Friday, June 10, 2011

இன்றைய செய்திகள் - ஜீன் , 10, 2011

- முக்கியச் செய்தி :

* பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம்

09-mf-hussain300.jpg

லண்டன்: பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.

மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர்.

கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.

நடிகை மாதுரி தீக்ஷித்தை தேவதையாக உருவகப்படுத்தி ஹூசேன் வரைந்த ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. மாதுரி மீது பித்தாகிவிட்டேன் என்று கூறிய இவர், மாதுரியை வைத்து கஜகாமினி என்ற இந்திப் படத்தையும் இயக்கினார்.

பிறகு தபுவை வைத்து மீனாக்ஷி- தி டேல் ஆப் த்ரீ சிட்டிஸ் என்ற படத்தை இயக்கினார். ஆனால் வெளியான சில தினங்களில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக இந்தப் படம் தூக்கப்பட்டது.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் இன்று காலமானார்.

நாட்டை விட்டு வெளியேறினாலும் நாட்டின் மீது அதீத பற்று கொண்டவர். இந்தியாவில் தன்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை என்பது குறித்து தொடர்ந்து தனது கவலையைத் தெரிவித்து வந்தவர் ஹூசேன்.

அவரது உடல் அடக்கம் லண்டனிலேயே நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தியாவின் உயரிய சிவில் விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவற்றைப் பெற்றவர் ஹூசேன். 1986ல் ராஜ்ய சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
 
இந்தியாவின் மிக அதிக ஊதியம் பெற்ற ஓவியர் எனப் புகழப்பட்ட எம்எஃப் ஹூசேன், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவரது மறைவு தேசிய இழப்பு என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

* சட்டப் பேரவையில் தீர்மானம்: கச்சத்தீவு வழக்கில் தமிழக அரசு

kachathiv.jpg

சென்னை, ஜூன் 9: கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என அதிமுக சார்பில் 2008-ல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறை தன்னையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்த நாளில் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

 தீர்மான விவரம்: ""இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அன்னிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்'' என 1960-ல் உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பு அளித்தது.

 ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கை இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.

 இந்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

 இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்தத் தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்பதாகக் கூறினார்.

 இத் தீர்மானத்தின் மீது கருத்து கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இரண்டாவது முக்கியமான மைல்கல்லாக இருக்கும் வகையில் இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். இந்தப் பிரச்சினைக்காக இந்த பேரவையிலேயே ஒரு தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.பி. முத்துக்குமரன் (புதுக்கோட்டை) : தமிழக மீனவர்களுக்கு யார் பாதுகாப்பு தர முடியும் என்ற ஏக்கம் இருக்கும் சூழ்நிலையில் இத் தீர்மானம் கூடுதல் பலமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மீன்பிடித் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதை இந்த ஒரு தீர்மானம் மூலமாகத்தான் செய்ய முடியும் என்றார் அவர்.

 ஏற்கெனவே தமிழக மீனவர்கள் சென்ற எல்லை வரை மீண்டும் செல்ல இந்தத் தீர்மானம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என மார்க்சிஸ்ட் குழு தலைவர் அ. சவுந்திரராஜன் கூறினார்.

 கச்சத்தீவு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1983 தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, கச்சத்தீவு எல்லை மாற்றி குறிப்பிடப்பட்டதும் இப்போதைய சங்கடங்களுக்கு காரணம் என்பதால் அந்தச் சட்டத்தையும் திருத்த வேண்டும் என ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கேட்டுக் கொண்டார்.

 முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

உலகச் செய்தி மலர் :

* அமெரிக்காவை முஸ்லீம்கள் அழிப்பர்: பின்லேடன் உதவியாளர்

கெய்ரோ, ஜூன்.9: அமெரிக்காவை அழிக்க முஸ்லீம்கள் முயற்சிசெய்வார்கள் என அல் காய்தாவின் நம்பர் 2 எனக் கருதப்படும் அல்-ஜவாஹிரி எச்சரிக்கை விடுத்தார்.

