்கப்பட்டனர்.


மாநிலச் செய்திகள் :

* சிகாகோ திரைப்பட விழாவில் 'பசங்க’

சென்னை, மார்ச்.7: இயக்குநர் பாண்டிராஜின் அறிமுக படமான பசங்க ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்றுள்ளது.

அந்த வரிசையில் தற்போது சிகாகோவில் நடைபெற உள்ள குழந்தைகள் திரைப்பட விழாவுக்கு பசங்க தேர்வுபெற்றுள்ளது.

மார்ச் 26 மற்றும் 27-ம் தேதிகளில் குழந்தைகள் திரைப்பட விழா சிகாகோவில் நடைபெற உள்ளது.
பல்வேறு சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாக்களில் தனது படம் உலா வருவதில் இயக்குநர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

2009-ல் பசங்க திரைப்படம் வெளியானது. இயக்குநர் சசிக்குமார் அந்த படத்தை தயாரித்திருந்தார்.

* தொகுதி - ஓர் அறிமுகம்!

 விழுப்புரம் (பொது)
 * தொகுதி பெயர் :  விழுப்புரம்
 * வரிசை எண் :  74
 * அறிமுகம் :

மாவட்டத் தலைநகராக விளங்கும் விழுப்புரம் 11 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது. கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த

 தென்னாற்காடு மாவட்டத்தில் 1952}ல் உருவாக்கப்பட்ட பழம்பெரும் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
 * எல்லை :

விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி,
 கோலியனூர் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள்

கண்டமங்கலம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள், காணை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள் ஆகியவை இதன் எல்லைகளாகும். காணை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

 * தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நகராட்சி : விழுப்புரம் நகராட்சி -36 வார்டுகள்
பேரூராட்சி : வளவனூர் பேரூராட்சி -15 வார்டுகள்
ஊராட்சிகள்: 74

கோலியனூர் ஒன்றியம்: அய்யன்கோவில்பட்டு,
 காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமனந்தாங்கல், சாலைஅகரம், கோலியனூர், கள்ளப்பட்டு, பெத்தரெட்டிகுப்பம், இளங்காடு, குடுமியான்குப்பம், நரையூர்,
 பனங்குப்பம், தொடர்ந்தனூர், பானாம்பட்டு, நன்னாடு, வேடம்பட்டு, சத்திப்பட்டு, ஒருகோடி, தோகைப்பாடி

கொண்டங்கி, வழுதரெட்டி, சாலாமேடு, வி. மருதூர்,
 பூந்தோட்டம், ஆனாங்கூர், நன்னாட்டாம்பாளையம்,
 மழவராயனூர், சாலையாம்பாளையம், கெங்கராம்பாளையம், பில்லூர், காவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை,
 பிடாகம், அரியலூர், அத்தியூர்திருவாதி, வேளியம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர், திருப்பாச்சனூர்,
 செம்மேடு, அரசமங்கலம், தென்குச்சிப்பாளையம்.
 ÷கண்டமங்கலம் ஒன்றியம்: வி. புதூர், மல்ராஜன்குப்பம், முதலியார்குப்பம், குமளம், கெங்கராம்பாளையம், மணக்குப்பம், அற்பிசம்பாளையம், வெங்கடாத்ரிஅகரம், பஞ்சமாதேவி, சுறுவந்தாடு,
மோட்சகுளம்பரிசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம், கல்லிப்பட்டு, வடவாம்பாளையம்.

 ÷÷காணை ஒன்றியம்: பெரும்பாக்கம், வெங்கடேசபுரம், கோனூர், தெளி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம்.
 * வாக்காளர்கள் :

 ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
 101997 102512 8 2,04,517
 * வாக்குச்சாவடிகள் :
 240
 * தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
 ÷÷கோட்டாட்சியர் இரா. பிரியா: 94450 00424

 * வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் :
 ÷ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  விழுப்புரம்.

* தேர்தல் விதிமுறையை மீறி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பைகள் பறிமுதல்

களக்காடு, மார்ச் 7: தேர்தல் நடத்தை விதிகளை மீறி, திருக்குறுங்குடியில் திங்கள்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. படம் அச்சிடப்பட்ட பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தனியார் நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, பிப்ரவரி மாதம் அதற்கான பரிசளிப்பு விழாவும் களக்காட்டில் நடைபெற்றது.

