Saturday, February 26, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 26 - 2011.

முக்கியச் செய்தி :

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை: மம்தா

புது தில்லி, பிப்.25: ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. சரக்குக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து 8-வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 2011-12-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். 56 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இதுவாகும்.

சாதாரண மக்களுக்கான பட்ஜெட் என்று கூறியபடி பானர்ஜி பல்வேறு சலுகைத் திட்டங்களை படிப்படியாக அறிவித்தார்.

முன்பதிவுக் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படுவதால் பயணிகள் கட்டணம் மேலும் குறையும்.

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களில் பெண்களுக்கான வயது வரம்பு 60-லிருந்து 58-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தனது மாநிலத்துக்கு பல்வேறு சலுகைகளை தாராளமாக அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் கட்டணச் சலுகை அறிவித்த மம்தா பானர்ஜி, ராஜதானி, சதாப்தி ரயில்களில் கீர்த்தி, செüர்ய சக்ர விருது பெற்றவர்கள் பயணம் செய்வதற்கான கட்டணச் சலுகையையும் அறிவித்துள்ளார்.

புதிய முயற்சியாக ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் திருச்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பட்ஜெட் வருவாய் ரூ.1,06,239 கோடியாகும். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. செலவு ரூ.73,650 கோடியாகும். தேய்மான நிதியத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்புத் தாது ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் இழப்பு ரூ. 1,500 கோடியிலிருந்து ரூ. 2,000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

ரயில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய மூன்றிலும் பயணிக்கும் வகையில் ஒரு அட்டை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அட்டைகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வோருக்கு வசதியாக இருக்கும். இந்த அட்டைகளை முன் பதிவு மையங்களிலும், இணைய தளம் மூலமாகவும் பெற முடியும்

உலகச் செய்தி மலர் :

* லிபியா பிரச்னையில் ஐநா தலையிட வேண்டும்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

கொழும்பு, பிப்.25- லிபியா பிரச்னையில் ஐநா சபை தலையிட வேண்டும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2009-ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஐநா சபை தவறியதைப் போன்று, லிபியாவிலும் அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்ற தவறக்கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நா சபையிடம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் "மூடிய கதவுகளின்" உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியது.
ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதித்திருந்தது போன்று, ஐ.நா. சபையானது தற்போது லிபியாவிலும் பொதுமக்களைக் கொல்வதற்கு அனுமதிக்கக்கூடாது

இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை நீதியின் முன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு தலைவர்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையானது உடனடியாக ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கவேண்டும்.

ஈழத் தமிழர்களை இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசின் தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் இன்று வரையில் தவறியிருப்பதும், இன்று லிபியாவின் தலைவர்களைப் போன்று, மனித குலத்திற்கு எதிராகப் பெரிய குற்றங்களை இழைப்பவர்களுக்கு துணிச்சலையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

எனவே இலங்கையில் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை தாமதமின்றி, உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இதன் மூலம், ஐ.நா. சபையானது லிபிய அரச தலைவர்களைப் போன்று மனிதத்திற்கு எதிராக குற்றங்கள் இழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதனை இத்தகைய கொடுங்கோலர்களுக்கு தெளிவாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* துணிந்து வழக்கை சந்திப்பேன்: பாகிஸ்தானில் கைதான யு.எஸ்.அதிகாரி

லாகூர்,பிப்.25: நான் இருவரை சுட்டுக்கொன்ற விஷயத்தில் துணிந்து வழக்கை எதிர்கொள்வேன் என்று பாகிஸ்தானில் கைதான அமெரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

முறைப்படி வழக்கை எதிர்கொள்வதற்கு அரசுரீதியான அதிகாரம் தனக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் ரேமண்ட் டேவிஸ் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு நலன் கருதி சிறைக்குள்ளேயே அவரிடம் நீதி விசாரணை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சாமட் ஆஜரானார். தமது தரப்பில் வாதாட ரேமண்ட் டேவிஸ் இன்னும் வழக்கறிஞரை அமர்த்தாததால் அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

வெள்ளிக்கிழமை விசாரணையின் போது ரேமண்டுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரம் குறித்த ஆவணம் அவரிடம் அளிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் தகவல்கள் அனைத்தும் உருது மொழியில் இருந்ததால் அதை அவர் வாங்க மறுத்துவிட்டார்.
தனக்கு உருது மொழி தெரியாது என்றும், ஆங்கிலத்தில் உள்ள ஆவணத்தை தருமாறும் கேட்டுக்கொண்டார்

மேலும், ஆயுதம் ஏந்திய இருவரும் தன்னிடம் வழிப்பறி செயலில் ஈடுபட முயன்றனர். அதனால் தற்காப்புக்காக அவர்களை தான் சுட வேண்டியதாயிற்று என்றும் நீதிபதியிடம் ரேமண்ட் தெரிவித்தார். இதை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார்.

ரேமண்ட் வேண்டுமென்றே இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும், அவருக்கும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ரேமண்ட்.

இதைத்தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி யூசுப். அடுத்த விசாரணைக்குள் தமது தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை அமர்த்த வேண்டும் என்றும் ரேமண்டை கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் ஆயுதத்துடன் வந்த இருவரை ரேமண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து அவரை ஜனவரி 27-ம் தேதி பாகிஸ்தான் போலீஸôர் கைது செய்தனர். ரேமண்ட் டேவிஸ் அமெரிக்க உளவுத்துறையின் ஏஜென்ட் என்றும், அவருக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

இதை அமெரிக்கா மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவைக் கருத்தில் கொண்டு ரேமண்டை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பலமுறை வேண்டுகோள்விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை

* ஜார்ஜ் புஷ் வீட்டை தாக்க சதி: செளதி மாணவர் கைதுபாஸ்டன்,பிப்.25: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்-ன் வீடு உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக செளதி அரேபிய மாணவர் காலித் அலி-எம் அல்தாஸ்வரி (20) கைது செய்யப்பட்டார்.
டெக்ஸôஸ் செளத் பிளைன்ஸ் கல்லூரியில் பயின்று வரும் அவரிடம் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் (ஃஎப்பிஐ) துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரத் தகவல்கள் கிடைத்துள்ளன. டல்லாஸில் உள்ள முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வீடு, இராக் போரின் போது பணியாற்றிய முக்கிய ராணுவ அதிகாரிகள், அணுமின் நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தி பெரும் சேதத்தை விளைவிக்க காலித் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