அவரது விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விடியோ காட்சிகளில் சுமார் 28 நிமிடங்கள் அவர் பேசுகிறார்.

பின்லேடன் உயிரோடு இருக்கும்போது அமெரிக்காவை மிரட்டி வந்ததாகவும், மரணத்திலும் அது தொடரும் என அல்-ஜவாஹிரி தெரிவித்தார்.

பின்லேடனைக் கொன்ற பிறகு அவரது உடலை அமெரிக்கா கடலில் வீசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் அழிக்க சர்வதேச முஸ்லீம் சமூகத்தினர் முயற்சி செய்வார்கள் என அவர் தனது வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்-ஜவாஹிரி அல் காய்தா இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவரது விடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

* காஷ்மீர் பண்டிட்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

large_255269.jpg

ஜம்மு : "காஷ்மீரில் இருந்து குடி பெயர்ந்து சென்ற பண்டிட்களை, மீண்டும் இங்கு குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனாலும், பண்டிட்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே இந்த முயற்சி வெற்றி பெறும்' என, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது: காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட பண்டிட்கள், வன்முறை காரணமாக இங்கிருந்து குடி பெயர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் இங்கு குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில், இந்த முயற்சிக்கு அவர்கள் தயாராக வேண்டும். மீண்டும் காஷ்மீர் திரும்புவதற்கு, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

மாநிலத்தில், ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல்கள் அமைதியாக நடந்துள்ளன. இதில், காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள் போன்ற சமுதாயத்தினரும் பங்கேற்றுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள், பண்டிட்கள் மீண்டும் இங்கு குடியேறுவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கோவில்கள் மற்றும் புனித தலங்களை பாதுகாக்க வகை செய்யும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றுவதற்கு, இந்து அமைப்புகளைச் சேர்ந்த சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், காஷ்மீரில் 2008ல் நடந்தது போன்ற நிகழ்வுகள் ஏற்படக் கூடும் என, அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.

* ஆஸி.,யில் தலாய்லாமா சுற்றுப்பயணம்
மெல்போர்ன்: திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா 11 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அவருடைய ஆதரவாளர்கள் திபெத்திய கொடிகளை அசைத்து வரவேற்பு அளித்தனர். 11 நாட்கள் தங்கியிருக்கும் அவர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்நிலையில் தற்போதைய பிரதமர் ஜூலியா கில்லார்டு தலாய்லாமாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் முன்னாள் பிரதமர் கெவின் ரூத் சந்தித்து பேச உள்ளார். தலாய்லாமா எட்டும் மேற்பட்ட தடவை ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ராணா குற்றவாளி அல்ல : சிகாகோ கோர்ட் தீர்ப்பு
சிகாகோ : மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தகாவூர் ராணா குற்றவாளி இல்லை என சிகாகோ கோர்ட் கூறியுள்ளது. மும்பையில், 2008, நவ., 26ல், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட நான்கு இடங்களில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி. 2009 அக்டோபரில், ஹெட்லியை சிகாகோ போலீசார் கைது செய்தனர். மும்பை மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஹெட்லி ஒப்புக்கொண்டார். இவரது கல்லூரி நண்பரான தகாவுர் ராணாவும் கைது செய்யப்பட்டு, அவர் மீதும் சிகாகோ கோர்ட்டில் விசாரணை நடந்தது.

ராணா மற்றும் ஹெட்லி மீதான விசாரணையை, 12 பேர் கொண்ட நடுவர்களும் ஒரு நீதிபதியும் கவனித்து வந்தனர். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஹெட்லி மற்றும் ராணாவுக்கு எந்தவிதமான தண்டனை வழங்குவது என்பது குறித்து, 12 நடுவர்களும், நீதிபதி ஹாரி லினென்வெப்பரும் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் தகாவூர் ராணா குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக ராணாவின் வக்கீல் பாட்ரிக் பிளிஜென் கோர்ட்டில் குறிப்பிடுகையில், "ஹெட்லி, ராணாவை மட்டுமல்ல எல்லாரையும் ஏமாற்றியுள்ளார். அந்த வகையில் ஏமாந்து போன ராணாவுக்கு கடும் தண்டனை அளிக்கக்கூடாது' என, வாதாடினார்.

* ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒபாமா மன்னிப்பு

09-obama300.jpg

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானதற்கு மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது அமெரிக்கப் படை. இதில் பல அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர். இதுகுறித்து ஹமீத் கர்ஸாய் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் கர்ஸாயைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் ஒபாமா. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானதற்காக ஆப்கானிஸ்தான் அதிபரிடம் பேசி மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்தார் ஒபாமா. குறிப்பாக ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவிகள் பலியானதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் என்றார்.

இரு தலைவர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மறு சீரமைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

* 2020-ல் எய்ட்ஸ் இல்லா உலகம்: பான்கீமூன் பேச்சு

ஐ.நா. 2020-ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீ-மூன் ‌கூறினார்.எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து ‌ ‌ஐ.நா.வின் சிறப்பு மாநாடு ஐ.நா. பொதுசபையின் தலைமையகமான நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ மூன் பேசியதாவது: உலகம் முழவதும் ஆட்கொண்டுள்ள கொடி‌ய நோய் எய்ட்‌ஸை ஒழிப்பது குறித்து விவாதிக்க இந்த சிறப்பு மாநாடு நடக்கிறது. அதன்படி வரும் 2020-ம் ஆண்டிற்குள் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொடர்புள்ள நோய்களை ஒழித்து எய்ட்ஸ் இல்லாத உலகினை படைப்பதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். அதனை முழுமூச்சாக செயல்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை . இவ்வாறு அவர் கூறினா

* எய்ட்ஸ் மருந்துகளின் விலையைக் குறைக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

kulamnapiasath.jpg

நியூயார்க், ஜூன் 9: எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது பேரவைக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.

 இந்திய அரசின் சுகாதாரம், குடும்ப நலன் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இக் கூட்டத்தில் புதன்கிழமை பேசுகையில் இதை வலியுறுத்தினார்.

 "எச்.ஐ.வி. கிருமித்தொற்றுக்கு உள்ளானவர்களும், எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களும் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வது அவசியம். ஆனால் அதன் விலை ஏழைகளால் வாங்கிச் சாப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அந்த மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சர்வதேசச் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எய்ட்ஸ் - எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இந்த நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் அதிக நிதியை ஒதுக்கி மருந்து - மாத்திரைகளை நாம் வழங்கியாக வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் நாம் காட்டும் வேகத்தைவிட அந்த நோய் பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே இனியும் மெத்தனம் கூடாது.

 கடந்த முப்பதாண்டுகளாகவே இந் நோயைக் கட்டுப்படுத்த சர்வதேசச் சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவந்தாலும் இந்த நிலைமை தொடருகிறது.இந்திய அரசு இந்த நோயின் வளர்ச்சி வீதத்தை வெறும் 0.31% ஆகக் கட்டுப்படுத்திவிட்டது. புதிதாக நோய்த் தொற்று ஏற்படுவது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50%-க்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

 கடந்த பத்தாண்டுகளாக சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஆராயும்போது இந்தியாவில் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பதுடன் சில பகுதிகளில் இது குறைந்தும் வருகிறது என்பது தெரிகிறது.இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் நாடு முழுவதும் கண்காட்சியாகச் சென்றுவருகிறது. இதனால் 80 லட்சம் பேர் ஆண்டுதோறும் விழிப்புணர்வு பெறுகின்றனர்.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் அடுத்த கட்டத்தில் இந்தியா இப்போது நுழைகிறது.தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே இப்போது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2 கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவை அனைத்தும் மருத்துவமனைகளிலேயே பிறக்க வேண்டும் என்பதற்கான பிரசார முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2006 கணக்கெடுப்பின்படி சுமார் 7 லட்சம் பேரே மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுள்ளனர். மற்றவர்கள் பழைய வழக்கப்படி வீடுகளிலேயே பிள்ளை பெற்றுள்ளனர். 2010-ல் இதுவே ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.

