Monday, July 11, 2011

இன்றைய செய்திகள் - ஜூலை , 11 , 2011

முக்கியச் செய்திகள் :
* பலமா?... பலவீனமா? : இன்று உலக மக்கள் தொகை தினம்
அதிகரிக்கும் மக்கள்தொகை பிரச்னை, ஒவ்வொரு நாட்டுக்கும் தலைவலியாக உள்ளது. 1987 ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை 500கோடியை தொட்டது.இதை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டு தோறும் ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' : மகாராஷ்டிராவில் விழிப்புணர்வு பிரசாரம்
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற பெயரில், விழிப்புணர்வு பிரசாரம் இன்று துவக்கப்படுகிறது. முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தொடங்கி வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆண், பெண்களுக்கிடையேயான பாலின விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில அளவில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 883 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளனர்.இன்று, சர்வதேச மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மகாராஷ்டிர மாநிலத்தில், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம் ' என்ற பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முதல்வர் பிரிதிவிராஜ் சவான், இன்று தொடங்கி வைக்கிறார்.

உலகச் செய்தி மலர் :

* ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள்

வாஷிங்டன் : அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க அதிபர் ஒபாமா, வாஷிங்டன் அருகே உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பயணிகள் விமானமும், நேற்று ஒரு சிறிய விமானமும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தன.

இதைக் கண்ட அமெரிக்க போர் விமானங்கள் சீறி கிளம்பி அந்த விமானங்களை இடைமறித்து கேம்ப் டேவிட் பகுதியிலிருந்து துரத்தின. இதில், ஒரு விமானம் கரோல் பகுதியில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மற்றொரு விமானத்தை பற்றி தகவல் இல்லை. அந்த விமானத்திடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமான பாதுகாப்பு தளபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

* இந்தியாவுக்கு தகவல் தந்தால்... பாக்.,கிற்கு ஹூஜி எச்சரிக்கை
இஸ்லாமாபாத் : "எங்கள் இயக்கம் குறித்த தகவல்களை இந்தியாவிற்கு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பாக்., வெளியுறவு அலுவலகம், டில்லியில் உள்ள பாக்., தூதரகம் மற்றும் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் மீது தாக்குதல் நடத்துவோம்' என, ஹர்கத் - உல் ஜிகாத் அல் இஸ்லாமி (ஹூஜி) பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல் - குவைதா இயக்கத்துடன் தொடர்புடையது ஹூஜி பயங்கரவாத அமைப்பு. இந்த அமைப்பு குறித்த தகவல்களை, இந்தியாவுக்கு அவ்வப்போது பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது. இதனால், பாகிஸ்தான் அரசுக்கு, ஹூஜி அமைப்பு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செயலர் சல்மான் பஷீருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதம், பஷீரின் இல்லத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, பஷீரின் வீட்டிற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது

* நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை மூடல் : கண்ணீர் மல்க ஆசிரியர்கள் வெளியேறினர்
லண்டன் : பிரிட்டனின் புகழ்பெற்ற, "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை நேற்று தனது கடைசி பதிப்பை வெளியிட்டு, அலுவலகத்தை இழுத்து மூடியது. கடைசி பதிப்பை தயாரித்து அச்சுக்கு அனுப்பிய பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள், கண்ணீர் மல்க தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

பிரிட்டனில் இருந்து வெளிவரும், 168 ஆண்டு காலப் பெருமை உடைய, "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை, இளவரசர் வில்லியமின் உதவியாளரில் இருந்து, முக்கிய அரசியல்வாதிகள் வரை அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்ட விவகாரத்தில் சிக்கியது. பத்திரிகை மீது, பார்லிமென்டில் எம்.பி.,க்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பத்திரிகையின் அதிபர் ரூபர்ட் முர்டோக், பத்திரிகையை நிறுத்திவிடப் போவதாக அறிவித்தார்.

அதன்படி, நேற்று வெளியான இதழின் அட்டைப் படத்தில் பின்னணியில், பத்திரிகையின் பல்வேறு அட்டைப் படங்கள் இருக்க,"தேங்க்யூ அண்டு குட்பை' என்று பெரிய வடிவில் வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. இவை குறித்து உட்பக்கம் அளிக்கப்பட்டிருந்த விளக்கத்தில்,"1843 முதல் 2011 வரை வெளியான இப்பத்திரிகை, மிக எளிய வார்த்தைகளுடன் விடை பெறுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடைசி பதிப்பை தயாரித்து முடித்து அச்சுக்கு அனுப்பிய கையுடன், பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் பணியாளர்கள் கண்ணீர் மல்க தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். துக்கம் தாளாமல், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கதறினர். பத்திரிகை ஆசிரியர் காலின் மைலர், பணியாளர்களுக்கு அனுப்பி கடைசிக் குறிப்பில்,"நாம் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி இருக்கவில்லை' என்று, வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

நேற்று கடைசி பதிப்பு வெளியாகிறது என்பதால், பத்திரிகை விற்கும் கடைகள், கூடுதல் பிரதிகளைக் கேட்டிருந்தன. மேலும், அப்பத்திரிகையில் மிக அதிகளவில், அறக்கட்டளைகளின் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு, "இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கடைசிப் பதிப்பின் லாபம் அனைத்தும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாம் பக்கத்தில், 1843, அக்டோபர் 1ம் தேதி வெளியான பத்திரிகையின் பதிப்புப் படம் முழுப்பக்க அளவிலும், அதற்கு அடுத்த பக்கத்தில், பத்திரிகை வெளிக்கொணர்ந்த பரபரப்பான ஊழல்கள், மோசடிகள், முக்கியமான சம்பவங்கள் பற்றிய அட்டைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.

"வரலாற்றை நாம் பதிவு செய்தோம்; வரலாற்றை நாம் உருவாக்கினோம்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த தலையங்கத்தில்,"நாம் நமது பாதையில் இருந்து தவறி விட்டோம். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு பத்திரிகை வருந்துகிறது. அந்தத் தவறான செயலுக்கும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு விளைந்த வேதனைக்கும் நியாயம் கற்பிக்க விரும்பவில்லை. வரலாற்றில் ஒரு பெரிய கறையைத் தவிர வேறு ஒன்றையும் விட்டுச் செல்லவும் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முர்டோக் லண்டன் வந்தார் : "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக், நேற்று லண்டன் வந்து சேர்ந்தார். பத்திரிகை மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அவர் சில காலம் அங்கு தங்கியிருப்பார். இதுகுறித்த விசாரணைகள் முடியும் வரையில், "பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்ட்டிங்' அல்லது "பி.ஸ்கை.பி.,' என்ற செய்தி நிறுவனத்தை விற்கும் ஏலத்தில், அவர் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எட்வர்ட் மிலிபேண்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.