 இதனிடையே, கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக வசந்தகுமார் எம்.எல்.ஏ. உருவப்படம் பொறித்த பை மற்றும் போட்டியில் பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

 இந்நிலையில், திருக்குறுங்குடியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு திங்கள்கிழமை அந்தப் பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாம்

இது குறித்து வருவாய்த்துறையினர் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட மற்றும் வழங்குவதற்காக வைத்திருந்த 448 சான்றிதழ்கள் மற்றும் பைகளை போலீஸôர் கைப்பற்றினர். மேலும் இவற்றை ஏற்றி வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

* காரைக்குடியில் கம்பன் திருநாள் விழா மார்ச் 17-ல் தொடக்கம்

காரைக்குடி, மார்ச் 7: காரைக்குடியில் 73-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா மார்ச் 17-ல் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

 நாட்டரசன்கோட்டையில் அமைந்திருக்கும் கம்பன் அருட்கோவிலிலும் மார்ச் 20-ல் விழா நடைபெறுகிறது.
 விழா குறித்து காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் பழ.பழனியப்பன் கூறியதாவது:

 கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் பணியை 1939-லேயே ஆரம்பித்துவைத்தவர், கம்பன் அடிப்பொடி என்றே தன் பெயரை மாற்றிக்கொண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரான தமிழறிஞர் சா.கணேசன்.
 இப்போது 73-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா மார்ச் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் இறை வணக்கம் பாடுகின்றனர். அரு.சோமசுந்தர ஓதுவார் மலர் வணக்கமும், கம்பன் கற்பக மாணவியர் கம்பன் அடிப்பொடி அஞ்சலியும் செலுத்துகின்றனர்.

 தொடக்க விழாவுக்கு நெல்லை கம்பன் கழக நிறுவனர் சிவ.சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி த. ராமலிங்கம் தொடக்க உரையாற்றுகிறார்.

 கம்பன் காட்டும் உறவும் நட்பும் என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் ச.சிவசாமி ஆய்வுச் சொற்பொழிவாற்றுகிறார்.
 வேலூர் கம்பன் கழகத் தலைவர் எஸ்.என். குப்புசாமி முதலியார், கோவை கம்பன் கழகச் செயலாளர் நா. நஞ்சுண்டான் ஆகியோரின் கம்பன் தொண்டுக்காகப் பாராட்டி பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் பேசுகிறார்.
 விழாவில், கம்பன் காட்டும் உறவும் நட்பும் எனும் நூல் வெளியீடு, போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன

இரண்டாம் நாள் (மார்ச் 18) அகவிழி அறிஞர்கள் விவாத அரங்கம், சென்னை நந்தனம் கலைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் ந. சேஷாத்ரி தலைமையில் நடைபெறுகிறது. கம்பனின் பாத் திறமும், பாத்திரமும் ஒருங்கே உயர்ந்து ஓங்கி நிற்பது என்ற பொருளில் விவாத அரங்கம் நடைபெறுகிறது. இதில் சுமித்திரையிலே என்ற பாத்திரத்தில் சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் மா.உத்திராபதி, விசுவாமித்திரனிலே என்ற பாத்திரத்தில் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ஆ. நாராயணசாமி, குகனிலே என்ற பாத்திரத்தில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் எம். துரை, வீடணனிலே என்ற பாத்திரத்தில் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கு. கோபாலன், மண்டோதரியிலே என்ற பாத்திரத்தில் சென்னை சமூகவியலாளர் சே. அன்னபூரணி ஆகியோர் விவாதிக்கின்றனர்.

 மூன்றாம் நாள் (மார்ச் 19) பேராசிரியர் சோ. சத்தியசீலன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் பாத்திரப் படைப்பில் கம்பனைப் பாடாய்ப்படுத்தி எடுத்த பாத்திரம் என்ற பொருளில் கைகேயியே என்ற அணியில் த. ராஜாராம், ம. ஷர்மிளாதேவி, மு. பழனியப்பன், கே. கண்ணாத்தாள் ஆகியோரும், வாலியே என்ற அணியில் அ. அறிவொளி, வீ. பிரேமா, இரா. மாது, ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும், கும்பகருணனே என்ற அணியில் வே. சங்கரநாராயணன், எஸ். விஜி, இரா. ராமசாமி, சுமதிஸ்ரீ ஆகியோரும் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர்.

நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோவிலில் பங்குனி அத்தத் திருநாள் விழாவாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) மாலையில் நடைபெறுகிறது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பாத்திறமலி பாட்டரசன் என்ற தலைப்பில் தலைமை வகித்துப் பேசுகிறார். நயம்வலி நாடக அணி என்ற தலைப்பில் அ.அ. ஞானசுந்தரத்தரசு, கலைமலி கற்பனை என்ற தலைப்பில் சொ. சேதுபதி, இனிமைமலி ஈற்றடிகள் என்ற தலைப்பில் இரா. மணிமேகலை, சுவைமலி சொல்லாட்சி என்ற தலைப்பில் மா. சிதம்பரம் ஆகியோர் பேசுகின்றனர் என்றார்.
 விழா ஏற்பாடுகளை கம்பன் கழகத்தினர் செய்து வருகின்றனர்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் துவங்கி, சரிவுடனேயே முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 18,222.67 புள்ளிகளாகவும், நிஃப்டி 75.60 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாகவும் உள்ளது. மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: காலிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

செர்பியா: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து, காலிறுதி வாய்ப்பை இழந்தது. உலக குரூப், முதல் சுற்று போட்டியில் இந்தியா, செர்பியா அணிகள் மோதின. இதில் 1-2 என்று பின் தங்கியிருந்த இந்திய அணி, மாற்று ஒற்றையர் போட்டியிலும் சொதப்பியது. முதல் போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன், டிராக்கியிடம் 4-6, 2-6, 5-7 என்ற கணக்கிலும், அடுத்து லியாண்டர் பயஸ், 0-6, 1-6 என்ற செட்கணக்கிலும் தோல்வியடைந்தனர். இதையடுத்து 1-4 என்ற கணக்கில் தோற்று, இந்திய அணி வெளியேறியது.

* முதல் வெற்றியை ருசித்தது கனடா

புது தில்லி,மார்ச் 7: கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கனடா வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது கனடா.

 முதலில் ஆடிய கென்யா 50 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 பின்னர் ஆடிய கனடா 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
 முதலில் பேட் செய்த கென்ய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே அவ்மாவின் விக்கெட்டை இழந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வாட்டர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 இதன்பிறகு களம் புகுந்த சி. ஒபுயா அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டி.ஒபுயா 2, டிக்கோலோ 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது கென்யா.
 பின்னர் ஜோடி சேர்ந்த மிஸ்ராவும், கேப்டன் கமான்டேவும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். கமான்டே 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஓடோயோ களம் புகுந்தார்

மிஸ்ரா சிறப்பாக ஆடி அரைசதமடிக்க அந்த அணி 39.3 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. மிஸ்ரா 51 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் சரிந்தது கென்யா.

 50-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஓடோயோ 51 ரன்களில் ஆட்டமிழக்க கென்யாவின் ஆட்டம் 198 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

 கனடா தரப்பில் ஒசின்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

 கென்யா தோல்வி: 199 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது கனடா. ரிஸ்வான் சீமா, குணசேகரா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 தொடக்கத்தில் இருந்தே சீமா அதிரடியாக விளையாடினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 1 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஒட்டினோ பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.
 பின்னர் வந்த சர்க்காரி 10 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அணியின் ஸ்கோர் 48 ரன்களை எட்டியபோது நிதானமாக ஆடிய குணசேகரா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் பகாயும், ஹன்ஸ்ராவும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹன்ஸ்ரா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

 இறுதியில் அந்த அணி 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
 பகாய் 64 ரன்களுடனும், டேவிசன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஒசின்டே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
* பாகிஸ்தானை சமாளிக்குமா நியூசிலாந்து?