 இதற்குக் காரணம் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள்தான். அரசு மருத்துவமனைகளில் பிள்ளைப் பேறுக்காக சேரும் தாய்மார்களுக்கு சிகிச்சை, மருந்து - மாத்திரை அனைத்துமே இலவசம். மருத்துவ சோதனைகளுக்கும் பணம் வசூலிக்கப்படுவதில்லை. பிள்ளைப் பேறுக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் தாய்மார்களுக்கு அரசு இலவசமாகவே சாப்பாடு தருகிறது. மருத்துவமனைக்கு வருவதற்கான ஆம்புலன்ஸ் சேவையும் இலவசமே.

 கர்ப்பத்தடைக்கான ஆண், பெண் உறைகளை வீடுகளுக்கே கொண்டுசென்று விநியோகிக்கும் திட்டம் அடுத்து செயல்பட உள்ளது. இதற்காக 8 லட்சம் சமூக சுகாதார சேவகர்கள் (ஆஷா) பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 17 மாநிலங்களின் 233 மாவட்டங்களில் முதல் கட்டமாக இது அமல்படுத்தப்படும். பிறகு நாடு முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்படும்.

 மிகவும் சக்திவாய்ந்த, வாங்கக்கூடிய விலையில் எய்ட்ஸ் மருந்துகளை இந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அத்துடன் இவற்றை 200 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன' என்றார் குலாம் நபி ஆசாத்.

தேசியச் செய்தி மல்ர் :

* அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
பாலசோர்: ஆணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த பிருத்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவி சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. சோதனை முழு வெற்றி அடைந்தது என்றனர்.

ஏற்கனவே பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* கறுப்புப் பணம் ஒழிப்பு: பொதுமக்களிடமும் கருத்து அறிய முடிவு
புது தில்லி, ஜூன் 9: கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்துகளை அறிந்து கொள்ள அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தில்லியில் வியாழக்கிழமை கூறியது: கறுப்புப் பண விஷயத்தில் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இணையதளத்தின் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம் என்றார் அவர். கறுப்புப் பணம் உருவாவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள், ஏற்கெனவே பதுக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை வழங்க மத்திய அரசு புதிய குழுவை அமைத்தது. நேரடி வரிவருவாய் துறையின் இயக்குநர் தலைமையில் இக்குழு தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும்.

 * ஊழல் எதிர்ப்பில் வன்முறைக்கு இடமில்லை: அண்ணா ஹசாரே
அகமது நகர், ஜூன் 9: ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் வன்முறைக்கு இடம் ஏதுமில்லை என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வியாழக்கிழமை தெரிவித்தார். வருங்காலங்களில் நடைபெற உள்ள லோக்பால் மசோதா வரைவு க்குழு கூட்டங்களில் தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

 தில்லியில் இருந்து திரும்பிய அவர் மஹாராஷ்டிரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். 11 ஆயிரம் இளைஞர்களை தயாபடுத்த இருப்பதாக ராம்தேவ் தெரிவித்தது குறித்து கருத்து தெரித்த ஹசாரே, வன்முறை பாதையை கைவிடாவிட்டால் ராம்தேவுடன் நாங்கள் இருக்க மாட்டோம். அவர் மேலும் கூறுகையில், ராம்லீலாவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக எழுந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, கடந்த லோக்பால் மசோதா வரைவுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இனிவரும் கூட்டங்களில் பங்கேற்போம். என்றார் ஹசாரே

* இம்மாத இறுதியில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் பேச்சு

புது தில்லி, ஜூன் 9: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஜூன் இறுதியில் நடைபெறுகிறது. இந்தத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வியாழக்கிழமை புதுதில்லியில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை செயலாளருடன், நிருபமா ராவ் இம் மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால் எந்தத் தேதியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என இன்னும் முடிவாகவில்லை என்றார் அவர்.

