Friday, February 25, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 25 - 2011.





முக்கியச் செய்தி :

*கறுப்புப் பண விவகாரம் 4,5 ஆண்டுப் பிரச்னையல்ல: பிரதமர்

புதுதில்லி, பிப்.24: கறுப்புப் பண விவகாரம் என்பது வெறும் நான்கு ஐந்து ஆண்டுப் பிரச்னை அல்ல என்றால் பிரதமர்,

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் சில கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்...

அவற்றில் சில...
தங்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கைதுசெய்யட்டும்; ஆனால் சுடுவது என்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள இயலாது.

பிரிவினைவாதிகளை எந்த வகையிலும் ஊக்குவிக்க மாட்டோம்; காஷ்மீர் அரசை பலப்படுத்துவோம்.
இடதுசாரி பயங்கரவாதிகளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடு அணுகிவருகிறோம். காரணம் நம் மக்கள் குழுவான அவர்களிடமே நாம் பிரச்னையைக் கையாள வேண்டியுள்ளது

கடந்த கோடைகாலத்தின்போது காஷ்மீர் பலத்த சோதனைக்கட்டத்தை சந்தித்தது. அதுபோன்ற நிலைமை இந்தக் கோடைக்காலத்திலும் ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

காஷ்மீரில் புதிதாக ஏற்படுத்தவிருக்கும் வேலைவாய்ப்புகள், அந்த மாநில இளைஞர்கள் மக்களின் மனநிலையை மாற்றும் என்று நம்புகிறேன்.
பாகிஸ்தானுடன் தீர்க்கப்படாமல் உள்ள எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண திறந்த மனதுடன் உள்ளோம். பாகிஸ்தானும் நம்முடன் நட்பு ரீதியில் பேசித்தீர்க்க முன்வரும் என்று நம்புகிறோம்.
கறுப்புப் பண விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளுடனும் கூடிப் பேசி, அவர்களின் உதவியுடன் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்போம். அவர்களின் ஆரோக்கியமான கருத்துகள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சுமுகத் தீர்வு காணப்படும்.

கறுப்புப் பண விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் வைப்பதைப் போல கறுப்புப் பணத்தை நாட்டுக்கு மீட்க எண்ணுவதில் நாங்களும் ஒருவராகத்தான் உள்ளோம்.

கறுப்புப் பண பதுக்கல் என்பது ஏதோ இந்த 4 அல்லது 5 ஆண்டுகள் உள்ள விவகாரமில்லை; இது ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது.
- இவ்வாறு பிரதமர் பேசியுள்ளார்



உலகச் செய்தி மலர் :

* அமெரிக்க - பாக். இராணுவ அதிகாரிகள் ரகசிய சந்திப்பு

அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஓமனில் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கியானியும் இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

* இலங்கைத் தூதரக‌த்தை அக‌ற்க‌க் கோ‌ரி 26ஆ‌ம் தே‌தி போராட்டம் - பழ.நெடுமாறன்

பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்திய சிங்களரைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதர‌த்தை உடனே அக‌ற்ற கோ‌ரி வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி நட‌க்கு‌ம் போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வே‌ண்டு‌‌ம் எ‌ன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் ‌விடு‌த்து‌ள்ளா‌‌ர்.

இது தொட‌‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் நேற்றிரவில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்

பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமையாகும். ஆனால் இலங்கையில் சிங்கள இராணுவ வெறியர்கள் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து வருகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக வீரத்தாய் பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். மனிதநேயமும் நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.

மயிலை லஸ் சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக சிங்கள துணைத் தூதரக அலுவலகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகள், தமிழ் அமைப்புகள் உணர்வாளர்கள் ஆகிய அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

* அசாஞ்சேவை நாடு கடத்தலாம்: நீதிபதி

லண்டன், பிப்.24: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடுகடத்தலாம் என பிரிட்டிஷ் நீதிபதி தெரிவித்தார்.

2 பெண்கள் கூறிய பாலியல் கூற்றச்சாட்டுகள் நாடுகடத்தக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள்தான் என்றும், ஸ்வீடன் கைது வாரண்ட் முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஹெளவார்ட் ரிடில் கூறினார்.

எனினும் இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்ய அசாஞ்சே வழக்கறிஞர்களுக்கு ஒருவாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நடைபெறுவதையொட்டி நீதிமன்றத்துக்கு அசாஞ்சே வந்திருந்தார்

* சி்ந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்: இந்தியா-பாக்.இடையே சிண்டு மூட்டும் அமெரிக்கா

இஸ்லாமாபாத்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டி வருவதாகவும், இதன் மூலம் இந்தியா-பாகி்ஸ்தானி‌‌டையேயான சிந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறிவிட்டதாக அமெரிக்க அளித்த அறிக்கையினை மேற்கோள்காட்டி பாகி்ஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிக்கை இந்தியா-பாகிஸ்தானிடையே பிரச்னையை மேலும் பெரிதாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தானிடையே வற்றாத ஜீவ நதியாக உள்ளது சிந்து நதி. இருநாடுகளுக்கும் பொதுவாக இந்த நதி இருந்து வருகிறது.

இருநாடுகளும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி நிதிநீர‌ை பங்கீட்டு கொள்வதென ஒப்பந்தம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப்கான், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரிடையே கையெழுத்தானது. இந்நிலையில் அமெரிக்கா பார்லிமென்ட்டான செனட் சபையில் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் டெக்மினா ஜான்ஜூவா தாக்கல் செய்த அறிக்கையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிடையே நதிநீர் பிரச்னையை ஏற்படுத்த சி்ந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தடுப்பணைகட்டி வருவதாக கூறிய அறிக்கை வெளியி்ட்டுள்ளது. மேலும் வெளியுறவுத்துறை கமிட்டியின் தலைவர் ஜான்கெர்ரி கூறுகையில், சிந்துநதியின் இந்தியா ஒரு சிறிய அணைகட்டினால் அது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தும் என்னறார். இப்படி அமெரிக்காவின் அறிக்கையினை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் , இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நிரந்தரமாக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்‌தினை இந்தியா மீறுவதாகவும் அமெரிக்கா குறைகூறி வருகிறது. பாகிஸ்தானின் மி்ன்சக்திக்கும், விவசாயத்திற்கும் இந்த நதியினை நம்பியுள்ளதாவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தானிடையே பிரச்னையை மேலும் பெரிதாக்க நதிநீர்பங்கீட்டு ஒப்பந்தத்தினை கையில் எடுத்து அமெரிக்கா சீண்டு மூட்டி விடுவாதக புகார் எழுந்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* எஸ் பேண்ட் முறைகேடு... யாரும் சொல்லவில்லை! - பிரதமர் விளக்கம்

டெல்லி : எஸ் பேண்ட் அலைவரிசை ஒப்பந்தம் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு இதுவரை எந்த கேள்வியும் வரவில்லை என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

எஸ் பேண்ட் எனப்படும் விண்வெளி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ 2 லட்சம் கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் துறைத் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒதுக்கீட்டைப் பெற்ற தேவாஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம் கோடி பெறுமானமுள்ள உரிமத்தை வெறும் ரூ 1000 கோடிக்குப் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எஸ் பேண்ட் விவகாரம் பெரும் சர்ச்சையையும் அமளியையும் கிளப்பியுள்ளது. ராஜ்யசபாவை, இஸ்ரோ - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக கேட்டுக்கொண்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து விளக்கம் அளித்தார். ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து இதுவரை பிரதமர் அலுவலகத்திற்கு எந்தவொரு கேள்வியும் வரவில்லை, என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சரவைக்கும் இஸ்ரோ தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார் மன்மோகன்சிங்.

* ஒருவழியாக கலெக்டர் விடுதலை: ஒன்பது நாள் குழப்பம் முடிவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால்காங்கிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபித்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர்களை விடுவிக்க வேண்டுமெனில், "சிறையில் உள்ள எங்கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடுவிக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்' என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக ஆந்திராவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஹர்கோபால், சோமேஸ்வர் ராவ் ஆகியோரை மீடியேட்டர்களாக ஏற்பாடு செய்தனர்.

நக்சலைட்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக ஒடிசா அரசு அறிவித்தது. சிறையில் உள்ள நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்கள் காந்தி பிரசாத், ஸ்ரீனிவாசலு, பத்மா உள்ளிட்டோரை ஜாமீனில் விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, 48 மணி நேரத்துக்குள் கலெக்டரையும், இன்ஜினியரையும் விடுவிப்பதாக நக்சலைட்கள் தெரிவித்தனர். இந்நிலையில், காந்தி பிரசாத்துக்கு ஒடிசா ஐகோர்ட் ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் கோராபுட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திடீர் திருப்பமாக, இன்ஜினியர் பபித்ரா மஜியை மட்டும், நக்சலைட்கள் நேற்று விடுவித்தனர். அவரிடம் புதிய நிபந்தனைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருந்தனர். பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட கலெக்டர் கிருஷ்ணாவை அவர்கள் விடுவிக்கவில்லை.

விடுதலை: இதனால், கலெக்டர் விடுதலையாவதில் நெருக்கடி நீடிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை, மால்காங்கிரிக்கு சென்ற நக்சலைட்கள் ஆதரவாளர்கள் சிலர், கலெக்டரை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை, நக்சலைட்களிடம் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, மால்காங்கிரி மாவட்டத்தில் உள்ள டோலி அம்பாரி என்ற கிராமத்தில், கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மீடியாக்கள் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணாவை, நக்சலைட்கள் விடுவித்து விட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள், உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. கலெக்டர் விடுதலையான தகவல் கிடைத்ததும், மால்காங்கிரியில் அவரது வீட்டுக்கு முன் திரண்ட பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், ஆடிப் பாடியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். கலெக்டர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒன்பது நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. கலெக்டர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்பட்டது. ஒடிசா மாநில அரசும் நிம்மதி அடைந்துள்ளது.

* 2008-ல் இருந்து இதுவரை 8 தமிழக மீனவர்கள் படுகொலை

புதுதில்லி, பிப்.24: 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கை படையினரால் 8 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு 5 பேர் கொல்லப்பட்டனர். 2009-ல் யாரும் கொல்லப்படவில்லை. 2010-ல் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில் இருவேறு சம்பவங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர் என வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
ஜனவரியில் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்களில் தங்கள் கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்ததாகவும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

* காமன்வெல்த் ஊழல்: 2 பேருக்கு 5 நாள் சிபிஐ காவல்

புதுதில்லி, பிப்.24: சுவிஸ் நிறுவனத்துடனான ரூ 107 கோடி ஒப்பந்தத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் அதிகாரிகள் லலித் பனோட், வி.கே.வர்மா ஆகியோரை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைவரான சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய உதவியாளர்களான இருவரும் இன்று சிபிஐயால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி தல்வந்த் சிங் அனுமதி அளித்தார்,
அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும்வகையில் சுவிஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கியதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




* 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஜேபிசி அமைப்பு

புதுதில்லி, பிப்.24: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட குழுவை நியமிக்கும் தீர்மானத்தை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொண்டுவந்தார். 1998 முதல் 2009 வரையிலான தொலைத்தொடர்பு கொள்கை குறித்தும், தொலைத்தொடர்பு லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரமுக்கான விலை குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்யும்.

தவறுகள், முறைகேடுகள் ஏதும் இருந்தால் அவற்றையும் இந்தக் குழு ஆய்வுசெய்யும்.
இந்தக் குழு தனது ஆய்வுகளை முடித்து நாடாளுமன்றத்தின் பருவகால கூட்டத்தொடரின் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்

* நீராராடியா டேப் கசிவு விசாரணையில் திருப்தியில்லை: ரத்தன் டாடா

புதுதில்லி, பிப்.24: தனக்கும் நீராராடியாவுக்கும் இடையேயான உரையாடல் அடங்கிய டேப்கள் வெளியான விவகாரத்தில் அரசின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். அரசு இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீராராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி முதன்முறை வெளியான உடனே அரசு அதை கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என சால்வே தெரிவித்தார்.

ஏப்ரல் 28-ம் தேதி இந்தப் பிரச்னை ஆரம்பமான உடனே விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வருமான வரித்துறையால் இடைமறித்துக் கேட்கப்பட்ட உரையாடல்களின் பதிவுகள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்ததற்கும் அவர் அரசைக் குற்றம்சாட்டினார்

வருமான வரித்துறைக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அடங்கிய டேப்களை மட்டும் பாதுகாத்துவிட்டு மற்றவற்றை அழித்திருக்க வேண்டும் என அவர் கூறினார்

* சி.ஐ.சி. யிடம் நிலுவையில் 15 ஆயிரம் மனுக்கள்

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மத்திய தகவல் கமிஷனரிடம் (சி.ஐ.சி.) 15 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பார்லிமென்டின் பட்‌‌ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி.நாராயணசாமி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பவர் வரையிலான கால அளிவில் மத்திய தகவல் கமிஷனருக்கு 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. அதில் 1965 விண்ணப்பங்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போதை கால அளவில் 15 ஆயிரத்து 476 விண்ணப்பங்கள் கமிஷனின் அலுவலகத்தில் நிலுவையில் உளளது. இவற்றை இன்னும் மூன்று மாதத்திற்கு பதில் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


மாநிலச் செய்தி மலர் :

* என்.எல்.சி. நிறுவனத்துக்கு தேசிய விருது

நெய்வேலி, பிப். 23:  பணியாளர்களுக்கு நவீன முறையில் பயிற்சி வழங்கி வருகின்ற என்.எல்.சி. நிறுவனத்தை பாராட்டும் முகமாக இந்திய பயிற்சி மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு தேசிய விருதை வழங்கி கெüரவித்துள்ளது.

÷இந்திய பயிற்சி மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு வழங்கும் 2009-10-ம் ஆண்டுக்கான  நவீன முறையில் பயிற்சி வழங்கும் நிறுவனத்துக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டிகள் கடந்த ஆண்டு புதுதில்லியில் நடந்தது.

÷இதில் பிரபல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என 200 நிறுவனங்கள் பங்கேற்றது. முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நிறுவனங்களில் என்.எல்.சி. நிறுவனமும் இடம் பெற்றது.

÷புதுதில்லியில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் என்.எல்.சி. பயிற்சி வளாக அதிகாரிகள் பங்கேற்று, என்.எல்.சி. நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகளின் விவரங்களையும் பயிற்சி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் நவீன யுக்திகளையும் எடுத்துக் கூறினர்

யிற்சிகளை வழங்குவது, நிலம் வழங்கியவர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்குவது, கிராமப்புற மாணவ, மாணவியருக்கு ஆக்கபூர்வமான விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்குதல் போன்றவை நடுவர் குழுவினரால் வெகுவாகப் பாராட்டப்பட்டு, என்.எல்.சி. நிறுவனத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

÷ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடந்த இந்திய பயிற்சி மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் இந்த தேசிய விருது என்.எல்.சி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

÷பொதுத்துறை நிறுவனங்களின் செயலர் பாஸ்கர் சாட்டர்ஜி மாநாட்டில் கலந்து கொண்டு விருதினை வழங்க, என்.எல்.சி. நிர்வாகத்துறை துணைப் பொது மேலாளர் பாலாஜி பெற்றுக் கொண்டார்.

* "சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும்'

காஞ்சிபுரம், பிப். 23:  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார்.

÷தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஏ.குமரேசன் அறக்ட்டளை ஆகியன இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
÷இம் முகாமில் பங்கேற்ற பின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியது:

÷சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு புகுத்தப்படும்போது சிறுவணிகர்கள் பாதிக்கப்படுவர். எனவே இதை அனுமதிக்கக் கூடாது

÷மேலும் யூக பேர வணிகம் மூலமும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். யூக பேர வணிகத்தைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதை தெரிவிக்கும் விதத்தில் எங்கள் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் விரைவில் பிரதமரிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
÷இம் முகாமில், 500 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. பலருக்கு பொது மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

÷இந்நிகழ்ச்சியில், வணிகர் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் டி.வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் வி.கே.குமரேசன், இளைஞர் அணிச் செயலர் ஏ.ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

* பாக்கெட் பால் விலை மீண்டும் உயர்வு

திருவள்ளூர், பிப். 23: பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியதை அடுத்து பாக்கெட் பால் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

÷மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய உணவுப்  பொருளாய் ஒன்றிவிட்ட பால், கடந்த சில மாதங்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
÷கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகை நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைக்கும் நேரத்தில் தனியார் பாக்கெட் பால் கம்பெனியினர் ஒரு லிட்டருக்கு ரூ.2 அளவுக்கு விலையை ஏற்றினர்.