* பயங்கரவாதி ஜவாகிரியை பிடியுங்கள் : பாக்.,கிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன் : பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் அல்-குவைதா தலைவர் அய்மான் ஜவாகிரியை குறி வைத்துபிடிக்கும் படி, அந்நாட்டு அரசிடம் கேட்டுள்ளோம் என, அமெரிக்க ராணுவத்துறை அமைச்சர் லியோன் பெனிடா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லியோன் பெனிடா, ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் வழியில் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில், ""அல்-குவைதா அமைப்பின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான், ஏமன், சோமாலியா மற்றும் வடக்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளில் ஒளிந்துள்ளனர்.

""பாகிஸ்தானின் பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் ஒளிந்துள்ளதாக கருதப்படும் அல்-குவைதா தலைவர் ஜவாகிரியை குறி வைத்து கைது செய்யும்படி கூறியுள்ளோம். நான் சி.ஐ.ஏ., இயக்குனராக இருந்த போது, பாகிஸ்தான் உளவு அமைப்பு தலைவர்களுடன் அல்-குவைதா தலைவர்களை எந்த முறையில் கைது செய்வது என்பதெல்லாம் குறித்து விவாதித்துள்ளேன். இதற்குரிய ஆலோசனைகளை அளித்துள்ளேன்,'' என்றார்.

* உலகிலேயே நீளமான சீன பாலத்திற்கு ஆபத்து?
பீஜிங் : சீனாவில் குயிங்டவ் மற்றும் ஹூவாங்டவ் தீபகற்பத்தை இணைக்கும் வகையில், கடலில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான பாலம், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக, தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சீனாவில் கடலில் கட்டப்பட்ட இப்பாலம், 42.5 கி.மீட்டர் நீளமானது. பாலத்தின் இணைப்பு பகுதிகளில் விரிசல் இருப்பதாக, தற்போது சீனப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி, இப்பாலம் திறக்கப்பட்டதில் இருந்து, தினமும் 18 ஆயிரம் வாகனங்கள் பாலத்தில் செல்கின்றன. 10 ஆயிரத்து 580 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலம், நிலநடுக்கம் உட்பட பேரழிவுகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

"பாலத்தின் இணைப்புகளில் போடப்பட்டுள்ள "போல்ட்'கள், ஒயர் இணைப்பிற்காக அவ்வப்போது கழற்றப்பட்டு பின்னர் மாட்டப்படும். இதில், ஆபத்து எதுவும் இல்லை' என்று, இப்பாலம் கட்ட நிதியுதவி வழங்கியுள்ள உள்கட்டமைப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது. இப்பாலம் கட்ட நான்கரை ஆண்டுகள் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு வரி: ஆஸ்திரேலியா திட்டம்

சிட்னி, ஜூலை 10- சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு தனி வரி விதிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழலை மிகவும் நாசப்படுத்தும் 500 நிறுவனங்களுக்கு இவ்வாறு வரி விதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, நிறுவனங்கள் வெளியேற்றும் ஒவ்வொரு டன் "கரியமில வாயு"க்கும் தலா 23 ஆஸி. டாலர்கள் வரியாக கட்ட வேண்டும்.

மிகவும் அதிகளவில் காற்றை மாசுபடுத்தும் உலக நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அந்நாட்டில் மின்சாரம் தயாரிக்க பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் காற்று மிகவும் மாசடைவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

* ஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்

japan.jpg

டோக்யோ, ஜூலை 10- ஜப்பானில் இன்று மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.3 ஆக பதிவாகியிருந்தது. ஹோன்ஷு தீவின் கடலோரத்தில், சுமார் 20 மைல் ஆழத்தில் உள்ள பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், அது வாபஸ் பெறப்பட்டது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவுமில்லை.

கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும், ஃபுகுஷிமா அணுஉலை வெடித்ததால் சுமார் 30 கி.மீ. தொலைவில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், அணு உலையின் கதிர்வீச்சு பாதிப்பு பல கி.மீ. தொலைவுக்கு இருந்தது. அப்பகுதிகளில் குடிநீர், பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சு இருந்ததால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டது. இதனிடையே, ஜப்பான் பொருட்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் தடை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்ததும், ஃபுகுஷிமா அணுஉலையில் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தேசியச் செய்தி மலர் :
* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகார வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் இரண்டு முக்கிய வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணைகளை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. கடந்த 2001-07ம் ஆண்டு வரையிலான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விவகாரங்கள் மட்டுமே, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், "பொதுமக்கள் குறை தீர்க்கும் நிறுவனம்' என்ற, பொது நல அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,"மத்திய தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், 2001ம் ஆண்டுக்கு முன்பும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதனால் பயனடைந்துள்ளன. எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை வரம்பை, நீட்டிக்க வேண்டும். 2001ம் ஆண்டுக்கு முன் செய்யப்பட்ட ஒதுக்கீடு குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடக்கிறது. மேலும், சகாரா குரூப் நிறுவனங்களின் தலைவர் சுப்ரதா ராய் மீதான, கோர்ட் அவமதிப்பு வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், அமலாக்க பிரிவு துணை இயக்குனர் ராஜேஸ்வர் சிங்கை, சுப்ரதா ராய் மிரட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, விசாரணையில் தலையிடுவதாகக் கூறி, சுப்ரதா ராய் மீதும் உபேந்திர ராய், சுபோத் ஜெயின் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் மீதும், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை வரம்பை நீட்டிக்க கோரும் வழக்கும், சுப்ரதா ராய் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கும், இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

* ரவிவர்மா ஓவியங்கள் அசலா, போலியா...? :சி.பி.ஐ., விசாரணைக்குப் பிறகே தெரியவரும்
கொச்சி : பிரபல ஓவியர் ரவிவர்மாவின் ஜடாயு யுத்தம் போன்ற ஓவியங்கள் ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்ட நிலையில், அவை அசலா அல்லது போலியா என்பது குறித்து, சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ.,)கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல ஓவியக் கலைஞரான ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஓவியங்களில் சிலவற்றை, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஏலம் விட முடிவு செய்தது.

இதுகுறித்து அறிந்த ரவிவர்மாவின் குடும்ப உறுப்பினரும், வழக்கறிஞருமான அர்ச்சனா நாராயணன், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர், "ரவிவர்மாவின் ஓவியங்கள் ஏலம் விடப்போவதாக அறிந்தேன். ஏலத்தை தடை செய்ய வேண்டும். மேலும், ரவிவர்மா ஓவியங்களை தொல்லியல் ஆய்வுத் துறை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில், தொல்லியல் துறை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில், "ரவிவர்மாவின் அனைத்து ஓவியங்களும் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்படாத ஓவியங்கள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து எங்களிடம் கணக்கு இல்லை. அவ்வாறு பதிவு செய்யப்படாத ஓவியங்கள் யாரிடம் உள்ளது என்பது குறித்து, எங்களுக்குத் தெரியாது. அவ்வாறு தனி நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமாவது ஓவியங்கள் இருக்கும்பட்சத்தில், அவை பதிவுக்கு வராத வரை எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மாநிலங்களில் அருங்காட்சியகங்களில் உள்ள ஓவியங்கள், மாநில தொல்லியல் துறை வசம் உள்ளவை. ரவிவர்மா ஓவியங்களை மாநில அரசு பாதுகாத்து வருகிறது. ஸ்ரீசித்திரா ஆர்ட் காலரியில் தான் பதிவு செய்யப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்படும் மற்றும் ரவிவர்மாவின் பதிவு செய்யப்பட்ட ஓவியங்கள் குறித்து அறிய, இவ்வழக்கில் மாநில அருங்காட்சியக இயக்குனரையும் சேர்க்க வேண்டும்' என, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (பழங்காலப் பொருள்) ஊர்மிளா சந்த் ஐகோர்ட்டில் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில், ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஆபரகாம் தாமஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சத்திய வாக்குமூலத்தில், "ரவிவர்மாவின் ஓவியங்களை ஏலம் விடவுள்ள பிட் அண்டு ஹாமர் நிறுவனத்திடம், பதிவு செய்யப்பட்ட ஓவியங்கள் உள்ளன. ஆனால், அவற்றிற்கான உரிமங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. இப்பிரச்னையில், சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகே அவை அசலா, போலியா என்பது தெரியவரும்' என்றார். ரவி வர்மாவின் பல ஓவியங்கள் மாயமாகி விட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 * ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

புதுதில்லி, ஜூலை 10- ஹெலிகாப்டரை இயக்கும் பைலட்டுகளுக்கு சில பாதுகாப்பு விதிமுறைகளை உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

மோசமான வானிலை, அவசரநிலை, முறையான தொழில்நுட்பச் சோதனைகள் இல்லாதது ஆகியவை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க மறுப்பது மற்றும் எதிர்பாராத வானிலை காரணங்களால் தரையிறங்குவது ஆகிய காரணங்களுக்காக பைலட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் மொத்தம் 271 ஹெலிகாப்டர்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இயக்கும் பைலட்டுகள் வணிகக் காரணங்களுக்காக மோசமான வானிலைகளிலும், முறையான தொழில்நுட்பச் சோதனைகள் இன்றியும் ஹெலிகாப்டர்களை இயக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புக்களும் ஏற்படுவது அதிகரித்தது. 

இதனைக் கருத்தில் கொண்டு, இவ்விஷயம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரியின் தலைமையில் போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படியே, டிஜிசிஏ இப்போது பைலட்டுகளுக்குப் பாதுகாப்பாக விதிமுறைகளை அறிவித்துள்ளது.

* குடியரசுத் தலைவருடன் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு
புதுதில்லி, ஜூலை 10- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

நேற்று, கோபால் சுப்பிரமணியம் தனது பதவியில் இருந்து விலக முன்வந்த நிலையில், அவரது ராஜிநாமாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில், அவர் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜராக பிரபல வழக்கறிஞர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கோபால் சுப்பிரமணியம் பதவி விலக முன்வந்ததாக கூறப்படுகிறது.

* உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் குமாரசாமி

பெங்களூர், ஜூலை 10- தனது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கிய முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி, குமாரசாமிக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1500 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக பா.ஜ.க. அண்மையில் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக ஒரு கையேட்டையும் வெளியிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த குமாரசாமி, குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரினார். ஆனால் இதற்கு மாநில அரசு செவி சாய்க்காததால், கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூர், சுதந்திரப் பூங்காவில் நேற்று காலை 8.30 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில், இன்று காலை, தேவேகெளட தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில், குமாரசாமி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

* 2ஜி: 2001-க்கு முந்தைய நிலவரம் குறித்து விசாரணையா?
புதுதில்லி, ஜூலை 10- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் 2001-ம் ஆண்டுக்கு முந்தைய நிலவரம் குறித்தும் விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு நாளை விசாரிக்கப்படுகிறது.

நீதிபதிகள் ஜி எஸ் சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய குழு இந்த மனுவை விசாரிக்கவுள்ளது.

2001-ம் ஆண்டுக்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் சட்டவிரோதமான வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், நிர்வாகியாக உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

* தீவிரவாதிகள் பிரச்னை: தெற்காசிய நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு

புது தில்லி, ஜூலை 9: தீவிரவாதம் போன்ற முக்கியப்பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள தெற்காசிய நாடுகள் முன்வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

சார்க் கூட்டமைப்பு நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் 5-வது மாநாட்டை தில்லியில்

சனிக்கிழமை துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியா, வங்கதேசம், பூடான், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டில் மன்மோகன்சிங் கூறியது:

தெற்காசிய நாடுகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் தங்களுக்குள்ளே தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும்.

அண்மை காலமாக தெற்காசிய நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. இது புற்றுநோய் போன்றது. இது நாட்டின் வளர்ச்சிக்குத்தடை ஏற்படுத்திவிடும்.

எனவே இதில் கவனமாக இருந்து தீவிரவாதத்தை வேருடன் ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டும் என்றார்.

மாநாட்டில் மக்களவைத் தலைவர் மீராகுமார் உள்பட சார்க் நாடுகளின் மக்களவைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

* மேற்கு வங்கம்: 3 நாளில் 26 குழந்தைகள் சாவு

பெர்ஹாம்பூர் (மேற்கு வங்கம்), ஜூலை 10:மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 26 குழந்தைகள் இறந்துவிட்டன.

இதுகுறித்து பெர்ஹாம்பூர் மாவட்ட சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஷாஜகான் சிராஜ் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மூச்சுவிடுதல் பிரச்னை, சத்துக்குறைவு, பல்வேறு விநோத நோய்களுடன் பல குழந்தைகள் முர்ஷிதாபாத், பெர்ஹாம்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாள்களில் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 16 குழந்தைகள் இறந்துவிட்டன.

இதேபோல ஜாங்கிப்பூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 10 குழந்தைகள் இறந்துவிட்டன. சுவாசக் கோளாறு, ஊட்டச்சத்துக்குறைவு, பல்வேறு நோய்கள் காரணமாக இந்தக் குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தக் குழந்தைகள் முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு அந்தக் குழந்தைகளுக்கு முதலுதவி அளித்து மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டன. இருந்தபோதும் 26 குழந்தைகள் இதில் இறந்துவிட்டன.

மேலும் அதிக அளவில் இந்த மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையைச் சமாளிக்க கொல்கத்தாவிலிருந்து டாக்டர்கள் குழு விரைவில் இங்கு வரவுள்ளது என்றார் அவர். கொல்கத்தாவிலுள்ள பி.சி. ராய் அரசு நினைவு மருத்துவமனையில் 18 குழந்தைகள் கடந்த மாதம் இறந்துவிட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பெர்ஹாம்பூர் அரசு மருத்துவமனையில் 26 குழந்தைகள் இறந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* உபியில் கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 35 பேர் பலி, 200 பேர் காயம்

mishap-train6-300_10072011.jpg

லக்னோ: மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே திடீர் என்று தடம் புரண்டது. இதில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கல்கா எக்பிரஸ் இன்று 12.30 மணி அளவில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மற்றும் பத்தேஹ்பூர் மால்வா ரயில் நிலயங்களுக்கு இடையே செல்கையில் திடீர் என்று தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.

எமர்ஜென்சி பிரேக்கை திடீர் என்று பயன்படுத்தியதால் தான் ரயில் தடம் புரண்டதாகக் கூறப்படுகின்றது. ரயில் தடம் புரண்டபோது மணிக்கு 110 கி. மீ. வேகத்தில் சென்றுள்ளது.

இந்த விபத்தில் 35 பேர் பலியாகினர், 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 2 மருத்துவ ரயில்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இந்த சம்பவத்தால் ஏசி பெட்டிகளில் தீப்பொறி எழுந்ததாகக் கூறப்படுகின்றது.

விபத்துக்குள்ளான கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து விபரம் அறிய விரும்புவோர் 053-22407313, 053-2240828, 053-22408149 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இந்த விபத்தால் ஹவுரா-டெல்லி வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

* கங்கையை சுத்தப்படுத்த ஒன்றுபடுவோம்: உமா பாரதி

பாட்னா, ஜூலை 10: கங்கையை சுத்தப்படுத்த கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டுமென பாஜக மூத்த தலைவர் உமா பாரதி அழைப்பு விடுத்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து மேலும் கூறியது:

நமது கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது கங்கை நதி. அதனை மாசுபாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். கங்கையைத் தூய்மைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைய வேண்டும். கங்கை உற்பத்தியாகும் உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து, இந்திய எல்லையைக் கடக்கும் மேற்குவங்கத்தின் கங்காசாகர் வரையிலும் அதன் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். அரசு மற்றும் சமுதாயத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். கங்கையை மாசுபடுத்துபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கங்கோத்ரி முதல் கங்காசாகர் வரை மனிதச் சங்கிலி நடத்தப்படும். கங்கையின் துய்மையை வலியுறுத்தி தில்லியில் சர்வதேச மாநாடும், பிரசார இயக்கமும் நடத்தப்படவுள்ளது என்றார் உமா பாரதி.

* ஓணம் பண்டிகைக்காக உருவாகும் வண்ண ஓவியங்கள்

onam.jpg

திருவனந்தபுரம், ஜூலை 10 : கேரள மக்களின் மிக முக்கிய ஓணம் பண்டிகை நெருங்குவதையொட்டி, வண்ண ஓவியங்களை வரையும் பணியில் அங்கு குடியேறியுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றான 5வது வாமன அவதாரத்தின் போது, அவர் மகாபலியிடம் 3 அடி மண் கேட்டதாக புராணங்கள் கூறுகின்றன. 3 வது அடியை வைக்க இடமின்றி மகாபலி சக்கரவர்த்தியின் அவரது தலையில் விஸ்வரூபம் எடுத்த திருமால் வைத்தாக ஐதீகம். ஆண்டுக்கு ஒரு முறை தம் நாட்டு மக்களை பார்த்து மகிழ இறைவனிடம் அவர் வரம் கேட்டு பெற்றாகவும், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை அன்று அவர் வருவதாகவும் கேரள மக்கள் நம்புகின்றனர்.

மலையாள ஆண்டில் சிங்க மாதத்தில் கொண்டாடப்படும் இது அறுவடைத் திருநாளாகும். இதை உலகில் உள்ள கேரளத்தினர் 10 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். அனைத்து மதத்தினரும், சாதியினரும் ஓணத்தன்று புத்தாடை அணிந்து, ஓணம் சதயா என்ற அறுசுவை விருந்து தயாரித்து கொண்டாடி வருகின்றனர். அன்று வீடுகளில் வண்ண வண்ணப் பூக்களலான அத்தப் பூ கோலமிடுகின்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஓணம் பண்டிகை வருகிறது.

பத்மநாபசுவாமிக்கு ஓணம் பண்டிகையின் போது ஓவியங்களை கோயிலுக்கு திருவாங்கூர் ராஜ வம்சத்தினர் காணிக்கையாக அளித்து வருகின்றனர். இது ஓணவில்லு பரிசளிப்பு என அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு மேல் வழக்கத்தில் உள்ள இந்த ஓவியங்களை வரைய தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர்களை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன் கேரள அரசர் மார்த்தாண்ட வர்மாவினால் அவர்கள் கேரளாவிற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். விஷ்வகர்ம பிரிவைச் சேர்ந்த இவர்கள் கேரளாவில் கர்மானா நகருக்கு அருகே வாணியமூலா கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஓணம் வில்லுக்காக ஓவியங்களை மெல்லிய மரப் பலகைகளில் வரைந்து வருகின்றனர். திருமாலின் 10 அவதாரங்கள் தொடர்பான சம்பவங்களை பல வண்ணங்களில் தூரிகை கொண்டு தீட்டி வருகின்றனர். இதுகுறித்து மாஸ்டர் கலைஞர் பின் குமார் கூறியது:

மார்த்தாண்ட ராஜாவால் 18ஆம் நூற்றண்டில் தமிழகத்திலிருந்து எங்கள் மூதாதையர்கள் அழைத்து வரப்பட்டனர். புராதன பத்மநாப சுவாமி கோயிலை அவர் மீண்டும் கட்டினார். அதற்கான சிலைகள், பளிங்கு சிற்பங்கள்,சுதைகள் எங்கள் முன்னோர்களின் கைவண்ணத்தில் உருவானவையே. கோயிலின் வடிவமைப்பிலும் எங்கள் முன்னோர்களின் பெரும்பங்கு உள்ளது. கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், இங்கேயே தங்க உத்தரவிட்ட அரசர், ஓணம்வில்லுக்காக அழகிய ஓவியங்களை உருவாக்கும் பணியையும் எங்களுக்கு கொடுத்தார். ஆரம்பத்தில் ஒரு சில ஓவியங்களை மட்டுமே அரசக் குடும்பத்தினருக்காக தயாரித்து வந்தோம். இப்போது பக்தர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓணவில்லு ஓவியங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 1001 ஓணவில்லு ஓவியங்களை தயாரித்தோம்.

இந்த ஓவியங்களை தயாரிக்க அவர்கள் முன்பணத்துடன் பக்தர்கள் ஆர்டர்கள் கொடுக்கின்றனர். பெரும்பாலும் திருமாலின் 10 அவதாரங்கள் தொடர்பான கருத்துகளையே அடிப்படையாக கொண்டு ஓவியங்கள் வரைவோம். குறிப்பாக, சயன நிலையிலுள்ள பத்மநாபசுவாமி, கிருஷ்ணரின் லீலைகள், ஸ்ரீராம பட்டாபிஷேகம் போன்ற ஓவியங்கள் ஓணவில்லுக்காக வரையப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆண்டு விநாயகர், ஐயப்பன் சரிதங்களை அடிப்படையாக ஓவியங்கள்வரையப்பட்டதாக பின் குமார் கூறினார்.

மகோனி மரத்தை சிறிய தடிமன் உள்ள பலகைகளாக தயாரித்து, அவற்றில் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி ஓவியங்களை வரைகின்றனர். இவை வில்லு போன்ற பலகையில் வரையப்படுவதால், வில்லு என்றழைக்கப்படுகிறது. ஓவியம் வரையும் 41 நாள்கள் அவர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.

திருவோணத்தன்று முதல் 12 ஓவியங்கள் கோயிலில் கொடுக்கப்படும். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பின் அவை, அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். கோயில் நிர்ணயித்த கட்டண அடிப்படையில் ஓவியங்களுக்கு பணம் பெறபட்டபின், அவை வரைய ஆர்டர் கொடுத்த பக்தர்களிடமே கொடுக்கப்படுகிறது.

மாநிலச் செய்தி மலர் :

* ராணுவ அதிகாரி கைது, துப்பாக்கியும் பறிமுதல்:அப்பாவி சிறுவனைக் கொன்ற குழப்பம் விலகியது

large_272892.jpg

சென்னை:சிறுவன் தில்ஷனைதுப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, முன்னாள் ராணுவ அதிகாரியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, துப்பாக்கியையும் கைப்பற்றினர்.சென்னை, தீவுத்திடல், கல்லறை இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார்; கூலித்தொழிலாளி. இவரது மகன் தில்ஷன், 13; 8ம் வகுப்பு மாணவன். தில்ஷன், கடந்த 3ம் தேதி, வீட்டின் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பிற்குள், பிற்பகல் 1:20 மணிக்கு, ராணுவ அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தான்.

இது தொடர்பான வழக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்து, சிறுவன் தில்ஷன் உயிரை பறித்த துப்பாக்கி குண்டும் கைப்பற்றப்பட்டது.சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை கொண்டு, ராணுவ லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் இருந்த இளம் அதிகாரி ஒருவர், ராணுவ வீரர் உள்ளிட்டோரை விசாரித்து வந்தனர். தொடர்ந்து, அக்குடியிருப்பில் இருந்த ராணுவ அதிகாரிகள், வீட்டில்பணியாற்றுவோர் அனைவரையும் விசாரித்தனர்.சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கி மற்றும் சுடப்பட்ட குண்டின் மீதி பகுதி மற்றும் காலி கேஸ் ஆகியவற்றை கைப்பற்றும் பொருட்டு, சம்பவ இடத்தில் அமைந்து உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் சோதனை செய், கோர்ட் உத்தரவு பெற்று
சோதனையிடப்பட்டது.

ராணுவக் குடியிருப்புபகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ”டப்பட்ட குண்டின் ஒரு பகுதி, தடய அறிவியல் துறைக்கு சோனைக்காக அனுப்பப்பட்டு, துப்பாக்கியின் தன்மை பெறப்பட்டது.ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, மூன்று சிறுவர்கள் மட்டும் அங்கு சென்றதாக தகவல் இருந்தது. ஆனால், அங்கு நான்காவதாக ஒரு சிறுவனும் இருந்தது பின் தெரிந்தது.அந்த சிறுவனை பிடித்து விசாரித்ததில், வயதான ஒருவர் Œம்பவ இடத்தில் தடயங்களை மறைக்கமுயற்சித்தது தெரிந்தது. அந்த சிறுவன் மூலம், அந்த நபரை அடையாளம் கண்ட போது, அவர் ஓ#வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் ராமராஜ் என்பது தெரிந்தது.அவரிடம் நடத்தப்பட்ட விŒõரணையில், சிறுவனை கொன்றது ராமராஜ் தான் என்பது உறுதியானது. அதற்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கி, @நப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்றில் கைப்பற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, லெப்., கர்னல் ராமராஜை போலீசார் கைது செய்தனர்.

சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., சேகர் கூறியதாவது:சிறுவன் ”டப்பட்டதில் இருந்து, கடந்த ஆறு நாட்களாக, தடயங்கள் ஆய்வு, சாட்சிகள் ஆய்வு, தடய அறிவியல் சோதனைகள் என, எங்கள் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக, சம்பவம் நடந்த போது அங்கிருந்தவர்கள், அவ்வழியாக சென்றவர்கள் என பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

* சென்னையில் நிலநடுக்கம்... பயத்தில் வீட்டை விட்டு ஓடிய மக்கள்!

10-chennai-earthquake3-300.jpg

சென்னை: சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.

சென்னையில் இன்று மாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தியாகராய நகர், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கேகே நகர் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

திடீரென வீட்டில் உள்ள பொருள்கள் அதிர்வுற்றதாலும், காலுக்குக் கீழே அதிர்வை உணர்ந்தாலும் வீட்டை விட்டு ஓடிவந்தனர் மக்கள்.

ஒருவருக்கொருவர் பயத்துடன் நிலநடுக்கம் பற்றி பேசிக் கொண்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடுகளுக்குத் திரும்பினர்.

ரிக்டர் அளவுகோலில் இந்த பூகம்பத்தின் அளவு எவ்வளவு என இன்னமும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை.

இன்று காலை ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

* அரசு பள்ளியில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்':கிராம மாணவர்கள் ஆர்வம்

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லி
புத்தூர் அருகே தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கிராம மாணவர்களுக்கு அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருகி வரும் ஆங்கில மோகத்தால், கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை நகர்புற ஆங்கில பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், பெரும்பாலான கிராமங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மாணவர்களை தக்க வைக்கும் வகையில், இலவச பஸ், சீருடை, நோட்புக் போன்ற திட்டங்களை அறிமுகபடுத்தி வருகின்றன.

இதைதொடர்ந்து, ஒரு சில அரசுபள்ளிகளிலும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியில் தேர்வுபெற்ற ஆசிரியரை கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகின்றனர். இதற்காக, பள்ளி ஆசிரியர்களே தங்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவிடுகின்றனர். இதன்காரணமாக கிராம மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு கிடைத்ததால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஜெசிந்தா கூறியதாவது: கடந்த மாதத்தில் இருந்து மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கீலிஷ் கற்பிக்கப்பட்டு வருகிறது.

தினமும் ஒன்றரை மணி நேரம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் கற்பிக்க ஆரம்பித்த 15 நாட்களிலே ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற வகுப்புகளுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத்தர ஆலோசித்து வருகிறோம், என்றார். ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்று தருவது இது தான் முதல் முறை. ஆங்கிலம் கற்பதற்கு பெற்றோர் படித்திருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போது கிராம மாணவர்களும் ஆங்கிலத்தை எளிதில் கற்று, தங்களுக்குள் பேச துவங்கி விட்டனர். இவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது எனக்கு மன நிறைவை தருகிறது, என்றார்.

* அனல்மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி:மத்திய அரசு உறுதி
சென்னை/நெய்வேலி, ஜூலை 10: தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி அளிக்கப்படும் என மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் பிரகாஷ் பாபு பாட்டீல் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்:

சென்னையில், மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மாநில மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இந்தப் பேச்சுவார்த்தையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தின் தலைவர் அன்சாரி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் மின்சார நிலவரம் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாநிலத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் அளவை முழுமையாக அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

மேலும், மேட்டூர், வட சென்னை பகுதிகளில் அமைக்கப்படவுள்ள கூடுதல் அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியையும் கொடுக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். மின்வாரியத்தின் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான தரமான நிலக்கரியை அளித்து உதவிடும்படி அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர் பதில்: மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் கோரிக்கைகளைக் கேட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் பாட்டீல், தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு எந்தளவுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு அவற்றை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தரமான நிலக்கிரியை அளிப்பது தொடர்பாக, நிலக்கரி நிறுவனத்துடன் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.

* சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு அஞ்சலி

soldier.jpg

வேலூர், ஜூலை 10: வேலூரில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு, ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் தரைக் கோட்டையில் 10.7.1806-ல் சிப்பாய் புரட்சி நடைபெற்றது. சிறையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கும், ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான சிப்பாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.முதல் சுதந்திர போராட்டமாக கருதப்படும் இச்சம்பவத்தை வரலாற்று ஆசிரியர்கள் முதல் சிப்பாய் கலகம் என பெயரிட்டனர்.

இந்த சிப்பாய் புரட்சியின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய சிப்பாய்களுக்கு வேலூர் மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூணுக்கு ஆட்சியர் எஸ். நாகராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, எம்எல்ஏ ம.கலையரசு, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மணிவண்ணன், முன்னாள் ராணுவ வீரர்கள், என்சிசி மாணவர்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

* இளம்பிறை இலக்கிய கழக பரிசளிப்பு
புதுச்சேரி : இளம்பிறை இலக்கிய கலைக் கழகம் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இளம்பிறை இலக்கிய கலைக் கழகம் சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள ரெவேய் சொசியால் சங்கத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடந்தது. விழாவிற்கு தமிழ்மாமணி மன்னர்மன்னன் தலைமை தாங்கினார். ஜெயலட்சுமி வரவேற்றார். அமலோற்பவமேரி துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் ஆனந்தன், புதுச்சேரி தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியன், தேசிய விருதாளர் ஆதவன் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினார். கவிஞர் மேகலா செழியன் நன்றி கூறினார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

புற்றுநோயை குணப்படுத்தும் தக்காளி!

10-tomato3-300.jpg

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகாரிக்காமல் கட்டுக்குள் இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் எடை குறைப்பு

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் இதற்கான ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட் விச்சுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

தொடர்ந்து தக்காளி சாப்பிட்டதன் மூலம் பசி உணர்வு கட்டுப்பட்டு உணவு எடுத்துக்கொள்வது குறைந்தது. குறைவான உணவின் மூலம் உடல் எடையும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதன் காரணமாகவே உணவியல் நிபுணர்கள் உடை எடைக் குறைப்பில் தக்காளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் தக்காளி பயன்படுகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிக அளவில் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்த புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதோடு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

லைக்கோபீன்

புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற பொருள்தான் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகச் செய்தி மலர் :
* நாட்டில்சேமிப்பு பழக்கம் அதிகரித்து வருவதால் தங்கத்திற்கானதேவை 1,200 டன்னாக உயரும்

8312604.jpg

சென்னை:இந்தியாவில் தங்கத்திற்கானதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கத்திற்கான பயன்பாடு குறித்து உலக தங்க கவுன்சில் (டபிள்யு.எச்.ஓ) ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, வருவாயில்,சேமிப்பிற்கான வளர்ச்சி 30 - 40 சதவீதமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால், தங்க பயன்பாடுதேவை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், நகர்புறங்கள் பெருகி வருவதாலும் தங்கத்திற்கானதேவை பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2010ம் ஆண்டில், இந்தியா, 963 டன் தங்கத்தை பயன்படுத்தியுள்ளது. இது, உலக ளவிலான தங்க பயன்பாட்டில் 32 சதவீதமாகும்.மேலும், உலகிலேயே அதிக அளவில் தங்கம் வைத்துள்ள நாடு என்ற சிறப்பும் இந்தியாவிற்கு உள்ளது.இந்திய குடும்பங்களில் 18 ஆயிரம் டன் தங்கம் இருப்பு உள்ளது. இது,நாட்டின் ஒட்டு மொத்த குடும்பங்களின்சேமிப்பில் 7 சதவீதம் அல்லது 25 ஆயிரத்து 600கோடி டாலர் (11 லட்சத்து 77ஆயிரத்து 600கோடிரூபாய்) என்று மதிப்பிடப் பட்டுள்ளது.தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையிலும், ஆண்டுக்காண்டு அதற்கான தேவையும் பெருகி வருகிறது. நாட்டின் மொத்தமக்கள் தொகையில், 50 சதவீதம்பேர் 25 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். இதன்படி கணக்கிட்டால், அடுத்த பத்தாண்டுகளில், ஆண் டிற்கு 1.50கோடி திருமணங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய திருமணங்களில் தங்க ஆபர ணங் கள் பிரதானமாக உள்ளதால், ஆண்டிற்கு, 500 டன் தங்கம் ( மதிப்பின் அடிப்படையில் ஒரு லட்சம்கோடி ரூபாய்) தேவைப்படும். இது தவிர, ஒரு குடும்பத்தார் மற்றொரு குடும்பத்தாருக்கு அன்பளிப்பாக வழங்கும் தங்கத் திற்கான தேவையும், 500 டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவி
ல் தங்கம் மிகச் சிறந்த முதலீ டாக கருதப்படுகிறது. இதனால் அதிக அளவில் தங்க ஆபரணங்களில் முதலீடுமேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில், தங்கத்திற்கான மொத்ததேவையில், தங்க ஆபரணங்களின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. இதில் 50 சதவீதம் முதலீட்டின் அடிப்படையிலானது. இதில் வியக் கத்தக்க அம்சம் என்னவென்றால், நாட்டின் ஒட்டு மொத்த தங்கத்தின்தேவையில், கிராமப்புற மக்களின் பங்களிப்பு மூன் றில் இரண்டு பங்காக உள்ளது என்பது தான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம்பேர் கிராமங்களில் வசிக் கின்றனர்.எனினும் இவர்களின் வருவாய், தற்போது ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்ற அளவிலேயே வளர்ச்சி கண்டு வருகிறது. இது, வரும் ஆண்டுகளில், 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கத்திற்கானதேவைமேலும் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களிடம்,கடவுள்களுக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்து வழிபடுவது பாரம்பரியமாக இருந்துவருகிறது. இதனாலும், தங்கத்திற்கானதேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. (திருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகோவில்போல், நாட்டின் பலகோவில் களில் புதைந்து கிடக்கும் பல்லாயிரம் லட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும்சேர்த்தால், உல கிலேயே தங்கம் இருப்பில் பல ஆண்டுகளுக்கு இந்தியாவை விஞ்ச முடியாது.)கடந்த பத்தாண்டுகளில் தங்கத்தின் விலை 400 சதவீதம் அதிகரித்துள்ள நிலையிலும், நம்நாட்டில் தங்கத் திற்கானதேவை குறையாமல் உயர்ந்து வருகிறது. இதற்கு தங்கத்தைசேமிப்பாக கருதுவதும் முக்கிய காரணம். இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பில்,தங்கம் குறிப் பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் டாலர் மதிப்பு உயர்ந்ததையடுத்து, அன்னியச் செலா வணி கையிருப்பில், தங்கத்தின் பங்களிப்பு குறைந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி, கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கம் வாங்கியது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்களாக உயர்ந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் தங்கம் 8.5 சதவீமாக உயர்ந்தது.இதனால், உலக நாடுகளில் அதிக அளவில் தங்கம் இருப்பு வைத்துள்ள மைய வங்கிகளில்,இந்திய ரிசர்வ் வங்கி 11வது இடத்தில் உள்ளது.நாட்டின் தாராள மய மாக்கல் கொள்கையும், தங்க பயன்பாடு உயர வழி வகுத்தது. கடந்த 2002- 10ம் ஆண்டு வரை (2009 நீங்க லாக), தங் கத் தின் விற்பனை ‹டாக இருந்தது. சென்ற 2010ம் ஆண்டில், ஆபரணத் தங்கத்திற்கானதேவைப்பாடு 745.70 டன்னாக உயர்ந்தது.இது, மதிப்பின் அடிப்படையில் முந் தைய ஆண்டை விட இருமடங்கு உயர்ந்து 66 ஆயிரத்து 900கோடி ரூபாயில் இருந்து, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 200கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவிற்கு உயர்ந்து, மக்களின் வருவாய் வளர்ச்சி பெற்று,சேமிப்பும் உயரும் என சி.எம்.ஐ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதனால், தங்கம்மற்றும் தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஏற்ற, இறக்கம் நிறைந்த வாரம்

மும்பை, ஜூலை 9: பங்குச் சந்தையில் கடந்த வாரம் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. வார இறுதியில் 0.5 சதவீத அளவே முன்னேற்றம் காணப்பட்டது. சுரங்கம், உலோகம் சார்ந்த பங்குகள் அதிகம் விற்பனையானதால் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் கணிசமாக இருந்தது.

 தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 5,700 புள்ளிகளைக் கடந்தது. மும்பை பங்குச் சந்தை 18,858 புள்ளிகளாக இருந்தது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் தேசிய பங்குச் சந்தையில் 34 புள்ளிகளும், மும்பை பங்குச் சந்தையில் 95 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. தொடர்ந்து மூன்று வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது முதலாவது காலாண்டு நிதி நிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது. இந்நிறுவனத்தின் வருமானம் 20 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன்படி இந்நிறுவனத்தின் ஒரு பங்கு ஈட்டும் வருமானம் ரூ. 130 முதல் ரூ.132 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கட்டுமான தொழிலுக்குக் கடன் அளிக்கும் ஹெச்டிஎப்சி நிறுவனம் முதல் காலாண்டில் ரூ. 845 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் புளூம்பெர்க் நிபுணர்கள் கணிப்பு ரூ. 877.43 கோடி. நிறுவன லாபம் குறைந்ததால் இந்நிறுவனப் பங்கு விலை 1.5 சதவீதம் சரிந்து ரூ. 712-க்கு விற்பனையானது.அமைச்சரவைக் கூட்டத்தில் சுரங்கத்துறை தொடர்பான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சுரங்க நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 26 சதவீத தொகையை உள்ளூர் மக்கள் மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால் சுரங்க நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ. 11 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வார இறுதியில் சுரங்க நிறுவனம் மற்றும் கனிம நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.

விளையாட்டுச் செய்தி மலர் :
கிரிக்கெட்

சந்தர்பால் அசத்தல் சதம் : ஆட்டம் டிரா
டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இவர் சதம் விளாசினார். துவக்கத்தில் அசத்திய இந்திய பவுலர்கள் கடைசி கட்டத்தில் திணறினர்.முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204, இந்தியா 347 ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிர்க் எட்வர்ட்ஸ் சதம் (110) அடித்து கைகொடுத்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. ஹர்பஜன் சுழலில் கேப்டன் டேரன் சமி(17) சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார். "ரீப்ளேவில் பந்து இவரது கால் பேடில் பட்டுச் சென்றது தெளிவாக தெரிந்தது. ராம்பால்(1), ரன் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அபாரம் :இதற்கு பின் சந்தர்பால், பிடல் எட்வர்ட்ஸ் இணைந்து துணிச்சலாக போராடினர். போட்டியை "டிரா செய்யும் நோக்கில் உறுதியுடன் பேட் செய்த சந்தர்பால், டெஸ்ட் போட்டிகளில் தனது 23வது சதம் எட்டினார். இது இந்தியாவுக்கு எதிராக இவரது 6வது சதம். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர், இந்தியாவின் வெற்றி கனவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார். உணவு இடைவேளைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 322 ரன்கள் எடுத்தது.

டிரா: 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக முதல் பந்தில‌ேயே முகு‌ந்த் அவுட்டாகி வெளியேறினார். பின் முரளி விஜயும் (45),ரெய்னா (8) அவுட்டாகினர். டிராவிட் (34), லக்ஷ்மண் (3) ரன்கள் என மொத்தம் 94/3 ரன்கள் எ‌டுத்திருந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்து, இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மூன்றாவது டெஸ்டின் ஆட்டநாயகனாக வெ.இண்டீஸின் சந்தர்பால் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக இந்தியாவின் இசாந்த் சர்மா அறிவிக்கப்பட்டார்.

* ஆசிய தடகளம்: வெள்ளி வென்றார் சுதா
கோபே, ஜூலை 10- ஜப்பானில் நடைபெற்றுவந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய வீராங்கனை சுதா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

3000 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10 நிமிடம், 8 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார் சுதா.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கேமந்தா ராம் வெண்கலம் வென்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்
மூலவர்    :    பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி)
உற்சவர்    :    பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு.
தல விருட்சம்    :    அரச மரம்
தீர்த்தம்    :    தோணி ஆறு
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :    தளி - திருமூர்த்தி மலை
மாவட்டம்    :    கோயம்புத்தூர்
மாநிலம்    :    தமிழ்நாடு

 தல சிறப்பு:

இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.

தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி. முருகனின் திருநாமம் பாலசுப்பிரமணியன், இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் அத்திரி மகரிஷி

 தலபெருமை:

சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர்,  அமணலிங் கேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேஸ்வரர் ஆனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு.  இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார். எனவே இங்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு  வந்துள்ளார்கள்.இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக கூறப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக விளையாடிய போது அருகிலுள்ள கஞ்ச மலையிலிருந்த கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்து கன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றினர்.  அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கிய மாகி விட்டனர். தடுத்து நிறுத்திய  விரளி மஞ்சளிலேயே சப்த கன்னியர்  ஐக்கியமாகி விட்டனர். இங்கு இந்த சப்த கன்னியருக்கு தனி சன்னதி உண்டு.

  தல வரலாறு:

 எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும்.   அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூரத்தி மலை. கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை  குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே “பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கைலாய காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்று ம் சிறப்பு பெறுகிறது.

மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும்,  இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

 திருவிழா:

மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை , தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜை இங்கு சி சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

திறக்கும் நேரம்

காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

தேனீயைப் பாருங்கள் - பட்டினத்தார்.

* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் டெட்ராய்ட் எனப்படும் இந்திய மாநிலம் எது ?

விடை - மத்தியப் பிரதேசம்.

இதையும் படிங்க :

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை:சாதிக்கும் மாற்றுத்திறனாளி

large_272535.jpg

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

தன்னுடைய இரண்டு கால்களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தார்.மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில், அரசு வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அரசு வேலை எட்டாக்கனியாகிவிட்டது. படிப்பு மட்டும் பயன்தராது என்பதை உணர்ந்த அசைன், அதன்படி, வீட்டில் எலக்ட்ரானிக் சாதனங்களை ரிப்பேர் செயய்யும் தனது அண்ணனின் உதவியுடன், எலக்ட்ரானிக் சாதனங்கள் ரிப்பேர் செயய்யும் தொழிலை கற்றுக் கொண்டார்.அடுத்தகட்டமாக, சொந்தமாக எலக்ட்ரானிக் சாதனங்கள் சர்வீஸ் கடையை துவக்கினார். இதில், ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.

காலப்போக்கில், புதிய வரவான மொபைல்போனின் பயன்பாடு அதிகரிப்பிற்கேற்ப, மொபைல்போன் சர்வீஸ் பயிற்சியை கற்றுக் கொண்டார்.கைகளால் மட்டுமே மொபைல்போன் ரிப்பேர் செயய்பவர்கள் மத்தியில், தன்னுடைய இரண்டு கால்களாலும் ரிப்பேர் செயய்ய முடியும் என்பதை அசைன் நிரூபித்துக் காட்டி வருகிறார். குறை ந்த செலவில் மொபைல்போன் ரிப்பேர் செயய்வதால், இவருக்கு இப்பகுதியில் நிறைய வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.

இது குறித்து அசைன் கூறியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளாக மொபைல்போன் சர்வீஸ் கடையை தனியாக நடத்தி வருகிறேன். கடையை திறந்ததும், மின்சார சுவிட்ச்சை யாருடைய உதவியின்றி, நானே காலை உயர்த்தி போடுவேன். பின், மொபைல்போன் ரிப்பேர் செயய்வதற்குரிய இடத்தில், ஸ்பேர் பார்ட்சுகளை வைத்துக் கொள்வேன். ஸ்பீக்கர் மாற்றுவது;சாப்ட்வேர் பிரச்னையை சரி செயய்வது;போன் போர்டு மாற்றுவது உள்ளிட்ட அனைத்தும் செயய்வேன். முக்கிய உதிரிபாகங்களை வாங்க நானே நேரில் செல்கிறேன்.

ஆரம்பத்தில் பல மணிநேரம் உடலை வளைத்து, கால்களால் ரிப்பேர் செயய்தேன். ஒரு மணிநேரம் தொட ர்ந்து செயய்தால் அரை மணிநேரம் ஓயய்வு தேவைப்படுகிறது. உடலை வளைத்து ரிப்பேர் செயய்வதால், முதுகுப் பகுதியில் வலி ஏற்படுகிறது. எனக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டரை வயதில் குழந்தை இருக்கின்றனர். என்போன்றோர்க்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அசைன் தெரிவித்தார்.- ஜி.எத்திராஜுலு -


நன்றி - சமாச்சார், யாகூ, தின மணி, தின மலர், தட்ஸ் தமிழ்.

--

No comments:

Post a Comment