* பிரமாண்ட தொழில் மண்டலங்கள்: மத்திய அரசு அனுமதி

புது தில்லி, ஜூன் 9: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவையின் உயர்நிலைக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உற்பத்தித் துறையில் இந்தியாவை உலக அளவில் முன்னிலை அடையச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 இதில், சர்வதேச தரத்தில் பிரமாண்டமான தொழில் மண்டலங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும். இதில் ஒரு தொழில் நகருக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆ.ராசா மீது சி.பி.ஐ. புது குற்றச்சாட்டு
புதுதில்லி,ஜூன் 9: டாடா குழும நிறுவனங்களைவிட ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை ஊழியர்களை மிரட்டியும் எச்சரித்தும் செயல்பட வைத்தார் அப்போதைய அமைச்சர் ஆ.ராசா என்று சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.

 பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. தில்லியில் நடைபெறும் இந்த விசாரணையில் சி.பி.ஐ. பங்கேற்று இதுவரை தான் விசாரித்த, திரட்டிய தகவல்களை குழுவிடம் தெரிவித்து வருகிறது.

 சி.பி.ஐ. (மத்தியப் புலனாய்வுக் கழகம்) அமைப்பின் தலைவரான இயக்குநர் ஏ.பி. சிங், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.

 ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்; டாடா குழுமத்துக்கு அல்ல என்று தொலைத்தொடர்புத்துறையின் பிற ஊழியர்களை அப்போதைய அமைச்சர் ஆ.ராசாவும் அவருடைய துறைச் செயலாளர் சித்தார்த்த பெகுராவும் ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும்

 மிரட்டியும் எச்சரித்தும் காரியம் சாதித்ததாக ஏ.பி. சிங் தெரிவித்தார்.

 வயர்லெஸ் உரிமம் வழங்குவதற்கான ஆலோசகர் ஆர்.பி. அகர்வாலை மிரட்டியும் நிர்பந்தப்படுத்தியும் தில்லி சர்க்கிளில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கே உரிமம் வழங்க வேண்டும் என்ற குறிப்பை அவர் மூலம் பெற்றனர் என்று சிங் தெரிவித்தார்.

 டாடா நிறுவனம்: டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டி.டி.எஸ்.எல்.) என்ற நிறுவனம் 20 சர்க்கிள்களில் இரட்டைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொலைத் தொடர்புத் துறையின் கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தது. 2008 ஜனவரி 10-ம் தேதி அதற்கான அனுமதிக் கடிதத்தையும் அது பெற்றது.

 துறை விதித்த நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்த டாடா குழுமம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வயர்லெஸ் பிரிவிடம் (திட்டமிடல், ஒருங்கிணைத்தல்) மனுச் செய்தது. ஆனால் அந்த மனு தொலைத் தகவல் தொடர்புத்துறையில் எங்கோ காணாமல் போய்விட்டது.

 டாடா குழுமத்திலிருந்து துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, புதிதாக மனு அளிக்குமாறு 2008 மார்ச் 5-ம் தேதி கூறப்பட்டது. ஆனால் அதற்குள் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் அளிக்கப்பட்டுவிட்டன என்று கூட்டுக்குழுவிடம் தெரிவித்தார் ஏ.பி. சிங்.

 ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு குறித்தும் சில தகவல்களை அவர் அளித்தார். அனில் அம்பானி தலைமையிலான நிறுவனத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக அல்லாமல் திரைமறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

 இது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பத்திரிகைத் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

மாநிலச் செய்தி மலர் :

* முதியோர் உதவித் தொகை 13.65 லட்சம் பேர் போலியான பயனாளிகள்:அரசு

சென்னை, ஜூன் 9: முதியோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்தாண்டுகளில் பயன் பெற்ற பயனாளிகளில் 13.65 லட்சம் பேர் போலியானவர்கள் என்று தமிழக அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

 சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி இந்தத் தகவலைத் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் க.கிருஷ்ணசாமி (ஒட்டப்பிடாரம்) பேசினார். அவர் பேசியது: பறிக்கப்பட்ட சொத்துகளை மீட்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் போலி பத்திரங்கள் மூலம் பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமூகக் குற்றம் தடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் துணை போனாலும் முதல்வர் தலையிட்டு அவற்றை ஏழை மக்களுக்கு அளித்திட வேண்டும்.