காலித் அமெரிக்காவுக்கு மாணவர் விசாவில் 2008-ல் வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்துவதற்காகவே மாணவர் விசாவில் வந்துள்ளார். அமெரிக்காவுக்கு வந்தது முதல் அவர் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவர் தனது சதித் திட்டத்துக்கு இணையதளத்தை பயன்படுத்தியுள்ளார். அவரது மின்னஞ்சல் முகவரில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் அவரின் பயங்கரவாத சதித் திட்டத்தை உறுதி செய்கின்றன என்று அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

* நியூசிலாந்து நிலநடுக்கம்: சாவு எண்ணிக்கை 113 ஆக உயர்வு

கிறைஸ்ட்சர்ச், பிப்.25: நியூசிலாந்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 228 பேரை காணவில்லை. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நியூசிலாந்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கிறைஸ்ட்சர்ச் நகரே சீர்குலைந்துள்ளது. இது அந்நாட்டுக்கு கடும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சூழலை பயன்படுத்தி கிறைஸ்ட்சர்ச் நகரில் திருடுவதிலும், கொள்ளையடிப்பதிலும் ஏராளமானோர் குழு குழுவாக ஈடுபட்டுள்ளனர். இது மீட்புப் பணிக்கு இடையூறாக அமைந்துள்ளது

கிறைஸ்ட்சர்ச்சில் மட்டும் 300 போலீஸ் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீஸ் அதிகாரிகளால் முழுமையாக மீட்புப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.

இருப்பினும் திருடர்களையும், கொள்ளையர்களையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிறைஸ்ட்சர்ச்சின் மெட்ராஸ் சாலையில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த கட்டடம் நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மாணவர்கள் பலியாகினர்.

இப்போது அவர்கள் குறித்த விவரத்தை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

* லிபியா பிரச்னை: ஒபாமா அழைப்பு.

வாஷிங்டன், பிப்.25- லிபியா நிலவரம் குறித்து பேசுவதற்காக உலக நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவலை இன்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
லிபியா பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உரிமை மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக லிபியா அரசு மக்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்துகிறது என்று ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், லிபியா பிரச்னையில் சர்வதேச சமூகம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

* "கடல்வெள்ளரி' பிடித்த 23 மியான்மர் நாட்டவர் கைது

போர்ட்பிளேர், பிப்.25: அந்தமான் நிகோபார் கடல்பகுதியில் நுழைந்து சட்டவிரோதமாகக் கடல்வெள்ளரி உயிரினங்களை பிடித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற மியான்மர் நாட்டவர் 23 பேரை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

அரிதான கடல்வாழ் உயிரினமான கடல்வெள்ளரி அழிவின் விளிம்பில் உள்ளது. இது அந்தமான் நிகோபார் கடல் பகுதியில் அதிகம் வாழ்கிறது. இதை உண்பதற்காக மியான்மர் நாட்டவர் தொடர்ந்து அத்துமீறி பிடித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரு விசைப்படகுகளில் வந்த மியான்மர் நாட்டவர்கள், பாகெட் தீவுப் பகுதியில் கடல்வெள்ளரியைப் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்துவிட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மியான்மர் நாட்டவர்கள் தப்பிக்க முயன்றனர்.
இதையடுத்து கடலோரக் காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டு நிற்குமாறு எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் படகுகளை நிறுத்திவிட்டு சரணடைந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து திக்லிபூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த ஆண்டு மட்டும் இந்திய கடல்பகுதியில்அதிகம் வாழ்கிறது. இதை உண்பதற்காக மியான்மர் நாட்டவர் தொடர்ந்து அத்துமீறி பிடித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரு விசைப்படகுகளில் வந்த மியான்மர் நாட்டவர்கள், பாகெட் தீவுப் பகுதியில் கடல்வெள்ளரியைப் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்துவிட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மியான்மர் நாட்டவர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதையடுத்து கடலோரக் காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டு நிற்குமாறு எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் படகுகளை நிறுத்திவிட்டு சரணடைந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து திக்லிபூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடந்த ஆண்டு மட்டும் இந்திய கடல்பகுதியில் கடல்வெள்ளரி பிடிக்க முயன்றபோது 81 மியான்மர் நாட்டவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

* லிபியாவிலிருந்து தங்களது நாட்டவரை காக்கும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரம்.

மாகக் காட்சியளிக்கிறது. இதனால் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மீட்புப் பணியை ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளும் கைகோத்து மேற்கொண்டுள்ளன. விமானங்களையும், கப்பல்களையும் லிபியாவுக்கு அனுப்பி மக்களை மீட்டு வருகின்றன. ""கடந்த 2 தினங்களில் லிபியாவில் இருந்து 350 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களை மீட்பதற்கு 3 போர்க்கப்பல்கள் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பலில் ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது விரும்பினால் பிற ஐரோப்பிய நாட்டவரும் ஏறிக்கொள்ளலாம்'' என்று ஜெர்மனி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
லிபியாவில் கிரீஸ் நாட்டு மக்களும் கணிசமாக வசித்து வருகின்றனர். கிளர்ச்சியால் அவர்களும் லிபியாவைவிட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர். அவர்களை தாயகத்துக்கு அழைத்துவர கிரீஸ் நாடு 3 விமானப் படை விமானங்களை அனுப்பி வைத்துள்ளன. இந்த விமானங்கள் லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு சென்றுள்ளன

இந்த விமானங்களில் விரும்பினால் பிற ஐரோப்பிய நாட்டவரும் பயணிக்கலாம் என்று அந்நாடும் அறிவித்துள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த 6000-க்கு மேற்பட்டோர் லிபியாவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்நாடு கடற்படை கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. மீட்புப் பணிக்கு உதவ விமானப் படை வீரர்களும் சென்றுள்ளனர். லிபியாவில் இருந்து இதுவரை தங்களது நாட்டைச் சேர்ந்த 550 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இன்னும் 200 பேர் அங்கு கிளர்ச்சிக்கு நடுவில் சிக்கியிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் அங்கேயே தங்க விரும்புவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
கடாஃபியின் நிதி முடக்கம்: இதனிடையே, அதிபர் மம்மர் கடாஃபி அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஸ்விட்சர்லாந்தில் முதலீடு செய்துள்ள நிதி அனைத்தையும் அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.