÷இதையடுத்து அரை லிட்டர் ரூ. 16 ஆக இருந்த ஜெர்சி பால் ரூ.17 ஆகவும், ரூ.14 ஆக இருந்த ஆரோக்யா பால் ரூ.15 ஆகவும் விற்கப்பட்டன

 இந்நிலையில் அண்மையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. ஆனால் ஆவின் பால் விலை உயராது. மக்களுக்கு பாதிப்பில்லை என அறிவித்தது.
÷ஆவின் பால் திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. நகர்ப் புறங்களிலும் பாக்கெட் பால் விற்பனையில் 30 சதவீத தேவையை மட்டுமே ஆவின் பூர்த்தி செய்கின்றது. பெரும்பாலான மக்கள் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கி உபயோகித்து வருகின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் ஆவின் பால் சப்ளை இல்லாததால் அங்கு முழு அளவு தனியார் பாக்கெட் பால்களையே உபயோகப்படுத்துகின்றனர்.

÷மாதத்துக்கு ஒரு முறை அரை லிட்டர் பாலுக்கு ரூ.1   உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியார் பாக்கெட் பால் நிறுவனங்களுக்கு அரசு விலைக் கட்டுப்பாடு நிர்ணயம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* நெல் பயிரில் மர்ம நோய் தாக்குதல்

கடலூர், பிப். 23: கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரிப் பாசனப் பகுதிகளில் நெல் பயிர்கள், மர்ம நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

÷வெலிங்டன் ஏரிப் பாசனப் பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரில் குறுகிய காலச் சம்பா ரகங்களான ஏடிடி 45, ஐ.ஆர். 36, கோ 43 போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. 65 நாள் பயிராக பூக்கள் தோன்றும் நிலையில் இந்தப் பயிர்கள் உள்ளன.
÷இந் நிலையில் நெல் வயல்களில் மர்மநோய் தாக்கத் தொடங்கி இருக்கிறது. இலைகள் சிவப்பு நிறமாக மாறி பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 சதவீதம் பயர்கள் இந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். நோய் மற்ற பயிர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது

÷இது குறித்து வெலிங்டன் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மருதாச்சலம், வடிவேலு உள்ளிட்டோர் ஆட்சியரிடம் புகார் செய்தனர். இதன் விளைவாக வேளாண் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை சென்றனர். சிறுமுளை, பெருமுளை உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு அதிகாரிகள் குழு சென்று பார்வையிட்டது.

÷திங்கள்கிழமை மாலை இப்பிரச்னை தொடர்பாக சிறுமுளை கிராமத்தில் விவசாயிகளை அழைத்து வேளாண் அலுவலர்கள் 3 மணி நேரம் ஆலோனைகளைத் தெரிவித்தனர். தெளிக்க வேண்டிய மருந்துகளையும் பரிந்துரைத்தனர்.

÷வெலிங்டன் பாசனப் பகுதிகளில் நெல் பயிரில் பரவி இருப்பது நோய் குலைநோய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனர். கவனக் குறைவாக மருந்து தெளிக்காமல் விட்டால் மகசூல் 20 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் தெரிவித்தனர்.

* லிபியாவில் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிவாரணம்

சென்னை, பிப்.24: லிபியாவில் உயிரிழந்த முருகையாவின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த முருகையா லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது உயிரிழந்தார் என செய்திகள் வெளியாயின. எனினும் அவர் விபத்தில்தான் உயிரிழந்தார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் முருகையாவின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* எம்பிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மக்களவை சிறிதுநேரம் ஒத்திவைப்பு

புதுதில்லி, பிப்.24: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை தொடர்பான விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதிலளித்து முடித்ததும் எம்பி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டன.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்பி பிரசந்த குமார் மஜும்தார் திடீரென மயக்கம் வருவதாகக் கூறியதால் உடனடியாக அவைக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

இதனால் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்குப் பின் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின


வர்த்தகச் செய்தி மலர் :

* ஆசிய கச்சா விை 99 டாலர் ஆக உயர்வு

லிபியாவில் கர்னல் கடாஃபி அரசிற்கு எதிராக மக்கள் நடத்திவரும் கிளர்ச்சி வலுவடைந்துவருவது வரும் காலத்தில் கச்சா எண்ணெய் வரத்தை பாதிக்கும் என்கிற கருத்தில், மார்ச் மாதத்திற்கான ஒப்பந்த முன் விலை 99 டாலராக அதிகரித்துள்ளது.

ிபியாவில் நடைபெற்றுவரும் கிளர்ச்சி இதர கிழக்காசிய நாடுகளையும் பாதிக்கலாம் என்ற அச்சமும் இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக லண்டன் பிரண்ட் கச்சா விலை பீப்பாய்க்கு 1.11 டாலர் அதிகரித்து 112.36 டாலராக உயர்ந்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள லிபியா நாளுக்கு 16 இலட்சம் பீ்ப்பாய் கச்சா உற்பத்தி செய்கிறது. ஆப்ரிக்காவின் முதன்மை உற்பத்தியாளராக திகழும் லிபியாவில் இருந்து வரும் கச்சா வரத்து எந்த நேரமும் பாதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

லிபியாவின் எண்ணெய் வளங்களை வெளிக்கொணர்வது பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே. இந்நிறுவனங்களில் பணியாற்றிவரும் அந்நாடுகளின் ஊழியர்கள் பெருமளவிற்கு வெளியேறி வருகின்றனர். இதனால் உற்பத்தி குறைந்து வருகிறது.

* சென்செக்ஸ் 546 புள்ளிகள் சரிவு  

மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 545.92 புள்ளிகள் சரிந்து 17,632.41 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையில் 174.65 புள்ளிகள் சரிந்து 5262.70 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று காலை சென்செக்ஸ் 87 புள்ளிகள் சரிவுடனும், நிப்டி 26 புள்ளிகள் சரிவுடனும் துவங்கியது.

பிறகு மதிய அளவில் மேலும் சென்செக்ஸ் சரிந்து 264 புள்ளிகள் வரை பின்னடைவு கண்டது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ், ஹீரோ ஹோண்டா, ஆந்திரா வங்கி, பாரத் எலக்ட்ரானிக், சுஸ்லான், டாபர் இந்தியா, கோல்கேட் பாமாலிவ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஜிந்தால் ஸ்டீல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, டிஎல்எஃப், டாடா ஸ்டீல், விப்ரோ, எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், மாருதி சுஸுகி, டாடா பவர், இந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், பார்தி ஏர்டெல், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

* உணவுப் பொருள் பணவீக்கம் 11.49% ஆக உயர்வு

பால், முட்டை, ஆட்டுக் கறி, காய்கறிகள் ஆகியவற்றின் விலை உயர்ந்ததன் காரணமாக பிப்ரவரி 12ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 0.44 விழுக்காடு அதிகரித்து 11.49 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதே வாரத்தில் கடந்த ஆண்டு உணவுப் பொருள் பணவீக்கம் 21.82 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் புள்ளி விவரத் துறை இன்று வெளியிட்ட மொத்த விலைக் குறியீட்டின் படி, முட்டை, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றின் விலை, பிப்ரவரி 5க்கும் 12க்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 14.79 விழுக்காடு உயர்ந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வாரத்தில் பால் விலை 17 விழுக்காடும், காய்கறிகள் விலை 15.89 விழுக்காடும் உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு விலை 9.72 விழுக்காடும், பருப்பு வகைகள், கோதுமை ஆகியவற்றின் விலை முறையே 1.01, 5 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அரசு விவரம் தெரிவிக்கிறது.

* ஆபரணம், கற்கள் ஏற்றுமதி 22% உயர்வு

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இந்தியாவின் நகைகளுக்கும், ஆபரண கற்களுக்கும் உள்ள வரவேற்பினால், இந்தியாவின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் மட்டும் 22% உயர்ந்து 2.86 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்க்களிடம் பேசிய நகை, ஆபரண கற்கள் ஏற்றுமதி மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் ராஜீவ் ஜெய்ன், அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி, மத்திய கிழக்காசிய நாடுகளிலும் இந்தியாவின் ஆபரணங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதெனவும், இதனால் 2010-11ஆம் நிதியாண்டிற்கான ஏற்றுமதி இலக்கு 30 பில்லியன் எட்டிவிட முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

2009-10ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் ஆபரண ஏற்றுமதி 18 விழுக்காடு அதிகரித்து 33 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்பதாகவும் ராஜீவ் ஜெய்ன் கூறியுள்ளார்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* டீவிலியர்ஸ் சதம்; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி  
டெல்லியில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் மேற்கிந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஏ.பி. டீவிலியர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் இவர் எடுக்கும் 3-வது சதமாகும் இது.

துவக்கத்தில் ஆம்லாவையும், காலிஸையும் அடுத்தடுத்து இழந்த நிலையில் ஸ்மித்தும் ரன் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் பந்து வீச்சாளர் சுலைமான் பென் கோட்டை விட்டதால் பிழைத்தார்.

அவர் நிதானமாக விளையாட டீவிலியர்ஸ் சில அபாரமான ஷாட்களை அடித்தார். ஸ்மித்தும் இவரும் இணைந்து 23.3 ஓவர்களில் 119 ரன்களை எடுத்தனர்.

ஸ்மித் 45 ரன்கள் எடுத்து கெய்ரன் போலார்டின் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆனார். அதன் பிறகு டீவிலியர்சுடன் டுமினி இணைந்தார்.

டீவிலியர்ஸ் 97 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் எடுத்து உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க வீரர் எடுத்த அதிகபட்ச சதம் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

கடைசியில் டீவிலியர்ஸ் 107 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். டுமினி 42 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பென், ரோச், போலர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 223 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

ஆன்மீகச் செய்தி மலர் :



* அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோவில்

மூலவர் : அம்பே மா அம்மன் ("சச்சார் சவுக்வாலி')
  -
  தல விருட்சம் :  அரசமரம்
 
    பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  அம்பாஜி, பனஸ்கந்தா
  மாவட்டம் :  அகமதாபாத்
  மாநிலம் :  குஜராத்

தல சிறப்பு:
 
  கோயில் கோபுரத் தின் உச்சியில் 103 அடி உயரத் தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.
 
அம்மன் சன்னதியின் எதிரில் ஒரு பள்ள மான இடத்தில் நாகேஸ்வரர், அனுமான், நாகராஜர் சிலை கள் உள்ளன. இதற்கு நாமே தீர்த்தம் ஊற்றி, பூத்தூவி அர்ச் சனை செய்யலாம்.
செம்பால் செய்யப்பட்ட பத்தடி நீள முள்ள வித்தியாச மான உண் டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்ற னர். இங்கு குங்குமம் மற்றும் லட்டு பிர சாதமாகத் தரப் படுகிறது.

கோயிலைச் சுற்றி 8 கி.மீ., தொலைவுக்குள் சோம் நாத் என்ற இடத்தில் சோமேஸ்வர் கோயில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் கப்பார் மவுன் டன் என்ற இடத்தில் பழைய அம்பாஜி கோயில் உள்ளது.

900 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி உண்டு. இங்கு அம்ம னின் பாதமும், ஒரு விளக்கும் மட்டுமே இருக்கிறது. கடை களில் மார்பிள் சிலைகள், பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிரார்த்தனை
 
  பிறந்த நாளுக்கு மறுநாள் இங்கு வந்து ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால், கால மெல்லாம் அக்குழந்தை செல்வச் செழிப்புடனும், கிருஷ்ண னைப் போல் விவேகத்திலும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.
 தலபெருமை:
சிலையே யந்திரம்: யந்திர வழிபாடு என்பது மிகவும் பழ மையானது. அம்பாஜி அம்பே மா கோயிலில் அம்பிகையை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்த்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண் மையில் அம்மன் சிலை இங்கு இல்லை. "விஷயந்த் ரம்' என்ற யந்திரமே வழிபாட் டில் உள்ளது. இந்த யந்தி ரத்தை ஒரு மார்பிள் பிளேட் டில் பொருத்தி, நகைகளால் அலங்கரித்துள்ளனர்.

இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது.
இதை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்கின்றனர். இதை தரிசித் தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இது தங்கத்தில் செய்யப்பட்டது. ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 51 எழுத்துக்கள் உள்ளன. இந்த யந்த்ரத்தை அருகில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. பக்கத்தில் சென்று பார்க்க விரும்பு வோரின் கண்களை பேன் டேஜ் துணியால் கட்டி விடு வார்கள். இதன் சக்தியைத் தாங்கும் வலிமை யாருக்கும் இல்லை என்பதால் இம் முறை பின்பற்றப்படுகிறது.

 அம் பாஜி அம்பே மா சன்னதி அள வில் சிறியது தான். ஆனால், மண்டபம் மார்பிள் கற்களால் ஆனது. பிரகாரமும் மார்பிள் கற்களால் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. தல விருட்சமாக அரசமரம் உள்ளது. தேவியை "அம்பே மா' என்றும், "சச்சார் சவுக்வாலி' என்றும் அழைக் கின்றனர்.கோயில் கோபுரத் தின் உச்சியில் 103 அடி உயரத் தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

அம்பாஜி கோயில் 5 ஆயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்டது. ஏனெ னில், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டுள்ளது. நந்தகோபனும், யசோதை தாயும் அவரை இக்கோயி லுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட் டுமே மொட்டையடிக்கிறார் கள். பெண் குழந்தைகளுக் கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்ப டுவதில்லை என்பது குறிப்பி டத்தக்க அம்சம்.

விநாயகரின் பேரன்களுக்கு சன்னதி:

வடமாநிலங்களில் விநாயகர் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது. இங்கு விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், இவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது விசேஷ அம்சம். விநாயகருக்கு வடமாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.

 தல வரலாறு:
மகிஷாசுரன் என்ற அரக்கன் தன் தவ வலி மையால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடா தென அக்னிதேவனிடம் வரம் வாங்கினான். இந்த வரத்தின் வலிமையால் இந்திர லோகத்தை வளைத்தான். பின் னர் ஆசை மிகுதியால் வைகுண்டத்தையும், கைலா யத்தையும் பிடிக்க எண்ணி னான். வரத்தின் பலத்தால் சிவ நாராயணர்களால் அவனை ஏதும் செய்ய முடிய வில்லை.

இந்த நேரத்தில், வரங்களை தவறாக பயன் படுத்துவோரையும் அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத் தலத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

மற்றொரு கதையின்படி, ராம, லட்சுமணர்கள் சீதை யைத் தேடி, கானகத்தில் திரிந்த போது, சிருங்கி முனி வரைச் சந்தித்தனர். அம்பாஜி அம்பே மா தேவியை தரிசித் தால், இதற்கு வழி கிடைக்கும் என அவர் ராமனிடம் கூறி னார். அம்பே மா தேவி மன மிரங்கி, "அஜய்' என்ற அஸ் திரத்தைக் கொடுத்தாள். அதைக் கொண்டு ராவணனை வென்று, சீதையை மீட்டார் ராமன்.

திருவிழா:- நவராத்திரி

திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஆன்ம விசாரணை - ரமணர்  

ஆன்ம சத்தியம் விளங்க, அதை மறைத்துக் கொண்டிருக்கும் அனர்த்ம இடையூறுகளை விசாரணையால் விலக்கியே தீரவேண்டும். முடிவில், தோன்றி மறையும் அகந்தையும் விலக்கப் பெறுங்கால், சத்தியம் தடையின்றிப் பிரகாசிக்கும். அது இயல்பாகவே தானே தானாய் என்றும் ஒளிர்வது என்பதை உணர்வோம்.

தியானிப்பதற்கு தனக்கு அன்னியமான ஓர் புறப்பொருள் அவசியமாயிருக்கிறது. ஆன்ம விசாரணையிலோ தானும் தான் அல்லாததுமான (அறிவும் அறிபடுபொருளுமான) ஒருமை நிலையைத் தவிர வேறு புறப்பொருள் கிடையாது. தியானத்திற்கும் ஆன்ம விசாரணைக்கும் வித்தியாசம் இதுவே.

வினாடி வினா :

வினா - உலகத்தின் மிக உயரமான சிலை எது ?

விடை - புத்தரின் வெண்கலச் சிலை - டோக்கியோ, ஜப்பான்.

இதையும் படிங்க:

ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்!



வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.

இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.













நன்றி - சமாச்சார்,தின மணி, தின மலர்.





No comments:

Post a Comment