 கொலை-கொள்ளைகளைத் தடுக்க விஞ்ஞான முறைகள் புகுத்தப்படும் அதே நேரத்தில் அதில் அரசியல் தலையீடு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 முதியோர் உதவித் தொகை: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலைக் கொண்டு முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை உள்ளிட்ட சமூகத் திட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் என்பது அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டு எடுக்கப்பட்டது.

 மக்களுக்கு நிறைய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற நலத் திட்டங்களை 100 சதவீதம் முழுமையாக அமல்படுத்தினாலே போதும்.

 வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி: கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் முதியோர் உதவித் தொகையாக 13 லட்சத்து 65 ஆயிரம் போலியான தகுதியில்லாத நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

* அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைப்பால் பாதிப்பு வராது: தமிழக அரசு உறுதி
சென்னை, ஜூன் 9: அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைப்பால் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

 சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் கோபிநாத் (ஓசூர்) பேசியது:

 ஆளுநர் உரையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதேசமயம், கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் சில இப்போது இல்லை. திமுக ஆட்சியில் இலவச கலர் டி.வி., கேஸ் அடுப்பு கொடுத்தார்கள். அதற்கு மாறாக அதிமுக ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.

 திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட டி.வி.க்கள் இப்போது கிடக்குகளில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் காரணமாக பொது மக்களுக்கு டி.வி.க்களை அளிக்க முடியவில்லை. அவர்களுக்கு டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அந்த டோக்கன்களை வைத்திருப்பவர்களுக்கு இப்போது இலவச கலர் டி.வி.க்களையும், கேஸ் அடுப்பையும் வழங்க வேண்டும்.

 சமச்சீர் கல்வியில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இல்லாத மாநிலங்களாக தமிழகமும், மேற்கு வங்கமும் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளைக் கொண்டு வந்தால் மத்திய அரசிடம் இருந்து ரூ.620 கோடி அளவுக்கு நிதி கிடைக்கும்.

 நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவதில் பிரச்னைகள் இருந்தால் ஒரு குழு அமைத்து அவற்றை களைய வேண்டும் என்றார்.

 பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம்: தமிழகத்தில் இரண்டு மொழிக் கொள்கை அமலில் உள்ளதால் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வரமுடியவில்லை. இந்தி மொழியை கட்டாயப் பாடமாக படிக்கக் கூடாது என்பதே அந்தப் பள்ளிகளை தொடங்க முடியாததற்குக் காரணம்.

 கோபிநாத்: ஆளுநர் உரையில் அண்ணா பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு ஒரே பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பல்கலைக்கழங்களில் இப்போது படித்து வரும் மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது.

 உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: அண்ணா பல்கலைக்கழகம் பழமை வாய்ந்தது. நான்கு பல்கலைக்கழகங்களை ஒன்றாக மாற்றுவதன் மூலம் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும். மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

* சரும‌த்தை‌‌ப் பொ‌லிவா‌க்கு‌ம் ஆவாரை 

தைப்பொங்கல் அன்று வீட்டு வாசல்களில் கட்டப்படும் தோரணமாகவும், பசு, எருதுகளுக்கு அணிவிக்கப்படும் மாலையாகவும் ஆவாரை பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்ற ஆவாரை நவக்கிரகங்களில் ஒருவரான குருவிற்கு உரிய மூலிகையாகும். ஆவாரை‌யி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌க்குமே மரு‌த்துவ குண‌ம் உ‌ள்ளது.

ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் இவை ஐந்தையும் சூரணமாக்கி, அதில் 3 பங்கு எடுத்துக் கொள்ளவும்.

இதேபோல், கோரைக்கிழங்கு சூரணம் ஒரு பங்கு, கிச்சிலி கிழங்கு சூரணம் ஒரு பங்கு கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக இதனை தேய்த்துக் குளித்துவர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் தீரும்.