பல்லகெலே, மார்ச் 7: இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் உலகக் கோப்பையின் 24-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது நியூசிலாந்து.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே முதல் 3 ஆட்டங்களிலும் வென்றுள்ளதால், இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் தனது காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதனால் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திவிடும் எண்ணத்தில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

அதேசயம் நியூசிலாந்து அணி தான் விளையாடியுள்ள 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. அதனால் இந்த அணி எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று முனைப்பில் களமிறங்கும். மேலும் சமீபத்தில் தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் அதற்குப் பழி தீர்க்கும் வகையில் நியூசிலாந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோவில்

மூலவர் :  வாஞ்சிநாதேஸ்வரர்
 அம்மன்/தாயார் :  மங்களநாயகி, வாழவந்தநாயகி
  தல விருட்சம் :  சந்தன மரம். 
  தீர்த்தம் :  குப்தகங்கை, எமதீர்த்தம்.
  ஆகமம்/பூஜை :  காமிக ஆகமம்
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  திருவாஞ்சியம்
  ஊர் :  ஸ்ரீ வாஞ்சியம்
  மாவட்டம் :  திருவாரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
     
 அப்பர், சம்பந்தர், சுந்தரர்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் 
பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார்
 தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் 
என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம்.

தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.  
   
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.

இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.

மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

 பிரார்த்தனை
     
  மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.

பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.

தலபெருமை:
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு 
அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

குப்த கங்கை :ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார்.

அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை ஞாயிறு : தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார்

ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம்  "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.

கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி  எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.

 தல வரலாறு:
"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.

திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.

இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர்

 பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது.

மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும்.

மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

 திருவிழா:
     
  இரண்டாம் நாளே தீர்த்தவாரி : எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

tblanmegamideanews_39976137877.jpg

* வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக! - சாரதாதேவியார்.

* மனிதர்களில் யாரிடமாவது அன்பினைச் செலுத்தினால் அதற்காக நாம் துன்பப் பட்டே ஆக வேண்டும். எவன் தன் அன்பினை முழுமையாக கடவுளுக்குத் தருகிறானோ அவனே உண்மையில் பாக்கியவான். இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் என்பதே கிடையாது.

* கவலைப்படாதீர்கள்! அலைபாயும் மனதை அடக்கும் வலிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு. இறைநாமத்தை விடாது ஜபித்து வருபவர்களால் மட்டுமே புலன்களை கட்டுப்படுத்த முடியும்.

வினாடி வினா :

வினா -  உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு எது?

விடை - நியூசிலாந்து - 1927.  

இதையும் படிங்க :

* திருக்குறள் ஒப்புவித்தலில் 4 வயது குழந்தை அசத்தல்

large_200892.jpg

திண்டிவனம் : திண்டிவனத்தைச் சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை, திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்தி வருகிறாள். திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள வி.வி.ஆர்., காம்ப்ளக்சை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(41); திண்டிவனம் நகர கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு அமைப்பு செயலராக உள்ளார். இவரது மனைவி பிரபாவதி(35); வட ஆலப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணி புரிகிறார். இவர்களுக்கு கவிநிலவு(9) என்ற மகனும், பவித்ரா என்ற 4 வயது மகளும் உள்ளனர்.

சந்தைமேட்டு செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வரும் பவித்ரா, குழந்தை பருவத்தில் இருந்தே நினைவாற்றல் திறன் மிக்கவராக உள்ளாள். திருக்குறளில் பல்வேறு அதிகாரங்களில் 100க்கும் மேற்பட்ட குறள்களை சரளமாக ஒப்புவித்து அசத்துகிறாள். இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள், தமிழகத்தின் 32 மாவட்டங்கள், தமிழ் மாதங்கள், பாரதிதாசன் கவிதைகள், தேசத் தலைவர்களின் படங்களைப் பார்த்து அவர்களின் பெயர்களையும் கூறி, கேட்போரை வியக்க வைக்கிறாள். முருங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், 75 குறள்களை சரளமாகக் கூறி முதல் பரிசை பெற்றுள்ளாள். வரும் காலத்தில் மாநில அளவில் சாதனைப் பெண்ணாக உருவாக்குவதே லட்சியம் என, பவித்ராவின் பெற்றோர் தெரிவித்தனர்.







-- 

நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.














No comments:

Post a Comment