இதற்கான உத்தரவை ஸ்விட்சர்லாந்து அரசு வியாழக்கிழமை மாலை பிறப்பித்தது. இந்திய அரசியல் தலைவர்களும் குடும்பத்தாரும் ஸ்விட்சர்லாந்தில் கோடிக்கணக்கான ரூபாயை கறுப்புப் பணமாக மறைத்து வைத்திருப்பதுபோல் கடாஃபியும் அவரது குடும்பத்தாரும் கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்தில் குவித்து வைத்துள்ளனர். இந்த பணம் முழுவதும் இப்போது முடக்கப்பட்டுள்ளன

தேசியச் செய்தி மலர் :

* 56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்.

புதுதில்லி, பிப்.25: நாடு முழுவதும் 56 புதிய எக்ஸ்பிரஸ்
ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* தமிழகத்துக்கான ரயில்கள்

புது தில்லி, பிப். 25: இரு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள், 7 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் என தமிழகத்துக்கான பல்வேறு அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

* 9 துரந்தோ, 3 சதாப்தி, ஏ/சி மாடி ரயில் அறிமுகம்

புது தில்லி, பிப்.25: மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் புதிதாக 9 துரந்தோ ரயில்கள், 3 சதாப்தி ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சதாப்தி ரயில்கள் புணே-செகந்திராபாத், ஜெய்ப்பூர்-ஆக்ரா, லூதியானா-தில்லி ஆகிய 3 மார்க்கங்களில் புதிதாக இயக்கப்படும்.

மாடி பஸ் போன்று இரண்டு அடுக்குகளுடன் ஏ/சி வசதி கொண்ட ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜெய்ப்பூர்-தில்லி, ஆமதாபாத்-மும்பை மார்க்கத்தில் இயக்கப்படும்.

துரந்தோ ரயில்கள் 9 புதிய மார்க்கங்களில் இயக்கப்படும். அவை பின்வருமாறு: அலகாபாத்-மும்பை (ஏ/சி-வாரம் இருமுறை), புணே-ஆமதாபாத் (வாரம் மூன்று முறை), சியால்டா-பூரி (வாரம் மூன்று முறை), செகந்திராபாத்-விசாகப்பட்டினம் (ஏ/சி, வாரம் மூன்று முறை), மதுரை-சென்னை (ஏ/சி வாரம் இருமுறை), சென்னை-திருவனந்தபுரம் (ஏ/சி, வாரம் இருமுறை), மும்பை சென்ட்ரல்-புது தில்லி (ஏ/சி, வாரம் இருமுறை), நிஸாமுதீன்-ஆஜ்மீர் (வாரம் இருமுறை), ஷாலிமார்-பாட்னா (வாரம் 3 முறை).
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் 2013-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் "விவேக் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

* பிரதமர் பாராட்டு

புது தில்லி, பிப்.25: மிகச் சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார்.

பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை அவர் வெகுச் சிறப்பாக செய்துள்ளார். இதனால் பணவீக்கம் குறையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இது ஏழை மக்களுக்கான பட்ஜெட். சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை, பயணிகள் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இதன் மூலம் பணவீக்கத்தைக் குறைக்க அவர் உதவியுள்ளார் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொண்டுள்ளார் மம்தா. வெகு நேர்த்தியான பணியைச் செய்துள்ளார் என்று மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டினார் மன்மோகன் சிங்

* 2ஜி அலைக்கற்றை வழக்கு: சண்டோலியா, பல்வாவுக்கு ஜாமீன் மறுப்பு

புது தில்லி, பிப். 25: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா, தொழிலதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுத்து விட்டது.

இது தொடர்பான மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடந்த 2-ம் தேதி சண்டோலியாவும், ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவன நிர்வாகி பல்வா கடந்த 8-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.

* தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐயிடம் விளக்கினேன்: அருண் செளரி

புதுதில்லி, பிப். 25: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கியதில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகளை சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினேன் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அருண் செளரி கூறினார். அலைக்கற்றை ஊழல் தொடர்பாக 50 பக்க ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா அப்ரூவர் ஆகி ஊழலில் யார் யார் பயனடைந்தார்கள் என்ற விவரத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

2-ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார் அருண் செளரி. விசாரணையில் தனக்கு உதவுவதற்காக முன்னாள் தொலைபேசித் துறை செயலர் வினோத் வைஷ் உள்ளிட்ட சில அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றார்.

விசாரணைக்குப் பின்னர் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

நடந்த ஊழலை மறைக்கவே முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி பேசி வருகின்றனர் ஆளும் கட்சியினர்

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையான விவகாரம் ஊழல்தான். என்ன தொலைத்தொடர்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது என்பது அல்ல.

இந்த விசாரணக்கு என்னால் முடிந்தளவு சிபிஐ அமைப்புக்கு உதவுவேன். மீண்டும் விசாரணைக்கு வரச் சொன்னால் வருவேன். எனக்குத் தெரிந்த விவரங்களை திரட்டி 50 பக்க ஆவணமாக சிபிஐயிடம் சமர்ப்பித்து உள்ளேன். இந்த ஆவணத்தில், பாஜக ஆட்சி காலத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை கொள்கை எந்த அடிப்படையில் பின்பற்றப்பட்டது என்பதை விளக்கி உள்ளேன்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பெரும் பணம் ஈட்டிஉள்ளார். அது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பதாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி இப்போது பிரச்னை அவர் முறைகேடு செய்துள்ளார் என்பதுதான். அதனால்தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் பணம் பெறப்பட்டுள்ளது என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு என்றார் செளரி.

2003-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை எனக்கு ஒதுக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு "முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கான வழிமுறைகள் தெளிவாக உள்ளன. எனவே இந்தப் பிரச்னை ஊதி பெரிதாக்க முயற்சிக்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்றார் அவர்.

சிபிஐ அலுவலகத்துக்கு தொழிலதிபர்கள் விசாரணைக்காக வருவதை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்தப் பட்டியலில் பிரதமர் பெயர் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி பெயர் இல்லை. பிற காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் இதில் விடுபட்டு போய் உள்ளது என்றார் அவர்.

தயாநிதி மாறன்: தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கிக் கூறியுள்ளேன். அலைக்கற்றை இல்லாமல் 122 உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2005-ம் ஆணடுக்குப் பிறகுதான் வழிகாட்டு நெறிமுறைகள் "டிராய்'- ஆல் வகுக்கப்பட்டன. ஆனால் அது கூட 2007 வரை பரிந்துரைக்கப்படவில்லை என்றார் அவர்.
தவறு செய்த ராசா சிறையில் உள்ளார். ஆனால் மாறன் மட்டும் இன்னும் அமைச்சராக உள்ளார் என்றார் செளரி.
சிபிஐ விசாரணை அமைப்பை குறை சொல்ல முடியாது. அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.

இந்த ஊழல் குறித்து எல்லா விஷயங்களை அறிந்த ஒருவரை சிபிஐயிடம் அறிமுகப்படுத்தவும் தயாராக உள்ளேன் என்றார் அவர்.

எனக்குத் தெரிந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்தவர்கள் நான் சொல்லும் நபரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். அவரை அடிக்கடி சந்தித்துள்ளனர்.
அதனால் தான் நீதிமன்றம் இந்த விசாரணையை கையில் எடுத்துக் கொண்டது. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளியான பிறகு சிபிஐ மிகவும் வேகமாக விசாரணை தொடங்கியது. சிபிஐயிடம் இப்போது எல்லா உண்மைகளும் உள்ளன என்றார் செளரி

* பொருளாதார வளர்ச்சி வீதம் 9% ஆகும்: ஆய்வறிக்கை நம்பிக்கை

நாடு முழுவதற்கும் பொருந்தும்படியான, பொதுவான சரக்கு, சேவைகள் வரியை (ஜி.எஸ்.டி.) விரைவிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது.
கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் தனியாரும் அரசும் சேர்ந்து திட்டங்களில் முதலீடு செய்து நிர்வகிக்க வேண்டும் என்கிறது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் நிரந்தர சொத்துகளை உருவாக்க வேண்டும், அடித்தள கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தை அன்னிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவது, வன நிலங்களை ஒரே தொகுப்பின்கீழ் சேர்த்து, தொழில் தொடங்க கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களைக் களைவது, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை எளிதாகப் பெற்றுத்தருவது, ஓய்வூதிய நிதியை அரசே நிர்வகிப்பதற்குப் பதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற நிதியமைப்புகளிடம் பொறுப்பை ஒப்படைப்பது, அந்தநிதிக்கு அதிக வருவாய் கிடைக்க அவற்றைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிப்பதுபோன்ற பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன.

* வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி.

புது தில்லி, பிப்.25: வெளிநாடுகளில் கறுப்புப் பணம் போட்டு வைத்திருக்கும் பணக்காரர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது: குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனுப்பிய உத்தரவு பின்பற்றப்பட்டு அவர் கண்காணிக்கப்படுகிறார்.

இருப்பினும், வெறும் குற்றச்சாட்டு அடிப்படையில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடைமுறைதான் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்துள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்படுகிறது. வெறுமனே குற்றச்சாட்டு இருப்பதால் மட்டும் ஒருவரை சிறையில் அடைக்க முடியாது என்றார்.

இந்த சமயத்தில் நிதியமைச்சரின் பேச்சு பெரும்பாலான உறுப்பினர்களுக்குக் கேட்கவில்லை. இதனால் பாஜக, இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று நிதியமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்


கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

உறுப்பினர்களின் தொடர் கூச்சலால் தனது பொறுமையை இழந்த பிரணாப், சமீபத்தில் வருமான வரித்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதற்காக அவரை சிறையில் அடைக்க முடியாது. சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்


தனி நபராக வரி ஏய்ப்பு செய்வோர் பற்றிய விவரங்களும் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் கூறினார்.
இப்போது இதைப்பற்றிய விவரத்தை வெளியிடுவது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என்றார். கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தபிறகுதான் அவர்களது பெயர்களை வெளியிட முடியும் என்றார் பிரணாப்

* லஞ்சம் வாங்கியதாக நால்கோ தலைவரை கைது செய்தது சிபிஐ

புவனேஸ்வர், பிப்.25- மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அலுமினிய நிறுவனத்தின் (நால்கோ) தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஏ.கே. ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி சாந்தினி மற்றும் ஸ்ரீவஸ்தவாவின் கூட்டாளிகளான பி.எல். பஜாஜ், அவரது மனைவி அனிதா பஜாஜ் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

மேலும், ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீவஸ்தவா வீட்டில் சிபிஐ திடீரென சோதனையும் மேற்கொண்டது. அப்போது, ரூ. 30 லட்சம் ரொக்கம், 10 கிலோ எடையுள்ள தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது

* கர்நாடகத்தில் சட்டவிரோத கிரானைட் சுரங்கம்: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, பிப்.25- கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கிரானைட் சுரங்கங்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான நீதிபதிகள் குழு இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மற்றும் அருகேயுள்ள வனப் பகுதிகளில் முறைகேடாக கிரானைட் சுரங்கங்கள் செயல்படுவதாக லோக்யுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஏற்கெனவே விரிவான தகவல்களை பதிவு செய்துள்ளார். இத்தகவலை வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார். இதன் அடிப்படையில் சட்டவிரோத சுரங்கங்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

* சிகாகோ நகர நிர்வாகக் குழுவுக்கு இந்தியர் தேர்வு

சிகாகோ, பிப்.25- அமெரிக்காவின் சிகாகோ நகர நிர்வாகக் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமேயா பவார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 30.

வடக்கு சிகாகோவின் 47-வது வார்டு சார்பில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"சிகாகோ நிர்வாகக் குழுவுக்கு நான் தேர்வு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று அமேயா பவார் தெரிவித்தார்.

மேலும், சிகாகோ நகர வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதன் பட்ஜெட் தொகைக்கு தனது சம்பளத்தில் இருந்து 50 ஆயிரம் டாலர் வழங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்

மாநிலச் செய்தி மலர் :

* மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ஆயிரம் ரூபாயாக உயர்வு: முதல்வர்

சென்னை, பிப். 25: மீன்பிடித் தடைக்காலத்தின்போது மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ஆயிரம் ரூபாயாக அதிகரித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே ரூ. 500 ஆக இருந்த இந்த நிவாரணத் தொகை கடந்த ஆண்டில் ரூ.800 ஆக உயர்த்தப்பட்டது

* ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் 50 சதவீதம் குறைப்பு

சென்னை, பிப். 25: 2011-12-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு ரயில்களில் தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு

முக்கிய ரயில்களில் ஏசி சேர் கார் (இருக்கை வசதி மட்டும்), ஏசி வசதி செய்யப்படாத முதல் வகுப்பு, 3 அடுக்கு ஏசி, 2 அடுக்கு ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் இனி, ரூ. 12 குறைக்கப்படும். இதேபோல, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் ரூ. 17 குறைக்கப்படும்

* வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க மாவட்டவாரியாக வருமான வரி கண்காணிப்புக் குழு

சென்னை, பிப். 25: வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க மாவட்டம் வாரியாக வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.

தமிழகம், புதுவை சட்டப் பேரவைத் தேர்தல்களை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணப் பட்டுவாடாவை கண்காணிக்க வருமான வரித் துறையை (புலனாய்வுப் பிரிவு) தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனடிப்படையில், ரயில் நிலையம், விமான நிலையம், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், நகைக் கடன் முகவர்கள் என பணப் புழக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பை வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஜெனரல் (தமிழகம், புதுவை) பி.கே. சாரங்கி கூறியது:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அதிக அளவில் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது

இதனடிப்படையில் ரயில் நிலையம், விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ரூ. 20 ஆயிரம், அதற்கு மேல் பணம் கொண்டு வருபவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உரிய காரணம் தெரிவித்தால் மட்டுமே, அவர்கள் அந்த பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்படும்.
இதுபோல் ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், நகைக் கடன் முகவர்கள், நிதி நிறுவனங்கள், பொதுவான விழாக்கள், திருமண விழாக்கள் கண்காணிக்கப்படும். விழாக்களில் மறைமுகமாக வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும். பணம், பரிசுப் பொருள்களை வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் கண்காணிப்புக் குழு உள்பட 3 குழுக்கள் பணியில் ஈடுபடும். ஒவ்வொரு குழுவுக்கும் மூத்த அலுவலர் ஒருவர் தலைமை வகிப்பார்

கட்டணம் இல்லாத தொலைபேசி எண்: பொதுமக்களும் இந்தக் குழுவினரைத் தொடர்பு கொண்டு, பணப் பட்டுவாடா குறித்து தகவல் தெரிவிப்பதற்காக கட்டணம் இல்லாத தொலைபேசி எண் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

சென்னையில் உள்ள வருமான வரித் துறை (புலனாய்வு) இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.

தேர்தல் கண்காணிப்புப் பணிக்கு தமிழகம், புதுவைக்கான ஒருங்கிணைப்பு அலுவலராக வருமான வரி தலைமை ஆணையர் (புதுதில்லி) அஞ்சனை குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

பிகாரைப் போன்று...
இது குறித்து வருமான வரி தலைமை ஆணையர் அஞ்சனை குமார் கூறியதாவது:

கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் பேரவைத் தேர்தலில் இதுபோன்ற தீவிர கண்காணிப்பை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வரிமான வரித் துறை மேற்கொண்டது. அந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தது. பல்வேறு பகுதிகளில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல் தமிழகத்திலும் நடவடிக்கை வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வருமான வரித் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விமானத்தில் பணம் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தால், அந்த விமானத்தை நிறுத்தி சோதனை செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

* மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய் மொழியைக் கற்க புதிய ஏற்பாடு: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, பிப். 25: மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய் மொழியைக் கற்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக்கப்பட்டு 2006-ல் சட்டம் இயற்றப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டு தமிழகத்தில் வளர்ந்து வரும் மொழிவழிச் சிறுபான்மையினர், தமது பிள்ளைகள் தமது தாய் மொழியைக் கற்பதற்கு வாய்ப்பில்லை என்று முறையீடு செய்தனர்.

அதன் அடிப்படையில், மொழிவழிச் சிறுபான்மையினர் தமது தாய் மொழியை ஒரு பாடமாக கூடுதலாகப் படித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இப்படி குறைந்தபட்ச மதிப்பெண் தேவையில்லை என்றால், மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தமது தாய் மொழியைப் படிப்பதில் தேவையான கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும், எனவே, இதை மாற்றி அமைத்திட வேண்டும் மொழிவழிச் சிறுபான்மையினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது

இதையடுத்து இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. மொழிவழிச் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கற்பதோடு, கூடுதலாக உருது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தமது தாய் மொழியையும் ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என்றும், தேர்ச்சி பெறுவதற்கு தமிழ்ப் பாடத்துக்கு நிர்ணயித்து இருப்பதைப் போன்று குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்தொழில்நுட்பச் செய்தி மலர் :


                                                                          

* சூரிய ஒளியை பயன்படுத்தி "ஜீரோ டிஸ்சார்ஜ்': சாத்தியம் என்கிறார், இளம் ஆராய்ச்சியாளர்

திருப்பூர்: சூரிய ஒளியை பயன்படுத்தி, ஆர்.ஓ., சுத்திகரிப்பில் எஞ்சியுள்ள 15 சதவீத கழிவு நீரை எளிதாக ஆவியாக்கும் வழிமுறை களை, திருப்பூரை சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் பிரபு கண்டறிந்துள்ளார்.

திருப்பூர் சுற்றுப்பகுதியில் சாயம் மற் றும் பிளீச்சிங் நிறுவனங்களுக்கு தினமும் 6.50 கோடி தண்ணீர் பயன்படுத்தப்படு கிறது. வெளியேற்றப்படும் கழிவுநீரில், 85 சதவீதம் அளவுக்கு, ஆர்.ஓ., சுத்திகரிப்பு முறையில் தண்ணீராக பிரித்தெடுக்கப் படுகிறது. மீதியுள்ள 15 சதவீத கழிவுநீரை, "எவாப்ரேட்டர்' மூலமாக ஆவியாக்கியும், அவற்றில் எஞ்சும் கழிவை, "கிரிஸ்டலை சர்' மூலமாக உப்பாக பிரித்தெடுக்கவும், "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அறி முகம் செய்யப்பட்டது. சரியான வழி காட்டுதல் இல்லாததால், ஆர்.ஓ.,வுக்கு பின் வரும் சுத்திகரிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இக்கட்டான நிலையில், ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின், சூரிய ஒளியால் 100
சதவீத சுத்திகரிப்பை மேற்கொள்ள முடி யும் என்கிறார், திருப்பூரை சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் பிரபு.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுத்திகரிப்பு நிலையங்களில் தற்போதுள்ள தொழில் நுட்பங்கள் பல்வேறு சிக்கல் களை உருவாக்குகின்றன. இதனால், எதிர் பார்த்தபடி எளிதாக 100 சதவீத சுத்திகரிப்பு செய்ய முடியவில்லை. சூரிய வெப் பத்தை ஒருங்கிணைத்து, ஆவியாக்கல் சுத்திகரிப்பை சரியாக செய்து முடிக் கலாம். "பேராபோலிக் ரிப்ளக்டர்', "பேராபோலிக் டிஸ்' மற்றும் "ஆப்டிக்கல் லென்ஸ்' மூலமாக சூரிய ஒளியை வெப்பமாக மாற்றி தேக்கி வைக்கலாம். ஒவ்வொரு படி நிலையிலும், "தெர்மிக் புளூய்டு' எண்ணெய் மூலமாக, வெப் பத்தை எடுத்து வந்து "தெர்மேபேர் பாய்லர்' மூலமாக இருப்பு வைக்கலாம். "பாய்லர் ஸ்டீம்' அல்லது ஏதாவதொரு முறையில் வெப்பப்படுத்தினால், "தெர் மிக்புளூய்டு' எண்ணெய் 700 டிகிரி வரை யிலான வெப்பத்தை உருவாக்கும். கழிவுநீரை ஆவியாக்கல் மூலமாக சுத்திகரிப்பு செய்வதற்காக, பெரிய அளவில் "ஸ்டீல்' களம் அமைக்க வேண்டும். அதன் மேற்புறத்தில் கழிவுநீரை தேக்கி வைத்து, அதற்கு கீழ் அடுக்கு பகுதியில், "தெர்மிக் புளூய்டு' ஆயிலை எடுத்துச்சென்று, ஆவியாக்கலாம்.

"ஸ்டீல்' களத்தின் மேற் புறத்தில், கூம்பு வடிவில் மேற்கூரை அமைக்கும்போது, ஆவியாகும் கழிவுநீர் குளிர்ந்து, நல்ல தண்ணீராக திரும்ப பெறலாம். இதில் வெப்பம் அதிகமாகும் போது, கூரையின் மேற்புரத்தில் நல்ல தண்ணீரை தெளித்து, ஆவியை எளிதாக குளிர்விக்கலாம். சூடாக உள்ள "தெர்மிக்புளூய்டு' எண்ணெயை எடுத்துச்சென்று, மற்று மொரு களத்தில் தேக்கி கழிவுநீரை சுத்தி கரிப்பு செய்யலாம். சிறு சுத்திகரிப்பு மூல மாக, "தெர்மிக்புளூய்டு' எண்ணெயை மறு சுழற்சி முறையில் பெறலாம். இத்தகைய சூரியவெப்பத்தை ஒருங்கிணைத்து சுத்தி கரிப்பு செய்யும் முயற்சிக்கு அதிகப்படி யான இடம் தேவைப்படும். ஆனால், ஒருமுறை அமைத்தால், சுத்திகரிப்பை தொடர்ந்து செய்யலாம். மத்திய, மாநில அரசுகள் மரபுசாரா எரி சக்தியை பெற மானியம் வழங்கி ஊக்கு விக்கிறது. அதற்காக, சூரிய ஒளி மூலமாக இயக்கப்படும் சாதனங்களுக்கு மானியம் வழங்குகிறது. அவ்வகையில், மத்திய, மாநில அரசுகளிடம் பேசினால், சூரிய வெப்ப சுத்திகரிப்பு முறைக்கு, மானிய மும் கிடைக்கும். இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு விளக்கி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

வர்த்தகச் செய்தி மலர் :

* பொருளாதார வளர்ச்சி வீதம் 9% ஆகும்: ஆய்வறிக்கை நம்பிக்கை

புதுதில்லி,பிப்.25: இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 2011-12-ம் நிதியாண்டில் 9% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 456 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையை மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் ஆண்டு வரவு - செலவு அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த ஆய்வறிக்கை ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படுவது மரபு.

இது நாட்டின் விவசாயம், தொழில், சேவைகள், அடித்தள கட்டமைப்பு, ஏற்றுமதி - இறக்குமதி போன்ற வெவ்வேறு துறைகளின் வளர்ச்சி அல்லது தொய்வு குறித்து உண்மை நிலவரங்களைத் தெரிவிக்கும்.
அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளையும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் கோடிட்டுக்காட்டும். எந்தத் துறையில் அரசின் செயல்கள் தவறாக இருந்தன, எந்தத்துறைக்கு கவனம் அதிகம் தேவை, எங்கே ஒருங்கிணைப்பு இல்லை, எங்கே சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம் என்று அறிக்கை சுட்டிக்காட்டும்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவற்றின் பரிந்துரைகளும் இதே பாணியைச் சேர்ந்தவைதான். மேற்கத்திய நாடுகளின் எண்ணப் போக்குக்கு ஏற்ற இந்தப் பரிந்துரைகள் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையிலும் தாராளமாக இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வறிக்கை தெரிவிக்கும் முக்கியமான சில தகவல்கள் வருமாறு:

நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.6% ஆக இருக்கும். அடுத்த நிதியாண்டில் 9% ஆக உயரும்.
பணவீக்க விகிதம் அரசு எதிர்பார்த்ததைவிட 1.5% அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை அளவு நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் - சேவை மதிப்பில் 4.8% ஆக இருக்கும்.

விவசாயம், தொழில்துறை, தனியார் சேவைத்துறைகளில் பரவலான வளர்ச்சி அதிகரிப்பு காணப்படும்.

சேமிப்பு 33.7% ஆகவும், முதலீடு 36.5% ஆகவும் உயர்ந்திருக்கிறது. ஏற்றுமதியிலும் விரைவான வளர்ச்சி காணப்படுகிறது

பெரிய ஆலைகளில் உற்பத்தி 8.6% ஆக வளர்ந்திருக்கிறது. உற்பத்தித்துறையில் இதுவே 9.1% ஆக இருக்கிறது.

2010 ஏப்ரல் - டிசம்பர் காலங்களில் ஏற்றுமதி 29.5% அதிகரித்துள்ளது. இறக்குமதி 19% அதிகரித்துள்ளது.
இதே காலத்தில் வெளிவர்த்தகப் பற்றாக்குறை 82.01 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது.
வங்கிகள் வழங்கும் நிகர கடன் அளவு 59% அதிகரித்திருக்கிறது.

சமூக நல திட்டங்களுக்கான செலவு 5% அதிகரித்திருக்கிறது.

உணவு தானிய உற்பத்தி 2321 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்ந்திருக்கிறது.

அன்னியச் செலாவணி கையிருப்பு 297.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

* ரயில்வே பங்குகள் சரிவு

புது தில்லி, பிப்.25: பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலும், சரக்குக் கட்டணத்தை உயர்த்தாமலும் ரயில்வே பட்ஜெட்டை மம்தா பானர்ஜி தாக்கல் செய்திருந்தாலும் ரயில்வே துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன. ரயில்வேத் துறை சார்ந்த நிறுவனங்களான காளிந்தி ரயில் நிர்மான், டிடாகர் வேகன்ஸ், கெர்னெக்ஸ் மைக்ரோ சிஸ்டம் (இந்தியா) நிறுவனப் பங்குகள் விலை 17 சதவீதம் வரை சரிந்தன.

காளிந்தி ரயில் நிர்மான் பங்கு விலை 17 சதவீதம் சரிந்து ரூ. 111 க்கு விற்பனையானது. கடந்த 52 வாரங்களில் இந்நிறுவனப் பங்கு விலை இந்த அளவுக்கு சரிந்தது இதுவே முதல் முறையாகும்.
இதேபோல சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் வேகன்களைத் தயாரிக்கும் டிடாகர் வேகன் நிறுவனப் பங்கு விலை 13.06 சதவீதம் சரிந்து ரூ. 331.80-க்கு விற்பனையானது. ரயில்வேத் துறைக்கு உபகரணங்கள் சப்ளை செய்யும் கெர்னெக்ஸ் மைக்ரோ சிஸ்டம்ஸ் (இந்தியா) நிறுவனப் பங்கு விலை 4.97 சதவீதம் சரிந்து ரூ. 94.60-க்கு விற்பனையானது

* சென்செக்ஸ் 68 புள்ளிகள் உயர்வு

மும்பை, பிப்.25- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 68 புள்ளிகள் உயர்ந்து 17,700 புள்ளிகளில் முடிவடைந்தது.
டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் இன்ட்ஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்ஸி வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 5,303 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

செய்திகள்நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி

நாகபுரி, பிப்.25: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்று நாகபுரி விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில், உலகக்கோப்பை கிரிக்கெட் 8வது போட்டி- ஏ பிரிவில் இடம்பெற்ற நியூசிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீசத் தீர்மானித்தது.

நியூசிலாந்து தரப்பில் துவக்க வீரர்களாகக் களம் இறங்கிய குப்டில் மெக்குலம் இருவரும் அதிரடியாகத் துவக்கினர். ஆனால் மெக்குலம் 16 ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு பின்னர் ஜோடி சேர்ந்த ரைடருடன் நிதானமான ஆடினார் குப்டில். குப்டில் 10 ரன்களிலும் ரைடர் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்த பிறகு படிப்படியாக விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. ஒரு கட்டத்தில் அந்த அணி 17வது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 73 ரன்களில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஹவ் மற்றும் என்எல்மெக்குலம் இருவரும் மெதுவாக ரன் சேர்த்தனர் ஹவ் 22 ரன்னும் மெக்குலம் 52 ரன்னும் எடுத்தனர். வெட்டோரி 44 ரன் எடுத்தார். இறுதியில் அந்த அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 206 ரன்களே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்களையும் டெய்ட் 3 விக்கெட்களையும் வாட்சன், ஸ்மித், லீ ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் ஹாடின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 133 ரன்களைக் குவித்தது. வாட்சன் 62 ரன்களிலும் ஹாடின் 55 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அணித்தலைவர் பாண்டிங் 12 ரன்களுக்கு சோதியின் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த க்ளார்க், வைட் இருவரும் ஆட்டம் இழக்காமல் வெற்றிக்குத் தேவையான இலக்கை எட்டினர். இறுதியில் அந்த அணி 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஜான்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்

* உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை வென்றது வங்கதேசம்

டாக்கா, பிப்.25: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் குரூப் பி பிரிவில் இன்று டாக்காவில் நடைபெற்ற 9வது போட்டியில், அயர்லாந்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடி நல்ல துவக்கத்தைத் தந்தனர். 6வது ஓவரில் அந்த 50ஐக் கடந்தது. 6.3 ஓவர்களில் 1விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது அந்த அணி. தமிம் இக்பால் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இம்ருல் காயெஸ் 12 ரன்கள் எடுத்தார். அடுத்து நடுவரிசை ஆட்டக்காரர்கள் ரஹிம் 36, ரஹிபுல் ஹஸன் 38, நயிம் இஸ்லாம் 29 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, வங்கதேசம் 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் வங்கதேசத்தைச் சேர்ந்த யாரும் ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை. அயர்லாந்து தரப்பில் போத்தா 3 விக்கெட்டும், ஜான்ஸ்டன், டாக்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மூனே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

எளிதான இலக்கை எதிர்கொண்ட அயர்லாந்து அணி துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. முன்வரிசை ஆட்டக்காரர்களில் போட்டர்பீல்ட் 20 ரன்னும், வைட் 38 ரன்னும், ஓப்ரையன் 37 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டது. பீல்டிங்கும் நன்றாக அமையவே அயர்லாந்து அணி 45 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இறுதியில் வங்கதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓ பிரையன் அடித்த பந்தை மிக லாகவமாகப் பிடித்து ஆட்டத்தின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய தமிம் இக்பால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்

ஆன்மீகச் செய்தி மலர் :

*அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில்.

மூலவர் : ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
   -
  பழமை :  500 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  -
  ஊர் :  பஞ்சவடீ
  மாவட்டம் :  விழுப்புரம்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
 
  இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.
 
12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன்,பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர கோபுரம். அதன் மீது 5 அடி உயர கலசம். மூலவர் 36 அடி உயரத்தில் நின்ற கோலம். இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பிரமாண்டமான லிப்ட். இவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 1008 லிட்டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும். 18 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம். இப்படி ஆஞ்சநேயரைப்போலவே அனைத்தும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை
 
 
மன அமைதி கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தலபெருமை:
பஞ்சமுகத்திற்கான காரணம் : ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார். தல சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமர் பாதுகை : ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது. ராமாயண கால மிதக்கும் கல் : சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு,"என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,'' என வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திரராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறது.இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். லட்டு லிங்கம் : ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் "லட்டு லிங்கம்' செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 2007 ஜனவரி 1 அன்று, புத்தாண்டை குறிக்கும் வகையில் 2007 கிலோ எடையில் லட்டு லிங்கம் செய்யப்பட்டு செய்து அன்றைய தினம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தல வரலாறு:
:"ரமணி அண்ணா" இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர். இவர் கூறுகையில்,"பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் தேவபிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இவருக்கான சிலை அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு "ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்" சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது,''என்றார்.

திருவிழா:
 
  ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள் - காஞ்சி பெரியவர்.

*பொருள்களைத் தேடிப் போவதால்
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன நிறைவோடு இருப்பது தான்.

*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும்
விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு
சேர்த்துச் செய்ய வேண்டும்

வினாடி வினா :

வினா - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதல் இந்தியர் யார் ?

விடை - தாதாபாய் நௌரோஜி [1862]

இதையும் படிங்க :

மங்கல நிகழ்ச்சிக்கு பாரம்பரிய சடங்குகள் : மறக்காத உடுமலை மலைவாழ் மக்கள்உடுமலை அருகே மலைவாழ் குடியிருப்பில், மொபைல்போன் உட்பட நவீனங்கள் எட்டிப்பார்த்தாலும், மங்கல நிகழ்ச்சிகளுக்கான பாரம்பரிய சடங்குகளை மாற்றமின்றி பின்பற்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

நகரப்பகுதியில் ஏற்பட்ட நாகரிக மாற்றம், தற்போது கிராம மற்றும் மலைவாழ் குடியிருப்பு பகுதிகளிலும் வரத்துவங்கியுள்ளது. நகர வாசிகளை போன்று, மலைவாழ் குடியிருப்பு மக்களும் நவீன உடைகளை அணியவும், தொடர்பு கொள்ள மொபைல்போனும் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும், மலைவாழ் மக்கள் தங்களது மூதாதையர்கள் வகுத்த சடங்குகளை மாற்றமின்றி பின்பற்றி வருகின்றனர். உடுமலை- மூணாறு ரோட்டில், வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடந்தூர் செட்டில்மென்ட். உடுமலையிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த செட்டில்மென்டில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

வளர் இளம் பருவத்தில், பூப்படையும் பெண்களுக்கு செய்யும் சடங்குகளை திருவிழாவாகவே நடத்துகின்றனர். பூப்படையும் பெண்களுக்காக, வீட்டிற்கு முன்பாக குடில் அமைத்து தங்க வைக்கின்றனர். குடிலுக்கு மேல் சோலைக்காட்டு பொம்மை போன்று அமைக்கின்றனர். ஒரு மாதம் அல்லது இரண்டு, மூன்று மாதம் பூப்படைந்த பெண் அக்குடிலில் வசிக்க வேண்டும். அப்பெண்ணிற்கு தேவையான உணவுகள் வழங்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு பின், பெற்றோர், ஊர் மக்கள் சீர் வரிசையுடன் முரசு கொட்டி, குடிலில் இருக்கும் பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைக்கின்றனர். இதுதவிர இப்பகுதி மக்கள் கோவில் திருவிழா, திருமணம் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், புதன் கிழமை நடத்துவதே வழக்கமாக கொண்டுள்ளனர். மங்கல நிகழ்ச்சிகளுக்காக மூதாதையர்கள் பின்பற்றிய சடங்குகளை எவ்வித சுவடும் மாறாமல் இம்மக்கள் பின்பற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

"கல்லுக்குள் காதல்': மலைவாழ் கிராமத்தில் சுவாரசியமான ஒரு தகவலும் உண்டு. "இப்பகுதியில் காதல் திருமணம் செய்பவர்கள் சிறிது காலம் பெற்றோருக்கு தெரியாமல் அருகே காட்டிலுள்ள "பாண்டியன் வீடு' என அழைக்கப்படும் பழங்கால கல் வீட்டிற்கு குடிபெயர்ந்து விடுகின்றனர். நண்பர்கள் மூலம் உதவி பெற்று குடித்தனம் நடத்துகின்றனர். சில மாதங்களுக்கு பின், பெற்றோரை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு சென்று ஒன்று கூடி வாழும் நடைமுறையும் உள்ளது.நன்றி - தின மலர், தின மணி.1 comment:

அப்பாதுரை said...

அருண் ஷோரி இன்னும் களத்திலிருக்கிறாரா?!

Post a Comment