தேமல், சொறி, தினவு போன்ற சரும பா‌தி‌ப்பு இரு‌ப்பவ‌‌ர்களு‌ம் இதனை‌ப் ப‌ய‌ன்படு‌த்‌தி கு‌ளி‌க்கலா‌ம். இ‌‌வ்வாறு கு‌ளி‌த்து வர‌ சரும‌ம் புது‌ப்பொ‌லிவு பெறு‌ம்.

ஆவாரை இலையுடன் பூவரச மர வேர்ப்பட்டை, சிறிது உப்பு சேர்த்து அரைத்து அதை தண்ணீரில் கலந்து குளித்து வர, உடலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.

வர்த்த்கச் செய்தி மலர் :

* பீ.எஸ்.இ 'சென்செக்ஸ்' 9 புள்ளிகள் குறைந்தது

ஜூன் 10,2011,00:04
மும்பை: -நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்றும் மந்தமாக ருந்தது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளது என்ற செய்தியால், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் தொடர்ந்து சுணக்கம் கண்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பல முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர்.இதன் காரணமாக, வியாழக்கிழமை அன்று மோட்டார் வாகனம், பார்மா, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதே

சமயம், பொறியியல், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 9.39 புள்ளிகள் குறைந்து, 18,384.90 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,449.64 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,327.01 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 5.80 புள்ளிகள் சரிவடைந்து, 5,521.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,540.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,502.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

இலங்கை அணியில் ஜெயசூர்யா

கொழும்பு: இரண்டு ஆண்டுகளுக்குப் பின், "சீனியர்' ஜெயசூர்யா மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட், ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. வரும் ஜூன் 25 ல் "டுவென்டி-20' போட்டி நடக்கிறது.

இதனிடையே அணியின் துவக்க வீரர் தரங்கா, உலக கோப்பை தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்டுள்ளார். தவிர, அணியின் கேப்டன் தில்ஷன், கைவிரல் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணியின் இரண்டு முக்கிய துவக்க வீரர்களும் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20', ஒருநாள் போட்டி மற்றும் அயர்லாந்து, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணியில், மீண்டும் ஜெயசூர்யா (41) சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் அதிரடி துவக்க வீரரான இவர், கடந்த 2007ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், ஒருநாள் போட்டிகள் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. கடைசியாக, 2009ல் இந்தியாவுக்கு எதிராக, ஒருநாள் போட்டியில் விளையாடினார். கடந்த உலக கோப்பை தொடரில் 30 பேர் அடங்கிய உத்தேச இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த ஜெயசூர்யா, 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை.

திடீர் ஓய்வு:

இங்கிலாந்துக்கு தொடருக்குப் பின், சர்வதேச போட்டிகளில் இருந்து முழு அளவில் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து ஜெயசூர்யா கூறுகையில்,"" அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு தடையாக இருக்க விரும்பவில்லை. இங்கிலாந்து தொடரில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன். இத்தொடருக்குப் பின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவேன்,'' என்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்

மூலவர்    :    அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
உற்சவர்    :    -
அம்மன்/தாயார்    :    ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
தல விருட்சம்    :    -
தீர்த்தம்    :    சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்)
ஆகமம்/பூஜை     :    -
பழமை    :    500 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    -
ஊர்    :    பெசன்ட் நகர்
மாவட்டம்    :    சென்னை
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார ஷேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.

ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.

 தலபெருமை:


அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.

  தல வரலாறு:


சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.

இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

 திருவிழா:

புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பயமில்லாதவர் யார்? - ஆதி சங்கரர்.

tblanmegamideanews_65076845885.jpg


* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.

* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.

* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.

வினாடி வினா :

வினா - உலகில் தேயிலை உற்பத்தியில் முதலிடம் பெறும் மாநிலம் எது ?

விடை -
அஸ்ஸாம்.

இதையும் படிங்க :

அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல்கலையில் படிப்பு

large_254947.jpg

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.

கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்' என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது: மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போது தான் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.

பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன், என்றார்.நன்றி - கூகில் செய்திகள், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment