Wednesday, March 9, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 09 - 2011.
முக்கியச் செய்தி :

உலகின் தலைசிறந்த பெண்களில் 5 இந்தியர்கள் தேர்வு  

உலகில் தலைசிறந்த பெண்களின் பட்டியல்லில் அருந்ததி ராய் உள்ளிட்ட 5 இந்திய பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அதனை முன்னிட்டு, லண்டனில் இருந்து வெளிவரும் 'த கார்டியன்' பத்திரிகை உலகின் தலை சிறந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் எழுத்தாளர் அருந்ததிராய், பெண்ணுரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ சத்புதே, வந்தனா சிவா, அப்ராஜிதா கோகை, சம்பத் பால் தேவி ஆகிய 5 இந்திய பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர இந்திய வம்சாவளியை சார்ந்த இந்திரா நூயி மற்றும் இயக்குனர் மீரா நாயர் உள்ளிட்டவர்களும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

உலகச் செய்தி மலர் :

* எகிப்து: புதிய பிரதமர் பதவி ஏற்பு  

எகிப்தில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட எஸ்சாம் ஷராப் பதவி இன்று ஏற்றார்.

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை இராணுவம் தற்காலிகமாக கையிலெடுத்துக் கொண்டது.

இந்நிலையில் முபாரக் ஆட்சி காலத்தில் பிரதமரான அகமத் ஷாகிப்பையும் அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்

இக்கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்றதை தொடர்ந்து அகமது பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான எஸ்சாம் ஷரப்பை அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த வாரம் இராணுவம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட எஸ்சாம் ஷராப் பதவி இன்று ஏற்றார்.

பதவி ஏற்றதும் அவர் பேசுகையில்,பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டின் பாதுகாப்புத்தன்மை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீண்டும் கொண்டுவருவது தான் தமது முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* த.தே.கூ. எம்.பி. சிறீதரனை கொல்ல முயற்சி

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனை கொல்வதற்கு நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமேதுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

வவுனியா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக சிறீதரன் கொழும்புவிற்கு தனது வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, அனுராதபுரம் மாவட்டத்தில் நொச்சியகாமா என்ற இடத்தில் அவரது வாகனத்தின் மீது இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதன் பிறகு துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.

சிறீதரனுடன் இருந்த மெய்க்காப்பாளர்கள் பதிலுக்குச் சுட்டனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய கொலையாளிகள் தப்பிவிட்டனர் என்று தமிழ்நெட் செய்தி கூறுகிறது

இத்தாக்குதலில் காயம் ஏதுமின்றி உயிர் தப்பிய சிறீதரன், அதன் பிறகு அனுராதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறீதரன், ஈழத் தமிழர் பிரச்சனை மீது மிக ஆழமாக உரையாற்றினார். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிறிலங்க அரசு பயங்கரவாதமாக சித்தரித்ததை கண்டித்துப் பேசியதோடு, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண உதவ வேண்டிய இந்தியா, சிறிலங்க இனவாத திட்டத்திற்கு உடன்பட்டு செயலாற்றியதை எடுத்துக்காட்டிப் பேசினார். அப்போதே சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சீறிதரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர் எடுத்து வைத்த வாதத்திற்கு பதில் கொடுக்க அவர்களால் முடியவில்லை.

சிறீதரனை குறிவைத்ததுபோல், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவநேசனை கன்னிவெடித் தாக்குதல் நடத்தி சிறிலங்க படையினர் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் பிரச்சனையை வலுமையாகப் பேசும் உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* லிபியா புரட்சியாளர்கள் மீது போர் விமானங்கள் தாக்குதல் 

ரஸ்லனோப், மார்ச் 8- லிபியாவில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அந்நாட்டு விமானப்படையினர் போர் விமானங்கள் மூலம் இன்று தாக்குதல் நடத்தினர்.

எண்ணெய் துறைமுக நகரான லனோப் தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து அவர்கள் தலைநகர் திரிபோலி நோக்கி முன்னேறி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தான் இன்று போர் விமானங்கள் மூலம் அப்பகுதியில் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, திரிபோலி அருகேயுள்ள ஸாவியா நகரை புரட்சியாளர்களிடம் இருந்து அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

* யூனஸ் நீக்கம் சரியானதுதான்: வங்கதேச உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டாக்கா, மார்ச் 8- வங்கதேச கிராமின் வங்கி நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனஸ் தொடர்ந்த வழக்கில், அவரது பதவி நீக்கம் சரியானதுதான் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கிராமின் வங்கியின் பதவியில் இருந்து யூனஸ் நீக்கப்படுவதாக கடந்த வாரம், வங்கதேச அரசின் மத்திய வங்கியின் செய்தித்தொடர்பாளர் ஏ.எப்.எம். ஆசாத் உஸ்மான் அறிவித்தார்.

இதை எதிர்த்து முகம்மது யூனஸ் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, மும்தாஸ் உதீன் அகமது, கோவிந்த சந்திர தாக்கூர் ஆகியோர் அடங்கிய நீதபதிகள் குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யூனஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டது சரியானதுதான் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்

கிராமின் வங்கி நிர்வாக இயக்குநர் நியமனத்துக்கு வங்கதேச மத்திய வங்கியின் ஒப்புதல் பெறுவது அவசியம். ஆனால், கிராமின் வங்கியின் இயக்குநர்கள் குழு அத்தகைய அனுமதியை பெறாமலேயே யூனஸை நியமித்துள்ளது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறுங்கடன் வழங்குவதற்காக கிராமின் வங்கியை 1983-ல் யூனஸ் தொடங்கினார். கடந்த 11 ஆண்டுகளாக அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராக அவர் செயல்பட்டு வருகிறார்.

2006-ல் அமைதிக்கான நோபல் பரிசை முகம்மது யூனஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்க தூதரக அதிகாரி வழக்கு: பாக். நீதிமன்றம் ஒத்திவைப்பு

லாகூர், மார்ச் 8- இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் மீதான வழக்கு விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு லாகூர் கூடுதல் மாவட்ட நீதிபதி யூசஃப் அவுஜ்லா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேமண்டின் வழக்கறிஞர்கள் தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனிடையே, போலீஸார் தன் மீது தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் நகலை பெற ரேமண்ட் டேவிஸ் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

லாகூரில் கடந்த மாதம், தன்னிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர் என்று கூறி இரு பாகிஸ்தானியர்களை ரேமண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரேமண்டை விடுவிக்க பாகிஸ்தான் மறுப்பதுடன், அவர் சிஐஏ உளவாளி என்றும் குற்றம்சாட்டியுள்ளது

* தென் சூடானில் ராணுவம்-புரட்சியாளர்கள் மோதல்: 51 பேர் பலி

ஜுபா, மார்ச் 8, தென் சூடானில் ராணுவத்துக்கும் புரட்சிப் படையினருக்கும் நடைபெற்ற மோதலில் மொத்தம் 51 பேர் உயிரிழந்தனர்.

இந்த மோதல் காரணமாக, ஜோங்லெய் என்னுமிடத்தில் இருந்து தனது படையைச் சேர்ந்தவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக புரட்சி படையின் தளபதி ஜார்ஜ் அதோர் தெரிவித்தார். மோதல் நடந்தபோது அவரும் அங்குதான் இருந்ததாக கூறப்படுகிறது. ஆயுதப் பற்றாக்குறை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தென் சூடானில் கடந்த இரு வாரங்களாக ஆங்காங்கே வன்முறை நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று ராணுவத்துக்கும் - புரட்சி படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 35 பேர் புரட்சி படையைச் சேர்ந்தவர்கள். 16 பேர் ராணுவத்தினர்.
ஜூன் 9-ம் தேதி தென் சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

* சீனாவில் 30 ஆண்டுகாலமாக இருந்த சட்டம் விலக்கி கொள்ளப்பட உள்ளது.

பீஜிங்: சீனாவில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சட்டம் வரும் காலங்களில் விலக்கி கொள்ளப்பட உளளது. அரசின் இந்த முடிவால் சீன மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர். சீன அரசு தன்னுடைய நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 1970-ம் ஆண்டுகளில் ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றால் பெற்றோர்களுக்கு தகுந்த தண்டனை மற்றும் சலுகைகள் ரத்து போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் சட்டம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்ட வரப்போவதாக நேஷனல் கமிட்டி ஆப் பாப்புலேசன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் துணை இயக்குனர் வாங்க்யூகிங் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.இவ்வமைப்பின் மற்றொரு இணை இயக்குனரான ஜாங்லீ என்பவர் கூறுகையில் ஒரு குழந்தை திட்டத்தால் இளைஞர் மற்றும் வயதானவர்களின் இடையேயான எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.கடந்த 2009-ம் ஆண்டில் உள்ள வயதானவர்களின்எண்ணிக்கை 8.5 சதவீதமாக இருப்பது வரும் 2030 ஆண்டுகளில் 17.5 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று அரசு அஞ்சுவதே ஒரு குழந்தை திட்டத்தை மாற்றி அமைப்பதன் நோக்கமாகும்.

* நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி? லிபியா பரபரப்பு அதிகரிப்பு

ராஸ் லுனுப்: தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி, எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.

லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப்பவர்களை தற்போது, கடாபி ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இச்சண்டையில், எத்தனை பேர் பலியாயினர் என்பது தெரியவில்லை. எனினும் கணிசமான அளவு பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருதரப்பு சண்டையில், கடாபி ராணுவம், போர் விமானங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் போர் விமானங்கள் எதுவும் இல்லாததால், இதுவரை அவர்கள் பிடியில் இருந்த நகரங்கள் கடாபி வசமாகி வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள எதிர்ப்பாளர்கள் விடுத்த அறிக்கையில், "லிபிய விவகாரத்தில் அன்னிய நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்தால் அதுவே எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்' என்று, சர்வதேச கோரிக்கை வைத்தனர்.

ஐ.நா.,வில் குழப்பம்: இதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை செய்யும் தீர்மானம் ஒன்றை தயாரித்துள்ளன. இத்தீர்மானம் நாளை, ஐ.நா.,வில் விவாதத்திற்கு வரும் எனத் தெரிகிறது. அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர், லிபியாவில் அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை என்று, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். லிபியாவின் மீதான ராணுவ நடவடிக்கை அல்லது போர் விமானம் பறக்கத் தடை உள்ளிட்டவற்றுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைகள், லிபியா மீதான அன்னிய படையெடுப்புக்குச் சமம் என்றும் அது கருதுகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு "வீட்டோ' அதிகாரம் உள்ளதால், இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றவிடாமல் அதனால் தடுத்து விட முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. ஐ.நா.,வைத் தொடர்ந்து ஜப்பானும், தன் நாட்டில் உள்ள கடாபி சொத்துக்களை முடக்கி, லிபியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

கடாபி மகன் எச்சரிக்கை: கடாபி மகன்களில் ஒருவரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான சாடி கடாபி, நேற்று முன்தினம் அல் அராபியா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,"கடாபிக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், சோமாலியாவைப் போல லிபியாவிலும் உள்நாட்டுப் போர் மூளும். என் தந்தை, என் சகோதரரான சயீப் அல் இஸ்லாமிடமும், பிற அமைச்சர்களிடமும் அன்றாடச் செய்திகள் மற்றும் விலைவாசி பற்றி தன்னிடம் தகவல் தெரிவிக்கும்படி சொன்னார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாததால் தான் இப்போது இந்தளவுக்கு வந்து விட்டது' என்று தெரிவித்தார்.

வெளியேற கடாபி விருப்பம்? இதற்கிடையில், லிபியாவை விட்டு வெளியேறுவது குறித்து எதிர்த்தரப்புக்கு கடாபி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தன் தரப்பில் ஒரு பிரதிநிதியை பெங்காசியில் இயங்கி வரும் இடைக்கால தேசிய கவுன்சில் அரசிடம் அனுப்பி வைத்தார். தானும் தன் குடும்பத்தாரும் சொத்துக்களுடன் லிபியாவில் இருந்து பத்திரமாக வெளியேற அனுமதியளிக்க வேண்டும்; எதிர்காலத்தில் தன் மீது எவ்வித வழக்கும் போடக் கூடாது; இடைக்கால அரசை அங்கீகரிக்கும் விதமாக பார்லிமென்டில் ஒப்பதல் அளிக்கப்படும் என்ற கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார். ஆனால், கடாபியின் கோரிக்கையை ஏற்க எதிர்ப்பாளர்கள் மறுத்து விட்டனர். அவர், அவ்வாறு எளிதாக லிபியாவை விட்டு வெளியேறினால் அது, இதுவரை பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறியுள்ளனர். இடைக்கால அரசின் ஊடக செய்தித் தொடர்பாளர் முஸ்தபா கெரானி கூறுகையில்,"கடாபியிடம் இருந்து அதுபோன்ற கோரிக்கை வந்தது உண்மை தான். ஆனால், இன்றைக்கு லிபியா ரத்தம் சிந்தக் காரணமான அந்த ஆளை நாங்கள் எதற்காக நம்ப வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். கடாபி தப்பிச் செல்வது குறித்த இத்தகவலை லிபிய அரசு மறுத்துள்ளது.

"நேட்டோ' கண்காணிப்பு தீவிரம்: * லிபிய வான்வெளி மீதான 24 மணி நேர "வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு' (அவாக்ஸ்) முறையை "நேட்டோ' அமைப்பு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், நேட்டோ கண்காணிப்பு விமானங்கள் லிபிய வான்வெளியில் 24 மணி நேரமும், பறக்கும் விமானங்களை அடையாளம் கண்டறியும்.
* லிபிய எதிர்த்தரப்புக்கு உதவும் பல்வேறு முடிவுகளில், அவர்களுக்கு ஆயுதம் வழங்கும் திட்டம் பற்றியும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஆனால், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி இதுபற்றி கூறுகையில், "அது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது விதித்துள்ள ஆயுதப் பரிமாற்றத் தடைக்கு எதிரானது' என்று கூறியுள்ளார்.
* அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கடாபி ஆதரவாளர்கள் அவரை விட்டு விலகி விட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.
* கிழக்கு லிபியாவில் செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதால், பெங்காசி உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நேரும். அதனால், இடைக்கால அரசு இத்தாலியில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

* எம்.பி. மீது தாக்குதல்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம்

கொழும்பு, மார்ச் 8- இலங்கை எம்.பி. ஸ்ரீதரன் மீதான தாக்குதலுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் அவரது உதவியாளர்களும் பயணம் செய்த வாகனம் மீது கைக்குண்டுகள் வீசியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் நடத்தப்பட்ட தாக்குதலை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

இத் தாக்குதலில் ஸ்ரீதரனும் அவரது உதவியாளர்களும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிய வருகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம், விதம் போன்றவை இவர்களைக் கொலை செய்யும் நோக்குடனேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
இலங்கை அரசினால் இயக்கப்படும் ராணுவப் புலனாய்வுக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசின் உயர்பீடத்தின் திட்டத்தின் அடிப்படையிலேயே தாக்குதல் நடத்தியோர் இயங்கியிருக்க வேண்டும். இத்தகைய சந்தேகங்கள் எழுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களும் இலங்கை அரசின் உயர்மட்ட ஆதரவுடன் சட்டத்துக்குப் புறம்பான முறையில் ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வந்ததை அம்பலப்படுத்தியது.
இத்தகைய சம்பவங்கள் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று இலங்கை அரசு தொடர்ந்தும் எண்ணுகிறது என்பதை இச்சம்பவத்தின் மூலம் உணர முடிகிறது.

அண்மையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அன்னையின் அஸ்தி சிதைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பது சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களம் தொடுத்த வந்த போரும், முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஈழத் தமிழர் தேசத்திடம் மூட்டியுள்ள கோபக்கனலை இத்தகைய சம்பவங்கள் மேலும் கொழுந்துவிட்டு எரிய வைக்கக் கூடியவை.
இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் தமிழர் மீதான இனப்படுகொலை போன்றவை குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற குரல்கள் மேலெழுந்துவரும் சூழலில், மக்கள் பிரதிநிதி ஒருவர் மீதான கொலை முயற்சியும் நடைபெற்றிருக்கிறது.
இலங்கை அரசே இந்த குற்றச்செயலுக்குப் பின்னணியில் இருப்பதாக நாம் கருதுவதால் இச்சம்பவமும் அனைத்துலக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* சாரா பாலின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்

வாஷிங்டன், மார்ச் 8: அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் முக்கிய பெண் தலைவரான சாரா பாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

2008- ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, சாரா பேலின் குடியரசுக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர்.

தங்களுக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிபிசி நிறுவனத்துக்கு பாலினின் பெற்றோர் சக் மற்றும் சாலி ஹீத் அளித்த போட்டியில், "பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் நாங்கள் மிகுந்த பயத்தில் உள்ளோம். தற்காப்புக்காக இரவில் துப்பாக்கியுடன்தான் தூங்குகிறோம்' என்றனர்.

தேசியச் செய்தி மலர் :

* தாமஸ் நியமனம்; நான் காரணம் அல்ல: பிரதமர்புதுதில்லி, மார்ச் 8: ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையரை (சிவிசி) தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பங்கேற்கும்வரை பி.ஜே.தாமஸ் மீதான ஊழல் வழக்கு குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

சிவிசி நியமன விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஊழல் கண்காணிப்பு ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்கான உயர்நிலைக் குழுவின் கூட்டத்தில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தாமஸ் மீதான ஊழல் வழக்கு பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார். அந்தத் துறையின் அமைச்சராக அப்போது பிருத்விராஜ் சவாண் இருந்தார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்து வந்தன. இது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை பேசிய பிரதமர், தாமஸ் நியமனம் தொடர்பாக முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார்.

பிரதமரின் விளக்கத்தால் திருப்தியடையாத எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, "பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் முன்வந்திருக்கும் நிலையில், தாமûஸ அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு நெருக்கடி கொடுத்தவர் யாராக இருந்தாலும் அவரையும் இதற்குப் பொறுப்பாக்க வேண்டும். இதுபற்றி பிரதமர் என்ன சொல்கிறார்? வருங்காலத்தில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

சிவிசியைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தை தள்ளிவைக்கலாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். அதைப் புறக்கணித்துவிட்டு, தாமûஸத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என முன்னரே முடிவு செய்த திட்டத்துடன் அரசு இருந்தது ஏன்?
ஒப்பீட்டளவில் நேர்மையானவர்களாகக் கருதப்பட்ட மற்ற இருவரையும் புறந்தள்ளிவிட்டு, குற்றப்பத்திரிகையில் பெயர் இருக்கும் ஒருவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார்?
பரிசீலனையில் இருக்கும் மூவரில் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகி இருக்கிறது என்பது தேர்வுக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டதா?

அப்படித் தெரிவிக்கப்படவில்லை எனில், அதற்கு யார் காரணம்? பணியாளர் மற்றும் பயிற்சித்துறையா? பிரதமர் அலுவலகமா? அல்லது வேறு யார்? என்று அருண் ஜேட்லி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசும்போது, "தாமஸ் நியமிக்கப்பட்டதில் அரசுக்கு யாரேனும் நெருக்கடி கொடுத்தார்களா? அப்படி ஏதும் இருந்தால் அது பற்றி அவையில் தெரிவிக்க வேண்டும். அதை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ளலாம் ' என்றார்.
தாமûஸத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் பிரதமருக்கு இருந்திருக்குமானால் அதுபற்றிய முழு விவரங்களையும் அவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் து.ராஜாவும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்து பிரதமர் பேசியது: பாமாயில் இறக்குமதி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பது பற்றியோ, அது ஊழல் தொடர்பானது என்பது பற்றியோ சிவிசியைத் தேர்வு செய்யும் உயர்நிலைக் குழுக்கூட்டத்துக்குச் செல்லும்வரை எனக்குத் தெரியாது.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதுதான் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஊழல் வழக்குப் பிரச்னையை எழுப்பினார். இருப்பினும், கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராகவும் மத்திய அரசின் இரு துறைகளுக்கு செயலராகவும் பதவி வகித்தவர் தாமஸ் என்பதால், ஊழல் வழக்குகள் தொடர்பான அம்சங்கள் தீர்வு செய்யப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். அதனால், அவரை சிவிசியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளைத் தொடர்ந்தோம்.

சிவிசியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய குறிப்பு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டு அந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பிலும் பி.ஜே.தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்த விவரம் எதுவும் இல்லை என்றார் பிரதமர்

* நிதி நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, மார்ச் 8: முதலீடு செய்பவர்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டத்தை 1997-ல் தமிழக அரசு இயற்றியது. முதலீட்டாளர்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து நிதி நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தமிழக அரசு இயற்றியுள்ள சட்டம் அரசியலைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதே.

இது போன்ற சட்டம் வரவேற்கத்தக்கதே என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் குறிப்பிட்டனர்.

* "சுவிஸ் வங்கிக் கணக்குகள் விவரம் ஏப்ரல் முதல் கிடைக்கும்'

புது தில்லி, மார்ச் 8: சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள சில குறிப்பிட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் ஏப்ரலில் இருந்து கிடைக்கும் என மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது:

இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் 2010 ஆகஸ்ட் 30-ல் கையெழுத்திட்டுள்ளன.

இதையடுத்து ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின் இந்தியர்களின் சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை மத்திய அரசு பெற முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

* திருப்பதி கோயில் நிதி: ஆந்திர அரசுக்கு நீதிமன்றம் தாக்கீது  


திருப்பதி கோயில் நிதி மாநிலத் திட்டங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆந்திர அரசுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

திருப்பதி தேவஸ்தான நிதி, சேவைப் பணிகள் சாராத பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படுவதை எதிர்த்து பானு பிரகாஷ் ரெட்டி என்பவர் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஆந்திர அரசு, திருப்பதி தேவஸ்தான நிதியை அரசின் நலத்திட்டங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்வதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு கூறி ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.

மேலும் திருப்பதி ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான செலவை திருப்பதி தேவஸ்தானமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ரயில்வேத் துறை ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்ததால் ரயில்வே அமைச்சருக்கும் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: மீரா குமார் உறுதி  

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சபாநாயகர் மீரா குமார் உறுதியளித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினமான இன்று இதனை தெரிவித்த அவர், மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.

* மாணவிகளுக்கு இலவச ரயில் சீசன் டிக்கெட்

புதுதில்லி, மார்ச் 8- உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று ரயில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும், ரயில்வேத்துறை சார்பில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் மம்தா கூறினார்

* 2ஜி ஊழலால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தா?: சிபிஐ விசாரணை

புதுதில்லி, மார்ச்.8: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் பதவிக்காலத்தில் தகுதியில்லாத நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதன் மூலம் தேசப் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டப்பட்டதா என்பது குறித்து சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கவலை தெரிவித்ததன் அடிப்படையில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரதீப் சத்தாவிடம் சிபிஐ தெரிவித்தது.
இந்த வழக்கில் சிபிஐக்கு உதவும் வகையில் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
தங்களது விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
எனினும் சுப்ரமணிய சுவாமி இன்று நீதிமன்றத்துக்கு வராததால் இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்துக்கு சென்றிருந்ததால் சுவாமி சிறப்பு நீதிமன்றத்துக்கு வரவில்லை. சுவாமி நீதிமன்றத்தில் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் தருண் கோம்பர் கோரிக்கை விடுத்தார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

* ஹசன் அலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, மார்ச்.8: வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, ஆயுத வியாபாரிகள் மற்றும் பயங்கரவாதச் செயல் புரிவோருடன் தொடர்பு வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படும் புனே குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலிக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் இதர கடுமையான சட்டங்களை பயன்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக ஹசன் அலிக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறதா என்பதை ஆய்வுசெய்யுமாறும் நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மத்திய அரசை கேட்டுக்கொண்டது

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வழக்கில் சரியான திசையில், சரியான வேகத்தில் விசாரணை நடைபெற வில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து ராம் ஜேத்மலானி தாக்கல் செய்த பொதுநலன் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு குறிப்பிட்டது.
வெளிநாடுகளில் பெருமளவு கறுப்புப் பணம் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஹசன் அலி கான் நேற்று நள்ளிரவு அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஹசன் அலி கானுக்கு எதிராக விசாரணை நடத்திவந்த 4 அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டது குறித்தும் விரிவான அறிக்கை தருமாறும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த அதிகாரிகள் அமலாக்கப் பிரிவில் வேறு பணிகளை கவனிக்கச் சென்றிருந்ததாகவும், மீண்டும் அதே பணிக்குத் திரும்ப நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் அரசு பதிலளித்தது.
எனினும் இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் உறுதி அளித்தார்

இதனிடையே கறுப்புப் பணம் குறித்த தங்களின் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து இன்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அளித்தது. அதில் ஹசன் அலியை நேற்று இரவு கைது செய்ததையும் அமலாக்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அமலாக்கப் பிரிவு அறிக்கை தவிர, வருமான வரித்துறை இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் அளிக்க இருப்பதாக சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

* "வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் வருமான வரி கணக்கு, பரம்பரை சொத்து விவரம் கட்டாயம்'

புது தில்லி, மார்ச் 8: வேட்பாளர் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் வருமான வரி கணக்கு, பரம்பரை சொத்து விவரங்களைத் தெரிவிப்பதை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது.

அத்துடன் வேட்பாளரின் மனைவி அல்லது கணவரின் சொத்து விவரத்துடன், வாரிசுகளின் சொத்து விவரங்களையும் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரம்பரை சொத்து விஷயத்தில் அது விவசாய நிலமா, விவசாயம் சாராத நிலமா, வர்த்தகப் பயன்பாட்டுக்குரிய கட்டடமா, குடியிருப்புக் கட்டடமா, அதன் இப்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* கருணை கொலை: உலக நாடுகள் போல இந்தியாவிலும் புதிய பாதைபுதுடில்லி: "குணப்படுத்த இயலாத வகையில், நோய்வாய்ப்பட்டிக்கும் ஒருவரை, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து, அவரது உயிர் போகச் செய்வதை, அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதன் மூலம், சில வகையான கருணைக் கொலைகளை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது

ஒருவரை, விஷ ஊசி போட்டோ அல்லது வேறு முறைகளிலோ, டாக்டர்கள் முன்னிலையில் உடனடியாக சாக அனுமதிப்பதாகும். அதேநேரத்தில், கருணைக் கொலையின் அடுத்த கட்டமான, "பேசிவ் யுதான்சியா' என்பது, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஒருவரை உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, அவரது உயிரை, சிறிது நேரத்தில் அகற்றுவதாகும். அதாவது, நோயாளி மரணமடைய வேண்டும் என்பதற்காகவே, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை வாபஸ் பெறுவது. உதாரணமாக, ஒருவர் உயிர் வாழ சிறுநீரக டயாலிசிஸ் அவசியம் எனில், அதை செய்யாமல், டயாலிசிஸ் இயந்திரத்துடனான இணைப்பை துண்டித்து, நோயாளியைசாக விடுவதாகும். அதே போல செயற்கை சுவாசக் கருவி இணைப்பை துண்டிப்பதும் மற்றொரு வகை. இதை, "பேசிவ் யுதான்சியா' எனலாம். உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பைத் துண்டித்து, ஒருவரை சாக விடுவது என்பது, பல நாடுகளில் கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. மாறாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

நோயாளியின் ஒப்புதலுடன், இந்த முறையில் அவரை கொல்வது, "தானாக முன்வந்து ஏற்றுக் கொள்ளும் கருணைக் கொலை' என, பெல்சியம், லக்சம்பெர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் ஓரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது மற்றும் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளி தன் மரணத்தை டாக்டரின் உதவியுடன் தானே தேடிக் கொண்டால், அது, "ஆதரவு தற்கொலை' என, விவரிக்கப்படுகிறது. தான் மரணம் அடைய விரும்புவதை தெரிவிக்க இயலாத நிலையில் நோயாளி இருந்து, உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பை துண்டித்து அவரை சாகவிட்டால், அது மற்றவர்களின் யோசனையின் பேரில் செய்யப்படும் கருணைக் கொலையாகும். ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் அனுமதி கொடுத்தால், இதுபோன்ற கருணைக் கொலையை செய்யலாம் என, அல்பேனியா சட்டம் தெரிவிக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் சுயநல நோக்கத்தோடு, "ஆதரவு தற்கொலைகளை' மேற்கொண்டால், அது தண்டிக்கப்படக்கூடிய குற்றம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷ ஊசி போட்டோ அல்லது மற்ற முறைகளிலோ, டாக்டர்கள் முன்னிலையில் ஒருவரை சாக அனுமதிப்பது (ஆக்டிவ் யுதான்சியா) சட்ட விரோதம் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பை துண்டித்து, ஒருவரின் உயிர் போக அனுமதிப்பதை, அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே அமல்படுத்தலாம் என, நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த இரண்டு விதமான கருணைக் கொலைகள் தொடர்பாக, பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் கூறுவது என்ன? இந்த தீர்ப்பு, டாக்டர்கள் நடுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணைக் கொலை வேண்டாம் எனக் கூறிய கருத்தை வரவேற்றனர். பெங்களூரு இதயநோய் நிபுணர் ஷெட்டி கூறியதாவது: கருணைக் கொலையை சாதகமாகப் பயன்படுத்தும் போக்கைத் தடுக்கும். கருணைக் கொலை என்பது, உணர்வுப்பூர்வ விஷயம். "கருணைக் கொலை' என்றழைப்பதில், "கருணை' வார்த்தை அளவில் இருக்கிறது. அதுவும் கொலை தான். இந்த விஷயத்தை அணுகுவதற்கு நாட்டில் இன்னமும் பக்குவம் வரவில்லை. மருத்துவ ரீதியாக ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சி என்ற பெயரில், கருக்கலைப்பு நடத்தப்படுகிறது. மருத்துவ உலகில் இதை, "எம்.டி.பி' என்கின்றனர். அதே போல, கருணைக் கொலைக்கும் அனுமதி வந்தால், அதற்கேற்ப வளைத்து சாதகமாக்கிக் கொள்வர். அப்படியே சட்டம் வந்தாலும், ஐகோர்ட் மேற்பார்வையில், உரிய நடைமுறைகளுடன் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ஷெட்டி கூறினார். இதே கருத்தை, பல்வேறு முன்னணி டாக்டர்களும் தெரிவித்தனர்.

* வா‌க்காள‌‌ர்க‌‌ள் இலவச பொரு‌ள் வா‌ங்‌கினா‌ல் ‌ப‌றிமுத‌ல்: தே‌ர்த‌ல் ஆணைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை  

வா‌க்காள‌ர்களு‌க்கு ‌வீ‌ட்டு உபயோக‌‌‌ப் பொரு‌ட்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட இலவச பொரு‌ட்க‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டா‌ல் அவை ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌ல் ‌ஏ‌ற்பாடுக‌ள் கு‌றி‌த்த ஆலோசனை கூ‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய ஈரோடு மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சவு‌ண்டையா, ஈரோடு மாவ‌ட்ட‌த்‌தி‌ல் தே‌ர்த‌ல் தொட‌ர்பாக இதுவரை 9 புகா‌ர்க‌ள் பெற‌ப்ப‌ட்டிரு‌ப்பதாக கூ‌றினா‌ர்.

அர‌சிய‌ல் க‌ட்‌சி‌யின‌ர் வா‌க்காள‌ர்களு‌க்கு இலவசமாக பொரு‌ட்க‌ள் வழ‌ங்‌கியதாக புகா‌ர் வ‌ந்தா‌ல் ‌வீடுக‌ளி‌ல் அ‌திரடி சோதனை மே‌ற்கொ‌‌ள்ள‌ப்படு‌ம் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

‌வீடுக‌ளி‌ல் பு‌திதாக வா‌ங்‌கி வை‌த்‌திரு‌க்கு‌ம் கு‌ளி‌ர்சாதன பெ‌‌ட்டி, ‌மி‌க்‌‌ஸி உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌ற்கு க‌ட்டாய‌ம் ர‌சீது வை‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் சவு‌ண்டையா கூ‌றினா‌ர

மாநிலச் செய்திகள் :

*  திரு‌ப்பூ‌‌ரி‌ல் சாய ஆலைஉ‌ரிமையா‌ள‌ர்க‌‌ள் குடு‌ம்ப‌த்துட‌ன் ம‌றிய‌ல்: 1500 பே‌ர் கைது 

செ‌ன்னை: சாய ஆலை ‌பி‌ர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வு காண வ‌லியுறு‌த்‌தி ‌திரு‌ப்பூ‌ரி‌ல் சாலை ‌ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட சாய ஆலை உ‌ரிமையாள‌ர்க‌ள், ஊ‌ழிய‌ர்க‌ள் உ‌ள்பட அவ‌ர்களது குடு‌ம்ப‌த்‌தின‌ர் 1,500 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

‌திரு‌‌ப்பூ‌‌‌ரி‌ல் உ‌ள்ள சாய ஆலைக‌ளி‌‌ன் க‌ழிவு ‌நீரா‌ல் நொ‌ய்ய‌ல் ஆ‌று மாசுபடுவதாக ‌‌‌விவசா‌யிக‌ள் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌‌ந்தன‌ர்.

இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், ‌திரு‌ப்பூ‌‌ரி‌ல் உ‌ள்ள 739 சாய ஆலைக‌ள் மூட‌ உ‌த்தர‌வி‌ட்டது. இதையடு‌த்து சால ஆலைக‌ள் மூட‌‌ப்ப‌ட்டதா‌ல் பல ஆ‌‌யிர‌க்கண‌க்கான தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை இ‌ழ‌ந்தன‌ர்.

இ‌ந்‌ந ‌நிலை‌யி‌ல் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ஆலைகளை உடனடியாக ‌திற‌க்க நடவடி‌க்கை எடு‌க்க கோ‌ரி ‌திரு‌ப்பூ‌ர் டவு‌ன் ஹா‌ல் மு‌ன்பு சாய‌ ஆலை உ‌ரிமையாள‌ர்க‌ள், தொ‌ழிலாள‌ர்க‌ள் 1500 பே‌ர் குடு‌ம்ப‌த்துட‌ன் இ‌ன்று சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் அனைவரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

*  செ‌ன்‌ட்ர‌‌‌லி‌ல் இர‌யி‌‌‌‌‌ல் ‌சீ‌ட் 50 ரூபா‌ய்! கூ‌வி ‌வி‌ற்கு‌ம் போ‌ர்‌ட்டர்க‌ள்  

இர‌யி‌லி‌ல் ‌மு‌ன்ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌டாத பயண‌ப் பெ‌ட்டி‌‌யி‌ல் ஒரு ‌இரு‌க்கையை 50 ரூபா‌ய் முத‌ல் 100 ரூபா‌ய் என கூ‌வி கூ‌வி ‌வி‌ற்‌கிறா‌ர்க‌ள் போ‌ர்‌ட்ட‌ர்க‌ள். காவ‌ல் துறை‌யின‌ர் உத‌வியுட‌ன் நட‌க்கு‌‌ம் இ‌ந்த கொடுமை செ‌ன்னை செ‌‌ன்‌ட்ர‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌‌த்த‌ி‌ல்தா‌ன் ‌நடக்‌கிறது.

செ‌‌ன்‌ட்ர‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் இரு‌ந்து கோவை‌க்கு ‌இரவு 9 ம‌ணி‌க்கு புற‌ப்ப‌ட்டு செ‌ல்‌கிறது ‌நீல‌கி‌ரி ‌விரைவு இர‌யி‌ல். ‌தினச‌ரி இர‌யி‌ல் சேவையாக ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த இர‌யி‌லி‌ல் செ‌ல்வத‌ற்காக நே‌ற்‌றிரவு 8 ம‌ணி‌க்கு செ‌ன்‌ட்ர‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் வ‌ந்தே‌ன். இ‌ந்த இர‌யி‌லி‌ல் 10 மு‌ன்ப‌திவு பெ‌ட்டி, 2 கு‌ளி‌ர்சாதன பெ‌ட்டி, மு‌ன்ப‌திவு செ‌ய்‌ய‌ப்ப‌டாத பெ‌ட்டிக‌ள் 3 உ‌ள்ளன.

9 வது ‌பிளா‌ட்பா‌‌ரத்‌தில‌் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த இ‌ந்த இர‌யி‌‌லி‌ன் மு‌ன் ப‌க்க‌ம் உ‌ள்ள மு‌ன்ப‌திவு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டாத பெ‌ட்டி‌யி‌ல் கூ‌ட்‌‌‌ட‌ம் அலைமோ‌தியத‌ா‌ல் ‌பி‌ன் ப‌க்க‌ம் உ‌ள்ள மு‌ன்ப‌திவு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டாத பெ‌ட்டி‌யி‌ல் கூ‌ட்‌‌‌ட‌ம் அலைமோ‌தியத‌ா‌ல் ‌பி‌ன் ப‌க்க‌ம் உ‌ள்ள மு‌ன்ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌டாத பெ‌ட்டி‌யி‌ல் பயண‌ம் செ‌ய்ய‌செ‌ன்றே‌‌ன். அ‌ப்போது கொ‌ண்டு வ‌ந்த பையை கா‌லியாக இரு‌ந்த இரு‌க்கை‌யி‌ல் வை‌த்து அம‌ர முய‌ன்றே‌ன். அ‌ப்போது ஒரு போ‌‌ர்‌ட்ட‌ர் ஓடி வ‌ந்த இ‌ந்த ‌இரு‌க்கை வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌‌ல் 50 ரூபா‌ய் கொடு எ‌ன்று சொ‌ல்‌கிறா‌ர்

மு‌ன் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டாத இரு‌க்கை‌க‌ளி‌ல் து‌ண்டை போ‌ட்டு‌‌ம், பே‌ப்பரை ‌வி‌ரி‌த்து‌‌ம் இட‌ம் ‌‌பி‌டி‌த்து வை‌க்கு‌ம் போ‌ர்‌ட்ட‌ர்க‌ள் 100 ரூபா‌ய்‌க்கு இரு‌க்கையை ‌வி‌ற்பதாக அ‌ந்த இர‌யி‌லில‌் ‌தின‌மு‌ம் பயண‌ம் செ‌ய்யு‌ம் அர‌க்கோண‌த்தை சே‌‌ர்‌ந்த ஒருவ‌ர் கூறு‌கிறா‌ர். காவ‌ல்துறை உத‌வியோடுதா‌ன் அவ‌‌ர்க‌ள் இ‌ப்படி செ‌ய்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறா‌ர் அ‌ந்த ‌தினச‌ரி பய‌ணி.

உலக தர‌த்து‌க்கு செ‌ன்‌ட்ர‌‌ல் ‌இர‌யி‌ல் ‌நிலைய‌‌ம் மே‌ம்படு‌த்த‌ப்ப‌டு‌ம் எ‌ன்று இர‌யி‌ல்வே ‌நி‌ர்வாக‌ம் அ‌றி‌வி‌த்து எ‌ன்ன பய‌ன்? எ‌ப்போது‌ம் பரபர‌ப்பாக காண‌ப்படு‌ம் செ‌ன்‌ட்ர‌ல் இர‌யி‌ல் ‌நிலைய‌‌த்‌தி‌ல் இ‌ப்படி ஒரு அவல ‌‌நிலை காண‌ப்படுவது பொதும‌க்களை வேதனை‌யி‌ல் ஆ‌ழ்‌த்‌தி உ‌ள்ளது. பேரு‌ந்துக‌ளி‌ல் அ‌திக க‌ட்டண‌ம் எ‌ன்றுதா‌ன் ஏழை ம‌க்‌க‌ள் இர‌யி‌‌ல் பயண‌த்தை நாடு‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி இரு‌க்கு‌ம்போது இ‌ப்ப‌டி‌ப்ப‌ட்ட போ‌ர்‌ட்ட‌ர்க‌ள் அராஜகமாக பணவே‌ட்டை‌யி‌ல் ஈடுபடுவது எ‌‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌நியாய‌ம் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்பு‌கி‌ன்றன‌ர் பொதும‌க்க‌ள

பண‌த்தை பெ‌ற்று‌க் கொ‌ண்டு இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நிக‌‌ழ்வுகளை காவ‌ல்துறை க‌ண்டு கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பதாக புகா‌ர் கூறு‌ம் பொதும‌க்க‌ள், போ‌‌ர்‌ட்ட‌ர்க‌ளி‌ன் அடாவடி செயலை இர‌யி‌ல்வே ‌நி‌ர்வாக‌ம் தடு‌க்க வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர்

* ஜிப்மர் எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பங்கள் விநியோகம்

புதுச்சேரி, மார்ச் 8: புதுச்சேரியில் ஜிப்மர் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 98 எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 6 முதல் ஜ்ஜ்ஜ்.த்ண்ல்ம்ங்ழ்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான சேவையை ஜிப்மர் வழங்கியுள்ளது. இந்தச் சேவை ஏப்ரல் 18-ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 9 முதல் ஏப்ரல் 25 வரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கு ரூ.1000-ம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.650-ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இணையதளம் மூலமாக விண்ணப்பிப்போர், விண்ணப்பித்த பின் அவர்களுக்கு உடனே குறியீட்டு எண் வழங்கப்படும். அந்தக் குறியீட்டு எண்ணைக் குறிப்பிட்டு, விண்ணப்பத்துக்கான தொகையை அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ள் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ், ஒஐடஙஉத என்ற பெயருக்கு, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து Professor- Academic, JIPMER, Puducherry என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 25. ஜூன் 5-ல் நாடு முழுவதும் 12 மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்திலோ, 0413 2296102, 2296104, 2296106 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

2 விண்ணப்பங்களைத் தவிர்க்க வேண்டும்: கடந்த ஆண்டு சில நாள்கள் விண்ணப்பங்கள் கிடைக்காத நிலை இருந்தது. வெளியூரில் இருந்து வருவோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த ஆண்டு இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜிப்மர் செய்தித் தொடர்பாளர்
சங்கரநாராயணனிடம் கேட்டபோது அவர் கூறியது:

தற்போது இணையதளத்தை பெரும்பாலான மாணவர்கள் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எளிது. தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள், காலதாமதமாக கூட வரும் வாய்ப்புகள் உள்ளன

அதனால் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது சிறந்தது. பலருக்கு விண்ணப்பப் படிவங்கள் மூலம் விண்ணப்பிப்பது மட்டுமே நம்பகமானது என்று நினைக்கின்றனர்.

பலர் இணையதளம், விண்ணப்பப் படிவம் ஆகிய 2 முறையிலும் விண்ணப்பிக்கின்றனர். 2 முறைக்கும் பணத்தை செலவிடுகின்றனர். இதைக் கண்டுபிடித்து முறைப்படுத்த நாங்கள் சிரமப்படுகிறோம்.

இதனால் எங்களுக்கு வேலைப் பளு அதிகமாகிறது. இதை தேர்வெழுதுவோர் தவிர்க்க வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் அதிகளவில் அச்சடிக்கப்பட்டு வீணாக்கக்கூடாது என்பதற்காக தற்போது 15 ஆயிரம் விண்ணப்பப் படிவங்களை பாரத ஸ்டேட் வங்கிக்கு வழங்கியுள்ளோம்.

அதன் விற்பனை நிலவரத்தை கண்காணித்து, தீர்ந்துவிடும் நிலையில் உடனே கூடுதல் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பங்கள் கிடைக்கிறதா என்று ஜிப்மர் மருத்துவமனைக்கு போன் மூலம் தகவல் அறிந்து வந்தால், சம்மந்தப்பட்டவர்கள் சிரமத்தை தவிர்க்கலாம். அதை விட இணையதளத்தைப் பயன்படுத்துவது சிறந்தது என்றார்.

* தேர்தல் விதிமுறை மீறல்: திமுக மாவட்டச் செயலர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, மார்ச் 8: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான டி.செங்குட்டுவன் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.

கடந்த 6-ம் தேதி கிருஷ்ணகிரி அருகே மோகனப்பள்ளி அருகே உள்ள காட்டிநாயனப் பள்ளியில் துணை முதல்வரின் பிறந்தாள் விழா என்ற பெயரில் 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலர் டி.செங்குட்டுவன் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றிய திமுக செயலர் வெங்கட்டப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரி அருகே சிக்காரிமேடு என்ற இடத்தில் ஜலகேசன் என்பவர் தனது இல்ல விழாவில் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகச் செய்தி மல்ர் :

* சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்வு   

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்ந்து 18,439 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 5,520 புள்ளிகளில் முடிவடைந்தது.

பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது

ஹீரோ ஹோண்டா, மாருதி சுஸுகி, ஐடிசி, டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

* தனி நபர் வருவாய் உயர்ந்துள்ளதாம்: அரசு கூறுகிறது!  

009-10ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருவாய் 14.5 விழுக்காடு உயர்ந்து ரூ.46,492 ஆக உயர்ந்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2008-09ஆம் நிதியாண்டில் நாட்டின் தனி நபர் வருவாய் ரூ.40,605 ஆக இருந்ததென்றும், அது 2009-10இல் ரூ.46,492 ஆக உயர்ந்துள்ளது என்றும் மக்களவையில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளித்த திட்ட நடைமுறையாக்க அமைச்சர் எம்.எஸ்.கில் கூறியுள்ளார்.

இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருவாய் நாட்டின் ஒட்டுமொத்த வருவாயை நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையைக் கொண்டு வகுப்பதால் வரும் சராசரியாகும். அதுவும் 2009-10ஆம் ஆண்டின் சராசரி வருவாய் இப்போதுள்ள விலையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - அதாவது பணவீக்கத்தால் ஏற்பட்ட உயர்வைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கில் கூறியுள்ளார்.

2004-05ஆம் நிதியாண்டில் நாட்டின் ஊரகப் பகுதிகளில் தனி நபர் ஆண்டு வருவாய் ரூ.16,327 ஆகவும், நகரப் பகுதிகளில் தனி நபர் ஆண்டு வருவாய் ரூ.44,223 ஆக இருந்ததெனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த அடிப்படையில் சராசரி வருவாய் மதிப்பிடப்படவில்லை.

விளையட்டுச் செய்திகள் :


* கிரிக்கெட் கருவிகளுக்கு சுங்கத் தீர்வை விலக்கு: மத்திய அரசு  

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேவையான கருவிகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் இறக்குமதிக்கு சுங்கத் தீர்வை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளித்த அமைச்சர் அஜய் மக்கான், “கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தேவையான கருவிகளை இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமான சுங்கத் தீர்வை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்

* பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸீலாந்து   

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூஸீலாந்து அணி எடுத்த 302 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் 192 ரன்களுக்குச் சுருண்டது. ராஸ் டெய்லரின் காட்டுத் தர்பார் சதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் வீழ்ச்சியடைந்தனர்.

பாகிஸ்தான் அணி 41.4 ஓவர்களில் 192 ரன்களுக்குச் சுருண்டது. ரஸாக் மாடுமே கடைசி வரை அச்சுறுத்தலாகத் திகழ்ந்து அதிகபட்ச ஸ்கோராக 62 ரன்களை எடுத்தார்.

உமர் குல் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 34 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நாட் அவுட்டாக இருந்தார்.

உமர் அக்மலும் ரசாக்கும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 36 ரன்களைச் சேர்த்து சிறிதே நம்பிக்கை அளித்தனர். ஆனால் அப்போது உமர் அக்மல் 38 ரன்கள் எடுத்து நேதன் மெக்கல்லமின் ஷாட் பிட்ச் பந்தை, அதாவது வெளியே அடித்திருக்க வேண்டிய பந்தை கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அப்துல் ரெஹ்மான் அடுத்தபடியாக ஆட்டமிழக்க ஸ்கோர் 125/8 என்று 33-வது ஓவரில் இருந்தது.

அதன் பிறகு உமர் குல்லும், ரசாக்கும் இணைந்து பவர் பிளேயில் 5 ஓவர்களில் 43 ரன்களை எடுத்து சற்றே பீதியைக் கிளப்பினர்.

ஆனால் அதன் பிறகு ஸ்கோர் 191 ரன்களை எட்டியபோது ரசாக் என்ன செய்ய முடியும் என்பதை நியூஸீலாந்து அறிந்திருந்த வேளையில் அவர் ஸ்டைரிஸ் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்

ஷோயப் அக்தர், இவர் இன்றைய ஹீரோவும், இன்றைய வில்லனும் ஆவார். மெக்கல்லத்தை வீழ்த்தியதன் மூலம் ஹீரோவாகவும் கடைசியில் ஒரே ஓவரில் 28 ரன்களை கொடுத்து வில்லனாகவும் திகழ்ந்தவர் வந்தவுடன் ஆட்டமிழந்தார்.

முன்னதாக துவக்க வீரர்கள் பலர் எந்த விதமான உத்தியுமின்றி தாறுமாறான கால் நகர்த்தல் மூலம், அணுகுமுறையின்றி விளையாடி 66 ரன்களுகு 6 விக்கெட்டுகளை இழந்து போட்டியைக் காலி செய்தனர்.

கடைசியில் ரசாக்கும், உமர் குல்லும் காண்பித்த அணுகுமுறையில் கொண்ஜ்சம் முதலில் விளையாடியவர்கள் காண்பித்திருந்தால் மைதானப் பனியில் பந்துகள் திரும்பாமல், ஸ்விங்காகாமல் இருந்த நிலையில் பாகிஸ்தான் 302 ரன்களை துரத்தியிருக்க முடியும்

ஆனால் நியூஸீலாந்து அபாரமாக ஃபீல்ட் செய்தது. பந்து வீசியது. வெட்டோரி காயமடைந்து டெய்லர் கேப்டன் பொறுப்பு ஏற்று சதத்துடன் தன் பிறந்த நாளை வெற்றியாக முடித்துள்ளார். அவர் ஆடியது உலகக் கோப்பையில் ஒரு சிறந்த இன்னிங்ஸ் என்றால் மிகையாகாது அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

கம்ரன் அக்மல் 2 கேட்ச்களை விட்டதன் மூஅலம் டெய்லருக்கு பிறந்த நாள் பரிசு அளித்தார் என்றே கூறவேண்டும்.

நியூஸீலாந்து அணியில் கைல் மில்ஸ், மெக்கல்லம், ஸ்டைரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த சவுத்தீ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நியூஸீலாந்து 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. நாளை இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன

* நாக்பூரில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி

நாக்பூர், மார்ச்.8: நாக்பூரில் இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான உலகக் கோப்பை போட்டியைக் காண்பதற்காக டிக்கெட் வாங்க முயன்ற ரசிகர்கள் மீது போலீசார் இன்று தடியடி நடத்தினர்.

டிக்கெட் விற்பனை கவுன்ட்டரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.

இதேபோன்ற தடியடி சம்பவம் பெங்களூரிலும் முன்பு நடந்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா-இங்கிலாந்து போட்டியைக் காண்பதற்காக டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்

மூலவர் : ஆண்டளக்கும் ஐயன்
  உற்சவர் : ஸ்ரீரங்கநாதர்
  அம்மன்/தாயார் : பார்க்கவி
  தல விருட்சம் :  புன்னை, பாடலி
  தீர்த்தம் :  சூர்ய, சந்திர தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  பாஞ்சராத்ரம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 -
ஊர் :  ஆதனூர்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
 நாதனூ ராதரியார் நானெனதென்னார
மலன்
ஆதனூர் எந்தை யடியார்.

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்றுஇத்தல இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பிரணவ விமானம் எனப்படும். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் "ஆதனூர்' (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. கருவறை விமானத்தில் 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாக சொல்கிறார்கள்.

தலபெருமை:
ஏடு, எழுத்தாணி பெருமாள்: திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி ""இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார்.திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

படியளக்கும் சுவாமி: கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

மோட்சம் தரும் தூண்கள்: பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

தல வரலாறு:

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

பிரார்த்தனை
 
 இங்கு வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறக்கலாம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவிழா:
 
  வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த
நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் அதிகாரி யார் ?

விடை - சுகுமார் சென் - 1950 - 58.

இதையும் படிங்க :

* பத்தாம் வகுப்பை தாண்டாத பெண்கள் நடத்தும் வங்கி சேவை மையம்மதுரை: இந்தியாவிலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பை தாண்டாத பெண்கள், பாரத் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் 2000 மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகையுள்ள கிராமங்களில் வங்கிகள், வாடிக்கையாளர் சேவை மையங்களை துவங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் கிராமப்புறங்களில் சேவை மையங்களை உருவாக்கி வருகின்றன. மதுரையில் வாடிப்பட்டியில் உள்ள "கிரெட்' தொண்டு நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியின் "வணிகத் தொடர்பு' மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒன்பது வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க சுயஉதவிக்குழுப் பெண்கள் ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தொண்டுநிறுவன செயலாளர் அழகேசன் கூறுகையில்,"" கடந்த 25 ஆண்டுகளாக வங்கியுடன் மகளிர் குழுக்களின் கணக்கு வழக்குகளை பராமரித்து வருகிறோம். அலங்காநல்லூரில் கோட்டைமேடு, கொண்டையம்பட்டி, வாடிப்பட்டியில் கச்சைகட்டி, சோழவந்தானில் தென்கரை உட்பட மதுரையில் ஒன்பது இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். மையத்திற்கு ஒருவர் வீதம் ஒன்பது பேர் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்துள்ளோம். இந்தியாவிலேயே முதன்முறையாக எங்கள் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள், மையத்தை நடத்துவது பெருமையான விஷயம்,'' என்றார்

வங்கி மண்டல மேலாளர் ராமானுஜம் கூறியதாவது: மதுரையில் 159 கிராமங்களில் வங்கி சேவை மையம் அமைக்க வேண்டுமென ஆய்வு செய்யப்பட்டது. எங்கள் வங்கியின் சார்பில் 48 கிராமங்களில் மையங்கள் துவங்க திட்டமிட்டுள்ளோம். அய்யங்கோட்டையில் சேவைமையம் துவக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக "கிரெட்' தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒன்பது மையங்கள் விரைவில் துவங்கப்படும். இங்கு "ஜீரோ பாலன்ஸ்' முறையில் வங்கிக் கணக்கு துவக்கலாம். ஒருநபர் அதிகபட்சமாக 10ஆயிரம் டெபாசிட் செய்யவோ, எடுக்கவோ முடியும். கிராமப்புறங்களில் வங்கிக்கணக்கை துவக்குவதற்கு கமிஷன் வழங்குகிறோம். தொண்டு நிறுவனத்தின் சார்பில் வாடகை கட்டடத்தில் கம்ப்யூட்டர், பிரின்டர், விரல்ரேகை கருவி பொருத்தப்படும், என்றார்.நன்றி - தின மலர், தின மணி, சமாச்சார்.
 
 


 

No comments:

Post a Comment